*குழந்தை பாக்கியம் கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்:* 🛑🛑

மணக்கால் அய்யம்பேட்டை | 3:33 PM | Best Blogger Tips

 


1. மகப்பேறு உண்டாகாமல் இருப்பதற்கு முன் வினையே காரணம் என்று கருடபுராணம் தெரிவிக்கிறது.

2. ஏழைக் குழந்தைகளுக்கு உடைகள், விளையாட்டு பொருட்கள், நூல்கள் வாங்கி கொடுத்தால் புத்திரபாக்கியம் உண்டாகும்.

3. பாயாசம் செய்து நிவேதனப் பொருளாக வைத்து கடவுளுக்கு படைத்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் புத்திரபாக்கியம் உண்டாகும்.

4. பூஜை அறையில் ராமர் படம் இருப்பது சிறப்புடையது ஆகும்.

5. ஜாதகத்தில் ராகு தோஷத்தினால் பாதிக்கபட்டு புத்திரபாக்கியம் இல்லாத தம்பதியினர் அம்மாவாசை அன்று திருமணஞ்சேரித் தலத்திற்குச் செல்ல வேண்டும்.

இத்தலத்தில் அருள் பாலிக்கும் ராகுபகவான் முழு உருவத்தோடு இருக்கிறார்.மனித உருவில் கவச குண்டலத்தோடு இருக்கிறார் என்பது மிகவும் விசேசம்


அம்மாவாசை அன்று புத்திரபாக்கியம் இல்லாத தம்பதியினர் திருமணஞ்சேரித் தலத்திற்கு வந்து இங்குள்ள சப்த சாகர தீர்த்த்தில் நீராடி, இங்கு தனி சந்நதி கொண்டு, நின்ற நிலயில், அருள்பாலிக்கும் " ராகு பகவானுக்கு பால் அபிஷேகமும், பால் பாயசம் நிவேதனமும் செய்து தேங்காய், வெல்லசர்க்கரை மற்றும் எலுமிச்சம்பழம் கொண்டு அர்ச்கனை செய்து வழிபட வேண்டும்.

தேங்காய், வெல்லசர்க்கரை மற்றும் எலுமிச்சம்பழம் ஆகியவை அர்ச்சனை தட்டில் திரும்ப பிரசாதமாக தரப்படும்.

பிரசாதமாக தரப்படும் பால் பாயாசத்தையும்,தேங்காயையும் இங்கேயே உட்கொள்ள வேண்டும்.

பிரசாதமாக தரப்படும்

எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து வெல்லசர்க்க்ரை சேர்த்து உட்கொண்டால் ராகு தோஷம் நீங்கப் பெற்று ராகுவின் அருளால் மகப் பேறு கிடைப்பது நிச்சயம்.

இந்த வழிபாட்டை 3 அல்லது 5 அமாவாசைகள் செய்வது மிகச் சிறந்த பலன் அளிக்கும்.

இக்கோவிலில் உள்ள ராகு பகவானுக்கு பால் என்றால் மிகவும் பிடித்த ஒன்றாகும். ஆகவே ராகு பகவானுக்கு பால் அபிஷேகமும், பால் பாயசம் நிவேதனமும் செய்து பிரசாதமாக தர்ப்படும் பால் பாயசத்தை உண்டு வர புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.

ஆண்குழந்தை வரம் வேண்டி அதன்படி ஆண்குழந்தை கிடைக்கப்பெற்றவர்கள் இத்தலத்திற்கு மீண்டும் வந்து சுவாமிக்கு தண்டக் கொலுசு வாங்கிப் போடவேண்டும்.

பெண் குழந்தைவரம் வேண்டி அதுபடி பெண் குழந்தை கிடைக்கப்பெற்றவர்கள் சுவாமிக்கு கொலுசு வளரி போட வேண்டும்..

ஆசைக்கு குழந்தைவரம் வேண்டியவர்கள் ஓசைக்கு மணிவாங்கிக் கட்டவேண்டும்.

விளக்கு போல் பிரகாசிக்க குழந்தைவரம் வேண்டியவர்கள் விளக்குகள் வாங்கி வைத்து வழிபட்டு உண்டியல் காணிக்கையும் போட வேண்டும்.

6. `புத்ரதா' என்றழைக்கப்படும் தை மாத சுக்ல பட்ச ஏகாதசியன்று உபவாசம் இருந்து நாராயணனை வழிபட்டு மறுநாள் துவாதசி அன்று துவாதசிப் பாரணை செய்தால் புத்திர பாக்கியம் உண்டாகும்.

7. புத்திர தோஷம் விரைவில் அகல குலதெய்வ வழிபாடு மிகவும் அவசியமாகும்.

8. சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து வந்தால் குழந்தை பாக்கியம் வரும்.

9. வெள்ளியினால் செய்த நாகத்தைத் தானம் செய்தாலும் பலன் உண்டு.

10. கிருத்திகை விரதம் இடைவிடாது இருந்தால் புத்திரதோஷ நிவர்த்தி ஏற்பட்டு, புத்திர பாக்கியம் உண்டாகும்.

11. சஷ்டி, கிருத்திகை, செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகனை பக்தியுடன் பூஜை செய்ய புத்திர பாக்கியம் உண்டாகும்.

12. ஹரித்துவார் சென்று கங்கையில் நீராடி ஏழைகளுக்கு அன்னதானம் அளித்தால் புத்திர பாக்கியம் கைகூடும்.

13. ஒருமுறை காசிக்கு சென்று கங்கையில் நீராடி, உங்கள் கைகளினாலேயே கங்கை நீரைத் கொண்டு, காசி விஸ்வநாதருக்கு வில்வம் சேர்த்து கங்கா தீர்த்தத்தினால் அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்.

14. மனைவியருடன் அமைந்துள்ள நவக்கிரக மூர்த்திகளை வழிபட்டால் திருமணம் கைகூடி உரிய காலத்தில் புத்திர பாக்கியம் ஏற்பட்டு இல்லற வாழ்க்கை இனிதாய் அமையும்.

15. பசு வளர்த்து அதற்கு சேவை செய்து வந்தால் உடனடியாக குழந்தை பாக்கியம் உண்டாகும்.

16. திருவாரூரில் இருந்து 24 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது மன்னார்குடி ராஜகோபாலப் பெருமாள் ஆலயம். இந்த பெருமாள் குழந்தை வடிவில் உள்ளதால் இவரை வழிப்பட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

17. சமயபுரம் மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். குழந்தை இல்லாதவர்கள் அங்கு சென்று சமயபுரத்தாளை வழிபட்டால் பலன் கிடைக்கும்.

18. மதுரை ராமநாதபுரம் சாலையில் உள்ள மடப்புரம் காளிக்கோயிலில் குழந்தை இல்லாத பெண்கள் தங்கள் சேலையைக் கிழித்து தொட்டில் கட்டினால் விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

19. ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தங்களில் நீராடி ராமநாத சுவாமிக்கு அர்ச்சனை செய்து குழந்தை பாக்கியம் வேண்டும் என்று கேட்டு வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

20. குழந்தை இல்லாத குறையை நீக்க அரச மரமும், வேம்பும் சேர்ந்துள்ள ஆலயத்திற்கு காலை 7 மணிக்குள் சென்று 108 முறை 48 நாட்கள் சுற்றி வர குழந்தை பாக்கியம் கிடைக்கும். இந்த 48 நாளும் நல்லெண்ணை திரி போட்டு விளக்கு ஏற்றி வரவும்.

21. அமாவாசை அன்று தர்ப்பணம் செய்யாதவர்களுக்கு சந்ததிகள் உண்டாகாது. புத்திர தோஷம் ஏற்படும்.

22. வைகாசி விசாக நட்சத்திரத்து அன்று, பகல் உணவு அருந்தி, மாலை கோவில்களுக்குச் சென்று அர்ச்சனைகள் செய்து வழிபடுவதால் புத்திர தோஷம், புத்திர சோகம் நீங்கி புத்திர பாக்கியம் கிடைக்கும்.

23. காலை மூன்று மணி முதல் 6 மணி வரையிலான காலத்தை பிரம்ம முகூர்த்தம் என்று கூறுவார்கள். இந்த நேரத்தில் தலையில் தண்ணீரை ஊற்றிக் கொண்டு உடலில் அணிந்திருக்கும் துணி காயும் முன் அரச மரத்தைச் சுற்றத் தொடங்க வேண்டும். ஆண்கள் வலது பக்கமாகவும் பெண்கள் இடதுபக்கமாகவும் சுற்ற வேண்டும்.

 

நன்றி இணையம்

அசைக்க முடியாத இறை நம்பிக்கை

மணக்கால் அய்யம்பேட்டை | 3:32 PM | Best Blogger Tips

 


அசைக்க முடியாத இறை நம்பிக்கை என்ற செல்வம் மற்ற செல்வங்களிலெல்லாம் சிறந்த செல்வம்...!

மும்பையில், இந்து ஒருவர் மிகப் பெரும் செல்வந்தர்.. அவருக்கு மனைவி குழந்தைகள் என்று யாரும் இல்லை. பரோபகாரி.

ஒரு தீபாவளி பண்டிகையையொட்டி , தன்னிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மிக சிறந்த விருந்து ஏற்பாடு செய்து அவரே முன்னின்று அனைவரையும் உபசரிக்கிறார்..

விருந்து முடிந்தவுடன், ஒவ்வொருவருடைய இருக்கைக்கு முன் இரண்டு பெரிய வண்ண கவர்கள் வைக்கப் பட்டுள்ளன. ஒன்றில் பணம் என்றும் மற்றொன்றில் புனித ராமாயணம் புத்தகம் என்றும் எழுதி வைக்கபட்டுள்ளது..

நண்பர்களே, நீங்கள் எனக்காக உண்மையாக உழைக்கின்றீர்கள். உங்கள் வேலைக்கேற்ற அல்லது அதற்கும் அதிகமாகவே உங்களுக்கு சம்பளமும் கொடுத்து வந்துள்ளேன்.. என்னுடைய இந்த செல்வம் இறைவனால் அருளப்பட்டது.. என்னுடைய செல்வத்தை எவ்வாறு செலவழித்தேன் என்று இறைவனுக்கு பதில் சொல்ல கடமைபட்டுள்ளேன்...

உங்கள் முன் இரண்டு கவர்கள் உள்ளன. ஒன்றில் பணம், மற்றொன்றில் ராமாயணம் புத்தகம் இதில் ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்...

முதலாமவர் தயங்கியவாறே சொன்னார்... முதலாளி, நான் ராமாயணத்தை மதிக்கிறேன். ஆனால் இப்போதைக்கு, நோய்வாய்பட்டிருக்கும் என் தாய்க்கு நல்ல சிகிட்சை அளிக்க வேண்டும். அதற்கு பணம் வேண்டும்.. பணம் என்று எழுதப்பட்ட கவரை எடுத்து கொண்டார்...

அடுத்தவர், என் ஓலை குடிசைக்கு பதில், சின்னதாக ஒரு கல் வீடு கட்ட வேண்டும்.. இந்த பணம் இருந்தால் என் கனவு வீடு கட்ட முடியும்... பணத்தை எடுத்து கொண்டு முதலாளிக்கு நன்றி சொல்லி நகன்றார்...

இப்படியே அடுத்தடுத்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களோடு பணத்தை எடுத்து கொண்டனர்...

கடைசியாக, முதலாளியின் தோட்டத்தில் உள்ள கால்நடைகளை பராமரிக்கும் வாலிபனுடைய முறை...

அவன் பரம ஏழை. வயதான தாய். மனைவி மற்றும் பிள்ளைகள்...

அவன் பணத்தின் தேவை அறிந்தவன்.. அவனும் பணம் உள்ள கவர் அருகில் சென்று, அதை எடுத்து கையில் வைத்து கொண்டு முதலாளியிடம்......

என்னுடைய தேவைக்கு நான் எப்போது கேட்டாலும் நீங்கள் தரத்தான் போகிறீர்கள்.. மேலும் என் அம்மா அடிக்கடி சொல்வார்கள், ...... ஏழ்மை என்பதும் இறைவனால் அருளப்பட்டதே... நம் தேவைகளை நிறைவேற்றுபவனாக எல்லாம் வல்ல இறைவன் இருக்கின்றான்... மேலும், எங்கள் வீட்டில் ஒரு பழக்கம்...

தினசரி, அதிகாலை ராமாயணம் படித்தும் மாலையில் அந்தி சாயும் நேரத்தில் மகாபாரதம் படித்தும் என் அம்மா அதன் அர்த்தம் சொல்லுவார்கள். நாங்கள் சுற்றி அமர்ந்து அதை செவிமடுப்போம்...

என்று சொன்ன அந்த வாலிபன், எடுத்த பண கவரை எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு

நான் இந்த புனிதமான ராமாயணம் புத்தகம் தேர்ந்தெடுக்கிறேன் என்று அதை எடுத்தான்.

சம்பவம் இதோடு முடியவில்லை நண்பர்களே!

புனித ராமாயணம் இருந்த பெரும் கவரை எடுத்தவன், முதலாளியிடம் நன்றி சொல்லிவிட்டு அதை திறந்து பார்க்கிறான்.

என்ன ஆச்சர்யம்!!

ராமாயணம் இருந்த கவருக்குள் மேலும் இரண்டு கவர்கள்.

ஒன்றில், பணமும் மற்றொன்றில் செல்வந்தரின் சொத்துக்களின் ஒரு பகுதியை தானமாக எழுதி கையெழுத்திட்ட பத்திரம்...

யாருக்கு என்ற பெயர் மட்டும் எழுதப்படாமல் இருந்தது.

அந்த வாலிபன் மட்டும் இல்லை, ஏனைய தொழிலாளர்களும் அதிர்ந்து போயினர்...

செல்வம் நிலையானது அல்ல.

இறைவன் நினைத்தால்

இன்றைய நிலை அப்படியே தலைகீழாக மாறும்,

மனிதர்களை செல்வத்தை கொண்டும் சோதிப்பேன் என்ற இறைவனின் கூற்று எப்படி பொய்யாக முடியும்?

வாலிபன் தாய் சொன்னதை நம்பினான்.

ஆம்,அவள் சொல்லி இறைவன்

கொடுத்தார்...

இறைவனை நம்பு. அவனிடம் உன் தேவைகளை கேள்.

இறைவன் சிலவற்றை தாமதமாக கொடுப்பான்.

ஆனால் சிறந்ததையே கொடுப்பான்!

அள்ள அள்ள குறையாத செல்வத்தை அவன் நமக்கு தேவையான நேரத்தில் வழங்குவான்.

அசைக்க முடியாத இறை நம்பிக்கை என்ற செல்வம் மற்ற செல்வங்களிலெல்லாம் சிறந்த செல்வம் அல்லவா..


நன்றி இணையம்

எதிர்ப்பது_மட்டுமே

மணக்கால் அய்யம்பேட்டை | 3:28 PM | Best Blogger Tips

 அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் ஜிடிபி 6 ட்ரில்லியனை தாண்டும்..!!
இதை நான் சொல்லல
மார்கன் ஸ்டான்லி நிறுவனம் சொல்லுது
#மோடி_இந்தியாவை_உயர்த்துகிறார் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை.
தற்போது உலக பொருளாதார மன்றத்தின் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
137 நாடுகள் பட்டியலில் 40 இடத்தை பாரதம் பிடித்துள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 71வது இடம். தவிர இந்த 40வது இடம் அளவுக்கு வரலாற்றில் இதுவரை பாரதம் முன்னேறியதே இல்லை.
பொருளாதாரம் குறித்த ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை பாரதத்தின் இந்த வளர்ச்சியை வியந்து பாராட்டி உள்ளது.
பிரதமரின் முழு முயற்சியே இதற்கு காரணம் எனவும் கூறியுள்ளது.
இதை எந்த ஊடகமும் வெளியிடவில்லை.
வேலை போலும்

நன்றி இணையம்

*உண்மை இதுதான்*

மணக்கால் அய்யம்பேட்டை | 3:26 PM | Best Blogger Tips

 


*உண்மை இதுதான்*

ஆங்கிலேயர்கள் வந்துதான் கல்வி கற்பிக்கப்பட்டது என்பது சுத்த மடத்தனம்... ஆங்கிலம் கற்றோம் அவ்வளவுதான்...

நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள்..


*Civil Engineering* தெரியாமல் தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில்,

காிகாலனின் கல்லணை கட்டமுடியுமா?

சிதம்பரம் நடராஜா் கோவிலில் ஒரே இடத்தில் சிவனையும் நாராயணனையும்

பாா்க்கும்படி வைத்து

மனிதனின் நாடி, நரம்புகள், மூச்சுக்காற்று உள்ளடக்கி

தங்க ஓடுகள் ஊசிகள் பதித்தான்..

இன்னும் இது

போன்ற எத்தனையோ கட்டிடகலை..

தொியாமல் கட்ட முடியாது.!

*Marine Engineering* தெரியாமல் சோழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது.

*Chemical Engineering* தெரியாமல் இரசவாதம், மற்றும் மூலிகை வைத்தியம் கண்டறிந்திருக்க முடியாது.

*Aero Technology* தெரியாமல் கோல்களை ஆராய்ந்திருக்க முடியாது.

*Mathematical* தெரியாமல் கணக்கதிகாரம் படைத்திருக்க முடியாது, ஜோதிடம், பஞ்சாங்கம் படைத்திருக்க முடியாது.

*Explosive Engineering* தெரியாமல் குடவறை கோவில்கள் படைத்திருக்க முடியாது.

*Metal Engineering* தெரியாமல் ஆயுதங்கள், உபகரணங்கள், ஆபரணங்கள் படைத்திருக்க முடியாது.

*Anatomy* தெரியாமல் சித்த மருத்துவம் செய்திருக்க முடியாது.

*Neurology* தெரியாமல் நாடி வைத்தியம் பார்த்திருக்க முடியாது.

*Psychology* தெரியாமல் Telepathyயை செயல்படுத்தியிருக்க முடியாது.

*Bachelor/ Master of Arts* தெரியாமல் தமிழ் இலக்கியங்கள் படைத்திருக்க முடியாது.

*Business Administration* தெரியாமல் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது.

*Chartered Accounts* தெரியாமல் வரி வசூலித்து திறம்பட ஆட்சி செய்திருக்க முடியாது.

*Anomaly Scan / Target Scan* இல்லாமல் குழுந்தைகளின் வளர்ச்சியை கணக்கிட முடியாது. ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கர்ப்பம் தரித்த மூன்றாவது மாதத்திலிருந்து, பத்தாவது மாதம் குழந்தை பிறப்பதுவரை எப்படியிருக்கும் என்று பல்லடம் to தாராபுரம் நடுவில் உள்ள குண்டடம் சிவன் கோவிலில், கல்லில் செதுக்கி வைத்துள்ளான் தமிழன்.

இன்னும் நீங்கள் என்ன என்ன அறிவியல் பெயர் வைத்திருக்கிறீர்களோ, அத்தனைத் துறைகளிலும் சாதித்தவர்கள் நம் தமிழர்கள். நம் தமிழ்நாட்டின் பெருமையை அடுத்தவர் அறியச் செய்யுங்கள்.. நான் தமிழன் என்பதில் பெருமிதம் கொள்ளுங்கள்..

இன்னும் சொல்ல வேண்டுமானால்,

ஒட்டுமொத்த நவீன அறிவியலுக்கு திருமூலரின் ஒரேயொரு மந்திரம் போதும்...

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் Blood Test கிடையாது.

லேப் டெக்னிஸ்யன் (LAB technicient ) படிப்பு

கிடையாது.

ஆனால் நம் உணா்ச்சி பெருக்கத்தில் இருந்து வரும் விந்துவில் மில்லியன் உயிா் அணுக்கள் இருப்பதாக இப்போது கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அப்படி பல மில்லியன் உயிர் அணுக்கள் போராடி அதில் ஒன்று தான் கா்ப்பபைக்கு சென்று உயிா் உண்டாகிறது.

இதை இப்போது 21 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்ததாகச் சொல்கிறார்கள்..

ஆனால், இதை நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே,

*திருமூலா் பெருமகனார்* அற்புதமாக தன் ஞானத்தினால்,

*லட்சமாக உருவெடுத்து* *ஆயிரம் ஆகி*

*நுாறாகி பத்தாகி பிறகு ஒன்றாகி உள்ளே சென்று உயிரெடுத்தது தான் உயிா்*

என்று சொல்லியிருக்கிறார்.

எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது தமிழர் மரபும், கலாச்சாரமும், ஞானமும்.

- இதைப் பகிர பெருமை கொள்கிறேன். 🙏


 நன்றி இணையம்