இரத்த பரிசோதனையின் மூலம் தெரிய வரும் நோய்கள்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 5:49 PM | Best Blogger Tips
நிறைய மக்கள் இரத்த பரிசோதனை செய்ய வேண்டுமென்றால் பயப்படுவார்கள். அதனால் உடலில் ஏதாவது பிரச்சனை என்று மருத்துவர்களிடம் செல்லும் போது, மருத்துவர் அதற்கு இரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொன்னால், அதிலிருந்து தப்பிப்பதற்கு பலவாறு முயற்சிப்பார்கள். ஆனால் அவ்வாறு இரத்தப் பரிசோதனை செய்வதை தவிர்த்தால், உடலில் உள்ள பிரச்சனைகளை சரியாக சொல்ல முடியாது.
உண்மையில் உடலில் உள்ள பிரச்சனையை சரியாக கணிப்பதற்கு இரத்தப் பரிசோதனை தான் சிறந்தது. அதனால் தான் மருத்துவர்கள், உடலை பரிசோதித்தப் பின் அதனை உறுதியாக சொல்வதற்கு, இரத்த பரிசோதனை செய்ய சொல்கிறார்கள். மேலும் ஒருசில பெரிய வியாதிகளை இரத்த பரிசோதனையின் மூலமே உறுதியாக சொல்ல முடியும். உதாரணமாக, எய்ட்ஸ் நோய் உடலில் இருந்தால், அதனை இரத்தப் பரிசோதனையின் மூலமே கண்டுபிடிக்க இயலும்.

இப்போது இந்த மாதிரியான இரத்தப் பரிசோதனையினால் எந்த நோய்களை எல்லாம் கண்டுபிடிக்கலாம் என்பதை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேலாவது இரத்த பரிசோதனையை சாதாரணமாக எண்ணாமல், உடனே இரத்த பரிசோதனையை செய்து, உடலில் உள்ள நோயை ஆரம்பத்திலேயே குணமாக்குங்கள்.


இரத்த அணுக்களின் எண்ணிக்கை 

உடலில் உள்ள இரத்த அணுக்களின் அளவு சரியாக இருப்பது மிகவும் அவசியம். சிலருக்கு உடலில் இரத்த அணுக்களின் அளவு குறைவாக இருப்பதால், அனீமியா என்னும் இரத்த சோகை ஏற்படும். இவ்வாறு இரத்த சோகை இருந்தால், உடல் மிகவும் சோர்வுடன், எதையும் புத்துணர்ச்சியுடன் செய்ய முடியாத நிலை ஏற்படும். அப்போது மருத்துவரிடம் சென்றால், அவர் முதலில் இரத்தப் பரிசோதனை செய்யுமாறு கூறுவார். ஆகவே தவறாமல் இரத்த பரிசோதனை செய்து, அதனை தீர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.

Read more at: http://tamil.boldsky.com/health/wellness/2013/reasons-you-need-regular-blood-tests-003068.html#slide143702

தொற்றுகள் 

உடலில் ஏதேனும் தொற்றுகளான கல்லீரல் அழற்சி (மஞ்சள் காமாலை) அல்லது பால்வினை நோய்களான சிபிலிஸ் போன்றவை இருப்பது போல் இருந்தாலும், இரத்த பரிசோதனை செய்ய வேண்டும். ஏனெனில் இத்தகைய தொற்றுகளை வெளியே ஏற்படும் அறிகுறிகளை வைத்து மட்டும் சரியாக கூற முடியாது.


எய்ட்ஸ் 

உயிர் கொல்லி நோயான எய்ட்ஸை, முதலில் இரத்தப் பரிசோதனையின் மூலமே அறிய இயலும். ஏனெனில் எய்ட்ஸின் அறிகுறிகள் வெளிப்படுவதற்கு பல வருடங்கள் ஆகலாம். ஆகவே அவ்வப்போது இரத்தப் பரிசோதனை செய்து கொண்டால், இந்த நோய் இருப்பதை தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் நடக்க முடியும்.


தைராய்டு 

தற்போது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால், இளம் வயதிலேயே தைராய்டு பிரச்சனையானது வந்துவிடுகிறது. எனவே இத்தகைய தைராய்டு பிரச்சனையையும் இரத்தப் பரிசோதனையின் மூலமே அறிய இயலும்.


புற்றுநோய் 

புற்றுநோயை சாதாரண இரத்த பரிசோதனையின் போது கண்டுபிடிக்கலாம். அதிலும் உடலில் இரத்த அணுக்கள் வழக்கத்திற்கு மாறாக குறைவாக இருந்தாலோ அல்லது இரத்த வெள்ளை அணுக்கள் அளவுக்கு அதிகமாக இருந்தாலோ, இது புற்றுநோய் செல்கள் வளர்கிறது என்பதற்கான அறிகுறியாகும்.


கர்ப்பம் 

பெண்கள் கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு சிறுநீர் பரிசோதனை தான் செய்வார்கள். ஆனால் சில சமயங்களில், எச்.சி.ஜி யின் அளவை பரிசோதிப்பதற்கும் இரத்த பரிசோதனையானது அவசியம்.


அதிக கொலஸ்ட்ரால் 

உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாக உள்ளது என்பதையும் இரத்தப் பரிசோதனையை வைத்து தான் தெரிந்து கொள்ள முடியும்.


நீரிழிவு 

நீரிழிவை வெளிப்படையில் ஏற்படும் அறிகுறிகளை வைத்து கண்டறிவது மிகவும் கடினம். ஏனெனில் நீரிழிவு நோய்க்கு ஏற்படும் அறிகுறிகள், சாதாரணமாக இருக்கம். எனவே, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதை தெரிந்து கொள்ள இரத்த பரிசோதனை செய்ய வேண்டும்.



Via அறிவியல்