10 நிமிடம் தான் ........... !

மணக்கால் அய்யம்பேட்டை | 12:46 PM | Best Blogger Tips

 10 நிமிடம் வீட்டைப் பேணும் மனைவி முன் உட்காருங்கள்.

 

வாழ்க்கை எவ்வளவு கடினம் என்பதை உணர்வீர்கள்.

 


10 நிமிடம் ஒரு குடிகாரன் முன் உட்காருங்கள்.

 

வாழ்க்கை எவ்வளவு சுலபமானது என்பதை உணர்வீர்கள்.

 


10 நிமிடம் சாதுக்கள் மற்றும் சந்நியாசி முன் உட்காருங்கள்.

 

கையில் உள்ளவற்றையெல்லாம் தர்மகாரியங்களுக்கு தானம் செய்யணும் போல உணர்வீர்கள்.

 

10 நிமிடம் ஒரு தலைவர் முன் உட்காருங்கள்.

 

உங்கள் எல்லா படிப்பும் பயனற்றது என்பதை உணர்வீர்கள்.

 


10 நிமிடம் ஆயுள் காப்பீட்டு முகவர் முன் உட்காருங்கள்.

 

இறந்து போவது சிறந்தது என்பதை உணர்வீர்கள்.

 

10 நிமிடம் வியாபாரிகள்  முன் உட்காருங்கள்.

 

நீங்கள் சம்பாதிப்பது மிகவும் குறைவு என்பதை உணர்வீர்கள்.

 

10 நிமிடம் விஞ்ஞானிகள் முன் உட்காருங்கள்.

 

நீங்கள் எவ்வளவு அறியாமையில் உள்ளீர்கள் என்பதை உணர்வீர்கள்.

 


10 நிமிடம் நல்ல ஆசிரியர்கள் முன் உட்காருங்கள்.

 

நீங்கள் மீண்டும் மாணவனாக வேண்டும் என்ற ஆசை வருவதை உணர்வீர்கள்.

 


10 நிமிடம் விவசாயி அல்லது தொழிலாளி முன் உட்காருங்கள்.

 

நீங்கள் இதுவரை கடினமாக உழைக்கவில்லை என்பதை உணர்வீர்கள்._

 


10 நிமிடம் ஒரு ராணுவ வீரன் முன் உட்காருங்கள்.

 

உங்களுடைய சேவைகளும் தியாகங்களும் மிகக் குறைவானது  என்பதை உணர்வீர்கள்.

 


10 நிமிடம் நல்ல நண்பன் முன் உட்காருங்கள்.

 

உங்கள் வாழ்க்கையே சொர்க்கமாக உணர்வீர்கள்._

 

நீ யாரு என்பது முக்கியம் இல்லை

நீ யாருடன் இருக்கிறாய் என்பது... தான் முக்கியம்
நன்றி இணையம்