✨ இன்றைய சிந்தனை: டூப்ளிகேட் வாழ்க்கை!

மணக்கால் அய்யம்பேட்டை | 10:54 AM | Best Blogger Tips

வாழ்க்கை முறை: அறிவு மற்றும் புரிதல்

வீட்டில் பிரிட்ஜ் இல்லாத நாட்களில் ஐஸ் வாட்டருக்காக ஏங்கியிருந்தேன்
இப்போது என் வீட்டிலும் ஏசி, பிரிட்ஜ் இரண்டும் இருக்கிறது.



நம்ப மாட்டீர்கள் — வாங்கிய நாளிலிருந்து இன்று வரை,
பிரிட்ஜில் தண்ணீர் வைத்து குளிர்ச்சியாக்கி குடித்ததே இல்லை!

அங்குமிங்கும் பார்த்துப் பார்த்து,
வீட்டில் வாங்கி வைத்த
டைனிங் டேபிளில் இப்போதெல்லாம் உட்கார்ந்து சாப்பிடத் தோன்றுவதில்லை...


அலுவலகம் மற்றும் வெளியிடங்களில் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு அலுத்துப் போனவனுக்கு,
வீட்டில் இருக்கும்போது
தரையில் அமர்ந்து சாப்பிட்டால் மட்டுமே பரம திருப்தி!
வாழ்க்கைல மனுஷனுக்கு வரக்கூடாத ...
சோஃபாவும் அப்படித்தான்...

பீட்ஸா, பர்கர் என்றெல்லாம் பல பெயர்கள் சொல்லினாலும் கூட —


என்ன இருந்தாலும்,
“வாழை இலை சாப்பாட்டுக்கு இணையுண்டா!” என்று கடைசியில் மனமாற்றம் அடைந்தவர்களில் நானும் ஒருவன்!
Prime Video: A Way of Life


8GB RAM, Quad-core processor, 128GB built-in memory என்று அனைத்தையும் பார்த்து, அதிக காசு கொடுத்து வாங்கிய மொபைலில்


வெறுமனே
Facebook, WhatsApp-ல் மூழ்குவதை நினைத்து அவ்வப்போது சிரித்துக் கொள்வேன்...

ஆயிரம் ரிவியூக்களைப் பார்த்து வாங்கிய டெலிவிஷன் பெட்டி —

வாழ்க்கைல மனுஷனுக்கு வரக்கூடாத வியாதி விரக்தி ஆனா பிடிச்ச படிப்பு படிக்க  முடியல, பிடிச்ச வேலை கிடைக்கல, பணக்கஷ்டம், பிடிச்ச மாதிரி ...
ஆனால் இப்போதெல்லாம் நான் நாளொன்றுக்கு, இல்லை இல்லை… வாரத்திற்கு அரை மணி நேரம் டிவி பார்த்தாலே அது பெரிய விஷயம்!

காலம் மாறிவிட்டது…

இப்போது கையிலேயே
உலகத்தை காணும் வசதி இருக்கிறது.

அவரது ஓய்வில் நுழைய உழைப்பு ...
அதற்காக வருட சந்தாவும் செலுத்தியிருக்கிறோம்.
எல்லாம் இருந்தும் எதையும் சரியாக பயன்படுத்துவதில்லை.


பயன்படுத்தினாலும்
அளவாகத்தான்... வெத்து பந்தா மாதிரி ஆகி விட்டது வாழ்க்கை!

அன்லிமிட்டெட் சாப்பாட்டை வாங்கிவிட்டு, அளவுச் சாப்பாடு
சாப்பிடுபவனைப் போல
நாமும் வசதிகளுக்குள் வாழ்ந்தாலும்
, அவற்றை அளவாகத்தான் பயன்படுத்துகிறோம்...
The Way of Life: DEFINITIVE EDITION on Steam
எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்தால் —
எல்லாமே ஒரு மாயையாகத்தான்
தோன்றுகிறது…

இது ஒரு
“டூப்ளிகேட் வாழ்க்கை” என்று நன்றாகவே உணர முடிகிறது.

வீட்டை மிதித்தவுடன் களைப்பில் “சரி, கொஞ்ச நேரம் கண்ணயரலாம்” என்ற எண்ணத்தில்
தினசரி எனக்காகக் காத்திருக்கும்
தலையனையைத்தான் கண்கள் தேடுகிறது...

இப்படியாக பல
சுய பரிசோதனைகளின் வாயிலாக சில உண்மைகள் உரைத்தன… உணர்த்தியும் விட்டன...

இப்போது பண வரவு, சகல வசதிகளோடு இருந்தாலும் —


வாழ ஆசைப்படுவது நமது
பழைய, மனதுக்குப் பிடித்த நெருக்கமான வாழ்வைத்தான்!

ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும்… No peace of mind!

இதைப்
படிப்பவர்களுக்கு புரியுதோ, புரியலையோ


ஆனா
அனுபவிச்சவர்கள் இதை கண்டிப்பா உணர்வாங்க!

 🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷 

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏