ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:27 PM | Best Blogger Tips
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். க்கான பட முடிவு
ஒரு கிராமத்தில் வசித்து வந்த
ஒரு மனிதன்
திடீரென இறந்து போனான்.,
அவன் அதை உணரும் போது,
கையில் ஒரு பெட்டியுடன் 
கடவுள் அவன் அருகில் வந்தார்.. ]
#கடவுள் :
"
வா மகனே....
நாம் கிளம்புவதற்கான
நேரம் வந்து விட்டது.."
#மனிதன் :
"
இப்பவேவா?
இவ்வளவு சீக்கிரமாகவா?
என்னுடைய திட்டங்கள்
என்ன ஆவது?"
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். க்கான பட முடிவு
#கடவுள் :
"
மன்னித்துவிடு மகனே....
உன்னைக் கொண்டு
செல்வதற்கான நேரம் இது.."
#மனிதன் :
"
அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?"
#கடவுள் :
"
உன்னுடைய உடைமைகள்....."
#மனிதன் :
"
என்னுடைய உடைமைகளா!!!
என்னுடைய பொருட்கள்,
உடைகள், பணம்,....
எல்லாமே இதில் தான்
இருக்கின்றனவா?"
#கடவுள் :
"
நீ கூறியவை அனைத்தும்
உன்னுடையது அல்ல..
அவைகள் பூமியில்
நீ வாழ்வதற்கு தேவையானது.."
#மனிதன் :
அப்படியானால்,
"
என்னுடைய நினைவுகளா?"
#கடவுள் :
"
அவை காலத்தின் கோலம்...."
#மனிதன் :
"
என்னுடைய திறமைகளா?"
#கடவுள் :
"
அவை உன் சூழ்நிலைகளுடன்
சம்பந்தப்பட்டது...."
#மனிதன் :
"
அப்படியென்றால் என்னுடைய
குடும்பமும் நண்பர்களுமா?"
#கடவுள் :
"
மன்னிக்கவும்.......
குடும்பமும் நண்பர்களும்
நீ வாழ்வதற்கான வழிகள்...."
#மனிதன் :
"
அப்படி என்றால்
என் மனைவி மற்றும் மக்களா?"
#கடவுள் :
"
உன் மனைவியும் மக்களும்
உனக்கு சொந்தமானவர்கள் அல்ல,
அவர்கள் உன் இதயத்துடன்
சம்பந்தப்பட்டவர்கள்...."
#மனிதன் :
"
என் உடலா?"
#கடவுள் :
"
அதுவும் உனக்கு
சொந்தமானதல்ல....
உடலும் குப்பையும் ஒன்று...."
#மனிதன் :
"
என் ஆன்மா?"
#கடவுள் :
"
அதுவும் உன்னுடையது அல்ல...,
அது என்னுடையது......."
மிகுந்த பயத்துடன்
கடவுளிடமிருந்து
அந்தப் பெட்டியை வாங்கி
திறந்தவன்,
காலி பெட்டியைக் கண்டு
அதிர்ச்சியடைகிறான்..
கண்ணில் நீர் வழிய
கடவுளிடம்,
"
என்னுடையது என்று
எதுவும் இல்லையா?"
எனக் கேட்க,
#கடவுள் சொல்கிறார்,
"அதுதான் உண்மை..
நீ வாழும்
ஒவ்வொரு நொடி மட்டுமே
உன்னுடையது..
வாழ்க்கை என்பது
நீ கடக்கும் ஒரு நொடிதான்..
ஒவ்வொரு நொடியையும்
சந்தோஷமாக வாழ்
எல்லாமே உன்னுடையது என்று
நினைக்காதே........"
-- ஒவ்வொரு நொடியும் வாழ்
-- உன்னுடைய வாழ்க்கையை வாழ்
-- மகிழ்ச்சியாக வாழ்
அது மட்டுமே நிரந்தரம்..
-- உன் இறுதிக் காலத்தில்
நீ எதையும் உன்னுடன்
கொண்டு போக முடியாது
வாழுகின்ற
ஒவ்வொரு நொடியையும்
சந்தோஷமாக வாழ்வோம்

நன்றி இணையம்

ஜி.எஸ்.டி மோடி

மணக்கால் அய்யம்பேட்டை | 1:24 PM | Best Blogger Tips
ஜி.எஸ்.டி
"ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டபோது கடுமையாக இருந்த வரி விகிதங்கள், ஒவ்வொரு மாதத்திலும் கூடிய ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்டுவருவதால், வரிச்சுமை மிகக் கடுமையாக இருந்த தோற்றம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது" - விகடன்.
மோடி எதிர்ப்பு ககடன்லயே "ஜிஎஸ்டி நல்ல முடிவுதான். வணிகர்களும், வாடிக்கையாளர்களும், அரசும் பயன் பெறுகின்றன" என கட்டுரை.
இதில் இவர்கள் சொல்லாமல் விட்டது, வரி செலுத்த வேண்டிய வணிகர்களில் கிட்டத்தட்ட 45% வணிகர்கள் தான் வரி செலுத்துகிறார்கள். மீதமிருக்கும் 55% வரி கட்டாமல் ஏய்க்கும் வேலை செய்கிறார்கள். இவர்களும் வரி செலுத்தினால், வசூல் ரெட்டிப்பாகும், அதை தொடர்ந்து, அரசும் வரியை பாதியாக கூட குறைக்க வாய்ப்பிருக்கிறது. செய்வார்களா...?
No automatic alt text available.
கீழே விகடன் கட்டுரை. (நன்றி: Hariharan Gopinathan ஜி)
இந்த வெற்றி பிரதமர் #மோடி ஒருவருக்கே..!
ஜி.எஸ்.டி (GST) அறிமுகப்படுத்தப்பட்டால், மாநிலங்களின் வரிவசூல் குறைந்து, பொருளாதார ரீதியில் பெரும்இழப்பைச் சந்திக்க நேரிடும் என்ற அச்சம் இருந்தது.
இதன் காரணமாக, ஜி.எஸ்.டி-யைக் கொண்டுவருவதை தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கடுமையாக எதிர்த்தன.
மேலோட்டமாகப் பார்க்கையில், ஜி.எஸ்.டி வரியை மாநிலங்களோடு மத்திய அரசும் பகிர்ந்துகொள்வதால், மாநில அரசுக்கு இழப்பு ஏற்படும் என்பது சரியான வாதமாகவே அப்போது பட்டது.
விற்பனைவரித் துறை வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், கடந்த ஆண்டுகளில் `வாட்வரி அமலில் இருந்தபோது வசூலான தொகையைவிட, தற்போது கூடுதலாக வசூலாகியிருப்பது தெரியவந்துள்ளது.
குறிப்பாக, தமிழ்நாட்டில் கடந்த ஜூலை 2017 முதல் டிசம்பர் 2017 வரை ஜி.எஸ்.டி-யால் வசூலான தொகை 23,317.76 கோடி ரூபாய். இதற்கு முந்தைய ஆண்டில் வாட் வரியாக வசூலிக்கப்பட்ட தொகை 19,017.87 கோடி ரூபாய். எனவே, கடந்த ஆண்டைவிட ஜி.எஸ்.டி மூலம் வசூலான தொகை 22 சதவிகிதம் அதிகம்.
ஜி.எஸ்.டி வசூலில் தமிழ்நாட்டுக்கான பங்கு 15,008.10 கோடி ரூபாய். இதுபோக, மாநிலங்களுக்கு இடைப்பட்ட விற்பனையால் தமிழகத்துக்குக் கிடைக்கும் வரிவசூல் தொகை, இன்னும் கணக்கிடப்படவில்லை. அந்தக் கணக்கீடுகளும் கோடிகளில் இருக்கும். அதையும் சேர்க்கும்போது வாட் தொகையை மிஞ்சக்கூடும். எனவே, ஜி.எஸ்.டி-யால் மாநிலங்களுக்கு இழப்பு என்ற வாதமானது தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது.
கோவா முதலமைச்சர் மனோகர் பரிக்கரும் ஜி.எஸ்.டி வசூல், வாட் வசூலைவிட அதிகமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வாட்டைவிட ஜி.எஸ்.டி வசூல் அதிகரித்திருப்பதற்கு சில காரணங்களை பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். அவற்றைப் பார்ப்போம்...
உற்பத்தியாளர், மொத்த விற்பனையாளர், முகவர், விற்பனையாளர் என ஒவ்வொரு கட்டத்திலும் பிரித்துப் பிரித்து லாபத்துக்கு மட்டும் வரி வசூலிக்கப்படுவதால், விற்பனையாளர்களுக்கு வரிச்சுமை பாதிப்பு அதிகமில்லை. எனவே, ஜி.எஸ்.டி பெரும்பாதிப்பாகத் தெரியவில்லை. இறுதியாக, நுகர்வோர் மட்டுமே ஜி.எஸ்.டி வரியை முழுமையாக ஏற்பதாலும் பாதிப்பை உணர்வதாலும் வரிவசூலில் சிக்கல் இல்லை.
இந்த வரி வசூலிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் பில் போடப்பட்டு முறையாக வியாபாரம் நடப்பது ஜி.எஸ்.டி-யில் உறுதிசெய்யப்படுவதால், வாட் வரிவசூலைவிட ஜி.எஸ்.டி வரிவசூல் அதிகப்படியாக உள்ளது.
அதேபோல், ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஜி.எஸ்.டி-யில் பதிவுசெய்யாத நிறுவனங்களால் தங்களது வியாபாரத்தை ஓர் அளவுக்குமேல் அதிகரிக்க இயலாத சூழல் உள்ளது. எனவே, பெரும்பாலான நிறுவனங்கள் ஜி.எஸ்.டி வரிக்கட்டமைப்புக்குள் வந்தன. வரிஏய்ப்பு செய்யும் போலி நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்தது.
ஜி.எஸ்.டி-யில் சிறு நிறுவனங்களின் கணக்குவழக்குகள்கூட ஆடிட்டரின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தவேண்டி வந்ததால் அனைத்தும் முறைப்படுத்தப்பட்டன. வரி கட்டும் சங்கிலியில் யாரேனும் வரி ஏய்ப்பு செய்ய நினைத்தாலும் சங்கிலியின் அடுத்த நிறுவனத்தின் நெருக்கடியால் வரி ஏய்ப்பு செய்ய இயலாத சூழல் நிலவுவதால், வேறு வழியின்றி ஜி.எஸ்.டி வரிக்கணக்கை முறையாகத் தாக்கல் செய்வது கட்டாயம்.
இந்த வரிவசூலில் மத்திய அரசும் மாநில அரசும் பங்காளிகளாக இருப்பதால், வரி ஏய்ப்பு செய்பவர்கள் மத்திய-மாநில அரசுகள் இரண்டின் அதிகாரிகளையும் எதிர்கொள்ளவேண்டிய சூழல் நிலவுகிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு முறைகேடான, அதிகப்படியான பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்ட நிறுவனங்கள் மீது அவ்வப்போது எடுக்கப்படும் நடவடிக்கைகளும் அறிவிப்புகளும் வரி ஏய்ப்பு செய்ய நினைப்பவர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டபோது கடுமையாக இருந்த வரி விகிதங்கள், ஒவ்வொரு மாதத்திலும் கூடிய ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்டுவருவதால், வரிச்சுமை மிகக் கடுமையாக இருந்த தோற்றம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. எனவே, தொடக்கத்தில் குறைந்திருந்த நுகர்வுக் கலாசாரம், போகப்போக அதிகரித்தது.
மாநிலங்களுக்கிடையிலான சுங்கச்சாவடிகள் நீக்கப்பட்டு, மாநிலங்களுக்கிடையே நிகழும் விற்பனை ஊக்கப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, உற்பத்தியான பொருள்கள் இந்தியா முழுமைக்கும் கொண்டுசெல்லப்பட்டு விற்பனை அதிகரித்துள்ளது.
இனி வரும் காலங்களில் இன்னும் நன்மையை பயக்கும் என நம்பலாம் .

 Thanks Vikatan Magazine