வீட்டில் இருக்கும் பொருட்களில் அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டிய 5 பொருட்கள்:

மணக்கால் அய்யம்பேட்டை | 3:15 PM | Best Blogger Tips

பொதுவாக வீட்டில் தரை, பாத்திரங்கள், துணிகள் போன்றவற்றை அடிக்கடி சுத்தம் செய்வது போல அன்றாடம் நாம் பயன்படுத்தும் மற்ற சில பொருட்களையும் எப்போதும் நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதன் மூலம் கிருமிகளால் பரவும் பல நோய்களில் இருந்து நாம் நம்மை காத்துக்கொள்ள முடியும்.

1. கால் மிதியடிகள் : கால் மிதியடிகளை அவ்வபோது அலசி வெயிலில் உலரவிட வேண்டும்.

2. கதவுகளின் கைப்பிடிகள்: கதவுகளின் கைப்பிடிகள் அதிலும் குறிப்பாக கழிவறைக் கதவுகளில் உள்ள கைப்பிடிகளில் கிருமிகள் மிகுந்து இருக்கும். எனவே, பீரோ, பிரிட்ஜ் மற்றும் அறைக் கதவுகளின் கைப்பிடியை அவ்வப்போது சுத்தப்படுத்த வேண்டும்.

3. டிவி ரிமோட் : வீட்டில் அனைவரும் பயன்படுத்தும் ஒரு பொருள் என்றால் அது டி.வி ரிமோட்தான். எனவே, அதனை உலர்வான துணியைக் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்,

4 .வீட்டை சுத்தப்படுத்தும் மாப்: இதைப் பயன்படுத்தியதும் அப்படியே எடுத்து உலர வைத்துவிடாமல், பயன்படுத்திய பிறகு, சோப்பு தண்ணீரில் நன்கு துவைத்து பிறகு சுத்தமான நீரில் அலசி வெயிலில் உலர வையுங்கள்.

5. வாளி மற்றும் குவளை : வீட்டில் குளிக்கப் பயன்படுத்தும் வாளி மற்றும் குவளைகளை அடிக்கடி நன்கு தேய்த்து சுத்தப்படுத்தி சூரிய வெளிச்சத்தில் காய வைப்பது மிகவும் அவசியம்.

குளிர்காலத்துல பாதங்களையும் சரியா பராமரிங்கப்பா...

மணக்கால் அய்யம்பேட்டை | 3:12 PM | Best Blogger Tips
குளிர்காலம் என்றாலே வறட்சி காலம் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இந்த காலத்தில் சருமம் வறட்சியடைந்து, வெடிப்புகளை ஏற்படுத்தும். அவ்வாறு வறட்சி ஏற்படும் இடங்களிலேயே பாதங்கள் தான் அதிகம் இந்த காலத்தில் பாதிக்கப்படும். அதில் பாதத்தில் ஏற்படும் பிரச்சனைகள் என்றால் பாத வெடிப்புகள், வறட்சியான பாதம் மற்றும் பாதங்கள் மென்மையிழந்து கடினமாக இருப்பது போன்றவைகள். எனவே எப்போதும் வீட்டில் இருக்கும் போது, குளிர்ச்சியில் இருந்துவிடுபட பூட்ஸ் அல்லது ஷூக்களை அணிந்து கொண்டால், குளிராமல் இருக்கும். இதை செய்தால் மட்டும் பாதத்திற்கு எந்த பிரச்சனையும் வராமல் இருக்காது. மேலும் ஒருசில செயல்களையும் செய்தால் தான், எந்த ஒரு பிரச்சனையும் பாதங்களில் ஏற்படாமல் மென்மையோடு வைத்துக் கொள்ள முடியும்.

மேலும் பாதங்களுக்கு இவ்வளவு கவனம் செலுத்துவதன் நோக்கம், பாதங்களில் எண்ணெய் சுரப்பிகள் இல்லாததே ஆகும். எனவே எந்த மாதியான பராமரிப்புகளை செய்தால் பாதங்கள் நன்கு ஆரோக்கியத்துடன், அழகாக இருக்கும் என்பதைப் பார்ப்போமா!!!

* குதிக்கால்களில் அழுக்கில்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதனால் எந்த ஒரு கிருமிகளும் பாதங்களை தாக்காமல் இருக்கும். இதற்கு தினமும் பாதங்களை வெதுவெதுப்பான நீரில், சிறிது நேரம் ஊற வைத்து, பின் அழுக்கை நீக்கும் ஃபூட் கிளீனரால் தேய்த்து, சுத்தம் செய்ய வேண்டும். இதனால் பாதங்களில் உள்ள அழுக்குகள் நீங்கிவிடும்.

* பாதங்களில் உள்ள துளைகளில் இருக்கும் அழுக்குகளை தினமும் ஒரு முறையாவது ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் பாதத் துளைகளில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, இரத்த ஓட்டம் அதிகரித்து, பாதம் மென்மையாகவும், சுத்தமாகவும் இருக்கும். மேலும் ஸ்கரப் செய்தால், குதிகால்களில் இருக்கும் புண்கள் சரியாகும்.

* பாதங்களில் எண்ணெய் சுரப்பிகள் இல்லாததால், விரைவில் வறட்சியடைந்துவிடும். இதனால் வெடிப்புகள் வரும். ஆகவே ஒரு நாளைக்கு இரண்டு முறை மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். அதுவும் குளித்த பின்னும், இரவில் தூங்கும் முன்பும் தடவி வர வேண்டும். அதிலும் பேபி ஆயில் அல்லது ஏதாவது பாடி ஆயிலை தடவ வேண்டும். இவற்றால் பாதங்கள் மென்மையாகவும், சுத்தமாகவும், வெடிப்புகளின்றியும் இருக்கும்.

* பாதங்களை சுத்தம் செய்யும் போது மறக்காமல் கால் விரல் நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். இது எந்த காலத்திற்கும் முக்கியமான ஒன்று. ஏனெனில் பொதுவாக கிருமிகள் கால்விரல் நகங்களில் அதிகம் தங்கும். ஆகவே மறக்காமல் பெடிக்யூர் செய்ய வேண்டும். அழகு நிலையம் செல்வதற்கு நேரமில்லையென்றால், வீட்டிலேயே வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு சேர்த்து, அந்த கலவையில் கால்களை ஊற வைத்து, ஸ்கரப் செய்ய வேண்டும். ஸ்கரப் செய்த பின்னர், சுத்தமான நீரில் கழுவி, பின் ஏதேனும் மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். இதனால் அங்குள்ள இறந்த செல்கள் வெளியேறி, வறட்சியின்றி அழகாக காணப்படும்.

* குளிர்காலத்தில் எப்போதும் பாதங்களை மென்மையாக வைத்துக் கொள்ள சிறந்த வழியென்றால், அது கால்களில் எப்போதும் சாக்ஸ் அணிவது தான். அதிலும் மாய்ஸ்சுரைசரை பாதங்களில் தடவி, பிறகு சாக்ஸை முழு நாளும் அணிய வேண்டும். இதனால் குளிர்ச்சியில்லாமல் இருப்பதோடு, வறட்சியால் வெடிப்புகள் ஏற்படாமலும் இருக்கும்.

மேற்கூறியவாறு பாதங்களை பராமரித்து வந்தால், குளிர்காலத்தில் பாதங்கள் வறட்சியின்றி, மென்மையோடும், சுத்தமாகவும் இருக்கும். மேலும் உடல் வறட்சியை தடுக்க அதிகமான அளவில் தண்ணீரை தினமும் குடியுங்கள்.

கண்களின் அழகைப் பராமரிக்க…

மணக்கால் அய்யம்பேட்டை | 3:10 PM | Best Blogger Tips
பெண்கள் எல்லோரும் ஏதோ விதத்தில் அழகுடையவர்களாக இருப்பார்கள்.
இந்த அழகான பெண்களுக்கு மேலும் அழகாக இருக்க சில குறிப்புக்கள். அதாவது உதடுகள் சிரித்தாலும், உள்ளத்தின் சோகத்தைக் கண்கள் காட்டிக் கொடுத்துவிடும்.

சந்தோஷமோ, துக்கமோ எதுவானாலும் அதைக் கண்கள் பிரதிபலித்துவிடும் மொத்தத்தில் அவை உள்ளத்தைத் தெரிந்து கொள்ள உதவும் கண்ணாடிகள்.

கண்கள் பளபளப்பாக, புத்துணர்வோடு இருந்தால்தான் அழகு, சோர்ந்து களைத்துப் போன கண்கள் முக அழகையே கெடுத்துவிடும்.

கண்களின் அழகைப் பராமரிக்க கீழ்க்கண்ட விஷயங்கள் முக்கியம் தினசரி எட்டு மணி நேரத் தூக்கம், போஷாக்கான உணவு, கல்சியம், விற்றமின்கள் நிறைந்த உணவுகள் உட்கொள்ள வேண்டும்.

கண்களுக்கான பயிற்சிகள், கண்களின் அழகிற்கு கீழ்க்கண்ட உணவுகள் முக்கியம் பால், பால் உணவுகள், கீரை, முட்டை, மஞ்சள் மற்றும் ஓரேஞ் நிறப் பழங்கள் மற்றும் காய்கள் உட்கொள்ள வேண்டும்.

போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டியதும் மிக முக்கியம் உடலுக்கு மட்டுமின்றி கண்களுக்கு பயிற்சி அவசியம்.

ஏனெனில் கண் தசைகளோடு, மூளையுடன் தொடர்புடைய ஏராளமான நரம்புகள் இணைக்கப்பட்டுள்ளன.

கண்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் க்ளாக் வைஸ் மற்றும் ஆன்டிக்ளாக் வைஸ் டைரக்ஷன்களில் மூன்று முறைகள் சுழற்ற வேண்டும்.

கிட்டத்தில் இருக்கும் பொருளைப் பார்த்துவிட்டு, உடனடியாக தொலைவில் உள்ள ஒரு பொருளையும் பார்க்க வேண்டும்.

கட்டை விரலை நடுவில் வைத்துக்கொண்டு, அதை இடவலமாகவும், வல இடமாகவும் நகர்த்தி, தலையைத் திருப்பாமல் வெறும் பார்வையை மட்டும் திருப்பிப் பார்க்க வேண்டும்.

நீண்ட நேரம் கம்பியூட்டர், மொனிட்டர் போன்றவற்றின் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், அடிக்கடி ஏதேனும் பச்சை வெளியைப் பார்க்கலாம்.

கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும் நீலம் மாதிரியான நிறங்களையும் பார்க்கலாம்.

உருளைக்கிழங்கு போண்டா

மணக்கால் அய்யம்பேட்டை | 3:09 PM | Best Blogger Tips
மாலை நேரத்தில் டீ, காபி குடிக்கும் போது ஏதேனும் காரமாக, சூடாக சாப்பிட வேண்டும் என்று நினைத்தால், அப்போது வீட்டில் இருக்கும் உருளைக்கிழங்கை போண்டா போல செய்து, சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இப்போது அந்த உருளைக்கிழங்கு போண்டாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 2
பச்சை மிளகாய் - 2
கடலை மாவு - 1 கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து, மசித்துக் கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, சிறிது மிளகாய் தூள், பச்சை மிளகாய், கரம் மசாலா தூள், கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பிறகு மற்றொரு பாத்திரத்தில் கடலை மாவு, மஞ்சள் தூள், மீதமுள்ள மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருளைக்கிழங்கு கலவையை சிறு உருண்டைகளாக்கி, கடலை மாவில் பிரட்டி, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இது போல் அனைத்தையும் செய்து கொள்ளவும்.

இப்போது சுவையான உருளைக்கிழங்கு போண்டா ரெடி!!!
சமையல் » சைவம்

திருவண்ணாமலை மாவட்டம்!!

மணக்கால் அய்யம்பேட்டை | 3:07 PM | Best Blogger Tips

திருவண்ணாமலை மாவட்டம் கிழக்கே காஞ்சிபுரம் மாவட்டத்தினாலும், வடக்கே வேலூர் மாவட்டத்தினாலும், தெற்கே விழுப்புரம் மாவட்டத்தினாலும் மற்றும் மேற்கே தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களாலும் சூழப்பெற்ற 6191 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட தமிழ்நாட்டின் 28 வது மாவட்டமாகும்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது கார்த்திகை தீபம். அடுத்து நினைவுக்கு வருவது கிரிவலம். 100க்கும் மேற்பட்ட சைவத் திருத்தலங்களில் முக்கியமானது. இந்தக் கோயிலின் பிரதான கோபுரம் 66 மீட்டர் உயரத்தில் 13 அடுக்குகள் கொண்டது. ஆயிரம் கால்கள் கொண்ட பெருமண்டபம் ஒன்றும் உள்ளது. சென்னையிலிருந்து ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தின் பிற முக்கிய இடங்கள்,

அருணாச்சலேஸ்வரர் கோயில்:

திருவண்ணாமலையின் அடிவாரத்தில்தான் அருணாச்சலேஸ்வரர் கோயில் கொண்டிருக்கிறார். இங்கு இறைவன் பஞ்சபூதங்களில் அக்னி வடிவத்தில் எழுந்தருளி இருக்கிறார். அதனால்தான் ஜோதிலிங்கமாக கோலாச்சுகிறார். இக்கோயிலின் கோபுரங்கள் கம்பீரமாக எழுந்து நிற்கின்றன.

மொத்தம் 24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோவில் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்திருக்கலாம் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.இக்கோவிலில் உள்ள ஆயிரம்கால் மண்டபத்தையும், சிவகங்கை குளத்தையும் கிருஷ்ணதேவராயரும், கிளி கோபுரத்தை கி.பி 1053 ஆம் ஆண்டு ராஜேந்திர சோழனும், பிரம்ம தீர்த்தத்தை கி.பி 1230ஆம் ஆண்டு வேணுதாயனும், வள்ளால கோபுரத்தை கி.பி 1320 ஆம் ஆண்டு வள்ளால மஹாராஜாவும் கட்டியுள்ளனர்.

மேலும் இக்கோவில் உருவாக குலோத்துங்கன், ராஜேந்திரசோழன், கோப்பெரும்சிங்கன், ஆதித்ய சோழன், மங்கையர்க்கரசி, விக்கிரம பாண்டியன், அம்மானை அம்மாள் ஆகியோரும் காரணமாக இருந்துள்ளனர். சேர, சோழ, பாண்டியர்களால் உருவாக்கப்பட்ட பெருமைக்குரியது இந்த திருவண்ணாமலை.

பின்னர் 19 மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் பல நகராத்தார்களினால் இந்தக் கோவில் புதுப்பிக்கப்பட்டு 1903, 1944, 1976, 2002 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

கிரிவலம்:

புகழ்பெற்ற கார்த்திகை தீபம் தெரியும் திருவண்ணாமலையின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 2609 அடி. அதாவது 800 மீட்டர் உயரம் உடையது. இம்மலையை சுற்றி 16 கி.மீ. நீளத்தில் சாலை உள்ளது. இம்மலையையே சிவனாகப் பாவிக்கும் பக்தர்கள், கார்த்திகை மற்றும் பௌர்ணமி நாட்கள், தழிழ் மாதங்களின் முதல் நாள் ஆகிய சிவனுக்கு உகந்த நாட்களில், இந்த 16 கி.மீ. தூரத்தையும் கால்நடையாக வலம் வந்து வணங்குகிறார்கள்.

கார்த்திகை மாதம், பௌர்ணமியும் கிருத்திகையும் கூடிய நாளில், திருவண்ணாமலையின் உச்சியில் ஏற்றப்படும் உலகப்புகழ் பெற்ற தீப்பெருந் திருவிழா.

சாத்தனூர் அணை:

பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புகழ்பெற்ற அணைக்கட்டு. மலையும் வளமும் சூழ, இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் ரம்மியமான அணைக்கட்டுப் பகுதி இது. நீச்சல் குளம், முதலைப் பண்ணை, சிறுவர் இரயில், படகுச் சவாரி, இரும்பு தொங்குபாலம், வண்ணமீன் காட்சி என குழந்தைகளைக் கவரும் குதூகலக் காட்சிகள் ஏராளமாக உள்ளன.

ஸ்ரீ ரமணமகரிஷி ஆசிரமம்:

இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற ஆன்மீகப் பேரொளியாத் திகழ்ந்தவர். 'குறைவாகப் பேசி அதிகமாகச் சாதித்தவர்' என்கிறார் இவரைப் பற்றி குறிப்பிடும் ஓஷோ. அகநிலை விசாரணையின் இறுதியாகக் கிடைக்கும் மனஓர்மை நிலையே இவருடைய தத்துவ இலக்கு. இங்குள்ள தியான மண்டபம் அமைதி, சாந்தம், எளிமை, தூய்மை ஆகியவை குடிகொண்டிருக்கும் ஆன்மீகப் பெருவெளியாகும்.

ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம்:

இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்தவர். திருவண்ணாமலையில் இருக்கும் புனிதமான இடங்களில் இந்த ஆசிரமும் ஒன்று.

ஸ்ரீ யோகி ராம்சுரத் குமார் ஆசிரமம்:

விசிறி சாமியார் என்று அன்பர்களால் அழைக்கப்பட்ட யோகி ராம் சுரத் குமாரின் ஆசிரமம், அமைதி நிறைந்தது. உலகம் முழுவதிலும் இவருக்கு சீடர்கள் உண்டு. கடந்த 2000 ஆம் ஆண்டு யோகி ராம்சுரத் குமார் முக்தி அடைந்தார். இப்போதும் இந்த ஆசிரமத்துக்கு சீடர்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

துணிகளில் கடினமான கறைகள் படிஞ்சுருக்கா? இதோ சில டிப்ஸ்...

மணக்கால் அய்யம்பேட்டை | 3:05 PM | Best Blogger Tips
இந்த உலகில் ஒருவருக்கு ஏற்படும் கொடுமையில் ஒன்று என்றால் அது மிகவும் விருப்பமான துணிகளில் கறைகள் படிவது தான். அதிலும் அவற்றை எப்படி தான் துவைத்தாலும், அவை போகாமல், அந்த துணியின் அழகைக் கெடுப்பது என்றால் அது அதைவிட மிகக் கொடுமையான விஷயம். சொல்லப்போனால் அந்த கறைகள் நம்மால் தான் படிகிறது. அப்படி படியும் கறைகளில் ஒருசில கறைகளை எளிதில் நீக்கிவிடலாம். ஆனால் காப்பி, ஒயின், க்ரீஸ் போன்ற கறைகள் படிந்தால், அந்த துணியே வேஸ்ட் என்று தூக்கிப் போட்டு விடுவோம். ஆனால், அத்தகைய கறைகளையும் எளிதில் நீக்கலாம். இப்போது அந்த கறைகளை எப்படி எளிதில் நீக்குவது என்பதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்...

காப்பி/ டீ கறைகள்: காப்பி குடிக்கும் போது துணிகளில் அவை பட்டுவிட்டால், உடனே வீட்டில் இருக்கும் டிஷ் வாஷ் சோப்பு நீர்மத்தை, கறை படிந்த இடத்தில் விட்டு, 5 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை நன்கு தேய்த்து, வெதுவெதுப்பான நீரில் அலசினால் கறைகள் போய்விடும்.

இரத்தக் கறைகள்: இரத்தக் கறைகள் என்றதும் கொலை செய்யும் போது மட்டும் தான் ஏற்படும் என்று நினைக்க வேண்டா. இந்த வகையான கறைகள் பெண்களுக்கு மாதவிடாயின் போது அதிகம் ஏற்படும் வாய்ப்புள்ளது. ஆகவே இந்த நேரத்தில் ஏற்படும் கறைகள் சில துணிகளில் போகாமல் இருக்கும். இதற்கு காரணம் கறை படியும் போது உடனே குளிர்ந்த நீரில் கழுவிட வேண்டும். தாமதமானால் தான் அந்த கறைகள் போகாமல் இருக்கிறது. ஏனெனில் அப்போது இரத்தம் உறைந்து, அந்த இடத்தில் தங்கிவிடுகிறது.

பேனா மை கறைகள்: பெரும்பாலும் இந்த மாதிரியான கறைகள் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தான் ஏற்படும். இந்த கறைகளை நீக்க சிறந்த ஒரு மேஜிக் என்ன தெரியுமா? அது தான் ஹேர் ஸ்ப்ரே. அதிலும் இந்த ஸ்ப்ரேவை கறை போகும் வரை தெளித்து நன்கு தேய்த்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் போய்விடும்.

சாக்லேட் கறைகள்: சாக்லேட் பிரியர்கள் இந்த உலகில் மிகவும் அதிகம். அதே சமயம், அந்த கறைகளை ஏற்படுத்துபவர்களும் அதிகம். ஏனெனில் சிலர் ரசித்து ருசித்து சாப்பிடுகிறேன் என்று உருகும் வரை சாப்பிடுவார்கள், பின் அது துணிகளில் ஒட்டும். முதலில் சாக்லேட்டை எப்போது சாப்பிடும் போதும் ப்ரிட்ஜில் வைத்து சற்று கெட்டியாக்கி பின்னரே சாப்பிட வேண்டும். அதிலும் உருகிவிட்டால், ஒரு ஸ்பூனால் எடுத்து சாப்பிட வேண்டும். சரி அந்த கறைகள் படிந்துவிட்டால், நெயில் பாலிஷ் ரிமூவரை அந்த கறையின் மீது தெளித்து, தேய்க்காமல் சற்று நேரம் விட்டுவிட வேண்டும். இதனால் அந்த கறைகள் அந்த ரிமூவரை உறிஞ்சிவிடும். பிறகு அதனை துவைத்தால், அது போய்விடும்.

ஒயின் கறைகள்: ஒயின் கறைகள் துணிகளிலோ அல்லது டேபிள் கவரிலோ படிந்துவிட்டால், அதன் மேல் வட்ட வடிவமான ஒரு ஒளிவட்டம் போல் தோன்றும். ஆகவே அதனை நீக்க பேக்கிங் சோடாவை வைத்து துவைத்தால், கறைகள் நீக்கி பளிச்சென்று ஆகிவிடும்.

க்ரீஸ் கறைகள்: சைக்கிள், பைக், கார் போன்றவற்றால் துணிகளில் க்ரீஸ் கறைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அவ்வாறு க்ரீஸ் படிந்துவிட்டால், துணி வீணாகிவிட்டது என்று பயப்பட வேண்டாம். அப்போது அந்த கறையை போக்க, கார்ன் ஸ்டார்ச் அல்லது பேக்கிங் சோடாவை அந்த இடத்தில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் டிடர்ஜெண்ட் மூலம் நன்கு துவைத்தால் கண்டிப்பாக போய்விடும்.

மேற்கூறியவற்றை நினைவில் கொண்டு, உங்களின் விருப்பமான துணிகளில் படிந்து இருக்கும் கறைகளை நீக்கி, சந்தோஷமாக மீண்டும் அந்த துணியை அணியுங்கள்.

முதுகு வலி ஏன் வருது தெரியுமா?

மணக்கால் அய்யம்பேட்டை | 3:02 PM | Best Blogger Tips
இன்றைய காலத்தில் நோயில்லாத மனிதரைப் பார்ப்பது மிகவும் கடினமானது. ஏனெனில் அந்த அளவு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் நோயானது புகுந்து விளையாடுகிறது. சும்மா சொல்லக்கூடாது, உடலில் வரும் நோய்க்கு முதற்காரணமே நாம் தான். ஆனால் அதை நாம் சரியாக புரிந்து கொள்ளாமல், நான் ஒன்றும் செய்யவில்லை, ஆனால் எதற்கு இது வருகிறது என்று தெரியவில்லை என்று சொல்வோம். முதலில் நாம் சரியாக இருந்
தால், நமக்கு எந்த ஒரு நோயும் வராது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போது உடலில் வரும் நோய்களில் பெரும்பாலோனோருக்கு இருப்பது முதுகு வலி. இந்த வலியானது நமக்கு வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இப்போது அந்த முதுகு வலி ஏற்படுவதற்கு என்னவெல்லாம் காரணம் என்று சற்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

நீண்ட நாள் வலி

முதுகு அல்லது கழுத்து அல்லது மற்ற இடங்களில் ஏதாவது வலி ஏற்பட்டால், அந்த வலியை சரிசெய்ய நாம் உடலை ஏதேனும் ஒரு வித்தியாசமான நிலையில் நீண்ட நேரம் வைத்திருப்போம். மேலும் தற்காலிகமாக அந்த வலியை நீக்க மேற்கொண்ட அந்த நிலையை எப்போது வலி ஏற்பட்டாலும் பின்பற்றுவோம். ஆகவே அவ்வாறு வித்தியாசமான நிலையில் வைப்பது உடலின் பல பகுதியை பாதித்து, வலி அல்லது பிடிப்பு போன்வற்றை உண்டாக்குகிறது.

ஊட்டச்சத்து குறைவு

நமது தண்டுவடம் மற்றும் முதுகிற்கு போதுமான ஊட்டச்சத்தானது அவசியம். அப்படியிருந்தால் தான் தண்டுவடம் நன்கு வலிமை பெற்று நேராக இருக்கும். அதிலும் ஊட்டச்சத்துக்களில் வைட்டமின்கள் மற்றும் கால்சியம் போன்றவை குறைவாக இருந்தால், எலும்புகள் மற்றும் தசைகள் வலிமையிழந்து, பின் இறுதியில் அதிகமான வலியை உண்டாக்கும்.

பரம்பரை

ஒருவேளை உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு முதுகு வலி இருப்பின், அது பரம்பரையாக தொற்றிக் கொண்டிருக்கும். இவற்றால் கூட காரணமின்றி வலி ஏற்படும். ஆகவே அப்போது அந்த வலியைப் போக்குவதற்கு சரியான நிலையில் உட்கார்ந்து வந்தால், சரிசெய்யலாம்.

அதிக எடை

நாம் சரியான நிலையில் எப்போதும் இல்லாததற்கு காரணம் உடல் எடையும் தான். ஏனெனில் இதனால் அவர்களது வயிற்றில் அதிகமான அளவில் கொழுப்புகள் சேர்ந்து, தொப்பையாக வருவதோடு, அந்த தொப்பை நேராக உட்காரவிடாமல், முன்புறமாக இழுக்கிறது. இதனால் முதுகு வளைந்து, கூன் உண்டாகி, இறுதியில் வலியை அதிகமாக்குகிறது.

பழக்கம்

சில நேரங்களில் நடக்கும் நிலை கூட, முதுகு வலியை ஏற்படுத்தும். உதாரணமாக, நடக்கும் போது தலையை குனிந்து கொண்டு நடக்கும் போது, தன்னை அறியாமலே தோள்பட்டையும் வளையும் நிலை ஏற்படுகிறது. மேலும் ஏதாவது ஒரு எடையுள்ள பொருளை ஒரே பக்கத்தில் தூக்கும் போது அல்லது படுக்கும் போது சரியான நிலையில் படுக்காமல் இருப்பது போன்ற பழக்கங்கள் கூட முதுகு வலி வருதற்கு காரணமாகும்.

கம்ப்யூட்டர் வேலை

முதுகு வலி பெரும்பாலான கம்ப்யூட்டர் முன் வேலை பார்ப்பவர்களுக்கே ஏற்படுகிறது. ஏனெனில் கம்ப்யூட்டர் முன்பு வேலை செய்யும் போது, கழுத்து மற்றும் தலை சற்று முன்னரும், தோள்பட்டை சற்று வளைந்தும் தான் இருக்கும். இதனால் முதுகை நேராக வைக்காமல், நீண்ட நேரம் வளைந்தே வைத்திருப்பதால், அந்த நிலை பெரும் வலியை உண்டாக்கும்.

ஃபேஷன்

ஃபேஷன் என்ற பெயரில் வந்துள்ள உடைகள் மற்றும் செருப்புகள் கூட இந்த வகையான வலிக்கு முக்கிய காரணங்களாகும். அதிலும் பெண்களுக்கு பென்சில் ஹீல்ஸ், ஹை ஹீல்ஸ், டைட்டான ஆடைகள் என்றும், ஆண்களுக்கு என்றால் நல்ல எடையுள்ள பூட்ஸ், பெல்ட் என்றும் வந்து, அவர்களின் முதுகிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, இறுதியில் தாங்க முடியாத வலியை கொடுக்கிறது.

கீரைகளின் ராஜா பொன்னாங்காணியின் மகத்தான மருத்துவ குணங்கள்!

மணக்கால் அய்யம்பேட்டை | 3:01 PM | Best Blogger Tips

கீரைகளின் ராஜா என்று அனைவரும் அழைக்கும் கீரை பொன்னாங்காணி.

அந்த அளவிற்கு மருத்துவ குணங்களை கொண்டது இக்கீரை …

சாதாரணமாக கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளரக்கூடிய கீரை இது.

இதில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் அடங்கிய கீரை.

பொன்னாங்காணியை தொடர்ந்து 27 நாட்களுக்கு சாப்பிட்டால் பகலிலும் நிலவைப்பார்க்கலாம் என்று ஒரு பழமொழி உண்டு.

அந்த அளவிற்கு கண்பார்வைக்கு மிக துல்லியமாக தெரிய உதவும் கீரை.

பொன்னாங்காணியில் சீமை பொன்னாங்காணி என்றும், நாட்டுப் பொன்னாங்காணி எனவும் இருவகை உண்டு.

இதில் சீமை பொன்னாங்கண்ணி பெரும்பாலும் அழகுக்கு வளர்க்கப்படுகிறது. மருத்துவ குணம் குறைவு. பச்சையாக கிடைக்கும் நாட்டு பொன்னாங்கண்ணி தான் பல அருங்குணங்கள் கொண்டது.

உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.

பொன்னாங்காணியின் பயன்கள் :

இக்கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்ந்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்.
கீழா நெல்லிச்சாற்றைக் கலந்து நல்லெண்ணெய் இட்டுக் காய்ச்சி தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் கண் நோய்கள் விலகும்.
சொறி, சிரங்குகளுக்கு சிறந்த மருந்து.

உடலை, தோலைப் பளபள என்று மாற்றுவதில் பெரும்பங்குண்டு.
மூல நோய், மண்ணீரல் நோய்களை குணப்படுத்த ஏற்றது.

இன்று நாம் உண்ணும் உணவிலும் சுவாசிக்கும் காற்றிலும் இரசாயனம் கலந்திருப்பதால் அவை இரத்தத்தில் நேரடியாக கலந்துவிடுகின்றன. இதனால் இரத்தம் அசுத்தமடைகின்றது.

பொன்னாங்காணிக் கீரையை நன்றாக அலசி சிறிதாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டுவந்தால் அசுத்த இரத்தம் சுத்தமாகும். உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.

அதிக வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கும், கணினி முன் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கும் கண்கள் சிவந்து காணப்படும். கண்களில் எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும்.

இவர்கள் பொன்னாங்கண்ணிக் கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் இப்பிரச்சினை நீங்கும்.

கூந்தல் வளர தினமும் பொன்னாங்காணி தைலம் தயாரிக்கும் முறை பொன்னாங்காணி இலையை நிழலில் உலர்த்தி காயவைத்து – 20 கிராம், அருகம்புல் காய்ந்தது – 10 கிராம், செம்பருத்தி பூ காய்ந்தது – 10 கிராம் எடுத்து 1/2லிட்டர் தேங்காய் எண்ணெயில் நன்கு காய்ச்சி பாட்டிலில் அடைத்து தினமும் உபயோகிக்கலாம்.

பொன்னாங்காணிக் கீரை வாய் துர்நாற்றத்தை நீக்கும். இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வு ஊட்டும்.மேனியை பளபளக்கச் செய்யும். நோய் காரணமாக பலவீனமடைந்தவர்கள் டானிக் போன்று இக்கீரையை உண்டு வர உடலில் ரத்த உற்பத்தி பெருகி நல்ல பலம் சேரும்.

பொன்னாங்காணி இலைச்சாறு, நல்லெண்ணெய் வகைக்கு ஒரு லிட்டர் கலந்து அத்துடன் அதிமதுரம், கோசுடம், செங்கழு நீர்க்கிழங்கு, கருஞ்சீரகம் வகைக்கு 20 கிராம் எடுத்து பாலில் அரைத்துப் போட்டு சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி 4 நாளுக்கு ஒருமுறை தலைக்குக் குளித்து வர உட்காய்ச்சல், உடல்சூடு, கைகால் உடல் எரிச்சல், மண்டைக் கொதிப்பு, கண் எரிச்சல், உடம்புவலி, வயிற்றுவலி குணமாகும்.

பொன்னாங்காணி வேர் ஒரு எலுமிச்சைப் பழம் அளவு எடுத்து அரைத்து எருமைப்பால் 2 படியில் கலக்கிக் காய்ச்சி தயிராக்கிக் கடைந்து எடுத்த வெண்ணெயை 3 நாள் காலையில் சாப்பிட்டு மோரையும் தாகத்துக்குக் குடித்துவர இரத்தம் கலந்து சிறுநீர் போகுதல் குணமாகும்.

உடலில் உண்டாகும் வெப்பத்தின் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கவல்ல கீரை, குறிப்பாக ஆண்களுக்கு விந்தினைப் பெருக்கிக் கொடுக்க வல்ல வீரியம் நிறையவே இக்கீரைக்கு உண்டு. எனவேதான் தமிழ் மூலிகை மருத்துவம் இக்கீரையை விந்து கட்டி எனப் பேசுகிறது.

இந்தக் கீரை வயல் வரப்புகளிலும், கிணற்று மேடுகளிலும், குளம் குட்டைகளில் கரைகளிலும், வாய்க்கால் கரைகளிலும் இயற்கையாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். பலன்கள் கிடைக்க தொடர்ந்து உபயோகிக்கவேண்டும்.

ஒரு நாள், இரண்டு நாள் சாப்பிட்டு விட்டு நிறுத்தினால் முழுப்பலன் கிடைக்காது.

குறைந்தது 12 மாதம் முதல் 213 மாத காலம் எந்த மூலிகைக்கும் தேவை.
— with ஜோதிடகலை ஜோதிட பயிற்சி.

பலாப்பழம் உடல்நல நன்மைகள்:-

மணக்கால் அய்யம்பேட்டை | 3:00 PM | Best Blogger Tips
பழவகைகளில் மிகவும் பெரிய பழம் என்றால் அது பலாப்பழம் தான் . இந்த பழம் பச்சை நிறத்திலான கரடு முரடான மேல் தோலை கொண்டதாக அமைந்திருக்கும் . இதன் தோல் உறுதியாகவும் அதன் அடிப்பாகத்தில் சுளைகள் நிறைந்து காணப்படும் .

பலாச்சுளைகள் ஒவ்வொன்றும் நரம்புகள் போன்ற சடைகளின் இடையில் பதிந்திருக்கும் . பலாப்பழத்தின் சுவை மரத்துக்கு மரம் வேறுபாடு உடையதாக இருக்கும் . சில பலாப்பழ சுளைகள் தேன் போன்று இனிப்பாகவும் , சில பழங்கள் இனிப்பு குறைந்தவையாகவும் இருக்கும் .

மஞ்சள் நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் பலாப்பழ சுளைகள் காணப்படும் . பழுத்த , நல்ல பழம் என்றால் மஞ்சள் நிறத்தில் இருக்கும் . பலாக்கொட்டைகளை வேக வைத்தோ , அவித்தோ , பொரித்தோ , காய்கறிகளுடன் சேர்த்து சமைத்தோ சாப்பிடலாம் .

விட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது பலாப்பழத்தில் . உடலுக்கும், மூளைக்கும் வலுவளிக்கும் .நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டது .பலாச்சுளைகளை மென்று தின்ன வேண்டும் . இரத்தத்தை விருத்தி ஆக்கும் தன்மையும் இந்த பழத்தில் உண்டு . எதுவும் அளவுடன் சாப்பிட வேண்டும் . அதுதான் உடம்புக்கு நல்லது .

மரத்தில் விளையும் பழங்களிலேயே பெரிய பழம் பலாப்பழமாகும். சில இடங்களில் மட்டுமே இது முறையான விவசாய முறைகளின் படி முழுமையான தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. பெரும்பாலும் மற்ற பழத்தோட்டங்களில் துணைப்பயிராகவோ அல்லது வீட்டுத்தோட்டங்களிலோ வளர்க்கப்படுகிறது. உலகின் சில இடங்களில் 'பழங்களின் அரசன்' என்று போற்றப்படுகிறது

இப்போது பலாப்பழ சீசன் என்பதால் எல்லா இடங்களிலும் பலாப்பழம் விற்கப்படுகிறது . பலா மரம், இந்தியா, பர்மா, இலங்கை, சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ், பிரேசில், கென்யா ஆகிய நாடுகளில் பெரும்பாலாக வளர்கிறது. பலாச்சுளைகள் பொட்டாசியம், கல்சியம் , பாஸ்பரஸ் ஆகிய உப்பு சத்துக்களும் உயிர்ச்சத்து ஏ மற்றும் சி யும் அதிக அளவில் கொண்டுள்ளன. கொட்டைகள் உயிர்ச்சத்து பி1, பி2 ஆகியவை கொண்டுள்ளன.

100 கிராம் பலாப்பழத்தில், 303 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது. இதனால் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க, பலாப்பழம் சிறந்ததாகும். பலாப்பழத்தில் குறைந்த அளவு கலோரிகளே உள்ளதால், எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தங்கள் உணவில் பலாப்பழத்தை தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம். புற்றுநோயைத் தடுக்கும் "ஆன்ட்டி-ஆக்சிடெண்டுகள்' பலாப்பழத்தில் உள்ளன என சமீபகால ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

வயது முதிர்தலைத் தள்ளிப் போட, பலாப்பழம் உதவுகிறது. இது வயது ஆவதால் ஏற்படும் தோல் சுருக்கத்தைத் தடுக்கிறது. மலச்சிக்கலை நீக்க, பலாப்பழம் உதவுகிறது. சீசனில் கிடைக்கும் பழங்கள், நம் உணவில் இடம் பெற வேண்டும் என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பலாப்பழத்தின் சுவையை எல்லோரும் சுவைத்து பாருங்கள் . எல்லோரும் சாப்பிடுங்கள் . அதன் பயன்களை அறிந்து கொள்ளுங்கள்

To Read in English, Click this link ~~ Food is the Best Medicine

To Read in English, Click this link ~~ @[431943046865465:274:Food is the Best Medicine]

கொடுக்காப்புளி!!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:39 PM | Best Blogger Tips
விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களிலும் முக்கியமாகக் கிணற்று மேட்டிலும் இதை வளர்ப்பார்கள். இதற்குப் பாசனம் தேவை இல்லை. ஆனால் பாசன வாய்க்கால் ஓரங்களில் இருப்பவை நன்கு செழித்து வளரும்.

இந்த மரம் குட்டையான முட்கள் நிறைந்ததாக இருப்பதால் வேலிக்காகவும் அந்தக்காலத்தில் நடுவதுண்டு. இதன் இலை வெள்ளாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படும்.

ஐம்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் பாசனக் கிணறுகளில் மாடுகளைக் கொண்டு நீர் இறைக்கப்பட்டபோது வாரியில் நிழலுக்காக இந்தமரங்கள் நட்டு வளர்க்கப்படும்.

வேலிகளில் சிறியதாக வளரும் இது விட்டுவைத்தால் வேம்பு அல்லது புளியமரம்போல் பெரியதாக வளரும் இயல்படையது. நன்கு வளர்ந்து முற்றிய மரங்கள் பல்வகை மரச் சாமான்கள் செய்யயப் பயன்படும்.

எல்லாவற்றுக்கும் மேலாக அக்காலக் கிராமச் சிறுவர்களுடன் இது நெருங்கிய தொடர்புடையது. இதன் சுருள் சுருளான பசுமையான சிவப்பான அழகான காயும் பழங்களும் உண்ணப் பயன்படும். சில ரகங்கள் துவர்ப்புத் தன்மை மேலோங்கியும் சிலரகங்கள் தித்திக்கும் சுவையுடனும் பழங்களைக் கொண்டிருக்கும். வெடித்த பழங்கள் நல்ல சுவையாக இருக்கும். மருத்துவப் பயன்களும் உண்டு.

இதன் முற்றிய அடிமரத்தில் முட்கள் இருக்காது. அதனால் எட்டியவரை சல்லைகளால் காய் பறித்துவிட்டு எட்டாத உயரத்தில் இருப்பதை முள்ளில்லாத அடிமரத்தில் ஏறி பாதிமரத்தில் இருந்து மீண்டும் சல்லைகளால் காய் பறிப்பார்கள்.

எப்படி இருந்தாலும் நீளமான கொக்கிச் சல்லைகளுடன் சிறுவர்கள் இந்த மரம் இருக்கும் இடங்களைத் தேடி அலைவதும் கண்டும் காணாமலும் இதன் பழங்ளைப் பறித்துக்கொண்டு யாரேனும வந்துவிட்டால் ஓட்டம் பிடிப்பதும் வேடிக்கையான அனுபவங்கள். சிலநேரங்களில் இரக்கமற்ற ஆட்களிடம் மாட்டிக்கொண்டு சல்லைகளை இழப்பதும் உண்டு.

சிறுவர்கள் மேல் பாசம் கொண்டு பறித்துத் தருபவர்கள் கொஞ்சம் பேர். சிறுவர்களின் ஓயாத தொல்லைக்குப் பயந்துகொண்டு மரத்தையே வெட்டியவர்களும் உண்டு.

காக்கைகள் பறித்துச் சென்று வீடுகளின் கூரைமேல் வைத்துத் தின்னும். அப்போது அது கொடுக்காப்புளிப் பழத்தை கீழே வைப்பதைப் பார்த்துக்கொண்டே இருந்து திடீரெனப் பலமான சப்தம் கொடுத்து காக்கையை விரட்டிவிட்டு பழத்தை வீட்டின்மேல் ஏறி எடுத்துக் கொள்வார்கள். காக்கைகள் கொண்டுவரும் பழம் மிகவும் சவையாக இருக்கும்.

எப்படியோ எந்தப் பாசனமும் தேவைப்டாமல் எந்த வறட்சிக்காலத்திலும் உயிர் வாழ்வதுமட்டுமல்ல கனிகளையம் கொடுக்கக்கூடிய கொடுக்காப்புளி மரமும் பழக்கத்தில் இருந்து ஒழிக்கப்பட்டுவிட்டது. இப்போது சிலபகுதிகளில் மட்டும் காணலாம்.

வர்த்தக ரீதியில் லாபம் தராத எதையும் ஒழிப்பது என்ற மனித விதியின்படி இதுவும் ஒரு நாள் காணாமல் போகக்கூடும்..?!

நன்றி: ஜயா சுபாஷ் கிருஷ்ணசாமி

அசிடிட்டி பிரச்சினையை போக்க !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:36 PM | Best Blogger Tips
அசிடிட்டி பிரச்சினை இன்றைக்கு பெரும்பாலனவர்களை பாதிக்கி றது. வயிற்றில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாயில் திரும்பி வருவ தால், வயிறு அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. இதனால் வயிற்றில் வலி, வயிற்றில் உப்புசம் கூட ஏற்படு ம். சரியான உணவுப்பழக்கத்தை கொள்வ தன் மூலம் அசிடிட்டி பிரச்சி னையை நீக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

சிலநேரங்களில் உணர்ச்சிவசப்படுவ தாலும் அசிடிட்டி உருவாகிறது. மன அழுத்தத்தின்போது, அந்த சூழ்நிலை யை எதிர்கொள்ள ரத்தத்தின் மூலமாக தசைகளுக்கு ஆற்றல் அனுப்பப்படுகிறது. இதனால்செரிமான உறுப்புகளுக்கு போதிய ரத்த ஓட்டம் இருக்காது. இதனால், செரிமான நிகழ்வு குறைந்து, வயிற்றி ல் நீண்ட நேரம் உணவு தங்குவதால், அமிலம் பின்னோக்கி திரும்பும் வாய்ப்பு உள்ளது. எனவே, மனஅழுத்தத்தை எதிர்த்து சமாளிக்க, உடற் பயிற்சி, செய்யலாம்.
காய்கறி பழங்கள்
பப்பாளி மற்றும் அன்னாசி போன்ற பழங்களில் உணவு செரிமானத்திற்கு உதவும் பாப்பெயின் மற்றும் “புரோமிலெ ய்ன்’ ஆகிய என்சைம்கள் அதிகளவில் உள்ளன. எனவே, இப்பழங்களை அதிகளவில் சாப் பிடலாம்.

முட்டைகோசு சாறு நெஞ்செரிச்சலுக்கு மிகவும் நல்லது. செரிமானப் பாதைக்கு மிகவும் பயன்படும் குளூட்டாமின் எனும் அமினோ அமிலம் முட்டைகோசில் அதிகள வில் காணப்படுகிறது. முட்டை கோசு சாறை தனியே சாப்பிட முடி யாவிட்டால் மற்ற காய்கறிகளின் சாறுடன் கலந்து சாப்பிடலாம்.

சீரகம், புதினா, சோம்பு ஆகியவற் றுக்கு, ஜீரண சக்தியை அதிகரித் தல், வாயு தொல்லை மற்றும் வயி ற்றுவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் தன்மை உண்டு. எனவே, இவற்றை தினசரி சமையலில் சேர்த்துக் கொள்வது நல்லது.

முட்டையின் வெள்ளைக்கரு அசி டிட்டி பிரச்சினையை தீர்க்கும் சரி யான உணவாக உள்ளது. அதே போல் மீன், சிக்கன் அதிக காரமில் லாமல் சேர்த்து சாப்பிடலாம்.
குறைந்த கொழுப்பு சத்துள்ள சீஸ் அசிடிட்டி பிரச்சினையை தீர்க்கும். அதேபோல் கொழுப்புச்சத்து குறை வான பாலும் ஏற்றது. மேலும் அசிடிட்டி உள்ளவர்கள் அதனைப் போக்க தானிய உணவுகள், கோதுமை, ப்ரௌவுன் அரிசி போன்ற வைகளை சேர்த்துக் கொள்ள லாம்.

சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்தி ற்குமுன் இஞ்சி டீ குடிக்கலாம். இவை செரிமானத்திற்கு தேவையா ன சுரப்பிகளின் செயல்பாடுகளை தூண்டி விடுகிறது.
எதை சாப்பிடக்கூடாது?

அடிசிட்டியினால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் மசாலா கலந்த கார உணவுகளை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். இதை தவிர்க்க முடியவில்லை என்றால் வாரத்திற்கு 1-2 முறை மட்டும் சாப்பி டலாம்.

அசிடிட்டி உடையவர்கள், அமில த்தன்மை நிறைந்தவைகளான சிட்ரஸ் பழங்கள் மற்றும் தக்காளி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் செரிமான அமைப்பிற்கும் அதிக பளுவை உண்டாக்குகிறது. எனவே,அதிக கொழுப்பு நிறைந்தஉணவுகளை தவிர்க்க வேண்டும்.

காபி, டீ போன்ற உணவுகளை கண்டிப்பாக கட் செய்ய வேண்டும். அதற்கு மாறாக கிரீன் டீ சாப்பிடலாம். காபின் நிறைந்த சாக்லேட் போன்ற உணவுப் பொருட்கள் இயற்கையிலேயே அமிலத் தன்மை நிறைந்தவை என்ப தால் அவற்றை தவிர்ப்பது நல்லது. அசிடிட்டி உள்ளவர்கள் ஆல்கஹால் அறவே தொடக்கூடாது குறிப்பாக ஒயின் சாப் பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரை.