*வேண்டியதை அனைத்தையும்* .....

மணக்கால் அய்யம்பேட்டை | 5:17 PM | Best Blogger Tips

 May be a doodle of text that says "மகி 208 வேண்டியதை அனைத்தையும் இறைவன் மனிதனுக்கு தந்து விட்டால்"

*வேண்டியதை அனைத்தையும்* *இறைவன்*

*மனிதனுக்கு* *தந்துவிட்டால்,*

*மனிதன் வேண்டுதலை மட்டுமே வேலையாகக் கொண்டு இருப்பான்.*

வாழ்வில் நடக்கும்

ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் உண்டு. அந்த அர்த்தத்தில்

ஆண்டவனின் அருள் உண்டு.

*எல்லாம் முடிந்துவிட்டது என சில நிகழ்வுகளுக்காக வருந்தாதீர்கள்.* *மனிதர்களைத் தாண்டி*

*பல முடிவுகள்* *இறைவன் கைகளில் மட்டுமே உள்ளது.*

இறைவன் உங்களுக்கு கொடுப்பதை எவராலும் தடுக்க இயலாது. உங்களுக்கானதை உரிய காலத்தில் உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பார். நீங்கள் என்றும் இறைவனோடு ஒன்றிருங்கள்.

*நமது வாழ்க்கை அழகானது*

ஆனால் போராட்டங்கள் நிறைந்தது

*போராட்டங்கள்*

*எதுவும்* *நிரந்தரமும் இல்லை!*

*போராட்டங்கள்*

*மட்டுமே* *வாழ்க்கையும் அல்ல!*

நமது கடினமான

சூழ்நிலைகள் நிரந்தரமில்லை.

*தோல்வியும் நிரந்தரமில்லை*

அவமானங்கள்

எதுவும் நிரந்தரம் இல்லை!

கஷ்டங்களும்

கவலைகளும் நிரந்தரம் இல்லை

*இவை* *அனைத்துமே*

*மாறக்கூடியவை.*

*அனைத்திற்கும் தீர்வு உண்டு.*

*எதைக் கண்டும் பயப்படாதீர்கள்.*

சில நேரங்களில்

நமது பயமே நமது முதல் எதிரியாகி விடுகிறது.

*இறைவனை முழுமையாக நம்புபவர்கள் எதற்கும் பயப்படவும் தேவையில்லை.*

*கவலைப்படவும் தேவையில்லை.*

முழுமையாக இறைவனை நம்புங்கள்.

*இறைவனால்*

*தீர்க்க முடியாத பிரச்சினைகள் இல்லை .*

நிறைவேற்ற

முடியாத பிரார்த்தனைகள் இல்லை.

*மாற்ற முடியாத*

*சூழ்நிலைகள்* *இல்லை.*

*நம்பிக்கையோடு இருங்கள்.*

Top of Form

 

 

நன்றி இணையம்