பெருந்தலைவர் காமராசர்.
💓❤️💓❤️💓❤️💓❤️💓
இந்தப் பெருந்தலைவன்
பிறந்தபோது
வானத்தில் துருவ நட்சத்திரம்
எதுவும் தென்படவில்லை.
ஒரு தேவதூதன்
தோன்றியதாய்
தேவர்கள் பூமாரி எதுவும்
பொழியவில்லை.
ஒரு ஓலைக்குடிசையில்
ஏழை வீட்டில்
எங்கள் நாளைய தலைவன்
அவதரித்தான்.
கருப்பை நிறமாய்
உடுத்திக்கொண்டு
அடிமை இருட்டை விரட்ட
அவன் பிறந்தான்.
காந்திய வழியை
ஏற்றுக்கொண்டு
கதராடையில் கடவுளாய்
தினம் நடந்தான்.
எளிமை நேர்மை
அணு அளவும் குறையா
அரசியல் தூய்மை.
வறுமை நெருப்பில்
வாடிய போதும்
வளைந்து கொடுக்கா
வணங்கா முடியின் வாய்மை.
பெருந்தலைவர் என்ற
பெயரைச் சொன்னால்
உலகம் வியக்கும்
ஒப்பற்ற தலைமை.
பதவி நூறு தேடி வந்தும்
பல்லிளித்து ஓடவில்லை.
பகைவர்களிடம் பணிந்து சென்று
பல்லக்கும் சுமக்கவில்லை.
தனி மனித ஒழுக்கத்தின்
புனிதாக வலம் வந்தார்.
எதிரிகளும் போற்றுகின்ற
எடுத்துக்காட்டாய் அவர் நின்றார்.
ஆடு மாடு மேய்த்த கூட்டம்
ஆனா...
ஆவன்னாவைப் படிக்கவே,
கால்நடையாய்த் திரிந்த மக்கள்
எழுதுகோலைப் பிடிக்கவே
தேடித் தேடி மக்களிடம்
தெருத்தெருவாய் நடந்திட்டார்.
ஓடிச்சென்று கையேந்தி
அறிவை வளர்க்கும்
வழிகண்டார்.
ஊர்கள்தோரும் பாடசாலை
உருவாக்கியது கல்விச்சாலை.
தடைகள் நூறு வந்தபோதும்
அதைத் தகர்த்தெறிந்தது
தற்குறியின் மூளை.
அறிவுப் பசியைத் தீர்த்து வைக்க
ஆலயமாய்ப் பள்ளிகள்.
இருந்தும்
வயிற்றுப் பசியைக் காட்டிக்காட்டி
வர மறுத்தன பிள்ளைகள்.
மெத்தப் படித்த மேதையெல்லாம்
புத்தகம் மட்டுமே போதுமென்றார்.
இந்த
படிக்காத பாமரனோ
வயிற்றுச் சோறு போடவேண்டுமென்றார்.
புழுதி மைந்தன் புத்தியில்
உதித்த புதிய திட்டமே.
வறுமை நோயை விரட்டவந்த
மதிய உணவுத் திட்டமே.
பசித்து வந்த வயிறு எல்லாம்
புசித்து மகிழ்ந்து உண்டது.
நிஜத்தில் வந்து நிற்கின்ற
கடவுள் என்றே சொன்னது.
அஃறிணையாய் இருந்த கூட்டம்
அகரம் படித்துச் சென்றது.
அறிவினிலே சிறகு விரித்துச்
சிகரம் தாண்டி வென்றது.
பொதுவாழ்வில் இவர் போல
ஒருவர் எவரும் இல்லையே.
இரண்டு வேட்டி சட்டை தவிர வேறு
சொத்து சேர்க்கவில்லையே.
தனக்காக என்று எதுவும்
பதுக்கிவைத்ததில்லையே.
தலையணை கூட இவர்
தலைக்கு வைத்ததில்லை.
ஆட்சி அதிகாரம் வந்தபோதும்
காட்சி மாறவில்லையே.
பல அவமானம் கண்டபோதும்
கட்சி மாறவில்லையே.
ஆள் பிடித்துக் கால் பிடித்து
அடிமையான தில்லையே.
தோள்கொடுத்துத் தாங்கி
நிற்பார்
இவர் எவர் காலையும்
வாரவில்லையே.
வாழ்ந்து போகட்டும் விட்டுவிடு இவர் வாய்மொழியின்
மந்திரம்.
ஆகட்டும் பார்க்கலாம் -
இதுதான் இவர்அரசியலின் தந்திரம்.

முதல்வர் என்ற உயர்பதவி
இவர் தோளில் விழுந்த துண்டுதான்.
முதலில் இவர் தொண்டர்
பெருந்தலைவர் எல்லாம்
பின்பு தான்.

இந்தியாவின் பிரதமராய்
இருக்கும் வாய்ப்பு வந்துமே!
இரண்டு முறை மறுத்துவிட்ட
பெருந்தன்மை இவரின் உயர்ந்த பண்புதான்.
அணைகள் கட்டி ஆறு காத்த
பட்டிக்காட்டுப் பாமரன்.
புதிய ஆலைகளைக் கொண்டுவந்த
பாரத்தின் தலைமகன்.

தமிழர் மானம் காத்து நின்ற
பச்சைத் தமிழன் பரம்பரை.
உலகம் யாவும் போற்றுகின்ற
ஒப்பற்ற தலைமுறை.

இவர் இறந்தபோது சொத்துக்கணக்கு
நூற்றைம்பது சொச்சமே.
கிழிந்த இரண்டு வேட்டி சட்டை மட்டுமே
விட்டுச் சென்ற மிச்சமே.
இவர் போல அரசியலில்
புனிதத் துறவி இல்லையே.
இவர் போல யாரும் இனி
இந்த மண்ணில் பிறப்பதில்லை.
பெருந்தலைவா உனைப்போல
இருந்ததில்லை ஒருதலைவன்.
இனி பிறந்து வந்தால்
எவன் ஒருவன்
அவன் பேரே இறைவன்.
நறுமுகை.
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷