வாய்புண்களைக் குணமாக்கும் மாம்பூ கசாயம்..!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:34 PM | Best Blogger Tips


உணவே மருந்து's photo.
முக்கனிகளில் ஒன்றாக போற்றப்படும் மாம்பழம் எண்ணற்ற மருத்துவப் பயன்களை கொண்டுள்ளது. வைட்டமின் சத்துக்களும், தாது உப்புகளும் கொண்டுள்ள மாம்பழத்தைப் போலவே மாம்பூக்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளன. பற்களுக்கும், ஈறுகளுக்கும் வலிமை தருவதோடு, வாய்ப்புண்களை குணமாக்குவதில் மாம்பூக்கள் மிகச்சிறந்த மருந்து பொருளாக விளங்குகின்றன. மாமரத்தில் கொத்து கொத்தாய் பூத்திருக்கும் மாம்பூக்களின் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்வோம்.
தொண்டை வலி குணமடையும்
தொண்டையில் புண் ஏற்பட்டு எதையும் சாப்பிடக்கூட முடியாமல் வலி உயிரை எடுக்கும். அந்த நேரத்தில் மாமரத்தில் பூத்திருக்கும் மாம்பூக்களை பறித்து நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும். அதனை நன்கு நீரில் கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டிக்கொண்டு அதில் எலுமிச்சம் பழத்தின் சாறினை பிழிந்து விடவேண்டும். அந்த தண்ணீரை நன்றாக தொண்டைக்குள் இறங்குமாறு கொப்பளிக்க தொண்டை வலி குணமடையும்.
வாய்ப்புண்ணுக்கு மருந்தாகும்
உலர்ந்த மாம்பூக்களை நன்றாக பொடிசெய்து மோரில் கலந்து பருகவேண்டும். தினசரி மூன்று வேளை பருகிவர மூன்று நாட்களில் வாய்ப்புண், வயிற்றுப்புண் காணாமல் போய்விடும். புத்தம் புதிய மாம்பூக்களை தினமும் பறித்து வாயில் போட்டு மென்று வர பல்வலி குணமடையும். பற்கள், ஈறுகள் பலமடையும். மாம்பூ, மாந்தளிர், இரண்டையும் நீரில் போட்டு கொதிக்க வைத்து இளம் சூட்டில் வாய் கொப்பளித்து வர பல்வலிக்கு நிவாரணம் கிடைக்கும். மாம்பூவைச் சேகரித்து தணலில் போட்டு அதன் புகையைத் தலையில் படுமாறு செய்தால் தலைபாரம், ஜலதோஷம் நீங்கும்.
நீரிழிவு நோய்க்கு

மாம்பூ குறிப்பாக நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. தொடர்ந்து பல நாட்கள் பயன்படுத்தும்போது இதன் நல்ல பயனைக் கண்டுணரலாம். மாம்பூ, நாவல் பழக்கொட்டை, மாந்தளிர் மூன்றையும் சம அளவாக சேகரித்து வெயிலில் காயவைத்து இடித்து பத்திரப்படுத்தவும். தினம் அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு வெந்நீரில் பருகவும். 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர நீரிழிவு நோய் குணமாகும் என்கின்றனர் மருத்துவர்கள். இடையே ரத்த சர்க்கரை அளவை பரிசோதித்து கொள்ளவேண்டும்
சீதபேதிக்கு அருமருந்து
மாம்பூ, மாதுளம் பூ, மாந்தளிர் வகைக்கு 5 கிராம் சேகரித்து நீர் விட்டு மைபோல் அரைத்து அதனை பசும்பாலில் கலந்து காலை, மாலை, 3 நாட்கள் சாப்பிடவேண்டும். இதனால் சீதபோதி நீங்கிவிடும்.
மாம்பூக்களைச் சேகரித்து உலர்த்தி ஒரு கைப்பிடியளவு எடுத்து இரண்டு பங்கு அளவு நீர் சேர்த்துக் காய்ச்சிக் கஷாயமாக்கி வடிகட்டி அரை டம்ளர் அளவு எருமைத் தயிரில் கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் சீதபேதி நீங்கிவிடும். மாம்பூ, பச்சை கொத்தமல்லி, தோல்நீக்கிய இஞ்சி, கருவேப்பிலை சமஅளவு எடுத்து துவையல் செய்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட குமட்டல் நீங்கும்.
மூலநோய் குணமடையும்
மாம்பூ, சீரகம், இரண்டையும் சம அளவாக எடுத்து தனித்தனியே உலர்த்திப் பொடியாக்கி சலித்து எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும். இந்த தூளில் 2 சிட்டிகை எடுத்து சர்க்கரையுடன் சேர்த்துக் காலை, மாலை தினமும் சாப்பிடவும் மூலநோய் கட்டுப்படும். உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு நேரத்திலும் இந்த மருந்தை உட்கொள்ளலாம்
கொசுத்தொல்லை நீங்க
உலர்ந்த மாம்பூவை நெருப்பிலிட்டு அதன் புகையை வீடு முழுவதும் காண்பிக்க கொசுத்தொல்லை ஒழியும்

நன்றி 
உணவே மருந்து

மனசு சஞ்சலப்படுகிறதா

மணக்கால் அய்யம்பேட்டை | 11:20 AM | Best Blogger Tips


ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப்பட்டுக் கொண்டிருந்தார். ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள்.
புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக் கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார்.
அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏரியைக் கடந்து சென்றார்.
ஏரி கலங்கி விட்டது. அத்துடன் ஏரியின் கீழ்ப் பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப்படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சியளித்தது.
இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும்? இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது? என்று தண்ணீரில்லாமல் திரும்பிவிட்டார்.
அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார்.
ஒரு மணி நேரம் சென்ற பிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்று வரப் பணித்தார்.
நீர்நிலையருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது . சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது.ஒரு பானையின் தண்ணீரை முகர்ந்து கொண்டு சீடன் புத்தரிடம் திரும்பினான். புத்தர் தண்ணீரைப் பார்த்தார்.
சீடனையும் பார்த்தார். பிறகு மெல்லிய குரலில் சொல்லலானார்.தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்..?நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி! அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று!
நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா?
ஆமாம் சுவாமி!
நம் மனமும் அப்படிப்பட்டதுதான்..
மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும்.
அது தனக்குத்தானே சரியாகிவிடும்.
நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப்படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம். அது அமைதியாகிவிடும். அது தன்னிச்சையாக நடக்கும். அத்துடன் நம்முடைய முயற்சியின்றி அது நடக்கும்.

 நன்றி இணையம் 

இந்திய ராணுவத்தை பற்றிய வியக்கவைக்கும் தகவல்கள்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:15 AM | Best Blogger Tips


1) உயரமான போர்களத்தை கட்டுபாட்டில் வைத்திருக்கிறது:: உலகிலேயே உயரமான போர்க்களம் என்று கருதப்படும் சியாச்சென்கிளேசியர் (Siachen Glacier) இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. இதன் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 5,000 மீட்டர்களுக்கும் மேலாகும். கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இங்கு போரிட்டதுக் குறிப்பிடத்தக்கது.
2) தன்னார்வம் அதிகம்:: உலகிலேயே அதிகமான தன்னார்வ வீரர்கள் கொண்ட ராணுவப்படை இந்தியாவுடையது என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.
3) மலை பகுதிகளிலும், உயரமான பகுதிகளிலும் செயல்படுவதில் நமது இந்திய ராணுவ வீரர்கள் உலகளவில் சிறந்து விளங்குகின்றனர்.
4) கடந்த 2013 ஆம் ஆண்டு உலகிலேயே மிகப்பெரிய மீட்புப் பணியாகக் கருதப்படும் ஆப்ரேஷன் ராஹத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தவர்கள் நமது இந்திய ராணுவப்படை வீரர்கள். இது, உத்தரகாண்ட் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக நடந்தது.
5) கேரளத்தில் இருக்கும் எழிமலாக் கப்பற்படை (Ezhimala Naval Academy) தான் இதன் பிரிவில் ஆசியாவிலேயே பெரியது ஆகும்.
6) உலகிலேயே மிகவும் பழையப் படையாக கருதப்படும் மூன்றில் ஒன்றான குதிரைப்படை இன்னமும் நமது இந்திய ராணுவத்தில் செயல்பட்டு வருவது பெருமைக்குரிய விஷயமாகும்.
7) இந்திய ராணுவம் கட்டமைத்த பெய்லி பாலம் தான் உலகிலேயே ராணுவ வீரர்களால் மிக உயரத்தில் கட்டப்பட்ட பாலம் ஆகும். இது கடந்த 1982ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கட்டமைக்கப்பட்டது ஆகும்.
9) கடந்த 1971ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போரில் 93,000 எதிர் நாட்டு (பாகிஸ்தான்) வீரர்கள் சரணடைன்ததே, ஓர் போரில் சரணடைந்த வீரர்களின் அதிகப்படியான எண்ணிக்கை ஆகும்.
10) உலகிலேயே பெரிய ராணுவ பிரிவுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. முதல் இரண்டு இடங்களில் முறையே அமெரிக்காவும், சீனாவும் இருக்கின்றன. நமது நாட்டில் 13,25,000 பட்டாளங்களும், 9,60,000 ரிசர்வ் படைகளும் இருக்கின்றன.
11) அக்னி ஏவுகணை உலகிலேயே சிறந்த ஏவுகணைகளில் இந்தியாவின் அக்னி எவுகனைவும் ஒன்றென்பதுக் குறிப்பிடத்தக்கது.
12) வேகமான ஏவுகணை ப்ராஹ் மோஸ் 2 (BrahMos-2) என்ற நமது ஏவுகணை தான் உலகிலேயே வேகமான ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஆகும்.
13) இந்திய ராணுவப்படை கடந்த 1776ஆம் ஆண்டு கிழக்கிந்திய நிறுவனத்தினால் கொல்கத்தாவில் துவங்கப்பட்டது.
14) உலக அமைதிகாக ஐ.நாவிற்கு பங்களிப்பு தரும் பட்டாளங்களில் இந்திய பட்டாளம் தான் பெரியது என்பது பெருமைக்குரியது.
THANKS ONE INDIA....
WITH REGARDS,
K T NIVASH
Top of Form
Bottom of Form
 நன்றி இணையம் 


இந்தியாவைக் கண்டு உலகே ஆச்சரியப்படும் அரிய தகவல்கள்..!!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:10 AM | Best Blogger Tips



1000 வகை மாம்பழங்கள் சுவை, நிறம், வடிவம் என இந்தியாவில் 1000 வகையான மாம்பழ வகைகள் இருக்கின்றன.
வேறு எந்த ஒரு கனியும் இவ்வளவு வகைகளில் கிடைப்பதும் இல்லை.
விளைவிக்கப்படுவதும் இல்லை.
6 கால நிலைகள் கோடை பருவமழை, கோடை, குளிர் பருவமழை, குளிர்காலம், இலையுதிர் மற்றும் வசந்த காலம் என்று ஆறு கால நிலைகள் இந்தியாவில் நிலவுகின்றன.
அதிக மசூதிகள் இந்துக்கள் நாடு எனும் போதிலும் கூட, உலகிலேயே அதிக மசூதிகள் கொண்ட நாடு இந்தியா தான்.
உலகெங்கிலும் 4 லட்சம் மசூதிகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சோம்நாத் கோவில் சோம்நாத் கோவிலுக்கும் தென் துருவத்திற்கும் இடையே எந்த நிலப்பரப்பும் கிடையாது.
உலகின் முதல் பல்கலைகழகம் பீகாரில் இருக்கும் தக்ஷில்லா பல்கலைகழகம் தான் உலகின் பழமையான மற்றும் முதல் பல்கலைகழகம்.
இந்த பல்கலைகழகத்தில் 10,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 60வது பாடப் பிரிவுகள் கற்பிக்கப்பட்டுள்ளது.
இராமேஸ்வரம் கோவில் இராமேஸ்வரம் கோவிலில் உள்ள நடைப்பாதை தான் உலகிலேயே நீளமான கோவில் நடைப்பாதை ஆகும்.
4000 அடி நீளம் கொண்ட இந்த நடைப்பாதையின் இருப்புரங்களிலும் 985 தூண்கள் இருக்கின்றன.
முதல் கண் அறுவைசிகிச்சை கண் மாற்று அறுவைசிகிச்சை செய்த முதல் நாடு என்ற பெருமை இந்தியாவையே சேரும்.
அரபிக் எண்கள் அரபிக் என்று பெயர் இருந்தாலும், அரபிக் எண்களைக் கண்டுப்பிடித்தவர்கள் இந்தியர்கள் தான்.
மருத்துவத்தின் தந்தை 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆயுர்வேதா தான் முதல் மருத்துவ முறையாகும்.
சுஷ்ருதா, இவர் 2600 வருடங்களுக்கு முன்பே அறுவைசிகிச்சை செய்துள்ளார்.
அதனால், மருத்துவம் மற்றும் அறுவைசிகிச்சை ஆகியவற்றின் தந்தைகள் இந்தியர்கள் தான்.
உலகின் பெரிய தபால் துறை இந்தியாவில் மொத்தம் 1,50,000 அஞ்சல் அலுவலகங்கள் இருக்கின்றன.
உலகிலேயே பெரிய அஞ்சல் துறை இந்தியாவுடையது தான்.
வைரத்தை கண்டுப்பிடித்தவர்கள் 1896 ஆம் ஆண்டு வரை வைரம் இருக்கும் ஒரே நாடாக அறியப்பட்டது இந்தியாதான்.
மற்றும் வைரத்தை முதல் முதலில் கண்டுப்பிடித்தவர்களும் இந்தியர்கள் தான்.
உலகின் பணக்கார கோவில் உலகின் பணக்கார கோவில் எனும் பெருமை பத்மனாபசுவாமி கோவிலையே சேரும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு கண்டெடுக்கப்பட்ட லட்சம் கோடிகளை தாண்டும் அரிய புதையலே இதற்கு காரணம்.
 நன்றி இணையம் 

குளித்து முடிந்தபின் ஈரமான திருநீறு அணிய வேண்டும்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:06 AM | Best Blogger Tips

திருநீறு அணிவதைப் பற்றிக்கூறும் போது சில நேரங்களில் ஈரமான விபூதி அணிய வேண்டுமென்றும், சில நேரங்களில் ஈரமில்லா திருநீறு அணிய வேண்டும் என்று கூறுவது ஒன்றுக் கொன்று முரண்பாடாக உள்ளதே என்று தோன்றலாம். திருநீர் அணிந்தவர்களை கண்டால் மனதுக்குள்ளாவது இகழும் இக்காலத்தில் இந்த முரண்பாடுக்கு விளக்கம் கூறுவது அவசியம்.
நம் முன்னோர்கள் மருத்துவ குணங்களை பற்றி அவர்கள் நன்கறிந்திருந்தனர். அதிகாலையில் எழுந்து கை, கால், முகம், கழுவி, திருநீர்ச்சட்டியிலிருந்து ஒரு பிடி எடுத்து நெற்றியிலும், பின் மாறிடத்தும் .இரு புஜங்களிலும் சில வர்மஸ்தானங்களிலும் பாட்டனும் பாட்டியும் பூசிக்கொள்ளவதை சிலராவது பார்த்திருப்போம் .மாலைப் பொழுதிலும் இவ்வாறு கை,கால்,கழுவி வந்து நனைக்காமல் திருநீறு பூசுவதுண்டு , ஆனால் குளித்த ஓய்ந் திருநீறு எடுத்து நணித்து உடலில் பூசி வந்தனர் .இப்படி இரண்டு வகையான திருநீர் பூசும் முறை பார்க்கும் போது நாம் புரிந்து கொள்ள வேண்டியது நனைக்காத திருநீறுக்கு அணுக்களை அழிக்கும் சக்த்தியும் நனைத்த திருநீறுக்கு உடலில் மிகையாக உள்ள ஈரத்தை உறிஞ்சி அகற்றும் சக்தியும் உண்டென்பதாகும்.
இவ்வளவும் அறிந்த பின் ,நம் உடலில் காலையிலும், மாலையிலும் மட்டும் ஏன் அணுக்களின் பாதிப்பு உண்டாகின்றது என்பதை கவனிப்போம் .இரவு ஒரு நேரம் ஒரு நபர் தூங்கும் போது அவர் படுக்கையில் லட்சக்கணக்கான அணுக்கள் பரவியிருக்கும் என்று விஞ்ஞானம் கூறுகிறது. அதே போல் மாலை நேரத்தில் சுற்று சூழலில் எண்ணற்ற நோயனுக்கள் உலாவுகின்றன என்பது அறிவியலின் உறுதியான கண்டுபிடிப்பு .அதனால் காலையும் மாலையும்
நோயனுக்களின் பாதிப்பு ஏற்படாமலிருக்க ஈரமில்லாத திருநீரை அணிந்து வருகின்றனர்.
குளிக்கும் நேரம் உடலின் மூட்டுகளில் ஈரம் காரணமாக நீர் கட்டு உருவாகவும் காலப் போக்கில் அது வாயிலாககொழுப்பு அதிகரிக்கவும் அது மூட்டு வாதமாக மாறவும் வாய்ப்புண்டு .இப்படி உருவாகும் நீர்க்கட்டி தவிர்ப்பதற்க்காகத்தான் குளித்த உடன் ஈரமான திருநீறு அணிவது வழக்கமாக்க பட்டது .
அணியும் காரணம் -- மற்றொரு விளக்கம்
மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிகமாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதனம் கூட.
சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீறு செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.
மற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும் சக்திகளும் அவர்களுக்கு தெரியாமலேயே நெற்றி வழியாக அதிகம் கவரப்படும், அவர்களை தன்னிலை இழக்கச்செய்வதும் வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக செய்துவிடலாம். மனோ தத்துவம், ஹிப்னாட்டிஸம், மெஸ்மரிஸம் போன்றவற்றிலும் இங்கே பார்வையும் மன எண்ணங்களும் முக்கிய இடம் வகிக்கிறது. கண்ணேறு என்று சொல்லப்படும் தேவையில்லாத எண்ணங்கள் ஊடுறுவதை தடுக்கவும் திருநீறு இடப்படும்.
ஆக்ஞா தியானம் செய்பவர்களுக்கு உடல் மிக வெப்பம் அதிகரிக்கும். அந்நேரம் சூடு தணிய இங்கே சந்தனம் பூசுவார்கள்.
மருத்துவ ரீதியாக உடலுக்கு மிக முக்கியமான ஹார்மோன் சுரக்கும் பிட்யூட்டிரி சுரப்பியை தூண்டச்செய்யும் இடம் இந்த நெற்றி ஆகும், ஆக்ஞா தியானம் என்பதே இந்த சுரப்பியை தூண்டத்தான்.
அணியும் முறை-
வடதிசை அல்லது கிழக்கு திசையையாவது நோக்கி நின்றுகொண்டு, கீழே சிந்தாமல், வலது கையின் ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால் திருநீறை எடுத்து அண்ணாந்து நின்று, பூசிக்கொள்ளல் வேண்டும். எடுக்கும் போதுதிருச்சிற்றம்பலம் என்றும் பூசும் போது சிவாயநம அல்லது சிவசிவ என்று உதடு பிரியாது மனம் ஒன்றிச் சொல்லிக் கொள்ளுதல் வேண்டும். ஒன்று நெற்றி முழுவதும் அல்லது 3 படுக்கை வசக் கோடுகளாகத் தரிக்க வேண்டும். காலை, மாலை, பூசைக்கு முன்னும் பின்னும், ஆலயம் செல்வதற்கு முன்னும், இரவு உறங்கப் போவதற்கு முன்னும் திருநீறு தரிக்க வேண்டும்.நெற்றியில் முழுவதும் பரவிப் பூசுவதை "உத்தூளனம்" எனப்படும். மூன்று படுக்கை வசக்கோடுகளாக பூசுவதை "திரிபுண்டரம்" எனப்படும்.
திருநீறு அணியும் இடங்கள்
-------------------------- ------------
உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் பதினெட்டு இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை
1. தலை நடுவில் (உச்சி)
2. நெற்றி
3. மார்பு
4. தொப்புளுக்கு(கொப்பூழ்) சற்று மேல்.
5. இடது தோள்
6. வலது தோள்
7. இடது கையின் நடுவில்
8. வலது கையின் நடுவில்
9. இடது மணிக்கட்டு
10. வலது மணிக்கட்டு
11. இடது இடுப்பு
12. வலது இடுப்பு
13. இடது கால் நடுவில்
14. வலது கால் நடுவில்
15. முதுகுக்குக் கீழ்
16. கழுத்து முழுவதும்
17. வலது காதில் ஒரு பொட்டு
18. இடது காதில் ஒரு பொட்டு
பலன்கள்-
திருநீறு அணிவதால் தடையற்ற இறைச் சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம். உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும். பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும், தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் அனைத்துப் பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி அறுத்து மோக்கம்(மோட்சம்) செல்ல வழிகாட்டும். இதைத்தான் திருமூலர் பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார்.
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே
திருநீறு (விபூதி):-
திருநீறு (விபூதி) சைவர்களால் நெற்றியில் இடப்படும் புனித அடையாளம். இது ஜசுவரி்யம் என்றும் கூறப்படும்.
திருநீற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர். அவை
1. கல்பம்
2. அணுகல்பம்
3. உபகல்பம்
4. அகல்பம்
1.கல்பம்
கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பதே கல்பத் திருநீறு எனப்படும்.
2.அணுகல்பம்
ஆரண்யங்களில் (காடுகளில்) கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு எனப்படும்.
3.உபகல்பம்
மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு எனப்படும்.
4.அகல்பம்
அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு எனப்படும்.
அணியும் காரணம்
"மந்திரமாவது நீறு" - திருஞானசம்பந்தர், திருநீற்றுப் பதிகம். மன் + திறம் = மந்திரம்.
மும்மலங்களையும்சாம்பலாக்கி அழித்தபின் எஞ்சியது நீறு. நீறிடுதல் என்பது மாசற்ற சுத்த சாந்த நிலைக்கு அடையாளமும் ஆகும்.
புருவ நடுவே தியான நிலை;ஆத்ம பிரகாசம் உள்ளது.அப்பகுதியில் முக்கோண வடிவாக எரிவதை யோகியர் என்பர், அவ்விடத்தில் தியானம் ஊன்ற வேண்டுமென்பதற்காகவே சந்தனம், குங்குமம், திருநீறு, திருமண் முதலியவற்றினை இடுவர். புருவ நடுவின் மேல் நெற்றியின் சஹஸ்ராரத்தில் துரியவெளியுள்ளது. அவ்விடத்தில் அருட்சோதி தோன்றுவதனைக் குறிக்கவே நீறு இடுவர்.
இது தற்பொழுது உள்ள குறிப்பு.
1.இருபுருவங்களின் நடுப்பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வு நிலை உள்ளது. அதனால் மன வசியம் (hypnotisers) எளிதாக வசியம் செய்ய முடியும் என்பதற்காகவே, நெற்றியில் திலகமும், திருநீறு, திருமண் போன்றவற்றை இடுவது வழக்கம்.
2.அருட்சோதி புருவ நடுவில் தோன்றுவது இல்லை. அது கபாலக் குகைக்குள்தான் தோன்றும். புருவ நடுப்பகுதி வழியாகக் கபாலக் குகைக்குள் நுழைய முடியும் என்பதைக் குறிக்க வேண்டுமாகில் திருக்குறிகளை அங்கு இட்டிருக்கலாம்.
அணியும் காரணம் -- மற்றொரு விளக்கம்
மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதனம் கூட.
சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.
மற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும் சக்திகளும் அவர்களுக்கு தெரியாமலேயே நெற்றி வழியாக அதிகம் கவரப்படும், அவர்களை தன்னிலை இழக்கச்செய்வதும் வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக செய்துவிடலாம். மனோ தத்துவம், ஹிப்னாட்டிஸம், மெஸ்மரிஸம் போன்றவற்றிலும் இங்கே பார்வையும் மன எண்ணங்களும் முக்கிய இடம் வகிக்கிறது. கண்ணேறு என்று சொல்லப்படும் தேவையில்லாத எண்ணங்கள் ஊடுறுவதை தடுக்கவும் திருநீறு இடப்படும்.
ஆக்ஞா தியானம் செய்பவர்களுக்கு உடல் மிக வெப்பம் அதிகரிக்கும். அந்நேரம் சூடு தணிய இங்கே சந்தனம் பூசுவார்கள்.
மருத்துவ ரீதியாக உடலுக்கு மிக முக்கியமான ஹார்மோன் சுரக்கும் பிட்யூட்டிரி சுரப்பியை தூண்டச்செய்யும் இடம் இந்த நெற்றி ஆகும், ஆக்ஞா தியானம் என்பதே இந்த சுரப்பியை தூண்டத்தான். இது தொடக்கம்.
நீறில்லா நெற்றி பாழ். என்பார்கள்.
எரிவது என்றால் தீயோடு எரிவது. தீ இல்லாமல் வெறும் கனலால் எரிவதை நீறுதல் என்பார்கள். சுண்ணாம்பு தயாரிக்க சிப்பி தோடையும் வெறும் நீரையும் சேர்க்கும் போது அது நீறத்துவங்கும் கொதிக்கும், நெருப்பு இல்லாமல் புகையும், அதில் நெருப்பு இல்லை. ஒரு வகை வேதி வினை. அதை நீற்றுதல் என்பார்கள். அதை போல நீற்றி எடுக்கப்பட்டது திருநீறு.
ஆக்ஞா (நெற்றி) தியானம்
மேலும் நெற்றி என்பதை இதே போல நீற்ற வேண்டும், நீறிக்கொண்டிருக்க வேண்டும், அதாவது சுண்டு விரலை நமது நெற்றிப்பொட்டில் தொட்டும் தொடாமலும் நேராக பிடித்தால் நெற்றியில் ஒருவித உணர்வு ஏற்படும். அந்த உணர்வை அப்படியே வைத்து தியானம் செய்யவது ஆக்ஞா (நெற்றி) தியானம், இது குண்டலினி யோகாவின் தொடக்கம்,
பண்டைய சித்தர்கள் சொல்லிச்சென்ற உயிர் வளர்ப்பு முறையின் தொடக்கம் இது.
இதை முறையாக செய்தால் நம் சிந்தனைகள் சீர்படும், மற்றவரை விட அதிகமாக சிந்திக்கலாம். மனம் ஒருநிலைப்படும். எதையும் எளிதாக புரிந்து கொள்ள முடியும், காரிய சித்தி உருவாகும்.
இதை முறையாக செய்யவேண்டும், இந்த தியானம் செய்தால் கண்டிப்பாக சாந்தி தியானமும்
செய்யவேண்டும், இல்லையென்றால் அது ஒற்றைத் தலைவேதனையில் கொண்டுவந்து விட்டுவிடும்.
இதை நம்மிலேயே வைத்துக்கொண்டு செய்யாமல் இருப்பது பாழ். அதுதான் நீறில்லா நெற்றி பாழ்.
கற்றது கையளவு கல்லாதது உலகளவு
அணியும் முறை-
வடதிசை அல்லது கிழக்கு திசையையாவது நோக்கி நின்றுகொண்டு, கீழே சிந்தாமல், வலது கையின் ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால் திருநீறை எடுத்து அண்ணாந்து நின்று, பூசிக்கொள்ளல் வேண்டும். எடுக்கும் போது திருச்சிற்றம்பலம் என்றும் பூசும் போது சிவாயநம அல்லது சிவசிவஎன்று உதடு பிரியாது மனம் ஒன்றிச் சொல்லிக் கொள்ளுதல் வேண்டும். ஒன்று நெற்றி முழுவதும் அல்லது 3 படுக்கை வசக் கோடுகளாகத் தரிக்க வேண்டும். காலை, மாலை, பூசைக்கு முன்னும் பின்னும், ஆலயம் செல்வதற்கு முன்னும், இரவு உறங்கப் போவதற்கு முன்னும் திருநீறு தரிக்க வேண்டும்.நெற்றியில் முழுவதும் பரவிப் பூசுவதை "உத்தூளனம்" எனப்படும். மூன்று படுக்கை வசக்கோடுகளாக பூசுவதை "திரிபுண்டரம்" எனப்படும்.
திருநீறு:-
திருநீற்றின் பெருமையும் அதனை அணிவதால் வரும் நன்மைகளும்.

1. உடல் நாற்றத்தைப் போக்கும்.
2. தொத்து நோய்க் கிருமிகளைக் கொல்லும்.
3. தீட்டுக் கழிக்கும்.
4. உடலைச் சுத்தம் செய்யும்.
5. வியாதிகளைப் போக்கும்.
6. பில்லிசூனியம், கண்ணேறு பாதிக்காது காக்கும்.
7. முகத்திற்கு அழகைத் தரும்.
8. ஞாபக சக்தியை உண்டாக்கும்.
9. புத்திக் கூர்மையைத் தரும்.
10. ஞானத்தை உண்டாக்கும்.
11. பாவத்தைப் போக்கும்.
12. பரகதியைத் தரும்

நன்றி இணையம்