கற்றாழை உடல்நல நன்மைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 6:26 PM | Best Blogger Tips
தாம்பத்ய உறவு மேம்பட உதவும் கற்றாழை ..

கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது. இயற்கையான மருத்துவப்பொருட்கள் நமக்கு தான் நிறைய தெரிவதில்லை என்று கூறுவதைவிட அறியவைக்க ஆள் இல்லை என்றால் பொருத்தமாகும். கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில்

கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எத்தனை மருத்துவக் குணங்கள்.

கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது.

கற்றாழை உலகம் பூராவும் பயன்படுத்தப்படும் காஸ்மெட்டிக் பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறு கற்றாழை மட்டிலும் மருத்துவத்திற்கும், காஸ்மெட்டிக் பொருள் தயாரிப்பதிலும் முதலிடம் பெறுகிறது. சிறு கற்றாழை சோற்றுக் கற்றாழ என வழங்கப்படுகிறது.

சோற்றுக் கற்றாழ மடல்களப் பிளந்து நுங்குச் சுளை போல உள்ள சதைப் பகுதியை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நல்ல தண்ணீரில் 7- 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்தவேண்டும். கற்றாழையக் கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் வெறுட்டல் குணமும், கசப்பும் குறைந்துவிடும்.

தாம்பத்திய உறவு மேம்பட

சோற்றுக் கற்றாழை வேர்களை வெட்டி, சிறிய துண்டுகளாகச் செய்து சுத்தம் செய்து, இட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்து கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற மருந்தாகும்.

கூந்தல் வளர

சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, இதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.

கண்களில் அடிபட்டால்

கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும். கற்றாழைச் சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்து, ஒரு துணியில் முடிச்சுக் கட்டி, தொங்க விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதைச் சேகரம் செயது; எடுத்துக்கொண்டு, இதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால், கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு மாறும்.

குளிர்ச்சி தரும் குளியலுக்கு

மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்க, சோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை அரக்கிலோ தயாரித் ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான வாசனையக் கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சிதரும் ஆயில் ஆகும்.

முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.

ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் ‘உடனடி டாக்டர்’ கற்றாழைச் சாறுதான்.

இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.

தோலோடு கற்றாழையை பச்சை மஞ்சளோடு சேர்த்து மைய அரைத்து முகம் கழுத்து கை கால்களில் தடவி சில மணி நேரத்துக்குப் பின்னர் வெந்தய நுரை கொண்டு தேய்த்து குளித்தால் உடல் பளபளப்பாகும். தோல் நோய் வராது. கற்றாழை கழியைத் தலை முடியில் தடவி சீவினால் மடி கலையாது. தலையின் சூடும் குறையும். உடல் குளிர்ந்து காணப்படும்.

பிரயாணக் களைப்பினால் சோர்வுற்ற கால்களுக்கு கற்றாழை சாறைத் தடவலாம். சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து ஈரப்பதம் அளிக்கும். எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது. முகத்தின் சுருக்கங்களைப் போக்கி புத்துணர்ச்சியையும் இளமைப் பொலிவையும் தக்க வைத்துக் கொள்ள உதவும். குறிப்பாக வடுக்கள் இருந்த சுவடு தெரியாமல் மறையும்.

கண்நோய் கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும்.

கேசப் பராமரிப்பில் தலைக்கு கறுப்பிடவும் கேசத்தின் வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது.

தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது. கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும். எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.

நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு.

சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.

இந்த எண்ணெய் பெண்களின் மாதாந்திர ருதுவை ஒழுங்குபடுத்தும். கர்ப்பவதிகளுக்கு கருச்சிதைவை உண்டாக்கும்.

நண்பர் (Deepak Cibi) வேண்டுக்கொலுக்கு இணங்க, இத் தகவல் இங்கு பதிவு செய்யப்படுகிறது.
நன்றி.

அம்மா .... ஆதிசங்கரருக்கு

மணக்கால் அய்யம்பேட்டை | 4:52 PM | Best Blogger Tips
அம்மா ....

ஆதிசங்கரருக்கு இளம் வயதிலேயே துறவு மனப்பான்மை ஓங்கி இருந்தது. தாய் ஆர்யாம்பாளிடம் துறவுக்கு அனுமதியைக் கேட்க, தன் ஒரே மகன் துறவியாவதைக் காண சகிக்க முடியாத அந்தத் தாய் மறுத்து விட்டார்.

இளம் வயதிலேயே விதவையான அந்தத் தாயிற்கு அந்த உத்தம மகனை விடப் பெரிய உறவோ, சொத்தோ இருக்கவில்லை. தாயின் அனுமதியில்லாமல் துறவியாகவோ ஆதிசங்கரருக்கு சம்மதமில்லை.

ஒருமுறை பூர்ணா நதியில் குளிப்பதற்காக தாயுடன் சென்றிருந்த ஆதிசங்கரரின் காலை ஒரு முதலை பற்றிக் கொண்டது.

ஆதிசங்கரர் உரத்த குரலில் தாயிடம் சொன்னார். “அம்மா என் காலை ஒரு முதலை பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறது. நான் சன்னியாசி ஆக நீ அனுமதி தந்தாயானால் அது என்னை விட்டு விடும்”.

ஒரு இக்கட்டான நிலைக்கு ஆளான ஆர்யாம்பாள் வேறு வழியில்லாமல் மகன் துறவியாவதற்கு ஒத்துக் கொண்டார்.

ஆதிசங்கரர் தகுந்த மந்திரங்களை எல்லாம் சொல்லி அந்த நதியிலேயே துறவறம் மேற்கொண்டார்.

முதலை அவர் காலை விட்டு விட்டது. (அந்த முதலை பிரம்மாவின் சாபம் பெற்ற ஒரு கந்தர்வன் என்றும் ஆதிசங்கரரின் கால் பட்டதும் அவன் சாப விமோசனம் பெற்றான் என்றும் சொல்லப்படுகிறது)

கரையேறிய ஆதிசங்கரர் தன் வீடு புகவில்லை. வீடு வந்த பின்னும் வாசலிலேயே “பிக்ஷாந்தேஹி” என்று மகன் நின்ற போது தான் ஆர்யாம்பாளுக்கு உண்மை முழுமையாக உறைத்திருக்க வேண்டும்.

முன்பே ஒரு முறை மகன் துறவியாவது போல் கனவு கண்டு அந்தக் கனவுக்கே துடித்துப் போன அந்தத் தாயின் நிலைமை அப்போது எப்படி இருந்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

எல்லையில்லாத சோகத்தில் மூழ்கிய ஆர்யாம்பாள் மகன் இருந்தும் இல்லாதது போல் வாழ வேண்டி வரும் நிலைமையையும், ஈமக்கிரியை கூட மகன் இல்லாமல் போகும் அவலத்தையும் எண்ணி மிகவும் வருந்தினார்.

உறவுகளைத் துறக்கும் போது உறவுகளுடன் கூடிய அனைத்தையும் முடித்துக் கொள்வதால் துறவிகள் பெற்றவர்களுக்கு ஈமக்கிரியைகள் கூட செய்யக் கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது.

ஆனால் தாயின் சோகத்தால் நெகிழ்ந்த ஆதிசங்கரர் அந்த விதியை மீறித் தன் தாயிற்கு வாக்களிக்கிறார். ‘உன் அந்திம காலத்தில் உன் ஈமக்கிரியைகளைச் செய்ய நான் கண்டிப்பாக வருவேன்”

ஆண்டுகள் பல கழிந்த பின் ஆர்யாம்பாள் மரணப்படுக்கையில் கிடக்கையில் தன் ஞான திருஷ்டியால் அதை அறிந்த ஆதிசங்கரர் உடனடியாகத் தாயிடம் வந்தார்.

ஒரு துறவியான பின் தாயிற்கு ஈமக்கிரியை செய்வதா என்று சாஸ்திரம் படித்த உறவினர்கள் குமுறினார்கள். சிதைக்குத் தீ மூட்ட நெருப்பைக் கூடத் தர மறுக்க தன் சக்தியாலேயே தாயின் சிதைக்கு ஆதி சங்கரர் தீ மூட்டினார்.

அரும் பெரும் தத்துவங்களையும், உபநிடத சாரங்களையும் உலகத்திற்குத் தந்த ஆதிசங்கரர் தாயின் அந்திம காலத்தில் மடியில் கிடத்திக் கொண்டு பாடிய “மாத்ரு பஞ்சகம்” மிகவும் நெகிழ்ச்சியானது.

அறிவால், ஞானத்தால், பக்தியால் எத்தனையோ பொக்கிஷங்களைத் தந்த ஆதிசங்கரர் உணர்ச்சி பூர்வமாக எழுதியது அந்த ஐந்து சுலோகங்களை மட்டுமே.

ஒரு ஜகத்குரு ஒரு மகனாக அன்னையின் பாசத்தையும், தியாகத்தையும் எண்ணிப் பாடிய மாத்ரு பஞ்சகம் இது தான் -

“அம்மா, என்னைக் கருவில் தாங்கி நான் பிறக்கும் வரை உடல் மெலிந்து நீ பட்ட கஷ்டங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்?
குழந்தையான என் மலம் மூத்திரம் எல்லாம் சுத்தம் செய்து, எனக்காகப் பத்தியம் இருந்து என்னைக் காப்பாற்றி வளர்த்த உனக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்?
அன்று முதல் இன்று வரை நீ எனக்கு செய்ததற்கு கைம்மாறு செய்ய எனக்குப் பல ஜென்மங்கள் போதாதே!

நான் குருகுலத்தில் இருந்த ஒரு சமயம் நான் துறவு பூண்டதாக நீ கனவு கண்டாய். உடனே நீ அங்கு ஓடி வந்து கதறினாய். அதைக் கண்டு எல்லோரும் என்ன விஷயம் என்று கேட்க உன் கனவைச் சொல்லிக் கதற அதைக் கேட்ட குருகுலம் முழுவதும் கதறியதே! அத்தகைய உனது காலில் வீழ்ந்து நான் இன்று கதறுகிறேன்.

எல்லா சக்திகளும் அற்றுப் போன கடைசி காலத்தில் கொஞ்சம் தண்ணீர் தந்தால் ஆறுதல் உண்டாகும். அந்தப் பாக்கியமும் எனக்குக் கிடைக்கவில்லையே. பின்பு ஒவ்வொரு முறையும் திதியில் சிரார்த்தம் செய்யும் பாக்கியமும் இல்லாத சன்னியாசியாக நான் இருக்கிறேனே.

அம்மா! என்னைக் கூப்பிடும் போதெல்லாம் முத்தே, மணியே, கண்ணே, ராஜாவே, குழந்தாய் நீ வெகு காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்திய வாய்க்கு வாய்க்கரிசி போடுகிறேனே.

தாயே பிரசவ வேதனை தாளாமல் அம்மா, அப்பா, சிவா, கிருஷ்ணா, கோவிந்தா, முகுந்தா என்றெல்லாம் கதறிய ஒரு கதறலுக்கு என்னால் பதில் கூற முடியுமா? அம்மா உனக்கு நமஸ்காரம்.”

கேன்சர் நோய் - சில உண்மைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:49 PM | Best Blogger Tips

கடந்த 16 ஆண்டுகள் ஆராய்ச்சியில் 9 லட்சம் குண்டு பேர்வழிகளின் சுகாதார அறிக்கையையும் அவர்கள் வார்த்தைகளையும் ஆராய்ந்தபோது சில உண்மைகள் தெரிய வந்துள்ளதாக கனடா கேன்சர் மருத்துவ சொசைட்டி கூறியுள்ளது.

ஆண்களில் 52 வயதுக்கு மேல் பெண்களில் 62 வயதுக்கு மேல் குண்டாக இருப்பவர்களில் பலருக்கும் புற்றுநோய் வந்துள்ளது. மார்பகம், கருப்பப, குடல், சிறுநீரகம், கல்லீரல், மூத்திரப்பைகள் ஆகியவற்றில் கேன்சர் நோய் இவர்களில் பலருக்கு வந்துள்ளது. குறிப்பாக ஆண்களில் குடல், கல்லீரல், வயிறு, வாய் என்று சில பகுதிகளில் வருவது பொதுவாக உள்ளது.

குண்டாக இருப்பவர்களுக்கு மற்றவர்களை விட ஈஸ்ட்ரோஜன், டெஸ்டோரின், இன்சுலின் ஆகிய ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும். அதனால் புற்றுநோய் வரும் என்று புற்றுநோய் ஆராய்ச்சி மைய நிபுணர் பார்பரா ஒய்லி கூறுகிறார். அதனால் தான் டாக்டர்கள் நாற்பதை தாண்டினால், பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று கூறுகின்

சில முக்கியமான விஷயங்கள்: பெரிய நோ நோ

1. மைக்ரோ வேவ்ல பிளாஸ்டிக் பாத்திரங்கள் கண்டிப்பா வேண்டாம்

2. தண்ணீர் பாட்டிலை ஃப்ரீஸரில் வைக்க வேண்டாம்

3. பிளாஸ்டிக் பேப்பர் சுத்தி மைக்ரோவேவ்ல எதுவும் வைக்கவேண்டாம்

பிளாஸ்டிக்கு பதிலா ஓவன்க்குன்னே விக்கற பாத்திரங்கள் யூஸ்
பண்ணிக்கோங்க.

இதெல்லாம் நம்ம நல்லதுக்கு தானேங்க...

நீண்ட காலமாக புற்று நோய்க்கு (CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை மட்டுமே உள்ளது என்பதை மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ்(ஜோஹ்ன்ஸ் HOPKINS) என்ற மருத்துவ விஞ்ஞானி சொல்கிறார்.

1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரிய வராது, அவை சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர் சிகிச்சைக்குப் பின், டாக்டர் நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையான அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில் உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கான செல் உருவாகிறது.

3) ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) வலுவாக இருக்கும்போது கேன்சருக்கான செல் அழிக்கப்பட்டு, பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு, டயுமர் (tumors) ஏற்படுவதற்கான வாய்ப்பும் தடுக்கப்படுகிறது.

4) ஒருவருக்கு கேன்சர் இருக்கிறது என்றால் அவருக்கு பலவிதமான சத்து குறைபாடு (நுத்ரிதிஒநல் deficiencies) உள்ளதாக அர்த்தமாகிறது. இதற்கு மரபு, சுற்றுச்சூழல், உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணிகளாகிறது.

5) சிறப்பான உணவு கட்டுப்பாட்டின் மூலம் நாம் இந்த ஊட்ட சத்து குறைப்பாட்டை நீக்கலாம். தேவையான சத்துள்ள உணவின் மூலமாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

6) கீமொதெரபீ சிகிச்சை வேகமாக வளர்ந்து வரும் கேன்சர் செல்களை மட்டுமல்லாமல், எலும்பு, இரைப்பை போன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. மேலும் குடல், கிட்னி, இதயம், மூச்சுக்குழல் போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது

7) கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமான செல்கள், உறுப்புகள், திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது

8) ஆரம்பகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியின் (tumor) அளவைக் குறைக்க செய்கிறது. எனினும் நீண்டகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியினை அழிக்க பெரும்பாலும் உதவுவதில்லை.

9) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் உடம்பில் வளரும் நச்சு மூலம் நோய் எதிர்ப்பு சக்தியானது அதற்க்கு ஏற்றார் போல் சமரசம் செய்து கொள்ளும் அல்லது அழிக்கப் பட்துவிடும். இதனால் மனிதனுக்கு பலவிதமான பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படும்.

10) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் கேன்சர் செல்கள் எதிர்ப்பு சக்திப் பெற்று நாளடைவில் அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அறுவை சிகிச்சையும் கேன்சர் செல்கள் மற்ற இடங்களில் பரவ ஒரு காரணமாகி விடுகிறது.

11) கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழியானது, கேன்சர் செல்கள் பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை நாம் உண்ணாமல் தவிர்ப்பதே ஆகும்.

12) இறைச்சியில் உள்ள புரதமானது ஜீரணிக்க கடினமாகவும், ஜீரணமாக அதிக நேரமும் எடுத்துக் கொள்கிறது. மேலும் ஜீரணமாக அதிக செரிமான நொதித் தேவைப்படுகிறது. ஜீரணமாகாத இறைச்சியானது குடலில் தங்கி அழுகி, மெதுவாக நஞ்சாகிவிடுகிறது.

13) கேன்சர் செல்லின் சுவரானது கடினமான புரதத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே இறைச்சி சாப்பிடுவதை தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வதால், நொதியானது (enzymes) தனது சக்தியை கேன்சர் செல்லின் கடினமான சுவரை தாக்கி, உடலின் அழிக்கும் செல்லானது (body's own கில்லெர் cells) கேன்சர் செல்லை அழிக்க உதவியாகிறது.

14) IP6, Flor-ssence, Essiac, anti-oxidants, vitamins, minerals, எபாஸ் etc, போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தி, உடலின் அழிக்கும் செல்கள் (body's own killer cells) மூலம் கேன்சர் செல்களை அழிக்க உதவி செய்கிறது. வைட்டமின் E போன்றவை உடலில் உள்ள பாதிக்கப்பட்ட, தேவையற்ற செல்களை நீக்கும் முறையை ஊக்குவிக்கிறது.. (Other supplements like vitamin E are known to cause apoptosis, or programmed cell death, the body's normal method of disposing of damaged, unwanted, or unneeded cells)

15) கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit) நோயே! நேர்மறையான, ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை அளிக்கிறது. கோபம், மன்னிக்கும் மனமின்மை, எதிர்மறையான எண்ணங்கள் போன்றவை மன அழுத்தத்தையும், உடலின் அமிலத்தன்மையையும் அதிகரிக்கிறது எனவே மன்னிக்கும் குணத்தையும், அன்பு செலுத்தவும், சுவாசப்படுத்திகொள்ளவும், வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!

16) ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலையில் கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை. தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் போன்றவை உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்க உதவுகிறது. மூச்சுப் பயிற்சியானது (Oxygen therapy) உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.

உடலில் கேன்சர் செல் வளர காரணிகள்:-

1) கேன்சர் செல்லுக்கு சர்க்கரை ஒரு நல்ல உணவு. எனவே சர்க்கரையை தவிர்ப்பது கேன்சர் செல்லுக்கு தவையான ஒரு முக்கிய உணவை நிறுத்துவது போன்றது.

சர்க்கரைக்கு மாற்றாக உள்ள NutraSweet, Equal, Spoonful, etc போன்றவையும் Aspartame எனும் அமிலத்தால் தயாரிக்கப்படுவதால் இவையும் பாதிப்பானாதே! எனவே குறைந்த அளவில் தேன், மொலஸஸ், Manuka போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். Table Salt-ல் வெள்ளை நிறத்திற்க்காக கெமிக்கல் சேர்ப்பதால் இதற்கு மாற்றாக Bragg's amino or sea salt போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

2) பால் உடலில் சளியை உற்பத்தி செய்கிறது, குறிப்பாக இரைப்பை-குடல் (gastro-intestinal) பகுதியில் சளியால் கேன்சர் செல் நன்கு வளரும். எனவே பாலுக்கு மாற்றாக இனிப்பில்லாத சோயாப் பாலை எடுத்துக் கொள்வதன் மூலம், கேன்சர் செல் பெருக்கத்தைக் குறைக்கலாம்.

3) அமிலத் தன்மையில் கேன்சர் செல் நன்கு வளரும். இறைச்சி சம்பந்தமான உணவுகள் அமிலத் தன்மை வாய்ந்தது. எனவே மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிக்குப் பதிலாக மீன், குறைந்த அளவு சிக்கன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் இறைச்சியானது பிராணிகளின் ஹோர்மோன், ஒட்டுண்ணிகள், ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது, இது மிகவும் ஆபத்தானது..

4) ஒரு சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ், முழு தானியங்கள், விதைகள், பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில் வைத்திருக்கிறது. 20% சமைத்த உணவாக இருக்கலாம், பீன்சயும் சேர்த்து. ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் உயிரோட்டமுள்ள நொதிகளை அளிக்கிறது, இவை 15 நிமிடங்களில் நன்கு உறிஞ்சப்பட்டு, ஊட்ட சத்து அளித்து நல்ல செல்கள் வளர உதவுகிறது.

ஆரோக்கியமான செல்கள் வளர உதவும் உயிரோட்டமுள்ள நொதிகளை பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும்! நொதிகள் (enzymes) 104 degrees F (40 degrees C) வெப்பத்தில் அழிந்து போய் விடுகிறது.

5) டீ, காஃபீ, சாக்லெட் போன்றவற்றில் அதிககளவு காஃபீன் உள்ளதால் இவைகளை தவிர்த்து விடவும். இதற்கு மாற்றாக க்ரீன் டீ (Green Tea) எடுத்துக் கொள்ளவும்! இதில் கேன்சர் செல்களை எதிர்க்க கூடிய ஆற்றல் உள்ளது. சுத்திகரீக்கப்பட்ட நீரை மட்டுமே அருந்தவும். நச்சு மற்றும் உலோக கலவை அதிகமுள்ள குழாய் நீரை தவிர்த்து விடவும்.

சிறுநீரகங்களுக்கு ஓய்வ‌ளி‌க்கா‌தீ‌ர்க‌ள்!

மணக்கால் அய்யம்பேட்டை | 4:06 PM | Best Blogger Tips
உட‌லி‌ன் ‌மிக மு‌க்‌கியமான பாக‌ங்க‌ளி‌ல் ‌சிறு‌நீரக‌ங்களு‌ம் ஒ‌ன்று. உட‌லி‌ல் வ‌யி‌ற்‌றி‌ன் அடி‌ப்பகு‌தி‌யி‌ல் அவரை ‌விதை வடிவ‌த்‌தி‌ல், ‌சி‌றிதாக இரு‌ப்பதுதா‌ன் ‌சிறு‌நீரக‌ம. இதனை ஆ‌ங்‌கில‌த்‌தி‌ல் ‌கி‌ட்‌னி எ‌ன்‌கிறோ‌ம்.

இடுப்புக்கு மேலே விலா எலும்புக் கூண்டுக்குள் இரு பக்கமும் இருப்பதுதான் சிறுநீரகம். ஒரு ம‌னித‌ ‌சிறு‌‌நீரக‌த்‌தி‌ன் சராச‌ரி எடை 150 கிராம். 12 செ.மீ. நீளம் 5 செ.மீ. அகலம் கொ‌ண்டதாக ஒ‌வ்வொரு ‌சிறு‌‌நீரகமு‌ம் இரு‌க்கு‌ம். . சிறுநீரகத்தைப் பொருத்தவரை அதன் அளவு‌ம் ‌மிகவு‌ம் மு‌க்‌கியமாக‌க் கருத‌ப்படு‌கிறது. ஏதாவதொரு காரணத்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும் நிலையில்தான் அதன் அளவும் குறையவோ அல்லது கூடவோ செய்கிறது.
‌‌
சிறு‌நீரக‌த்‌தி‌ன் செய‌ல்களை எ‌ண்‌ணி‌ப் பா‌ர்‌த்தோமானா‌ல் நம‌க்கு இறைவ‌னி‌ன் ‌மீது ‌நி‌ச்சய‌ம் ஒரு ம‌தி‌ப்பு வரு‌ம். அ‌ந்த அள‌வி‌ற்கு ‌சிறு‌நீரக‌த்‌தி‌ன் ப‌ணி அமை‌ந்து‌ள்ளது.
உட‌லி‌ல் ப‌ல்வேறு நடவடி‌க்கைகளை கவ‌னி‌க்‌கிறது இ‌ந்த ‌சிறு‌நீரக‌ங்க‌ள். பொதுவாக ஒரு ம‌னிதனு‌க்கு இர‌ண்டு ‌‌சிறு‌நீரக‌ங்க‌ள் இரு‌க்கு‌ம். ஆனா‌ல் ஒரு ம‌னித‌ன் வாழ ஒரு ‌சிறு‌நீரகமே போதுமானதாக‌க் கருத‌ப்படு‌கிறது.

உட‌லி‌ல் உ‌ள்ள ர‌த்த‌த்தை வ‌டிக‌ட்டி அ‌தி‌ல் உ‌ள்ள க‌ழிவுகளை ‌சிறு‌நீராக வெ‌ளியே‌ற்று‌கிறது. உடல‌க்கு‌த் தேவையான ‌நீ‌ர்‌ச்ச‌த்து சம அள‌வி‌ல் இரு‌க்கவு‌ம் உதவு‌கிறது. ர‌த்த அழு‌த்த‌த்தை‌க் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல் வை‌க்‌கிறது. உட‌லி‌ல் அ‌மில - கார‌த் த‌ன்மையை சம‌நிலை‌யி‌ல் வை‌க்‌கிறது.

இதும‌ட்டும‌ல்‌ல், உட‌லி‌ல் ‌சிவ‌ப்பணு‌க்க‌ள் உ‌ற்ப‌த்‌தி‌க்கு‌ம் உத‌வி செ‌ய்‌கிறது. அதாவது, உட‌லி‌ல் ‌சிவ‌ப்பணு‌க்க‌ள் உ‌ற்ப‌த்‌தி‌க்கு உதவு‌ம் எ‌த்தோபா‌ய்‌ட்டி‌ன் எ‌ன்ற ஹா‌ர்மோனை ‌சிறு‌நீர‌க‌ம் சுர‌க்‌கிறது. இ‌ந்த ஹா‌ர்மோ‌ன் சுர‌ப்‌பி‌ல் குறை ஏ‌ற்படு‌ம் போதுதா‌ன் ர‌த்த சோகை எ‌ன்ற ‌வியா‌தி ஏ‌ற்படு‌கிறது.

இ‌ப்படி ‌சிறு‌நீரக‌த்‌தி‌ன் ப‌ணிகளை அடு‌க்‌கி‌க்‌ கொ‌ண்டே போகலா‌ம். இவை ம‌ட்டு‌ம் வேலை செ‌ய்யாம‌ல் போனா‌ல் உட‌ல்‌நிலை எ‌‌வ்வாறு பா‌தி‌க்கு‌ம் எ‌ன்பதை வா‌ர்‌த்தைகளா‌ல் ‌விவ‌ரி‌க்க முடியாது.

ர‌த்த‌ம் சு‌த்‌திக‌ரி‌க்க‌ப்படாம‌ல் அ‌ப்படியே உட‌ல் முழுவது‌ம் பரவு‌ம். ர‌த்த‌த்‌தி‌ல் தேவைய‌ற்ற உ‌ப்பு, தாது‌ப் பொரு‌ட்க‌ள் த‌ங்‌கி‌விடு‌ம். இதனா‌ல் கை, கா‌ல்க‌‌ளி‌ல் ‌வீ‌க்க‌ம் ஏ‌ற்படு‌ம். ர‌த்த ‌சிவ‌ப்பணு‌க்க‌ளி‌ன் உ‌ற்ப‌த்‌தி பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு ர‌த்த சோகை ஏ‌ற்படு‌ம். இ‌ந்த ‌நிலை தொட‌ர்‌ந்து ‌நீடி‌த்தா‌ல் உட‌ல் சம‌ச்‌சீ‌ர் ‌நிலையை இழ‌ந்து மரண‌ம் ஏ‌ற்படு‌ம்.

இ‌ப்படி நாளெ‌ல்லா‌ம் நம‌க்காக பாடுபடு‌ம் ‌சிறு‌நீரக‌ம் ‌சீராக செய‌ல்பட வே‌ண்டு‌ம் எ‌னி‌ல் நா‌ம் செ‌ய்ய வே‌ண்டியது எ‌ன்ன? ‌தினமு‌ம் உடலு‌க்கு‌த் தேவையான ‌நீரை அரு‌ந்‌தி வர வ‌ே‌ண்டு‌ம். உடலு‌க்கு‌த் தேவையான ‌நீரை நா‌ம் அரு‌ந்து‌ம் போது ‌சிறு‌நீரக‌த்‌தி‌ன் வேலை எ‌ளிதா‌கிறது. ‌‌தினமு‌ம் உடலு‌க்கு‌த் தேவையான அளவு‌க்கு‌க் குறைவாக ‌நீ‌ர் அரு‌ந்துவதாலோ, நீ‌ர் அரு‌ந்தாம‌ல்‌ இரு‌ப்பதாலோ ‌சிறு‌நீரக‌த்‌தி‌ற்கு ஓ‌ய்வு அ‌ளி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று எ‌ண்‌ணினா‌ல் அது ‌‌விரை‌வி‌ல் நிர‌ந்தர ஓ‌ய்வை எடு‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் எ‌ன்பதை ‌நினை‌வி‌ல் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

மலச்சிக்கல் பிரச்சனையா? கவலைய விடுங்க !

மணக்கால் அய்யம்பேட்டை | 2:55 PM | Best Blogger Tips
 


இன்றைய காலத்தில் ஆரோக்கியமற்ற உணவுகளின் காரணமாக பலர் மலச்சிக்கல் பிரச்சனைக்கு ஆளாகின்றனர். சில நேரங்களில் அந்த மலச்சிக்கல் முற்றிய நிலையில் கடுமையான வயிற்று வலியுடனோ அல்லது இரத்தப் போக்கோ ஏற்படும். இவ்வாறு இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். இந்த பிரச்சனை குழந்தைகளுக்கு வந்தால், அவர்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாவார்கள். இவை அனைத்திற்கும் முக்கிய காரணம் உண்ணும் உணவு தான். ஏனெனில் உண்ணும் உணவில் குறைவான அளவில் நார்ச்சத்து இருந்தால், அவை குடலியக்கத்தை பாதிக்கும், பின் உடலில் இருக்கும் கழிவுகள் சரியாக வெளியேறாமல், உடலிலேயே தங்கி எந்த ஒரு செயலையும் சரியாக செய்ய முடியாமலிருக்குமாறு செய்யும்.

இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு என்றால் அது நார்ச்சத்துள்ள உணவுகள் தான். இந்த சத்துள்ள உணவுகள் குடலின் இயக்கத்தை அதிகரித்து, உடலில் இருக்கும் கழிவுகளை சரியாக வெளியேற்றிவிடும். ஆகவே இந்த உணவுகளை அதிகம் உணவில் சேர்த்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்யலாம். இப்போது அந்த மலச்சிக்கலை தடுக்கும் நார்ச்சத்துள்ள உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

ஆப்பிள், பிளம்ஸ் மற்றும் பேரிக்காய்
மலச்சிக்கலானது பொதுவாக வயிறு உப்புசத்துடன் இருந்தால் ஏற்படுவது. இதற்கு பழங்களில் ஆப்பிள், பிளம்ஸ் மற்றும் பேரிக்காயை சாப்பிட்டால், அவற்றில் உள்ள நார்ச்சத்துக்கள் மலச்சிக்கல் உண்டாகாமல் தடுக்கும்.

பாப்கார்ன்
பாப்கார்னில் கலோரிகள் குறைவாக இருப்பதுடன், நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மலச்சிக்கல் ஏற்படுவதற்கு நார்ச்சத்துக் குறைபாடும் ஒரு காரணம். ஆகவே ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் போது, மற்ற பிட்சா, சாண்ட்விச் போன்றவற்றை சாப்பிடுவதற்கு பதிலாக, பாப்கார்னை சாப்பிட்டால், மலச்சிக்கலை தவிர்க்கலாம்.

பீன்ஸ்
காய்கறிகளில் கிடைக்கும் நார்ச்சத்துக்களை விட, பீன்ஸில் இரண்டு மடங்கு அதிகமாக நார்ச்சத்து உள்ளது. ஆகவே இதனை அதிக அளவில் உணவில் சேர்த்து வந்தால், குடலியக்கம் நன்கு செயல்பட்டு, மலச்சிக்கல் ஏற்படாது தடுக்கலாம்.


உலர் பழங்கள்
பழங்களை விட உலர் பழங்களில் அதிக சத்துக்கள் உள்ளன. அதிலும் உலர்ந்த திராட்சை, பேரிச்சை, ஆப்ரிக்காட் போன்றவற்றில் நார்ச்சத்துக்கள் மட்டுமின்றி, சோர்பிட்டால் என்னும் கார்போஹைட்ரேட்டும் உள்ளது. இது பொருளானது உணவுப் பொருட்கள் செரிமானமடையும் போது உண்டாகும் திரவத்தை, குடலின் வழியாக வெளியேறும் மலத்தை லேசாக்கி, எளிதாக வெளியேற்ற உதவுகிறது.

தானியங்கள்
அனைவருக்குமே தானியங்களில் கொழுப்புக்கள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளன என்பது தெரியும். ஆகவே இந்த பொருட்களை உணவில் சேர்ப்பது நல்லது. அதிலும் கோதுமையால் ஆன சப்பாத்தியை சாப்பிட்டால், மலச்சிக்கல் உண்டாகாமல் இருக்கும்.

ப்ராக்கோலி
நார்ச்சத்தின் சூப்பர் ஸ்டார் என்றால் அது ப்ராக்கோலி எனலாம். ஏனெனில் இதில் அந்த அளவில் நார்ச்சத்தானது நிறைந்துள்ளது. ஆகவே இதனை வாரத்திற்கு இரண்டு முறை சமைத்து சாப்பிட்டால், மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்க முடியும்.

பெர்ரி பழங்கள்
பெர்ரி பழங்களான ராஸ்ப்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ப்ளாக்பெர்ரி போன்றவற்றில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் அரைக் கப் ஸ்ட்ராபெர்ரியில் 2 கிராமும், ப்ளாக்பெர்ரியில் 3.8 கிராமும், ராஸ்ப்பெர்ரியில் 4 கிராம் நார்ச்சத்தும் அடங்கியுள்ளன. மேலும் கலோரிகளும் குறைவாக உள்ளன. ஆகவே இவற்றை சாப்பிட்டால், குடலியக்கம் நன்கு இயங்கி, மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்கும்.

நட்ஸ்
நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களில் நட்ஸ் வகைகளும் ஒன்று. ஆகவே நொறுக்கு தீனி சாப்பிடுவதற்கு பதிலாக, இதனை தேர்ந்தெடுத்து சாப்பிட்டால், வயிற்றில் உண்டாகும் உப்புசம் நீங்கி, மலச்சிக்கலை தடுக்கலாம்.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை தோலோடு சாப்பிட்டால், 3.8 கிராம் நார்ச்சத்தை பெறலாம். அதிலும் இனிப்பு உருளைக்கிழங்கை தோலோடு சாப்பிட்டால், 4.8 கிராம் நார்ச்சத்தானது உடலுக்கு கிடைக்கும். ஆகவே உருளைக்கிழங்கை சாப்பிடும் போது தோலை நீக்காமல், வேக வைத்து, மசித்து, ஒரு பொரியல் போன்று செய்து சாப்பிட்டால், மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்கும்.

நன்றி பேஸ்புக் தமிழ் பேசும் மக்கள் சங்கம்