10,00,000 ஆன்மீக நூல்களைக் கொண்டிருக்கும் நாம் ஏன் உலகத்தை ஆளக் கூடாது?

மணக்கால் அய்யம்பேட்டை | 2:19 PM | Best Blogger Tips

 



ஒரே ஒரு பைபிளை வைத்துக் கொண்டு 100 நாடுகளை கிறிஸ்தவம் ஆட்சி செய்கின்றது;10,00,000 ஆன்மீக நூல்களைக் கொண்டிருக்கும் நாம் ஏன் உலகத்தை ஆளக் கூடாது?

சித்தர்கள்,ரிஷிகள்,முனிவர்கள்,ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் எழுதியுள்ள நூல்களில் மிக முக்கியமானவைகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம்;

1.ஸ்ரீமத் பகவத் கீதை

2.இராமாயணம்

3.மஹாபாரதம்

4.சிலப்பதிகாரம்

5.சீவக சிந்தாமணி

6.குண்டலகேசி

7.வளையாபதி

8.தொல்காப்பியம்

9.சிவபுராணம்

10.விஷ்ணு புராணம்

11.கருட புராணம்

12.தேவி பாகவதம்

13.விதுர நீதி

14.சுக்கிர நீதி

15.திருக்குறள்

16.திருமந்திரம்

17.சிவ கீதை

18.அக்னி புராணம்

19.மந்திர ராஜ பதப் பிரயோகம்

20.சிவ பராக்கிரமம்=யாழ்ப்பாணம் வெளியீடு

21.தனுர் வேதம்

22.ரிக் வேதம்

23.யஜீர் வேதம்

24.சாம வேதம்

25.அதர்வண வேதம்

26.நந்திக் கலம்பகம்

27.நந்தி புராணம்

28.பன்னிரு திருமுறைகள்

29.திருவெம்பாவை

30.திருப்பாவை

31.பாசுரங்கள்

32.சைவ சமய ஆகமங்கள்

33.ஆர்ய பட்டீயம்

34.பாஸ்கர கணிதம்

35.திருவிளையாடல் புராணம்

36.அபிராமி அந்தாதி

37.திருப்புகழ்

38.எட்டுத் தொகை

39.பத்துப் பாட்டு

40.கந்தர் கலிவெண்பா

41.கந்தரலங்காரம்

42.கந்த சஷ்டிக் கவசம்

43.ஆனந்த காந்தம்

44.கேனோப உபநிஷத்

45.முண்டக உபநிஷத்

46.மீமாம்ஸம்

47.பைரவ கல்பம்

48.வராகி கல்பம்

49.சிவ கல்பம்

50.நாராயண சூக்தம்

52.சிதம்பர சூத்திரம்

53.ருத்ராட்ச கல்பம்

54..வில்வ கல்பம்

55.பரிபாடல்

56.சூரிய புராணம்

57.குரு கீதை

58.ஸ்ரீவித்யா ரகசியம்

59.கோ உபநிஷத்

60.வனவியாசம் என்ற விருட்ச சாஸ்திரம்

61.மஹா சாஸ்த கல்பம்

62.பைரவர் இருபத்தைந்து

63.மண் ஜீஸ்வரி மூல கல்பம்

64.பதார்த்த குண சிந்தாமணி(என்ன நோய்க்கு என்ன உணவு தயாரிகக வேண்டும்;எப்போது எப்படி சாப்பிட வேண்டும் என்ற விளக்கம்)

65,பதார்த்த குண விளக்கம்

66,யாதார்த்த குண விளக்கம்

67.ப்ரபோத சந்த்ரோதயம்(காபாலிக வழிபாடு பற்றிய விளக்கம்)

68.ஷட் சக்கர நிரூபணா

69.ப்ரதீபிகை

70.உத்திர காலாம்ருதம்

71.த்ரோடல உத்திர தந்திரம்

72.காமகலா விலாஸினி தந்திரம்(ஒன்பது சக்கரங்கள் பற்றியும்,அதனுள் இருந்தபடி நம்மை ஆட்சி புரியும் பெண் தெய்வீக சக்திகள் பற்றியும் விளக்கம்)

73.தமிழ்நாட்டில் 45,000 ஆலயங்கள் உள்ளன;ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு ஸ்தல புராணம் இருக்கின்றது;

இன்னும் ஏராளமாக இருக்கின்றன;

 

நன்றி இணையம்


'பேந்த பேந்த' முழித்த கேள்வி! பெரியார்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:16 PM | Best Blogger Tips

 










பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி!

கேட்டவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்!

( பசும்பொன் தேவர் - 1959-ல் பொள்ளாச்சி சிறீ குடலுருவி மாரியம்மன் கோவிலில் பேசியது.)...!

கடவுள் கண்ணுக்கு தெரியல 'அதனால் கடவுள் இல்லை என்று சொல்றியே, உன் உயிர் கூட கண்ணுக்கு தெரியல அதனால் நீ உயிரற்ற பிணமா ..?


நட்சத்திரம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் பகலிலே பார்க்கிற ஓருவருக்கு நட்ச்சத்திரம் தெரியாது.

சூரியன் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், இரவிலே பார்த்தால் சூரியன் தோன்றாது.

இரவிலே சூரியனை பார்த்து தவறாக சூரியன் என்பதே இல்லை என சொல்வது எவ்வளவு அவசர புத்தியோ... அவ்வளவு அவசர புத்திதான் தனக்கு நேரில் தெரியாதது அத்தனையும் இல்லை என வாதிக்க முன்வருவது.

எல்லாம் எல்லாருக்கும் தெரிகிற நிலைமையில் அமைந்தது அல்ல உலகம்.

உதாரணாமாக உங்களுடைய சரீரத்தையே... நீங்கள் பார்த்துக் கொள்வீர்களானால்

சரீரத்தில் இருக்கின்ற கால்,கை முதலியவை எல்லாம் நீங்கள் பார்க்க முடியும், அதே நேரத்தில் உங்களது கண்களை நீங்களே பார்க்க வேண்டும் என விரும்பினால் பார்க்க முடியுமா..?முடியாது !

அதற்காக ஒருவன் அவசரப்பட்டு ...

என் கையை பார்த்தேன் இதோ இருக்கிறது,

ஆகையால் எனக்கு 'கை' உண்டு.

என் காலை பார்த்தேன் இதோ இருக்கிறது,

ஆகையால் எனக்கு 'கால்' உண்டு. நான் என் கண்ணை பார்க்க நினைக்கிறேன் அது தெரியவில்லை, ஆகையால் எனக்கு கண்ணில்லை என்று பேசலாமா..? அது தவறு!

கண்ணாடியில் பார்த்தால் கண்களின் பிம்பம் தெரியும்...! அதைப்போல் விக்ரஹங்கள் கடவுளின் பிம்பமாக இருக்கிறது.

இதோ இங்கு ரோஜாப்பூ மாலை இருக்கிறது..

இது என்ன பூ எனக்கேட்டால்

அதன் பெயரை சொல்லலாம்..!

நிறத்தை கேட்டால் நிறத்தையும் சொல்லலாம்

இது எந்த இடத்தில் கிடைக்கும் என்வும் சொல்லிவிடலாம்..

ஆனால்..

அதன் வாசம் எப்படியிருக்கும் எனக்கேட்டால் "முகர்ந்து" பார் என்றுதான் சொல்லமுடியும்!

கடவுள் எப்படியிருப்பார் என்று கேட்டால்..உணர்ந்துப்பார் என்றுதான் சொல்லமுடியும்...

 பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி!

கேட்டவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்!

( பசும்பொன் தேவர் - 1959-ல் பொள்ளாச்சி சிறீ குடலுருவி மாரியம்மன் கோவிலில் பேசியது.)...!

கடவுள் கண்ணுக்கு தெரியல 'அதனால் கடவுள் இல்லை என்று சொல்றியே, உன் உயிர் கூட கண்ணுக்கு தெரியல அதனால் நீ உயிரற்ற பிணமா ..?

நட்சத்திரம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் பகலிலே பார்க்கிற ஓருவருக்கு நட்ச்சத்திரம் தெரியாது.

சூரியன் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், இரவிலே பார்த்தால் சூரியன் தோன்றாது.

இரவிலே சூரியனை பார்த்து தவறாக சூரியன் என்பதே இல்லை என சொல்வது எவ்வளவு அவசர புத்தியோ... அவ்வளவு அவசர புத்திதான் தனக்கு நேரில் தெரியாதது அத்தனையும் இல்லை என வாதிக்க முன்வருவது.

எல்லாம் எல்லாருக்கும் தெரிகிற நிலைமையில் அமைந்தது அல்ல உலகம்.

உதாரணாமாக உங்களுடைய சரீரத்தையே... நீங்கள் பார்த்துக் கொள்வீர்களானால்

சரீரத்தில் இருக்கின்ற கால்,கை முதலியவை எல்லாம் நீங்கள் பார்க்க முடியும், அதே நேரத்தில் உங்களது கண்களை நீங்களே பார்க்க வேண்டும் என விரும்பினால் பார்க்க முடியுமா..?முடியாது !

அதற்காக ஒருவன் அவசரப்பட்டு ...

என் கையை பார்த்தேன் இதோ இருக்கிறது,

ஆகையால் எனக்கு 'கை' உண்டு.

என் காலை பார்த்தேன் இதோ இருக்கிறது,

ஆகையால் எனக்கு 'கால்' உண்டு. நான் என் கண்ணை பார்க்க நினைக்கிறேன் அது தெரியவில்லை, ஆகையால் எனக்கு கண்ணில்லை என்று பேசலாமா..? அது தவறு!

கண்ணாடியில் பார்த்தால் கண்களின் பிம்பம் தெரியும்...! அதைப்போல் விக்ரஹங்கள் கடவுளின் பிம்பமாக இருக்கிறது.

இதோ இங்கு ரோஜாப்பூ மாலை இருக்கிறது..

இது என்ன பூ எனக்கேட்டால்

அதன் பெயரை சொல்லலாம்..!

நிறத்தை கேட்டால் நிறத்தையும் சொல்லலாம்

இது எந்த இடத்தில் கிடைக்கும் என்வும் சொல்லிவிடலாம்..

ஆனால்..

அதன் வாசம் எப்படியிருக்கும் எனக்கேட்டால் "முகர்ந்து" பார் என்றுதான் சொல்லமுடியும்!

கடவுள் எப்படியிருப்பார் என்று கேட்டால்..உணர்ந்துப்பார் என்றுதான் சொல்லமுடியும்...

 

நன்றி இணையம்


எல்லாம் உனக்குள்ளே!”

மணக்கால் அய்யம்பேட்டை | 2:14 PM | Best Blogger Tips

 


படித்ததில் பிடித்தது...

மனதை அமைதியாக வைத்திருப்போம்!

-கவியரசர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்நூலிலிருந்து

பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்து புத்தி கெட்டு அலைந்தவர்களும் உண்டு.

200 ரூபாய் சம்பளத்தில் இணையற்ற அமைதி கண்டவர்களும் உண்டு.

அழுக்கு வேட்டியைத் துவைத்துக் கட்டுவதிலேயே ஆனந்தம் அடைந்தவர்களும் உண்டு.

சலவை வேட்டியிலும் சரிகை இல்லையே என்று சலித்து கொண்டவர்களும் உண்டு.

மனது எந்த ஒன்றை காண்கிறதோ அப்படியே ஆகி விடுகிறது.

அற்புதம் என்று அது முடிவு கட்டிவிட்டால், அற்புதமாகவே ஆகிவிடுகிறது.

மோசம் என்று தோன்றிவிட்டால் மோசமாகவே காட்சியளிக்கிறது.

பல நேரங்களில் மனது, தன் கணக்கை மாற்றிக் கொள்கிறது. நானே முதற்கட்டத்தில் ஒருவரைப் பற்றிப் போடுகிற கணக்கை மறுகட்டத்தில் மாற்றிக் கொண்டிருக்கிறேன்.


மாறுதல் மனிதன் இயற்கை. அதில் இன்பம் தோன்றும்போது உடனடியாக நிம்மதி.

இந்தப் பேரிடியை என்னாலேயே தாங்கவே முடியாதுஎன்று சில சமயங்களில் சொல்கிறோம். ஆனாலும், நாம் உயிரோடுதான் இருக்கிறோம்.

காரணம் என்ன? மனசு, வேறு வழியில்லாமல் அதை தாங்கிவிட்டது என்பதே பொருள்.

உலகத்தில் எது தவிர்க்க முடியாதது?

பிறந்த வயிற்றையும், உடன் பிறப்புகளையும் தான் மாற்ற முடியாதே தவிர, பிற எதுவும் மாற்றத்திற்கு உரியதே.

நானே சொல்லி இருக்கிறேன்… ‘ஜனனத்தையும் மரணத்தையும்தவிர அனைத்துமே மறுபரிசீலனைக்கு உரியவை என்று.

மனைவியை மாற்றலாம்; வீட்டை மாற்றலாம்; நண்பர்களை மாற்றலாம்: தொழிலை மாற்றலாம்: எதையும் மாற்றலாம்:

மாறுதலுக்குரிய உலகத்தில் நிம்மதி குறைவதற்கு நியாயம் என்ன?

மனது நம்முடையது: நாம் நினைத்தால் அதை மாற்றிக் கொள்ளலாம்.

நமக்கு முன்னால் வாழ்ந்து செத்தவர்கள் எல்லாம், ஆயுட்காலம் அமைதியாக இருந்து செத்தவர்கள் அல்ல.

இனி வரப் போகிறவர்களும், நிரந்தர நிம்மதிக்கு உத்தரவாதம் வாங்கிக் கொண்டு வரப் போகிறவர்களல்ல.

அவரவர்க்கு வாய்த்த இடம்

அவன் போட்ட பிச்சை:

அறியாத மானிடருக்கு

அக்கரையில் பச்சை

எந்த துன்பத்திலும் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

மனதை எளிமையாக வைத்திருங்கள்.

கவலைகளற்ற ஒரு நிலையை மேற்கொள்ளுங்கள்.

நிரந்தரமான நிம்மதிக்கு ஆண்டவனை நாடுங்கள்.

நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே!

 

நன்றி இணையம்


கற்போம் கற்பிப்போம்! நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:06 PM | Best Blogger Tips

 


வேடிக்கையும் கிண்டலும் அடுத்தவங்களுக்கு இடைஞ்சலா இல்லாம இருக்கனும்!

ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? என்பதற்கு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியான விளக்கத்தைக் கொடுத்திருக்காங்க.

ஆனா, "கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்" குடுக்கற விளக்கம் என்ன தெரியுமா?

நகைச்சுவை அடுத்தவங்களுக்குத் துன்பம் குடுக்காம இருக்கனும். அடுத்தவங்க மனசைப் புண்படுத்தப்படாது. அது தான் சிறந்த நகைச்சுவைங்கிறார். அதுக்கு அவர் ஒரு உதாரணமும் கொடுக்கிறார்.

ஓர் ஏரி ஓரமா ரெண்டு பையன்கள் நடந்து போய்கிட்டிருக்காங்க.

அதுல ஒருத்தன் பணக்காரவீட்டுப் பையன். இன்னொருத்தன் ஏழை.

இவங்க ரெண்டு பேரும் போய்கிட்டிருக்காங்க.... வழியில ஓர் இடத்துலே ஒரு சோடி செருப்பு இவங்க கண்ணுலே பட்டுது.

ஒரு விவசாயி அந்தச் செருப்பை அங்கே விட்டுட்டு பக்கத்துலே இருந்த ஏரியிலே கை, கால் கழுவிக்கிட்டிருந்தார்.

உடனே அந்தப் பணக்காரப் பையனுக்கு ஒரு யோசனை! அவன் சொன்னான்,

டேய்! இப்ப ஒரு வேடிக்கை செய்யலாம்... அந்தச் செருப்பு இரண்டையும் தூக்கி எட்டத்துலே வீசி எறிஞ்சிடுவோம்.

அந்த ஆளு வந்து பார்த்துட்டு செருப்பைத் தேடி அல்லாடுவான்...

அங்கேயும் இங்கேயும் ஓடுவான். திரு திருவென முழிப்பான்.

அதை நாம இரசிக்கலாம். நல்லா தமாசா இருக்கும்! அப்படின்னான்.


இப்படிச் சொல்லிப்புட்டு அந்தச் செருப்புகளைத் தூக்கப் போனான்.

கொஞ்சம் பொறுன்னான் அந்த ஏழைப் பையன். ஏன்? ன்னு கேட்டான் இவன். இப்ப அந்த ஏழைப் பையன் சொன்னான்...

நீ சொல்றது ஒண்ணும் வேடிக்கை இல்லே. உன்னோட செருப்புத் தெலைஞ்சா உன் அப்பா உடனே உனக்கு வேறே செருப்பு வாங்கிக் கொடுத்துடுவார்!

ஆனா அந்த ஆளுக்கு இந்தச் செருப்பு தொலைஞ்சா வேறே புதுசா வாங்குறதுக்கு வாயையும், வயத்தையும் கட்டி பணத்தைச் சேர்க்க வேண்டியிருக்கும்!

அதனால நான் ஒரு வேடிக்கை சொல்றேன். அது மாதிரிச் செய்! அது இன்னும் தமாசா இருக்கும்.. அப்படின்னான். சரி! சொல்லுன்னான் இவன்.

செருப்பு இரண்டும் அது இருக்கிற இடத்துலேயே இருக்கட்டும்.

உன் சட்டைப் பையிலேயிருந்து ஒரே ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து அந்தச் செருப்பு மேலே அதோட குதிப் பகுதியிலே வை.

வச்சுட்டு நாம ரெண்டு போரும் அந்த மரத்துக்குப் பின்னாடி மறைஞ்சி நின்னுக்குவோம்.அப்புறம் பார் வேடிக்கையைன்னான்.

அதே மாதிரி ஒரு ரூபாய் காசை செருப்பு மேலே வச்சிட்டு இவங்க மறைஞ்சு நின்னுக்கிட்டாங்க. கொஞ்ச நேரத்துல அந்த விவசாயி வந்தார்.

கால்லே உள்ள மண்ணைத் தட்டிப்புட்டு செருப்பை மாட்டறதுக்குப் போனார்.

அங்கே இருந்த காசு கண்ணுல பட்டுது! அவருக்கு ஆச்சிரியமா போச்சு.

அதை கையிலே எடுத்துப் பார்க்கிறார்.

நாலு பக்கமும் திரும்பி திரும்பிப் பார்க்கிறார். கடைசியிலே ஆகாயத்தைப் பார்க்கிறார்.

ஆண்டவா! இது உன்னோட கருணைதான்..

நீ தான் யாரோ புண்ணியவான் மனசுல தருமம் பண்ணற எண்ணத்த உண்டாக்கியிருக்க!

அந்தப் புண்ணியவான் நல்லாயிருக்கனும்! ன்னு வாழ்த்தி அந்தக் காசைக் கண்ணுல ஒத்திக்கிட்டார்.

மறைஞ்சிருந்து பார்த்திட்டிருந்த ஏழைப் பையன் இப்பச் சொன்னான்...

பார்த்தியா..? உன்னைப் புண்ணியவான்னு வாழ்த்திட்டுப் போறார் அந்த ஆள்!

அவருக்கும் சந்தோசம். உனக்கும் சந்தோசம்.

உனக்கு ஒரு ரூபாய்ங்கறது பெரிசில்ல.

அதனால நமக்குக் கிடைச்சிருக்கிற மகிழ்ச்சி ரொம்ப உயர்வானது! அப்படின்னான்.

வேடிக்கையும் கிண்டலும் இது மாதிரி அடுத்தவங்களுக்கு இடைஞ்சலா இல்லாம இருக்கனும் என்கிறார் கலைவாணர்.

இன்றைய இளைஞர்களில் ஒரு சிலர் நகைச்சுவை என்றாலே அடுத்தவர்களை கிண்டல் செய்து ரசிப்பதில் தான் உருவாவது என்ற தவறான கண்ணோட்டத்துடன் இருக்கிறார்கள். குழந்தை பருவத்திலிருந்தே அடுத்தவர்களை கிண்டல் செய்வது, கேலி செய்வது தவறான விஷயம் என்று பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லித் தருவது மிக முக்கியமான ஒன்று.

இது போன்ற நல்ல விஷயங்களைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.. பெரியவர்களானதும் யார் மனதையும் கண்டிப்பாக அவர்கள் புண்படுத்த மாட்டார்கள்.

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

 

நன்றி இணையம்