ஐம்புலன்களை சீர்படுத்தி .....

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:35 | Best Blogger Tips
Photo: இந்த உலாகாய விஷயங்கள் எனும் கௌரவர்களுடன், ஐம்புலன்களான பாண்டவர்கள் பிழைப்பு எனும் சூதாட்டம் ஆடி தோற்பதினால் மனத்தின் மானம் வாங்கப்படுகிறது. இதுதான் சம்சார துக்கம் ஆகும். எனவே ஐம்புலன்களை சீர்படுத்தி மனதை அமைதிப்படுத்தி வாழ்வதே முறையான வாழ்க்கை ஆகும். மனம் அமைதியடைய வேண்டும் என்றால் பிராணன் வசப்பட வேண்டும் பிராணனின் செலவு குறைந்து பிராணசக்தி அதிகரித்தால் மனம் அமைதியடையும். பிராண சக்தி குறைவு படும் போதுதான் பிராணனில் சலனம் உண்டாகி அது மனதையும் சலனப்படுத்துகிறது.மூச்சின் மூலமாக நமக்கு அதிக பிராண சக்தியைப் பெற முடியும் என்பதால், மூச்சை அடக்குவதன் மூலம் பிராணனையும் உள்ளடிக்கி அதிக பிராண சக்தியைப் பெற்றுக் கொள்வதோடு, பிராணனின் செலவைக் கட்டுப்படுத்துவதன் மூலமாக பிராண சக்தியை கட்டுப்படுத்தி தேக்கி வைத்துக் கொள்கிறோம். பிராணனை அடக்கி கட்டுப்படுத்துவதே பிராணாயாமம். மூச்சு அல்லாமல் ஐம்பூதங்களில் இருந்தும் நமக்கு பிராண சக்தி கிடைக்கத்தான் செய்கிறது. நீரிலும், உணவாகிய மண் கூறிலும் கிடைக்கிறது. ஆகாயம் நுட்பமாக உள்ளதால் அது உள்ளே நுழைவதை நாம் அறிவதில்லை.அக்கினியோ, தனியாக உண்ண முடியாத காரணத்தால் மற்ற பூதங்கள் வாயிலாக அதிலிருந்தும் பிராணன் பெறப்படுகிறது. உடலெங்கும் பரவியுள்ள பிராணனே ஐம்புலன்களால் நாம் அறிவு பெறக் காரணமாகத் திகழ்கிறது. 

உடலில் 72000 நாடிகள் உள்ளதாகச் சொல்வார்கள். அவற்றில் இயங்கிக் கொண்டிருப்பது பிராணனே. ஆனால் இயற்கையாக எப்படி பிராண ஓட்டம் நாடிகளில் நடைபெற வேண்டுமோ அப்படி நடப்பதில்லை. காரணம் தவறான வாழ்க்கை முறைதான். போதிய உழைப்பின்மை, போதைக்கு அடிமையாகுதல், அளவுக்கு அதிகமாக விந்தை விரயம் செய்தல், கவலை, பொறாமை, வயிற்றெரிச்சல் என்று பல காரணங்களைச் சொல்லலாம். இதனால் உடலில் நச்சுத்தன்மை சேர்ந்துவிடுகிறது. மேலும் உணவுப் பொருள்களிலும் கூட உஷ்ணத்தையும், வாயுவையும் உருவாக்கும் உணவுகளையே இப்போதுள்ளவர்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். உட்காரும் போது, படுக்கும் போது மூச்சு மற்றும் பிராணனின் ஓட்டம் சரிவர நடைபெற முடியாதபடிக்கு உடலை மடித்துக் கொள்ளுதல், காற்று கெட்டுப் போன சூழலில் வசித்தல் மற்றும் உடைகளும் கூட பிராணனின் ஓட்டத்திற்கு தடையாகத் திகழ்கின்றன. இதனால் தான் மூச்சுப் பிடிப்பு, கை, கால்கள் இழுத்துக் கொள்வது வாத சம்மந்தமான ருமேடிக் ஜுரம் போன்ற பல நோய்களுக்கு காரணமாகி விடுகிறது. பிராண சக்தியின் குறைபாடுகளை கைநடுங்குதல், குரலில் நடுக்கம், வெளிச்சத்தை காண முடியாமல் கண்கூசுவது, பிறர் கண்களை நேருக்கு நேர் பார்த்து பேச முடியாத நிலை, பெண்களிடம் வெட்கம் அல்லது பயம், விரைவில் களைத்துப் போவது, நம்பிக்கையின்மை வெறுப்பு, சலிப்பு, மனதின் தவறான போக்கு போன்ற அறிகுறிகளின் மூலம் அறியலாம். இந்த நாடிகளே பிராண சக்தியை உடல் முழுவதும் கடத்துகின்றன. அதில் ஏற்படும் தடைகளை நீக்கி பிராண சக்தியை தூண்டுதல் செய்து ஓட வைப்பதே அக்கு பஞ்சர், நம் நாட்டு காது குத்துதல், உடலெங்கும் கம்பிகளைக் குத்திக் கொண்டு காவடி எடுப்பது போன்ற சிகிச்சை முறைகள்.

ஒவ்வொரு நாடியிலும் அதற்கேற்ற வாயுவோடு பிராணன் சஞ்சாரம் செய்யும் போதுதான் கனவு, கற்பனை, தெய்வீகக் காட்சி, ஆன்மிக அனுபவம், தூக்கம், அமைதி போன்றவைகளை அடைகிறோம். பிரபஞ்சத்திலிருந்து சக்திகளை இழுத்துக் கொள்ளவும், பிற மனங்களோடு தொடர்பு கொள்ளவும்,ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்குள் பிரவேசிக்கவும், மரணத்துக்குப் பிறகு மறு உலகங்களுக்கு பயணம் போகவும், அர்ச்சிராதி வழி என்று சொல்லப்படும் பரம்பதம் செல்லும் பாதையில் பிராணனாகிய ஜீவன் சேரவும் இந்த நாடிகளையே ஜீவனானது நம்பியிருக்கிறது. முக்கியமான நாடிகளாக ரமை, அரமை, இச்சை, அபுநர்பவை ஆகியவை சொல்லப்பட்டுள்ளன. ரமை புண்ணிய லோகத்துக்கும், அரமை பாவ லோகத்துக்கும், இச்சை நினைத்த உலகங்களுக்கும், அபுநர்பவை மோட்சத்துக்கும் ஜீவனைக் கொண்டு செல்லும் நாடிகளாகும். நாலாவது நாடி வழியாக இதயம், கபாலம், தலை இவற்றைப் பிளந்து பிருதிவி உட்பட ஐம்பூதங்களையும், ப்ரக்ருதியையும் கடந்து வஜ்ரா ந்திக்கு மறுகரை வரை பரவியுள்ள பரம்பதமான வைகுண்டத்துக்கு ஜீவன் போவதாகச் சொல்லப்பட்டுள்ளது. இதயத்தில் புரி தத்து என்ற மாமிச பாகத்தின் தலைப்பகுதியில் போகும் சுஷும்ணா நாடி வழியாகத்தான் ஜீவன் மேலே கிளம்பும் என்று சொல்கிறார்கள். ஆனால் இன்றைய நிலையோ நாடிகளில் பிராண ஓட்டம் இல்லாமல் அவை நச்சுக்களாலும், அசுத்தங்களாலும் அடைபட்டு இருண்டு போய் பயன்ற்றுக் கிடக்கின்றன. இவற்றிற்கெல்லாம் தீர்வு என்பது பிராண சக்தியை அதிகப்படுத்தி, நாடிகளை சுத்தி செய்து அவற்றில் பிராணனை சரியான முறையில் இயங்க வைப்பதுதான். அதற்கான ஒரே வழி பிராணாயாமம் மட்டுமே. அதனால் தான் சித்தர்கள் அதை அஷ்டாங்க யோகத்தின் ஒரு நிலையாக அறிவித்தார்கள்.
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
இந்த உலாகாய விஷயங்கள் எனும் கௌரவர்களுடன், ஐம்புலன்களான பாண்டவர்கள் பிழைப்பு எனும் சூதாட்டம் ஆடி தோற்பதினால் மனத்தின் மானம் வாங்கப்படுகிறது. இதுதான் சம்சார துக்கம் ஆகும். எனவே ஐம்புலன்களை சீர்படுத்தி மனதை அமைதிப்படுத்தி வாழ்வதே முறையான வாழ்க்கை ஆகும். மனம் அமைதியடைய வேண்டும் என்றால் பிராணன் வசப்பட வேண்டும் பிராணனின் செலவு குறைந்து பிராணசக்தி அதிகரித்தால் மனம் அமைதியடையும். பிராண சக்தி குறைவு படும் போதுதான் பிராணனில் சலனம் உண்டாகி அது மனதையும் சலனப்படுத்துகிறது.மூச்சின் மூலமாக நமக்கு அதிக பிராண சக்தியைப் பெற முடியும் என்பதால், மூச்சை அடக்குவதன் மூலம் பிராணனையும் உள்ளடிக்கி அதிக பிராண சக்தியைப் பெற்றுக் கொள்வதோடு, பிராணனின் செலவைக் கட்டுப்படுத்துவதன் மூலமாக பிராண சக்தியை கட்டுப்படுத்தி தேக்கி வைத்துக் கொள்கிறோம். பிராணனை அடக்கி கட்டுப்படுத்துவதே பிராணாயாமம். மூச்சு அல்லாமல் ஐம்பூதங்களில் இருந்தும் நமக்கு பிராண சக்தி கிடைக்கத்தான் செய்கிறது. நீரிலும், உணவாகிய மண் கூறிலும் கிடைக்கிறது. ஆகாயம் நுட்பமாக உள்ளதால் அது உள்ளே நுழைவதை நாம் அறிவதில்லை.அக்கினியோ, தனியாக உண்ண முடியாத காரணத்தால் மற்ற பூதங்கள் வாயிலாக அதிலிருந்தும் பிராணன் பெறப்படுகிறது. உடலெங்கும் பரவியுள்ள பிராணனே ஐம்புலன்களால் நாம் அறிவு பெறக் காரணமாகத் திகழ்கிறது.

உடலில் 72000 நாடிகள் உள்ளதாகச் சொல்வார்கள். அவற்றில் இயங்கிக் கொண்டிருப்பது பிராணனே. ஆனால் இயற்கையாக எப்படி பிராண ஓட்டம் நாடிகளில் நடைபெற வேண்டுமோ அப்படி நடப்பதில்லை. காரணம் தவறான வாழ்க்கை முறைதான். போதிய உழைப்பின்மை, போதைக்கு அடிமையாகுதல், அளவுக்கு அதிகமாக விந்தை விரயம் செய்தல், கவலை, பொறாமை, வயிற்றெரிச்சல் என்று பல காரணங்களைச் சொல்லலாம். இதனால் உடலில் நச்சுத்தன்மை சேர்ந்துவிடுகிறது. மேலும் உணவுப் பொருள்களிலும் கூட உஷ்ணத்தையும், வாயுவையும் உருவாக்கும் உணவுகளையே இப்போதுள்ளவர்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். உட்காரும் போது, படுக்கும் போது மூச்சு மற்றும் பிராணனின் ஓட்டம் சரிவர நடைபெற முடியாதபடிக்கு உடலை மடித்துக் கொள்ளுதல், காற்று கெட்டுப் போன சூழலில் வசித்தல் மற்றும் உடைகளும் கூட பிராணனின் ஓட்டத்திற்கு தடையாகத் திகழ்கின்றன. இதனால் தான் மூச்சுப் பிடிப்பு, கை, கால்கள் இழுத்துக் கொள்வது வாத சம்மந்தமான ருமேடிக் ஜுரம் போன்ற பல நோய்களுக்கு காரணமாகி விடுகிறது. பிராண சக்தியின் குறைபாடுகளை கைநடுங்குதல், குரலில் நடுக்கம், வெளிச்சத்தை காண முடியாமல் கண்கூசுவது, பிறர் கண்களை நேருக்கு நேர் பார்த்து பேச முடியாத நிலை, பெண்களிடம் வெட்கம் அல்லது பயம், விரைவில் களைத்துப் போவது, நம்பிக்கையின்மை வெறுப்பு, சலிப்பு, மனதின் தவறான போக்கு போன்ற அறிகுறிகளின் மூலம் அறியலாம். இந்த நாடிகளே பிராண சக்தியை உடல் முழுவதும் கடத்துகின்றன. அதில் ஏற்படும் தடைகளை நீக்கி பிராண சக்தியை தூண்டுதல் செய்து ஓட வைப்பதே அக்கு பஞ்சர், நம் நாட்டு காது குத்துதல், உடலெங்கும் கம்பிகளைக் குத்திக் கொண்டு காவடி எடுப்பது போன்ற சிகிச்சை முறைகள்.

ஒவ்வொரு நாடியிலும் அதற்கேற்ற வாயுவோடு பிராணன் சஞ்சாரம் செய்யும் போதுதான் கனவு, கற்பனை, தெய்வீகக் காட்சி, ஆன்மிக அனுபவம், தூக்கம், அமைதி போன்றவைகளை அடைகிறோம். பிரபஞ்சத்திலிருந்து சக்திகளை இழுத்துக் கொள்ளவும், பிற மனங்களோடு தொடர்பு கொள்ளவும்,ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்குள் பிரவேசிக்கவும், மரணத்துக்குப் பிறகு மறு உலகங்களுக்கு பயணம் போகவும், அர்ச்சிராதி வழி என்று சொல்லப்படும் பரம்பதம் செல்லும் பாதையில் பிராணனாகிய ஜீவன் சேரவும் இந்த நாடிகளையே ஜீவனானது நம்பியிருக்கிறது. முக்கியமான நாடிகளாக ரமை, அரமை, இச்சை, அபுநர்பவை ஆகியவை சொல்லப்பட்டுள்ளன. ரமை புண்ணிய லோகத்துக்கும், அரமை பாவ லோகத்துக்கும், இச்சை நினைத்த உலகங்களுக்கும், அபுநர்பவை மோட்சத்துக்கும் ஜீவனைக் கொண்டு செல்லும் நாடிகளாகும். நாலாவது நாடி வழியாக இதயம், கபாலம், தலை இவற்றைப் பிளந்து பிருதிவி உட்பட ஐம்பூதங்களையும், ப்ரக்ருதியையும் கடந்து வஜ்ரா ந்திக்கு மறுகரை வரை பரவியுள்ள பரம்பதமான வைகுண்டத்துக்கு ஜீவன் போவதாகச் சொல்லப்பட்டுள்ளது. இதயத்தில் புரி தத்து என்ற மாமிச பாகத்தின் தலைப்பகுதியில் போகும் சுஷும்ணா நாடி வழியாகத்தான் ஜீவன் மேலே கிளம்பும் என்று சொல்கிறார்கள். ஆனால் இன்றைய நிலையோ நாடிகளில் பிராண ஓட்டம் இல்லாமல் அவை நச்சுக்களாலும், அசுத்தங்களாலும் அடைபட்டு இருண்டு போய் பயன்ற்றுக் கிடக்கின்றன. இவற்றிற்கெல்லாம் தீர்வு என்பது பிராண சக்தியை அதிகப்படுத்தி, நாடிகளை சுத்தி செய்து அவற்றில் பிராணனை சரியான முறையில் இயங்க வைப்பதுதான். அதற்கான ஒரே வழி பிராணாயாமம் மட்டுமே. அதனால் தான் சித்தர்கள் அதை அஷ்டாங்க யோகத்தின் ஒரு நிலையாக அறிவித்தார்கள்.
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
 
Via FB மௌனத்தின் குரல்