உங்களின் நேரம் மட்டுமே.

மணக்கால் அய்யம்பேட்டை | 3:20 PM | Best Blogger Tips

மரணத் தருவாயில் 

மாமன்னர் ஹர்ஷ வர்த்தனர் 

தனது தளபதிகளை அழைத்து தனது

இறுதி ஆசையாக மூன்று விருப்பங்களைக் கூறுகிறார்..

🔔என்னுடைய பூத உடலை
 தலை சிறந்த மருத்துவர்கள்தான் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும் !

🔔🔔நான் இதுவரை சேர்த்த பணம்,தங்கம்,விலை உயர்ந்த கற்கள் போன்றவைகளை என்னுடைய இறுதி ஊர்வலத்தின் பாதையில் தூவிக்கொண்டு செல்ல வேண்டும்.!

🔔🔔🔔என் கைகளை 
வெளியில் தொங்கிக்கொண்டு வரும்படி செய்ய வேண்டும்.!

👮தளபதிகளில் ஒருவர் 
ஹர்ஷரின் அசாதாரண விருப்பத்தால் மிகவும் ஆச்சரியப்பட்டு அதனை விவரிக்கும்படி கேட்டார்.

📢அதற்கு ஹர்ஷரின் பதில்கள்தான் மிகவும் முக்கியமானவை.!!

🔔தலைசிறந்த மருத்துவர்களால்கூட என்னை நோயிலிருந்து காப்பாற்ற முடியாது, சாவை தடுக்க முடியாது என்பதை உலகத்திற்கு தெரியப்படுத்துவதற்காக !

🔔🔔நான் இந்த பூமியில் சேகரித்த. கைப்பற்றிய பொருட்கள் பூமிக்கே சொந்தமானவை என்பதை தெரியப்படுத்துவதற்காக.!

🔔🔔🔔எனது கைகள் காற்றில் அசையும்போது, மக்கள் வெறும் கையுடன் வந்த நான் வெறும் கையுடன் போவதை உணர்ந்து கொள்வார்கள்.!!

நாம் இந்த பூமியில் பிறக்கும்போது கொண்டு வருவதெல்லாம் நாம் இந்த பூமியில் வாழும் காலமாகிய 

"நேரம் மட்டுமே:"
உங்கள் 

உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நீங்கள் கொடுக்கும் விலை உயர்ந்த பரிசு உங்களின் நேரம் மட்டுமே.!!

நன்றி இணையம்


நூறாவது குரங்கு விளைவு

மணக்கால் அய்யம்பேட்டை | 10:55 AM | Best Blogger Tips

'Hundredth Monkey effect ' 

'நூறாவது குரங்கு விளைவு' ...

உயிரியல் அறிஞர் டாக்டர். லையால் வாட்சன்   தனது ஆராய்ச்சிக்காக ஜப்பான் கோஷிமா (Kōjima) என்ற தீகளில்  வாழும் குரங்குகளை வைத்து ஆய்வுசெய்யத் தொடங்கினர்.

அத்தீவில் குரங்குகள் சாப்பிடுவதற்கு, சக்கர வள்ளிக் கிழங்குகளைத் தூக்கிப் போட்டார். 

மண்ணில் விழுந்த அந்தக் கிழங்குகளில் ஒன்றை எடுத்த, குட்டிக்குரங்கு ஒன்று, மண்ணைத் தட்டிவிட்டுச் சாப்பிடாமல், அருகிலிருந்த கடல் தண்ணீரில் கழுவி சாப்பிட்டது. 

அதைப் பார்த்த மற்ற குரங்குகளும், கீழே விழுந்த கிழங்குகளை எடுத்து, கடல் தண்ணீரில் கழுவி சாப்பிட்டன

இது ஒன்றும் அதிசயம் இல்லை தான் ..

இது நடந்து சில ஆண்டுகள் சென்று, அந்த தீவில் குரங்குகளுக்குச் சக்கரவள்ளிக் கிழங்குகளைத் தூக்கிப் போட்டாலே, அவை, அவற்றை கழுவித்தான் சாப்பிட்டன. 

அந்த தீவில் சரியாக நூறாவது குரங்கு சாப்பிட்டவுடன் ஆய்வாளர்கள் மற்றொரு அதிசயத்தையும் பார்த்தனர்

இந்த பழக்கத்தைக் கற்றுக் கொண்ட பின் இந்த செய்தி உடனடியாக மற்ற தீவுகளில் உள்ள குரங்குகளுக்கும் எப்படியோ 'டெலிபதிக்' காக எட்டி விடுகிறது...

கோஷிமா தீவுக்குத் தொலைவிலுள்ள மற்ற தீவுகளில் இருந்த குரங்குகளுக்கும், சக்கர வள்ளிக் கிழங்குகளைத் தூக்கிப்போட்டபோது அவையும், அந்த கிழங்குகளை அருகிலிருந்த கடல் தண்ணீரில் கழுவி சாப்பிட ஆரம்பித்தன. 

கோஷிமா தீவிலுள்ள குரங்குகள் மட்டும் சாப்பிட்டால் பரவாயில்லை, 

ஆனால் கடல் தாண்டியுள்ள மற்ற தீவுகளில் இருந்த குரங்குகளும் ஒரே மாதிரி சாப்பிட்டது, ஆய்வாளர்களுக்கு வியப்பூட்டின. 

மிக மிக அதிக தூரத்தில் உள்ள, கடலால் பிரிக்கப்பட்ட தீவுகளில் உள்ள குரங்குகளும் இந்த 'கழுவி சாப்பிடும்' பழக்கத்தை ஆரம்பிக்கின்றன...

அந்த தீவில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை (100 ) அடையப்பட்டதும் இந்த பழக்கம் மற்ற தீவுகளுக்கும் பரவுகிறது.. 

இது எப்படி சாத்தியம் என்று இதுவரைக்கும் கண்டுபிடிக்கப்படவில்லை...

அவர்கள் அது பற்றி ஆய்வை மேற்கொண்ட போது, “நூறாவது குரங்கின் விளைவு (Hundredth monkey effect)” என்ற ஒரு முடிவுக்கு வந்தனர். 

இது பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த லையாலும் பத்து  ஆண்டுகளுக்கு முன்னர் இயற்கை எய்தி விட்டார்

டெலிபதிக்கு ஒரு முக்கிய உதாரணமாக விளங்கும் இந்த நிகழ்ச்சி உலகத்தில் நாகரீகங் கள் இந்த முறையில் பரவி இருக்கலாமோ என்று நினைப்பதற்கும் வழிவகுக்கிறது

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் அதை இங்கிலிபீசுல படிச்சுக்கங்க 

"Hundredth Monkey Phenomenon means that when only a limited number of people know of a new way, it may remain the conscious property of these people. 

But there is a point at which if only one more person tunes-in to a new awareness, a field is strengthened so that this awareness is picked up by almost everyone!"

ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில், சில நபர்கள், சில பண்புகளை உறுதியுடன் வெளிப்படுத்தும் போது, அது ஒரு குறிப்பிட்ட கட்டத்தை எட்டிய வுடன், ஒரு மனதிற்கும், அடுத்த மனதிற்கும் இடையே தொடர்பு ஏற்பட ஆரம்பிக்கிறது என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். 

அதாவது அவர்களின் பண்புகள், உடன் இருப்பவர்களில் உள்ளார்ந்த தாக்கத்தை உண்டுபண்ணுகின்றன. 

அவர்களின் பண்புகள் மற்றவர்களின், ஆழ்நிலை யில் நல்தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை, ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். 

இதைத்தான், மொத்தமாக, குழுவாகத் நல்தாக்கத்தை உருவாக்குதல் (Mass Consciousness, group Consciouness) என்று சொல்கின்றனர். 

நூறாவது குரங்கின் விளைவையும், தற்போது உலகில் கொரோனா தொற்றுக்கிருமி பரவல் உருவாக்கியுள்ள ஒருவித பய உணர்வையும் தொடர்புபடுத்தி, உளவியல் மருத்துவர் ஜே.விக்னேஷ் ஷங்கர் அவர்கள், சில அறிவுரை களை யூடியூப் வழியாக எடுத்துரைத்துள்ளார். 

ஜப்பானில் 2011ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி நிகழ்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியில், புக்குஷிமா (Fukushima Dai-ichi) அணுமின் நிலையம் பெரிதும் பாதிக்கப்பட்டது. 

அங்கிருந்த நான்கு அணு உலைகளும், ஒன்றன் பின் ஒன்றாக வெடித்தன. 

அவற்றிலிருந்து பயங்கரமான கதிர்வீச்சுகள் வெளிவந்தன. 

இன்று வரை, அவற்றில் இருந்து கதிர்வீச்சு வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது என்று சொல்லப்படுகின்றது.

 அந்த சுனாமி நிகழ்வு குறித்து ஜப்பான் மக்கள் மிகுந்த விழிப்புடன் இருந்தனர். 

ஆனால் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஊடகங்கள் இதை மிகைப்படுத்தி செய்திகளை வெளியிட்டன. 

இந்தச் செய்தியை அந்த மக்கள் ஆழமாக உள்வாங்கியதால், அவர்கள் பயம் சார்ந்த உணர்வுகளை அதிகமாக வெளிப்படுத்தினர். 

இதன் விளைவாக, நிறைய நோய்களால் அமெரிக்கர்கள் தாக்கப்பட்டனர். 

எனவே, ஆய்வாளர்கள் ஜப்பானில் நடந்த அணுக் கதிர்வீச்சுக்கு, அமெரிக்க ஐக்கிய நாட்டினர் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு, மிக விரிவாகவே ஆய்வுகளை மேற்கொண்டனர். 

ஜப்பான் நிகழ்வை அமெரிக்க தொலைக்காட்சி களும் மற்ற ஊடகங்களும் மிக அதிகமாகவே வெளியிட்டதால், பயம் சார்ந்த உணர்வுகள் அதிகமாக உருவாகியுள்ளன.

 அதனால் அவர்களுக்கு உடல் சார்ந்த பிரச்சனை களும் அதிகமாக வந்துள்ளன என்று, ஆய்வாளர் கள் கண்டுபிடித்தனர். 

இவ்வாறு விளக்கும், உளவியல் மருத்துவர் ஜே.விக்னேஷ் ஷங்கர் , பயம் சார்ந்த உணர்வுகளை நாம் அதிகமாக வெளிப்படுத்தும் போது, ஆயிரத்துக்கும் அதிகமான எதிர்மறை யான வேதிப்பொருள்கள் நம் உடலில் சுரக்க ஆரம்பிக்கின்றன. 

அவை நம் உடலுக்குத் தீமை விளைவிக்கும் என்பதை நாம் தெரிந்திருக்க வேண்டும் என்று சொல்கிறார்

இந்த கொரோனா தொற்றுக்கிருமி பரவல் காலத்தில், பெரும்பாலான நாளிதழ்கள், சமுதாய ஊடகங்கள், தொலைக் காட்சிகள், உடன் இருப்பவர்களின் பகிர்வுகள் போன்ற அனைத்துமே, பெரும்பாலும் பயம் சார்ந்த உணர்வுகளையே வெளிப்படுத்து கின்றன. 

இந்த உணர்வை நாம் எல்லாருமே வெளிப் படுத்தத் தொடங்கினால், அது ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். 

அதனால், இப்போதுள்ள சூழலில், நூறாவது குரங்கின் விளைவு என்ற கொள்கையை, நாம் பின்பற்றினால், நாம் விரும்பும் மாற்றத்தை கொணரலாம். 

விழிப்புணர்வுடன் இருந்து, பயம் சார்ந்த உணர்வு களை அதிகமாக வெளிப்படுத்தாமல் இருந்தாலே, இந்நோயிலிருந்து தப்பிக்கலாம். 

அதேநேரம் ஊடகங்களில் வரும் எல்லா செய்திகளையும் நாம் நிராகரிக்க வேண்டும் என்பதும் கிடையாது என்று, விக்னேஷ் அவர்கள் பதிவுசெய்துள்ளார்.

இந்த அசாதாரண சூழலிலும், பலர் அச்சத்தை அகற்றி நற்பணிகளை ஆற்றி வருகின்றனர். 

அமெரிக்க ஐக்கிய நாட்டின் புரூக்ளின் நகரிலு ள்ள மாரியோ சலேர்னோ என்ற செல்வந்தர்,  தனக்குச் சொந்தமான 200 வீடுகளில் குடியிருப் பவர்கள் எல்லாரும், இந்த ஏப்ரல் மாத வாடகைப் பணத்தை செலுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார். 

அவர்களில் பெரும்பாலானோர், வேலைகளை இழந்த இளைஞர்கள்.

 இந்த நற்செயலுக்கு அவரிடம் காரணம் கேட்ட போது, அவர்கள் எல்லாரும் மன அமைதியோடு வாழ வேண்டுமென்று விரும்புகிறேன், 

அவர்களுக்கு உணவு கிடைக்க வேண்டும், 

எனக்குப் பணத்தைப் பற்றிக் கவலை இல்லை. அதைப் பற்றி நினைப்பதற்கு இதுவல்ல நேரம். 

மனித வாழ்வின் மதிப்பிற்குமுன் இது ஒன்றுமே இல்லை. மனித வாழ்வை மதிக்கிறேன் என்று, அவர் கூறியுள்ளார்.

இப்போது உலகெங்கும் நிலவும் இந்த அசாதாரண சூழலை மாற்றியமைக்கக்கூடிய தன்மை நம் எல்லாருக்குள்ளும் இருக்கின்றது. 

நம் மனத்தளவில் எந்தவொரு சூழலை எதிர்த்தாலும், அது விடாப்பிடியாக நம்மில் தொடர்ந்து இருந்துகொண்டேதான் இருக்கும் என்று உளவியல் மருத்துவர்கள் சொல்கின்றனர். 

எனவே, இந்த தொற்றுக்கிருமி சூழலை முதலில் நாம் மனத்தளவில் ஏற்போம்.பரந்த இந்தப் பூமியில், நம் நாட்டில், நம் சமுதாயத்தில், நம் குடும்பங்களில் எல்லாரும், உடல்நலத்தோடும் மன அமைதியோடும் உள்ளனர் என்ற நேர்மறை உணர்வலைகளை அனுப்புவோம். 

அப்போது நேர்மறை அதிர்வலைகளை அவை வெளிப்படுத்தும். 

நம்மை இந்நிலையில் வைத்திருக்கும் கடவுளிடமும் நன்றியுணர்வோடு இருப்போம். 

நல்லதையே நினைத்து, நல்லதையே செய்வோம். நல்லதையே பேசுவோம். அப்போது இறந்தாலும் நாம் வாழலாம். 

இந்த தத்துவத்தை "நூறாவதுகுரங்கின் விளைவு" (Hundredth Monkey Effect) என்ற புத்தகத்தை கென் கேயஸ் (Ken Keyes) என்பவர் எழுதி பிரபலமாக்கி னார்.

இதே கருத்தை வாழ்க்கை அலை (Lifetide)என்ற புத்தகத்தில் லயால் வாட்சன் (LyallWatson) உதாரணங்களுடன் கூறுகிறார்


நன்றி இணையம்