மழைக் காலத்தில் சேர்க்க வேண்டிய உணவுகள்..

மணக்கால் அய்யம்பேட்டை | 1:57 PM | Best Blogger Tips
மழைக் காலத்தில் சேர்க்க வேண்டிய உணவுகள்..

'மழை காலங்களில் சிறந்த உணவு எது?'னு பலருக்கு சந்தேகம் இருக்கும். எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாதுனு குழப்பமா இருக்கும். சிலருக்கு ஒத்துக்கொள்ளும்; சிலருக்கு ஒவ்வாமை ஏற்ப்படுத்தும். இதை தீர்க்க சில உணவு குறிப்புகள் இதோ.


* மழை நேர வைரஸ் காய்ச்சலுக்கு, உடனடியாக கொடுக்க, நிலவேம்பு கஷாயம் பெஸ்ட். நம் வீட்டிலேயே நிலவேம்பு பொடியை வாங்கி வைத்துக் கொண்டால் நல்லது. இந்த நிலவேம்பு பொடியுடன் தண்ணீ­ர் சேர்த்து காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி, வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். உடனடியாக காய்ச்சல் பறந்தோடி விடும்.

* மழைக் காலத்தில் நாம் சாப்பிடும் உணவில், இனிப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

* பால் மற்றும் பால் சார்ந்த தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றையும் அதிகம் சாப்பிடக் கூடாது. ஆனால், மோர் சாப்பிடலாம். உடலுக்கு நல்லது.

* நம் உணவில் காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை மழைக்காலத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

* மதிய உணவின் போது தூதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம்.

* இரவு தூங்குவதற்கு முன், பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது நல்லது.

* நீர்ச் சத்துக்கள் நிறைந்த சுரைக்காய், பூசணி, புடலை, பீர்க்கன், வெள்ளரி போன்ற காய்கறிகளை, மழை சீசனில் உணவில் சேர்த்துக் கொள்வதை தவிருங்கள்.

* கண்டிப்பாக மழைக் காலத்தில், நம் உணவுப் பதார்த்தங்களில், மிளகு பொடியைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது. இரவு உணவில் பச்சைப் பயறு, கேழ்வரகு, கீரை ஆகியவற்றைச் சேர்க்காதிருத்தல் நல்லது.

* மழை சீசனில் பிஸ்கட் சீக்கிரம் நமத்துப் போகாமல் இருக்க, பிஸ்கட் வைக்கும் டப்பாவில் சிறிது சர்க்கரைத் துகள்களை போட்டு வைக்கவும்.

* மழைக் காலங்களில் பழங்களைச் சாப்பிடும் எண்ணம் அவ்வளவாக ஏற்படாது. ஆனாலும், பழத்தை அப்படியே துண்டுகளாக வெட்டிச் சாப்பிட விருப்பமுள்ளவர்கள் சாப்பிடலாம். எல்லா சீசனுக்கும் பொருத்தமானது வாழைப்பழம். அதற்காக வாழைப் பழத்தை மட்டுமே சாப்பிடுவதற்கு பதிலாக, மற்ற பழங்களையும் சேர்த்து சாப்பிடலாம்.

* சிலருக்கு சளி, இருமல் இருந்தாலும், விட்டமின் 'சி' சத்து ஒத்துப் போகும். சிலருக்கு மழைக்காலம் வந்து விட்டாலே ஒத்துக் கொள்ளாது. எலுமிச்சம், ஆரஞ்சு ஜூஸ் சாப்பிட்டாலும் ஒன்றும் செய்யாது. ஆனால், ஒத்துக் கொள்ளாதவர்கள் கண்டிப்பாக சாப்பிடாமல் இருப்பது நல்லது.

* சாப்பிடும் உணவுகள், லேசான சூட்டில் இருக்கும் படி பார்த்துக் கொண்டால் நல்லது.

* மழை சீசனில், கீரைகள் அதிகம் சாப்பிடா விட்டாலும் பரவாயில்லை என்றே சொல்லலாம். ஏனென்றால், கீரைகளை நன்றாக தண்ணீ­ரில் கழுவி பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் கீரைகளால் புதுசாக நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

* மழை சீசனில், எல்லா காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிலருக்கு, தண்­ணீர் சத்து அதிகமுள்ள காய்கறிகள் ஒத்துக் கொள்ளாது. அத்தகையவர்கள் அவர்களுக்கு ஏற்ற காய்கறிகளை சமைத்துச் சாப்பிடலாம்.

* அசைவ உணவாக, மீன், முட்டை, கறி, சிக்கன் என்று சாப்பிடலாம் ஆனால், அவை பிரஷ்ஷாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், மழைக் காலங்களில் கடைகளுக்குப் போய் வாங்குபவர்கள் குறைவு. அதனால், மீன் போன்றவை பழைய ஸ்டாக் இருக்க வாய்ப்பு உண்டு.

* மழை சீசனில், எண்ணெயில் பொரித்த உணவுகளையும் அதிகம் சாப்பிடக் கூடாது. சூடாகச் சாப்பிட வேண்டும் என்று தோன்றும் போது, பஜ்ஜி, போண்டா என சாப்பிடாமல், அதற்கு பதிலாக உப்புமா உருண்டை, இட்லி சாம்பார், பிரட் டோஸ்ட் என சாப்பிடலாம். நாம் தினமும் சாப்பிடும் உணவையே, சற்று சூடாகச் சாப்பிட்டால் போதும்.

தெரிந்து கொள்ள சில உண்மைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:55 PM | Best Blogger Tips
கழுத்தை முழு வட்டமாக சுற்றும் தன்மை கொண்ட ஒரே உயிரினம் ஆந்தை தான்.

********
ஒரு நாட்டின் கடல் எல்லை என்பது கடற் கரையிலிருந்து மூன்று கடல் மைல். அதாவது 6080 அடி தூரமாகும்.

********
எப்போதும் விரியாத பூ அத்தி மலர் தான். அதனால் தான் எப்போதாவது நடக்கும் செயலை 'அத்தி பூத்தாற்போல' என்கிறோம்.

********
ஒரு அடி எடுத்து வைக்க உடலெங்கும் 54 வகையான தசைகள் பணி புரிய வேண்டியுள்ளது.

********
'மஞ்சள் புரட்சி' என்பது முட்டை உற்பத்தியைக் குறிக்கிறது.

********
பழச்சாறு சாப்பிட்டால் உடனே வாய் கொப்பளிக்க வேண்டும். இல்லையெனில் பல்லில் எனாமல் வேகமாகத் தேயும்.

********
பளபளப்பான பகுதிகள் வெப்பத்தை மிக மிக தாமதமாகவே கடத்தும். அதனால்தான் இஸ்திரிப் பெட்டிகளின் அடிபாகம் பளபளப்பாக இருக்கிறது.

********
பர்மா ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இந்தியா வுடன் இணைந்திருந்தது. 1937 ல்தான் அது இந்தியாவிலிருந்து பிரிந்தது.

********
பென்சிலில் H.B.என்று எழுதியிருப்பதற்கு HARD BLACK என்பதுதான் விரிவு.

********
யானையின் துதிக்கையில் எலும்பே கிடையாது.

********
ஒட்டகச்சிவிங்கியின் நீளமான கழுத்தில் இருப்பது ஏழே எலும்புகள்.

********
உலகிலேயே நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரின் பெயர் ஈசாகானு. நாடு- நைஜீரியா. மொத்தம் 72 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.

உளுந்தின் உடல்நல நன்மைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:59 AM | Best Blogger Tips
உளுந்தின் உடல்நல நன்மைகள்:-

இந்திய உணவு வகைகள் உலக உணவு வகைகளில் முதன்மையானது. சீன உணவு வகைகளில் பெரும்பாலும் அசைவம் நிறைந்திருக்கும். ஆனால் முழுக்க முழுக்க மூலிகைகள் நிறைந்த சைவ உணவே இந்திய உணவாகும்.

இந்திய உணவில் இரண்டு வகை உண்டு.


தென்னிந்திய உணவு வகை,

வட இந்திய உணவு வகை.

தென்னிந்திய உணவுகளை விருந்தோம்பல் உணவு என்பார்கள். அறுசுவை கொண்ட உணவு இதுதான். குறிப்பாக தமிழக மக்களின் பிரசித்திபெற்ற உணவு இட்லிதான். தமிழக இட்லியை விரும்பி உண்ணாதவர் உலகில் எவரும் இருக்க முடியாது.

குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு இட்லிதான். இவை உடலுக்கு தெம்பையும் புத்துணர்ச்சியையும் கொடுத்து உடலை பாதுகாக்கிறது.

இந்த இட்லியில் இவ்வளவு மருத்துவக் குணம் உள்ளதற்குக் காரணம் உளுந்துதான். மனிதனுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் நிறைந்த உணவுகளுள் உளுந்தும் ஒன்று. இதன் வெளித் தோல் கருப்பாகவும், உட்புறம்நன்கு வெண்மையாகவும் காணப்படும்.

இந்தியாவில் அனைத்து பகுதியிலும் பயிராகும் ஒருவகை செடியாகும். பணப்பயிர்களில் இதுவும் ஒன்று.கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும்.

இவர்கள் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.

உடல் சூடு தணிய

இன்றைய அவசர உலகில் நோயின் தாக்கமும் அவசரமாக உள்ளது. இதற்கு காரணம் உடல் சூடுதான். மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது.

உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

தாது விருத்தியாக

உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும்.

எலும்பு முறிவு இரத்தக் கட்டிகளுக்கு

தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும்.

இடுப்பு வலுப்பெற

சிலர் எப்போதும் இடுப்பில் கை வைத்துக்கொண்டே நிற்பார்கள். இடுப்பு நன்கு வலுவாக இருந்தால்தான் நிமிர்ந்து நடக்க முடியும்.

இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.

குழந்தைகளுக்கு

சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.

பெண்கள்

நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. இவர்களுக்கு உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.அல்லது தோல் நீக்காத உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து அரைத்து களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இடுப்பு வலி குணமாகும்.

உளுந்தின் பயன்களைப் பற்றி தனிப் புத்தகமே எழுதும் அளவுக்கு மருத்துவப் பயன் உள்ளது.உளுந்தை தினமும் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.

சரஸ்வதி மட்டும் வெள்ளை ஆடை உடுத்தி

மணக்கால் அய்யம்பேட்டை | 11:50 AM | Best Blogger Tips

மற்ற தேவியர் வண்ண ஆடை உடுத்த, சரஸ்வதி மட்டும் வெள்ளை ஆடை உடுத்தி, வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கிறாள். இதற்கு காரணம் உண்டு. சரஸ்வதி ஞான வடிவானவள். ஞானம் எங்கிருக்கிறதோ, அங்கே அடக்கம் இருக்கும். அவள் கல்வி தெய்வம். என்னதான் சபாரி உடை அணிந்து வந்தாலும், தூய வெள்ளை வேஷ்டி, சட்டையுடன் சபை நடுவே வரும் அறிஞரைக் கண்டதும் அவையே கைகூப்புகிறது. மரியாதை செலுத்துகிறது. கற்றவர்கள் மரியாதைக்குரியவர்கள் என்பதை எடுத்துக்காட்டவே, கல்வி தெய்வமான அந்த தேவியும் வெள்ளை ஆடை அணிந்திருக்கிறாள். வெள்ளை என்பது மாசுமருவற்றது. ஒருவன் கற்ற கல்வியும், மாசு மருவற்றதாக இருக்க வேண்டும் என்பதை அது எடுத்துக்காட்டுகிறது.

சரஸ்வதி அணிந்துள்ள புடவையின் நிறம் வெள்ளை. வானவில்லின் ஏழு வண்ணங்களில் சேராத வெள்ளையை சரஸ்வதிக்கு மட்டும் சாத்துவர். மலம் என்றால் அழுக்கு. உடலிலுள்ள அழுக்கை மலம் என்கிறோம். நிர்மலம் என்றால் அழுக்கற்றது, தெளிவானது. நன்மையும் தீமையும் கலந்துஇருக்கும் இந்த உலகத்தில் அழுக்கே இல்லாத கல்வியைத் தேர்ந்தெடுத்து கற்க வேண்டும் என்பதையே அவளுக்குரிய வெள்ளை நிறம் உணர்த்துகிறது.
வெள்ளை நிறத்தில் மட்டும் ஒளி ஊடுருவும். இதனால் தான், சரஸ்வதிதேவி நிர்மலமான ஸ்படிகத்தால் ஆன மாலையை அணிந்திருக்கிறாள்.

லட்சுமி, பார்வதி தேவியர் பல்வேறு வண்ணங்களில் புடவை உடுத்த, சரஸ்வதி மட்டும் வெண்ணிற ஆடை உடுத்தி, வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கிறாள். இதற்கு காரணம் ஏன் தெரியுமா?சரஸ்வதி ஞானத்தின் சொரூபம். ஞானம் எங்கிருக்கிறதோ, அங்கே பணிவும் இருக்கும். அவள் கல்வி தெய்வம். என்னதான் படாடோபமாய் ஆடை அணிந்து வந்தாலும், தூய வெள்ளை வேஷ்டி, சட்டையுடன் சபை நடுவே வரும்
அறிஞரைப் பார்த்ததும் இருப்பவர் அனைவரும் வரவேற்று மரியாதை செய்வர். கல்வி கற்றவர்கள் மரியாதைக்கு உரியவர்கள் என்பதை உணர்த்தவே, கல்வி தெய்வமான சரஸ்வதியும் வெள்ளை ஆடை அணிந்திருக்கிறாள்.
by
meena

பாட்டி வைத்தியம் 2

மணக்கால் அய்யம்பேட்டை | 11:49 AM | Best Blogger Tips


"பாட்டி வைத்தியம்"

காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள்!

சளி, இருமல், தொண்டை வலிக்கு நம்ம பாட்டியோட கை வைத்தியந்தான் இருக்கவே இருக்கே. பித்த வெடிப்புக்கும் நம்ம பாட்டியோட சூப்பரான க்ராக் க்ரீம் இதோ.....

பித்தவெடிப்பு மறைய

காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள். தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

தொண்டை வலிக்கு

பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும்.

இருமல் தொல்லைக்கு

தூங்க போகும் முன் 1 கப் சூடான தண்ணீ­ரில் 1 ஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும். இது இருமல் தொல்லையையும் நீக்கும்.

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து காட்டுங்கள். ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும். அதற்கு முன் காயத்தை நன்றாக வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும்.

இருமல் சளிக்கு

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்­ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

கட்டிகள் உடைய

மஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் மூன்றையும் நன்றாக குலைத்து கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட்டால் கட்டிகள் சீக்கிரம் பழுத்து உடைந்து விடும்.

பேன் தொல்லை நீங்க

வசம்பு, வேப்பிலை இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தலையில் உள்ள பேன் நீங்கும்.

மேனி பளபளப்பு பெற

ஆரஞ்சுப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பு பெறும்.

தும்மல் வராமல் இருக்க

தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் () பாலில் சாப்பிட்டால் தும்மல் வராது.

கரும்புள்ளி மறைய

எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும்.

தொண்டை கரகரப்பு நீங்க

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.

கருத்தரிக்க உதவும்

அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 - 100 கிராம் எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2-3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

இருமல் சளி குணமாக

சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.