கண்களின் பராமரிப்பு..

மணக்கால் அய்யம்பேட்டை | 2:58 PM | Best Blogger Tips
கண்களின் பராமரிப்பு.. 

மனிதர்களின் சோகம், துக்கம், சந்தோஷம் போன்ற பல உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கண்ணாடி கண்கள்தான்.

கண்ணில் நீர் வடிதல், சிவந்துபோதல், கோடுகள், கண் இமை உதிர்தல், சுருக்கங்கள் என்று பலருக்கும் கண்களே வயோதிகத்தின் வாசலாய் அமைந்துவிடுகின்றன.

திடீரென உடல் எடை குறைதல், தூக்கமின்மை, வேளாவேளைக்குச் சரியாகச் சாப்பிடாமல் இருப்பது, சத்துக் குறைபாடு, தரமில்லாத மேக்கப், வெயிலில் அதிகம் அலைவது போன்ற காரணங்களால் கண்கள் பாதிக்கப்படுகிறன.

பகல் தூக்கத்தைக் காட்டிலும் இரவு 8 மணி நேரத் தூக்கம் அவசியம் தேவை. பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை எடுத்துக் கண்களுக்குக் கீழே தடவலாம். வெள்ளரிக்காயை நறுக்கி, மூடிய கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஓய்வு எடுப்பதன் மூலம் கண்களின் சோர்வு நீங்கி, குளிர்ச்சி அடைந்து கருவளையங்கள் மறையும்.

பன்னீரைப் பஞ்சில் தோய்த்து இரவு தூங்கும்போது கண் இமை மீது வைத்துக்கொள்வதால் கருமை நீங்கி, கண்கள் பளிச்சென்று இருக்கும். கண்ணின் கீழே அதிகச் சுருக்கம் இருப்பதாக நினைப்பவர்கள் ஐலைனரோடு கீழ் இமையில் பென்சிலும் உபயோகித்தால் சுருக்கங்கள் தெரியாமல் இருக்கும்.

இமை
விளக்கெண்ணெய் மற்றும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் அகில் எண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு கலந்து கண்களின் மேல் போட்டு வர, வறட்சி நீங்கி, இமை மற்றும் புருவத்திலும் முடி நன்றாக வளரும்.

புருவம்
கண்களின் அழகை அம்சமாகக் காட்டுவது புருவங்கள்தான். சிலருக்குப் புருவத்தில் முடியே இருக்காது. நிறமும் குறைவாக இருக்கும். தினமும் கரிசலாங்கண்ணி, விளக்கெண்ணெயைத் தலா ஐந்து சொட்டுகள் எடுத்து, சூடு செய்து, நெல் உமித் தூளை ஒரு சிட்டிகை கலந்து, புருவத்தில் மசாஜ் செய்யலாம்.

அரை மணி நேரத்திற்குப் பின்பு வெதுவெதுப்பான நீரில் துடைத்துவிட வேண்டும். வாரம் மூன்று முறை இப்படிச் செய்வதன் மூலம் புருவத்தில் முடி கருகருவென வளரும்.

மசாஜ்
கண்களுக்குக் கீழும் புருவங்களுக்கு மேலும் வட்ட வடிவில் மசாஜ் செய்தால், அந்த இடங்களில் ரத்த ஓட்டம் அதிகரித்து, கண்களின் கீழ் உள்ள கோடுகள் மற்றும் சுருக்கங்கள் மறைவதுடன், சோர்வு, நீங்கிப் புத்துணர்வு கிடைக்கும்.

கண்களுக்கு முன் கட்டை விரலை வைத்து அருகிலும், தொலைவிலும் விரலை நகர்த்தி மாற்றி மாற்றிப் பார்க்க வேண்டும். இதுபோல் தினமும் 15 முறை செய்ய வேண்டும்.

உணவு
கண்ணில் உள்ள விழி வெண் படலம் (கார்னியா), விழித்திரை நன்றாகச் செயல்படுவதற்கு வைட்டமின் ‘ஏ’ அவசியம். வைட்டமின் ‘ஏ’ நிறைந்த கேரட், முருங்கைக் கீரை போன்ற கீரை வகைகள், மீன், மீன் எண்ணெய், ஈரல், முட்டை, பால் ஆகியன கண்ணுக்கு மிகவும் நல்லது.மனிதர்களின் சோகம், துக்கம், சந்தோஷம் போன்ற பல உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கண்ணாடி கண்கள்தான்.

கண்ணில் நீர் வடிதல், சிவந்துபோதல், கோடுகள், கண் இமை உதிர்தல், சுருக்கங்கள் என்று பலருக்கும் கண்களே வயோதிகத்தின் வாசலாய் அமைந்துவிடுகின்றன.

திடீரென உடல் எடை குறைதல், தூக்கமின்மை, வேளாவேளைக்குச் சரியாகச் சாப்பிடாமல் இருப்பது, சத்துக் குறைபாடு, தரமில்லாத மேக்கப், வெயிலில் அதிகம் அலைவது போன்ற காரணங்களால் கண்கள் பாதிக்கப்படுகிறன.

பகல் தூக்கத்தைக் காட்டிலும் இரவு 8 மணி நேரத் தூக்கம் அவசியம் தேவை. பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை எடுத்துக் கண்களுக்குக் கீழே தடவலாம். வெள்ளரிக்காயை நறுக்கி, மூடிய கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஓய்வு எடுப்பதன் மூலம் கண்களின் சோர்வு நீங்கி, குளிர்ச்சி அடைந்து கருவளையங்கள் மறையும்.

பன்னீரைப் பஞ்சில் தோய்த்து இரவு தூங்கும்போது கண் இமை மீது வைத்துக்கொள்வதால் கருமை நீங்கி, கண்கள் பளிச்சென்று இருக்கும். கண்ணின் கீழே அதிகச் சுருக்கம் இருப்பதாக நினைப்பவர்கள் ஐலைனரோடு கீழ் இமையில் பென்சிலும் உபயோகித்தால் சுருக்கங்கள் தெரியாமல் இருக்கும்.

இமை
விளக்கெண்ணெய் மற்றும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் அகில் எண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு கலந்து கண்களின் மேல் போட்டு வர, வறட்சி நீங்கி, இமை மற்றும் புருவத்திலும் முடி நன்றாக வளரும்.

புருவம்
கண்களின் அழகை அம்சமாகக் காட்டுவது புருவங்கள்தான். சிலருக்குப் புருவத்தில் முடியே இருக்காது. நிறமும் குறைவாக இருக்கும். தினமும் கரிசலாங்கண்ணி, விளக்கெண்ணெயைத் தலா ஐந்து சொட்டுகள் எடுத்து, சூடு செய்து, நெல் உமித் தூளை ஒரு சிட்டிகை கலந்து, புருவத்தில் மசாஜ் செய்யலாம்.

அரை மணி நேரத்திற்குப் பின்பு வெதுவெதுப்பான நீரில் துடைத்துவிட வேண்டும். வாரம் மூன்று முறை இப்படிச் செய்வதன் மூலம் புருவத்தில் முடி கருகருவென வளரும்.

மசாஜ்
கண்களுக்குக் கீழும் புருவங்களுக்கு மேலும் வட்ட வடிவில் மசாஜ் செய்தால், அந்த இடங்களில் ரத்த ஓட்டம் அதிகரித்து, கண்களின் கீழ் உள்ள கோடுகள் மற்றும் சுருக்கங்கள் மறைவதுடன், சோர்வு, நீங்கிப் புத்துணர்வு கிடைக்கும்.

கண்களுக்கு முன் கட்டை விரலை வைத்து அருகிலும், தொலைவிலும் விரலை நகர்த்தி மாற்றி மாற்றிப் பார்க்க வேண்டும். இதுபோல் தினமும் 15 முறை செய்ய வேண்டும்.

உணவு
கண்ணில் உள்ள விழி வெண் படலம் (கார்னியா), விழித்திரை நன்றாகச் செயல்படுவதற்கு வைட்டமின் ‘ஏ’ அவசியம். வைட்டமின் ‘ஏ’ நிறைந்த கேரட், முருங்கைக் கீரை போன்ற கீரை வகைகள், மீன், மீன் எண்ணெய், ஈரல், முட்டை, பால் ஆகியன கண்ணுக்கு மிகவும் நல்லது.
Via FB ஆயுதம் செய்வோம்
 
நரிக்குறவர் – வரலாற்றில் காணமல் போனவர்கள் !!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:42 PM | Best Blogger Tips
நரிக்குறவர் - வரலாற்றில் காணமல் போனவர்கள் !!

  வறுமை, பிற மதத்தின் தூண்டுகோளால் மதமாற்றம், அரசாங்க சலுகையின்மை போன்ற காரணங்களால் வரலாற்று புத்தகத்தில் காணாமல் போனவர்கள் இவர்கள். தமிழ்நாட்டில் இச்சமூகத்தினர் பல ஊர்களில் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையாக நாடோடிகளைப் போல் அவ்வப்போது இடம் பெயர்ந்து கொண்டிருப்பர். இவர்கள் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடுமிடங்களில்
ஊசி, பாசி, போன்ற சிறு பொருட்களை விற்பனை செய்யும் தொழிலைச் செய்து வருகின்றனர். குறவர்கள் சித்தமருத்துவம், இயற்கை மருத்துவம் அறிந்தவர்கள். நாடி பார்த்து நோய்க்குறி சொல்லுவார்கள். இன்றய நவீன மருத்துவம் வந்ததும் இவர்களை ஏமாற்றுக்காரர்களாக சமூகம் சொல்லுகின்றது.குறத்தி குறி சோசியம் இலக்கிய காலத்திலிருந்து பெருமை வாய்ந்தது.
பூர்வீகம்
குறவர்கள் மராட்டிய வழி வந்தவர்கள் என்றும், மாராட்டிய சிவாஜியின் படைவீரர்கள் என்றும் சொல்லுவதுமுண்டு. மேலும் இவர்கள் லம்பாடி இனத்தை சார்ந்தவர்கள் என்றும் சொல்வதுமுண்டு. குறவர் இனத்தில் பெண்கள் அழகுள்ளவர்கள், ஆணுக்கு நிகரானவர்கள். குறவர்களிடம் பெண்ணடிமை என்பது இல்லை. ஆனால் மாலை 6மணிக்குள் வெளியில் சென்ற பெண் கணவனை அடைய வேண்டும் என்பது இவர்களின் கட்டுப்பாடு. விதவை மறுமணம், வெளிப்படையான பாலுறவு இவர்களின் சமூகத்தில் உண்டு. பாலுறவுக்கு பஞ்சமில்லை என்பதால் இவர்களிடம் விபச்சாரம் என்பதில்லை
சமூகம்
படிப்பறிவு பெரும்பாலும் இல்லாதவர். எனினும், சுகாதாரத்தில் கவனம் உடையவர். காண்பதற்கு சுத்தமில்லாமல் இருந்தாலும், இவர்கள் வாழையடிவாழையாக உட்கொள்ளும் நாட்டுமருந்துகள், இவர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சிகள் வராமலிருக்க, வருடத்திற்கு ஒரு முறை தங்களது பாரம்பரிய மருந்தினைத் தருவர். இதுபற்றி ஆராய்ந்தவர், இடாய்ச்சு நாட்டு அறிஞர். பெண்கள் கலைவேலைப்பாடுகளில் கைத்தேர்ந்தவர். ஆண்கள் துப்பாக்கிச் சுடுவதிலும், கவண்வில்லிலும்(உண்டிவில்) திறமை மிக்கவர். பேச்சு மொழி உண்டு. எழுத்து மொழி இல்லை. தமிழ்நாட்டு அரசால் இவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(B.C) என்று அறிவிக்கப்பட்டவர்கள். எனினும், மலைவாழ் மக்களின் இயல்பைக்(S.T) கொண்டிருப்பவர். பெரும்பாலும் நாடோடி வாழ்க்கை வாழ்பவர்கள் ஆவர். குருவிக்காரர் என்ற பெயரும் இவருக்கு உண்டு.
குறவர் செயல்கள் இன்றைய நாகரீகம்
குறவர்கள் வாழ்க்கை நாடோடி வகையை சார்ந்ததால், இவர்களின் வாழ்வில் நடைமுறை விஞ்ஞானமும் கலந்தே இருக்கும்.
* பாட்டுப்பாடி பச்சை குத்துவதும் குறத்திகளின் தொழில்,
இன்று பலர் நவீனமாக நாகரிகப் பச்சை குத்திக் கொள்கிறனர்.
* குறவர்கள் கூடாரங்களில் வசிப்பவர்கள் தற்போது அரசாங்கம் இலவச வீடு மற்றும் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கி வருகின்றது. குறவர்கள் பிழைப்புக்காக ஊர் ஊராகச் சுற்றுவார்கள். எங்கு சென்றாலும் அவர்கள் பொருள்களையும் எடுத்தே செல்வார்கள். பொழுது போக்குகாக ரேடியோவை தோலில் கயிறு கட்டி வைத்துக் கொண்டு பாட்டுக் கேட்ட வண்ணம் இவர்கள் வேலையைப் பார்ப்பார்கள்.
தற்போது நாகரீகமாக கையடக்க ரேடியோ (walkman) கேட்டு மகிழ்கின்றோம்.
* இப்படி செல்லும் போது கைக்குழந்தையும் தன் தோலில் துணியை அடக்கமாக கட்டி அதன்மேல் குழந்தையை அமர்த்தி எடுத்துக் கொண்டு தன் வேலைகளில் ஈடுபடுவார்கள்.
தற்போது தன் குழந்தையை எடுத்துச் செல்ல தோலில் எடுத்து செல்லும் பை (baby sling) பயன் படுத்துகின்றோம்.
* குறவர்கள் மணிக்கோர்க்கும் போது பாசிமணி ஊசி மற்றும் இதரப பொருள்களை இடுப்பில் (பெண்கள் கழுத்தில்) பை அல்லது டப்பா கட்டி வைத்துக் கொண்டு சுலபமாக வேலை செய்வார்கள்.
தற்போது இடுப்புப்பை (pouch) பயன்படுத்துகின்றோம்.
இது போல் குறவர்கள் வாழ்வில் கலந்துவிட்ட விஞ்ஞானம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். குறவர்கள் வாழ்க்கை இயற்கையோடு சேர்ந்தே இருப்பதால் இவர்களின் வாழ்க்கையின் அனுபவ விஞ்ஞானம் அதிகம் காண முடியும்.
குறவர்கள் வாழ்வில் கலந்துவிட்ட விஞ்ஞானம்
இலக்கியங்கள், கதைகள், பாடல்கள், சினிமாக்கள் என்று அனைத்திலும் குறவன் குறத்தியைப்பற்றி சொல்லாத ஊடகங்கள் இல்லை!! ஆனால் இவர்கள் இந்திய சமுதாயத்தை சேர்ந்தவர்கள்தான் எனபது பலருக்கும் புரியாத புதிர். இதற்கு இவர்களின் சமுக அமைப்பும் சமுக கட்டுபாடும் மற்ற சமுகத்திடமிருந்து விளக்கியுள்ளது. தேர்தல் சமயத்தில் மட்டுமே இவர்களை இந்தியர்களாக மதிப்பதும் பிறகு மறந்துவிடுவதும் வாடிக்கையாகும்.
குறவர்கள் நாடோடி இனத்தை சார்ந்தவர்கள், இவர்களின் தொழில் மற்றும் சமுக அமைப்பு முறைகளில் 20வது வகை குறவர்கள் இருப்பதாக கூறுகின்றனர். குறவன் என்றவுடன் நமக்கு நினைவிக்கு வருவது தெருவோரங்களில் படுத்து உறங்கும் நரிக்குறவர்களைதான். ஆனால் குறவன் என்ற சமுகத்திற்கும் நரிக் குறவனுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. அவர்களது மொழி, கலாசாரம், பழக்கவழக்கங்கள் சாதாரண் குறவர் இன மக்களின் பழக்கவழக்கங்களில் இருந்து மாறுப்பட்டதாகும்.
தமிழ் நாட்டில் எத்தனை வகை குறவர் பிரிவுகள் உள்ளது என்பதை பார்க்க வேண்டும்.
1. குறவர்
2. உப்புக்குறவர்
3. தப்பைக்குறவன்
4. கந்தர்வக் கோட்டை குறவர்
5. ஆத்தூர் கீழநாடு குறவர்(சேலம்)
6. தாடிக் குறவர் (தஞ்சை திருச்சி)
7. மலைக்குறவர்
8. இஞ்சிக்குறவர் (தஞ்சை திருச்சி)
9. கொரவர்(செங்கல்ப்பட்டு)
10. தனிக்குறவர்
11. தோகமலைக் குறவர்
12. வரக நேரிக்குறவர்
13. களிஞ்சிதப்பை கொரவர் (த்ஞ்சை புதுகோட்டை)
14. மோண்டா குறவர்
15. பொன்னைக்குறவர் (வடாஅற்காடு)
16. தனிக்குறவர்
17. சேலம் மேலநாடு கொரவர்(மதுரை ,கோவை ஈரோடு, புதுகை,திருச்சி,சேலம்)
18. சக்கரத் தாமடை குறவர்
19. சேலம் உப்பு குரவர்
20. சாருங்கப்பள்ளி குறவர்
இப்படி பலவகை குறவர்கள் இருந்தாலும் எல்லோரும் பிந்தங்கிய நிலையில்தான் உள்ளனர்.
“நரிக்குறவர் இனவரைவியல்” என்ற நூல் கரசூர் பத்மபாரதி என்பவரால் 2005 -ம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது..

நன்றி
பத்மபாரதி
Via FB இன்று ஒரு தகவல்

கிவி பறவைகள் பற்றிய தகவல்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:29 PM | Best Blogger Tips

கிவி பறவை (Kiwi) இது ஒரு கோழி இனம் இது பல வித்தியாசமான பன்புகள் கொண்டது. இதன் இறக்கைகள் மென்மையான சாம்பல்-பழுப்பு நிறத்தில் சிறிய மற்றும் மறைக்கப்பட்டதாக இருக்கும். மற்றும் மூக்கு நீளமானது வளைந்து இருக்கும். கால்களில் நான்கு விரல்களில் ஒரு பெரிய தடித்த மற்றும் தசை உள்ளன. கிவி தனித்து இரவு நேரங்களில் நடமாடும், இவை பகல் முழுவதும் பொந்துகளில் தூங்கும் மற்றும் புழுக்கள், பூச்சிகள், மற்றும் பழங்களை உண்ணும் இவை நியூசிலாந்து அதை சுற்றி உள்ள சிறிய நாடுகளின் காடுகளில் வாழ்கிறது

கிவியின் முட்டைகள் தாயின் அளவை பொருத்து பெரிதாக உள்ளன, பெண் கிவி தனது உடல் நிறையில் 15-20 சதவிதத்திற்கு சமமான ஒரு முட்டையை இடும். தீக்கோழி முட்டைகள் பெண்தீக்கோழி தான் எடையில் வெறும் 2 சதவீதமாகவும், மனிதன் அதன் தாயின் எடையில் வெறும் 5 சதவீத எடையுடையது.
கிவி அனைத்தும் ஐந்து அங்கீகரிக்கப்பட்ட இனங்கள் உள்ளன, அனைத்து இனங்களும் மோசமான வரலாற்று காடு அழித்தலால் பாதிக்கப்பட்டது. ஆனால் அவைகள் காட்டுவசிப்பிடங்களை தற்போது பெரிய பகுதிகள் மற்றும் தேசிய பூங்காக்களில் பாதுகாக்கப்படுகின்றன. தற்போது அவைகளின் உயிர் பிழைத்தலுக்கு மிக பெரிய அச்சுருத்தல், பாலூட்டி கொன்றுண்ணுகள் வேட்டையாடிகளைல் உள்ளது.

கிவி நியூசிலாந்தின் தேசிய அடையாளமாக உள்ளது. ஒரு சின்னமாக கிவி முதல் நியூசிலாந்து பிரிவுகளின் முத்திரைகள் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெளிவந்தது. இது பின்னர் 1886 இல் தென் சென்டர்பரி பட்டாலியன் மற்றும் 1887 இல் ஹேஸ்டிங்ஸ் துப்பாக்கி தன்னார்வலர்களின் முத்திரைகள் இடம்பெற்றது. பிறகு விரைவில், கிவி பல இராணுவ முத்திரைகளில் வெளிவந்தது, மற்றும் 1906 இல் கிவி, ஷூ பாலிஷ்க்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டது.

முதல் உலக போரின் போது, நியூசிலாந்து வீரர்கள் பெயர் கிவி "kiwi" பொது பயன்பாட்டிற்கு வந்தது, மற்றும் ஒரு மாபெரும் கிவி (இப்போது Bulford Kiwi அறியப்படுகிறது) கிவி Kiwi நியூசிலாந்தில் மிகவும் நன்கு அறியப்பட்ட தேசிய சின்னமாக மாறிவிட்டது, மற்றும் பறவை பல நியூசிலாந்து நகரங்களில், கிளப் மற்றும் அமைப்புக்களின் ஆயுத, மற்றும் முத்திரைகள் கோட் முக்கியமாக உள்ளது. நியூசிலாந்து டாலரில் பெரும்பாலும் கிவி "kiwi டாலர்" என குறிப்பிடப்படுகிறது.Via FB  Karthikeyan Mathan

பாத எரிச்சல் தீர்வதற்கு

மணக்கால் அய்யம்பேட்டை | 1:26 PM | Best Blogger Tips

Photo: பாத எரிச்சல் தீர்வதற்கு

பாத எரிச்சலால் அவதி படுபவர்கள் வீட்டிலே பயன்படுத்தும் பொருட்களை வைத்து பாத எரிச்சலில் இருந்து நிவாரணம் பெறலாம்.

பாத எரிச்சல்

மருதாணி இலை,எலுமிச்சைச் சாறு.

மருதாணி இலைகளுடன் எலுமிச்சைச் சாறு கலந்து நன்கு அரைத்துப் பாதத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து சுடுநீரில் கழுவி வந்தால் பாத எரிச்சல் குறையும்

காலில் கட்டி குறைய

எருக்கின் பழுத்த இலை.
வசம்பு.

எருக்கின் பழுத்த இலை 5, வசம்பு 5 கிராம் இரண்டையும் சேர்த்து அரைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து பசைபோல் வந்தவுடன் இளம் சூடாக காலின் மேல்பாகத்தில் பூசி வர கட்டி குறையும்.பாத எரிச்சலால் அவதி படுபவர்கள் வீட்டிலே பயன்படுத்தும் பொருட்களை வைத்து பாத எரிச்சலில் இருந்து நிவாரணம் பெறலாம்.

பாத எரிச்சல்

மருதாணி இலை,எலுமிச்சைச் சாறு.

மருதாணி இலைகளுடன் எலுமிச்சைச் சாறு கலந்து நன்கு அரைத்துப் பாதத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து சுடுநீரில் கழுவி வந்தால் பாத எரிச்சல் குறையும்

காலில் கட்டி குறைய

எருக்கின் பழுத்த இலை.
வசம்பு.

எருக்கின் பழுத்த இலை 5, வசம்பு 5 கிராம் இரண்டையும் சேர்த்து அரைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து பசைபோல் வந்தவுடன் இளம் சூடாக காலின் மேல்பாகத்தில் பூசி வர கட்டி குறையும்.
 
Via FB ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.
 
சூழ்நிலையால் சுரண்டப்படும் குழந்தைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:24 PM | Best Blogger Tips
Photo: சூழ்நிலையால் சுரண்டப்படும் குழந்தைகள்

பெரிய ஆலமரம் ஒரு சிறிய விதைக்குள்ளே விதி செய்யப்படுவது போலவே ஒரு குழந்தை எதிர்காலத்தில் என்னவாக உருவெடுப்பான் என்பதற் கான சூழ்நிலைப்பதிவுகள் மூன்று வயதுக்குள்ளே கிரகிக்கப்படுவதாக புதிய உலகம் அறிந்திருக்கிறது. 
எத்தகைய சூழ்நிலையில் எத்தகைய பண்புகள் வளரும்? எதிர்காலத்தில் எத்தகைய ஆளுமைப் பெற்றிருப்பார்கள் என்பதை பார்ப்போம்.

1. தன்னைப் பற்றிய விமரிசனத்தில் வளரும் குழந்தை : மற்றவர்களைக் கண்டனம் செய்யக் கற்றுக் கொள்கிறது. 

2. பகைமைச் சூழலில் வளரும் குழந்தை : பிறருடன் சண்டையிடக் கற்றுக் கொள்கிறது. 

3. பயத்தில் வளரும் குழந்தை : கவலைப்பட கற்றுக் கொள்கிறது. 

4. பச்சாத்தாபச் சூழலில் வளரும் குழந்தை : தனது செயல்களை நினைத்து வருந்தக் கற்றுக் கொள்கிறது. 

5. பொறாமைச் சூழலில் வளரும் குழந்தை : குற்ற உணர்வு கொள்ளக் கற்றுக் கொள்கிறது. 

6. பாராட்டப்பட்டு வளரும் குழந்தை : மன உறுதியைச் சொந்தமாக்கிக் கொள்கிறது. 

7. புகழ்ச்சிகளால் நிறைக்கப்படும் குழந்தை : மற்றவர்களைப் புகழ்வதில் பெருமிதம் கொள்கிறது. 

8. சகிப்புத் தன்மையில் வளர்க்கப்படும் குழந்தை : பொறுமையை அணிந்து கொள்கிறது. 

9. பிறரால் ஏற்றுக் கொள்ளப்படும் குழந்தை : பிறரை அன்பு செய்யக் கற்றுக் கொள்கிறது. 

10. உற்சாகப்படுத்தப்படும் சூழýல் வளர்ந்த குழந்தை : தானாகக் கற்றுக் கொள்கிறது. 

11. முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட குழந்தை : குறிக்கோளோடு செயல்படக் கற்றுக் கொள்கிறது. 

12. பாகுபாடற்ற சூழலில் வளர்ந்த குழந்தை : நீதியுணர்வில் நிலைத்து நிற்கக் கற்றுக் கொள்கிறது. 

13. நேர்மைச் சூழலில் வளர்ந்த குழந்தை : உண்மையின் பாதையில் விலகாதிருக்க கற்றுக் கொள்கிறது. 

14. பாதுகாப்பான சூழலில் வளரும் குழந்தை : தன்னிலும் பிறரிலும் நம்பிக்கை வைக்கக் கற்றுக் கொள்கிறது. 

"வாத்தியார் பிள்ளை மக்கு, வைத்தியர் பிள்ளை சீக்கு' இது போன்ற பழமொழிகள் உருவாகக் காரணமே நல்ல பெற்றோருக்குப் பிறந்தும் தகாத சூழ்நிலை அமைந்து விடுவதுதான். நம் முன்னோர்கள் வேண்டுமானால் சூழ்நிலையின் சூட்சுமத்தை கருதாதிருக்கலாம். காலம் மாறி வரும் வேளையில் நம் வாரிசுகளுக்கும் நம் நாட்டின் வாரிசுகளுக்கும் நல்ல சூழ்நிலையை உருவாக்கிக் கொடுப்போம். அவர்கள் நாட்டிற்கு சுபநிலையை உருவாக்கித் தருவார்கள்.

அழகுசாதன பொருட்களால் ஆபத்து - கருவுற்றிற்கும் பெண்கள் கவனத்திற்கு

மணக்கால் அய்யம்பேட்டை | 1:13 PM | Best Blogger Tips
Photo: அழகுசாதன பொருட்களால் ஆபத்து - கருவுற்றிற்கும் பெண்கள் கவனத்திற்கு:

இன்றைய வணிக உலகம் எல்லோரையும் அமிலக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறதோ என்று தோன்றுகிறது. புற்றிலுள்ள ஈசல் போலக் கிளம்பும் அழகுசாதனப் பொருட்கள் கருவிலிருக்கும் குழந்தையையே பாதிப்படைய வைக்கிறது எனும் அதிர்ச்சிகரமான ஆராய்ச்சி முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர் ஸ்காட்லாந்திலுள்ள எடின்பரா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

எல்லோரையும் போலவே தாய்மை நிலையிலிருக்கும் பெண்களும் முகப்பூச்சுகளும், வாசனை பொருட்களும் பயன்படுத்துகின்றனர். ஊடகங் களும் தேவையற்ற பொருட்களை தாயின் அத்தியாவசியத் தேவை எனக் கூறி விற்கின்றன. ஆனால் அது தாய் தன்னை அறியாமலேயே தன் குழந்தைக்கு வழங்கும் நோய் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது இந்த ஆய்வு.

குறிப்பாக கருவில் இருக்கும் குழந்தை ஆணாய் இருந்தால், பிற்காலத்தில் ஆண்மைக் குறைவு, குறைந்த உயிரணுக்கள் எண்ணிக்கை போன்ற சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

எட்டு வாரம் முதல் பன்னிரண்டு வாரம் வரையிலான தாய்மைக் காலத்தில் கருவிலிருக்கும் குழந்தைகளின் இனப்பெருக்க உறுப்புகள் உருவாகின்றன. சில ஹார்மோன்கள் இந்த கால கட்டத்தில் தூண்டப்பட்டு ஆண் குழந்தைகளின் இனப்பெருக்க உறுப்புகளுக்கான அடித்தளத்தை அமைக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் தாய் பயன்படுத்தும் அழகுப் பொருட்கள் குழந்தையின் ஹார்மோன் தூண்டுதலைத் தடை செய்கின்றன.

டெஸ்டோஸ்ரோன் எனும் ஒரு குறிப்பிட்ட ஹார்மோன் ஆண்களின் இனப்பெருக்க வளர்ச்சிக்கு பெரிதும் தேவையானது. அதன் மீது இந்த அழகு சாதனப் பொருட்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இப்படியெல்லாம் பட்டியலிட்டு தாய்மை நிலையில் இருக்கும் பெண்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்துகின்றார் இந்த ஆராய்ச்சியை முன்னின்று நடத்திய பேராசிரியர் ரிச்சர்ட் ஷார்ப் என்பவர்.

இந்த அமிலங்களால் புற்று நோய் வரும் வாய்ப்பு கூட இருப்பதாக அவர் அச்சம் தெரிவிக்கின்றார். எனவே தாய்மை நிலையில் இருக்கும் பெண்கள் அழகு சாதனப் பொருட்களை அறவே தவிர்ப்பதே நல்லது என அவர் வலியுறுத்துகின்றார்.

சருமத்திற்கு ஏற்ற குளியல் சோப் எது?

மணக்கால் அய்யம்பேட்டை | 1:11 PM | Best Blogger Tips
Photo: சருமத்திற்கு ஏற்ற குளியல் சோப் எது? 

சோப் என்பது அழகை அதிகரிக்க உதவும் சாதனமாக இன்றைக்கு 
விளம்பரப்படுத்தப்படுகிறது. சந்தையில் தினந்தோறும் புதிது புதிதாய் 
சோப்புகள் குவிகின்றன. இதில் எந்த சோப் நல்ல சோப் என தேர்வு செய்வதில் குழம்பித்தான் போகின்றனர் அனைவரும். சிலர் ‘பேபி சோப் உபயோகித்தால் சருமம் மிருதுவாகும்’ என்கிறார்கள் சிலர். இன்னும் சிலரோ வாசனையான சோப்பே சிறந்தது என்கிறார்கள். உண்மையில் எதுதான் நல்ல சோப் என்று ஆலோசனை கூறுகின்றனர் அழகியல் நிபுணர்கள்.

பண்டைய காலங்களில் சோப் என்பது பயன்படுத்தப்படவில்லை. இயற்கையான பொருட்களை பயன்படுத்தியே தேய்த்து குளித்து வந்தனர். பின்னர் சிகைக்காய் அறிமுகமானது. மெல்ல சோப் என்ற பொருள் அழுக்கும் நீக்கும் சாதனமாக அறிமுகப்படுத்தப்பட்டது. சந்தையில் இன்றைக்கு எண்ணிலடங்காத பிராண்டு சோப்புகள் வந்து விட்டன. அவற்றில் வாசனையான சோப் என்று பார்த்து வாங்குவதை விட நமது சருமத்திற்கு ஏற்ற சோப் எது என்பதை பார்த்து வாங்கவேண்டும்.

சருமத்தின் தன்மை:

பிறந்த குழந்தைகளுக்கு சருமத் துவாரங்கள் இருக்காது. அவர்களுக்கு பேபி சோப்தான் பெஸ்ட். வளர்ந்தவர்களுக்கு சருமத் துவாரங்கள் இருக்கும். அவர்கள் பேபி சோப் உபயோகிப்பது உகந்ததல்ல. சருமம் ரொம்பவே வறண்டிருந்தால், மாயிச்சரைசர் உள்ள சோப் நல்லது. 40 வயதுக்கு மேலானவர்கள் மாயிச்சரைசர் உள்ள சோப் உபயோகிக்கலாம். குழந்தைகளுக்கு அதை உபயோகித்தால் சருமத்தில் வட்ட வட்டமாக மச்சம் மாதிரி வரும். சருமத்தின் தன்மை தெரியாமல் மூலிகை கலந்த சோப்புகளையும் உபயோகிக்க வேண்டாம். அத்தகைய சோப்புகள் ஆன்டிசெப்டிக்காக செயல்பட்டாலும், சருமத்தை கருப்பாக்கி விடலாம்.

ஃபேஸ் வாஷ்:

சோப்புகளில் ஆரம்ப பி.ஹெச் பேலன்ஸ் அளவே 7.5 அல்லது 8 ஆக இருக்கிறது. எந்தக் காரணத்தைக் கொண்டும் வாசனை அதிகமுள்ள சோப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டாம்.சோப்புக்கு பதில் ஃபேஸ் வாஷ் நல்லது. நமது முகத்தின் பி.ஹெச் பேலன்ஸ் 5.5. ஃபேஸ் வாஷின் பி.ஹெச் பேலன்ஸ் 6. இரண்டும் கிட்டத்தட்ட இணைந்து போவதால் சருமத்துக்கு நல்லது.