ரயில்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரயில்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மன்னார்குடி ⟨⟨≈⟩⟩ 🔀திருவாரூர்⟨⟨≈⟩⟩🔀மன்னார்குடி

மணக்கால் அய்யம்பேட்டை | 3:55 PM | Best Blogger Tips

 Mannargudi to Thiruvarur Long-Distance Trains, Shortest Distance: 37 km -  Railway Enquiry

56002/Mannargudi - Thiruvarur Passenger (UnReserved) - Kulikarai to  Thiruvarur SR/Southern Zone - Railway Enquiry

🚂 திருவாரூரில் இருந்து தினமும் மன்னார்குடி வரை செல்லும் பாசஞ்சர் ரயில் 🚆 காரைக்குடி ரயிலுக்கு இணைப்பு சேவையாக உள்ளது ✅

⬆️ மன்னார்குடி >> திருவாரூர் >> மன்னார்குடி இடையே தினசரி பயணிகள் ரயில் இப்போது இயக்கப்பட்டு வருகிறது ❗ கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இந்த சேவை நேரடியாக மன்னார்குடி முதல் மயிலாடுதுறை வரை சென்று வந்த நிலையில் // பிறகு இந்த ரயிலுக்கு இணைப்பு சேவை வழங்கி இதனை திருவாரூர் உடன் பகுதியாக நிறுத்திவிட்டனர்
 
📌 இப்போதும் காரைக்குடி மயிலாடுதுறை பயணிகள் ரயிலுக்கு இந்த ரயில் இணைப்பு சேவையாக திருவாரூரில் செயல்பட்டு வருகிறது // காலை & மாலை நேரங்களில் ரயில் மாறி கொள்ளும்படி இதற்கான நேரம் மற்றும் கால அட்டவணை வடிவமைக்கப்பட்டு இதன் வழித்தடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது !!
 
🚂 வண்டி எண் || 56001 // 56002
• மன்னார்குடி ⟨⟨≈⟩⟩ திருவாரூர் •
" தினசரி பயணிகள் வண்டி "
 
🔴 56002 || மன்னார்குடி திருவாரூர் பயணிகள் ரயில் தினமும் காலை 08:35 மணிக்கு மன்னார்குடி ரயில் நிலையத்தில் புறப்பட்டு காலை 09:40 மணிக்கு திருவாரூர் சந்திப்பு ரயில் நிலையம் வந்து சேருகிறது 💢

🔀 திருவாரூரில் மயிலாடுதுறை செல்லும் ரயிலில் மாற வேண்டும் 🔗 திருவாரூரில் 👇👇

📌 56835 காரைக்குடி மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில் தினமும் காலை 09:50 மணிக்கு திருவாரூர் சந்திப்பில் புறப்பட்டு காலை 10:45 மணிக்கு மயிலாடுதுறை செல்கிறது ✅

⚡⚡ மறு மார்க்கத்தில் மயிலாடுதுறையில்

📌 56836 மயிலாடுதுறை காரைக்குடி பாசஞ்சர் ரயில் தினமும் மாலை 05:10 மணிக்கு மயிலாடுதுறை சந்திப்பில் புறப்பட்டு மாலை 05:57 மணிக்கு திருவாரூர் வந்து சேருகிறது 
 
🔀 திருவாரூரில் மன்னார்குடி செல்லும் ரயிலில் மாற வேண்டும் 🔗 திருவாரூரில் 👇👇

🔴 56001 || திருவாரூர் மன்னார்குடி பயணிகள் ரயில் தினமும் மாலை 06:15 மணிக்கு திருவாரூர் சந்திப்பில் புறப்பட்டு இரவு 07:20 மணிக்கு மன்னார்குடி சென்று சேருகிறது ✅

🚏 நிறுத்தங்கள் ::- நீடாமங்கலம் சந்திப்பு கொரடாச்சேரி திருமதிக்குனம் குளிக்கரை ...

🚏 திருவாரூர் முதல் மயிலாடுதுறை வரை உள்ள ரயில் நிறுத்தங்கள் ::- நன்னிலம் பூந்தோட்டம் பேரளம் சந்திப்பு .....
 
இந்த ரயிலில் மொத்தமாக 15 UNRESERVED பெட்டிகள் செயல்பாட்டில் உள்ளது // மன்னை எக்ஸ்பிரஸ் பெட்டிகளை பயன்படுத்தி இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது 👨‍🔧 சென்னை எழும்பூரில் பராமரிக்கப்படும் மன்னை மன்னார்குடி சென்னை விரைவு ரயில் பெட்டி திருவாரூர் வரை வந்து செல்கிறது :- இங்கு இந்த ரயிலுக்கு சுத்தம் செய்தல் மற்றும் தண்ணீர் நிரப்பதற்கு போன்று PFTR பணிகள் நடைமேடை ரீதியிலாக நடைபெறும் ......
 
🔗 திருவாரூரில் இறங்கி மற்றொரு ரயில் மாறி கொள்ளும் வகையில் இதற்கான அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது !! காலை 09:20 மணிக்கெல்லாம் காரைக்குடி ரயில் திருவாரூருக்கு வந்துவிடும் ‼️ இருப்பினும் மன்னார்குடி இணைப்புக்காக காலை 09:50 மணிக்கு தான் புறப்படும் வகையில் இதற்கான அட்டவணை திருவாரூரிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது !!
 
📌 மன்னார்குடியில் இருந்து நேரடியாக மயிலாடுதுறை வரை செல்வதற்கு டிக்கெட் எடுத்துக்கொண்டு திருவாரூரில் ரயில் மாறிக்கொண்ட வேண்டும் .....
 
📷 படம் || திருவாரூர் சந்திப்பு ரயில் நிலையம் 
 
• நடைமேடை 2ல் மன்னார்குடி பாசஞ்சர் மாலை 06:15 மணிக்கு புறப்பட தயாராக உள்ளது 🔀
 
• நடைமேடை 4ல் காரைக்குடி பாசஞ்சர் மாலை 06:00 மணிக்கு புறப்பட தயாராக உள்ளது 🔀

 

Thanks & Copy from 

 

மன்னார்குடி ⟨⟨≈⟩⟩ கோயம்புத்தூர் ⟨⟨≈⟩⟩ பொள்ளாச்சி 🚂 செம்மொழி எக்ஸ்பிரஸ்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:11 PM | Best Blogger Tips

 16616/Chemmozhi Express (PT) - Coimbatore to Mannargudi SR/Southern Zone -  Railway Enquiry

🤩 மன்னார்குடியில் இருந்து கோயம்புத்தூர் வரை செல்லும் செம்மொழி எக்ஸ்பிரஸ் தொடர்ந்து பொள்ளாச்சி வரை செல்கிறது 😍 நேரடியாக இதில் நாம் பயணிக்க முடியும் ✅

‼️ மன்னார்குடியில் இருந்து கோயம்புத்தூர் வரை செல்லும் செம்மொழி எக்ஸ்பிரஸ் தொடர்ந்து கோயம்புத்தூர் பொள்ளாச்சி இடையில் பயணிகள் ரயிலாக இயங்கி வருகிறது // இதன் மூலம் நேரடியாக டெல்டா பகுதியில் இருந்து பொள்ளாச்சி வரை இந்த ரயில் மூலமாக பயணிக்க முடியும் ......

🚂 16615 || மன்னார்குடி டூ கோயம்புத்தூர் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் இரவு 08:25 மணிக்கு மன்னார்குடி நிலையத்தில் புறப்பட்டு நீடாமங்கலம் தஞ்சாவூர் பூதலூர் திருச்சிராப்பள்ளி கரூர் ஈரோடு திருப்பூர் கோயம்புத்தூர்-வடக்கு வழியாக மறுநாள் காலை 04:45 மணிக்கு கோயம்புத்தூர் சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்து சேர்கிறது 📌

🔀 தொடர்ந்து இதே ரயில் 35 நிமிடங்களில் கோயம்புத்தூரில் இருந்து பொள்ளாச்சி நோக்கி புறப்பட்டு செல்கிறது ✅ இதன் மூலமாக ஒரே ரயிலில் பயணிக்கலாம் 🈁

🚂 56113 || கோயம்புத்தூர் டு பொள்ளாச்சி பாசஞ்சர் ரயில் தினமும் காலை 05:20 மணிக்கு கோயம்புத்தூர் சந்திப்பில் புறப்பட்டு போத்தனூர் கிணத்துக்கடவு வழியாக காலை 06:35 மணிக்கு பொள்ளாச்சி சந்திப்பு ரயில் நிலையம் சென்று சேருகிறது ✅

📨 இவ்வாறு மன்னார்குடியில் இருந்து கோயம்புத்தூர் வழியாக பொள்ளாச்சி வரை தினமும் பயணிக்க முடியும் // 
 
📩 இதற்கு டிக்கெட் எடுத்துக் கொள்வதற்கு ::-
 
🎟️ UNRESERVED டிக்கெட் மன்னார்குடி ரயில் நிலையத்திலிருந்தே பொள்ளாச்சி வரை நேரடியாக எடுத்துக் கொள்ள முடியும் // வழித்தடத்தில் உள்ள அனைத்து நிலையங்களிலும் நேரடி டிக்கெட் எடுக்கலாம் 
 
🎟️ RESERVATION பொறுத்தவரை Onward journey முன்பதிவு மூலமாக டிக்கெட் கவுண்டரிலேயே நேரடியாக பொள்ளாச்சி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம் மன்னார்குடியில் இருந்து உள்ள அனைத்து ஊர்களிலும் // 
 
📲 அதேபோல் ஆன்லைன் முன்பதிவிற்கு RAILONE செயலியில் நீங்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டிலேயே கீழே தொடர்ந்து பயணிக்க முன்பதிவில்லா டிக்கெட் எடுப்பதற்கான ஆப்ஷன் இருக்கும் // அதை பயன்படுத்தி நீங்கள் ரயிலில் இருந்தபடியே தொடர்ந்து பொள்ளாச்சி செல்வதற்கு கோயம்புத்தூரில் இருந்து முன்பதிவு செய்து கொள்ளலாம் 👍
 
(( நீங்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டில் நீங்கள் பயணிக்கும் அன்றைய தினம் , முன்பதிவுட்டி கேட்டேன் தொட வேண்டும் , அதன் கீழே முன்பதிவில்லா டிக்கெட் தொடர்ந்து எடுப்பதற்கான ஆப்ஷன் காண்பிக்கும் BOOK CONNECTING UTS JOURNEY என்று காண்பிக்கும் // 
 
அதை பயன்படுத்தி ரயிலில் இருந்தபடியே ₹10-ற்கு கோயம்புத்தூர் முதல் பொள்ளாச்சி செல்ல முன்பதிவில்லா டிக்கெட் எடுத்த கொள்ளலாம் !!
 
ஏனென்றால் நீங்கள் இறங்கும் நிலையம்தான் முடிவடையும் நிலையம் அதிலிருந்து நீங்கள் தொடர்ந்து பயணம் மேற்கொள்வதற்கு இதிலேயே Unreserved முன்பதிவு செய்து கொள்ளலாம் ))
 
‼️அல்லது கோயம்புத்தூர் சந்திப்பில் இறங்கி ரயில் நிலையம் சென்றும் பொள்ளாச்சி செல்வதற்கான டிக்கெட் எடுத்து கொள்ளலாம் 35 நிமிடங்கள் வரை நேரம் உள்ளது ✅

💢 எளிதாக மன்னார்குடியில் இருந்து தினமும் பொள்ளாச்சி வரை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் பயணிக்க முடியும் ⏳

📌 காரைக்கால் நாகப்பட்டினம் திருவாரூர் பகுதியில் இருந்து செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலை பிடிக்க காரைக்கால் தஞ்சாவூர் பாசஞ்சர் ரயில் நீடாமங்கலம் சந்திப்பு ரயில் நிலையத்தில் இணைப்பு சேவையாக உள்ளது 
 
📌 மயிலாடுதுறை கும்பகோணம் பாபநாசம் பகுதியில் இருந்து செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் பிடிக்கும் மயிலாடுதுறை தஞ்சாவூர் பாசஞ்சர் ரயில் தஞ்சாவூரில் இணைப்பு சேவையாக செயல்பட்டு வருகிறது 
 
இவற்றை பயன்படுத்தி ஒட்டுமொத்த டெல்டா பகுதி மக்களும் கரூர் ஈரோடு திருப்பூர் கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி ஆகிய பகுதிங்களுக்கு செல்ல இதனை பயன்படுத்தி கொள்ளலாம் 👍 நேரடியாக ஒரு இணைப்பு இதன் மூலம் கிடைக்கப்பெறும் ✅

 

Thanks to © SIBIKUMAR VLOGS