ஆனைமுகனுக்கு ஏன் அறுகம்புல்?

மணக்கால் அய்யம்பேட்டை | 3:39 PM | Best Blogger Tips

சாதாரணமாக கிடைப்பதாலேயே மிகச் சிறந்தவைகளின் மதிப்புகளை நாம் உணரத் தவறி விடுகிறோம். அது புல்லில் தொடங்கி மனிதன் வரை பொருந்தும்.

நம் வீட்டுத் தோட்டங்களில் சாதாரணமாக வளர்ந்து கிடக்கும் அறுகம்புல் பற்றி நமக்குத் தெரியுமா? ‘விநாயகருக்கு மாலையா கட்டி அம்மா போடுவாங்க!’ என  ஊகமாக ஒரு விடை மனதில் தோன்றும். ஏன் இது விநாயகருக்கு? அனலாசுரன் என்ற அரக்கன் அனைவரையும் கொடுமைப் படுத்தி வந்தான். அவனது  கொட்டத்தை யாராலும் அடக்க முடியாத நிலையில் தேவர்கள் விநாயகரின் உதவியை நாடினார்கள்.

அனலாசுரனுடன் மோதினார் விநாயகர். ஆனால், அவனை ஒடுக்க முடியவில்லை. கோபத்தில் அவனை அப்படியே தூக்கி விழுங்கினார் விநாயகர்.  வயிற்றினுள் சென்ற அனலாசுரன் வெப்பத்தை அதிகப்படுத்த சூடு தாங்கமுடியாமல் தவித்தார் விநாயகர். குடம் குடமாக தண்ணீர் அருந்தியும் சூடு குறைந்த  பாடில்லை. ஒறு முனிவர் அறுகம்புல்லை விநாயகர் தலைமீது வைக்க, உடனே சூடு தணிந்தது. அனலாசுரன் விநாயகரின் வயிற்றுக்குள் ஜீரணமாகி விட்டான்.  அன்று முதல் விநாயகருக்கு அறுகம்புல் பிடித்த விஷயமாகி இன்றும் நாம் அதை அவருக்கு சமர்ப்பிக்கிறோம்.

இதில் மறைவாய் சொல்லப்பட்ட விஷயம் உடல் சூட்டை அறுகம்புல் தணிக்கும், ஜீரண சக்தியை உண்டாக்கும் என்பதே! அறுகம்புல் சிறு செடி. புல் வகையைச்  சேர்ந்தது. பசுமையான அகலத்தில் குறைந்த, நீண்ட கூர்மையான இலைகளை கொண்ட தாவரம். தண்டு குட்டையாக இருக்கும். ஈரமான இடங்களில் வளரும்.  தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் இது வளரும். இதன் தாவரவியல் பெயர் cynodon dactylon . சமஸ்கிருதத்தில் துர்வா என்றும்  ஆந்திராவில் ஜெரிக்கி என்றும் கேரளத்தில் கருக்கா என்றும் கர்நாடகத்தில் காரிக ஹால்லு என்றும் அழைக்கிறார்கள். தமிழில் அறுகு, பதம், தூர்வை, மேகாரி  என பல பெயர்கள் இதற்கு.

சொறி, சிரங்கு, படர்தாமரை போன்ற சரும நோய்கள் குணமாக அறுகம்புல்லுடன் மஞ்சள் சேர்த்து அரைத்துக் குளித்தால் போதும். உடனே குணமாகும்.  மூலநோய்க்கு காய்ச்சாத ஆட்டுப்பாலில், அரைத்த அறுகம்புல்லைக் கலந்து குடிக்க நிவாரணம் கிடைக்கும். நரம்புத் தளர்ச்சிக்கும், அல்சருக்கும்,  வெள்ளைப்படுதல், வெட்டை நோய்க்கும் இது அருமருந்து. தினமும் அறுகம்புல் சாறு குடிக்க ரத்தம் சுத்தமாகும். ஆனால், மருத்துவத்திற்கு இதை பயன்  படுத்தும்போது சுத்தமான இடத்தில் வளர்ந்த அறுகம்புல்லை பயன்படுத்துவது நல்லது என்கிறார்கள், மருத்துவர்கள். ஆனால், ஆன்மிக அன்பர்களுக்கு  விநாயகரின் ஸ்பரிசம் பட்டு அது பிரசாதமாக கிடைக்கும் போது மகத்துவமும் பல மடங்கு கூடிப் போகிறது. இந்து மதத்தில் ஆன்மிகத்தோடு அறிவியல்  இழையோடி கிடப்பதற்கு மஞ்சள் பிள்ளையாரை அலங்கரிக்கும் அறுகம்புல்லே சாட்சி!

Thanks To Dinakaran Newspaper

விநாயக சதுர்த்தி .............

மணக்கால் அய்யம்பேட்டை | 12:20 PM | Best Blogger Tips

விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும்.

ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக  விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. பரமசிவன் கணேசனை கணங்களின் தலைவனாக ‘கணபதி'யாக நியமித்தார். அவருக்கு அனிமா, மகிமா  முதலிய அஷ்டசித்திகளையும் மனைவிகளாக பிரம்மதேவன் அளித்து கணபதியைப் பலவாறு துதி செய்தார். கணபதியும் மகிழ்ந்து ‘பிரம்மனே, வேண்டிய வரம்  கேள்' என்று கூற பிரம்மன் ‘என் படைப்பெல்லாம் தங்கள் அருளால் இடையூரின்றி நிறைவேற வேண்டும்' என்று வரம் கேட்க விநாயகரும் பிரம்மனுக்கு  வரமளித்தார்.

இந்து மக்கள் அனுஷ்டிக்கின்ற விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதச் சுக்கிலபட்ச சதுர்த்தித்திதியன்று  விநாயக சதுர்த்தி அனுஷ்டிக்கப்படுகின்றது. அன்றைய தினம் உலகெங்கணுமுள்ள இந்துக்கள் பயபக்தியோடு விநாயகரை வழிபாடி, உண்ணா நோன்பிருந்து,  தான தர்மங்கள் செய்து கொண்டாடுகின்றனர். நாட்டுக்கு நாடு அந்தக் கொண்டாட்டங்கள் வேறுபட்ட முறைகளில் கொண்டாடப்படுவதைக் காணலாம்.

இவ்விழா மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜி ஆட்சிக் காலத்திலேயே நடத்தப்பட்டிருக்கிறது. அது அந்த நாட்டின் தேசிய விழாவாகவும், கலாச்சார  விழாவாகவும் கொண்டாடப்பட்டிருக்கிறது. பின்னர் பீஷ்வாக்கள் ஆட்சிக் காலத்திலும் இந்த விநாயகர் வழிபாடு என்பது தொடர்ந்து நடந்திருக்கிறது. பிறகு அது  மகாராஷ்டிரா மாநில மக்களின் குடும்ப விழாவாக மாறிவிட்டது. மக்கள் தங்கள் வீடுகளிலும் பிள்ளையாரை வைத்து வணங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

அதன் பிறகு சுதந்திர போராட்டக்காலத்தில் தான், இந்துமதத்தின் பால் ஈர்ப்புக்கொண்ட அன்றைக்கு இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில்  ஒருவரான பாலகங்காதர திலகர் இதை ஆண்டாண்டு பொதுமக்கள் இணைந்து நடத்தும் திருவிழாவாக மாற்றினார். அதன் பிறகு தான் மகாராஷ்டிரா மாநிலத்தில்  விநாயகர் சதுர்த்தியன்று, வசதிபடைத்தவர்கள் எல்லாம் தங்கள் வசதிக்கேற்ப உயரமான விநாயகர் சிலைகளை செய்து, தங்கள் பகுதி மக்கள் சேர்ந்து  கொண்டாடும் விழாவாக நடத்தினர். ஏழை மக்களுக்கு சில்லறை காசுகளையும் ரூபாய் நோட்டுகளையும் இதன் போது வழங்கினர். வெகுகாலத்தின் பின்னரே  தமிழகத்தில் இவ்விழா அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டாடப்பட்டது.

நன்றி தினகரன் பேப்பர்

எளிய பாட்டி வைத்தியம்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:17 AM | Best Blogger Tips
எளிய பாட்டி வைத்தியம்:-

*  சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

*  அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

* விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

*  கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

*  சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

*  நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

*  வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

*  பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

*  புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

* பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

* கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

*  சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

*  முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

Via FB Karthikeyan Mathan