சதுரங்க விளையாட்டாய் சில தத்துவங்கள் :

மணக்கால் அய்யம்பேட்டை | 3:26 PM | Best Blogger Tips

 Mongolia Chess Sets bring National History to Life

சதுரங்கம் என்பது வெறும் விளையாட்டு அல்ல, அது மனித வாழ்க்கையின் தத்துவார்த்தப் பிரதிபலிப்பு ஆகும். இதில் முன்னோக்கு சிந்தனை, பொறுமை, மற்றும் சமநிலை ஆகியவை மிக முக்கியமான மூன்று தத்துவக் கோட்பாடுகளாகும். 
அன்றைய பிரெஞ்சு பழமொழி: 'சதுரங்க விளையாட்டின் முடிவில், ராஜா மற்றும்  சிப்பாய் இருவரும் ஒரே பெட்டியில் திரும்பிச் செல்கிறார்கள் ... 
வாழ்க்கையும் சதுரங்கமும்
  • முக்கியத்துவம்: ஒவ்வொரு நகர்வும் (Move) நம் வாழ்வின் முடிவுகளைப் போன்றது; ஒருமுறை செய்த தவறு மீளப் பெற முடியாது.
  • அரசும் சிப்பாயும்: ராஜாவும் எளிய சிப்பாயும் ஆட்டம் முடிந்தபின் ஒரே பெட்டிக்குள் தான் அடங்க வேண்டும்.
  • தியாகம்: பெரிய வெற்றிகளுக்காகச் சில நேரங்களில் சிறிய காய்களை இழக்கத் தயாராக வேண்டும்.

சதுரங்கம் கற்றுத்தரும் வாழ்க்கைப் பாடங்கள்: ஒவ்வொரு நகர்வும் ஒரு தத்துவம்
சதுரங்கம்♟️♟️♟️
 

கருப்பு வெள்ளை கட்டம்..


அதில் ஏகப்பட்ட சட்டம்..
 

ராஜா காலத்து ஆட்டம்..
 

ராஜாவை காப்பதே இதில் ஆட்டம்..


முன்னால் போகும் காலாட்படை..


குறுக்கே பாயும் மந்திரிபடை...


தாவி குதிக்கும் குதிரைப்படை..


ஏறி மிதிக்கும் யானைப்படை..


கட்டுப்பாடு இல்லாத "ஒற்றை" ராணி..

1) வாழும் வரை போராடு.. 
கட்டம் சரியில்லையின்னு சொல்லாதே.

2) பொறுமையாய் காய்களை நகர்த்த வேண்டும்.

3) நாம் எங்கே தவறு செய்வோம் என்று ஒரு கும்பலே காத்திருக்கும்.

4) அதிலும் ராணிக்குத் தான் முழு அதிகாரம். என்னதான் ராஜா ஆட்டத்தின் முக்கிய குறி என்றாலும் அனைவரும் முதலில் கவர நினைப்பது ராணியை தான்.

5) கூட்டமாக இருக்கும் வரை பயம் இல்லை, தனியே வெளியே வந்து விட்டால் எதிரணியின் மொத்த காய்களும் அதை அழிக்கவே முயலும்.

6) விழுந்தவுடன் எழும் குதிரையாய் இருக்கும் வரை தடைகளை தாண்டி போகலாம் எதுவும் நம்மை தடுக்க முடியாது.

7) ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு சமயம் நாம் வெட்டாமல் விட்ட காய் சரியான நேரத்தில் நமது முக்கியமான காயை வெட்டும் போது தான் தெரியும் யாரையும் அலட்சியமாக நினைக்க கூடாது என்று.

8) ராஜா சரியான நேரத்தில் நகராமல் இருந்தாலும் சரி தவறான நேரத்தில் நகர்ந்தாலும் சரி ஆபத்துதான். மண்டை பத்திரம்.

9) நம்ம ராஜ்யத்தில் எப்போதுமே ரணகளம் தான். மான் கராத்தே தெரிந்திருக்க வேண்டும்....
சதுரங்கத்தின் ஆற்றலைப் பிரதிபலிக்கிறது - தத்துவம்
ஆயுதத்தின் பலம்
புத்தியின் கூர்மையோடு
விரல்கள் விளையாடுமெனில்
சதுரங்க வீணையில்
எந்த ஸ்வரமும்
சாத்தியமே.. 

 

🙏🌹நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 


🌷 🌷🌷 🌷 

 

 

 

உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.....

மணக்கால் அய்யம்பேட்டை | 11:31 AM | Best Blogger Tips

 May be an image of crowd, temple and monument

#உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு இந்தத் #தமிழ்_மண்தான், இங்கு மட்டும் நாற்பாதயிரம் கோயில்கள் உள்ளன. அவ்வளவு கோயில்கள் ஏன்? அவசியம் என்ன? 
 
சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.
 
*சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும்தான்.*
அப்போது வட அமெரிக்கா தென் அமெரிக்கா கிடையாது. இலண்டன் ஒரு சிறு மீன்பிடிக்கும் கிராமமாக 1066 -இல் நிறுவப்பட்டது.
 
*#தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால்_போர்த்ப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது. இந்தத் தங்கப் போர்வை 1311 - ஆம் வருடம் மாலிக்கபூரின் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு, 500 யானைகள் மேல் எடுத்துச் செல்லப்பட்டது.*
 
இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது?
 
*எல்லாம் கடல் வாணிபம் ஏற்றுமதிதான். ஜப்பான் நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. ஆனால் ஏற்றுமதி வியாபாரம் மூலம் அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது. அதே போல் சோழ நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. இரும்பு சாமான்கள், துணிகள், கைவினைப் பொருட்கள், தானிய ஏற்றுமதி மூலம் தங்கம் கிடைத்தது.*
 
உலகிலேயே ஒரே சீராக 80 இலட்சம் ஏக்கர் விளை நிலம் காவிரிப் படுகைப் பகுதியில்தான் அமைந்துள்ளது. எங்கும் மூன்று போகச் சாகுபடிக்குக் காவிரியில் நீர் வந்து கொண்டிருந்தது.
 
*வியாபாரத்திலும், ஏற்றுமதியிலும், விவசாயத்திலும் கிடைத்த பணத்தை - தங்கத்தை சோழர்கள் படை பலத்தைப் பெருக்கிக் கொள்ள பயன்படுத்தினர்.*
 
மலேயா காடுகளிலிருந்தும், மைசூர் காடுகளிலிருந்தும் யானைகள் பிடித்து வரப்பட்டன.
 
பர்மாவிலிருந்து தங்கம் கொடுத்து குதிரைகள் வாங்கப்பட்டன. 
 
*ஏன் கோவிலை கட்டினார்கள்?*
 
*தமிழர்கள் ஏன், கோயில் கோயில் என்று அதைச் சுற்றியே வருகிறோம் ?
 
தமிழகத்தை ஆண்ட பெரும்பாலான அரசர்கள் அவரவர் ஆண்ட பொழுது ஏன் மருத்துவமனை கட்டவில்லை, கல்விச்சாலை அமைக்கவில்லை ஆனால் கோயில்களை கட்டினார்கள்.
 
*கோயில்கள் எப்பொழுதெல்லாம் கட்டப்பட்டன ?
மக்களுக்கு பிரித்து கொடுக்காமல், அரசன், அரசின் நிலங்களை, ஏன் கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தான் ?
 
*உலகின் குருவாக தமிழகம் ஆனது எப்படி ?
எந்த ஒரு அரசும் பட்ஜட் போடும் பொழுது வரி வசூல் என்ன, அதில் அரசு நடத்த அதிகாரிகளுக்கு ஆகும் செலவு, மக்கள் நல திட்டங்களுக்கு ஆகும் செலவு ன்னு வரவு செலவை வைத்து தன்னிறைவு திட்டத்தை அடையத்தான் நிதிநிலை அறிக்கை போடுவார்கள்.
 
இதையேதான் தமிழக கோயில்கள் செய்தன.
*கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் ன்னு அதைத்தான் சொல்லி வெச்சாங்க.*
 
மன்னன் கோயில் கட்ட ஆரம்பித்தவுடன், கட்டுமான பணிக்கு அந்த ஊரை சுற்றி உள்ள கட்டுமான கலைஞர்கள், சிற்ப கலைஞர்கள், கல் தச்சர்கள், கட்டுமான பொருட்களான செங்கல், சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்தி செய்வோர், அதை ஓரிடத்தில் இருந்து கோயில் கட்டும் இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து, வர்ணம் அடிக்க, ஓவிய கலைஞர்கள், இப்படி அனைவருக்கும் வேலை வாய்ப்பு, அதுவும் அரசரால் கொடுக்கப்படும், அரசு வேலை.
 
*கோவிலுக்கு மானியமாக கொடுக்கப்படும் நிலங்கள், குத்தகை மூலமாக விவசாயிகளுக்கு விடப்பட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தி, அதற்கு ஒரு சமூகம், பாண்ட மாற்று முறையில், தன்னிறைவு பெற்ற பொருளாதாரம்.*
கோவிலுக்கு கொடுக்கப்பட்ட பசுமாடுகள், அதை கவனித்தல், அதற்கு ஒரு சமூகம், இதனால் கோயிலுக்கும் அந்த கிராமத்தாருக்கும் பால் சார்ந்த பொருட்கள்.
 
*நெய்வேத்தியம் சமைக்க சமையல் கலைஞர்கள். அதற்கு ஒரு சமூகம்.*
 
சமையல் செய்ய பாத்திரங்கள் செய்ய மண்பானை செய்வோர் மற்றும் உலோக பாத்திரம் செய்வோர், அதற்கு ஒரு சமூகம். அவர்களுக்கு தொடர்ந்து வேலை.
*நந்தவனம் மூலம் தெய்வத்திற்கு பூ மாலை மற்றும் அலங்கார சேவை செய்ய நந்தவனம் காப்போருக்கு வேலை. அதற்கு ஒரு சமூகம். அவருக்கு தொடர்ந்து வேலை இருக்க, அதற்கேற்ப கோவில் உற்சவங்கள்.*
 
மங்கள இசை இசைக்கும் கலைஞர்கள் ஓர் சமூகம். கூத்து கலைஞர்கள் என, 
 
அவர்களுக்கும் வருட மானியம் மற்றும் வேலை. மாலை வேளைகளில் ஆன்மீக கச்சேரி என்று மனதிற்கு இனிய பொழுது போக்கு நிகழ்ச்சிகள்.
*தெய்வத்தின் வஸ்திரங்கள் நெய்ய ஒரு சமூகம்.*
அந்த வஸ்திரங்களை துவைக்க ஓரு சமூகம், அவருக்கும் தொடர்ந்து கோவில் மானியம் மூலம் வேலை.
  
*கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்ள ஒரு தேவை, அதை செய்ய ஒரு சமூகம். அவருக்கும் கோயில் மூலம் மானியம், வருட வருமானம்.*
இவை அனைத்தையும் நிர்வாகம் செய்ய, கணக்கு பார்க்க, ஒரு சமூகம்.
 
*இவர்கள் அனைவரும் அவரவர் வேலையை பார்க்க, அதன் மூலம் வாழ்வாதாரம் பெறவும், கோயில் ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை. ஆன்மீகம் ஒட்டி வாழ்வாதாரம்.*
 
பெரு வெள்ளம் வந்து ஊரே மூழ்கி போனாலும், கோயிலின் கோபுரத்தில், கலசம் மூலம், செறிந்த விஞ்ஞான அறிவுடன், அதனுள் 12 வருடம் வரை கெடாத அந்த கிராமத்தில் மண்ணுக்கேற்ப விளையும் விளை பொருட்களின் விதை பொருட்கள்.
 
*12 வருடத்திற்கு ஒரு முறை அதை மாற்றி அமைத்து, மராமத்து பணிகள் மேற்கொள்ள மேற் சொன்ன அனைவருக்கும் ஒரு கூட்டு வேலை வாய்ப்பு.*
 
இப்படி அவர் அவருக்கு தெரிந்த பணி, அதை சார்ந்த சமூகம், ஒன்றிணைந்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, தன்னிறைவு வாழ்க்கை என வாழ்வதற்கு கட்டமைக்கப்பட்டதே, நம் கோயில்கள்.
 
*ஊருக்கு ஒரு கோயில், அதை சுற்றிலும் அனைத்து சமூகம்,* 
 
அந்த அந்த ஊரை சுற்றி உள்ள இயற்கை வளங்கள் பாதுகாக்கபட்டு, மூலிகை மூலம் வைத்தியம், அதற்க்கென ஒரு சமூகம் என, 
 
ஊரை சுற்றியே, ஓர் தன்னிறைவு வாழ்க்கை.
இப்படி அமைக்கப்பட்டது தான் நம் பொருளாதார கட்டமைப்பு.
 
*மாத சம்பளம் பணமாக, பணத்திற்கு பொருள், அதன் விலை ஏற்ற இறக்கம், பண வீக்கம், இவை எதுவுமே சாராமல் ஓர் தன்னிறைவு வாழ்க்கை.*
தெய்வங்களுக்கு உயிரூட்டி, அந்த தெய்வங்கள் அங்கே வாழ்வதாகவும், அந்த கோயிலின் சொத்துக்கள், அந்த தெய்வங்களின் சொத்துக்கள் என்றும்,
 
உயிருள்ள ஒருவர், எப்படி தினமும் குளிப்பாரோ, உடை உடுத்தி கொள்வாரோ, தினமும் உணவு உண்பாரோ, நம் வாழ்வாதாரத்திற்கு உதவும் ஒருவரை நாம் எப்படி போற்றி கவனிப்போமோ, அப்படி அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, அனைவரின் சார்பாக, பூஜைகளை கவனிக்க ஒரு சமூகம்.*
 
இப்படி ஒரு கோயிலை வைத்து, ஆன்மீகம் மூலமாக ஒரு *தன்னிறைவு பொருளாதாரத்தை உலகிற்கு வாழ்ந்து காட்டியதாலேயே, தமிழகம் உலக குருவாக திகழ்ந்தது.
 
வாழிய பைந்தமிழ் நாடு...
 
நன்றி:-🌹
 

கொடைக்கானல்.....

மணக்கால் அய்யம்பேட்டை | 11:16 AM | Best Blogger Tips

May be an image of cloud, mountain and fog 

அழகிய கொடைக்கானலை கண்டுபிடித்தவர்கள் ஆங்கிலேயர்கள்..
 
1800 களில் கோடை வெப்பத்தை தாங்க முடியாத ஆங்கிலேயர்கள் குளிரான பகுதியை கண்டுபிடிப்பதற்காக பி.ச. வார்ட் என்ற ஆங்கிலேயரை தமிழ்நாட்டின் தென்பகுதிக்கு அனுப்பி வைத்தனர் அவர் பழனி மலைத் தொடரின் பெயரிடப்படாத ஒரு பகுதியை கண்டறிந்தார்...
 
இதற்கு முன்பே இங்கு பல நூறு ஆண்டுகளாக பளியர் இன மக்கள் வாழ்ந்து வந்தனர் அவர்கள் மலைப்பகுதிகளில் விளையும் கிழங்கு மற்றும் காய்கறிகளை கீழே உள்ள பெரியகுளம் பகுதிக்கு வந்து விற்று விட்டு செல்வார்கள்...
 
அது ஒரு ஒத்தையடி பாதை அந்தப் பாதையின் வழியாக 1821 ஆம் ஆண்டு தனது ஆய்வை தொடங்கினார் வார்ட் பெரிய குளத்தில் இருந்து கும்பக்கரை வழியாக ஏழு கிலோ மீட்டர் தொலைவுக்கு மேலே சென்றவுடன் வெல்லக்கவி என்ற கிராமம் வந்தது அதுதான் ஆங்கிலேயர்கள் கால் பதித்த இன்றைய கொடைக்கானலின் முதல் பகுதி.
 
 
அங்கிருந்து டால்பின் நோஸ் என்கிற ஒரு பகுதி உள்ளது அந்த வழியாக அவர் சென்ற இடம்தான் இன்றைய கொடைக்கானல் அந்தக் குளிர் அவருக்கு மிகவும் பிடித்துப் போக அங்கேயே தங்கி விட்டார் அவர் தங்கியது மட்டுமல்லாமல் இந்த சூழல் மிகவும் அழகாக இருக்கிறது என்று பிற ஆங்கிலேயர்களையும் அந்த பகுதிக்கு அழைத்தார்... 
 
அவர் 1825 ஆம் ஆண்டுகளில் கட்டிய முதல் கட்டிடம் இன்றும் கொடைக்கானலில் உள்ளது இந்த செய்தி பல ஆங்கிலேயர்களுக்கு தெரியவே அவர்களும் அங்கு வந்து தங்கத் தொடங்கினர் கொடைக்கானல் மலையின் பூர்வ குடிகளை தவிர்த்து சமவெளி பகுதியில் இருந்து மக்கள் முதல் முதலாக குடியேறிய ஆண்டு 1845 மே 26 இந்த ஆண்டுடன் கொடைக்கானல் உருவாகி 179 ஆண்டுகள் ஆகிறது... 
 
அப்போதைய மதுரை ஆட்சியர் லேவிங்ஸ் தன் நண்பர் ஜான் டேவ் உடன் இணைந்து உருவாக்கிய ஏரியே இன்றைய கொடைக்கானலின் நட்சத்திர ஏரி... 
 
1860 ஆம் ஆண்டு தான் முதன் முதலில் கொடைக்கானல் என்ற பெயர் அரசிதழில் இடம்பெற்றது... 
 
கொடைக்கானலை மூன்று வகையாகப் பிரிப்பார்கள் கீழ்மலை நடுமலை மேல்மலை 
 
கீழ்மலை என்பது இன்றைய பெருமாள் மலை என்பது தரையில் இருந்து சுமார் 3000 அடி உயரம் கொண்டது.
 
 நடுமலை என்பது இன்றைய கொடைக்கானல் கொடைக்கானல் சுமார் 4500 முதல் 5000 அடி உயரம் கொண்டது 
 
மேல்மலை என்பது பூம்பாறை மன்னவனூரை அடுத்த கிளாவரை என்கிற பகுதி கிளாவரையை தாண்டியவுடன் மூனார் பகுதி வந்துவிடும்
 
கிளாவரை தரையில் இருந்து சுமார் 6500 அடி உயரம் கொண்டது இது மிகவும் குளிர்ச்சியான பகுதி...
 
கொடைக்கானல் சுற்றுலா வருபவர்கள் பெரும்பாலானோர் யாரும் மேல் மலைக்கு செல்வதில்லை
 

பிரதமர் மோடி வருடத்தில் 300 நாட்களும்....

மணக்கால் அய்யம்பேட்டை | 10:38 AM | Best Blogger Tips

 No photo description available.

பிரதமர் மோடி வருடத்தில் 300 நாட்களும் இந்த உணவை தான் சாப்பிடுகிறார்.., என்ன தெரியுமா?
 
பிரதமர் நரேந்திர மோடி, வருடத்தின் 365 நாட்களில் 300 நாட்களுக்கு சிறப்புவாய்ந்த மக்கானாவை சாப்பிடுவாராம்.
 
பலரும் மக்கானாவை உணவில் சேர்த்துக் கொள்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
மக்கானா என கூறப்படும் தாமரை விதையை பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
வருடத்தில் 300 நாட்கள் மக்கானா தனது உணவில் நிச்சயமாக இருக்கும் என்று மோடி கூறியிருக்கிறார். 
 
மேலும், அவற்றை பெரிய அளவில் பயிரிட வேண்டும் என்று வலியுறுத்திய மோடி, இது விவசாயிகளுக்கு லாபகரமானதாக இருக்கும் என்றும் கூறினார்.
 
இப்போது பல நகரங்களில் மக்கானா தினசரி காலை உணவாக மாறிவிட்டது என்று கூறிய அவர், இந்த ஆண்டு பட்ஜெட்டில் மக்கானா வாரியம் அமைப்பது பற்றி குறிப்பிடப்பட்டதையும் நினைவுப்படுத்தினார்.
 
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மக்கானாவில் 90 சதவீதம் பீகாரில் இருந்து வருகிறது. இது முக்கியமாக தர்பங்கா, மதுபானி மற்றும் பூர்னியாவில் பயிரிடப்படுகிறது.
மேலும், மக்கானா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
 
இதன் நன்மைகள்;
 
மக்கானா குறைவான கலோரிகளையே கொண்டுள்ளது. மேலும், இது புரோட்டீன் மற்றும் நார்ச்சத்தைக் கொண்டுள்ளது. மேலும் பசியைக் கட்டுப்படுத்த உதவுவதால், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. 
 
மக்கானாவில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கலை போக்க உதவுகிறது.
 
மேலும், இதில் சோடியம் குறைவாக உள்ளது, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளன. எனவே, இதை சாப்பிடுவதால் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க முடியும்.
மக்கானாவில் ஆக்ஸிஜனேற்றிகள், 
 
ஃபிளாவனாய்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இவை பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்கின்றன.
இதில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை எலும்புகள் மற்றும் பற்களை வலிமையாக்குகிறது. மேலும், இரும்புச்சத்து இரத்த சோகையைத் தடுக்கிறது.
 
மக்கானாவை சாப்பிடுவதை வழக்கமாக வைகொண்டால் சருமம் நன்கு மின்னும்.மேலும், முகப்பரு மற்றும் முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கும்.
 
மக்கானா உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுவதால் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது
 

Copy from FB 

சரோஜாபாட்டி கைவைத்தியம்

சொந்த தொழில் செய்து பணம் ஈட்டுவது முற்றிலும்............!

மணக்கால் அய்யம்பேட்டை | 10:27 AM | Best Blogger Tips

 Free Aari work training : தினமும் ரூ.5ஆயிரம் சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்.!  மகளிர் சுய உதவிக்குழுவிற்கு இலவச ஆரி ஒர்க் பயிற்சி | Notification for free  Ari work training for ...

♦ கடந்த 10 வருடங்களில் சொந்த தொழில் செய்து பணம் ஈட்டுவது முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது!
 
♦ *முன்பெல்லாம் 20,000 ரூபாய் முதலீடு செய்தால் கூட ஓரளவு தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி முன்னேற முடியும்!*
 
♦ பல ஏழ்மை நிலையில் இருந்து முன்னேறிய தொழில் அதிபர்கள் உருவான காலகட்டம் அது!
 
♦ *கடன் கொடுத்தால் கூட திரும்பி வரும் என்று நம்பிக்கை இருந்த காலம் அது!*
 
♦ ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இந்த நிலை மாறிவிட்டது!
 
♦ *ஒன்று பெரிய அளவில் முதலீடு போட்டு குறைந்த விலையில் விற்க வேண்டும்!*
 
♦ இல்லையெனில் நன்கு கடைகளை அலங்காரம் செய்து லாபத்தை பார்க்க வேண்டும்!
 உங்களுக்கு செயலற்ற வருமானம் தரும் முதலீடு | சுக்குக்கு ஒரு அறிமுகம்
♦ *அதைவிட கொடுமை உழைப்பில் பெரும்பகுதியை வாடகை தின்று விடுகிறது!*
 
♦ கடன் கொடுத்தாலும் திரும்ப வரும் என்று உத்தரவாதம் இல்லை!
 
♦ *லட்ச ரூபாய் முதலீட்டில் செய்து லாபம் பார்த்த தொழிலுக்கு இன்று பத்து லட்சமாவது முதலீடு செய்தால் தான் நஷ்டமின்றி பிழைப்பு ஓடும் என்ற நிலை வந்து விட்டது!*
 
♦ அதைவிட கொடுமை புதிய முயற்சிகளில் யாரும் இறங்குவதே இல்லை!
 
♦ *ஒரு ஊரில் ஒருவர் ஒரு தொழிலை ஆரம்பித்தால் அந்த முதலீட்டிற்கு நுகர்வு அதாவது விற்பனை கணிசமான அளவு வருகிறது என்று தெரிந்து விட்டால் போதும் வசவசவென அதே பகுதியில் அதே தொழிலை பலரும் ஆரம்பித்து போட்டி போட்டு லாபக்குறைவில் விற்று குறிப்பிட்ட காலத்தில் கூண்டோடு காணாமல் போய்விடுகின்றனர்! முதன்முதலில் அந்த தொழிலை செய்தவரும் சேர்த்து காணாமல் போகிறார்!*
 
♦ அதைவிட பிரமாதம் உழைக்கும் தொழிலாளர்களின் மனப்போக்கு!
 
♦ *10 வருடங்களுக்கு முன்பு வேலைக்கு வரும் தொழிலாளர்களிடம் இருந்த உழைக்கும் தன்மை இப்போது இல்லை! அவர்கள் தொழிலைக் கற்றுக் கொண்டு எப்படியும் முதலாளி ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் உழைப்பார்கள்!*
 
♦ இப்போது அப்படி இல்லை, இந்த கூலிக்கு இவ்வளவு உழைத்தால் போதும் என்று முதலாளிக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்ற கண்ணோட்டத்தில் செய்கின்றனர்!
 
♦ *விளைவு தொழில் சுத்தமும் இல்லை, இவர்களும் முதலாளிகள் ஆவதில்லை, முதலாளியும் உருப்படுவதில்லை!*
 
♦ வேலை செய்வதிலும் ஈடுபாடு இல்லாமல், ரிஸ்க் எடுத்து முதலீடு போட்டு தொழில் செய்யலாம் என்ற எண்ணமும் இல்லாமல் குழப்பங்கள் நிறைந்த இளைஞர்கள் கூட்டம் பெருகியுள்ளது!
 
♦ *சரியான வழிகாட்டுதல் இல்லை, சுயதொழில் தன்முனைப்பு இல்லை, கிடைக்கும் வேலையில் ஒட்டிக்கொண்டு அதையே திட்டிக்கொண்டே செய்கின்ற சமுதாயம் உருவாகிவிட்டது!*
 
♦ கடந்த 10 வருடங்களில் பிரம்மாண்டமான பல ஹோட்டல்கள், விடுதிகள், ஷாப்பிங் மால்கள், நகைக்கடைகள் என்று நேர்மையற்ற பணத்தில் எழும்பி நிற்கும் சாம்ராஜ்யங்கள் திகைக்க வைக்கின்றன!
 
♦ *மிகப்பெரிய தொழில் முதலீடு, திறமை, ஒழுக்கம் இந்த மூன்றும் இல்லாமல் ஒரு தொழிலதிபர் உருவாவது இனி சாத்தியம் இல்லை!*
 
♦ நேர்மையற்ற பணம் விதவிதமான வழிகளில் வேரூன்றி வியாபார சந்தைகளை வளைத்து விட்டது!
 
♦ *அரசியல், அதிகார தொடர்பு, பணம் இல்லாமல் எளிய குடும்பத்தில் இருந்து ஒரு புதிய தொழில் முனைவோர் தொழிலதிபர் ஆக இனி வாய்ப்பில்லை என்ற அவநம்பிக்கை தான் மிஞ்சுகிறது!*
 
♦ இனி வரும் காலங்களில் பலமுள்ளது வாழும், பலமற்றது வீழும், அது எந்த தொழில் ஆனாலும் சரி!!!
 
♦ *எல்லாம் சில காலமே நிற்கும் , காலம் மாறுதலுக்குரியது என்பதை சமுக , பொருளாதாரம், பொதுவாழ்க்கை மற்றும் வாழ்வியலில் நடக்கும் நிகழ்வுகள் இனி வரும் காலங்களில் , இன்றைய , நாளைய சமுதாயம் உணரக்கூடியதாக அமையும்.*
 
♦ ஒவ்வொரு நடுத்தர வர்க்கத்தினரின் குரலாக
மேலே உள்ள எழுத்துகள்
பேசும் !!!
 
♦ *ஒலியாக இல்லை மெளனமாகவே...*
 
♦ சற்றே சிந்திப்போம்...
 
சந்ததிகளை பற்றி சற்றே யோசிப்போம்.
🙏🙏🙏🙏

copy & from FB 

S.k. Babu

 May be an image of one or more people and beard

NEET - MEDICAL SEAT ......எவ்வளவு கோடி தந்தாலும் இப்போது முடியாது..!

மணக்கால் அய்யம்பேட்டை | 9:59 AM | Best Blogger Tips

 What is NEET? Full-Form, Syllabus and Eligibility 

பலருக்கு நீட் பற்றி தெரியவில்லை எனக்கு கூட மூன்று நான்கு ஆண்டுகள் முன்பு வெளியே சொன்னதை வைத்து கொண்டு தெரிந்த விசயம் தான் உண்மை என்று நம்பி இருந்தேன்.
சுருக்கமாக சொல்கிறேன். 
 
ஒரு காலத்தில் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சீட் கிடைக்கும். 50 சதவீதம் கல்லூரி கோட்டா நேரடியாக கல்லூரிகள் சீட்டை நிரப்பலாம். இதை சுருக்கமாக இவ்வளவு புரிந்தால் போதும். 
 
இப்போது நீங்கள் நீட் பரிட்சை எழுத வேண்டும். அதில் வினா தாள் லீக் ஆகுறது அதற்கு நடவடிக்கைகள் தேவை ஆனால் நீட் எழுதி அதில் நீங்கள் எடுத்த மதிப்பெண் இந்திய அளவில் என்ன ரேங்க் தமிழக அளவில் என்ன ரேங்க் என வந்துவிடும். 
 
இதை இரண்டு வகையான கவுன்சிலிங் வழியாக நாம் இணைய முடியும்.
 
அதாவது பிரைவேட் மற்றும் டீம்ட் யுனிவர்சிட்டி மற்றும் இந்தியா முழுவதும் உள்ள அரசு கல்லூரிகளில் குறிப்பிட்ட சதவீதம் இடம் இது எல்லாம் சென்ட்ரல் கவர்மெண்ட் கவுன்சிலிங் ல வரும் அதில் எந்தெந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் தேவை என நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும். அது குறிபிட்ட தேதியில் லாக் செய்யபட்டு ரிசல்ட் வரும். ஒருவேளை நீங்கள் அதில் தேர்தெடுக்கபட்டால் உடனடியாக அரசு கல்லூரி என்றால் அதற்கு கட்டணம் அரசின் மெடிக்கல் கவுன்சிலுக்கு ஆன்லைன் பணம் போட்டு ஆடரை டவுன்லோட் செய்து சம்பந்தப்பட்ட கல்லூரி சென்று ஆவனங்களை சமர்பித்து ஒப்புதல் பெற வேண்டும். அந்த கல்லூரியும் அதை உறுதி செய்ய வேண்டும்.
 
மீதம் வராத சேராத இடங்களுக்கு மறுபடியும் இரண்டு மூன்று சுற்றுகள் நடக்கும்.
அதே போல் ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநில மெடிக்கல் கவுன்சில் அரசு மற்றும் அந்த மாநிலத்தில் உள்ள தனியார் கல்லூரிகளுக்கு கவுன்சிலிங் துவங்கும்.
 
ஒரு மாணவர் இரண்டிலும் பங்கேற்க முடியும்.
வைப்பு தொகை ஆயிரம் ரூபாய். ஒருவேளை நீங்கள் தனியார் கல்லூரியில் என்றால் இரண்டு லட்சம் அரசு கணக்கில் செலுத்த வேண்டும். மாநிலத்தின் கவுன்சிலிங் ல ஆயிரமும் தனியார் கல்லூரியில் அப்ளை செய்தால் ஒரு லட்சம் பினை தொகை செலுத்த வேண்டும் 
 
எல்லா கவுன்சிலிங் நடைமுறையும் ஆன்லைனில் மட்டுமே நடக்கும். நேரடியாக தொலைபேசி வழியாக எந்த ஒரு செயல்பாடும் இல்லை.
உதாரணமாக ஒரு மெயில் ஐடி தவறாக பதிவு செய்தால் கூட மெடிக்கல் கவுன்சிலுக்கு மெயில் வழியாக மட்டுமே சரி செய்ய முடியும்.
இந்த மாநில அரசு கவுன்சிலிங் ல அரசு கல்லூரி இடம் கிடைத்தால் மெட்ராஸ் மெடிக்கல் கவுன்சில் என்ற வங்கி கணக்கில் 13500 செலுத்தி அந்த சான்றிதழ் டவுன்லோட் செய்து அந்த கல்லுரி சென்று மற்ற சான்றிதழ் தந்து உறுதி செய்ய வேண்டும்.
 
ஒருவேளை நீங்கள் தனியார் கல்லூரியில் இரண்டு வகையான சீட் உள்ளது மதிப்பெண் அடிப்படையில் கவர்மெண்ட் கோட்டா மேனேஜ்மென்ட் கோட்டா என்று இரண்டுமே அரசின் கவுன்சிலிங் வழியாக மட்டுமே அப்ளே செய்ய முடியும்.
 May be an image of tree and road
அப்படி நீங்கள் கவர்மெண்ட் கோட்டா ல வந்தால் 3.5 லட்சம் அரசின் கணக்கில் செலுத்தி அதற்கு சான்றிதழ் டவுன்லோட் செய்து அந்த கல்லூரி சென்று இணைய வேண்டும். மேனேஜ்மென்ட் கோட்டா என்றால் 13.5 லட்சம்.இதுவும் காலேஜில் கட்ட கூடாது மெடிக்கல் கவுன்சில் அரசின் கணக்கில் செலுத்த வேண்டும் இதை அரசு அந்த கல்லூரிக்கு நேரடியாக வழங்கும்.
 
இதில் இந்த டியூஷன் பீஸ் போக புத்தகம் உணவு தங்குமிடம் போக்குவரத்து என்று தனியார் மற்றும் அரசு கல்லூரியில் அனைத்தும் நமது வசதிக்கேற்ப செலவுகள் உள்ளது 
 
இதில் கடைசியாக ஒவ்வொரு கல்லூரியிலும் என்ஆர்ஐ கோட்டா என்று கடைசியில் மாப் ஆப் ரவுண்ட் என்று வரும் அதற்கும் குறிப்பிட்ட மதிப்பெண் வெளிநாட்டு குடியுரிமை சான்று என சில விசயங்கள் தேவை.
 
உங்களிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் நிச்சயமாக கவுன்சிலிங் வழியாக மட்டுமே போக முடியும்.
 
அப்படி பணம் இருந்தால் போக முடியும் என்றால் எதற்காக வினாத்தாள் க்கு கோடிக்கணக்கான ஸ்கேம் நடக்கிறது என்று யோசிக்க வேண்டும்.
நீங்கள் நீட்டில் போதுமான மதிப்பெண் எடுத்து சரியான கல்லூரியை தேர்ந்தெடுத்து கவுன்சிலிங் வழியாக சரியான முறையில் பதிவு செய்து குழப்பம் இல்லாமல் அணுகினால் நிச்சயமாக மருத்துவம் படிக்க முடியும்.
 
எவ்வளவு கோடி தந்தாலும் இப்போது முடியாது.
சில புரோக்கர்கள் அதை செய்யலாம் இதை செய்யலாம் என்று உங்களுக்கு ஆசை வார்த்தை கூறி இழுத்தடித்து கடைசியில் வாங்க உக்ரைன் ல படிக்கலாம் சைனால படிக்கலாம் னு மனதை குழப்புவதற்காக பணம் இருந்தால் இங்கேயே வாங்கலாம் என்று சொல்லி ஏமாற்றலாம்.
இதெல்லாம் நான் கூகுளில் படிக்கவில்லை.
எனது மகனுக்கு மருத்துவம் சேர்ப்பதற்கு இரண்டு மூன்று ஆண்டுகள் பட்ட நேரடி அனுபவம்
மேலும் முன்பு 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் இருந்தது இப்போது சிறப்பு தேர்வு நீட் வழியாக மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்து கொள்ளலாம் இன்னும் மருத்துவ ஆசை நிறைவேற வாய்ப்பு.
 
மேலும் மாநில கல்வி சிலபஸ் படிப்பவர்கள் எப்படி போட்டி போட முடியும் என்று கேட்கலாம். அதற்காகவே 7.5. சதவீதம் அரசு பற்றி மாநில கல்வி வழியாக படித்த மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு உள்ளது அந்த 7.5 சதவீதம் அவர்களுக்கு மட்டுமே. அது இல்லாமல் வேற இட ஒதுக்கீடுகள் வழியாகவும் அவர்கள் வர முடியும்.
 
இன்னும் நீட் மற்றும் கவுன்சிலிங் பற்றி எந்த சந்தேகம் இருந்தால் கூட கேளுங்கள். யாருடைய உதவியும் இல்லாமல் நான் எனது மகனை மருத்துவ கல்லூரியில் படிக்க வைத்துள்ளேன் எந்த இடைதரகரும் தேவையில்லை ஆரம்பத்தில் நான் நேரடியாக எல்லா காலேஜில் போய் கேட்டு வந்தேன் அவர்கள் தெளிவாக சொல்லிட்டாங்க. நீங்கள் ஆன்லைன் வழியாக கவுன்சிலிங் போங்க அங்கு செலக்ட் ஆகுற வரை நீங்கள் இங்கே வரவே தேவையில்லை செலெக்ட் ஆனால் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் க்கு கட்டணம் செலுத்தி விட்டு அதற்கான அலாட்மண்ட் கடிதத்தை எடுத்துக் கொண்டு இங்கே வாங்க அது வரை யாரையும் நீங்கள் பார்க்க தேவையில்லை என்று சொல்லி அனுப்பிட்டாங்க.
 
பசங்கள கவனமாக படிக்க சொல்லுங்க வேற எதுவும் தேவையில்லை. ஒரு வேளை நீங்கள் தனியார் கல்லூரியில் சேர விரும்பும் பட்சத்தில் நீங்கள் கொஞ்சம் பணம் சேர்த்து வைத்து கொள்ள வேண்டும்.
 
கா பா
Thanks & copy from 
https://www.facebook.com/share/p/19467TNBfe/
 

எப்படித்தான் கழிந்தது ?

மணக்கால் அய்யம்பேட்டை | 5:05 PM | Best Blogger Tips


 எப்படி தான் கழிந்தது காலங்கள் | Poongaatru | பூங்காற்று

எப்படித்தான் கழிந்தது ?
       என் காலங்கள்

 இந்த நீண்ட பயணம், 
 எனக்குத் தெரியவே 
       இல்லை ! 

        என்ன பெற்றேன் ?
        என்ன இழந்தேன் ?
        ஏன் இழந்தேன் ?

எனக்குத் 
      தெரியவே 
      இல்லை ! 

கடந்தது சிறு பிராயம், 
       போயே போனது 
       இளமை.

       முதுமை எப்போது 
       வந்து சேர்ந்தது ?
YouTube
 எனக்குத் 
       தெரியவே
       இல்லை ! 

நேற்று வரை
       மகனாக இருந்தேன்,
       எப்போது மாமனார்
       ஆனேன் ?

 எனக்குத் 
       தெரியவே
       இல்லை


தகப்பனாய் இருந்த 
      நான் எப்போது
      தாத்தாவாகவும்,
      பாட்டனாகவும்
      மாறினேன் ?



 எனக்குத் 
      தெரியவே
      இல்லை ! 

ஒருவர் சொல்கிறார்,
       'அவருக்கு 
       வயசாகிடுச்சு' 

       என்று,

இன்னொருவர் 
       சொல்கிறார், 
       ' அவர் இன்னும் 
        கெத்துதான்'
 
        என்று !

 

 

இதில் எதுதான்
      உண்மை ?

எனக்குத் 
      தெரியவே
      இல்லை ! 

முதலில் பெற்றோர் 
       பேச்சைக் கேட்டேன்,

       அப்புறம் மனைவி 
       பேச்சைக் கேட்டேன்,
காலம் பதில் சொல்லும் - தமிழ் மேற்கோள்கள்
        அப்புறம் பிள்ளைகள்
        பேச்சைக் கேட்டேன்,

        என் பேச்சை நான்
        எப்போதுதான் 
        பேசினேன் ?


 எனக்குத் 
       தெரியவே
       இல்லை ! 

மனைவி சொல்கிறாள்,      
      ' இப்போதாவது 
        புரிந்து
        கொள்ளுங்கள் '

        என்று.

என்ன 
     புரிந்து கொள்வது ?

என்ன 
       புரியாமல் போனது ?

ஏனோ தெரியவில்லை,
எனக்குத் 
       தெரியவே 
       இல்லை! 

நெஞ்சம் சொல்கிறது, 
      ' நான் இன்னும்
        வாலிபன் '

        என்று,

வயதோ சொல்கிறது, 
      ' நீ ஒரு ஏமாளி '
        என்று,

காலம் பேசாது ஆனால் எல்லாவற்றிற்கும் காலம் தான் பதில் சொல்லும்...  abpnadu.com | #MotivationalQuotes #MorningMotivation #quoteoftheday  #Motivation #ABPNADU
இந்தக் 
      குழப்பத்திலேயே
      எப்போது என்
      முட்டிகள் 
      தேய்ந்து
போயின ?

 எனக்குத் 
      தெரியவே 
      இல்லை ! 

 நரைத்துப்போன
      தலைமுடி, 
      தொங்கிப் போன
      கன்னங்கள்,
      மூக்கின் மேல் 
      கண்ணாடி ...

எப்போது
      மாறியது 
      என் முகம் ?

 எனக்குத் 
      தெரியவே
      இல்லை ! 

காலம் மாறியது, 
நானும் மாறினேன்,

மாறிப்போனது 
       என் நண்பர்கள்
       கூட்டமும் !


   காலம் பதில் சொல்லும்., அமைதியாக, ஆனால் உறுதியாக தொடர்ந்து நட., உன் பயணம்  தான் உன் வலிமை. 💪✨, #TamilMotivation #PositiveTamil #SelfGrowth  #ConsistencyIsKey #StayFocused #BelieveYourself #TamilQuotes ...

 

   எத்தனை பேர் 
       விடுபட்டனர் ?

       எத்தனை பேர்    
       மிச்சமிருக்கின்றனர் ?

 எனக்குத் 
     தெரியவே
     இல்லை! 

நேற்று வரை 
      நண்பர்களுடன்
      அரட்டையடித்துக்
      கொண்டிருந்தேன் !

எப்போது 
      'முதியோர்' 
       (Senior Citizen) 
       வரிசையில் 
       வந்து நின்றேன்?

 எனக்குத் 
      தெரியவே
      இல்லை ! 
Vijay Antony Sad Speech
மருமகள், மருமகன், 
      பேரன், பேத்திகள்
      என
      மகிழ்ச்சி 
      பொங்கியது.

ஆனால் 
       இந்த ஏழை
       வாழ்க்கையின் 
       உதடுகள் 
       எப்போது

       புன்னகைத்தன ?

 எனக்குத் 
     தெரியவே 
     இல்லை ! 

மனம் குளிர வாழுங்கள் 
       அன்பு நண்பர்களே ;

அப்புறம்
      வருத்தப்பட்டுச் 
      சொல்லாதீர்
கள்.



       முழு வாழ்க்கையும் 
       எப்போது கடந்து

       போனது ? என்று.

       ' எனக்குத் தெரியவே
         இல்லையே ! ' 
         என்று 🤝💐💚 

 

🙏🌹நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 


🌷🌷🌷 🌷