பிறப்பும், இறப்பும் ஒரே தேதியில் எல்லோருக்கும் .....

மணக்கால் அய்யம்பேட்டை | 3:34 PM | Best Blogger Tips

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வரலாறு

பிறந்த தேதியை பிறந்த நாள் என்றும், இறந்த தேதியை நினைவு தினம் என்று தானே சொல்ல வேண்டும்.

தேவருக்கு மட்டும் என்ன அவருடைய இறந்த நாளை மட்டும் குரு பூஜை என பால்குடம் எடுத்து பொங்கல் வைத்து தந்தையார் போல் நினைத்து மொட்டையடித்து அவர் சமூகத்தினர் பசும்பொன் ஊரில்  கொண்டாடுகின்றார்களே!!
தேவரின சிறப்பு செய்திகள் - "பசும்பொன் தேவரை பின்பற்றும் மக்கள் மீது  காமராஜர் அடக்குமுறை ஏவி விட்டார்" பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ...
அத்தனை பெரிய தலைவரா என்றால்.. குருபூஜை என்றால் என்ன என *தெரியாதவர்களுக்காக..

குரு பூஜை: பிறப்பும், இறப்பும் ஒரே தேதியில் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. கோடியில் ஒருவருக்கு மட்டுமே அப்படியான பாக்கியம் கிடைக்கும்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
அப்படியான பாக்கியம் பெற்றவர் தான் தெய்வீக திருமகன் பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர்.

பிறந்த தேதியில் இறந்தவர்களுக்கு மட்டுமே குரு பூஜை நடத்துவது வழக்கம்..

அவர்கள் அடக்கம் செய்யபட்ட இடத்தை சித்தர் பீடம் என சொல்வார்கள். பிரம்மச்சாரியாக இருந்து மறைந்த சித்தர் பீடத்திற்கு சக்தி அதிகம்.
Vanakkam sivagangai - “பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறு”  கட்டுரை பதிவை காணலாம். தலை சிறந்த பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் இருந்த  ...
தேவர் திருமகனும் விவேகானந்தர், காமராசர், வாஜ்பாய், அப்துல்கலாம் போன்ற பெருமகன்களை போல்  பிரம்மச்சாரி என்பது அனைவரும் அறிந்ததே.

பிறந்த நாள் தியதி வரும் நாளில் இறப்பு கிடைப்பது கோடியில் ஒருவருக்கு மட்டுமே கிடைக்கும் பாக்கியம்.. அப்படியான தினத்தில் இறப்பவர்களை அனைவரையும் போல்  படுத்திருப்பது போன்ற நிலையில் அடக்கம் செய்ய மாட்டார்கள்..
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த ஊர் | Muthuramalinga Thevar Pirantha  Oor
இருப்புக்குழி எனப்படும் 4 × 6 அளவில் சவக்குழி தோண்டி இருக்கையில் அமர்ந்திருப்பது போன்ற நிலையில் அடக்கம் செய்வார்கள்.அவர்களின் சமாதி மீது சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து குருபூஜை அன்று மகேஷ்வர பூஜை செய்து வழிபடுவார்கள்.

இவ்வகையான இருப்புக்குழி சடங்கு சாங்கியங்களை செய்ய ஆன்மீக பெரியவர்களால் மட்டுமே முடியும்.

தேவர் மறைந்த பின் இருப்பு குழியில் அமர வைத்து ஈமக்கிரியை காரியங்களை செய்த போது தேவரின் தலை கவிழ்ந்து இருந்ததாம்.

இறுதி ஈமக்கிரியை காரியங்களை செய்த வல்லநாட்டு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள் "கம்பீரமாக தலை நிமிர்ந்து  இரும் தேவரே" என தேவரின் கன்னத்தில் தட்டி நிமிர்த்து வைத்த பின் தேவரின் தலை கவிழவே இல்லையாம்..  
MUTHURAMALINGA @ DEVAR | God of mukkulathor | valangai jaiveer | Flickr
தேவர் மறைந்த போது அவர் வளர்த்த மயில்கள் அத்தனையும் அவரோடு இறந்து போனதும் யதேச்சையான நிகழ்வுகள் அல்ல..

யார் இந்த தேவர்?

தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்களாக கொண்டு வாழ்ந்த மகான்..

வெள்ளையனுக்கு எதிரான சுதந்திர போராட்டத்தில் "பிச்சை கேட்டு பெறுவதில்லை சுதந்திரம்" போராடி பெறுவது தான் சுதந்திரம்!  என்ற தீர எண்ணத்தோடு சுபாஷ் சந்திர போஸை குருவாக கொண்டு விடுதலை  போராட்டத்தில் தீரத்தோடு பங்கேற்றவர்.

மதுரை மீனாட்சியம்மனை இழிவாக பேசிய பொடிடப்பா நொண்ணா துரை தேவர் இருக்கும் வரை மதுரைபக்கம் வராமல் பம்மி இருந்தது தேவர் பெருமகனின் கம்பீரத்திற்கு சாட்சி..
மீண்டும் பிறந்து வர மட்டாரா? பசும்பொன் தேவர் கோவில்களை மீட்டெடுக்க  மாட்டாரா? அண்ணாமலை. – oredesam
தனது ஜமீன் ஆளுமைக்கு உட்பட்ட முப்பத்திரண்டு  கிராமங்களில் உள்ள தனக்கு சொந்தமான 1832 ஏக்கர் 63 சென்ட் நஞ்செய் நிலங்களை தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு இலவசமாக வழங்கிய தேவரின் கருணையை ஜாதிய தலைவராக உருவகபடுத்தியது நச்சு அரசியல்.

உங்களுடைய கம்பீரமான முறுக்கு மீசை தனி அழகு.. அதற்காகவே உங்களை காதலிக்க தோன்றுகிறது என தன்னை பார்க்க வந்த மக்கள் கூட்டத்தில் பெண் ஒருத்தி வேடிக்கையாக சொன்னதற்காக, தனது மீசையால் ஒரு பெண்ணின் மனம் சலனபட்டதற்காக வாழ் நாள் முழுவதும் மீசை வைக்காமல்  கண்ணியமான பிரம்மச்சாரிய வாழ்க்கை வாழ்ந்தவர் தேவர் மகான்..
TNPSC notes: முத்துராமலிங்கத் தேவர்
ஆஷ் துரையை சுட்டு கொன்ற வீர வாஞ்சி நாத அய்யரின் மனைவிக்கு வாஞ்சியின் நினைவு நாளில் வருடம் முழுவதும் செலவுக்கு தேவையான பணத்தையும் புடவைகளையும் கொடுத்து அந்த வீர பெண்மணியின் காலில் விழுந்து ஆசிகள் பெற்று வந்த தெய்வீக செம்மல் தேவர் திருமகன்.

பிரதமராக பதவியேற்றதும் தன்னிடம் விரும்பி கை குலுக்க வந்த மாமா நேருவின் முகத்துக்கு நேராக என் தலைவன் நேதாஜியை காட்டி கொடுத்த உன்னோடு கை குலுக்க விரும்ப வில்லை. என கம்பீரத்தோடு சொன்னவர் தேவர் பெருமகன்.
பசும்பொன் தேவர் சுதந்திரப்... - Andal P Chokkalingam | Facebook
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இம் மண்ணுலகில் வாழ்ந்த நாட்கள் 20,075. சுதந்திரப் போராட்டத்திற்காக சிறையில் கழித்த நாட்கள் 4,000. தம் வாழ்நாளில் ஐந்தில் ஒரு பங்கினை சிறையில் கழித்த தியாகச் செம்மல் முத்துராமலிங்கத் தேவர் ஆவார்.

 நிகழ் கால சூழ்ச்சி அரசியலில்* கண்ணியமான ஆன்மீக வாழ்வு மற்றும் அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வை வாழ்ந்த தேவர் நிஜமாகவே தெய்வீக பிறவி தான்..
தீவிர தேசியவாதி முத்துராமலிங்கத் தேவர் - Mediyaan
நாட்டின் விடுதலைக்கும் நாட்டின் நலனுக்கும் இறையாண்மைக்கும் பாடுபட்ட மண்ணின் மைந்தர்களான பாட்டிற்கொரு பாரதியை பிராமண ஜாதிய தலைவராகவும்...

காமராஜரை நாடார் சங்க  தலைவராகவும், பசும்பொன் முத்துராமலிங்கனாரை தேவர் ஜாதி தலைவராகவும்..

இரட்டை மலை சீனிவாசனாரை பறையர் ஜாதிய தலைவராகவும்,  கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரை பிள்ளைமார் ஜாதிய  தலைவராகவும்...


தமிழ் பூர்வீக குடிகளிடையே போலி ஜாதி துவேஷத்தை  ஊட்டி ஒருவருக்கொருவர் இணைந்து விடாமல் மோத வைத்து பிரித்து ஆளும் அரசியலை மக்கள் அனைவரும் தேவர் ஜெயந்தி எனும் இந்த நன்னாளில்உணரட்டும்.
 🚩ஜெய்ஹிந்த்🚩
Muthuramalinga Devar News in Tamil | Latest Muthuramalinga Devar Tamil News  Updates, Videos, Photos - Oneindia Tamil
##சுதந்திர போராட்ட வீரர் தெய்வத்திருமகனார்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயாவின், குருபூஜை நாள் (பிறந்த. மறைந்த)

வழக்கம் போல், மாலையில் வீடு திரும்பிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், அவரது கார் டிரைவரை அழைத்து,
அவரிடம் ஒரு தொகையை கொடுத்து
தம்பி... இந்த பணத்தில், விலை உயர்ந்த நல்ல புடவை ஒன்றை எடுத்துக் கொள். தட்டில் வைக்க பழங்களும் வாங்கிக் கொள். நாளை காலை சீக்கிரம் வா,
நாம் ஒருவரை பார்க்க வேண்டும். இப்போது நீ கிளம்பலாம்...' என்றவாரே வீட்டிற்குள் சென்று விட்டார்.

டிரைவருக்கோ ஒரே குழப்பம்.
தேவரோ பிரம்மச்சாரி. பிற பெண்களை மதிப்பவர். அவர் யாருக்கு, அதுவும் விலை உயர்ந்த புடவை வாங்குகிறார் என குழம்பியபடியே, கடைக்கு சென்று, நல்ல விலையில் ஒரு புடவையும், பழங்களையும் வாங்கிக் கொண்டு, மறுநாள் அதிகாலையில், தேவரை பார்க்க வந்து விட்டார்.

தயாராக இருந்த தேவர், 'வந்து விட்டாயா...' எனக் கூறி, காரில் ஏறிக்கொண்டார்.
கார் புறப்பட்டது. யாருக்கு இந்த புடவை என குழம்பியபடியே, காரோட்டினார், டிரைவர். ஒரு குறுகிய சந்தை அடையாளம் காட்டி, காரை நிறுத்தி இறங்கினார், தேவர்.
டிரைவரும் இறங்கி, தாம்பாளத்தில் அந்த புடவையையும், பழங்களையும் வைத்து சுமந்தபடி, அந்த குறுகலான தெருவில்,
பல சந்துகளை கடந்து, இறுதியில் ஓர் சிறிய வீட்டிற்கு சென்றனர்.
Pasumpon Muthuramalinga Thevar,பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு இப்படி  ஒரு கதையா; யாரும் அறியாத உண்மைகள் இதோ! - interesting information about  pasumpon muthuramalinga thevar ...
அங்கு, 40 வயது மதிக்கதக்க விதவை பெண்மணி, தேவரை கண்டதும், வணங்கி வரவேற்றார். குட்டையான வாசலில் தலையை குனிந்து, வீட்டினுள் நுழைந்தார், தேவர். வெளியே நின்றிருந்தார், டிரைவர்.

அப்பெண்மணியிடம் நலம் விசாரித்து, பின், குடிப்பதற்கு நீர் கேட்டார், தேவர்.
அப்பெண்மணி உள்ளே சென்றதும், ஜிப்பாவில் இருந்து ஒரு கட்டு பணத்தை எடுத்து, அந்த புடவையின் நடுவே மறைவாக வைத்தார். பெண்மணி கொணர்ந்த நீரை வாங்கி அருந்திய பின், தான் கொண்டு போன புடவை, பழத் தட்டை கொடுத்து அவரது காலில், நெடுஞ்சாண் கிடையாக விழுந்து நமஸ்கரித்தார், தேவர்.
கோல்வால்கரை வணங்குவது முத்துராமலிங்கத் தேவரா ?| ஹெச்.ராஜா பத...
இதை வெளியே இருந்து பார்த்துக் கொண்டிருந்த டிரைவர்,
கலங்கிப் போனார். மேலும், உள்ளே என்ன நடக்கிறது என கேட்க, தன் காதை கூர்மையாக்கிக் கொண்டார். 'அம்மா... நான் கிளம்புகிறேன். உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் ஒரு வார்த்தை சொல்லி அனுப்புங்கள். ஓடோடி வந்து உதவ காத்திருக்கிறேன்...' என, கண்ணீர் மல்க கூறினார், தேவர்.

புன்னகையோடு, 'போதும். நீங்கள் செய்வதே என் தேவைக்கு அதிகமானதாகவே உள்ளது. உங்களை மறவேன்...' என்று அப்பெண்மணி கூற, கண்ணீரை துடைத்தபடி,
டிரைவரை திரும்பி பார்க்காது, விறுவிறுவென வேகமாக நடந்து வந்து காரில் ஏறிக்கொண்டார். காரை ஓட்ட துவங்கினார், டிரைவர்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வரலாறு
சிறிது நேரத்திற்கு பின், 'அய்யா, உங்களிடம் ஒரு கேள்வி... யார் அந்த பெண்மணி... நீங்கள் ஏன் அவர் காலில் விழுந்து நமஸ்கரித்தீர்கள்... எனக்கு ஒரே குழப்பமாக இருக்கு...' என்றார், டிரைவர்..

சற்று நேரம் மவுனமாக இருந்தவ தேவர், 'அவள் என் தாய்... என் தாய்க்கும் மேலானவள். மண வாழ்வு கண்ட சில நாட்களிலேயே தன் இளம் வயது கணவனை இந்திய சுதந்திரத்திற்காக விட்டுக் கொடுத்தவள்.
நள்ளிரவில், மணியாச்சி புகைவண்டி நிலையத்தில், வ.உ.சி.,க்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்ததற்காக, வெகுண்டெழுந்து, கவர்னர் ஆஷ்ஷை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதய்யரின் மனைவி அவள்.
'தேசத்திற்காக தன்னையே கொடுத்த, என் தந்தையான வாஞ்சியின் மனைவி, எனக்கு தாயன்றோ... அவளை வணங்குதல் தவறோ...'
என, கலங்கியபடியே கூறினார்;
டிரைவரின் கண்களிலும் தாரை தாரையாய் கண்ணீர் வழிந்தது.
தேசியம் வளர்த்த பசும்பொன் தேவர் - Mediyaan
(வாரமலரில் படித்தது...)

வீரத்தில் மட்டும் அல்ல பாசத்திலும் தேவரய்யா புகழ் வானளாவியது....

இன்று ஆஷ்துரையை கொண்டாடி, வாஞ்சிநாதரை தூற்றும் கும்பல்களை புறந்தள்ளிவேண்டியதும்,
தேவர் பெருமகனாரை போற்றுபவர்களின்  கடமையாக வேண்டும்....
🙏🏾
🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

 
🙏✍🏼🌹

 

#விடாமுயற்சி ......👍

மணக்கால் அய்யம்பேட்டை | 10:20 AM | Best Blogger Tips

May be an image of 10 people and text

வறுமை நிலைக்கு பயந்து விடாதே ; திறமை இருக்கு மறந்து விடாதே ' 
 
என்ற பாடலின் வடிவம்....
 
புதுச்சேரி கடற்கரை மற்றும் நேரு வீதி பகுதியில் மாலை நேரத்தில் கையில் சுண்டல் வாளியுடன் சுறுசுறுப்பாக சுண்டல் விற்பனை செய்யும் ஒரு இளைஞரை பலரும் பார்த்திருப்பார்கள்.
 
ஆனால், அவர் பிஏ, எம்ஏ, எம்பில் முடித்து தற்போது பிஎச்டி படிப்பவர் என்பது பலரும் அறியாத விஷயம்.
 
“எங்களுடைய குடும்பம் மிகவும் ஏழ்மையானது. அப்பா சுப்பிரமணியன், துணிக்கடையில் விற்பனையாளராக இருந்தார். அம்மா சரஸ்வதி, 2 அக்காள், 2 அண்ணன், 1 தங்கை என மொத்தம் 6 பேர். 
  May be an image of 10 people and text
வறுமையான சூழலில் அக்காள்களுக்கு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடுமையான பண பிரச்சினை காரணமாக வீட்டில் உள்ள ஆண் குழந்தைகளை வேலைக்கு அனுப்ப எங்கள் குடும்பம் முடிவு செய்தது.
 
அப்போது, 1998-ம் ஆண்டு நான் 8-ம் வகுப்பு படித்தேன். என்னையும், மற்றொரு அண்ணன் சரவணக் குமாரையும் வேலைக்கு போகுமாறு வீட்டில் தெரிவித்தனர். 
 புதுச்சேரி கடற்கரையில் தடையை மீறி குளித்தால் அபராதம் | Penalty for bathing  in Puducherry beach
எங்களுக்கு படிக்க ஆசை. அதனால் புதுச்சேரி கடற்கரையில் அமர்ந்து யோசித்தோம். அப்போதுதான், பீச்சில் சுண்டல் விற்பனை செய்ய முடிவு எடுத்தோம்.
 
முதலில் சுண்டல் விற்பனை செய்வது மிகவும் கஷ்டமாக இருந்தது. நான் மிகவும் அமைதியானவன். கூவி விற்கக்கூடத் தெரியாது. 
 
சில சமயம் சுண்டல் விற்காமலேயே போய்விடும். 
 
அதை என்ன செய்வது என்று தெரியாது.
 
வீட்டிலோ வறுமை. சரியான ஆடை கூட இருக்காது.
 
அதனால், அண்ணனின் ஆடையை போட்டுக் கொள்வேன். இந்த நிலையில், சுண்டல் விற்றவாறே நான் படிப்பது பள்ளியில் பலருக்கும் தெரிய வந்தது. 
 
நான் அப்போது புதுச்சேரியில் உள்ள வீரமாமுனிவர் அரசு பள்ளியில் படித்து வந்தேன்.
எனது நிலையை உணர்ந்த என்னுடைய ஆசிரியர்கள் பத்மாவதி, பாலசுந்தரம், ராமதாஸ் ஆகியோர் உதவி செய்தார்கள்.
 
சுண்டல் விற்றவாறே படித்து, 10-ம் வகுப்பில் 442 மார்க் எடுத்தேன்.
 
அதையடுத்து வஉசி அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். பின்னர் மேல்படிப்பு படிக்கும் ஆசையுடன் தாகூர் கல்லூரியில் பிஏ தமிழ் சேர்ந்தேன். அதன்பிறகு, எம்ஏ, எம்பில் முடித்தேன் .
 
படிப்புக்கு இடையே 2008-ல் நெட் தேர்விலும், 2013-ல் ஜேஆர்எப் (இளநிலை ஆராய்ச்சியாளர்) தேர்விலும் தேர்ச்சி பெற்றதால் பல்கலைக்கழகத்தில் இருந்து உதவித் தொகை கிடைக்க தொடங்கியுள்ளது. எனினும், இப்போதும் நான் சுண்டல் விற்கிறேன்.
 𝙄𝙉𝘽𝘼 on X: "#விடாமுயற்சி: புதுச்சேரி கடற்கரை மற்றும் நேரு வீதி  பகுதியில் மாலை நேரத்தில் கையில் சுண்டல் வாளியுடன் சுறுசுறுப்பாக சுண்டல் ...
எனது தந்தையால் வேலைக்கு செல்ல முடியவில்லை. அதனால், காலையில் எழுந்து சுண்டல், வடை, பஜ்ஜிக்கு தேவையான பொருட்களை வாங்கி வீட்டில் தருவேன். 
 
எனது அம்மா அதை தயாரிப்பார். 
 
நான் பல்கலைக்கழகம் சென்று விட்டு வீடு திரும்பிய பிறகு மாலை 6 மணிக்கு மேல் சுண்டல், சமோசா, போளி, கட்லெட், பஜ்ஜி, வடை ஆகியவற்றை எடுத்துக் கொண்டு பீச், நேரு வீதிக்கு விற்க வருவேன். 
 
விற்பனையை முடித்து விட்டு இரவு 10 மணிக்கு வீடு திரும்புவேன்.
 
பல்கலைக்கழக உதவித் தொகை கிடைத்தாலும் இந்த சுண்டல் வியாபாரம் மூலமாக எனது சகோதரிகள் திருமணத்துக்கு வாங்கிய கடனை அடைக்க முடிகிறது.
 
என்னுடன் சுண்டல் விற்பனை செய்த எனது அண்ணன் சரவணக்குமார் தற்போது எம்ஏ, எம்பில், பிஎட் முடித்து அரசு பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். 
 
மற்றொரு அண்ணன் பாலமுருகன் பிளாட்பாரத்தில் துணி விற்கிறார்.
 
நமக்குள் ஆசையும், முயற்சியும் இருந்தால் நம்மை ஊக்கப்படுத்த சமுதாயத்தில் பலரும் உள்ளனர் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
 
சுண்டல் வாங்குவோர் தொடங்கி, பள்ளி ஆசிரியர்கள், பேராசிரியர்கள், நண்பர்கள் என பலரும் அளித்த ஊக்கம்தான் பிஎச்டி வரை என்னை கொண்டு வந்துள்ளது” என்று தன்னம்பிக்கையுடன் பேசுகிறார்

👏👏👍👍🙏🙏

 

🌷 🌷🌷 🌷  May be an image of 1 person and Iguazú Falls 🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

 
🙏✍🏼🌹