இறைவன் செஞ்ச இந்த படைப்பு ஒரு மேஜிக்...🙏

மணக்கால் அய்யம்பேட்டை | 2:57 PM | Best Blogger Tips

மனித உடலில் மறைந்துள்ள ரகசியங்கள்... உங்க உடம்புக்குள்ள ஓராயிரம் அதிசயம்  இருக்கு தெரியுமா? | Unknown Secrets About Human Body - Tamil BoldSky

💐💐இன்றைய சிந்தனைக்கு💐💐


இறைவன் செஞ்ச இந்த படைப்பு ஒரு மேஜிக்...🙏 

பாத்து செஞ்ச  நம்ம உடம்பு ஒரு லாஜிக்!
How to change a tire the right way | Plymouth Rock
டயரு தேயுது ரோட்டுல... ஆனா,
நம்ம பாதம் இரண்டு பாருங்க 
நாடு சுற்றியும் தேய்மானம் இல்லை.. 😂
செருப்பு தான் அடிக்கடி பிஞ்சு போகுது,
 

ஆனா உள்ளங்கால் இன்னும் வழ வழப்பா இருக்குது!😂

உடம்புல முக்கால்வாசி தண்ணி இருக்கு,
ஆனா ஆயிரமாயிரம் ஓட்டை இருந்தும்
அரை சொட்டு கூட ஒழுகாம நிக்குது!😂

நூறு வாட்ஸ் பல்புக்கே வயரு சுவிட்ச் வாங்க வேணும்,


ஆனா பேட்டரி இல்லாமலே இதயம் துடிக்குது – அதுவும்
ரீசார்ஜ் இல்லாமலேயே ரிதமா அடிக்குது!😂

லட்சம் ரூபாய் கேமரா கூட மக்கர் பண்ணும்,சர்வீஸ் கேட்கும்!
நம்ம கண்ணு மட்டும் பளிச்சின்னு படத்தை பாக்க வைக்கும். 
 பாத்ததை பட்டுனு மூளைக்கு சொல்லும் 😂
நம்ம உடம்பு – chinnuadhithya
நாக்குல மைக்ரோஸ்கோப் எதுவுமே இல்லை,
சாப்பிடும் உணவுல உப்பு குறைஞ்சா – அது
சப்பு கொட்டி சண்டை
போடும் 😂
 
எப்பவோ தின்னது எல்லாம் செரிச்சு முழங்கை அளவு பிறந்த நம்மை முழுசா ஆக்கி முழங்க வைக்குது!

படிச்சதை எல்லாம் படிய வைக்குது, பட்டுனு பதில் சொல்லி பகுமானம் காட்டுது!
எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் ...
மிஷினுக்கு எல்லாம் சர்வீஸ் வேணும்,
நம்ம ரத்த ஓட்டத்துக்கு – எந்த
ஆயிலும்
தேவையில்ல, 
on off  எதுவும் தேவையில்ல!
தொடர் ஓட்ட சாதனை புரியும்!

சென்சார் இல்லாமலே தோலு உணருது,
கொசு கடிச்சா – கை
சரியான ஸ்பாட்டுக்கு தானே பாயுது👏

எல்லா சத்தத்தையும் காது பிரிச்சு மேயுது!
ஆனா பொண்டாட்டி/கணவன் கூப்பிட்டா மட்டும் – அது
ஏனோ கேட்காத மாதிரி நடிக்குது!😂
வடகாயிலின் காப்பகப்படுத்தப்பட்ட கருத்துகள் ...
எண்ணி எண்ணி பார்த்தும் எண்ணி முடியல!
இறைவன் செஞ்ச மேஜிக் அளவில்லை👌

பார்த்து பார்த்து நாம் செய்ய முடியுமா 👍

தினமும் காலையில
எழுவது கூட எவ்வளவு 
பெரிய
மிராக்கிள் 🙏

 எல்லா படைப்பையும்
பார்த்து
வியப்போம்!
பக்குவமா நடப்போம்!!

படைச்ச இறைவனுக்கு
நன்றி சொல்லி 
பத்திரமா பாத்துக்குவோம் 🙏

தீக்ஷ்ண தங்ஷ்ட்ரா பைரவாஷ்டகம் ...


உடல் நலன், மனநலன் இணைந்த வாழ்க்கை இல்லையேல் இறையருளால் நமக்கு கிடைத்த வசதிகள், கிடைத்து கொண்டிருக்கும் வசதிகள், கிடைக்கப் போகும் வசதிகள் என அனைத்தும் பூஜ்யமே என்பதை முதலில் உணர்ந்து, புரிந்து கொள்ள வேண்டும்.  நல்ல எண்ணங்களுடன் வாழ்க்கையில் உடல்,மன நலனுக்கு முன்னுரிமை கொடுத்து ஆரோக்கியமாக வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும். 

வாழ்க நலமுடன். 

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 May be an image of tree🌷 🌷🌷 🌷

 

 

 

தொழில்நுட்பம் என்பது நம் இரத்தத்தில் ஊறிய ஒன்று,.. அது நேற்று இன்று வந்ததல்ல🏛️🐘⚓🌹

மணக்கால் அய்யம்பேட்டை | 2:42 PM | Best Blogger Tips

 ராமேஸ்வரம்: கோவில்கள் முதல் கோஸ்ட் டவுன் வரை- ஆன்மீகமும் அமானுஷ்யமும் கலந்த  சூப்பர் ஸ்பாட்

ராமேஸ்வரம் ஒரு தீவு....அங்கே மலைகளோ,குன்றுகளோ கிடையாது. அதனால் கருங்கற்களும் கிடையாது  வெறும் கடற்கரை..

ஒரு தீவில், அதுவும் மணல் மட்டுமே நிறைந்த  மணற்ப்பரப்பில் பல்லாயிரம் டன் எடையுள்ள கருங்கற்களை கொண்டு ஒரு பிரம்மாண்ட மலையே எழுப்பி கட்டி இருக்கிறார்கள்  நம் முன்னோர்கள்.

கிட்டத்தட்ட 800 வருடங்கள் உழைப்பில் உருவானது இந்த ஆலயம்..

ராமேஸ்வரத்தில் பார்க்க வேண்டிய 13 சுவாரஸ்யமான இடங்கள் | Housing News
பன்னிரண்டாம் நூற்றாண்டில் தொடங்கி பதினெட்டாம் நூற்றாண்டு வரை..

ராமேஸ்வரம் கோவிலைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட கருங்கற்கள் அனைத்தும் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டவை.

அந்தக் காலத்தில் 20 முதல் 30 டன் எடையுள்ள கற்களை ஏற்றிச் செல்லவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பெரிய மரத் தோணிகளைப் பயன்படுத்தினார்கள். இவை அகலமான அடிப்பகுதியைக் கொண்டவை.

​ஒரு பெரிய கல் தூணை ஒரு படகில் ஏற்றுவதற்குப் பதிலாக, இரண்டு அல்லது மூன்று பெரிய படகுகளை ஒன்றாக இணைத்து, அதன் மேல் ஒரு வலுவான மர மேடையை அமைப்பார்கள்.


​இதனால் பாரம் சமமாகப் பிரிக்கப்பட்டு, படகு கவிழாமல் மிதக்கும். இதை இன்று நாம் "பாண்டூன்" (Pontoon) என்று அழைக்கிறோம்.
ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்..!
 அடுத்து.......இரண்டு பெரிய படகுகளை இணைத்து, நடுவே அந்தப் பிரம்மாண்ட தூணைக் கட்டித் தொங்கவிட்டனர். தண்ணீருக்குள் கல்லின் எடை குறைவு என்ற 'மிதப்பு விசை' தத்துவத்தைப் பயன்படுத்தி, கடலின் ஆழமான பாதைகளில் அந்தப் பாரத்தைச் சுமந்து வந்தனர்.

தரை தட்டாமல் இருக்க, நிலவு மற்றும் ஓதங்களின் (Tides) நேரத்தைக் கணித்து கடல் மட்டம் உயரும்போது படகுகளை நகர்த்தினார்கள்

 ராமேஸ்வரம் கடல் அலைகளே இல்லாமல் குளம் போல அமைதியாக இருப்பதுதான் இதற்குப் பெரிய உதவியாக இருந்தது.

​அலைகள் அதிகமாக இருந்தால் படகு ஆடும், கல் கீழே விழுந்துவிடும்.
​ஆனால் அமைதியான கடல் என்பதால், டன் கணக்கிலான பாரத்தை ஏற்றிய படகுகள் எந்த ஆபத்தும் இல்லாமல் நிதானமாகத் தீவை அடைய முடிந்தது.

கரையை அடைந்த கற்களை, பல நூறு யானைகள் மற்றும் காளைகளைக் கொண்டு இழுத்து வந்தனர். உயரமான இடங்களுக்குக் கற்களைக் கொண்டு செல்ல, , மண் சரிவுப் பாதைகளை (Earth Ramps) அமைப்பார்கள்.

 அதாவது, கோவிலின் உயரம் வளர வளர, மண்ணைக் கொட்டி ஒரு பெரிய மேடு போலச் செய்து, அதன் வழியாக யானைகளை வைத்து கற்களை மேலே தள்ளிக் கொண்டு செல்வார்கள். கோவில் கட்டி முடித்ததும் அந்த மண் அகற்றப்படும்.

ராமேஸ்வரம் கோயிலின் அஸ்திவாரம் என்பது 'மிதக்கும் அஸ்திவாரம்'
 
 நம் முன்னோர்கள் "சாண்ட்விச்' முறையைப் பயன்படுத்தினார்கள்..
முதலில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள மணலைத் தோண்டி, அங்கே நீர் ஊற்றி நிறைய யானைகளை விட்டு நடக்கச் செய்வார்கள். யானையின்  கால் படும்போது அந்த இடத்தின் மணல் பல டன் அழுத்தத்திற்கு உள்ளாகும். இதனால் மணலுக்கு இடையில் உள்ள காற்று வெளியேறி, அது பாறை போல இறுகிவிடும்.

அதன் மேல் கருங்கற்களை அடுக்குவதற்கு முன் கடுக்காய், சுண்ணாம்பு, கருப்பட்டி மற்றும் சில மூலிகைச் சாறுகளைக் கலந்து ஒரு 'பேஸ்ட்' போலச் செய்து இடையில் பூசினார்கள். இது காலப்போக்கில் கல்லை விடவும் வலிமையான ஒன்றாக மாறிவிடும்.இதற்குப் பிறகுதான் கற்களை அடுக்கத் தொடங்கினார்கள். இது நிலநடுக்கம் வந்தாலும் தாங்கும் வலிமை கொண்டது.

மணல் என்பதால் ஒரு பக்கம் பாரம் அதிகமானால் கோயில் சாய்ந்துவிடும். எனவே, மேற்கூரையின் எடையைத் தூண்கள் தாங்கும்போது, அந்தப் பாரத்தை மணலுக்குக் கடத்தாமல் தரைப்பகுதியில் பிரம்மாண்டமான 'தளவரிசை கற்களை' (Paving stones) விரித்தார்கள். இது பாரத்தை சமமாகப் பிரித்துக் கொடுத்தது.

ராமேஸ்வரத்தின் 3-வது பிரகாரம் உலகப் புகழ் பெற்றது. இதில் சுமார் 1212 தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணும் 20 இருந்து30 டன் எடை கொண்டது..

 உலகிலேயே மிக நீளமான அந்தப் பிரகாரத்தின் தூண்கள் அனைத்தும் துல்லியமான சமச்சீர் நிலையில் உள்ளன. ஒரு முனையில் நின்று பார்த்தால், அனைத்துத் தூண்களும் ஒரே நேர்க்கோட்டில் தெரியும். இத்தனை ஆயிரம் டன் பாரம் கீழே இருக்கும் மணலை அழுத்தாமல் இருக்க, ஒவ்வொரு தூணின் அடியிலும் மிகப்பெரிய கல் பலகைகளை விரித்து எடையைச் சமமாகப் பரப்பினார்கள் (Weight Distribution).

​​இந்தத் தூண்களை நிலைநிறுத்த 'Lock and Key' முறை எனப்படும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணையும் முறையைப் பயன்படுத்தினார்கள்.

 நம் முன்னோர்களின் ஆழ்ந்த அறிவு நுட்பம் பிரமிக்க வைக்கும் 

"ராமேஸ்வரம் கோவில்  ஆன்மீக இடம் மட்டுமல்ல.. அது, ஒரு 'அறிவியல் கூடம்..

நம் தமிழ் முன்னோர்கள் மணலில் மலை போன்ற கோயிலைக் கட்டி, அதன் நிழலில் உலகையே வியக்க வைத்துள்ளான். 

தொழில்நுட்பம் என்பது நம் இரத்தத்தில் ஊறிய ஒன்று,.. அது நேற்று இன்று வந்ததல்ல🏛️🐘⚓🌹

🌹🌹🌹🌹🌹🌹நன்றி 🌹🌹🌹🌹🌹 

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

 

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷

வெண்ணெயாக மாறும் அதிசயம்!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:11 PM | Best Blogger Tips

 வெண்ணெயாக மாறும் அதிசயம்! - சிவகங்கா கவிகங்காதீஸ்வரர் கோவில் - YouTube


வெண்ணெயாக மாறும் அதிசயம்! - சிவகங்கா கவிகங்காதீஸ்வரர் கோவில் 🙏
Jayanthy - வெண்ணெயாக மாறும் அதிசயம்! - சிவகங்கா கவிகங்காதீஸ்வரர் கோவில் 🙏  இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்ட இறைவனின் திருவிளையாடல்கள் இன்றும் ...
இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்ட இறைவனின் திருவிளையாடல்கள் இன்றும் சில இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படி ஒரு அதிசய தலம் தான் கர்நாடக மாநிலம், சிவகங்காவில் உள்ள கவிகங்காதீஸ்வரர் கோவில்.

📍 எங்கே உள்ளது?
பெங்களூருவில் இருந்து சுமார் 54 கிலோமீட்டர் தொலைவில், தும்கூர் மாவட்டத்தில் உள்ள சிவகங்கா கிராமத்தில் ஒரு மலைக்குகையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

என்ன அதிசயம்?
சாதாரணமாக வெண்ணெயை உருக்கினால் தான் நெய் கிடைக்கும். ஆனால், இங்கே அபிஷேகம் செய்யப்படும் நெய், மீண்டும் வெண்ணெயாக மாறும் அதிசயம் நிகழ்கிறது! 😲

இங்குள்ள 5 அடி உயர லிங்கத்திற்கு பக்தர்கள் நெய்யைக் கொண்டு அபிஷேகம் செய்கிறார்கள்.

அர்ச்சகர் மந்திரங்கள் ஓதி நெய்யால் அபிஷேகம் செய்தவுடன், அந்த நெய் திடமாகி வெண்ணெய் வடிவில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இந்த வெண்ணெய் எத்தனை நாட்கள் ஆனாலும் உருகுவதில்லை என்பது கூடுதல் ஆச்சரியம்!

🩺 தீராத நோய் தீர்க்கும் மருந்து:
இந்த வெண்ணெய் பிரசாதம் பல நோய்களுக்கு அருமருந்தாகப் பயன்படுகிறது என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை 

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷