பெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள் என்பதற்கான காரணங்கள்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | பிற்பகல் 2:45 | Best Blogger Tips



முத்தம் காமத்தில் சேர்ந்ததல்ல என்பது மகள்களை பெற்றெடுத்த அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்…” இயக்குனர் ராமின் குரலில் உலகமெங்கும் அப்பாமகள் பாசத்தை பறைசாற்றியதங்க மீன்கள்திரைபடத்தில் இடம்பெற்ற வசனம். ஆம், அப்பாக்களுக்கு எப்போதுமே தங்கள் மகள் தான் தங்க மீன். ஓர் கட்டத்தில் தனது மனைவி மீதான அன்பை விட பலமடங்கு தனது மகள் மேல் கொண்டிருப்பார்கள் அப்பாக்கள்.




ஆண்களுக்கு மட்டுமே கிடைத்த ஓர் வரம். ஆண்மகனாகிய ஒருவன் தனது வாழ்வில் மூன்று தாய்களை சந்திக்கிறான். முதலில் பெற்றெடுத்த தாய், இரண்டாவதாக தாய் பெற்றெடுத்து பரிசளித்தா சகோதரி உருவிலான தாய். மூன்றாவதாக தனது மனைவி பரிசளித்த மகள் உருவிலான தாய். இதில் நேரடியாக தனது இரத்தத்தின் மூலமாக கிடைத்த முத்தான மகள் தான் அவனது இறப்பு வரை உடன் இருக்கிறாள், பெரும்பாலும்.

ஓர் ஆண்மகன் தனது மகளை விரும்ப இவ்வளவு காரணங்கள் இருக்க, மகள்கள் தங்களது அப்பாவை, அம்மாவை விட அதிகம் விரும்ப என்ன காரணங்கள் இருக்கிறது…. நிறையவே இருக்கிறது தொடர்ந்துப் படியுங்கள்….

நேர்மையான ண்பன்


தங்களது வாழ்நாளில் நீண்ட நாட்களாக கண்ட நேர்மையான தோழன் தங்களது தந்தை தான் என பெண்கள் எண்ணுகிறார்கள். பெண்கள் தங்களது வாழ்நாளில் அதிக நேரம் செலவழிப்பதும் அவர்களது தந்தையுடன் தான். தங்களது எந்த நிலையிலும் பாதுகாக்கும் ஒரே நபர் தந்தை தான் என்கின்றனர் பெண்கள்.


உலகை அறிமுகம் செய்தவர்

பிறந்த முதல் நாளில் இருந்து வளரும் ஒவ்வொரு நாளும், உலகை கற்றுத்தரும் ஆசான் தந்தை தான். இது மகன்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு தான். ஆனால், பெண்களுக்கு வாழ்நாள் முழுதும் கிடைக்கும் பரிசு இது.


கோபத்தை காட்டியது இல்லை

மகன்களிடம் காண்பிக்கும் அதே கோபத்தை, அப்பாக்கள் தங்களது மகள்களிடம் காண்பிப்பது இல்லை. வீட்டில் சகோதரன் வாங்கிய அளவு அடியை, எந்த மகளும் எப்போதும் வாங்கியது இல்லை.
முடியாது என்ற வார்த்தையே இல்லை
மகள்கள் கேட்கும் எந்த விஷயத்திற்கும் அப்பாக்கள், “முடியாது..” என்ற வார்த்தைகளை பிரயோகம் செய்வதில்லை. தன்னால் முடிந்த வரை மகள்களை மகிழ்ச்சியுடன் வளர்ப்பவர்கள் அப்பாக்கள்.
காவலன்
வெளியிடங்களுக்கு சென்று தாமதம் ஆனால், அது எந்நேரமாக இருந்தாலும், கால்கடுக்க காத்திருந்து அழைத்துவரும் காவலன் அப்பா.
காதலை புரிய வைத்தவர்
காதல் என்றால் என்ன, பருவத்தில் வரும் ஆசைகளும், மோகமும் என்ன, மெய்தனை எப்படி உணர்வது என மகளுக்குள் காதலை புரிய வைப்பவர் அப்பா. ஒவ்வொரு மகள்களின் முதல் காதலன் அப்பா தான்.
சூப்பர் ஹீரோ
தங்களுக்கு என்ன மோசமான சூழ்நிலை வந்தாலும், ஏற்பட்டாலும் அதிலிருந்து மீட்டு வரும் சூப்பர் ஹீரோ அப்பா தான்.
தைரியம் ஊட்டும் அம்மா
என்னதான் அம்மா பாலூட்டினாலும், பெண்களுக்குள் தைரியத்தை ஊட்டுவது அப்பாக்கள் தான். அம்மாவுக்கு எப்போதுமே தங்களது குழந்தைகள் மீது ஓர் பயம் இருக்கும் அது பயம் அல்ல, அக்கறை. ஆதலால், தைரியத்தை ஊட்ட அப்பாக்களால் மட்டும் தான் முடியும்.
மாற்றம் இல்லாதவர்
ஓர் பெண்ணின் உறவில், அனைவரும் ஒவ்வொரு சூழ்நிலை வரும் போதும், மாறி, மாறி, தோன்றுவர். அவர்களுள் நிறையா மாற்றங்களை காணமுடியும். ஆனால், அம்மா, அப்பா மட்டும் தான் கடைசி வரை எந்த மாற்றமும் இல்லாமல், மகளை ஏமாற்றம் அடைய வைக்காமல் இருக்கும் உறவுகள்.
பெண்களின் கண்ணீருக்கு உரியவர்
கடைசி வரை தன்னுடன் இருக்க ஒவ்வொரு மகளும் விரும்பும் உறவு அப்பா. அப்பாவின் மறைவு பெண்களின் கண்ணீர் ஊற்றுக்கு காரணமாகிறது. ஓர் மகளின் வாழ்க்கையில் அப்பா என்பவர் ஓர் உறவு அல்ல, தோழன், காதலன், ஹீரோ, காவலன் என எண்ணற்ற பாத்திரங்களை தாங்கிக் கொண்டிருப்பவர் தான் அப்பா. ஆதலால் தான் பெண்கள் தங்களது தந்தையை அதிகமாக நேசிக்கிறார்கள்.






















 நன்றி 
இணையம்

மகான் வால்மீகி முனிவர் தவ சூட்சும நூல்

மணக்கால் அய்யம்பேட்டை | பிற்பகல் 2:00 | Best Blogger Tips



முறை தவறினால் முருகனால் தண்டிக்கப்படுவார்கள்
ஒருவன் முன் செய்த நல்வினை காரணமாக அவனது புண்ணிய பலத்தினால் இவ்வுலகின் மக்கள் நலம் பெற்று இன்புற்று வாழ தொண்டுகள் செய்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளவே கடவுள் அவனுக்கு தம் செயல்களை சிறப்புடன் மக்களுக்கு செய்ய ஏதுவாக அதிகாரத்தையும், பணபலத்தையும், ஆள்படையும் தந்து இவ்வுலகை காக்க பணித்தருளினான். ஆனால் தான் வந்த நோக்கத்தை மறந்து கடவுளின் கட்டளையை மறந்து தனது பணபலத்தையும், அதிகாரபலத்தையும், ஆள்பலத்தையும் பெரிதென மதித்து இவையெல்லாம் தனது திறமையால் வந்தது என வியந்து மதித்து தன்னிச்சையாக நடந்து தருமத்தை காக்காமல் தருமத்திற்கு புறம்பாக நடப்பானேயானால் எந்த கடவுள் உலக மக்களுக்கு பயன்படுவாய் என்று அதிகாரம், பணம், பதவி, ஆள்படைகளை அருளினானோ அவனே அவர்களிடமிருந்து அவற்றை பறித்து கொள்வதோடு கடமை மறந்த குற்றத்திற்காக தண்டிக்கவும் நேரிடும் என்பதையும் அறியலாம்.
மனித வர்க்கத்தில் அவரவர் செய்திட்ட புண்ணியத்திற்கு ஏற்ப வேண்டுதலுக்கு ஏற்ப அருள் செய்வான் முதற்கடவுளாம் முருகப்பெருமான். எல்லோரும் எல்லாவற்றையும் வேண்டலாம். ஆனால் அவரவர் பாவபுண்ணியங்களுக்கு ஏற்பதான் முருகன் அருள் செய்வான். அப்படி முன்ஜென்ம புண்ணியத்தில் இறைவன் கருணையாலே வேண்டுதலிற்கு ஏற்ப அளிக்கப்பட்ட பதவி, பட்டம், வாய்ப்புகள், பொறுப்புகள், அமைப்புகள் ஆகியவற்றை வரமாய் பெற்று வாழ்கின்றோர் தாம் வேண்டி விரும்பி பெற்ற அந்த வரத்திற்கேற்பவும் முருகனது நோக்கத்திற்கு ஏற்பவும், உலகினில் தர்மத்தினின்று மீறாமல் நடந்து கடைத்தேற வேண்டும்.
அவ்வாறின்றி தர்மத்தை மறந்து, தாம் முருகனிடத்து எதற்காக வரம் பெற்றோம் என்பதை மறந்து, ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளவும் மறந்து, தாம் வந்த நோக்கம் மறந்து, தாம் பெற்ற அனைத்தும் தம்மால், தமது அறிவால், தமது செயல்களால், தமது திறமையால், தமது அதிர்ஷ்டத்தால் ஏற்பட்டது என தம்மை தாமே பெரிதாக எண்ணி வியந்து பாராட்டி கடவுளை மறந்து, தர்மத்தை மறந்து, பிற உயிர்கள் துன்பப்படும்படியாகவோ, நோக்கத்தை மறந்து செயல்படுவானேயானால் முருகப்பெருமானால் வரமாக அளிக்கப்பட்ட அத்துணையும் முருகனால் திரும்ப பெற்று கொள்ளப்படுவதோடு, தடம் புறண்டு செயல்பட்ட குற்றத்திற்கு தண்டிக்கவும் படக்கூடும் என்பதை அறிந்து கொள்வதோடு தர்மத்தின் வழிதனையும் முருகன் உணர்த்த உணர்ந்து கொள்ளலாம்.
.................
ஆலவாய் அண்ணலின் அருந்தவப் புதல்வனே
ஞாலத்தை ஆள்வான் நல்மக்கள் போற்றவே.