🤩பெங்களூர் முதல் காரைக்கால் - எஸ் எம் வி டி பெங்களூர்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:56 PM | Best Blogger Tips

 16529 SMVT BENGALURU - KARAIKAL UR EXPRESS

🤩பெங்களூர் முதல் காரைக்கால் வரை சேலம் விருத்தாச்சலம் கடலூர் வழியாக செல்லும் தினசரி முன்பதிவில்லா விரைவு ரயில் 💥
📌 தென்மேற்கு ரயில்வே மண்டலத்தின் சார்பாக தினமும் முன்பதிவு இல்லா விரைவு ரயில் இரண்டு மார்க்கத்திலும் பெங்களூர் முதல் காரைக்கால் வரை இயக்கப்படுகிறது !!
🟦 பல வழித்தடத்தில் இந்த ரயில் தினசரி பயணிகள் அதிகம் பயணிக்கும் COMMUTER ரயிலாகவும் செயல்பட்டு வருகிறது ‼️ குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் அந்த தடத்தை இந்த ரயில் கடக்கிறது 🚂
🚂 வண்டி எண் : 16529//16530 ||
• எஸ் எம் வி டி பெங்களூர் ⟨⟨≈⟩⟩ காரைக்கால் •
" தினசரி முன்பதிவு இல்லா விரைவு வண்டி "
🟥 16529 || பெங்களூர் காரைக்கால் விரைவு ரயில் தினமும் காலை 07:30 மணிக்கு எஸ் எம் வி டி பெங்களூர் நிலையத்திற்கு புறப்பட்டு இரவு 10:35 மணிக்கு காரைக்கால் வருகிறது !!
🟥 16530 || காரைக்கால் பெங்களூர் விரைவு ரயில் தினமும் காலை 04:50 மணிக்கு காரைக்காலில் புறப்பட்டு இரவு 09:50 மணிக்கு எஸ் எம் வி டி பெங்களூர் செல்கிறது !!
✔️ 561 கிமீ தூரம் இந்த எக்ஸ்பிரஸ் பயணம் செய்து காரைக்கால் முதல் பெங்களூர் வரை இயங்கி வருகிறது தினமும் ||
⛔ நிறுத்தங்கள் :- பையப்பனஹள்ளி பெலந்தூர்-ரோடு கார்மேலரம் ஹெல்லாலிகே அனேகல்-ரோடு ஓசூர் கெலமங்கலம் பெரகயநாக-துணை ராயக்கோட்டை மறந்தஹள்ளி பாலக்கோடு தர்மபுரி சிவாடி முத்தம்பட்டி தொப்பூர் கருவள்ளி செம்மாந்தம்பட்டி ஓமலூர் சேலம் சேலம்-மார்க்கெட் சேலம்-டவுன் அயோத்தியாபட்டினம் மின்னாம்பள்ளி வாழப்பாடி-கேட் ஏத்தாப்பூர்-ரோடு பெத்தநாயக்கன்பாளையம் ஆத்தூர் தலைவாசல் மேல்நாரியப்பனூர் சின்னசேலம் சிறுவத்தூர் புக்கிரவாரி கூத்தக்குடி முகாசபாரூர் விருதாச்சலம் சந்திப்பு ஊத்தாங்கல்மங்கலம் நெய்வேலி வடலூர் குறிஞ்சிப்பாடி கடலூர்-துறைமுகம் பரங்கிப்பேட்டை சிதம்பரம் வல்லம்படுக்கை கொள்ளிடம் சீர்காழி வைத்தீஸ்வரன்கோயில் ஆனந்ததாண்டவபுரம் நீடூர் மயிலாடுதுறை பேரளம் நன்னிலம் திருவாரூர் நாகப்பட்டினம் நாகூர் ⟩⟩⟩ காரைக்கால் செல்கிறது 📌
✅ இந்த ரயிலில் 16 முதல் 20 பெட்டிகள் வரை முன்பதிவு இல்லாத பெட்டியாக இருந்து வருகிறது // ஏனென்றால் இது முன்பதிவில்லா எக்ஸ்ப்ரஸ் என்பதால் முழுவதும் UNRESERVED
📍வழித்தடத்தில் ஒரு சில ஊர்களில் மட்டுமே இந்த ரயில் நிற்காமல் செல்லும் !! மற்றபடி அனைத்து ஊர்களிலுமே இந்த ரயில் நின்று செல்லும் ஒரு பாஸ்ட் பாசஞ்சர் ரயில் தான் !!
➡️ 200 கிலோமீட்டர் கடந்த பல ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றப்பட்ட நிலையில் !! 500 கிலோமீட்டர் தூரத்தில் கடந்த இந்த ரயிலும் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றப்பட்டது !! அதனால் தான் இப்போதும் இந்த ரயிலுக்கு எந்த நிறுத்தமும் இடையில் உள்ள ஊர்களில் நீக்கப்படவில்லை ❌
குறைவான அளவிலேயே பயன்படுத்தப்பட்டு வரும் வழித்தடங்கள் இந்த ரயில் மூலம் அதிக பயன்களை பெற்று வருகிறது 👇
‼️ சேலம் முதல் விருதாச்சலம்
‼️ விருதாச்சலம் முதல் கடலூர்
இந்த 2 தடங்களிலுமே மிகவும் குறைவான ரயில்கள் மட்டுமே இயங்கி வருகிறது !!
காரைக்கால் முதல் பெங்களூர் வரை செல்லும் பயணிகளின் எண்ணிக்கை இதில் குறைவு தான் , ஆனால் கடலூர் விருதாச்சலம் சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு இந்த ரயில் மிகவும் பயனுள்ள ஒன்றாக டெல்டா பகுதி மக்களுக்கு இருந்து வருகிறது 🔥
 

தொலைந்து_போன_சந்தோஷங்கள்...

மணக்கால் அய்யம்பேட்டை | 2:49 PM | Best Blogger Tips

 

தொலைந்து_போன_சந்தோஷங்கள்...


*கடைக்கு  வந்து சாமான் வாங்கும் குழந்தைகள் கையில் பொட்டுக்கடலையோ, ஆரஞ்சு முட்டாயோ தரும் கடைக்காரர்கள்!

*அதிகாலையில ‘உப்ப்ப்பேய்ய்ய்’ என்று கூவிக் கொண்டு தெருவில் வரும் உப்பு வண்டிகள்!

*பசுமை மாறாத கீரைகளைக் கூடையில் சுமந்து வந்து சில்லரைக் காசில்லாத பெண்களிடம் ஆழாக்கு அரிசியை வாங்கிக்கொண்டு பண்டமாற்று முறையில் கீரை கொடுத்தவர்கள்!

*அம்மிக்கல்லு கொத்தலியோ? ஆட்டாங்கல்லு கொத்தலியோ? என்றுக் கூவிக் கொண்டு (முந்தானைத் தொட்டிலில்  பால்குடித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளோட) வீதியில் வரும் பெண்கள்!

*மூங்கிலின் உச்சியில் சலங்கை கட்டிக்கொண்டு ஆடும் பொம்மையுடன் தெருவில் வரும் பம்பாய் மிட்டாய்! ஒரு கடிகாரம் வாங்கினால் கொசுறாக ஒரு துண்டு மிட்டாய் கன்னத்தில் ஒட்டப்படும்

* பசித்தால் யார்வீட்டில் வேண்டுமானாலும் சாப்பிடும் கள்ளமில்லாக் குழந்தைகள்!

*எல்லாப் பட்டுப்புடவைக்கும் வெள்ளை ஜாக்கெட்டோடு திருப்தியடைந்த பெண்கள் ( இப்போது ஜன்னல், கதவு, கண்ணாடி ; ஆரி ஒர்க் பைப்பிங்க முத்தெல்லாம் வைத்து தையல் கூலியே10000 ல் இருந்து தான் ஆரம்பம் )

*விசேஷம் என்றால் இரண்டு நாட்கள் முன்னதாகவே வரும் உறவுக்காரர்கள்! (வருகின்ற பெண்கள் தூக்கி சொருகிக் கொண்டு சமைத்த அழகு)

*பண்டிகைக் காலங்களில் உரிமையோட முருக்குப்பிடி, ஜல்லிக் கரண்டி ஓடி வாங்க வரும் வாண்டுகள்!

*வயதானவர்களோ, கைக்குழந்தையோடு வரும் பிச்சைக்கார்ரகளுக்கு வாசலில் உட்கார வைத்து சோறு போட்ட தாய்மார்கள்!

*கல்யாண வீட்டில் பந்தல் போடுவதில் தொடங்கி 500 பேருக்குப் பரிமாறி (சரக்கு அடிக்காமல்) கடைசியாக மண்டபம் காலி செய்யும் வரையில் உடனிருந்து வேலை செய்யும் நண்பர்களும் உறவுகளும்!

*வீடு மாற்ற வேண்டுமானால் வாடகை வண்டி மட்டுமே! சாமான் ஏற்றி இறக்கும் அத்தனை வேலைகளையும  குதூகலமாகச் செய்த நண்பர்கள்!

*புதுப்படம் ரிலீசானால் சைக்கிள் டிக்கட் நிச்சயம் கிடைக்கும் என்பதற்காகவே இரவு முழுவதும் சைக்கிளோட வரிசையில் நின்ற இளைஞர்கள்!

* தெருவுல வரும் தோளில் கம்பளமும், உருமாலையும் கட்டி வரும் வளையல் காரர்களிடம் கை நிறைய கண்ணாடி வளையல்கள் வாங்கிப் போட்டுக் கொண்டு காசு கொடுக்கையில் ‘மலாரத்திற்கு’ குங்குமம் வைத்து தொட்டுக் கும்பிட்ட  பெண்கள்!

* அந்த 3 நாட்களில் உலக்கையை குறுக்கே போட்டு அதற்கு உள்ளே உட்கார்ந்து கொண்டு பிள்ளைகளோட தாயம் விளையாண்ட கன்னியர்!
ஊவா முள் - சிறுகதைகள்
* விடுமுறை நாட்களில் குழந்தைகளெல்லாம் சேர்ந்து ‘மரப்பாச்சி பொம்மைகளுக்குக் கல்யாணம்!’ பண்ணிவெச்சு கூட்டாஞ்சோறு ஆக்கி சாப்பிட்ட விருந்து!

*மோட்டார் போடாமல் கிணற்றில். தண்ணீர் சேந்தி குடத்தில் சுமந்து வந்து அண்டாவில் கொட்டின உடல் உழைப்பு!

*திருவிழாவென்றால் எல்லா ஆண்களும் வட்டமாக கைகோர்த்து நடுவில். பெண்களையும் குழந்தைகளையும் நடக்கவிட்டு பத்திரமாக அழைத்துச் சென்ற பாங்கு!

*திறந்த வெளியில் கோவணம் கட்டிக் கொண்டு குளித்த  கணவனுக்கு முதுகு தேய்த்துவிட்ட மனைவிகள் !

*மதிய வேளைகளில் பக்கத்துவூட்டு அக்காவுக்கு தலையில் பேன் பார்த்தபடி கதை பேசி இறைப்பாறிய சகோதரிகள்!

*பள்ளி விடுமுறை விட்டால் ஒரு வாரம் பத்து நாட்கள் என்று அத்தை மாமா வீடனுல் போய் உரிமையோடு தங்கி விளையாடி கிடைத்ததை உண்டு பாயில் உருண்டு கதைபேசி களித்த நாட்கள்!

*இழவு வீட்டில் பத்து நாட்களுக்கு அடுப்புப் பற்ற வைக்க அனுமதிக்காமல் முறைபோட்டுக்கொண்டு வேளைக்கொரு வீட்டில் சமைத்துக் கொண்டுவந்து வீட்டில் பரிமாறின நட்பும் உறவும்!

இப்படி இன்னும் இன்னும்…!

 

 🙏🌹நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷

உலக மக்களின் ஃபேவரைட் பானமாக காபி ஆனது எப்படி?

மணக்கால் அய்யம்பேட்டை | 2:41 PM | Best Blogger Tips

 உலகின் மிகவும் சுவையான காஃபி வகைகளில் 2ஆவது இடம் பிடித்த தென்னிந்திய  பில்டர் காஃபி! | Indian filter coffee gets 2nd place in world's best coffee  list – do you know which is number 1 - Tamil Nativeplanet

☕ உலக மக்களின் ஃபேவரைட் பானமாக காபி ஆனது எப்படி? – சுவையான வரலாறு


காபி நவீன கால பானமாக கருதபட்டாலும், அதன் வரலாறு தொன்மையானது.

காபி எப்படி தோன்றியது என்பது குறித்து பொதுவாக சொல்லபடும் கதையானது எத்தியோப்பியாவில் துவங்குகிறது. 

கி.பி. 850 வாக்கில், எத்தியோப்பியாவில்  'கால்டி' என்ற ஆடு மேய்க்கும் சிறுவன், தனது ஆடுகள் ஒரு குறிப்பிட்ட செடியின் சிவப்பு நிறப் பழங்களைச் சாப்பிட்ட பிறகு மிகவும் சுறுசுறுப்பாவதைக் கவனித்தான். அவனும் அந்த பழங்களை உண்டபிறகு சுறுசுறுப்பானான்

தொடக்க காலத்தில் எத்தியோப்பியாவின் காடுகளில் காபி செடிகள் தானாகவே வளர்ந்தன. அதன் பழங்கள் பழுத்தவுடன் நல்ல சிவப்பு நிறத்தில், செர்ரி பழங்களைப் போலக் காட்சியளிக்கும்.
History of coffee - NCA - About Coffee
அதன்பின் கால்டி மற்றும் அந்தப் பகுதி மக்கள் இந்தச் சிவப்பு நிறப் பழங்களை மரத்தில் இருந்து நேரடியாகப் பறித்து, அதன் மேல் தோலையும் உள்ளே இருக்கும் இனிப்பான சதைப்பகுதியையும் மென்று சாப்பிட்டனர்.

இந்தப் பழத்தின் சதைப்பகுதியில் இயற்கையாகவே கஃபைன் கலந்திருந்ததால், அதைச் சாப்பிட்ட உடனே அவர்களுக்கு ஒரு புதிய புத்துணர்ச்சியும், உடலாற்றலும் கிடைத்தது. ஆனால், உள்ளே இருந்த கடினமான பச்சை விதைகளை (காபி கொட்டைகளை) அவர்களால் மெல்ல முடியாமல் துப்பிவிட்டனர்.

எத்தியோப்பியாவின் பழங்குடியின மக்களான 'ஒரோமோ'  பிரிவினர், காபி பழங்களை நீண்ட நாட்களுக்குச் சேமித்து வைத்துப் பயன்படுத்த ஒரு தனித்துவமான முறையைக் கண்டறிந்தனர். அவர்கள் பழுத்த காபி பழங்களைச் சேகரித்து, நன்றாக நசுக்கினர். பின்னர், விலங்குகளின் கொழுப்புடன் இந்த நசுக்கிய காபி பழங்களை ஒன்றாகக் கலந்தனர்.இந்தக் கலவையை சிறிய உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொண்டனர். 

விலங்குக் கொழுப்பில் இருந்து உடலுக்குத் தேவையான கலோரிகளும், காபி பழத்தில் இருந்து சோர்வை நீக்கும் கஃபைனும் கிடைத்ததால், இது அவர்களுக்கு ஒரு சிறந்த சத்து உருண்டை போலச் செயல்பட்டது.

அதேபோல் காபி பழங்களை நசுக்கி, தண்ணீரில் போட்டு சில நாட்கள் நொதிக்க வைத்தனர். இதன் மூலம் காபி பழச்சாறு ஒருவித போதையூட்டும் ஒயின் போல மாறியது.

இப்படி காப்பியை வைத்து காமடி செய்துகொண்டிருந்தார்களே ஒழிய நாம் இன்று அறியும் காபி பானமாக எப்போது உருவெடுத்தது என்பது கேள்விக்குரியது. காபி கிபி 850ல் கண்டுபிடிக்கபட்டு, கிபி 1600ம் ஆண்டில் தான் உலகெங்கும் பரவுகிறது. இடைப்பட்ட 800 ஆண்டுகளில் யாராவது தற்செயலாக காபிகொட்டையை  வறுத்து இருக்கலாம். அப்போது வந்த வாசனையில் மதிமயங்கி அதை சுடுதண்ணீரில் போட்டு குடித்து இருக்கலாம்

இது எத்தியோப்பொயாவில் நடந்ததா, ஏமனில் நடந்ததா என தெரியவில்லை. ஆனால் காபி விரைவில் ஏமெனுக்கு செல்கிறது. அங்கிருந்த சூஃபி துறவிகள் இரவு முழுக்க காப்பியை குடித்தபடி, கண்விழித்து பிரார்த்தனைகள் செய்து வந்தார்கள். தூக்கம் வராமல் தவிர்க்கும் புத்துணர்ச்சி பானமாக காபி கருதபட்டது

அடுத்த 800 ஆண்டுகளில் யேமென் நாட்டின் ஏகபோக வர்த்தக பானமாக காப்பி இருந்தது. மெக்காவுக்கு வரும் பயணிகள் காபியை குடிக்கமுடியும், வறுத்த காபிகொட்டைகளை வாங்கிக்கொண்டு தாயகம் போகமுடியும். ஆனால் பச்சை காபி கொட்டைகள், விதைகளை விற்க யேமெனில் தடை இருந்ததால் காபி உலகெங்கும் பரவலாகவில்லை

காபி கொட்டைகளை வாங்கவேண்டுமெனில் யேமெனில் உள்ள மோக்கா (Mocha) துறைமுகத்தில் இருந்து தான் வாங்கவேண்டும். இன்று மோக்கா என்பது ஒரு வகை காப்பியின் பெயராக அறியபட காரணம் இதுதான்

இந்த சூழலில் கிழக்கிற்கும், மேற்கிக்கும் காபி பரவ இரு கடத்தல் சம்பவங்கள் உதவின. ஏமெனில் இருந்து காபிகொட்டைகளை டச்சுகாரர்கள் ரகசியமாக கடத்தி சென்று சாவகத்தீவில் (ஜாவா- இந்தோனேசியா) பயிரிடுகிறார்கள். ஐரோப்பாவில் காபிக்கான வணிகம் முழுக்க அவர்கள் கட்டுபாட்டில் வருகிறது

கி.பி. 1670ல் இந்தியாவின் சிக்மகளூரைச் சேர்ந்த பாபா புதன் மெக்காவுக்கு புனித பயணம் மேற்கொண்டு காபியை சுவைக்கிறார். அதன்பின் யெமென் சென்று மொக்கா துறைமுகக் காவலாளிகளின் கண்களில் மண்ணைத் தூவி, வேகவைக்கப்படாத 7 உயிருள்ள பச்சை காபி கொட்டைகளைத் தனது தாடியிலும் ஆடையிலும் மறைத்துக் கடத்தி வருகிறார்.

அவர் சிக்மகளூரில் உள்ள சந்திரகிரி மலைப்பகுதியில் உள்ள தனது ஆசிரமத்திற்கு வெளியே இந்த ஏழு கொட்டைகளையும் நட்டார். அந்த மலைப்பகுதியின் குளிர்ச்சியான காலநிலையும், நிழலான சூழலும் காபிச் செடிகள் செழித்து வளர ஏதுவாக இருந்தன. 

காலப்போக்கில், உள்ளூர் மக்கள் இந்தச் செடிகளிலிருந்து விதைகளைப் பெற்றுத் தங்கள் வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கத் தொடங்கினர். இந்தியர்களுக்கு வரலாற்றில் முதன்முறையாக காபி கிடைக்கிறது. இதனால், இன்று அந்த மலைத்தொடர் 'பாபா புதன் கிரி' என்று அழைக்கப்படுகிறது.

இப்படியாக காபி உலகெங்கும் பரவி, இன்று உலக மக்களின் ஃபேவரைட் பானமாக ஆனது

பதிவு: நியாண்டர் செல்வன் 

✨ பக்குவம்!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:38 PM | Best Blogger Tips

 ✨ பக்குவம்!

பக்குவம் என்பது சாயப்படுத்தியவர்களை காயப்படுத்த வாய்ப்பிருந்தும்  காயப்படுத்தாமல் கடந்து செல்வதே...!

அனுபவங்களின் தொகுப்பே நம் வாழ்க்கை. ஒவ்வொரு நாளும் நாம் சந்திக்கும் மனிதர்களும், சம்பவங்களும், வெற்றிகளும், தோல்விகளும் நம் மனதையும், சிந்தனையையும், குணத்தையும் மெதுவாக வடிவமைத்துக்கொண்டே இருக்கின்றன. சில அனுபவங்கள் நம்மை உயர்த்துகின்றன. சில அனுபவங்கள் நம்மை உடைக்கின்றன. சில சம்பவங்கள் நம்மை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்கின்றன. சில சம்பவங்கள் கண்ணீரில் மூழ்கடிக்கின்றன. ஆனால், காலம் கடந்து செல்லும்போது, அவற்றைப் பற்றிய நமது பார்வையே மாறிவிடுகிறது. அந்த மாற்றம்தான் பக்குவம்.

பக்குவம் என்பது அனுபவங்களைப் புரிந்துகொள்வது. வாழ்க்கையை ஆழமாகக் கவனிப்பது. எல்லாவற்றையும் நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்பதை ஏற்றுக்கொள்வது. வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலையுடன் இருப்பது. இழப்புகளுக்குள் கூட ஒரு பாடத்தைத் தேடிக் கண்டுபிடிப்பது. இதுவே மன முதிர்ச்சி.

பக்குவமான மனிதர்கள் வாழ்க்கையில் எல்லாம் தங்களுக்குப் பிடித்தபடி நடக்காது என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் இழப்புகளை வெறுப்பதில்லை; அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்கிறார்கள். தங்களை ஏமாற்றியவர்களை வெறுத்துக்கொண்டே வாழ்வதில்லை; அவர்கள் வாழ்க்கை கற்றுத்தந்த ஆசிரியர்களில் ஒருவராகவே நினைத்து முன்னேறிவிடுகிறார்கள். அவர்களுக்கு பழிவாங்குவதைவிட மன அமைதியே முக்கியம்.

அவர்கள் ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்திருக்கிறார்கள். வாழ்க்கை யாருக்காகவும் நின்றுவிடாது. நாம் விழுந்தாலும் அது நகர்ந்துகொண்டே இருக்கும். ஆகவே விழுந்த இடத்திலேயே அமர்ந்து அழுவதற்கு பதிலாக எழுந்து நடக்கத் தொடங்க வேண்டும் என்பதே அவர்களின் வாழ்க்கைத் தத்துவம்.

பக்குவம் என்பது பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை அல்ல; பிரச்சனைகள் இருந்தாலும் வாழ்க்கை அதைவிட பெரியது என்பதை உணர்ந்து முன்னேறுவதற்கான மனநிலையே பக்குவம் 

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷

 

பழனி_கடவுள் #முருகனை_எப்போதும் #கண்காணித்து....கொண்டரங்கி கீரனூர்...!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:35 PM | Best Blogger Tips

 No photo description available.

#பழனி_கடவுள் #முருகனை_எப்போதும் #கண்காணித்து #கொண்டிருக்கும் #ஈசனை_பற்றி_தெரிந்து #கொள்வோமா? 

#இந்திய மலைகளையே வியக்க வைக்கும்,தமிழகத்தில் உள்ள விந்திய மலையை பற்றிய திகைப்பூட்டும் தகவல்..!!

#விந்திய மலையின் அழகை புகைப்படங்களிலோ, அல்லது வீடியோவிலோ பார்த்து பரவசமாகாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

#அது ஒரு சமயத்தின் சின்னம் என்பதைத் தாண்டி, அதன் பிரம்மாண்டத்தையும், அதன் விருட்ச அழகினையும் யாரும் கண்டவுடன் பரவசமடைவார்கள்.

#இதே போல், தமிழ் நாட்டிலும் ஒரு மலை உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? 

#நம்பித்தான் ஆக வேண்டும்! 

#தென் தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் அருகே அமைந்துள்ளது கொண்டரங்கி மலை. 

#சுற்று வட்டாரத்தில் உள்ள 20 கி.மீ தொலைவில் உள்ள ஊர்களில் இருந்து பார்த்தால் கூட இந்த மலை தனித்துவமாக வித்தியாசமாகத் தெரியும்!

இதன் பெயர் #கொண்டலிறங்கி கீரனூர்! 

கொண்டல் என்றால் #மேகம் என்று பொருள்! ஆம்,அது உண்மையான கூற்று தான்! 

#ஏனெனில், வானில் செல்லும் மேகங்கள் அடிக்கடி இந்த மலையின் அழகில் சொக்கிப் போய்த் தொட்டுச் சென்று கொண்டிருக்கின்றன.

#பழனி மலையேறும் போது இம்மலை நன்றாக தெரியும் .

#இமலையில் இருந்து பழனி முருகப் பெருமானையும் தரிசிக்கலாம்.  

#போகருக்கும் கொண்டரங்கி மலைக்கும் தொடர்பு உண்டு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன
.
#இது தனியான மலை. கூம்பு வடிவில், செங்குத்தாக ஓங்கி உயர்ந்து நிற்கும் இந்த மலையை தூரத்தில் இருந்து முழுமையாகப் பார்த்து ரசிக்கலாம். 

#அருகே நெருங்க நெருங்க, அதன் பிரம்மாண்டம், நம்மை அண்ணாந்து பார்க்க வைக்கும். 

3850 மீட்டர் உயர மலை என்றால் சும்மாவா? இந்த மலையின் உச்சி வரை செல்வதற்கு படிக்கட்டுகளும், மலை உச்சியில் உள்ள குகையில் ஒரு #சிவாலயமும் இருக்கிறது என்பது இந்த மலையின் கூடுதல் சிறப்பு!
    
ஓவ்வொரு பௌர்ணமி நாளிலும், நூற்றுக் கணக்கானவர்கள் #மலையேறுகிறார்கள். 

அவர்கள் கீழிருந்து மேலே செல்லச் செல்ல மலையின் நடுப்பகுதி வந்ததும், ஒரு #சிற்றெரும்பைப் போல் காட்சி அளிப்பார்கள். 

அதையும் தாண்டி விட்டால், அது ஒரு #கானலாகத் தான் காட்சி தரும்!

மேலும் இந்த மலையில் ஏறிச் செல்வது மற்ற #மலைகளைப் போல் எளிதானது அல்ல! 

ஓரளவாவது மலை ஏறியவர்களால் மட்டுமே #தாக்குப் பிடித்து ஏற முடியும்! 

சாதாரணமான ஒரு நபர் இந்த மலையின் படிக்கட்டுகளின் வழியே ஏறிச் செல்ல குறைந்தது 4 #மணி நேரமாவது ஆகும்! 

மேலே சென்ற பிறகு மலை ஏறிய அந்த ஆயாசம்(களைப்பு)நீங்கவும் சில மணித் துளிகள் ஆகும்!
    
அதே போல்,இந்தமலையிலிருந்து இறங்கும் போதும், வேகமாக இறங்க முடியாது. மிகக் கவனமாக மெல்ல #மெல்லத் தான் இறங்க வேண்டும். 

ஏனென்றால், இந்த 
மலைக்கு படிக்கட்டுகள் இருக்கின்றனவேயன்றி, 
#கைப்பிடிச் சுவர்கள் ஏதும் கிடையாது..

எனவே, மலை ஏறுவதும், இறங்குவதும் ரிஸ்க்கான 
#சமாச்சாரம் தான்! 

கீழிருந்து உச்சி வரை இந்த மலையின் செங்குத்தான உயரம் 3850 மீ. என்றால், மலைமீது ஏறுவது எவ்வளவு கடினமானது என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ள வேண்டியது தான்! 

#ஆனால், அப்படியும், இந்த மலை மேலே மக்கள் அனுதினமும் ஏறிச் சென்று கொண்டு தான் இருக்கிறார்கள்.

700 ஆண்டுகளுக்கு முன்பாக, 
கி.பி. 13-ஆம் நூற்றாண்டில், சுந்தரபாண்டிய மன்னன் என்பவரால், இந்த மலைக்கு படிக்கட்டுகள் மலையைச் செதுக்கி உருவாக்கப் பட்டுள்ளன. 

மலை உச்சிக்குச் சற்றுக் கீழே மலையைக் குடைந்து குடைவரைக் கோயில் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள்.

இரண்டு மண்டப அறைகளாக உருவாக்கப் பட்ட இந்தக் குடைவரைக் கோயிலில் மல்லிகார்ச்சுன ஈசுவரர் 
மூலவராக இருக்கிறார். 

ஞானப்பழத்திற்காக அம்மையப்பனிடம் கோபித்து கொண்டு பழனி மலைக்கு சென்ற பழனி முருகனை அம்மையப்பனான மல்லிகார்ச்சுன ஈசுவரர் 
இங்கிருந்து தினமும் தனது கடைகண்ணால் பார்த்து 
பாசத்துடன் கவனித்து கொண்டு 
தான் இருக்கின்றார் என்பது எவருக்கும் தெரியாத தேவ ரகசியம்.
https://kkeeranur.com/wp-content/uploads/2021/12/hill-top-view.jpg
பாசம் மிக்க தந்தையான அம்மையப்பனைத் தரிசிக்க வேண்டுமென்றால் கடுமையான இந்த மலையேற்றப் பயணம் செய்தால் மட்டுமே முடியும்!

ஆனால்,கடுமையான இந்த மலையேற்றப் பயணத்தில் யாருக்கும் இது வரை எந்த வித அசம்பாவிதமும் நடந்ததில்லை என்பதுதான் மிக ஆச்சர்யமான விஷயம்!
    
ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில், இந்த மலை உச்சியில் இருந்து தான் ஆங்கிலேயர், சுற்றுப் புறத்தில் உள்ள பகுதிகளை எல்லாம் எளிதாக சர்வே எடுத்திருக்கிறார்கள். 

அதற்கு அடையாளமாக சர்வே செய்வதற்காக நடப்பட்ட கல் இன்றும் அப்படியே இருக்கிறது. 

இங்குள்ள குடைவரையில் உள்ள சிவலிங்கம் அருகே குகை போன்று ஒரு இடம் காணக் கிடைக்கிறது!

அங்கு வற்றாத சுனை ஒன்றும் உள்ளது. இது இந்துக் கோயிலாக இருந்தாலும், இங்க நடைபெற வேண்டிய பூஜைகளுக்கு வேண்டிய ஏற்பாடுகளை, விருப்பாச்சியில் ஜமீன்தாராக இருந்த குட்டலபாட்ஷா என்ற இஸ்லாமியர் தான் முறைப்படுத்தியுள்ளார்.

சித்ரா பெளர்ணமி அன்றோ அல்லது மறுமையாரு பூஜை (அடுத்த நாள்) அன்றோ கொண்டரங்கி கீரனூர் மல்லீஸ்வரர் மலையில் மழை பெய்யும் என்பது காலங்காலமாக
இன்று வரை நடைபெற்று கொண்டிருக்கும் ஒரு அதிசிய நிகழ்வாகவே உள்ளது
May be an image of mountain and text that says "மர்மங்கள் மர்மங்கள்நிறைந்த நிறைந்த கொண்டறங்கி மலை! CA+ + PALANI IBES மன அமைதி வேண்டுவோர் வந்து வழிபடும் தலம்! 3850 அடி உயரம், அரூப வடிவில் சித்தர்கள் தவம்; கொண்டரங்கி கீரனூர் மலை அதிசயங்கள்! பஞ்ச பாண்டவர்கள் தொழுத தலம் இது! LIKEI LIKE IF"
பிரம்மாண்டம், ஆன்மீகம், என பல முகங்கள்  இந்த கொண்டரங்கி கீரனூர் மலைக்கு இருந்தாலும், இன்றும் இந்த மலையை பற்றிய ரகசியங்கள் மலைக்க வைக்கிறது.

இந்த மலை மீது பாண்டவர்கள் தியானம் செய்ததாக நம்பப்படுகிறது . 

இதில் இருந்து கொண்டரங்கி மலை வரலாறு மிகவும் தொன்மையானது என்பதை நம்மால் உணர முடிகிறது. 

லிங்க வடிவில் அமைந்துள்ள 
இந்த மலை அடிவாரத்தில் கெட்டிமல்லீஸ்வரர் என்னும் சிவன் கோவில் உள்ளது. 

இந்த மலையில் எவர் ஒருவர் தவம் செய்தாலும் அவரின் வாழ்க்கை நிலையே மாறும் என்று கூறப்படுகிறது.

பழனி மலையில் வீற்றிருக்கும் முருகனுக்கும், கொண்டரங்கி மலையில் இருக்கும் மல்லிகார்ஜுன சுவாமிக்கு சூட்சும ரீதியில் தொடர்பு உள்ளதாக நம்பப்படுகிறது. 

இந்த மலையில் அர்ஜுனன் தவம் செய்த இடத்தில் இருந்து பஞ்சாட்சர மந்திரங்களை ஜபித்தவாறு நாம் தவம் செய்தால் நமக்கு சிவன் அருள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. 

அதை நம்மால் வினாடிக்கு வினாடி உணரவும் முடியும் என்று கூறுகிறார்கள்.

அங்கு தியானம் செய்தவர்கள். இந்த மலை மீது உள்ள ஒரு பாறை மேல் அமர்ந்து தியானம் செய்தால் நாம் பித்ரு லோகம் என்கிற வேறு ஒரு உலகத்திற்கு சென்று நமது பித்ருகளோடு உரையாடலாம் என்று கூறப்படுகிறது. 
No photo description available.
கொண்டரங்கி கீரனூர், மல்லிகார்ஜுனா சுவாமி திருக்கோவில் பற்றிய விவரங்களை அறிய, கீழ்காணும் முகவரியினை தொடர்பு கொள்ளலாம்,

மின்னஞ்சல் - kondarangihills@gmail.com