ரத்த பரிசோதனையின் மூலம் வயதை கண்டறியலாம்: ஆய்வாளர்கள் தகவல்

மணக்கால் அய்யம்பேட்டை | 6:49 PM | Best Blogger Tips


உயிரினங்களின் வாழ்வில் எப்போது மரணம் வரும்? என்பதை யாரும் சொல்லிவிட முடியாது.ஆனால் ரத்த பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களிலும் குரோமசோம்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இவற்றின் முனைகளில் "டெலோமர்ஸ்" என்ற மூலப்பொருள் உள்ளது. செல்கள் உடைந்து கொண்டே வருவதால் உடல் உறுப்புகள் வளர்ச்சி பெறுகின்றன.

அவ்வாறு செல்கள் உடைந்து உடல் வளர்ச்சி அடையும் போது, டெலோமர்ஸ்சின் வடிவமும் குறைந்து கொண்டே வருகிறது.

இதன் மூலம் ஒரு உயிரினத்தின் வயதையும், அதன் மூலம் அவற்றின் வாழ்நாளையும் கணிக்க முடியும்.

அந்த அடிப்படையில் செல்ஸ் நாட்டில் உள்ள கவுசின் தீவில் வாழும் 320 பாடும் பறவைகளிடம் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டு கண்டறியப்பட்டது.

அடுத்ததாக இச்சோதனை விலங்குகளிடமும், மனிதர்களிடமும் நடத்தப்பட உள்ளதாக கிழக்கு ஆங்லியா பல்கலைக் கழக பேராசிரியர் டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.Via அறிவியல்

மூளையை பாதிக்கும் சிகரெட் பழக்கம்: ஆய்வாளர்கள் தகவல்

மணக்கால் அய்யம்பேட்டை | 6:48 PM | Best Blogger Tipsசிகரெட் பிடித்தால் மூளை பாதிப்படையும், ஞாபகசக்தி,பகுத்தறிவு திறன் குறைவடையும் என தெரியவந்துள்ளது.
லண்டனை சேர்ந்த கிங்ஸ் கல்லூரியின் நிபுணர்கள் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் மூளை பாதிப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வு 50 வயதுக்கும் மேற்பட்ட 8,800 பேரிடம் நடத்தப்பட்டது. அதில் உயர் ரத்த அழுத்தத்தால் இந்த நோய்கள் ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

இதற்கு சிகரெட் புகைப்பது முக்கிய காரணமாக கருதப்படுகிறது. சிகரெட் பிடிப்பதால் மூளையில் பாதிப்பு ஏற்படுவதுடன் அல்சீமர் என்ற ஞாபக மறதி, பகுத்தறிவு குறைதல், கல்வி அறிவு குறைதல் போன்றவை ஏற்படுகிறது.

இது தவிர உடலில் கொழுப்பு சத்து அதிகரித்தல், உடல் பருமன் அதிகரிப்பு போன்றவையும் ஏற்படுகிறது.

எனவே முடிந்தவரையில் புகைப்பதை நிறுத்தி விட்டு, சத்தான உணவு பண்டங்களை நேரம் தவறாமல் சாப்பிட்டு உடல் நலத்தை பேணி காக்க வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 
Via அறிவியல்
 

சிகரெட்டை நிறுத்திட்டீங்களா? உடனே இத படிங்கப்பா...

மணக்கால் அய்யம்பேட்டை | 6:48 PM | Best Blogger Tips
புகைப்பிடிப்பது உடலுக்கு எவ்வளவு ஆபத்தானது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இருப்பினும் அந்த பழத்தை நிறுத்த முடியாமல் பலர் இருக்கின்றனர். ஒரு பழக்கத்தை பழகுவது எளிதானது. ஆனால் அந்த பழக்கத்தை நிறுத்துவது என்பது கடினமான செயல். அதிலும் தீயப்பழக்கங்களை நிறுத்துவது தான் மிகவும் கஷ்டமான விஷயம். அந்த தீயப்பழக்கங்களில் புகைப்பிடித்தால், உடலுக்கு என்ன கேடு ஏற்படும் என்பது நன்கு தெரியும். அதிலும் அதில் உள்ள நிக்கோட்டின் என்னும் பொருள் உடலில் அதிகமானால், இரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு, நுரையீரல் பாதிப்பப்பட்டு, நாளடைவில் அழிந்துவிடும்.
சிலர் இந்த விஷயம் தெரிந்து, இந்த மாதிரியான கெட்டப்பழக்கத்தை நிறுத்த முயற்சிப்பார்கள். இருப்பினும் நீண்ட நாட்கள் பிடித்த சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் உடலிலேயே தங்கியிருக்கும். இவை நீண்ட நாட்கள் உடலில் இருந்தால், எப்போது வேண்டுமானாலும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, அத்தகைய நிக்கோட்டினை உடலில் இருந்து வெளியேற்ற சில உணவுகள் இருக்கின்றன. அந்த உணவுகளை உண்டால், உடலில் உள்ள நிக்கோட்டின் வெளியேறிவிடும்.

பொதுவாக புகைப்பிடித்தால் உடலில் உள்ள வைட்டமின் சி, ஈ மற்றும் ஏ சத்துக்கள் குறைந்துவிடும். இந்த சத்துக்கள் தான் நுரையீரலை பாதுகாக்கின்றன. ஆகவே இந்த சத்துக்கள் நிறைந்து உணவுகளை உண்டால், உடலில் உள்ள நிக்கோட்டினை வெளியேற்றிவிடலாம். சரி, இப்போது உடலில் இருந்து நிக்கோட்டினை வெளியேற்றும் உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

ப்ராக்கோலி

இந்த காய்கறியில் வைட்டமின் சி மற்றும் பி5 சத்துக்கள் அதிகமாக உள்ளன. அதிலும் புகைப்பிடித்தால், உடலில் உள்ள வைட்டமின் சி சத்தானது குறைந்துவிடும். ஆகவே இந்த காய்கறியை அதிகம் சாப்பிட்டால், வைட்டமின் சி குறைபாட்டை தவிர்ப்பதோடு, புகைப்பிடிப்பதால் சேரும் நிக்கோடின் அளவை குறைத்துவிடும். அதுமட்மின்றி, இவற்றை சாப்பிட்டால், உடல் எடை குறைவதோடு, கர்ப்பிணிகளுக்கு மிகவும் சிறந்தது.ஆரஞ்சு

சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால், உடலில் உள்ள மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, மன அழுத்தமும் குறையும்.


கேரட் ஜூஸ்ஒரு முறை புகைப்பிடித்தால், அதில் உள்ள நிக்கோட்டின் என்னும் பொருள் 3 நாட்களுக்கு உடலில் இருக்கும். அதிலும் தொடர்ந்து புகைப்பிடிப்பவராக இருந்தால், நிக்கோட்டின் சருமத்தை பாதிப்பதோடு, சருமத்தின் பொலிவை கெடுத்துவிடுகிறது. எனவே அவ்வாறு பாதிப்படையும் சருமப் பொலிவை கேரட் ஜூஸ் மீட்டு தரும். ஏனெனில் அதில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் கே சத்துக்கள் உள்ளன. குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் பி, உடலில் தங்கியிருக்கும் நிக்கோட்டினை முற்றிலும் வெளியேற்றிவிடும்.பச்சை இலைக் காய்கறிகள்பச்சை இலைக் காய்கறிகளில் பசலைக் கீரையில் அதிக வைட்டமின்கள் இருப்பதோடு, ஃபோலிக் ஆசிட் சத்தும் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் கர்ப்பிணிகள் உடலில் நிக்கோட்டின் அதிகமான உள்ளது என்று கவலைப்பட்டால், அப்போது பசலைக் கீரையை அதிகம் வாங்கி சாப்பிடுவது நல்லது.


மாதுளைஇந்த சிவப்பு நிற பழமானது இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, இரத்தத்தின் அளவையும் அதிகரிக்கிறது. ஆகவே அதிக அளவு நிக்கோட்டின் உடலில் இருப்பது போல் உணர்ந்தால், அதாவது அதிக அளவில் புகைப்பிடித்துவிட்டால், மாதுளையை சாப்பிடுவது நல்லது. இதனால் நிக்கோட்டின் வெளியேறுவதோடு, இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.கிவிவைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள கிவி பழம், உடலில் உள்ள நிக்கோட்டினை முற்றிலும் வெளியேற்றிவிடும் தன்மையுடையது. எனகே கிவிப் பழத்தை சாப்பிட்டு, நிக்கோட்டினை உடலில் இருந்து வெளியேற்றிவிடுங்கள்.


பெர்ரிபெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, உடலில் உள்ள நிக்கோட்டினை வெளியேற்றுவதோடு, ஆபத்தை ஏற்படுத்தும் டாக்ஸின்களையும், உடலில் இருந்து வெளியேற்றிவிடுகிறது.


காய்ந்த மூலிகைகள்காய்ந்த மூலிகைகளும் உடலில் உள்ள நிக்கோட்டின் அளவை குறைத்துவிடும். அதிலும் ரோஸ்மேரி, பார்ஸ்லே, பிரியாணி இலை, சீரகம், ஏலக்காய், பூண்டு பொடி மற்றும் பல மூலிகைப் பொருட்களில் வைட்டமின் ஏ மற்றும் ஈ அதிகம் உள்ளது.

தண்ணீர்

அதிகமாக புகைப்பிடித்தால், உடலில் வறட்சியை ஏற்படுவதோடு, தீங்கை விளைவிக்கும் நிக்கோட்டின் அளவும் அதிகமாகும். ஆகவே அதிக அளவில் தண்ணீர் குடித்தால், எந்த ஒரு நச்சுப் பொருளையும், உடலில் தங்க விடாமல் தடுக்கலாம்.
Via அறிவியல்

குறைந்த விலை கொண்ட 11 சத்தான உணவுகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 6:47 PM | Best Blogger Tips

1.கொழுப்பு குறைந்த பால்

2.வற்றாளை கிழங்கு

3.முட்டை

4.ஓட்ஸ்
5. Black Tea (Xinhua)
6. Dried Cranberry (Xinhua) / உலர்ந்த குருதிநெல்லி
7.அவரை விதை
8.சலாது
9.மீன்10. மாம்பழம்


11.பூ கோவா/ காலிஃப்ளவர் : 
 
Via அறிவியல்

சுடு தண்ணீரில் சவர் எடுக்க வேண்டாமே !

மணக்கால் அய்யம்பேட்டை | 6:45 PM | Best Blogger Tips


சுடு தண்ணீரில் குளித்தால், உடல் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும் தான். அதிலும் உடலில் தசை வலி இருக்கும் போது சுடு தண்ணீரில் குளித்தால், அந்த வலி பறந்தே போகும். அதிலும் சுடு தண்ணீர் வரும் ஷவரில் குளித்தால், அருமையாக இருக்கும். ஆனால் அந்த சுடு தண்ணீரை தலைக்கு ஊற்றினால், கூந்தல் தான் அதிகம் பாதிக்கப்படும். ஆகவே குளிர்காலத்தில் தண்ணீர் அதிக குளிர்ச்சியுடன் இருக்கிறது என்பதற்காக, சுடு தண்ணீரில் தான் அதிகம் குளிப்போம். ஆனால் உண்மையில் அவ்வாறு குளித்தால், கூந்தல் உதிர்தல் அதிகமாகும் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் எதற்கு சுடு தண்ணீரில் குளிக்கக் கூடாது என்று பல காரணங்களை நிபுணர்கள் கூறுவதைப் படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...
சூடான நீரில் கூந்தலை எதற்கு அலசக் கூடாது?

சூடான நீரில் கூந்தலை அலசினால், கூந்தல் உதிர்தல் அதிகமாகும். ஏனெனில் அப்போது முடித்துளைகள் விரிவடைவதால், வேர்கள் வலுவிழந்து, கூந்தல் காய்ந்தப் பின்னர் பார்த்தால், கூந்தல் கையோடு கொத்தாக வரும்.

அதுமட்டுமின்றி சுடு தண்ணீர் கூந்தலை எரித்துவிடும். அதாவது கூந்தலானது கெராட்டீன் என்னும் புரோட்டீனால் உருவானது. ஆகவே சூடான நீரில் குளிக்கும் போது, இந்த புரோட்டீனானது அதிக அளவில் வெப்பமடைகிறது. பின் அவை எளிதில் கரைந்து விடும். ஆகவே வெப்பம் அதிகமாக உள்ள நீரில் குளிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

சூடான தண்ணீரில் குளிக்கும் போது ஷாம்பு போட்டு குளிப்பது மிகவும் கெட்ட விளைவை அளிக்கும். வேண்டுமெனில் வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். ஏனெனில் சூடான நீருக்கும், வெதுவெதுப்பான நீருக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அதிலும் பொதுவாக ஷாம்பு போட்டு குளித்தாலே, கூந்தல் வலுவிழந்து இருக்கும். அப்போது சூடான நீரில் அலசினால், கூந்தலை நன்கு கொத்தாக எடுக்கலாம்.

குளித்தப் பின்பு கூந்தலுக்கு கண்டிஷனர் போடுவோம். அப்போது நிச்சயம் குளிர்ந்த நீரில் தான் கூந்தலை அலச வேண்டும். இல்லை சூடான நீரில் அலசினால், கூந்தலுக்கு மென்மையைத் தருவதற்கு போடும் கண்டிஷனர் முற்றிலும் போய்விடும்.

ஆகவே சூடான நீர் உடலுக்கு நல்லதாக இருந்தாலும், கூந்தலுக்கு பெரும் பாதிப்பைத் தரும். எனவே தலைக்கு குளிக்க வேண்டுமெனில் அப்போது உடலுக்கு சூடான நீரையும், தலைக்கு குளிர்ந்த நீரையும் பயன்படுத்துவது நல்லது 
Via அறிவியல்