பயணம் செய்வதற்கு முன் சாப்பிடக் கூடாத 7 உணவுகள்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 6:36 PM | Best Blogger Tips
இன்றைய காலத்தில் லீவு நேரத்தில் வெளியே பிக்னிக் போக நிறைய இடங்கள் உள்ளன. அதிலும் அந்த இடங்கள் அனைத்தும் சற்று தூரமாக இருக்கும். அப்போது நாம் அந்த இடத்திற்கு போக பல திட்டங்களை போடுவோம். அவ்வாறு போடும் போது, நாம் அந்த பிக்னிக் போகும் போது சந்தோஷமாக உடலில் எந்த ஒரு தொந்தரவுமின்றி, செல்வது மிகவும் கடினமானது. ஏனெனில் பிக்னிக் போவதற்கு பயணம் மேற்கொள்வோம். இப்போது தான் பிரச்சனையே ஏற்படுகிறது.
எப்படியெனில் இந்த நேரம் சந்தோஷத்தில் உணவுகளில் கவனமின்றி கண்டதை சாப்பிட்டுவிடுவோம். பின் அந்த உணவுகளால், வயிற்றில் பல பிரச்சனை ஏற்படும். எனவே அந்த மாதிரியான பிரச்சனை வயிற்றில் ஏற்படாமல் இருப்பதற்கு, பயணம் மேற்கொள்வதற்கு முன், எந்த மாதிரியான உணவுகளை தவிர்த்தால், நன்கு ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும், பயணத்தை மேற்கொள்ளலாம். இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!





சீஸ் உணவுகள்

சீஸ் வகையான உணவுகளை சாப்பிட்டால், மூளை மந்த நிலையில் இருக்கும். அதுமட்டுமின்றி, அவை செரிமானமடைவது என்பது கடினமான ஒன்று. இதனால் வாயுத் தொல்லை ஏற்பட்டு, வயிறு உப்புசத்துடன் இருக்கும். எனவே தான் சீஸ் உணவுகள் எதை உண்டாலும், எப்போதும் வயிறு நிறைந்தது போல் கும்மென்று இருக்கும்.



பர்க்கர் மற்றும் வறுத்த உணவுகள்

பெரும்பாலானவர்கள் பயணத்தின் போது சிப்ஸ், பர்க்கர் போன்ற உணவுகளை வாங்கிக் கொண்டு செல்வார்கள். ஆனால் அவற்றை உண்பதால், செரிமான மண்டலத்தின் இயக்கம் குறைவதோடு, வாயுத் தொல்லை அதிகரித்து, உடல் எடையும் அதிகரிக்கும்.




பானங்கள்

பயணத்தின் போது பலர் கார்போனேட்டட் பானங்களான கூல்ட்ரிங்ஸ், சோடா போன்றவற்றை வாங்கிக் கொண்டு செல்வோம். ஆனால் அத்தகைய உணவுப் பொருட்களை சாப்பிட்டால், வாயுத் தொல்லை ஏற்படுவதோடு, வாய் துர்நாற்றமும் ஏற்படும்.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTa0FiuKIBELFR7R4h_TkEVDmfVJxc-qCF7PBpZmn5wMO_5x1F8I_WNBiqOzPXg41Xi6pXyJzaDjCHxHb_rGULrg-XRnCjxuJCMMD6Ndvr-2xSFYtMxWKrCG3PqfjymoZAT7HWCme5d5c/s1600/4.jpg

செயற்கை இனிப்புகள்

சாக்லேட் மற்றும் சூயிங் கம் போன்ற செயற்கை இனிப்புகளால் செய்யப்படும் தின்பண்டங்களை சாப்பிட்டால், பற்கள் தான் பாதிப்படையும். மேலும் சூயிங் கம் சாப்பிடும் போது, வாயின் வழியே அதிகமான அளவில் காற்றானது உடலின் உள்ளே செல்கிறது. இதனால் வாயுத் தொந்தரவு ஏற்படும்.



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiB89lTEv0qa6zZgf0t56AIg_vJPTodOguiLWrwV9X-3SlXjEy_NAjror2Th8nUBjaYTSab9dltFhhub_Wt-inu0cOFGgKwZKZ2Ec_8TUIaBqG_Bn4ilbcYVZiSLVUcfYfMAxtKgY7cgZ8/s1600/5.jpg

கார உணவுகள்

சிலர் பயணம் செய்கிறோம் என்று சமைத்துக் கொண்டு செல்வார்கள். இல்லையெனில் வீட்டில் சமைத்து நன்கு சாப்பிட்டு விட்டு செல்வார்கள். ஆனால் அவ்வாறு சாப்பிட்டால், வயிறானது சற்று மந்த நிலையில் இருக்கும். ஆகவே சாதாரணமான அதிக காரமில்லாத உணவுகளை அளவாக சாப்பிட்டு செல்வது நல்லது.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnOG9Nkypuu3KVn4J7QJyMGOEIaWTyr1y29us0JLsneYfc7Lg8wGcPT58_wPkkyu0OdksP19SZdUDzVBaFuHz0mGd_lvdO3BO2k9bt8HzIBbPYhNxjxwPn1tZyWFuwV9-LFY2EM6gDSfg/s1600/6.jpg

நூடுல்ஸ்

பஸ் மற்றும் ரயிலுக்கு நேரமாகிவிட்டது என்று ஈஸியாக சமைத்து சாப்பிவதற்கு நூடுல்ஸ் மற்றும் பாஸ்தா போன்ற உணவுகளை சாப்பிட்டு செல்வோம். இதனால், செரிமானம் தடைபட்டு, வயிற்றில் வாயு மற்றும் மந்த நிலை ஏற்படும். எனவே இந்த மாதிரியான உணவுகளை தவிர்ப்பது நல்லது.



ஆல்கஹால்

கார்போனேட்டட் மதுபானங்களில் பீர், சோடா மற்றும் சாம்பைன் போன்றவை வயிற்றில் உப்புசத்தை ஏற்படுத்தக்கூடியவை. மேலும் இதை குடித்தால், எப்போதும் ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். ஆகவே இதனை குடித்து, சைடு டிஷ்ஷாக வறுத்த உணவுகளை சாப்பிட்டால், பின் வாந்தி எடுக்க வேண்டியது தான். அதுமட்டுமின்றி அவை பின்பு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். 




Via அறிவியல்