திருநெல்வேலி ...

மணக்கால் அய்யம்பேட்டை | 4:55 PM | Best Blogger Tips
No photo description available.
திருநெல்வேலி, திருநவேலி, நெல்லை என்று தமிழர்களாலும் , தின்னெவெளி (TINNEVELLY) என்று ஆங்கிலேயர்களாலும் அழைக்கப்படும், தமிழகத்தின் ஐந்தாவது பெரிய நகரம்.
தலைநகர் சென்னையிலிருந்து 625 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இம்மாவட்டத்தில் ஒவ்வொரு ஊர்களுமே தனிச்சிறப்பைக் கொண்டுள்ளன.
 May be an image of swimming and pool
 
மிகவும் புகழ்பெற்ற நகரங்கள் :
 
திருநெல்வேலி , சங்கரன்கோவில் , தென்காசி , அம்பாசமுத்திரம், வள்ளியூர், திசையன்விளை, நாங்குநேரி ஆகும். செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி திருநெல்வேலி தினமாக கொண்டாடப்படுகிறது.
 May be an image of mountain, lake, crater and horizon
பெயர் விளக்கம்:
 
16 ஆம் நுற்றாண்டு நுல் வேணுவனப் புராணம் திருநெல்வேலிக்கு 'வேணுவனம்' என்று பெயர் சூட்டிப் பாடுகிறது. 'வேணு' என்னும் சொல் மூங்கிலைக் குறிக்கும். 
 No photo description available.
தனது அடியாரின் காய்வதற்காக போட்ட நெல் மழையில் நனைந்து விடாமல் திருவே (இறைவனே) #வேலியாக நின்று பாதுகாத்ததால். திருநெல்வேலி என்று பெயர்காரணம். இன்றும் ஆண்டு தோறும் நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. 
 
நெல்வயல்களே வேலியாக உடைய ஊர் என்கிற பொருளில் 'திருநெல்வேலி' எனவும் அழைக்கப்படுகிறது.
 
இரட்டை நகரங்கள் :
 
திருநெல்வேலியும் #பாளையங்கோட்டையும் இரட்டை நகரங்கள் எனப்படுகின்றன. தாமிரபரணி ஆறு ஆனது இவ்விரு நகரங்களுக்கிடையே ஒடுகின்றது. பாளையங்கோட்டை கல்வி நிலையங்களுக்குப் பெயர்பெற்றது. இது தென்னிந்தியாவின் #ஆக்ஸ்ஃபோர்டு என்றழைக்கப்படுகிறது.
 
பாளையம்கோட்டைச் சிறையும் மிகவும் புகழ்பெற்றது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது பல சுதந்திரப்போராட்ட வீரர்கள் இங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர்.
இரட்டை நகரங்களை இணைக்கும் சுலோச்சன முதலியார் பாலமும் அங்கிருந்து தெரியும் நகரின் காட்சியும் அழகானவை..
 
சிறப்புகள் :
 
பழம் பொருட்கள் கண்டுபிடிப்பு :
சேரன்மாதேவிக்கு அருகே தோண்டி எடுக்கப்பட்ட கல் ஆயுதங்கள், ஜெர்மன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
சீவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த பகுதியான மருகால்தலையில் உள்ள பாறைக் குடைவுகளில் பாலிமொழியில் அசோகன் கல்வெட்டுகளும், பௌத்தர்களின் படுக்கைகளும் காணப்படுகின்றன.
 
மொகலாயர் காலத்தில் கட்டப்பட்ட நாராயணம்மாள் சத்திரம் இவ்வூரில் இருக்கிறது.
 
திருச்சிற்றம்பலம் என்னும் ஊரில் முதுமக்கள் தாழிகள் ஏராளமாக உள்ளன. உக்கிரபாண்டியன் கட்டிய கோட்டையும், அகழியும் இன்றும் உக்கிரன்கோட்டையில் காணலாம்.
வீரகேரளம்புதூரில் ஊற்றுமலை ஜமீன்களின் அரண்மனை இன்றுள்ளது. மலையடிக் குறிச்சியிலும் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 
தமிழின் தோற்றம் :
 
தமிழ் மொழியானது பொதிகை மலையில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் என்ற சிற்றூரில் உள்ளது. இந்து பழங்கதைகளின் படி சிவன் பாணினியையும் அகத்தியரையும் சமஸ்கிருதத்தையும் தமிழையும் உருவாக்க அனுப்பினார். அகத்தியர் பாபநாசம் வந்து தமிழை உருவாக்கினார்.May be an image of 2 people
 
திருநெல்வேலி ஆன்மீக சுற்றுலா தளங்கள் :
 May be an image of temple and mountain
1.காந்திமதி சமேத நெல்லையப்பர் கோவில்.
2.தென்காசி விஸ்வநாதர் திருக்கோவில்.
3.சங்கரன்கோவில் கோமதியம்மன் கோவில்.
4.பண்பொழி திருமலைகுமாரக் கோவில்.
5.திருப்புடைமருதூர் திருக்கோவில்.
6. பாபநாசநாதர் திருக்கோவில், பாபநாசம்.
7. குற்றாலநாதர் திருக்கோவில், குற்றாலம்.
8.சொரிமுத்து அய்யனார் கோவில்.
9.கிருஷ்ணாபுரம் கோவில் சிற்பங்கள்.
10.திருக்குறுங்குடி நம்பி கோவில்.
11.நாங்குநேரி பெருமாள் கோவில்.
12.பணகுடி இராமலிங்கசுவாமி கோவில்.
13.வள்ளியூர் முருகன் கோவில்.
14.நித்திய கல்யாணி அம்மன் கோவில்.
15.சீவலப்பேரி சுடலைமாடசுவாமி கோவில்.
16.குறுக்குத்துறை முருகன் கோவில்.
17. அம்பாசமுத்திரம் சிவன் கோவில்.
18.உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில்.
19.குட்டம் ஆனந்தவல்லியம்மன் கோவில்.
20.நவ திருப்பதி (நவ கைலாயங்கள்).
21.கைலாசநாதர் கோவில், அம்பை.
22.விஸ்வாமித்திரர் கோவில், விஜயாபதி.
23.அகத்தியர் கோவில், அகத்தியமலை.
24.இராஜகோபாலசுவாமி கோவில்,ஜங்சன்.
25.வரதராஜ பெருமாள் கோவில், தருவை.
26.பாளை கதீட்ரல் தேவாலயம்.
27.உவரி கப்பல்மாதா தேவாலயம்.
28.உவரி புனித அந்தோனியார் திருத்தலம்.
29.தெ.கள்ளிகுளம் பனிமயமாதா ஆலயம்.
30. திசையன்விளை உலக இரட்சகர் ஆலயம்.
31.ஆத்தாங்கரை பள்ளிவாசல்.
32.பொட்டல்புதூர் தர்கா.
33. கடையநல்லூர் ஜும்மா பள்ளிவாசல்.
May be an image of mountain, tree and body of water
முக்கிய இடங்கள் :
 
1.ஆதிச்சநல்லூர் அகழ்வராய்ச்சி மையம்.
2.மாவட்ட அறிவியல் மையம், கொக்கிரகுளம்.
3.முண்டந்துரை - களக்காடு சரணாலயம்.
4.கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்.
5.ஐந்தருவி.
6.அகத்தியர் மலை.
7.பாபநாசம் அணை.
8.மணிமுத்தாறு அணை.
9.பொதிகை மலை.
10.தேரிக்காடு.
11.கால்டுவெல் இல்லம், இடையன்குடி.
12.அரசு அருங்காட்சியகம், நெல்லை.
13.குண்டாறு அணை.
14.விஜயநாராயணம் கடற்படை தளம்.
15.மகேந்திரகிரி விண்வெளி மையம்.
16.தாமிரபரணி புஷ்கர தளங்கள்.
17.கூடன்குளம் அணுமின் நிலையம்.
18.பல முக்கிய சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவு இல்லங்கள்.
19.குத்துக்கல்வலசை.
20.மாஞ்சோலை.
21.பழைய குற்றாலம்.
 May be an image of mountain, grass, horizon and fog
அல்வா :
 
திருநெல்வேலி, அல்வா எனப்படும் இனிப்புப் பண்டத்திற்கு மிகவும் புகழ்பெற்றது. திருநெல்வேலி அல்வாவின் சுவைக்கு தாமிரபரணி ஆற்றின் நீரும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. இருட்டுக்கடை அல்வா புகழ்பெற்றது.May be an image of golf buggy, road, golf course and grass
 
சங்கரன்கோவில் பிரியாணி:
தமிழ்நாட்டின் சங்கரன்கோவில் பகுதியில் இந்த வகை ஆட்டிறைச்சி பிரியாணி மிகவும் பெயர் பெற்றது.
 
இங்குள்ள ஆடுகளின் வளர்ப்பும் அரிசியின் தரமும் இதன் சிறப்புகளாக உள்ளன.
தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் வளர்க்கப்படும் கன்னி என்ற வகையைச் சேர்ந்த ஆடுகள் சுவையில் சிறந்தவை.
 
சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டுமே அல்லாமல் வெளி ஊர் மற்றும் வெளிமாநில மக்களின் நல்லாதரவைப் பெற்றது.
 
கல்லிடைக்குறிச்சி இரட்டை அப்பளம் !!
 
இந்தியாவின் திருநெல்வேலி மாவட்டத்தில், தாமிராபரணி ஆறு செல்லும் ஊரான கல்லிடைக் குறிச்சியானது இரட்டை அப்பளத்திற்குப் பெயர் போனது. அப்பளம் இல்லாத விருந்து இல்லை. கல்லிடைக்குறிச்சி அப்பளம் தரமான, சுவையான அப்பளம். தாமிரபரணி, தரணிக்கு புகழ் சேர்க்கும் பற்பல நிகழ்வுகளில். அப்பளமும் ஓர் சிறப்பு. 
 
மரவள்ளிக் கிழங்கு அப்பளம், அரிசி அப்பளம், உளுந்து அப்பளம்May be an image of cloud, fog, mountain and twilight
 
அருமையாக இருக்கும்.
 
புளியங்குடி, #திருநெல்வேலி சீமை #தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த நகராட்சியாகும். அதன் தற்போதைய உத்தேச மக்கள் தொகை எழுபதாயிரத்துக்கும் அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
 
புளியங்குடி எலுமிச்சை நகரம் எனவே அந்தப் பகுதி மக்களால் பெருமையாகச் சொல்லப்படுகிறது. ஒரே ஒரு விவசாயப் பொருளை மட்டுமே வைத்து அந்தப் பகுதி பிரபலமாகி, அதன் பெயரிலேயே நகரம் அறியப்படுவது என்பது அநேகமாக தமிழ்நாட்டில் புளியங்குடி ஒன்றாகவே இருக்கும் எனத் தெரிகிறது. அதுவும் கூட எலுமிச்சை என்பது அரிசியையோ அல்லது உப்பையோ போல அத்தியவசியமான உணவுப் பொருள் அல்ல. அது ஒரு துணைப் பொருள் மட்டுமே.
 
திசையன்விளை சந்தை - சிறப்பு!
 
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் திசையன்விளை முருங்கைக்காய்.
திசையன்விளை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் முருங்கைகள் பயிரிடப்பட்டுள்ளது. வறட்சியை தாங்கும் சக்தி முருங்கைக்கு உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் மூலம் முருங்கை விவசாயம் செய்து வருகின்றனர்.
 
பத்தமடை பாய் :
 
திருநெல்வேலியிலிருந்து சேரன்மகாதேவி செல்லும் வழியில் உள்ள ஊர் பத்தமடை. இந்த பத்தமடை பாய் நெய்வதற்கு உலக அளவில் பெயர் பெற்ற ஊராகும். இங்குள்ள மக்கள் நெய்யும் பாய்கள் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
 
பூலித்தேவன் நினைவகம் :
 
ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக முதன்முதலாக போர் முரசு கொட்டியவன் மாவீரன் பூலித்தேவன். 1715 ஆம் ஆண்டு பிறந்த பூலித்தேவன் 1755 ஆம் ஆண்டு ஆங்கிலத் தளபதி ஆரோனுக்கு வரி தர மறுத்து சுதந்திரப் போராட்டத்தைத் தொடங்கினான். தொடர்ந்து ஆங்கிலேயருடன் போரிட்டு அவர்களை புறமுதுது காட்டச் செய்தான்.
 
இத்தகைய மாவீரனை சங்கரன்கோயிலில் தனது இஷ்ட தெய்வத்தை வணங்கிக் கொண்டிருந்த போது வஞ்சகமாகக் பிடிக்க சுற்றி வளைத்தது ஆங்கிலேயப் படை. ஆனால் அவரோ அங்குள்ள குகை ஒன்றினுள் போனான். எதிரிகளிடம் சிக்கவும் இல்லை. என்ன ஆனார் என்று தெரியவும் இல்லை. இந்த மாவீரனுக்கென்று சிவகிரி வட்டம் நெற்கட்டும்செவலில் ஒரு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.
 
உள்ளாட்சி நிறுவனங்கள் :
 
மாநகராட்சி - திருநெல்வேலி.
நகராட்சிகள் - 6.
ஊராட்சி ஒன்றியம் - 19.
பேரூராட்சிகள் - 39.
சட்டசபை தொகுதிகள் - 11.
1.திருநெல்வேலி.
2.பாளையங்கோட்டை.
3.சேரன்மாதேவி.
4.அம்பாசமுத்திரம்.
5.தென்காசி.
6.ஆலங்குளம்.
7.வாசுதேவநல்லூர்.
8.சங்கரன் கோவில்.
9.இராதாபுரம்.
10.நாங்குநேரி.
11.கடையநல்லூர்.
 
கல்வி :
 
பள்ளிகள் : தொடக்கப்பள்ளிகள் 1,460 , நடுநிலை 411 , உயர்நிலை 90 , மேல்நிலை 129 , கல்லு}ரிகள் 14 உள்ளன.
 
தொழில் கல்வி நிறுவனங்கள்-3
 
அரசு மருத்துவக் கல்லு}ரி@ அரசு சித்த மருத்துவக் கல்லு}ரி
தொழிற்பயிற்சி நிறுவனங்கள்-7
தொழிற் நுட்பக் கல்லு}ரிகள் 5
ஆசிரியர் பயிற்சி நிறுவனம்-8
மருத்துவம் :
மருத்துவமனைகள்-10,
தொடக்க மருத்துவ நலநிலையம் - 55,
துணை தொ.ம.நலநிலையம்-385.
ஆற்றுவளம் :
மேற்குத் தொடர்ச்சி மலை இருப்பதால் பல சிற்றாறுகளும், பேராறுகளும் இங்கு உற்பத்தியாகி நீர்வளத்தைத் பெருக்கியுள்ளன.
தாமிரபரணி :
பொதியமலையில் பேயாறு, உள்ளாறு, பாம்பாறு, களரியாறு, சேர்வை ஆறு ஆகிய வற்றின் நீரால் தாமிரபரணி தோன்றுகிறது. இந்த ஆறு ஆழ்வார் திருநகரிக்கு 20 கி.மீ தொலைவிலுள்ள புன்னைக் காயல் என்னுமிடத்தில் மன்னார் வளைகுடாக் கடலுடன் கலக்கிறது.
தென்மேற்கு பருவமழையாலும், வடகிழக்குப் பருவ மழையாலும் இந்த ஆற்றுக்கு நீர் வருகிறது. இதனால் பயனடையும் பரப்பு 1750 ச.கி.மீ. மைல்களாகும். இந்த ஆற்றின் நீளம் 121 கி.மீ.தான். இதிலும் 24 கி.மீ தொலைவு மலைமீதே பாய்கிறது. மலைக்குக் கீழே இதன் ஓட்டம் 97 கி.மீ தான்.
சிற்றாறு :
இதன் நீளம் 62 கி.மீ. இந்த ஆற்றினால் தென்காசி-திருநெல்வேலி வட்டங்களில் 27,000 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. குற்றாலமலை அருவியிலிருந்து ஆறாக உருபெறுகிறது. இது தவிர நம்பியாறு, பச்சையாறு, கொடுமுடியாறு, கடனாநதி முதலிய பல சிற்றாறுகள் இம்மாவட்டம் முழுவதும் உண்டு.
 
அணைகள் :
 
மணிமுத்தாறு அணை :
அணையின் மொத்த நீளம் 3 கி.மீ அதாவது 9820 அடியாகும். அதன் நடுவேயுள்ள கல் அணையின் நீளம் 1230 அடி தேக்கம் கூடிய நீரின் பரப்பு மூன்றே கால் ச.மைல் சாதாரணமாக 406 கோடி கன நீரைத் தேக்கலாம். இதன் மூலம் 65,000 ஏக்கர் நிலம் நீர்பாசன வசதி பெறுகின்றன.
 
பாபநாசம் அணைகள் :
 
பாபநாசம் மலை மீது மேலணை-கீழணை என்ற 2 அணைகள் கட்டப்பட்டுள்ளன. மேலணை 2 மலைகளுக்கிடையில் கட்டப் பட்டுள்ளது. இங்கு 120 அடிவரை நீரைத் தேக்கி வைக்கலாம்.
ஸ்ரீமுகப்பேரி அணை :
தென்காசி வட்டத்திலிருந்து வரும் கறுப்ப நதி மூன்று மைல்கள் தூரம் ஓடி, பிறகு அனும நதியோடு இணைகிறது. இவ்விடத்தில் மோட்டை அணையும், ஸ்ரீமுகப்பேரி அணையும் உள்ளன. இராமாநதித்திட்டத்தின் மூலம் 1,500 ஏக்கரும், கருணையாற்றின் திட்டத்தால் 7,500 ஏக்கரும் பாசனம் பெறுகின்றன.
 
கடநா நதி (கருணை ஆறு)அணை :
சம்பங்குளத்தில் உள்ளது கடநா நதி அணை.
மலைவளம் :
 
திருநெல்வேலியிலுள்ள பணகுடிக்கு அருகில் இருந்து ஆரம்பிக்கும் மேற்கு தொடர்ச்சி மலை மும்பை வரை செல்கிறது. சிவகிரியில் உள்ள மலையில் 20 மலை முகடுகள் உள்ளன. இவற்றின் சராசரி உயரம் 1500 மீட்டர் ஆகும்.
 
அகத்தியமலை :
 
பொதிகை மலை என்பது இதுதான். இதன் உயரம் 1800 மீ. இங்குதான் தாமிரபரணி உற்பத்தியாகிறது. அகத்தியர் மலை மலைமுகடுகளால் போர்த்தப்பட்டே காட்சி தரும். இரண்டு பருவக்காற்றாலும் இம்மலை நன்மை அடைகிறது.
 
ஐந்தலை பொதிகை :
 
அகத்திய மலைக்குத் தெற்கே இம்மலை இருக்கிறது. சமவெளியிலிருந்து கிழக்கே நோக்கினால், வரிசையாக அணிவகுத்து நிற்கும் உருவத்தோற்றம் தென்படும். இங்கே தான் நாகமலையும் அதன் பக்க மலைகளும் உள்ளன. திருக்குறுங்குடிக்கப்பால் இம்மலைபகுதி 1800 மீ வரை உயர்ந்து காணப்படுகிறது. இதுவே திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையின் இறுதிக் கட்டமாகும்.
திருநெல்வேலியில் குறிப்பிடத்தக்கவர்கள் :
மணியாச்சி வாஞ்சிநாதன், மாவீரன் அழகுமுத்துக்கோன் ( கட்டாலங்குளம்), பூலித்தேவன், வீரபாண்டிய
கட்டபொம்மன் (பாஞ்சாலங்குறிச்சி),
ஊமைத்துரை - (பாஞ்சாலங்குறிச்சி),
வ.உ.சிதம்பரனார் - (ஒட்டப்பிடரம்),
மாவீரன் சுந்தரலிங்கனார், மகாகவி சுப்பிரமணிய பாரதியார் (எட்டயபுரம்), சிங்கம்பட்டி ஜமீன்.
 
ஆன்மிகத் தலங்கள் :
 
காந்திமதி நெல்லையப்பர் கோவில் :
 
இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவையாக ஐந்து தலங்கள் இருக்கின்றன. சிவபெருமானுக்கான ஐம்பெரும் சபைகளில் "தாமிர சபை" என்று போற்றப்படுவது திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில். இக்கோயில் தெற்கிலிருந்து வடக்குப் பக்கமாக 756 அடி நீளமும், மேற்கிலிருந்து கிழக்காக 378 அடி அகலமும் கொண்டதாக இருக்கிறது. மேலும் இது ஆசியாவின் மிகப்பெரிய சிவன் கோயில் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
 
இந்தக் கோயிலில் நெல்லையப்பர், 
 
காந்திமதியம்மன் என்று இரண்டு சமமான பிரிவுகளில் சுவாமிக்கும் அம்மனுக்கும் தனித்தனிக் கோயில்கள் இருக்கிறது. இந்தக் கோயில்கள் இரண்டும் அழகிய கல் மண்டபம் ஒன்றின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.
 
முப்பீட தலங்கள்:
 
அம்பாசமுத்திரம் - திருமூலநாதர்தி கோயில்.
ஊர்காடு - திருக்கோஷ்டியப்பர் கோயில்.
வல்லநாடு - திருமூலநாதர் திருக்கோயில். (தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது).
 
பஞ்ச ஆசன தலங்கள்:
 
ஏர்வாடி - திருவழுந்தீசர் திருக்கோயில்.
களக்காடு - சத்யவாகீசர் திருக்கோயில்.
நான்குநேரி - திருநாகேஷ்வரர் திருக்கோயில்.
விஜயநாராயணம்- மனோன்மணீசர் கோயில்.
செண்பகராமநல்லூர் - ராமலிங்கர் கோயில்.
தென்பாண்டி நாட்டின் பஞ்ச பூத தலங்கள்:
சங்கரன்கோவில் - சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில் - மண் தலம் (ப்ருத்திவி).
கரிவலம்வந்தநல்லு}ர் - பால்வண்ணநாதர் - அக்னி தலம்.
 
தாருகாபுரம் - நீர் தலம்.
 
தென்மலை- காற்று தலம்.
 
தேவதானம் - ஆகாய தலம் (தற்போதைய விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது).
 
காசிக்கு சமமான பஞ்ச குரோச தலங்கள்:
சிவசைலம் - சிவசைலப்பர் திருக்கோயில்.
ஆழ்வார்குறிச்சி - வன்னீஸ்வரர் கோயில்.
கடையம் - வில்வவனநாதர் திருக்கோயில்.
திருப்புடைமருதூர் - நாறும்பூநாதர் கோயில்.
பாபநாசம் - பாபநாசர் திருக்கோயில்.
 
இராமர் வழிபட்ட பஞ்சலிங்க தலங்கள்:
களக்காடு- சத்யவாகீசர்.
 
பத்தை - குலசேகரநாதம்.
பத்மனேரி - நெல்லையப்பர்.
தேவநல்லு}ர் - சோமநாதம்.
சிங்கிகுளம் - கைலாசநாதம்.
நவ சமுத்திர தலங்கள் :
1.அம்பாசமுத்திரம்.
2.ரவணசமுத்திரம்.
3.வீராசமுத்திரம்.
4.அரங்கசமுத்திரம்.
5.தளபதிசமுத்திரம்.
6.வாலசமுத்திரம்.
7.கோபாலசமுத்திரம்.
8.வடமலைசமுத்திரம் (பத்மனேரி).
9.ரத்னகாராசமுத்திரம் (திருச்செந்தூர்- இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது).
பஞ்ச பீட தலங்கள் :
பஞ்ச பீட தலங்களில் முதல் நான்கு தலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன.
கூர்ம பீடம் - பிரம்மதேசம்.
சக்ர பீடம் - குற்றாலம்.
பத்ம பீடம் - தென்காசி.
காந்தி பீடம் - திருநெல்வேலி.
குமரி பீடம் - கன்னியாகுமரி. (இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது).
காட்டு வளம் :
காடுகளின் பரப்பு 40,253,16 ஹெக்டேர்கள். இம்மாவட்டத்தின் காடுகள் அனைத்தும் மலைகளில்தான் காணப்படுகின்றன.
மரங்களில் கோங்குதான் விலை மதிப்புடையது. இங்கு காடுகள் காணப்படும் வட்டங்கள்: நாங்குநேரி, அம்பா சமுத்திரம், தென்காசி வட்டங்கள். செங்கோட்டை வட்டத்துக் காடுகளில் இரயில் பாதை போடப்பயன்படும் 'ஸ்லீப்பர்' கட்டைகளுக்கு உதவும் மரங்கள் உள்ளன.
அம்பாசமுத்திரம் காடுகளில், மயிலை, நெடுநாரி, மதகிரிவேம்பு, நங்குல், செங்குரஞ்சி மரங்களும், பிரம்பு வகை களும், தேக்கு, கோங்கு தோதகத்தி, நாங்கு மரங்களும் அடர்த்தியாக உள்ளன.
நாங்குநேரி வட்டத்தில் ஒடை மரங்களும், மகிழ மரவகைகளும், எட்டி, வெள்ளத்துவரை போன்ற மரவகைகளும் உண்டு.
 
செங்கோட்டை காடுகளில் காகிதக் கூழ் செய்ய உதவும் ஈடா ரீட் மரங்கள் ஆண்டுதோறும் 10,000 டன் அளவுக்குப் பயிராக்கப்படுகின்றன. மரங்களைத் தவிர பிசின் மரம், மஞ்சக்கடம்பன், கரையானால் அரிக்க முடியாத விடத்தேரை ஆகிய மரங்களும் மிகுதியாக வளர்கின்றன.
 
காட்டு விலங்குகள் :
 
செங்கோட்டை காடுகளில் யானை, காட்டெருமை இன்னும் பல வகையான விலங்குகள் காணப்படுகின்றன.
 
சங்கரன் கோவில், அம்பா சமுத்திரம் நாங்குநேரி காடுகளில் காட் டெருதுகள் காணப்படுகின்றன.
புலிகள் மேற்கு தொடர்ச்சி மலை முழுவதும் உள்ளன. சிறுத்தைக் குறைவு. தேனுண்ணும் கரடி வகை அதிகம்.
 
தலை சிறுத்த சாம்பர் மானும், குற்றாலம், திருக்குறுங்குடி பகுதிகளில் மலையாடுகளும் உள்ளன. எலிமான்கள் போன்ற இவை கண்களுக்குத் தெரிவதில்லை. மான் போன்ற தோற்றம் கொண்ட மறிமான்களும், காட்டு நரிகள், நீண்டவால் குரங்குகள் போன்றவையும் காணப்படுகின்றன.
 
பறவைகள் :
 
மணிப்புறா, கிளி, பெரிய அலகு கொம்புப்பறவை ஆகியவை இம்மலைகளில் காணப் படுகின்றன. சனவரி-பிப்ரவரியில் சாம்பல் நிறமுடைய பெலிக்கன் பறவைகள் இலங்கையில் இருந்து வந்து நாங்குநேரி வட்டத்திலுள்ள விஜய நாராயணபுரம் குளத் திற்கு அருகில் தங்கி தாயகம் செல்கின்றன.
பருத்தி வாத்து என்ற ஒருஇனம் இங்கு நிரந்தரமாக வாழ்கிறது.
 
உள்ளான்களும், மரஉள்ளான்களும் தாழ்ந்த மலைக் குன்றுகளில் அதிகமாக வாழ்கின்றன. மேற்கு தொடர்ச்சி மலையில் பல்வேறு விதமாகப் பூச்சிகள் வாழ்கின்றன.
 
நிலவளம் :
 
திருநெல்வேலி மாவட்டம் ஐவகை நிலங்களையும் ஒருங்கே கொண்டு திகழ்கிறது.
மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகள் குறிஞ்சி நிலமாகவும், முல்லை நிலமாகவும் உள்ளன. மருதநில வளத்தைத் தாமிரபரணி பாயும் ஆற்றுப் பகுதிகளில் காணலாம். புன்செய் பயிர்கள் சங்கரன் கோவில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி வட்டங்களில் விளைகின்றன. இவை கரிசல் காடுகள்.
 
உவரி, கூடன்குளம் நெய்தல் நிலமாகவும்,
மணற்பகுதிகளாக உள்ள பாலைப் பகுதிகளை 'தேரிக் காடுகள்' என்று அழைக்கின்றனர். திசையன்விளை வட்டத்தின் தென் பகுதிகளில் இவற்றைக் காணலாம். இங்கு சில மணற்குன்றுகள் 200 அடிக்கும் மேல் உள்ளன.
தொகுப்பு : 
 

தருவைகள் :
 
பாலைவன ஊற்றுகளை போல இம்மணற்குன்றுகளில் தேங்கும் நீர் நிலத்தடி நீரோடு சேர்ந்து சிற்றேரிகளாக காட்சி தருகின்றன. இவற்றை இப்பகுதி மக்கள் 'தருவை'கள் என்று அழைக்கின்றனர்.
கனிமங்கள் :
 
சுண்ணாம்புக்கல் :
 
சிமெண்ட் தயாரிப்புக்குத் தேவையான இப்பொருள் நாங்குநேரி வட்டத்திலுள்ள வள்ளியூர், களக்காடு, முதலிய ஊர்களில் கிடைக்கிறது.
 
கார்னர்டு மணல் :
 
உப்புத்தாள் செய்ய உதவும் இவ்வகை மணல் கடலோரப் பகுதிகளில் கிடைக்கிறது.
 
அல்லனைட் :
 
அணுசக்திக்கு தேவையான இம்மூலப்பொருள் இம்மாவட்டத்தில் கிடைக்கிறது.
 
மோனசைட் :
இது உலோகச் சத்து நிறைந்த பொருள். கடற்கரை மணலில் கிடைக்கிறது. விளக்குத்திரி, மென்மையான எரியும் கம்பிகள், சில மருந்துகள் ஆகியவை செய்வதற்கு இது பயன்படுகிறது.
 
மைக்கா :
 
நாங்குநேரி வட்டம் மூலக்கரைப்பட்டியில் சிறிதளவு கிடைக்கிறது.
 
கிராபைட் :
 
உருக்கு வேலைக்கு உதவும். சிறுகலங்கள் செய்வதற்கும், சிலவகை எண்ணெய் தயாரிக்கவும் இது பயன்படுகிறது. அம்பை வட்டத்திலுள்ள சிங்கம்பட்டிப் பகுதியிலும், சங்கரன் வட்டத்துக் குருவிக்குளம் பகுதியிலும் இது மிகுதியாகக் கிடைக்கிறது.
 
வேளாண்மை :
 
திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி அம்பாசமுத்திரம் வட்டங்களில் நெல்லும், சங்கரன் கோயில் வட்டத்தில் பருத்தியும், மிளகாயும் மிகுதியாக விளைகின்றன. இம் மாவட்டத்து நெல் வகைகளுள், ஆனைக் கொம்பன் என்னும் வகை குறிப்பிடத்தக்கது.
19-ஆம்நு}ற்றாண்டில் பருத்தி விளைச்சல் அதிகம் இருந்தது. தற்போது குறைந்தளவே சாகுவடி செய்யப்பட்டு வருகிறது.
 
தென்காசி வட்டத்தில் உளுந்து, சோளம் ஆகிய வையும் சங்கரன் கோயில் நாங்கு நேரி வட்டங்களில் மிளகாயும், தென்காசி வட்டத்தில் மிளகும் விளைகின்றன. இங்கு மாம்பழ விளைச்சலும் அதிகம். இவை எல்லாக் காலங் களிலும் இங்குக் கிடைக்கின்றன. இராதாபுரம், திசையன்விளை, வள்ளியூர் பகுதிகள் பனைமரங்கள் மிகுதி.
 
பணப்பயிர்கள் :
1884-ஆம் ஆண்டு இங்கு காப்பித் தோட்டங்கள் உண்டாக்கப்பட்டன.
1902-ஆம் ஆண்டு நாங்குநேரி வட்டத்தில் 27 காப்பி எஸ்டேட்டுகள் இருந்தன.
1915-இல் 13 தோட்டங்கள் மட்டும் தனியார் வசம் இருந்தன. சில தோட்டங்களில் பழங்களை விளைவித்தனர். இங்கு சீன-ஜப்பானிய வகைகள் பயிரிடப்பட்டன.
 
குற்றாலத்திற்கு மேல் மலைப்பகுதியில் இருக்கும் தெற்குமலை எஸ்டேட்டுகளும், ஹோப் எஸ்டேட்டுகளும் குற்றாலத்துத் தேனருவிக்குச் செல்லும் வழியில் உள்ள தெற்குமலை எஸ்டேட்டுகளும் குறிப்பிடத்தக்கனவாகும்.
சுற்றுலாத் தலங்கள் :
பாபநாசம் நீர்வீழ்ச்சி :
 
அம்பாசமுத்திரம் இரயில் நிலையத்திலிருந்து 8கி.மீ. தொலைவில் உள்ளது. அகத்திய மலையில் தோன்றும் சிற்றாறு மேலணையிலிருந்து 40 அடி தொலைவில் விழுகிறது.
 
மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி :
 
குற்றாலத்திலிருந்து 48கி.மீ தொலைவில் உள்ளது. மலைமீது அருவி இருக்கிறது. இங்கு குளிக்கும் வசதியுள்ளது. ஆண்டு முழுவதும் அருவியில் நீர்வீழ்கிறது. அருவியின் உயரம் 25 அடி. குளிக்கும் இடத்தில் அருவியின் உயரம் 17அடி. அருவிக்குக் கீழே 80 அடி ஆழத்துக்கு நீச்சல் குளத்தைப் போன்ற அமைப்புள்ளது. இங்கு மணிமுத்தாறு அணையையும் காணலாம்.
பெரிய மணிமுத்தாறு அணையில் பூங்கா, சிலைகள், மாந்தோப்பு, தென்னந்தோப்பு, செயற்கைக்குகை, கோழிப்பண்னை, மீன்பண்ணை, விதைப்பண்ணை முதலியவை உள்ளன. மலைமீது மாஞ்சோலைத் தோட்டங்களைக் காணலாம்.
 
குற்றாலம் :
 
திருக்குற்றாலம், தென்காசியிலிருந்து 3கி.மீ தொலைவில் உள்ளது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்கள் அருவியைப் பார்ப்பதற்கு ஏற்று காலமாகும்.
 
இவ்வுரைச் சிறப்பித்து 'குற்றால குறவஞ்சி' என்ற இலக்கியம் எழுந்துள்ளது.
 
குற்றாலத்தில் அருவியாக விழும் ஆற்றின் பெயர் சிற்றாறு ஆகும். இந்த ஆறு திரிகூட மலையில் தோன்றி, வரும் வழியில் முதலில் நு}று அடி உயரத்திலிருந்து விழுகிறது.
 
தேன் அருவி :
 
தேன் அடைகள் மிகுந்து காணப்படுவதால் இப்பெயர் உண்டாயிற்று
 May be an image of mountain, cloud, horizon and fog
ஐந்தருவி :
 
சிற்றாற்றின் ஒரு பிரிவு ஐந்து அருவிகளாக விழுகிறது. அதனால் இதனை ஐந்தருவி என அழைக்கின்றனர். ஆற்றுநீர், ஐந்து அருவிகளாக விழும் காட்சி கண்களுக்கு இனிமையாகும்.
 
முண்டந்துறை புலிகள் புகலிடம் :
 
திருநெல்வேலியிலிருந்து 42 கி.மீ தொலைவில் உள்ளது. இப்புகலிடம் புலிகளின் பாதுகாப்பு கருதி உண்டாக்கப்பட்டது. மேலும் இங்கு சிறுத்தை, சாம்பார் மான், பன்றிக் கரடி, நீலகிரி வகை குரங்கு, சிங்கவால் குரங்கு போன்றவைகளைக் காணலாம். 
 
முண்டந்துறையைக் காண ஏற்ற காலம் அக்டோபரிலிருந்து ஜனவரி வரை செல்லலாம். தங்குவதற்கு ஏற்ற வசதிகள் உண்டு. முன்னரே பதிவு செய்ய வேண்டும்.
 May be an image of horizon, nature, cloud and grass
களக்காடு விலங்குப்புகலிடம் :
 
திருநெல்வேலியிலிருந்து 47 கி.மீ தொலைவில் உள்ளது. தாவர வியலாளர்களுக்கும், விலங்கியலாளர்களுக்கும் ஏற்ற இடம்.
இங்கு பலவகையான தாவரங்களும், புலி, சிறுத்தை, குள்ளநரி, காட்டு நாய்கள், ராஜநாகம் மலைப்பாம்பு, பலவகைப்பாம்புகள் ஆகியவை காணப்படு கின்றன.
 
இப்புகலிடத்தைக் காண்பதற்கு ஏற்ற மாதங்கள் : மார்ச்சிலிருந்து செப்டம்பர் வரை@ இங்கு சிங்கவால் குரங்குகள் பாதுகாக்கப்படுகின்றன.
இம்மாவட்டத்தில் மேலும் காணத்தகுந்த இடங்களாக இருக்கும் பறவைகள் புகலிடங்கள் கூந்தக்குளம் பறவைகள் புகலிடம், மற்றும் அரியகுளம் பறவைகள் புகலிடம் முதலியவை.
 
தாமிரபரணி : 
 
திருநெல்வேலிக்குனு எத்தனையோ பெருமைகள் இருந்தாலும் அத்தனை பெருமைகளுக்கும் காரணம் தாய் தாமிரபரணி தாங்க. பொதிகை மலைல பிறந்து நெல்லை தூத்துக்குடியை செழிக்க வைக்கிற தெய்வம். உலகத்தில் உள்ள எல்லா நதிகளும் மக்களின் பாவத்தை போக்விட்டு, தன் பாவத்தை தாமிரபரணியிடம் வந்து போக்கிக்கொள்வதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த தண்ணியோட ருசிக்கு எந்த தண்ணியும் ஈடாகாது. திருநெல்வேலி அல்வா தொடங்கி இம்மக்களோட வீரம் வரைக்கும் இந்த தண்ணி தான் காரணம்.
 May be an image of tree and grass
திருநெல்வேலி அல்வா :
 
இருட்டுக்கடை , திருநெல்வேலி
திருநெல்வேலிக்கு பெருமை சேக்குற இன்னொரு விஷயம் அல்வா. உலகத்துல எத்தனையோ வகையில அல்வா இருக்கலாம். ஆனா திருநெல்வேலி அல்வா எல்லாத்தையும் தூக்கி சாப்ட்ரும். அதே போல திருநெல்வேலிலயும் எத்தனையோ அல்வா கடைகள் இருக்குது. ஆனா நெல்லையப்பர் கோவில் வாசல்ல இருக்குற இருட்டுக்கடை அல்வா கடைக்கு இருக்குற மவுசு யாருக்கும் இல்லை. அந்த கடைல நூறு அல்வாவை வாங்கி நெல்லையப்பர் கோபுரத்தை பாத்துக்கிட்டே சாப்பிடும் சுகமே தனி...!
 
தமிழகத்தில் பல வட்டார வழக்குகள் புழக்கத்தில் இருக்கின்றன. மதுரை, கோவை, சென்னை, குமரி என்று பல பகுதி மக்களால் அவைகள் பேசப்படுகின்றன. அவைகளை விட நெல்லை, தூத்துக்குடி வட்டார பகுதிகளில் புழங்கும் தமிழ் தனித்துவம் வாய்ந்தது. அண்ணாச்சி, மக்கா, தொடங்கி ஏல போன்ற சொற்கள் நெல்லை தமிழை முல்லைத் தமிழாக்குகின்றன. நெல்லைத்தமிழ் பேசுவோரின் வார்த்தைகளிலும், குணத்திலும் அன்பும் வீரமும் பொங்கி வழிவதை காண முடியும்.
 May be an image of train, cloud and horizon
#OXFORD நகரம்:
 May be an image of Iguazú Falls
நெல்லை பாளையங்கோட்டை தென்னிதியாவின் 'OXFORD' என்று புகழப்படுகிறது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பாகவே கல்விப்பணியில் தமிழகத்திலேயே சிறந்து விளங்கியது இந்நகரம். இன்றும் சாலை தோறும் கல்விச்சாலைகளை இங்கு காண முடியும். ஒரு நகரத்தில் பள்ளி கல்லூரிகள் இருப்பது இயல்பு. அனால் பள்ளி கல்லூரிகளுக்காகவே ஒரு நகரம் இருப்பது இங்கே நெல்லையில் தான்,.
 
நெல்லை மக்கள் கொடுத்து வைத்தவர்கள். ஏனென்றால், திருநெல்வேலி யில் இருந்து எந்த திசையில் சென்றாலும் வெறும் 50 கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு சுற்றுலா தளம் வந்துவிடும். உதாரணத்திற்கு , 
 
கிழக்கே - திருச்செந்தூர் .
மேற்கே - பாபநாசம்,குற்றாலம்.
தெற்கே - கன்னியாகுமரி (89 km).
வடக்கே - கழுகுமலை.
இப்படி சுற்றி சுற்றி சுற்றுலா தலங்களை கொண்டதாக விளங்குகிறது நெல்லை மாவட்டம்.
May be an image of mountain, fog, tree, road and grass
#ஆன்மீக தலங்கள் :
 
குறுக்குத்துறை :
புண்ணிய நதி தாமிரபரணி பாயும் பூமி ஆதலால் புண்ணிய தலங்களுக்கு நெல்லை மாவட்டத்தில் பஞ்சமில்லை. நவ கைலாச கோவில்கள் நெல்லை மாவட்ட தாமிரபரணி கரையோரம் வரிசையாக அமைந்திருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் நூற்றுக்கணக்கான பழம்பெரும் கோவில்கள், தொன்மையான கிருஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள் என்று ஆன்மீக மனம் நெல்லை பிராந்தியம் முழுவதும் வீசிக்கொன்டே இருக்கிறது.
திருநெல்வேலி பற்றிய மீதமுள்ள அனைத்து தகவல்களையும், ஒவ்வொன்றாக நமது முகநூல்தளத்தில் பின்வரும் பதிவுகளில் விரிவாக காண்போம்.
 May be an image of road, grass, golf course and horizon
குறிப்பு :
1.தென்காசி மாவட்ட பிரிவினைக்கு முன் தொகுக்கப்பட்ட தகவல்கள்.
2.முகநூலில் ஒரு பதிவில் இதற்குமேல் எழுத அனுமதிக்கப்படவில்லை, எனவே மீதமுள்ள சிறப்புகள் மற்றும் பல சுற்றுலாத் தளங்களை ஒவ்வொரு பதிவாக நமது முகநூல்தளத்தில் காணலாம். விடுபட்ட பகுதிகளுக்கு மன்னிக்கவும். நன்றி!
𝐔𝐯𝐚𝐫𝐢 𝐀.𝐌.𝐊𝐮𝐭𝐭𝐢,
𝐒𝐫𝐢𝐒𝐮𝐲𝐚𝐦𝐛𝐮𝐥𝐢𝐧𝐠𝐚𝐬𝐰𝐚𝐦𝐲 𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 𝐂𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐭𝐲,
𝐔𝐯𝐚𝐫𝐢 - 𝐓𝐢𝐫𝐮𝐧𝐞𝐥𝐯𝐞𝐥𝐢 𝐃𝐭.

தாய் மாமானும் தாய்க்கு நிகர்....

மணக்கால் அய்யம்பேட்டை | 10:32 AM | Best Blogger Tips

 May be an image of 1 person, henna and wedding

மணப்பெண்ணுக்கு பொட்டு வைக்கத்
தேடியபோதுதான்
 
மண்டபத்தில் தாய்மாமனைக்
காணவில்லையென்று அறிந்தது
 
மணமேடை.....
பத்திரிக்கையில்
தன் பெயரைச் சேர்க்கவில்லையென்ற
கோபத்தை
கல்யாணத்தை புறக்கணித்தலால்
 
ஈடு செய்ய முனைத்திருந்த தாய்மாமன்
மண்டப வாசலில்
முறுக்கிக் கொண்டு நின்றிருந்தார்
 
கையைப் பற்றிய
மச்சானின் அழைப்பை உதறிவிட்டு
 
தங்கையின் அழுகையை
தரையில் எறிந்தார்
 
பங்காளிகள் பஞ்சாயத்தை
சொம்போடு வீசினார்
 
யார் பேச்சுக்கும் மசியாமல்
வீராப்பு காட்டியவரை.
 
மாமா ....என்றழைப்பில்
கண்ணீர் கசியச் செய்த மணப்பெண்
 
மணமேடை இறங்கியிருந்தாள்
நீ எதுக்கும்மா மேடைய விட்டு வந்த என்று
துண்டு கீழே விழுந்தது தெரியாமல்
உருகியோடியவர்
 
பொண்ணை மணமேடையில்
நிறுத்தியபோது
 
நல்ல நேரம் துவங்கியிருந்தது
 
நான் கோபப்படும் உரிமையை
 
நீதானம்மா கொடுத்த என்றபடி
 
தாய்மாமன் சீர் செய்தவரின்
 
காலில் விழுந்து வணங்கிய மணப்பெண்ணின் நெற்றியில்
 
அழுத்தமாய் பொட்டொன்று வைத்தார்
 
ஒட்டிக்கொண்டது இரத்த சொந்தம்
 
மண்டப வாசலில்
 
துண்டாகிக் கிடந்தது வீராப்பு.
 
தாய் மாமானும் தாய்க்கு நிகர்
என உணர்த்தியது..
 
🙏🌹 நன்றி இணையம்            🌹🙏 
 
 
 
 
 ❤️🙏✍🏼🌹