வேலியில் காலி பாட்டில்கள் ஏன்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:42 PM | Best Blogger Tips

 

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள வேலியில் காலி பாட்டில்கள் ஏன் தொங்கவிடப்படுகின்றன தெரியுமா?
 
இந்திய எல்லைகளில் முள்வேலி வேலியில் தொங்கும் கண்ணாடி பாட்டில்களை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அவை அங்கு ஏன் வைக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
 
இந்திய எல்லைகளைப் பற்றி நினைக்கும் போது, முதலில் நினைவுக்கு வருவது முள்வேலிகளே
 
இந்தக் காட்சிகளைப் பெரும்பாலும் திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் பார்த்திருப்போம். ஆனால் இந்த வேலியில் தொங்கும் கண்ணாடி பாட்டில்களை கவனித்திருக்கிறீர்களா?
 
அவை சாதாரணமாக தோன்றினாலும், நாட்டின் பாதுகாப்பில் அவை முக்கியமான பங்கு வகிக்கின்றன. வீணாகத் தோன்றும் இந்த பாட்டில்கள், எல்லையை காக்கும் வீரர்களின் உயிரைக் காப்பாற்றும் எச்சரிக்கை சமிக்ஞைகளாக செயல்படுகின்றன.
 
இந்திய எல்லைகள் அடர்ந்த காடுகள், உயரமான மலைகள் மற்றும் பனிபகுதிகள் வழியாக செல்கின்றன. எல்லா இடங்களிலும் உயர் தொழில்நுட்ப சென்சார்கள் மற்றும் சிசிடிவி கேமராக்களை நிறுவுவது சாத்தியமில்லை. 
 
மழை, கடும் பனி மற்றும் மின்சாரம் இல்லாத காரணங்களால் மின்னணு சாதனங்கள் வேலை செய்யாமல் போகலாம். ஆனால் இந்த கண்ணாடி பாட்டில்களுக்கு மின்னோட்டம், பேட்டரிகள் அல்லது நெட்வொர்க் தேவையில்லை. அவை எந்த வானிலையிலும் 24 மணி நேரமும் திறம்பட செயல்படும்.
 
வீரர்கள் இந்த காலி பாட்டில்களை முள்வேலி வேலியில் கட்டிவிடுகிறார்கள், இதனால் அவை ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருக்கும். 
 
இருட்டில், ஏதேனும் ஊடுருவும் நபர், பயங்கரவாதி அல்லது காட்டு விலங்கு வேலியைத் தொட்டால், கம்பிகள் நகர்ந்து, இந்த பாட்டில்கள் மோதுகின்றன. அந்த நேரத்தில் வரும் 'டன் டன்' சத்தம் நீண்ட தூரத்திலிருந்து கேட்கும். இந்த சத்தத்தைக் கேட்டதும், ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் உடனடியாக எச்சரிக்கப்பட்டு நடவடிக்கை பணியில் ஈடுபடுகிறார்கள்.
 
லட்சக்கணக்கான ரூபாய் செலவாகும் வெப்ப இமேஜிங் கேமராக்கள் மற்றும் லேசர் அலாரங்களுடன் ஒப்பிடும்போது இந்த முறை மிகவும் மலிவானது. காலி பாட்டில்கள் எளிதில் கிடைக்கின்றன. அவற்றை அமைத்து பராமரிக்க அதிக செலவு இல்லை. அதனால் தொழில்நுட்பம் கிடைக்காத தொலைதூரப் பகுதிகளில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
 
குளிர்காலத்தில், குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஜம்மு பகுதிகளில் அடர்த்தியான மூடுபனி இருக்கும். அந்த நேரத்தில் தெரிவுநிலை கிட்டத்தட்ட பூஜ்ஜியமாகக் குறைகிறது. மிகவும் அதிநவீன கேமராக்களால் கூட ஊடுருவும் நபர்களைக் கண்டறிய முடியாது. 
 
பின்னர் BSF வீரர்கள் இந்த 'போர் நுட்பத்தை' பெரிதும் நம்புகின்றனர். இது 'அனைத்து வானிலைக்கும் எதிரான பாதுகாப்பு அமைப்பு' என்பது குறிப்பிடதக்கது.
 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 



🌷 🌷🌷 🌷

 
 

திருமணத்தில் ஆசீர்வாதம் எப்படி செய்ய வேண்டும்?

மணக்கால் அய்யம்பேட்டை | 1:04 PM | Best Blogger Tips

 இன்றைய தினம், நாம் பூஜைகளின் போது பயன்படுத்துகின்ற மங்கல அக்ஷதையைப் (அட்சதை) பற்றியும் அதன் மகத்துவங்களைப் பற்றியும் அறிந்து கொள்வோம். 

அப்படி என்ன விசேஷம் இருக்கிறது இந்த அக்ஷதைக்கு?

இறை பூஜைகளிலும், திருமணங்களிலும், சுப நிகழ்வுகளிலும், இதற்கென ஏன் ஒரு தனியிடமே அளிக்கப்பட்டிருக்கிறது? 

இதன் ‘தாத்பர்யம்’ (அர்த்தம்) என்ன? என்பதையெல்லாம் சற்று புரிந்து கொள்ள முற்படுவோம்.

 ‘க்ஷதம்’ என்ற வார்த்தைக்கு ‘குத்துவது’ அல்லது ‘இடிப்பது’ என்று பொருள். ‘‘அக்ஷதம்’’ என்றால் இடிக்கப்படாதது என்று பொருள். 

உலக்கையால் இடிக்கப்படாத, முனை முறியாத அரிசி ‘அக்ஷதை’ எனப்படுகிறது. முனை முறிந்த அரிசியைக் கொண்டு ‘அக்ஷதை’ தயாரிப்பது உசிதமல்ல. 

இப்படி முனை முறியாத அரிசியோடு மஞ்சளை இணைப்பது ஏன்?

பூமிக்கு மேல் விளையும் பொருள் அரிசி. பூமிக்குக் கீழ் விளையும் பொருள் மஞ்சள். இவை இரண்டையும் இணைக்கப் பயன்படுவது தூய பசுநெய் என்கிற ஊடகம்.

எதற்கு இப்படிச் செய்கிறார்கள்?

சந்திரனின் அம்சம் கொண்ட அரிசி, குருவின் அம்சம் கொண்ட மஞ்சள், மகாலட்சுமியின் அருள்கொண்ட நெய் இவை யாவும் ஒன்று சேரும்போது, அங்கே நல்ல அதிர்வு உண்டாகி, அந்த இடமே சுபிட்சமாகும் என்பது நம்பிக்கை. 

வெள்ளை அரிசியோடு மஞ்சள் நிறம் சேர்ந்து நெய்யின் மினுமினுப்போடு விளங்கும் இந்த அட்சதை, பெரியோர்களின் ஆசிகளைச் சுமந்து வரும் வாகனமாகவே உணரப்படுகிறது. 

அதன்றியும், அரிசியை உடலாகவும், மஞ்சளை ஆன்மாவாகவும், நெய்யை தெய்வ சக்தியாகவும் ஆன்றோர்கள் குறிப்பிடுகிறார்கள். 

இப்படி, ‘உடல், ஆன்மா, தெய்வசக்தியோடு இணைந்து வாழ்த்துகிறோம்’ என்ற பொருளிலேயே அட்சதை தூவப்படுகிறது என்று சொல்வோரும் உண்டு.

திருமணங்களில், மணமக்களை வாழ்த்துவதற்கு, மலர்களைவிட, அட்சதைக்கே முக்கியத்துவம் ஏன் வழங்கப் படுகிறது?

சற்றே யோசித்தால், பூமிக்கு மேலேயும், பூமிக்கு கீழேயும் விளைகின்ற அரிசியையும் மஞ்சளையும் போன்றே மணமக்கள் இரு மாண்பினர். வெவ்வேறு குணநலன்கள் கொண்டவர்கள். ஒருமித்து வாழவிழைபவர்கள். 

அரிசியும் மஞ்சளுமான மணமக்களை இணைக்கும் பசுநெய்யாகப் பாசமிகு உற்றார் உறவினர்கள் உள்ளனர். இதுவே தத்துவம்.

ஆகவே, உற்றார் உறவினர்கள், பெரியோர்கள், நண்பர்கள் என அனைவரும் மணமக்களை வாழ்த்தும்போது, மணமேடைக்கு அருகே வந்து, ஒருவர் பின் ஒருவராக, மணமக்கள் சிரசில் (தலையில்) அட்சதை தூவி வாழ்த்துவதே சாஸ்திர ரீதியாகச் சிறந்தது என்பர் பெரியோர். இதை வீசி எறிவது தவறான விஷயம். 

திருமணக் கூடங்களில் எங்கோ இருந்து கொண்டு, வீசி எறிவதைப் பார்க்கிறோம். அது ஆகாத செயலாகும்.

அட்சதையைப் போல முழுமையாக எல்லா நிகழ்வுகளும், திருமணம் கண்டவர்களின் வாழ்விலும் நடைபெற வேண்டும் என்பதே அட்சதையின் குறியீடு. 

இப்படிப்பட்ட அட்சதையை இறைவன் திருவடிகளில் வைத்து வணங்கிய பின்னர், மணமக்களை ஆசீர்வதித்து அவர்கள் சிரசில் தூவுவதே, அவர்களுக்கு நன்மையான பலன்களைக் கொடுக்கும். 

அதே போன்று, புதிதாகத் தொழில் துவங்கும் போதும், சந்திரன் சக்தி அதிகம் அமைந்த அரிசியும், குருபகவானின் சக்தி அதிகம் அமைந்த மஞ்சளும், மகாலட்சுமியின் பரிபூரண சக்தி கொண்ட நெய்யினால் சேர்த்து, பெரியோர்களால் அட்சதையாகத் தூவப்பட்டு ஆசி வழங்கப்படும் பொழுது, அந்தப் புதிதாகத் தொடங்கப்பட்டத் தொழில் வாழையடி வாழையாக அவர்களுக்கு அதிர்ஷ்டத்துடன் கூடிய நன்மைகளை விளைவிக்கும் என்பது சாஸ்திர ரீதியான உண்மையாகும்.🌹 

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 


🌷 🌷🌷 🌷