
இயற்கை சூழ்ந்த அழகிய ஊர் ! 18 கோவில்களும் ! 18 குளங்களும் ! 18 தெருங்களும் இருக்கும் அழகிய கிராமம் ! பழமையான பெயர் திருப்பெருவேளூர் ! தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 92வது தலம். ! அழகா அமைத்துள்ள தெருங்கள் ! எங்கள் ஊா்.
பிரவசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரவசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருவுற்றிருக்கும் தாயா நீங்கள்? கருவில் இருக்கும் குழந்தைகிட்ட எப்படி பேசலாம்?...

கருவில் இருக்கும் குழந்தையானது இந்த உலகத்தை பார்க்கத் தான் 10 மாதங்கள் வேண்டும். ஆனால் இந்த குழந்தை வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் தாயுடன் வாழ்ந்து தான் வருகிறது. தாயானவள் ஒவ்வொரு நாளும்
இந்த குழந்தையின் அசைவையும் உணருவாள்.
மருத்துவ ஆய்வின் படி, குழந்தைக்கு 16 வாரத்திலேயே கேட்கும் திறன் வந்துவிடுமாம். மேலும் இதனால் எல்லாவற்றையுமே புரிந்து கொள்ளவும் முடியுமாம். ஆகவே அப்போது குழந்தையிடம் தாயானவள் என்னென்ன செய்ய வேண்டும், எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று மகப்பேறு மருத்துவர் கூறுகிறார். அது என்னென்னவென்று படித்து பாருங்களேன்...
கருவில் இருக்கும் குழந்தையிடம் பேசுவதற்கு சில டிப்ஸ்...
1. முதலில் குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லக் பெயரை வைத்து பேசலாம். நிறைய பெற்றோர்களுக்கு என்ன குழந்தை என்று தெரியாமல் எப்படி பெயர் வைப்பதென்று ஒரு சந்தேகம் வரும். ஆனால் இதற்கு ஒரு வழி இருக்கிறது. அது தான் குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லப் பெயரை, அதாவது இரு பாலினத்திற்கும் பொதுவான ஏதேனும் ஒரு செல்லப் பெயரை வைத்து அழைக்கலாம். வேண்டுமென்றால் இந்த பெயரை பிறந்த பிறகு மாற்றிக் கொள்ளலாம்.
2. தாயானவள் முதலில் குழந்தையிடம் பேச வேண்டும். இது ஒரு பழைய நம்பிக்கை தான், இருப்பினும் குழந்தைக்கு தாயின் குரலானது மிகவும் பிடிக்கும். அப்படி பேசுவதால் குழந்தையானது அமைதியுடன், தாயின் குரலைக் கேட்டுக் கொண்டு நிம்மதியாக இருக்கும். மேலும் இப்படி பேசுவதால் பிறக்கும் போது அழும் குழந்தை கூட தாயின் குரலை கேட்டதும் அழுகாமல் இருக்கும்.
3. கர்ப்பமாக இருக்கும் பெண் பாட்டு கேட்டால் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் கருவில் இருக்கும் குழந்தைக்கு மென்மையான பாட்டுக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே வீட்டில் ஏதேனும் ஒரு மென்மையான பாட்டை ப்ளேயரில் போட்டு, ஹெட் செட்டை வயிற்றில் வைக்கலாம். அப்படி பாட்டுக்களை கேட்கும் போது குழந்தை வயிற்றில் உதைத்தால் அது சந்தோஷத்தில் நடனம் ஆடுகிறது என்று அர்த்தம் ஆகும்.
4. மேலும் குழந்தை கருவில் இருக்கும் போது எப்போதும் பாசிடிவ்-ஆகவே யோசித்து பேச வேண்டும். இதனால் குழந்தையானது பிறந்த பின்னும் எப்போதும் பாசிட்டிவ்-ஆகவே யோசிக்கும். மேலும் தாயானவள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். அதனால் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்.
5. அனைத்து தாய்க்கும் குழந்தை வயிற்றில் உதைக்கும் போது கணவர் அதை உணர வேண்டும் என்று நினைப்பர். அப்படியே அவர்களது கணவரும் ஆசைபடுவர். ஆகவே அப்படி உதைக்கும் போது, குழந்தையின் தந்தையும் குழந்தையிடம் அடிக்கடி பேச வேண்டும். அப்போது தான் தாய்க்குப் பின் தந்தை தூக்கினாலும் குழந்தை இது தான் தந்தை என்பதையும் புரிந்து கொள்ளும். மேலும் இவ்வாறு அந்த குழந்தை உதைக்கும் போது தந்தை அதை நன்கு உணர, அவருக்கும் அந்த பிரசவத்தின் அற்புதமும் நன்கு புரியும்.
எனவே, இப்படியெல்லாம் நடந்து பாருங்கள், குழந்தை ஆரோக்கியமாக புத்திக்கூர்மையுடன் பிறக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
Via FB ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.
பிரசவத்தின் பின் உடல் மெலிய வேண்டுமா???
மணக்கால் அய்யம்பேட்டை | 4:22 PM |
பிரவசம்
கர்ப்பமாக
இருக்கும் போது உடல் நலனை கவனிப்பதைப் போல பிரசவத்திற்குப் பின்னர் உடல்
நலனை கவனிக்கத் தவறிவிடுகின்றனர் தாய்மார்கள். இதனால் உடல் குண்டாகி
ஏகப்பட்ட இன்னல்களுக்கு ஆளாகின்றனர். குழந்தை பிறப்பிற்குப் பின்னர்
தாய்மார்கள் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு மற்றும் ஆரோக்கியமான உணவு
முறைகளை பின்பற்றி வந்தால் விரைவில் உடல் மெலிந்து பழைய நிலைக்கு வரலாம்.
கர்ப்பமாக இருக்கும் போது எந்த அளவிற்கு கவனமாக உடலை கவனித்துக்
கொள்கிறோமோ அதேபோல பிரசவத்திற்குப் பின்னரும் உடல் நலனை அக்கறையோடு
கவனித்துக் கொள்ளவேண்டும். அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று உடல்
பரிசோதனை செய்துகொள்ளுதல் மிகவும் அவசியம்.
பிரசவத்திற்கு பின் பெண்கள் நல்ல சத்தான உணவுகளை உண்டு போதுமானவரை ஓய்வு
எடுத்துக் கொண்டால் தான் மீண்டும் நல்ல உடல் ஆரோக்கியத்தை பெறமுடியும்.
குழந்தை பிறந்து சில மாதங்களுக்கு கடுமையான வேலைகள் செய்வதை சில
மாதங்களுக்கு தவிர்க்க வேண்டும்.
பிரசவத்திற்குப் பின்னர்
கொழுப்பு அதிகம் உள்ள கேக், ஐஸ்கிரீம், சிப்ஸ் போன்றவைகளை தவிர்த்துவிட
வேண்டும். அதிக இனிப்பு பண்டங்கள் உண்பது, எண்ணெயில் பொறித்த உணவுகளையே
உண்பது, பகலில் தூங்குவது போன்றவை விரைவாக வயிறு போடத் தூண்டுகின்றன.
பிரசவத்திற்குப்பின் எடை போடுவது, அதிலும் வயிற்றில் சதை போடுவது, சர்க்கரை
வியாதி வருவதற்கு காரணமாகி விடுகிறது.
பிரசவத்தின் போது ஏற்படும்
ரத்த இழப்பை ஈடுசெய்வதற்கும் தாய்ப்பால் சுரப்பதற்கும் நல்ல சத்தான
உணவுகளை அதிக அளவில் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். புரதம், இரும்பு
சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுப் பொருள்களை உண்ண வேண்டும்.
இரும்புசத்து மாத்திரையை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் இரத்த சோகை வராமல்
தடுக்க முடியும்.
தானியங்கள், பால், கீரைவகைகள், காய்கறிகள்,
பழங்கள் போன்ற உணவுப் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அத்துடன் கூட அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும். பழச்சாறுகளை அருந்துவதால்
உடலில் தேவையற்ற கலோரிகள் சேருவது தடுக்கப்படும். சர்க்கரை சேர்க்காத
பழச்சாறுகள் அருந்துவதுதான் நன்மை தரும். எந்த காரணம் கொண்டும் உணவுகளை
தவிர்க்கக் கூடாது.
மூன்று வேளை உண்பதற்குப் பதிலாக சிறிது
சிறிதாக 6 வேளை உணவாக உட்கொள்ளலாம். இடை இடையே காய்கறிகள், பழங்கள்
போன்றவைகளை சாலட்களாக உட்கொள்ளலாம். பிரசவத்திற்குப்பின்னர் ஆயில் மசாஜ்,
வென்னீர் குளியல், நாட்டு மருந்து பத்திய உணவு, பகல் தூக்கம் தவிர்த்தல்
போன்ற இயற்கை வைத்திய முறைகளை நம் முன்னோர்கள் பின்பற்றி முழுப்பயன்
அடைந்து வந்தனர்.
மேற்கத்திய நாடுகளில் பிரசவத்திற்குப்பின்னர்
பின்பற்ற வேண்டியவற்றை மருத்துவ மனைகளில் சரியான உணவு முறைகள் மற்றும்
சரியான யோக (உடற்பயிற்சி) முறைகளையும் இன்றும் சொல்லித் தருகின்றனர்.
ஆனால் நம் நாட்டில் பெரும்பாலான மருத்துவமனைகளில் இதைப்பற்றி
சொல்லித்தருவதில்லை. எனவே இயற்கை வழியை பின்பற்றி முன்னோர்கள் கூறியவைகளை
பின்பற்றி நடந்தால் கர்ப்பத்திற்கு முந்தைய உடல் அமைப்பை பெறலாம்.
Via ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.
கர்ப்பமாக இருக்கும் போது எந்த அளவிற்கு கவனமாக உடலை கவனித்துக் கொள்கிறோமோ அதேபோல பிரசவத்திற்குப் பின்னரும் உடல் நலனை அக்கறையோடு கவனித்துக் கொள்ளவேண்டும். அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று உடல் பரிசோதனை செய்துகொள்ளுதல் மிகவும் அவசியம்.
பிரசவத்திற்கு பின் பெண்கள் நல்ல சத்தான உணவுகளை உண்டு போதுமானவரை ஓய்வு எடுத்துக் கொண்டால் தான் மீண்டும் நல்ல உடல் ஆரோக்கியத்தை பெறமுடியும். குழந்தை பிறந்து சில மாதங்களுக்கு கடுமையான வேலைகள் செய்வதை சில மாதங்களுக்கு தவிர்க்க வேண்டும்.
பிரசவத்திற்குப் பின்னர் கொழுப்பு அதிகம் உள்ள கேக், ஐஸ்கிரீம், சிப்ஸ் போன்றவைகளை தவிர்த்துவிட வேண்டும். அதிக இனிப்பு பண்டங்கள் உண்பது, எண்ணெயில் பொறித்த உணவுகளையே உண்பது, பகலில் தூங்குவது போன்றவை விரைவாக வயிறு போடத் தூண்டுகின்றன. பிரசவத்திற்குப்பின் எடை போடுவது, அதிலும் வயிற்றில் சதை போடுவது, சர்க்கரை வியாதி வருவதற்கு காரணமாகி விடுகிறது.
பிரசவத்தின் போது ஏற்படும் ரத்த இழப்பை ஈடுசெய்வதற்கும் தாய்ப்பால் சுரப்பதற்கும் நல்ல சத்தான உணவுகளை அதிக அளவில் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். புரதம், இரும்பு சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுப் பொருள்களை உண்ண வேண்டும். இரும்புசத்து மாத்திரையை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் இரத்த சோகை வராமல் தடுக்க முடியும்.
தானியங்கள், பால், கீரைவகைகள், காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுப் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் கூட அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும். பழச்சாறுகளை அருந்துவதால் உடலில் தேவையற்ற கலோரிகள் சேருவது தடுக்கப்படும். சர்க்கரை சேர்க்காத பழச்சாறுகள் அருந்துவதுதான் நன்மை தரும். எந்த காரணம் கொண்டும் உணவுகளை தவிர்க்கக் கூடாது.
மூன்று வேளை உண்பதற்குப் பதிலாக சிறிது சிறிதாக 6 வேளை உணவாக உட்கொள்ளலாம். இடை இடையே காய்கறிகள், பழங்கள் போன்றவைகளை சாலட்களாக உட்கொள்ளலாம். பிரசவத்திற்குப்பின்னர் ஆயில் மசாஜ், வென்னீர் குளியல், நாட்டு மருந்து பத்திய உணவு, பகல் தூக்கம் தவிர்த்தல் போன்ற இயற்கை வைத்திய முறைகளை நம் முன்னோர்கள் பின்பற்றி முழுப்பயன் அடைந்து வந்தனர்.
மேற்கத்திய நாடுகளில் பிரசவத்திற்குப்பின்னர் பின்பற்ற வேண்டியவற்றை மருத்துவ மனைகளில் சரியான உணவு முறைகள் மற்றும் சரியான யோக (உடற்பயிற்சி) முறைகளையும் இன்றும் சொல்லித் தருகின்றனர்.
ஆனால் நம் நாட்டில் பெரும்பாலான மருத்துவமனைகளில் இதைப்பற்றி சொல்லித்தருவதில்லை. எனவே இயற்கை வழியை பின்பற்றி முன்னோர்கள் கூறியவைகளை பின்பற்றி நடந்தால் கர்ப்பத்திற்கு முந்தைய உடல் அமைப்பை பெறலாம்.
தாயின் குரலை காது கொடுத்து கேட்கிறது சிசு
மணக்கால் அய்யம்பேட்டை | 4:13 PM |
பிரவசம்
தாயின்
குரலை கருவிலேயே குழந்தை அறிந்து கொள்ளும் என்பதாலும், கருவிலேயே,
வெளிப்புற சத்தங்களை உட்கிரகிக்கும் தன்மை சிசுவுக்கு இருக்கும்
என்பதாலேயும் தான் நம் ஊர்களில் வளைகாப்புகள் நடத்தப்படுகின்றன.வளைகாப்பு என்பது, கர்பமுற்று இருக்கும் பெண்ணுக்காக மட்டும் அல்ல, கருவில் இருக்கும் குழந்தை, உற்றார் உறவினர்களின் குரல்களைக் கேட்கவும், அதன் வரவுக்காக குடும்பமே மகிழ்ச்சியாக காத்திருப்பதை அறியச் செய்யவும் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சியாகும்.
இதனை அறிவியல் பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள் ஜோன்ஸ் ஹப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
36 வாரம் நிரம்பிய 74 கர்ப்பிணிகளை ஆய்வகத்துக்கு கொண்டு வந்து, அவர்களிடம் ஒரு கதையைக் கொடுத்து படிக்க வைத்தனர். அப்போது குழந்தையின் இதயத் துடிப்பு மற்றும் அசைவுகளை ஆராய்ந்ததில், தாய் சத்தமாக படிக்க ஆரம்பித்ததும், குழந்தை தனது அசைவுகளை நிறுத்திவிட்டு தாய் படிப்பதை கூர்ந்து கவனிக்கிறது. அதன் இதய துடிப்புக் கூட அந்த சமயத்தில் மெதுவாக இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
முன்பெல்லாம் கர்ப்பிணிகளிடம் வீட்டில் உள்ள மூத்தவர்கள் புராணக் கதைகளையும், வீரர்களின் வாழ்க்கை நிகழ்வுகளையும் கூறுவார்கள். அது மறைமுகமாக குழந்தையும் கேட்கும் என்பதால் தான் என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.
என் பிள்ளை என் பேச்சைக் கேட்க மறுக்கிறது என்று பல தாய்மார்கள் அலுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் நாம் பேசுவதைக் காது கொடுத்து கேட்க வேண்டும் என்று விரும்பும் தாய்மார்கள், பிள்ளை சிசுவாக கருவில் இருக்கும் போதே பேச வேண்டும். நாம் சொல்வதை சிசு பொருமையாக காது கொடுத்து கேட்கும் நேரம் அது ஒன்றே.
Via
ஆரோக்கியமான வாழ்வு
கர்ப்பிணிகளுக்கு வலியின்றி சுக பிரசவம் ஏற்பட உதவும் துளசி!
மணக்கால் அய்யம்பேட்டை | 2:05 PM |
பிரவசம்

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவுதான் கருவின் வளர்ச்சி, பிரசவத்துக்கு பிறகு தாயின் உடல் நலனில் முக்கிய பங்கு வகிக்கிறது. கர்ப்ப காலத்தில் அவ்வப்போது துளசி இலைகளை மென்று சாப்பிடுவது வலியின்றி பிரசவம் ஏற்படும் என்று ஆயுர்வேதம் கூறியுள்ளது.
கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்கள், 7வது மாதத்தில் இருந்து கடைசி 3 மாதங்களில் கர்ப்பிணி தனது உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கிறது ஆயுர்வேதம். இந்த காலங்களில் அதிக திரவ உணவுகள், பழங்கள் நல்லது. கரு வளர இவை அதிக பயனளிக்கும்.
பால், இளநீர், பழம் மற்றும் பழச்சாறுகளை உணவில் அதிகரிக்க வேண்டும். கர்ப்பிணிகள் துளசி இலைகளை கொதிக்க வைத்து மூலிகை தேநீராக அருந்தலாம். அது பிரசவ காலத்தை எளிதாக்கும். அதேபோல் கர்ப்பிணிகள் அவ்வப்போது சில துளசி இலைகளை மென்று வர, வலியின்றி பிரசவம் ஏற்பட வழிவகுக்கும் என்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.
கர்ப்பிணிகள் துளசி இலைகளை கொதிக்க வைத்து மூலிகை தேநீராக அருந்தலாம். அது பிரசவ காலத்தை எளிதாக்கும். அதேபோல் கர்ப்பிணிகள் அவ்வப்போது சில துளசி இலைகளை மென்று வர, வலியின்றி பிரசவம் ஏற்பட வழிவகுக்கும் என்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.
Via தமிழ்ச் சமுதாயம் - தமிழுக்காக தமிழர்களுக்காக ஒரு பகுதி
கருப்பை ரணத்தை ஆற்றும் பிரசவ லேகியம்!
மணக்கால் அய்யம்பேட்டை | 3:11 PM |
பிரவசம்
பிரசவித்த பெண்களின் உடலானது பழைய நிலைக்கு திரும்பும்போது வலியும், வேதனையும் ஏற்படும். இந்த வலி தொடர்ந்து இருப்பதில்லை. விட்டு விட்டு வரும். குழந்தை பிறந்து மூன்று மணி நேரத்திற்குள் பால் கொடுத்து விட்டால் இந்த வலி குறையும் . ஒரு சிலருக்கு குறையாது, வலியும் தாங்க முடியாததாக இருக்கும்.
கருப்பையில் ரணம் ஏற்பட்டு வலி அதிகரிக்கும். கருப்பை ரணத்தை ஆற்றவும், வலிகளைப் போக்கவும் பிரசவித்த பெண்களுக்கு நாட்டு மருந்துகளை கசாயம் செய்தும், லேகியம் போல செய்தும் சாப்பிடக் கொடுப்பார்கள்.
பிரசவ லேகியம்
சுக்கு, மிளகு, திப்பிலி, ஆலரிசி, லவங்கப்பத்திரி, லவங்கப்பட்டை இவற்றை வகைக்கு 10 கிராம் அளவு எடுத்து லேசாக வறுத்து இடித்து தூளாக்கி சலித்து வைத்துக் கொண்ட சூரணத்தில் இரண்டு ஸ்பூன் அளவு பனை வெல்லத்துடன் சேர்த்து, ஒரு நாளைக்கு மூன்று வேளை கொடுத்தால் போதும். அடி வயிறு வலி குணமாகும்.
வில்வ இலைச் சாறு
குழந்தை பிறந்த பின்னர் கருப்பையில் ரணம் ஏற்பட்டு, அதனால் இரத்தப்பெருக்கு ஏற்படுவதும் உண்டு. அச்சமயத்தில் வில்வ இலையுடன் வெங்காயம் சேர்த்து இடித்துப் பிழிந்த சாற்றில் அதே அளவு விளக்கெண்ணையும் சேர்த்து, காய்ச்சி வடித்து அத்தைலத்தில் ஒரு ஸ்பூன் வீதம் ஒரு வாரம் தொடர்ந்து கொடுத்து வர, ரணம் ஆறும். இரத்தப் போக்கும் நிற்கும். மஞ்சள் தூளுடன் இஞ்சிச்சாறு சம அளவு எடுத்து பால் அல்லது காய்ச்சி ஆறவைத்த நீரில் கலந்து பருக வலி குறையும்.
கடுகுப் பொடி
சமையலில் அன்றாடம் பயன்படுத்தப்படும் கடுகு பிரசவித்த பெண்களுக்கு அருமருந்தாக செயல்படுகிறது. வாணலியில் கடுகை போட்டு லேசாக வறுத்து அதனை பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். சாப்பிடும் போது சோறுடன் கடுகுப்பொடி, நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட கருப்பை புண்கள் ஆறும், வலி குறையும்.
கொடாம்புளி ரசம்
குழந்தை பேற்றுக்குப்பின்னர் புளி, காரம் அதிகம் சாப்பிடுவது தாய்மார்களுக்கு ஏற்றதல்ல. எனவே வெள்ளைப்பூண்டு அதிகம் சேர்த்த பத்திய உணவும், கொடாம்புளி, மிளகு சேர்த்த ரசமும் உணவில் சேர்த்து கொடுப்பார்கள். இது வயிற்று வலிக்கு இதம் தரும்.
நன்றி ஆரோக்கியமான வாழ்வு
கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல் பிரச்சனை !
ஹார்மோன் மாற்றங்களினால் கர்ப்பிணிகளுக்கு ஏற்படக்கூடிய ஈறு
அழற்சி பிரச்னை மிகவும் சகஜம். இது 2வது, 3வது
மாதத்தில் தொடங்கி, 8வது
மாதத்தில் தீவிரமாகி, 9வது
மாதம் குறைய ஆரம்பிக்கும். இதற்கு கர்ப்பகால ஈறு அழற்சி (pregnancy
gingivitis) என்று பெயர். ஈறுகளில் வீக்கம், சிவந்து, ரத்தம்
வடிதல் போன்றவை இதன் அறிகுறிகள். மற்ற ஈறு அழற்சி மாதிரிதான் இதுவும்.
கவனிக்கப்படா விட்டால், பற்களைச்
சுற்றியுள்ள எலும்புகளை பாதித்து, திசு
இழப்புக்கு வித்திடும். அரிதாக சில நேரங்களில் வீங்கிய ஈறு திசுக்களானது, அந்த
இடத்தில் கட்டிகளைப் போன்று உருவாக்கலாம். அவை புற்றுநோய் கட்டிகள் அல்ல என்பதால்
பயப்படத் தேவையில்லை. அந்தக் கட்டிகள் வலியின்றி இருக்கும். சில வேளைகளில்
உணவுத்துகள்கள் அதன் அடியில் புகுந்து கொண்டு, வலியை
ஏற்படுத்தலாம்.
பிரசவத்துக்குப் பிறகு இது மெல்லக் குறையத்
தொடங்குமே தவிர, முற்றிலும்
சரியாகாது. எனவே, பிரசவத்துக்குப்
பிறகு, முழுமையான பல் பரிசோதனை அவசியம். முதல் 3 மற்றும்
கடைசி 3 மாதங்களில் பல் சிகிச்சைகளைத் தவிர்க்க
வேண்டும். அவசர சிகிச்சை இல்லை என்கிற பட்சத்தில், பிரசவமாகும்
வரை அதைத் தள்ளிப் போடலாம்.
நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் மருந்துகள், அவற்றின்
அளவுகள் பற்றி பல் மருத்துவரிடம் சொல்ல வேண்டும். டெட்ராசைக்ளின் போன்ற சில
மருந்துகள், கருவிலுள்ள
குழந்தையின் பற்களைப் பாதிக்கும் என்பதால், அவை
கர்ப்ப காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும். எக்ஸ் ரே எடுப்பதும் தவிர்க்கப்பட
வேண்டும்.
மசக்கை அதிகமுள்ள பெண்கள், அடிக்கடி
வாயைக் கொப்பளிக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் வாந்தி எடுப்பதால் உருவாகும்
ஒருவித அமிலச்சுரப்பின் காரணமாக, பற்கள்
பெரிய அளவில் பாதிக்கப்படலாம். பற்பசைகூட உபயோகிக்க முடியாத அளவு மசக்கை தீவிரமாக
இருந்தால், மருத்துவரிடம்
கேட்டு,சுவையற்ற பற்பசை வாங்கி உபயோகிக்கலாம்.
via தமிழ்ச்
சமுதாயம் - தமிழுக்காக தமிழர்களுக்காக ஒரு பகுதி
ஹார்மோன் மாற்றங்களினால் கர்ப்பிணிகளுக்கு ஏற்படக்கூடிய ஈறு
அழற்சி பிரச்னை மிகவும் சகஜம். இது 2வது, 3வது
மாதத்தில் தொடங்கி, 8வது
மாதத்தில் தீவிரமாகி, 9வது
மாதம் குறைய ஆரம்பிக்கும். இதற்கு கர்ப்பகால ஈறு அழற்சி (pregnancy
gingivitis) என்று பெயர். ஈறுகளில் வீக்கம், சிவந்து, ரத்தம்
வடிதல் போன்றவை இதன் அறிகுறிகள். மற்ற ஈறு அழற்சி மாதிரிதான் இதுவும்.
கவனிக்கப்படா விட்டால், பற்களைச்
சுற்றியுள்ள எலும்புகளை பாதித்து, திசு
இழப்புக்கு வித்திடும். அரிதாக சில நேரங்களில் வீங்கிய ஈறு திசுக்களானது, அந்த
இடத்தில் கட்டிகளைப் போன்று உருவாக்கலாம். அவை புற்றுநோய் கட்டிகள் அல்ல என்பதால்
பயப்படத் தேவையில்லை. அந்தக் கட்டிகள் வலியின்றி இருக்கும். சில வேளைகளில்
உணவுத்துகள்கள் அதன் அடியில் புகுந்து கொண்டு, வலியை
ஏற்படுத்தலாம்.
பிரசவத்துக்குப் பிறகு இது மெல்லக் குறையத் தொடங்குமே தவிர, முற்றிலும் சரியாகாது. எனவே, பிரசவத்துக்குப் பிறகு, முழுமையான பல் பரிசோதனை அவசியம். முதல் 3 மற்றும் கடைசி 3 மாதங்களில் பல் சிகிச்சைகளைத் தவிர்க்க வேண்டும். அவசர சிகிச்சை இல்லை என்கிற பட்சத்தில், பிரசவமாகும் வரை அதைத் தள்ளிப் போடலாம்.
நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் மருந்துகள், அவற்றின் அளவுகள் பற்றி பல் மருத்துவரிடம் சொல்ல வேண்டும். டெட்ராசைக்ளின் போன்ற சில மருந்துகள், கருவிலுள்ள குழந்தையின் பற்களைப் பாதிக்கும் என்பதால், அவை கர்ப்ப காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும். எக்ஸ் ரே எடுப்பதும் தவிர்க்கப்பட வேண்டும்.
மசக்கை அதிகமுள்ள பெண்கள், அடிக்கடி வாயைக் கொப்பளிக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் வாந்தி எடுப்பதால் உருவாகும் ஒருவித அமிலச்சுரப்பின் காரணமாக, பற்கள் பெரிய அளவில் பாதிக்கப்படலாம். பற்பசைகூட உபயோகிக்க முடியாத அளவு மசக்கை தீவிரமாக இருந்தால், மருத்துவரிடம் கேட்டு,சுவையற்ற பற்பசை வாங்கி உபயோகிக்கலாம்.
via தமிழ்ச்
சமுதாயம் - தமிழுக்காக தமிழர்களுக்காக ஒரு பகுதி
பிரசவம் - மன வலிமை தரும் நம் பாரம்பரியங்கள். . .!
பிரசவம் என்பது மறுபிறவி மாதிரி...அதை உடல் வலுவுடனும், மன வலுவுடனும் தாங்க வேண்டும் என்பதற்காகவே நம் இந்திய பாரம்பரியத்தில் எத்தனயோ விஷயங்களைப் பார்த்து பார்த்து செய்து வைத்திருக்கின்றார்கள். அவை ஆச்சரியமானவை மட்டுமல்ல...விஞ்ஞான ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டவை என்பதுதான் இன்னும் அதிசயமானவை என்று சொல்ல வேண்டும்.
மனதுக்கான நல்ல விஷயங்களும் நம்முடைய பாரம்பரியத்தில் நிறைய அடங்கியிருக்கின்றன. முக்கியமாக, பிரசவத்துக்கு முன்பு வளைகாப்பு நடத்துகிற விஷயத்தையே சொல்லலாம். வளைகாப்புக்கு நிறைய பெண்கள் கூடி, கர்ப்பவதிக்கு மூத்த சுமங்கலிகள் வளையல் போடுவார்கள். இதற்கான காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், "எங்களை எல்லாம் பார்...நாங்கள் எத்தனை பிள்ளைகளைப் பெற்று உன் முன் நிற்கிறோம்?! நீயும் உன் பிரசவத்தை சுலபமாக கடப்பாய்...தைரியமாக இரு!" என்பதை இங்கு நாம் எடுத்துக் கொள்ளலாம்.
இந்தச் சடங்கில் ஒரு சுவாரஸ்யமான ஒற்றுமையையும் கவனிக்கலாம். வளையல் இடும் பெண்ணின் கையை கர்ப்பப்பைக்கு ஒப்பிட்டுப் பாருங்கள். கை விரல்களை கூப்பி, வளையல்களை உள்ள செலுத்தும்போது சற்று சுலபமாக இருக்கும். வளையலை மணிக்கட்டுப் பகுதிக்குச் செலுத்தும்போது சற்று கடினமாகி, அந்த வலியைச் சற்றே சற்று பொறுத்துக் கொண்டால்...அடுத்த நிமிடமே கரங்களில் வளையல் ஏறிவிடும். இப்படித்தான் பிரசவமும்!
இந்த வளையல்கள் ஏற்படுத்தும் அதிர்வு ஓசை, கருவில் வளரும் குழந்தைக்கு நல்ல தாலாட்டு. நம் தாய் நம்முடன் இருக்கிறாள் என்று குழந்தைக்கு அது கொடுக்கும் பாதுகாப்பு உணர்வு, அழகானது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.
அந்தக் காலத்தில் வீடு என்பது பெரியதாக இருந்தது. பிரசவத்துக்கு முன்பு அடிக்கடி உறக்கம் கலைந்து, அந்தப் பெண்ணுக்கு சிறுநீர் கழிக்க வேண்டியதிருக்கும். இரவு நேரத்தில் கர்ப்பமான பெண் அறையைக் கடந்து, கூடத்தைக் கடந்து, பின்புறமிருக்கும் கழிவறைக்குப் போகும்போது அந்த வளையல் சப்தம் அந்த பெண் எங்கே செல்கிறாள் என்பதை சட்டென்று சுட்டிக்காட்டும். "ஏன்டி, என்னை எழுப்பக்கூடாதா...இரு நானும் வர்றேன்" என்று உதவிக்குச் செல்வார்கள் வீட்டில் இருக்கும் பெண்கள்.
வளையல் போட்ட 'கையோடு' கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக தாய் வீட்டுக்குச் செல்வதிலும் அடங்கி இருக்கின்றன அவர்களின் மனநலம் சம்பந்தப்பட்ட நுணுக்கங்கள். இந்திய நாட்டில் மட்டுமின்றி, ஆசிய நாடுகளில் எல்லாம் பிரசவம் என்று வந்தாலே அந்தப் பெண் தாய் வீட்டுக்குச் சென்று விடுவது வழக்கமாக இருக்கிறது. ஆம்...பிரசவமாகும் பெண்ணின் உடல்நலம் மட்டுமல்ல, மனநலத்தையும் பாதுகாக்கிற பணி, தாய் வீட்டுக்குத்தான் என்று பார்த்துப் பார்த்து இந்த ஏற்பாட்டை செய்து வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.
நம் அம்மா, அப்பா, கணவர், சொந்தங்கள், மருத்துவர் எல்லாம் நம்மைப் பிரசவம் எனும் அந்த பெருநிகழ்வில் இருந்து பத்திரமாக மீட்பார்கள்...' என்ற நம்பிக்கைதானே அன்று அட்டவணைகள் இல்லாமல், செக்கப்புகள் இல்லாமல், மருந்து - மாத்திரைகள் இல்லாமல் எல்லா பிரசவங்களையும் சுகப்பிரசவமாக்கின?!
அந்த நம்பிக்கையை கர்ப்பிணிகளின் மனதில், அவளைச் சுற்றியுள்ளவர்களே ஆழமாக விதைக்கலாம். அதையெல்லாம் செய்து பாருங்கள்...இரண்டு, நான்கு, ஆறு...என்று மாதங்கள். அவர்களுக்குத் தெரியாமலே சுகப்பிரசவத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும்....
via சுபா ஆனந்தி
கர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட வேண்டியவை!!

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளது. எனவே கர்ப்பிணிகள், முதல் மூன்று மாதங்களில் உண்ணும் உணவுகளிலும், செயல்களிலும் கவனத்துடன் நடக்க வேண்டியது அவசியமாகிறது. மேலும் மருத்துவர்களே, இந்த காலங்களில் பெண்களை நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டுமென்றும் பரிந்துரைப்பார்கள். கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஏனெனில் இந்த சத்துக்கள் தான் கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சியை அதிகரிக்கக்கூடியது. அதிலும் புரோட்டீன் கருவின் வளர்ச்சியை சீராக வைக்கவும், கால்சியம் குழந்தையின் எலும்புகள் வலுவோடு இருப்பதற்கும் உதவும். எனவே கர்ப்பிணிகள், இந்த காலங்களில் இந்த சத்துக்கள் நிறைந்த உணவை தவறாமல் சாப்பிட வேண்டும். சரி, இப்போது கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் எந்த உணவுகளையெல்லாம் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று பார்ப்போமா!!!
பசலைக் கீரை
பசலைக் கீரையில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், தாயின் உடலில் இரத்தமானது அதிக அளவில் உற்பத்தியாவதோடு, கருவில் உள்ள சிசுவிற்கும் அதிக அளவில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும்.
பாதாம்
பாதாமில் வைட்டமின் ஈ, ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டீன் அதிகமாக நிறைந்துள்ளது. ஆகவே அதிக அளவில் கர்ப்பிணிகள் சாப்பிட, கருவிற்கு தேவையான புரோட்டீன் சத்தானது கிடைக்கும்.
சிக்கன்
கர்ப்பிணிகளுக்கு சிக்கன் ஒரு பாதுகாப்பான உணவு. ஏனெனில் இதனை முதல் மூன்று மாதங்களில் அதிகம் உணவில் சேர்த்தால், இந்த காலத்தில் ஏற்படும் காலை மயக்கம் மற்றும் சோர்வானது நீங்கும். மேலும் சிக்கனில் இரும்புச்சத்தானது இருப்பதால், உடலில் இரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.
அஸ்பாரகஸ்
கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் மட்டும் உடல் இயங்காது. அந்த சத்து உடலில் உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி நிறைந்து உணவுகளையும் சாப்பிட வேண்டும். இத்தகைய வைட்டமின் டி சத்து, அஸ்பாரகஸில் அதிகம் உள்ளது. மேலும் இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், காலை மயக்கமானது நீங்கும்.
வெண்டைக்காய் .
பலர் இந்த காலத்தில் வெண்டைக்காயை அதிகம் தேர்ந்தெடுத்து சாப்பிடமாட்டார்கள். ஆனால் இதில் நிறைய சத்துக்கள் உள்ளன. அதிலும் பிரச்சனையில்லாமல் நடப்பதற்கான ஃபோலிக் ஆசிட் அதிகம் உள்ளது. அதுமட்டுமல்லாமல், கர்ப்பிணிகள் இதனை சாப்பிட்டால், நீரிழிவு பிரச்சனை வராமல் தடுக்கலாம்.
ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், அவை தாயின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுநோய்கள் எதுவும் தாக்காமல் தடுப்பதோடு, அதில் உள்ள ஃபோலிக் ஆசிட் குழந்தை பிறப்பதில் உண்டாகும் பிரச்சனையை தடுக்கும்.
ப்ராக்கோலி
சாதாரணமாகவே ப்ராக்கோலியில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளது. அதிலும் இதனை கர்ப்பிணிகள் அதிகம் உணவில் சேர்த்தால், அதில் உள்ள இரும்புச்சத்து, தாயின் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
முட்டை
முட்டையில் அதிக அளவில் புரோட்டீன் நிறைந்திருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஆகவே கர்ப்பிணிகள் தினமும் 2 முட்டைகளை சாப்பிட்டு வருவது, தாய்க்கு மட்டுமின்றி, குழந்தைக்கும் நல்லது.
சால்மன்
பொதுவாகவே மீனில் ஒமோக-3 ஃபேட்டி ஆசிட், கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் மீன் சாப்பிடுவது நல்லது. ஆனால் அவற்றில் சால்மன் என்ற மீனில் மற்ற மீன்களை விட, அதிகமான அளவில் இத்தகைய சத்துக்கள் நிறைந்துள்ளன.
தயிர்
பால் பொருட்களில் ஒன்றான தயிரில் கால்சியம் அதிகம் இருக்கிறது. மேலும் கர்ப்பமாக இருக்கும் போது சில பெண்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படும். இத்தகைய எரிச்சலை தணிக்கும் வகையிலும், உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவும், தயிரை அதிகம் சாப்பிடுவது நல்லது.
Thanks to : பெண்கள் Women
பூண்டு !!! பிரசவம் ஆனா பெண்களுக்கு அதிக பால் சுரக்க பயன் படும் பூண்டு !!!
கைவைத்தியத்துக்கு சிறந்தது பூண்டு. அதன் மருத்துவக்குணங்களைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்தாலும், நாம் அதை எளிதில் மறந்து விடுவோம்.அதனால்தான் என்னவோ நம் முன்னோர்கள் சமையலில் பூண்டை அதிகம் பயன்படுத்த சொல்லி இருகின்றனர்
பிரசவம் ஆனா பெண்களுக்கு பொதுவாக குழந்தை பெற்ற பெண்கள் தினமும் சத்தான அதே சமயம் உடலுக்கு ஒத்துக் கொள்ளும் உணவை தேர்வு செய்து உண்ண வேண்டும். குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும் என்பதால் பால் சுரப்பதற்கு உதவும் உணவுகளையும் அதிகமாக உண்ண வேண்டும்.
அதனால் தான் குழந்தை பிறந்த பின்பு பால் அதிகம் சுரக்க கூடிய உணவு வகைகளை சாப்பாட்டில் சேர்த்து கொள்ளவார்கள்.
பால் அதகம் சுரக்க உதவுவதில் தலையான ஒன்று பூண்டு .எனவே தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் குடித்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது. கர்ப்பப்பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.
சுறா போன்ற மீன்களுடன் அதிகமாக பூண்டை போட்டு புட்டு செய்து பிள்ளை பெற்றவர்களுக்குத் தருவார்கள். இதுவும் பால் சுரப்பதற்கு உதவி செய்யும்.தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும். உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு.
இதனால்தான் பிள்ளை பெற்ற பெண்களுக்கு தலைக்கு ஊற்றும் போது நல்லெண்ணையைக் காய்ச்சி அதில் பூண்டு போட்டு அந்த எண்ணெயை தேய்த்து உடல் முழுவதும் மசாஜ் செய்கின்றனர்.பூண்டிற
வாயு தொல்லை இருப்பின் பாலுடன் பூண்டை நன்கு வேக வைத்து நக்கு மசித்து சாப்பிட்டால் வாயு தொல்லை நீங்கிவிடும்.நீங்க பூண்டை பயன் படுத்த தவங்களா இருந்தால் இன்றிலிருந்து பூண்டை பயன்படுத்துங்க
மருத்துவக் குணங்கள்:
குரல் தெளிவு, உடற்சக்தி, சிறு நீரகம் ஜீரணம் மேம்படும்.
கொழுப்பு, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அவசியம் பூண்டுச் சாறை குடிக்க வேண்டும்.
இருதய அடைப்பு விலகும், மூட்டுவலி, முடக்கு வாதம் சரியாகும்.
பூண்டு சாறை தெளித்தால் அந்த இடத்திற்கு பாம்புகள் வராது.
குடல் பூச்சிகள், ஆஸ்துமா, மூக்கடைப்பு விலகும், பக்க வாதம் சரியாகும்.
நம்முடைய சமையலறையில் இருக்கும் மருத்துவ உணவுப் பொருட்களில் மிகவும் முக்கியப்பங்கு வகிப்பது வெள்ளைப் பூண்டு. தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளில் கண்டிப்பாக பூண்டுக்கு இடம் உண்டு. மருத்துவ குணம் வாய்ந்த பூண்டின் மகத்துவத்தை இங்கே பார்ப்போம்.
* பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது.
* பூச்சிக்கடி உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம.
* பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில்போட தேமல் காணாமல் போய் விடும்.
* வெள்ளைப்பூண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் கொழுப்புக் குறையும்.
* பூண்டை சாப்பிட்டவுடன் கொஞ்சம் அரிசி சாப்பிடுங்கள். பூண்டு நாற்றம் போய் விடும்.
* சளிப் பிடிக்கக் கூடியவர்களுக்கு பூண்டை உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்த சூப் கொடுங்கள்.
* வெள்ளைப் பூண்டை பாலில் வேகவைத்து காலை, மாலை அருந்தலாம்.
*இருதயத்தை இதமாகக் காப்பது பூண்டுச் சாறு. எல்லாக் காலங்களிலும், எல்லா இடங்களிலும் கிடைக்கும். குரல் வளம் தரும். பசித்தன்மை, கூட்டி பசியின்மையை விரட்டும்.

—
(நன்றி இணையத்தில்
எடுத்தது )


