THE TRIGGER HAPPY MAN Mr. விஜயகுமார் IPS

மணக்கால் அய்யம்பேட்டை | 9:50 AM | Best Blogger Tips

 

விஜயகுமார் IPS
வெற்றியின் வரலாறு !
 
சென்னை கமிஷ்னரேட்டில் எத்தனையோ ஜாம்பவான்கள் கமிஷனர்களாக கால் பதித்து சென்றிருக்கிறார்கள் ! கடமை உணர்வுமிக்கவர்கள் , கை சுத்தமில்லாதவர்கள் , நேர்மையானவர்கள் , நிலை தடுமாறியவர்கள் , அடிபணியாத வணங்காமுடிகள் , அரசியல்வாதிகளின்
கைபாவைகள் சபலத்தில் சறுக்கி விழுந்து சீரழிந்தவர்கள் , சகலகலா வல்லவர்கள் என்று ஒவ்வொருவருக்கும் ஒரு முகமமூடி உள்ளது ! 
Vijay Kumar Ips,ராஜினாமா செய்து விட்டு ... 
அதில் விஜயகுமாரின் பதவி காலம் பொற்காலம் என்றே வர்ணிக்கப்பட்டது ! வீர , தீர செயல்களுக்கும் , விவேகத்திற்கும் மறுபெயர் இந்த முன்னாள் மாநகர கமிஷ்னர் ! மடிந்துவிட்ட மாநகர போலீசின் பெருமையை மீட்டுக் கொடுத்த மாமனிதன் ! 
 
டம்மியான பதவி ,
சிறந்த சென்சிடிவான பதவி என்றெல்லாம் தரம் பிரித்து பாராமல் , எங்கு போஸ்டிங் செய்யப்பட்டாலும் தன் சிறந்த செயல்பாடுகளால் சென்ற இடத்தை சென்சிடிவானதாக மாற்றி காட்டும் மாமனிதன் இவர் !
 
மாநகர காவல் துறையில் கமிஷனராக இருந்தவர்களிலேயே "ஆணழகன் " என்று அனைவராலும் கவரப்பட்டவர் ! அட்டகாசமான உடற்கட்டு , கவர்ச்சியான தோற்றம் , கம்பீரமான குரல் வளம் , 
 
பொன்னை உருக்கி ஊற்றியது போல் அப்படி ஒரு பளபளக்கும் நிறம் , பார்ப்பவர்களை தன் வயப்படுத்தும் ! 
May be an image of text 
அறிவுசார் அழகுமுகம் , (Intellectual Face ) மொழிப் புலமை என்று அத்தனையும் சரி விகிதத்தில் இணைந்த அபூர்வ கலவை இந்த கமிஷனர் ! 
 
மாநகர மக்களின் நினைவில் நீங்காமல் நிலைத்து நிற்பவர் ! உலக அரங்கில் தமிழக போலீசாருக்கென்று ஒரு தனி பெருமை உண்டு ! 
 
ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையாக பேசப்பட்டது தமிழக போலீசாரின் பெர்ஃபார்மன்ஸ் ! வேலியே பயிரை மேயும் விந்தையாலும் , போலீஸ் என்ற போர்வையில் சில கிரிமினல்அதிகாரிகளின் ஊடுருவலாலும் கெட்டு சீரழிந்தது காவல்துறையின் பெருமை ! 
 
தன்னலமற்ற மக்கள் பணியில் தளராத ஈடுபாடு , அரசியல் நெருக்கடிகளுக்கு அடிபணியாத அஞ்சாத நெஞ்சுரம் , உயர்ந்த சிந்தனை , விதியை மாற்றி எழுதும் விவேகம் போன்றவற்றை உள்ளடக்கிய இந்த போலீஸ் அதிகாரியை இன்று உலகமே விழி விரிய பார்த்துக்கொண்டிருக்கிறது !
 
மடிந்து விட்ட காவல்துறையின் பெருமைகளை தூக்கி நிறுத்த ஒரு விடியலை நோக்கி வீர நடை போட்டவர் ! அதில் வெற்றியும் கண்டவர் ! உருகுலைந்த காவல்துறையின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்தவர் ! 
 
முடியாததை முடித்துக் காட்டும் மந்திரம் இருக்கிறது இந்த மாமனிதரிடம் ! 
 
சென்னை மாநகர கமிஷனாக இருந்தபோது குற்றத்தடுப்பு நடவடிக்கைகளிலும் , தாதாக்களை தகனம் செய்வதிலும் இவர் காட்டிய வீரதீர சாகசங்கள் இன்று வரை மாநகர மக்களின் மனதை விட்டு மறையாது ! தீய சக்திகளிடம் துப்பாக்கியால் மட்டுமே பேசி பழக்கப்பட்டவர் ! 
 
தேவாரத்தை அடுத்து THE TRIGGER HAPPY MAN என்ற பெயரை தக்கவைத்துக் கொண்டவர் விஜயகுமார் மட்டுமே !
 
மாநிலத்தின் மூலை முடுக்கெங்கும் இந்த பெயர் முணுமுணுக்கப்பட்டது ! சிட்டியை அத்தனை சிறப்பாக வைத்திருந்த கமிஷனரை இதுவரை யாருமே கண்டதில்லை ! வீரப்பனின் விலாசத்தை தேடிப்பிடித்து , வீர சாகசத்தை நிகழ்த்தி காட்டியவர் ! பிடிக்கவே முடியாத மாயாவி என்று சவாலிட்ட சந்தன வீரப்பனை சிதைத்து சரித்திர சாதனை படைத்தவர் ! 
 
வீரப்பன் ஆபரேஷனில் தங்கள் விதியை முடித்துக் கொண்ட 44 காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு இந்த வெற்றியின் மூலம் வீரவணக்கம் செலுத்தி இருக்கிறார் விஜயகுமார் !
 ஓய்வு பெற்றார் வீரப்பன் புகழ் ...
உலக நாடுகளில் உள்ள அனைத்து மீடியாக்களிலும் , ஒரே நேரத்தில் பளிச்சிட்டது இவரது முகம் ! நான் , எனது என்ற ஆணவத்தை அறவே காண முடியாது இவரிடம் ! 
 
ஒரு நிலையில் , தமிழகத்தில் தாண்டவமாடிய அரசியல் நெருக்கடிகளால் மனம் வெறுத்து , மத்திய அரசின் டெபுடேஷனில் சென்று விட்டார் !
 
சென்ற இடமும் மிக மிக சென்சிட்டிவான CRPF ! ஆனால் CRPF பிலும் இவருக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது ! சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்கள் உச்சத்தில் இருந்த காலம் அது !
இங்கு பதவியில் அமர்ந்த குறுகிய நாட்களுக்குள் CRPF பின்Structure யே மாற்றி எழுதி விட்டார் இந்த மனிதன் !
 President Droupadi Murmu presents Padma Shri in the field of Civil ...
 இவரது எளிமையும் , அன்பான , ஆர்ப்பாட்டமில்லாத அணுகுமுறையையும் கண்டு CRPF குடும்பமே அன்று சந்தோஷத்தில் திக்கு முக்காடியது ! 
 
சென்னை மாநகர கமிஷ்னராக இருந்தபோது , ஒரு நாள் மதியம் உணவு இடைவேளையில், கமிஷனரின் கார் ஒரு அவசர வேலையாக வெளியில் சென்று விட்டது ! அருகிலேயே இருப்பதால் விஜயகுமார் சாப்பாட்டிற்கு வீட்டுக்கு சென்று வருவது வாடிக்கையான ஒன்று ! 
 IPS Vijayakumar mass real life inspirational stories | Tamil Nadu News
அவர் நினைத்திருந்தால் , MT க்கு தகவல் கொடுத்திருந்தால் வாகனங்கள் அணி வகுத்து நிற்கும் கமிஷனரேட்டில் ! ஆனால் பந்தாவும் ஆர்ப்பாட்டமும் அறவே இல்லாத விஜயகுமார் வாசலில் வந்து நின்றார் ! IS இன்ஸ்பெக்டர் ஒருவர் (யேசுராஜ் ) தன் பைக்கை ஸ்டார்ட் செய்ததை கண்டதும் , "யேசுராஜ் உங்க பைக்கை கொஞ்சம் கொடுக்க முடியுமா ? வீடு வரை போயிட்டு வந்துடறேன் என்று சர்வ சாதாரணமாக கேட்டதும் ,
ஆடிப் போய்விட்டார் IS இன்ஸ்பெக்டர் ! 
 K. Vijay Kumar - Wikipedia
எந்த டென்ஷனும் இல்லாமல் புல்லட்டில் அமர்ந்து லாவகமாக ஒரு அழுத்து, அழுத்த உருமலுடன் ஸ்டார்ட் ஆனது புல்லட் ! அந்த கண்கொள்ளா காட்சியை கமிஷனரேட்டே
கூடி நின்று வேடிக்கை பார்த்தது ! கமிஷனரேட்டை கடந்து புதுப்பேட்டை வழியாக வாலாஜா ரோடு வரை கமிஷ்னர் சென்றதை ஓர் அதிசயமாக கண்டு ரசித்தனர் மாநகர மக்கள் ! 
 
" என்ன மாதிரி ஒரு மனுஷன் ! என் சர்வீஸ்லே இது மாதிரி ஒரு Officer கிட்ட நான் வேலை செய்தது இல்லை ! அத்தனை பெருமையா இருக்கு தம்பி " என்று பரபரப்பு அடங்காமல் உணர்ச்சிவசப்பட்டார் அன்று RI யாக இருந்த பரமேஸ்வரன் (டிராபிக் 24. எழும்பூர்)
CRPF பிலும் அப்படி தான் ! பந்தாவுக்கும் , ஆர்ப்பாட்டத்திற்கும் அப்பாற்பட்டவர் , தன் வாகனத்திற்காக காத்திருக்க மாட்டார் ! 
 முன்னாள் காவல் துறை அதிகாரியான கே. விஜயகுமார் IPS அவர்களுக்கு, மத்திய அரசு  சார்பில் பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
சட்டென்று சைக்கிளில் ஏறி பறந்து விடுவார் ! 
 
தீவிரவாதிகள் பற்றிய பயம் துளி கூட இல்லாமல் தன்னந்தனியாக காடுகளில் பயணிப்பார் !
CRPF இல் நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகளில் ( Bada Khana) இவர் பந்தாவும் , கௌரவமும் பாராமல் சக அதிகாரிகளுடனும் , 
 
சிப்பாய்களோடும் சரிசமமாக அமர்ந்து சாப்பிடுவார் ! 
 
செல்லுமிடமெல்லாம் அதிரடியில் "தர்பாரை " வைத்து ( குறைகள் மற்றும் கருத்துக்களை கேட்டு
அறிதல் ) அசத்தி விடுவார் ,! 
 
பணி மூப்பில் இவருக்கு ஓய்வு கொடுத்தாலும் , அது இந்திய காவல்துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும் ! சர்வீசை விட்டு இவர் விலகினாலும் , இவரது புகழலைகள் என்றும் ஓய்வதில்லை !
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் !
 
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் !
என்ற வாலியின் தத்துவ பாடலொன்று ரேடியோ FM மில் ரீங்காராமிட்டது Coincidence ! 
 
 
FB copy from Indrajith R
 
 

🙏🌹நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 May be an image of one or more people and people smiling🌷 🌷🌷 🌷