நமக்கு தீமை செய்தவர்களை பழி வாங்க வேண்டும் என்று
நினைக்காமல் அவர்களின் தவறுகளை மன்னிக்கும் குணம் படைத்தவர்களுக்கு, இதயநோய்
உள்ளிட்ட எந்தவித நோய்களும் எட்டிப் பார்க்காது என்று அண்மையில் வந்த ஆய்வு முடிவு
ஒன்றில் தெரிய வந்துள்ளது...
மனிதர்களின் மனதிற்கும், உடல்
நலத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநில பல்கலைக்கழக
ஆய்வு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்...
இருநூறு பேர் பங்கேற்ற அந்த ஆய்வில் நூறு பேரிடம்
உங்களுக்கு கெடுதல் செய்பவர்கள் மீது நீங்கள் எப்படி ஆத்திரமடைவீர்கள்...?, அவரை
எப்படி பழி வாங்குவது போல் கற்பனை செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுக்
கொள்ளப்பட்டது...
மீதமுள்ள நூறு பேரிடம் நண்பர் தவறு செய்த பிறகும், அதை
மன்னித்து மறந்து விடுவது போன்று கற்பனை செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுக்
கொள்ளப்பட்டது...
ஐந்து நிமிடம் கழித்து அதே நிகழ்வுகளை மீண்டும்
நினைத்து பார்க்க வைத்து அவர்களது குருதியோட்டம் (ரத்த அழுத்தம்) சோதனை
செய்யப்பட்டது...
நண்பரின் தவறுக்கு ஆத்திரப்பட்ட நூறு பேரின்
குருதியோட்டம் மிக அதிகமாக வேகமாக பாய்ந்தது...
மறப்போம், மன்னிப்போம் என்ற மன்னிக்கும்
குணம் கொண்ட நூறு பேரின் குருதியோட்டம் சீராக இருந்ததும் தெரிய வந்தது...
இந்த ஆய்வு குறித்து கருத்து தெரிவித்த குழுவின்
தலைமை பேராசிரியர் டாக்டர் பிரிட்டா லார்சன்,
மன்னிக்கும் மனம் இல்லாதவர்களின் குருதியோட்டம்
ஆத்திரப்படும்போது மட்டுமின்றி நீண்ட நேர பாதிப்பைச் சந்திக்கிறது.
அதனால், அவர்கள் இரத்தக் கொதிப்புக்கு
ஆளாகி இதய நோயை சந்திக்க நேரிடலாம்.
அதேநேரம் மன்னிக்கும் குணம் கொண்டவர்களுக்கு இதய
துடிப்பு சீராக இருந்ததும் மன்னித்ததால் ஏற்பட்ட மன அமைதி காரணமாக
இதயத்துக்கு குருதியோட்டம் அதிகரித்து அது
வலுவடைந்ததும் சோதனையில் தெரிந்தது...
இது நீண்ட கால அடிப்படையில் அவர்களது ஒட்டு மொத்த
உடல் நலனுக்கு நன்மை தரும்'' என்று கூறியுள்ளார்...
இந்த ஆய்வு முடிவு அமெரிக்காவில் வெளியாகும்
மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது...
இதைத்தான் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ''எண்ணம்
போல் வாழ்வு'' என்று நம் முன்னோர்கள்
கூறியுள்ளனர்...
மன்னிக்கும் மனம் நமது உடலில் நோய் எதிர்ப்புச்
சக்தியை அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைக்கும்...
மன்னிக்கும் மனதுடைய மக்களுடன் பழகும்போது நம்மை
அறியாமலேயே அந்த நல்ல பழக்கமும் நம்முடன் வந்து ஒட்டிக் கொள்கிறது...
உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் மன்னிக்கும்
மனம் தானே முளை விடும்...!
மன்னிப்பு!, வாழ்க்கையை உருவாக்குகிறது..
மன்னிப்பு மனிதர்களை உருவாக்குகிறது...!
மன்னிப்புக் கேட்கும் எவருக்கும், மன்னிப்பை
மறுக்காதீர்கள். மன்னிப்புக் கேட்காதவர்களையும் மன்னிக்க மறக்காதீர்கள்...!!
வாழ்க்கை அழகானது, அதை
மன்னிப்பின் மூலம் அனுபவிப்போம். எனவே!, நமக்கு தீமை செய்தவர்களுக்கும்
கூட நன்மையே நினையுங்கள். நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழலாம்...!!!
பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட
மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க
ஆயுதமில்லை…!
நன்றி இணையம்