நான் செய்வது தான் சரி

மணக்கால் அய்யம்பேட்டை | 6:42 PM | Best Blogger Tips

நான் செய்வது தான் சரி, என்னுடைய வார்த்தை தான் கடைநிலையாக இருக்க வேண்டும், மற்றவர்கள் எனக்கு அடங்கித் தான் போக வேண்டும், என்னை யாரும் குற்றம் சொல்வது எனக்குப் பிடிக்காது, நான் எப்போதும் அடுத்தவரை குறை சொல்லிக்கொண்டே குற்றம் சுமத்திக்கொண்டே இருப்பேன் என்ற மனோநிலை உங்களுக்குள் இருக்கிறதா?

ஒருமுறைக்கு பலமுறை இது சரியா என உள்மனதைக் கேளுங்கள். உங்கள் திறமையின் அடிப்படையில் செயல்களின் அடிப்படையில், அதன் விளைவுகளின் அடிப்படையில் அனைத்தும் சரியாகவே இருந்தால் நீங்கள் பாராட்டத்தக்கவர்.

ஆனால் துரதிருஷ்டவசமாக பெரும்பாலோனோர் அப்படி இருப்பதில்லை. இப்படித்தான் எனில் நீங்கள் மற்றவரை ஆதிக்கம் செலுத்தியே காலத்தைக் கழிப்பவர், மற்றவரை மதிக்கத் தெரியாதவர்.. இன்னும் சொல்லப்போனால் பெரும்பாலானவர்களால் வெறுக்கப்படுபவர் நீங்கள்.

சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் என்னும் தன்னை பற்றிய இயல்புக்கு மீறிய கூடுதல் மதிப்பீடு - ஆண் பெண் என்ற பாகுபாடில்லாமல் இருதரப்பினருக்கும் இந்தக் குணம் இருக்க வாய்ப்புண்டு.

ஊடுருவிப் பார்க்கும்போது இது தாழ்வு மனப்பான்மையின் மறைமுக வெளிப்பாடே! அடுத்தவர்கள் தன்னை குறை சொல்லிவிடுவார்களோ என்ற அச்சத்தால், தான் முந்திக்கொள்வது.

அடுத்தவர்கள் தன்னை தாழ்த்திவிடுவார்களோ என்று நினைத்து, அடுத்தவர்களை எப்போதும் தாழ்த்திப் பேசுவது.

தன்மேல் சொல்லப்படும் குற்றங்களையும், சுட்டிக்காட்டப்படும் தவறுகளையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாமல், தான் செய்வதும் எப்போதும் சரியே என்ற பிடிவாதத்தை வளர்த்துக்கொள்வதே ஆதிக்க மனப்பான்மையை உருவாக்குகிறது.

தன் நண்பர்களிடமும் உறவுகளிடமும் தனக்கென போலியாக ஒரு உருவத்தை செதுக்கிக்கொள்ள, சுப்பீரியாரிட்டி காம்ளக்ஸ் எனும் குணத்தை இவர்கள் கையாளுகின்றனர்.

எப்போதும் அடுத்தவர் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுக்காமல், தான் சொல்வது மட்டுமே சரி என்று மனிதர்கள் இயங்க ஆரம்பிக்கும் போது தன்னிச்சியாகவே இவர்களுக்கு இருக்கும் மதிப்பு சமூகத்தில் கெட்டுப் போய்விடுகிறது என்பதை இவர்கள் புரிந்துகொள்வதில்லை.

தான் நேசிப்பவர்களிடம் எப்போதும் அன்பால் ஆதிக்கம் செய்யாமல், கோபங்களாலும், வாக்குவாதங்களாலும், குறை சொல்லும் தன்மையாலும் தான் செய்வதுதான் சரி என்று நிறுவ இவர்கள் மேற்கொள்ளும் வழிமுறைகள் பல விளைவுகளை உண்டாக்குகின்றன.

ஏதேனும் வாக்குவாதங்கள் ஏற்படின், மற்றவருடைய கருத்துக்களை காதில் வாங்கிக்கொள்ளாமல், தன்னுடைய கண்ணோட்டத்தினை மட்டுமே கருத்தில் கொண்டு முடிவெடுப்பது...

பின் “நீ என்னைக் குறை சொல்லாதே, உன் செயலும் கூடத்தான் எனக்குப் பிடிக்கவில்லை எனவே முதலில் உன்னைத் திருத்திக்கொள்” என்று பிறர் மேல் சாடுவது...

தனக்குப் பிடித்தவைதான் தன்னை நேசிப்பவர்களுக்கும் பிடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது...

தங்களுடைய விருப்பங்களை அடுத்தவர் மேல் திணிப்பது...

இவை போன்ற பல செயல்களினால் நேசிப்பவர்கள் முதல் சாமானியர்கள் வரை எல்லோரிடத்திலும் இவர்களுக்கென ஒரு குறிப்பிட்ட வட்டத்தைப் வரைந்து கொள்கின்றனர்.

இவர்களின் இந்த மனப்பான்மையினால் என்ன விளைவு ஏற்படுகிறது என்பதை எப்போதும் இவர்கள் சிந்திப்பதே இல்லை.

இவர்களுடைய பேச்சுக்களும் செயல்களும் ஒருவரை எந்த அளவிற்குக் காயப்படுத்தும் என்பதை உணருவதே இல்லை.

வெளி உலகில் இவர்களது இந்த குணம் அடங்கியிருந்தாலும், நேசிப்பவர்களிடம் குறிப்பாக தங்கள் வாழ்க்கைத் துணையிடம் கட்டாயம் மேலோங்கி இருக்கும்.

இதில் இருக்கும் பாதிப்பு என்னவெனில், தான் செய்வது எப்போதும் சரியாகவே இருக்கும் என்று நினைத்துக்கொள்வதால், இவர்கள் தங்களைத் திருத்திக்கொள்ள முயற்சிப்பதே இல்லை.

அடுத்தவர்களை மட்டம் தட்டுவது, தன்னைத் தவிர அனைவரையும் முட்டாள்கள் போல் நினைத்துக்கொள்வது என அதிமேதாவித்தனங்கள் இவர்களது செயல்களில் மேலோங்கி இருக்கும்.

இதுபோன்றவர்களின் தவறினைப் பிறர் எடுத்துச் சொன்னாலும் காதில் வாங்கிக்கொள்ளாமல், பதிலுக்கு வாதம் செய்வார்கள். தாங்கள் எப்போதுமே நூறு சதவிகிதம் சரியானவர்கள் என்பதுபோல காட்டிக்கொள்வார்கள்.

சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் என்பது அதிகபட்ச அன்பினால் உண்டாகிறது என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.

பொசசிவ் குணத்திற்கும் ஆதிக்க மனநிலைக்கும் நிறைய வேற்றுமை உண்டு.

தனக்குச் சொந்தமான ஒன்றோ ஒருவரோ, பிறரை விட தங்களிடத்தில் அதிக நெருக்கமாக அன்பாக இருக்க வேண்டும் என்றும், தன்னை விட்டு யாரும் தனியே பிரித்து விடக் கூடாது என்ற மனோபாவமும் தனக்குரிய முக்கியத்துவத்தை அதிகம் எதிர்பார்க்கும் குணமும் அக்கறையும் பொசசிவ் எனலாம். இதற்கும் சந்தேக குணத்திற்கும் நூலிழையே வித்தியாசம்.

அதைப் புரிந்துகொண்டால் நலம். ஆனால் ஆதிக்க மனப்பான்மை என்பது இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. “தான்“ என்ற அகந்தை இதில் மேலோங்கி இருக்கும். அடுத்தவர்பற்றி, அவர்களுடைய விருப்பம், வலி பற்றி சிந்திக்கத் தோணாது.. இதில் அன்பு காதல் என்பதை விட அடக்குமுறைகள் தான் அதிகம் இருக்கும். பெரும்பாலான நட்பு வட்டத்தை இந்த மனநிலை சுருங்கச் செய்துவிடும்.

அதோடு மட்டுமல்லாமல் குடும்ப உறவுகளில், குறிப்பாக கணவன்-மனைவி உறவில் பெரிதளவில் விரிசல் உண்டாக்கிவிடும். விட்டுக்கொடுப்பதென்பது இருபக்கமும் இருத்தல் வேண்டும். எப்போதும் ஒருவரே விட்டுக்கொடுத்துக்கொண்டிருப்பின் ஒருவித சலிப்பு ஏற்பட்டு வாழ்க்கை கசந்துவிடும்.

தங்களுக்குள் உள்ள ஈகோ குணத்தை விட்டுவிட்டு, ஆதிக்கமோ தாழ்வோ.. எந்தவித மனநிலையும் இல்லாமல் ஒருவருக்கொருவர் தங்களது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

மனம் திறந்து பாராட்டப் பழக வேண்டும். தவறு செய்திருப்பின், மனதார மன்னிப்புக் கேட்க முன்வரவேண்டும். கேட்கப்படும் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு எந்தவொரு சூழலிலும் குத்திக்காட்டாமல் சகிஜநிலைக்குத் திரும்ப வேண்டும்.

உறவுகளுக்கிடையே சரியான புரிதல்கள் இருந்தாலே வாழ்க்கை மிகைப்படுத்தாத யதார்த்தமாகிவிடும்.

புரிதல்களுடனான வாழ்வைப் பெற வாழ்த்துக்கள்.
by இந்திரா

மன்னிப்பு – கேட்போம் கொடுப்போம் !

மணக்கால் அய்யம்பேட்டை | 6:37 PM | | Best Blogger Tips

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7zFqOK-viaGmL4TUaTKbikscL_58RnyitpCQYWmi8rELUGnQTxmwD5Vf1xMEf_tuamm90Lx8fYRMeSDL-NKcUEeQRGGkAZFye_9Jbwebn48Y-MJxIWcfTNUwPp3l1A6kX3dMvJjpm0b4/s1600/Forgiving+Someone.jpg
மன்னிப்பு இந்த வார்த்தை, சொல்வதற்கு வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். ஆனால் அதைக் கேட்பதும் கொடுப்பதும், அவ்வளவு சுலபமில்லை. பெரிய பெரிய பிரச்சனைகளையும் சச்சரவுகளையும் கூட ஒரே நொடியில் முடிவுக்குக் கொண்டுவரும்  திறமை இந்த வார்த்தைக்கு உண்டு.

ஒருவர் இன்னொருவரை பாதிக்கின்ற விதத்தில் ஏதாவது தவறு செய்துவிட்டால், அத்தவறை உணர்ந்து, மனதார மன்னிப்புக் கேட்கும் செயல் உண்மையிலேயே பாராட்டத்தக்க ஒன்று. அதற்கும் அப்பாற்பட்டது, கேட்கப்படும் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு சகஜ நிலைக்குத் திரும்புவது.

மன்னிப்பு கேட்பவன் மனுஷன், மன்னிக்கத் தெரிந்தவன் பெரிய மனுஷன்என்று ஒரு வசனம் உண்டு. இன்றைய சூழலில் அப்படிப்பட்ட மனிதர்களோ பெரிய மனிதர்களோ காணக்கிடைப்பது அரிது. ஈகோ, பிடிவாதம், வாக்குவாதம், புரிதலின்மை போன்ற பல விஷயங்களால் மன்னிப்பு என்பதே மறைந்து வருகிறது.

பலருக்கு, தான் செய்தது தவறென்று தெரிந்தும், அதை ஒப்புக்கொள்வதற்கு தன்மானம் இடம்பொடுப்பதில்லை. என்னதான் உயிர் நண்பனாக, உறவினராக, காதலன்/காதலியாக, கணவன்/மனைவியாக இருந்தாலும், வாக்குவாதங்களில் இருக்கும் ஆர்வம், தவறுகளை ஒத்துக்கொள்வதிலோ, ஏற்றுக்கொள்வதிலோ இருப்பதல்லை.

உதாரணமாக, வகுப்பில் ஒரு மாணவன் எதையாவது திருடிவிட்டு, அதை ஒத்துக்கொண்டு மன்னிப்பு கேட்கும்போது, இனி இப்படி செய்யக்கூடாதென்று அறிவுறுத்தி, அதை மன்னித்து விட்டுவிட வேண்டும்.

அதைவிடுத்து, அன்றிலிருந்து எந்தப் பொருள் காணவில்லையென்றாலும், அதை அவன்தான் எடுத்திருப்பானோ என்று சந்தேகக் கண்ணோடு பார்க்கக்கூடாது. இந்த நோக்கு, தவறு செய்யத் தூண்டுமே தவிர ஒருபோதும் திருத்தாது.

நம்மில் பலர் இந்தத் தவறினை செய்கிறோம். கேட்கப்படும் மன்னிப்பை தற்காலிகமாக வழங்கிவிட்டு, உள்ளூர அவர் செய்த தவறினை நினைத்துக்கொண்டே இருக்கிறோம். பல சந்தர்ப்பங்களில் அதை சொல்லிக்காட்டி குத்திக்கொண்டே இருப்பது இதுபோன்றவர்களின் வழக்கம்.

இது வெளியாட்களுக்கிடையே நடக்கும்போது ஏற்படும் பாதிப்பை விட, நேசிப்பவர்களுக்கிடையே நடக்கும் சந்தர்ப்பங்களில், அதிகம் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இன்னும் வெளிப்படையாக சொல்வோமேயானால், கணவன் மனைவிக்கிடையே அல்லது காதலர்களுக்கிடையே ஏதாவது மறைக்கப்பட்ட உண்மைகள் தெரிய வரும்போதோ அல்லது தெரியப்படுத்தப்படும்போதோ, அதை ஏற்றுக்கொண்டு மறக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

மன்னித்துவிட்டேன்என்று வாயளவில் சொல்லிவிட்டு, அடுத்து ஏதாவதொரு சிறு வாக்குவாதங்களில் கூட அதை சொல்லிக்காட்டுவது கீழ்த்தரமானது.

பல குடும்பத்தில் இந்தப் பிரச்சனையை நாம் பார்த்திருக்கலாம். கணவன் அல்லது மனைவியின் பழைய காதல் பற்றிய உண்மைகள் தெரிந்தபோது, பெருந்தன்மையாக ஒருவருக்கொருவர் ஏற்றுக்கொள்வார்கள்.

ஆனால் குடும்பத்தில் சிறு வாக்குவாதம் என்றாலும் நீ இப்படி செஞ்சவ தானே.. இதையும் பண்ணிருப்ப.. யாருக்கு தெரியும்என்று அசால்ட்டாக பேசுவார்கள். இந்த குணமே, நாளாக நாளாக உறவுகளின் விரிசலுக்கு காரணமாகிவிடுகிறது.

ஒருவர், தான் சொன்ன பொய்யை ஒப்புக்கொள்ளும்போது, அடுத்து அவர் எதைப் பேசினாலும் அது பொய்யாகவே இருக்கக்கூடுமோ என்று நினைக்கும் சந்தேக புத்தி தவறானது. பொய் சொல்லித் தப்பிக்கும் பலரை விட, உண்மையை ஒப்புக்கொண்டு அவதிப்படுபவர்களே அதிகம்.
இங்கு நான் வைக்கும் வாதம், உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டாம் என்பதல்ல.

ஒப்புக்கொண்டதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே. ஒரு முறை மன்னித்த தவறை,  அடுத்து மறந்துவிட வேண்டும் என்பதே.. ஒவ்வொருமுறையும் நினைவுபடுத்தி, தன்னையும் வருத்தி, சம்மந்தப்பட்டவரையும் வருத்த வேண்டாம் என்பது தான்.

எனவே.. மன்னிப்பு கேட்போம்... மனதாரக் கொடுப்போம்..
  
by இந்திரா via நீதி கதைகள்,தன்னம்பிக்கை கதைகள்

பழமொழி - ஆமை புகுந்த வீடு உருப்படாதா ! உண்மைப் பொருள் என்ன ?

மணக்கால் அய்யம்பேட்டை | 6:33 PM | Best Blogger Tips
SHARE & Like the page here-->> @[293309174033072:274:World Wide Tamil People]

"ஆமை ஒரு வீட்டிற்குள் புகுந்துவிட்டால் அந்த வீடு உருப்படாமல் போய்விடும்." என்று இந்த பழமொழிக்குப் பொருள் கொண்டு "ஆமை"யின் மேல் ஒரு "துரதிருஷ்டசாலி" என்னும் பழியையும் சேர்த்துப் போடுகின்றனர் நம் மக்கள்.

இக்கருத்து சரியாகுமா?. இல்லை. ஆமை அப்படி என்னதான் தவறு செய்தது? நாம் ஏன் அதன் மேல் வீண்பழி போட வேண்டும்?. நீர்நிலைகளில் வசிக்கும் இயல்புடைய ஆமை நமது வீட்டிற்கு ஏன் வர வேண்டும்?. சரி தவறுதலாக எப்படியோ ஒரு ஆமை நமது வீட்டிற்குள் புகுந்து விட்டால் எப்படி அந்த வீடு உருப்படாமல் போகும்?. மாறாக, ஆமை வீட்டிற்குள் புகுந்தால் உங்கள் வீட்டிற்கு இலக்குமி (திருமகள்) வரப்போகிறாள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் ஆமை திருமாலின் அருள் பெற்ற ஒரு உயிரினம் ஆகும். திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றல்லவா இந்த ஆமை அவதாரம். திருமால் இருக்கும் இடம் தானே திருமகள் வாசம் செய்யும் இடம். எனவே இந்த தவறான கருத்தை இன்றோடு கைவிடுங்கள்.

அப்படி என்றால் இந்தப் பழமொழியின் உண்மையான பொருள் என்ன?. வழக்கம் போல சொல் பிழைகளால் இந்தப் பழமொழியில் பொருள் மாறுபாடு அடைந்துள்ளது. தூய செந்தமிழ்ச் சொற்கள் கொச்சை வழக்கில் எப்படி எல்லாம் மாறுபாடு அடைகின்றன என்பதற்கு இந்தப் பழமொழியும் ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

உங்களுக்குக் காளானைப் பற்றித் தெரியும். புழுத்துப்போன மரம், மாட்டுச்சாணம், வைக்கோல் முதலான பொருட்களில் இருந்து சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தானாகத் தோன்றும் ஒரு வகைப் பூஞ்சை தான் இது. இருட்டும் ஈரப்பதமும் காளான் தோன்றுவதற்கு ஏற்ற சூழ்நிலைகள். எப்போதுமே இருளாகவும் ஈரமாகவும் மக்கிப்போன பழைய மரங்களுடன் இருக்கும் வீட்டில் காளான் இயல்பாகவே தோன்றும். இது போன்ற வீட்டில் குடி இருப்பவர்கள் உடல்நலத்துடன் இருக்க முடியுமா?. முடியவே முடியாது. ஏனென்றால் இந்தச் சூழ்நிலையில் வசிக்கும் மனிதர்களுக்கு காசநோய், மனநோய், சருமநோய் முதலான பல நோய்கள் தொற்றிக் கொள்ளும். கதிரவனின் ஒளியும் வெப்பமும் இல்லாத வீட்டிற்கு வெளியாட்களும் வர விரும்ப மாட்டார்கள். எனவே இது மாதிரி வீட்டில் வசிப்பவர்கள் கவனிப்பார் யாருமின்றி நோய்வாய்ப்பட்டு மரணத்தைத் தேடிக்கொள்வர். ஆக மொத்தத்தில் காளான் பூத்த இந்த வீடு உருப்படாமலேயே போய்விடும். இதைத்தான் இந்த பழமொழியும் கூறுகிறது. சரியான பழமொழி இது தான் :-

"ஆம்பி பூத்த வீடு உருப்படாது."
(ஆம்பி = காளான்)

இதில் உள்ள தூய தமிழ்ச்சொற்களான 'ஆம்பி பூத்த' என்பன கொச்சைச் சொற்களாக மாறி பின்னர் உருமாறி இறுதியில் மீண்டும் தூய தமிழ் வடிவம் பெற்று இவ்வாறு நிற்கிறது. இந்த வரலாறு கீழே காட்டப்பட்டு உள்ளது.

தற்போதைய சூழ்நிலையில், ஆமை புகுந்த வீடு உருப்படாது எனும் பழமொழிக்குப் பலப் பொருள்கள் சொல்லப்படுகின்றன. அதாவது, கல்லாமை, அறியாமை, பொறாமை போன்ற ஆமை என்ற ஈற்றில் முற்றுப்பெறும் சொற்கள் நிறைந்திருக்கும் இல்லங்கள் முன்னேறுவது கடினம். அப்பொருள்களும் ஏற்புடையதே.

ஆம்பி பூத்த > ஆமி பூத்த > ஆமெ பூத்த > ஆமெ பூந்த > ஆமை புகு

நன்றி  World Wide Tamil People

பனங்காய் பணியாரம்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:32 PM | Best Blogger Tips
Photo: பனங்காய் பணியாரம்

நன்கு பழுத்த ஒன்று அல்லது இரண்டு பனம் பழத்தை நன்கு கழுவி எடுங்கள். மேலுள்ள மூளைக் கழட்டி விடுங்கள். பனம் பழத்தின் மேலுள்ள நாரை சிறிய மேசைக் கத்தியினால் பழத்தின் மேல் பகுதியிலிருந்து நீள் பக்கமாக சீவி எடுங்கள்.

 நார் வெட்டும் கைகள் பத்திரம். வெட்டி அகற்றிய பின்மீண்டும் பழத்தை தண்ணீரில் நன்கு கழுவுங்கள். பழத்தைப் பிரித்து இரண்டு மூன்றாக விதையுடன் பிரியும்.
 
அவற்றைப் பிழிந்து அதிலுள்ள களியை இரு கைகளாலும் அழுத்தி எடுங்கள். களி தும்புகளுடன் கூடி இருக்கும். மெல்லிய வெள்ளைத்துணி அல்லது கண்ணறைத் துணியை வைத்து களியை வடித்தெடுங்கள்.
 
வடித்தெடுத்த களியை அடுப்பில் வைத்து சீனி சேர்த்து பச்சை வாடை போக காச்சி எடுங்கள். ஆறவையுங்கள். இப்பொழுது காச்சிய பனம்களி தயாராகிவிட்டது.
 
பணியாரத்துக்கு தேவையான பொருட்கள்
 
பனங்களி – 1 கிண்ணம் 
சீனி- ¼ கிண்ணம் 
பொரிக்க எண்ணெய் – அரை லீட்டர்.
அவித்த மைதாமா அல்லது வறுத்த உழுந்துமா அல்லது அரிசிமா – ¼ கிண்ணம்
உப்பு சிறிதளவு.
 
செய்முறை
 
காச்சிய பனங்களியுடன் மைதாமா உப்பு சேர்த்து கிளறி எடுங்கள்.
தாச்சியில் எண்ணையை விட்டு நன்கு கொதிக்க மாவைக் கையில் எடுத்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொன்னிறத்தில் பொரித்து எடுங்கள்.
 
மீதிக் களியையும் அவ்வாறே செய்து கொள்ளுங்கள். எண்ணெய்த் தன்மையைப் போக்கிக்கொள்ள காகிதத்தின் மீது  போட்டு எண்ணெய்  வடியவிட்டு ஆற வைத்த பின் இரண்டு மூன்று நாட்கள் வைத்துச் சாப்பிடுங்கள்.
 
மீண்டும் மீண்டும் சாப்பிட்டு உடனேயே தட்டுக் காலியாகிவிடும். சற்று நேரத்தில் காலியாகப் போகும் ..
 
குறிப்பு
 
கோதுமை மா (மைதாமா) கலந்தால் மெதுமையான பணியாரம் கிடைக்கும். அரிசிமா, உழுந்துமா சற்று உரமாக இருக்கும். மா கலக்காமல் தனியே களியிலும் செய்வார்கள் இது கடித்துச் சாப்பிடும் போது களிப்பிடியாக இருக்கும்.

நன்றி FB ஆரோக்கியமான வாழ்வு

பனை ஓலை கொழுக்கட்டை

மணக்கால் அய்யம்பேட்டை | 5:31 PM | Best Blogger Tips

Photo: பனை ஓலை கொழுக்கட்டை

தேவையானப்பொருட்கள்:

பனை ஓலை(நடுப்பகுதி)- 10 முதல் 15 துண்டுகள் (ஆறு அங்குல நீளம்)
பச்சரிசி மாவு - 3 கப்
கருப்பட்டி அல்லது வெல்லத்தூள் - 2 கப்
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
சுக்குப்பொடி - 1/2 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1 கப்

செய்முறை:

கருப்பட்டியில் அரைக்கப் தண்ணீரைச் சேர்த்து காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும்.

பச்சரிசி மாவுடன் ஏலக்காய் தூள்,சுக்குப்பொடி, தேங்காய்த்துருவல், கருப்பட்டி நீர் ஆகியவற்றைச் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும். மாவு மிகவும் கெட்டியாக இல்லாமல் சிறிது குழைவாக உள்ளவாறு நீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும். 

ஒரு ஓலையை விரித்து நடுவில் மாவை வைத்து, ஓலை அளவிற்கு நீளமாக அழுத்தி, மூடவும். ஓலை பிரிந்து விடாமல் இருக்க ஒரு நார் அல்லது நூல் கொண்டு கட்டி வைக்கவும். 

இதேபோல் மீதமுள்ள மாவு அனைத்தையும் தயார் செய்து இட்லி தட்டில் வைத்து 15 அல்லது 20 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

சற்று ஆறியபின், ஓலையைப் பிரித்து கொழுக்கட்டையைத் தனியாக எடுத்து வைக்கவும். 

இந்தக் கொழுக்கட்டை, திருக்கார்த்திகைத் தினத்தன்று, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் செய்யப்படும் ஒரு சிறப்பு பலகாரம்

மற்றொரு முறை:
(முஸ்லிம்கள் செய்முறை) 

பனை ஓலை - 20 துண்டுகள்
பச்சரிசி மாவு - 1/2 கிலோ
கருப்பட்டி அல்லது வெல்லம் - 400 கிராம்
ஏலக்காய் தூள் - 2 ஸ்பூன்
சுக்கு தூள் - ஒரு ஸ்பூன்
தேங்காய்ப்பூ - 2 கப்
பாசிப்பருப்பு - 100 கிராம்
 
வாணலியில் மாவை சிறிது வறுத்து கொள்ளவும்.
வெல்லத்தில் சிறிது நீர் விட்டு, நன்கு பாகாக காய்ச்சவும். அதை அப்படியே சூட்டோடு மாவில் ஊற்றி கரண்டியால் கிளறவும்.
இதில் சுக்கு தூள், ஏலக்காய் தூள், தேங்காய்ப் பூ ஆகியவற்றை போடவும். பாசிப்பருப்பை வறுத்து கொட்டவும். எல்லாவற்றையும் ஒன்றாக கெட்டியாக கிளறவும்.
பனை ஓலையை ஆறு அங்குல துண்டுகளாக நறுக்கி கழுவவும். சிறிது மாவை கையிலெடுத்து ஒரு பிடி பிடித்து இலையில் வைத்து மூடி சுருட்டி வைக்கவும்.
இப்படியே எல்லாமாவையும் இலையில் வைத்து சுருட்டவும்.
பின்பு சுருட்டிய கொழுக்கட்டைகளை இட்லி பானையில் வைத்து வேக வைக்கவும்.(அரை மணி நேரம்). பின்னர் ஆறவிட்டு எடுக்கவும்.
ஓலையில் ஒட்டாமல் அழகாக வரும். இது 3 நாள் வரை கெடாமல் இருக்கும். மிகவும் சுவையாக இருக்கும்.

இது கன்னியாகுமரி மாவட்டத்தில் முஹரம் மாதத்தில் செய்வார்கள். பனைஓலை இல்லாமலும் சும்மா கையால் மாவை பிடித்து பானையில் வைத்து அவித்து எடுக்கலாம்

கோடையை குளிர்ச்சியாக்க நுங்கு சாப்பிடுங்க !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 5:30 PM | Best Blogger Tips
Photo: கோடையை குளிர்ச்சியாக்க நுங்கு சாப்பிடுங்க !!!

இயற்கையாய் படைக்கப்பட்ட அனைத்தும் நமக்கு அளிக்கப்பட்ட வரம் என்றே சொல்ல வேண்டும். இயற்கையானது காலத்திற்கு ஏற்ப உணவுகளை அளிப்பதில் ஆற்றல் மிக்கது. கோடை காலம் வந்துவிட்டாலே நமக்கு நியாபகம் வருவது நுங்கு தான். கோடை காலத்தில் உடலுக்கு குளுமை 
தரக்கூடியதில் நுங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் கால்சியல், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ளக்ஸ், தையாமின், ரிபோஃப்ளோவின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

குளிர்ச்சி நிறைந்த நுங்கு

கோடையின் வெம்மையை கட்டுப்படுத்துவதில் நுங்கு சிறந்த உணவுப் பொருளாகும். இது குளிர்ச்சி தருவதோடு வைட்டமின் பி, சி சத்துக்கள் 

நிறைந்துள்ளதால் உடலுக்கு ஆரோக்கியத்திற்கு ஏற்றது. நுங்கை வெட்டினால் மூன்று அல்லது நான்கு நுங்குகள் தனித்தனியாக கிடைக்கும் அதனை 

அப்படியே விரலால் எடுத்து சாப்பிடலாம். இளம் நுங்கினை அப்படியே சாப்பிட வேண்டும். 

ஒருசிலர் மேல்தோல் துவர்ப்பாக இருக்கிறது என்பதற்காக அதனை நீக்கிவிட்டு வெறும் சதையை மட்டுமே சாப்பிடுவார்கள். இதனால் சத்துக்கள் முழுமையாக கிடைக்க வாய்ப்பில்லை. சிறு குழந்தைகளுக்கு ஜீரணமாக நேரமாகும் என்பதால் நசுக்கிக் கொடுக்கவேண்டும். முற்றிய நுங்கு, பெரியவர்களுக்கே ஜீரணமாகாது எனவே இளம் நுங்கே உண்பதற்கு ஏற்றது.

பதநீரும் நுங்கும்

அம்மை நோயால் அவதிப்படுபவர்கள் இளம் நுங்கை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள சிறு புண்களையும் ஆற்றும். பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் சுவை மிகுந்தது. பனை மட்டையில் பதநீர் ஊற்றி இதனுடன் நுங்கை எடுத்துப்போட்டு குடித்தால் அதன் ருசியே தனிதான். எப்படிப்பட்ட கோடை வெப்பத்திலும் இந்த பானம் தாகத்தை தீர்க்கும் குடலுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியை ஏற்படுத்தும். கோடையில் வேர்குரு தொல்லையினால் அவதிப்படுபவர்கள் நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர வேர்க்குரு நீங்கும். தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிசல் நீங்கும். 

கோடை வெயிலை தவிர்க்க நுங்கு சாப்பிடுங்க. நுங்கில் சத்துகள் நிறைந்து உள்ளன.

நுங்கு மில்க் ஷேக்

இளநுங்கு - 4
பால் - 2 கப்
சர்க்கரை - தேவையான அளவு
ரோஸ் எசன்ஸ் - சிறிது
ஐஸ் க்யூப்ஸ் - சிறிது

நுங்கின் மேல் தோலை உரித்து எடுத்து விட வேண்டும். பாலைக் காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும். மிக்சியில் நுங்கு, பால், சர்க்கரை, ரோஸ் எசன்ஸ், ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து அரைத்து, ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி, மேலே சிறிது நுங்கை மிதக்க விட்டு அருந்தலாம்.

நுங்கு ரோஸ்மில்க்

இளம் நுங்குச் சுளைகள் - 3,
சர்க்கரை - 3 டீஸ்பூன்,
ரோஸ் சிரப் - 1 டீஸ்பூன்,
பால் - முக்கால் கப்,
சாரைப் பருப்பு அல்லது பிஸ்தா பருப்பு - கால் டீஸ்பூன்,
நெய் - அரை டீஸ்பூன்.

நுங்கின் தோலை நீக்கி மிக்ஸியில் நன்றாக அடித்துக் கொள்ளவும். வாணலியில் நெய்யை சூடு செய்து, சாரைப்பருப்பை வறுத்தெடுக்கவும். பாலைக் காய்ச்சிக்கொள்ளவும். பிறகு, காய்ச்சி, ஆறிய பாலில் சர்க்கரை, ரோஸ் சிரப், அரைத்த நுங்கு, வறுத்த பருப்பு எல்லாவற்றையும் சேர்த்து கலக்கி பரிமாறவும். குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அருந்தினால் சுவை கூடுதலாக இருக்கும். கோடைக்கு இதமாக நுங்கும் பாலும் சேர்ந்த அருமையான பானம் இது
 
நுங்கு கீர்

பால்- 1/2 லிட்டர்
இளசான நுங்கு- 20
சர்க்கரை- 200கிராம்
ஏலக்காய்தூள்- கொஞ்சம்

நுங்கை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும். பாலை சர்க்கரை சேர்த்து காய்ச்சி ஆற வைத்து, நுங்கை மிக்ஸியில் அரைத்து பாலில் கலந்து ஏலக்காய் தூள் சேர்த்து ஆற வைத்து குடிக்கலாம். இல்லையெனில் ஃப்ரிஜில் வைத்தும் குடிக்கலாம். உப்பு சேர்த்து குடிப்பதாக இருந்தால் சீரகம் சேர்த்து ஏலக்காயை தவிர்க்க வேண்டும்.
 
இளநீர் & நுங்கு டிலைட்:

இளநீர் & 2 
நுங்கு & 6 
குளுக்கோஸ் & சிறிதளவு 
ஐஸ் துண்டுகள் & சிறிதளவு 
இளநிரில் குளுக்கோஸைக் கலந்து, நுங்கை பொடிப்பொடியாக நறுக்கிப் போடவும்.ஐஸ் துண்டுகளைப் போட்டு பருகிப் பாருங்கள். சுத்தமான கோடைக்கேற்ற பானம் தயார். 

இதில் இரண்டு, மூன்று பேரிச்சம்பழத்தைப் பொடியாக நறுக்கி சேர்த்தும் அருந்தலாம்.
 
நுங்கு ஜூஸ்

நுங்கு - 10
பால் - 4 கப்
கண்டென்ஸ்டு மில்க் - 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1/4 கப்
 
இளம் நுங்குகளாக தேர்ந்தெடுக்கவும்.
மேல் தோலை நீக்கிக்கொள்ளவும்.
தோல் நீக்கிய நுங்கை கையால் நன்கு பிசையவும். மிக்ஸியில் ஒரு சுற்று அடித்தால் இன்னும் சுலபமாக இருக்கும்.
காய்ச்சி ஆறிய பாலில் மசித்த நுங்கு, சர்க்கரை, கன்டென்ஸ்டு மில்க் சேர்த்துக் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து ஜில் என்று பரிமாறவும்

கன்டென்ஸ்டு பால் சேர்க்காமலும் செய்யலாம். கோடை காலங்களில் நோன்பு காலங்களிலும் இந்த ஜூஸ் உடல் சூட்டினை தடுத்து, நன்கு குளிர்சி தரும்.
 
நுங்கு பாயாசம்
 
நுங்கு - 6
ஏலக்காய் - 3
பால் - 3 கப்
சர்க்கரை - சுவைக்கு
 
முதலில் நுங்கின் தோலை நீக்கி கையால் ஒன்றுக்கு இரண்டாக மசித்து கொள்ள வேண்டும்.
பாலை காய்ச்சி, ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரையுடன் ஏலக்காயை சேர்த்து நன்கு மிச்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
இப்போது நுங்கு, ஏலக்காய் கலந்த சர்க்கரை, பால் என அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பாயசம் பதத்திற்கு கலக்கவும்.
சுவையான நுங்கு பாயாசம் தயார்.

இது வித்தியாசமான , அலாதி சுவையுடைய பானம். இளம் நுங்காக இருந்தால் சுவை கூடும். குளிர்சாதன பெட்டியில் சிறிது நேரம் வைத்து, பின் அருந்தவும்.
 
நுங்கு சாலட்
 
நுங்கு - 6  
சுகர் லைட் (அ) தேன் - தேவையான அளவு  
பால் - 2 கப் (நன்கு காய்ச்சி ஆரவைத்தது)  
ஏலக்காய் தூள் - சிறிதளவு 

பாலை நன்கு காய்ச்சி ஆற வைக்கவும் 
நுங்கின் தோலை நீக்கி விட்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 
ஒரு பாத்திரத்தில் நுங்கை போட்டு அதில் பால், சுகர் லைட் (அ) தேன் சேர்க்கவும்.  
கடைசியாக ஏலக்காய் தூள் சேர்த்து ப்ரிஜ்ஜில் வைத்து 1 மணி நேரம் கழித்து சாப்பிட நன்றாக இருக்கும்.
 
நுங்கு பானம்

பனை நுங்கு - 8 
பால்- 400 மில்லி 
சர்க்கரை - 200 மில்லி 
ரோஜா எசக்ஸ் - சிறிதளவு 

பனை நுங்கை பக்குவமாக எடுக்க வேண்டும்.
பாலுக்கு சமமாக தண்ணீர் சேர்த்து நன்கு காய்ச்சி ஆற விடவும். 
இதில் ரோஜா எசன்ஸ், சர்க்கரையைச் கலக்கவும் 
நுங்கை மிக்சியில் நன்கு அடித்து பால் கலவையில் சேர்த்து பிரிட்ஜுல்  சிறிது நேரம் வைத்து எடுத்தால் 'ஜில்' பானம் தயார். 
கோடை வெயிலுக்கு இதமான பானம் இது, 
கோடை வெயிலின் பாதிப்பைத் தடுப்பதோடு, உடலுக்கு குளிர்ச்சி அளிப்பது நுங்கு.

நூடுல்ஸ் – ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா !

மணக்கால் அய்யம்பேட்டை | 5:24 PM | Best Blogger Tips

Photo: நூடுல்ஸ் – ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா

இரண்டே நிமிடங்களில் நீங்கள் வேக வேகமாய்ச் சமைத்துத் தரும், ஆசையாய் ஆசை ஆசையாய் நம் வீட்டுக் குழந்தைகள் அள்ளிச் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு என்றால் நம்புவீர்களா? நம்புங்கள் என்கிறார் ப்ரீத்தி ஷா. சும்மா இல்லை. ஆராய்ச்சி ஆதாரங்களோடு. யார் இந்த ப்ரீத்தி ஷா? என்ன ஆராய்ச்சி அது?

அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலா ளர் ப்ரீத்தி ஷா. ‘இ ன்சைட்’ என்கிற நுகர்வோர் விழிப்புணர்வு இதழின் ஆசி ரியராகவும் இருக்கிறார். விளம்பரங்க ளால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித் து எண்ணற்ற வீடுகளில் காலை உண வாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என் று தெரிந்துகொள்ள விரும்பினார் ப்ரீத்தி ஷா. இந்திய அளவில் முன் னணியில் இருக்கும் 15 நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் இந்த ஆய்வு க்கு எடுத்துக் கொ ள்ளப்பட்டன. நூடுல்ஸில் இவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இதற்கான அளவு மதிப்பீடுக ள் ஏதும் இதுவரை வரையறுக்கப்படாததால், இங்கிலாந்தின் உண வுத் தரக் கட்டுப்பாட்டு முகமையி ன் அளவுகளை வைத்து இந்தத் தர ச்சோதனை நடந்தது. இதில் வெளி யான முடிவுகள் மூலமாகத்தான் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திரு  க்கிறார் ப்ரீத்தி ஷா.
ஆய்வு சொல்லும் முடிவுகள்:

சோதனை செய்யப்பட்ட எந்த முன் னணி நிறுவனங்களின் நூடுல் ஸும் விளம்பரங்களில் காட்டப்ப டுவதுபோல ஏகப்பட்ட சத்துக்களை உள்ளடக்கியதாகவோ, குழந் தைகள் உடல் நலனுக்கு முற்றிலும் நன்மை பயப்பதாகவோ இல் லை.
 
அனைத்து நூடுல்ஸ்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டி லும் எக்கச்சக்க மடங்கு அதிகமாக உப்பு மற்றும் கொழுப்பு உள்ளன. நூறு கிராம் நூடுல்ஸில் 130 முதல் 600 மில்லி கிராம் வரை அனும திக்கப்பட்ட சோடியம் அளவாகும். ஆனால், இந்தியா வில் விற்கப்ப டும் வெவ்வேறு நூடுல்ஸ் நிறுவனங்களின் தயாரிப்புகளில் 821 மில் லி கிராம் முதல் 1943 மில்லி கிராம் வரை சோடியம் இருந்திருக்கிறது. கொ ழுப்பும் மிகுதி. ஆனால் தேவையான மற்ற சத்துக்களோ சொல்வ தைவிடக் குறைந்த அளவில்! மிகக் குறைந்த அளவுக்கே நார்ச்சத் து, புரதம், கால்சியம் ஆகியன உள்ளன. இதனால் ரத்த நாள ங்களில் கொழுப்பு படிதல், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் எனப் பல்வேறு ஆபத்துகளுக்கும் குழந்தைகள் ஆளாக நேரிடும்.
ப்ரீத்தி ஷா சொல்கிறார் .

”ஆய்வு முடிவுகளைப் பார்த்தபோது அதிர்ந்துபோனேன். இது தொடர் பாக விளக்கம் கேட்டு 15 நிறுவ னங்களுக்கும் ஆய்வு நிறுவனம் சார் பில் கடிதம் அனுப்பினோம். ஆனால், இதுவரை அந்தக் கடித ங்களுக் கு எந்த நிறுவனமும் பதில் அளிக்கவில்லை. கம்பு, வரகு, சாமை, தினை, கேழ்வரகு என்று எவ்வளவோ சத்து மிக்க சிறு தானியங்கள் விளையும் மண் இது. ஆனால், அவற்றை எல்லாம் இருட்டடிப்பு செய்து விட்டு, விளம்பரங்கள் மூலம் சந்தையைப் பிடிக்கும் பெரு நிறுவ  னங்கள் இந்திய மக்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே அடிமை ப்படுத்துகின்றன. பெற்றோர்கள் இந்த விஷயத்தில் விழிப்பு உணர் வோ டு இருக்க வேண்டும். குப்பை உணவின் மூலமாக ஏற்படும் வள ர்ச்சி உண்மையானது அல்ல. நாளை நம் குழந்தைகள் நிரந்தர நோ யாளிகளாக நாமே காரணம் ஆகிவிடக் கூடாது” என்றார் அக்கறை யுடன். உண்மைதான். இந்த காலகட்டத்தில் எந்த விஷயத்தையுமே விழிப்பு உணர்வுடன்தான் அணுக வேண்டும்!