கோயிலுக்கு சென்று இறைவனுக்கு தெய்வீக ......

மணக்கால் அய்யம்பேட்டை | 3:14 PM | Best Blogger Tips

 சிலர் கோவிலுக்கு போவது பூஜை செய்வது ஒருவித பய உணர்வு தானே அன்றி இறைவனை உணர  அல்ல, கோவில் வழிபாடு எதற்காக என்று அறியாமல் கடமைக்காக இறைவனை ...

🕉️☘️🔯🔷💥🔥💥🔷🔯☘️🕉️

கோயிலுக்கு சென்று இறைவனுக்கு தெய்வீக அபிஷேகங்கள் பார்த்தால் என்ன பலன் கிடைக்கும்..!

🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕

பொதுவாக கோவில்களுக்கு செல்வது வழக்கம்..!
கோவில் என்றால் ஒரு அமைதி கிடைக்கும் என்று அனைவருமே செல்வார்கள்...

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷        🔘 ⪢┈ᗘᗛ┈⪡ 🔘

அங்கு சிலர் அர்ச்சனை செய்வார்கள். அர்ச்சனை செய்வதற்கு முன் சாமிக்கு அபிஷேகம் நடக்கும் அதனை பார்க்க தான் அவ்வளவு கூட்டம் வரும். என்றால் அந்த அபிஷேகம் பார்த்தால் அவ்வளவு நன்மைகள்.

சிலர் அந்த அபிஷேகத்திற்காக அவ்வளவு நேரம் கூட காத்திருப்பார்கள்.
அதில் அவ்வளவு நன்மைகள் உள்ளது.!

🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹

ஆன்மீகம் on Tumblr: அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோவில் - உறையூர்

32 விதமான பொருட்கள் ஏன் அதற்கு மேலும் பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்வார்கள் அதன் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு பலன்கள் உள்ளது வாங்க அதனை பற்றி தெரிந்துகொள்வோம்..!

🔥💥🌟✨❄️🌊❄️✨🌟💥🔥

Temples in Tamil Nadu | Famous Hindu Temples in India - Maalaimalar

தெய்வீகத் தன்மையும் அதன் மகிமையும் தரக்கூடிய 32 அபிஷேக பொருட்கள் என்ன ?:-

தண்ணீர்
நல்லெண்ணெய்
பச்சரிசி மாவு
மஞ்சள் பொடி
திருமஞ்சனம்
பஞ்சகவ்யம்
பசும்பால்
பசும் தயிர்
பஞ்சாமிர்தம்
தேன்
நெய்
சர்க்கரை
இளநீர்
கரும்புச்சாறு
நார்த்தம் பழம்
சாத்துக்குடி
எலுமிச்சை
திராட்சை
வாழைப்பழம்
பலாப்பழம்
மாம்பழம்
மாதுளம்பழம்
தேங்காய் துருவல்
திருநீறு
சந்தனம்
பன்னீர்
கும்ப தண்ணீர்
சங்காபிஷேகம்
கோரோஜனை
அன்னம்
பச்சை கற்பூரம்
கஸ்தூரி மஞ்சள்

💜💙🩵🩷🧡💛💚🩵💙💜🩷

அபிஷேகம் அதன் பலன்கள்:-

👇👇👇

1) தண்ணீர் அபிஷேகம் செய்யும் போது பார்த்தால் நம் மனதிலிருக்கும் கெட்டது விலகி நன்மையை அளிக்கும்.

2) நல்லெண்ணெய் நம் வாழ்வில் சுகத்தை கொடுக்கும்.

3) பச்சரிசி மாவு அபிஷேகம் பார்ப்பதால் வீட்டிலிருக்கும் கடனை போக்கும்.

4) மஞ்சள் பொடி அபிஷேகம் பார்த்தால் நல்ல நட்பு ஏற்படும்.

🐘🐘🐄🐄🦚🦚🦚🐄🐄🐘🐘

5) திருமஞ்சனம் அபிஷேகம் பார்த்தால் நமக்கு ஏற்பட்டிருக்கும் நோய் தீர்க்கும் அல்லது நோய் வராமலும் தடுக்கும்.

6) பஞ்சகவ்யம் அபிஷேகம் பார்ப்பதால் நீங்கள் செய்த பாவங்கள் தொலைந்து போகும்.

7) பசும்பால் அபிஷேகம் பார்த்தால் நீண்ட நாள் வாழும் ஆயுள் கிடைக்கும்.

8)  பசும் தயிர் அபிஷேகம் பார்த்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

9) பஞ்சாமிர்தம்  அபிஷேகம் பார்த்தால் உடலில் பலத்தை தரும்.

10)  தேன் அபிஷேகம் மனதில் சுகத்தை அளிக்கும்.

🌐🌀💠🔆🔱⚜️🔱🔆💠🌀🌐

11) நெய் அபிஷேகம் பார்த்தால் நல்ல முக்தி அளிக்கும்.

12) சர்க்கரை அபிஷேகம் பார்த்தால் எதிரியை வெல்ல முடியும்.

13) இளநீர் அபிஷேகம் பார்த்தால் நல்ல சந்ததி வாய்க்கும்.

14) கரும்புச்சாறு அபிஷேகம் பார்த்தால் உடலளவில் ஆரோக்கியம் தரும்.

🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹

15) நார்த்தம் பழம் அபிஷேகம் பார்த்தால் மிருத்யு பயத்தை போக்கும்.

16) சாத்துக்குடி அபிஷேகம் செய்தால் துக்கத்தை போக்கும்.

17) எலுமிச்சை அபிஷேகம் பார்த்தால் எமனால் ஏற்பட்டிருந்த பயம் நீங்கும்.

18) திராட்சை அபிஷேகம் பார்த்தால் திட சரீரம் தரும்.

19) வாழைப்பழம் அபிஷேகம் பார்த்தால்  பயிர் செழிக்கும், மகசூல் பெருகும்.

🌳🌳🌴🌴🎋🪴🎋🌴🌴🌳🌳

20) பலாப்பழம் அபிஷேகம் பார்த்தால் மங்களம் உண்டாகும்.

21) மாம்பழம் அபிஷேகம் பார்த்தால்  செல்வம் பெருகும்...

22) மாதுளம்பழம் அபிஷேகம் பார்த்தால் கோபத்தை போக்கும்...

23)  தேங்காய் துருவல் அபிஷேகம் பார்த்தால் அரசுரிமை கொடுக்கும்...

24) திருநீறு அபிஷேகம் பார்த்தால் சகல நன்மையையும் தரும்...

💜💙🩵🩷🧡💛💚🩵💙💜🩷
Temple city Kumbakonam sekar - ஆலயங்களில் ஒலிக்கும் ஒலியின் தெய்வீக அலைகள்!  பழங்காலத்தில், காலை நேரத்தில் கோவில்களில் மங்கலச்சங்கு ஒலித்து ...

25) சந்தனம் அபிஷேகம் பார்த்தால் வீட்டில் சுகம் பெருமை சேர்க்கும்...

26) பன்னீர் அபிஷேகம் சருமம் காக்கும்...

27) கும்ப தண்ணீர் அபிஷேகம் பார்த்தால்... மீண்டும் பிறவா பயன் அளிக்கும்...

28) சங்காபிஷேகம் பார்த்தால் சர்வ புண்ணியத்தை தரும்....

29) கோரோஜனை அபிஷேகம் பார்த்தால் நீண்ட ஆயுள் அளிக்கும்....

🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹

30) அன்னம் அபிஷேகம் பார்த்தால் பெரியோர் மகான் ஆசி கிட்டும்....

31) பச்சை கற்பூரம் அபிஷேகம் பார்த்தால் பயம் விலகும்...

32) கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம் பார்த்தால் வெற்றி மேல் வெற்றி அளிக்கும்....

🍎🍏🍊🍋🍉🍇🥥🍍🥭🫐🍑

குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று தெய்வங்களுக்கு நடக்கின்ற தெய்வீக அபிஷேகங்களை பார்த்து நன்மை பெற வேண்டும்...!!!

"இந்து சமயம் என்பது ஒரு வார்த்தைகள் அல்ல மனிதனின் வாழ்வில்"

🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕

நமது முன்னோர்கள் இந்து தர்மத்தையும் அதன் கலாச்சாரத்தையும் மிகச் சிறப்பான முறையில் நமக்கு வழிகாட்டி உள்ளார்கள்...
அவை அனைத்தையும் வருகின்ற இளைய தலைமுறைகள் பின்பற்ற வேண்டும்.!
முக்கியமாக பாதுகாக்க வேண்டும்!

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
        🔘 ⪢┈ᗘᗛ┈⪡ 🔘

தென்னாடுடைய சிவனே போற்றி!
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!

திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்


🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
🟪🟦🟩🟧🟨⬜🟨🟧🟩🟦🟪

நலம் சேர்க்கும் நந்தீஸ்வரர்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:41 AM | Best Blogger Tips

  நந்தி தேவர் துதி

நலம் சேர்க்கும் நந்தீஸ்வரர்

சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி, சேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி, கவலைகளை எந்நாளும் போக்கும் நந்தி. கைலை யிலே நடம்புரியும் கனிந்த நந்தி..

பள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்தி பார்வதியின் சொல்கேட்டுச் சிரிக்கும் நந்தி நல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்தி நாள்தோறும் தண்ணீரில் குளி க்கும் நந்தி

செங்கரும்பு உணவு மாலை அணியும் நந்தி சிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்தி மங்களங்கள் அனைத்தையும் கொடுக்கும் நந்தி மனிதர்களின் துயர் போக்க வந்த நந்தி

அருகம்புல் மாலையையும் அணியும் நந்தி அரியதொரு வில்வமே ஏற்ற நந்தி வரும் காலம் நலமாக வைக்கும் நந்தி வணங்குகிறோம் எமைக்காக்க வருக நந்தி

பிரதோஷ காலத்தில் பேசும் நந்தி பேரருளை மாந்தருக்கு வழங்கும் நந்தி வரலாறு படைத்து வரும் வல்ல நந்தி வறுமையினைஎந்நாளும் அகற்றும் நந்தி

கெட்டகனா அத்தனையும் மாற்றும் நந்தி கீர்த்தியுடன் குலம் காக்கும் இனிய நந்தி வெற்றிவரும் வாய்ப்பளிக்க உதவும் நந்தி விதியினைத்தான் மாற்றிட விளையும் நந்தி

வேந்தன் நகர் செய்யினிலே குளிக்கும் நந்தி வியக்க வைக்கும் தஞ்சாவூர்ப் பெரிய நந்தி சேர்ந்த திருப்புன்கூரிலே சாய்ந்த நந்தி செவி சாய்த்து அருள் கொடு க்கும் செல்வ நந்தி

கும்பிட்ட பக்தர் துயர் நீக்கும் நந்தி குடம் குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி பொன் பொருளை வழங்கிடவே வந்த நந்தி புகழ்குவிக்க எம் இல்லம் வருக நந்தி

சிவ ! சிவ !

 

நன்றி இணையம்

 

 

ராமனையே காத்தான்! உயிர் காப்பான் தோழன் அல்லவா?

மணக்கால் அய்யம்பேட்டை | 10:19 AM | Best Blogger Tips

 


ராமாயணத்தில், எந்தக் காண்டத்துக்கும், ராமனின் பெயரோ, சீதையின் பெயரோ வைக்கவில்லை! ஆனால் அனுமன் பெயர் கொண்டு ஒரு காண்டமே உள்ளது! அது, சுந்தர காண்டம்! இது தான் தொண்டருக்குக் கிட்டிய பெருமை! அனுமனுக்குச் சுந்தரன் என்ற பெயர் உண்டு! அவன் பெயர் தான் இங்கு வைக்கப்பட்டுள்ளது!

அனுமனை விரும்பாதார் தான் யார்? வடை மாலை, வெற்றிலை மாலை, ராமஜெயம் எழுதப்பட்ட மாலைஇப்படி மாலை மரியாதைகள் தான் என்ன? சிறிய திருவடி, மாருதி, ஆஞ்சனேயன், ராம தூதன், சொல்லின் செல்வன், சமய சஞ்சீவி என்ற எத்தனை பட்டப் பெயர்கள் இவனுக்கு? மனத்துக்கினியான் ராமனுக்குக் கூட இவ்வளவு சிறப்புகள் கொடுத்திருக்கிறார்களா?

·
சீ்தையின் உயிரைக் காத்தான்விரக்தி/தற்கொலையில் இருந்து!

·
இலக்குவன் உயிரைக் காத்தான்கொடிய நாக பாசத்தில் இருந்து!

·
பரதன் உயிரைக் காத்தான்தீ மூட்டி மாய்த்துக் கொள்வதில் இருந்து!

·
இப்படி எல்லோரையும் காத்து, ராமனையே காத்தான்! உயிர் காப்பான் தோழன் அல்லவா?

அனுமன் சிறந்த அமைச்சன், தொண்டன் மட்டும் அல்ல! மிகப் பெரிய இசைக் கலைஞன். வீணை வித்வான்! ‘மல்யுத்த வானரத்துக்கா வீணை பிடிக்கத் தெரியும்’, என்று எண்ணி, நாரத மகரிஷியே அவனிடம் போட்டி போட்டுத் தோற்றார். அதனால் தான் ஸ்ரீராமாநுஜர், ‘உருவம் கண்டு அடியவரை எடை போடக் கூடாதுஎன்பதை மிக உறுதியாக விதித்தார். இப்பேர்பட்ட அனுமன் பிறந்த இடம்: திருமலை திருப்பதி, அஞ்சனாத்ரி மலை!

இப்படிப்பட்ட அனுமனை, கவிச் சக்ரவர்த்தி கம்பரின் அழகுத் தமிழ்ப் பாடல் ஒன்றினால் துதி செய்யலாம் இன்று!

அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே ஒன்றைத் தாவி
 
அஞ்சிலே ஒன்று ஆறாக, ஆரியர்க்காக ஏகி
 
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு,அயலார் ஊரில்
 
அஞ்சிலே ஒன்றை வைத்தான், அவன் எம்மை அளித்துக் காப்பான்!

இது பஞ்ச பூதப் பாடல்.

அஞ்சிலே ஒன்று பெற்றான் = அஞ்சிலே ஒன்று காற்று; வாயு! அவன் புதல்வன், வாயு புத்திரன் என்று அழைக்கப்படும் அனுமன்.

அஞ்சிலே ஒன்றைத் தாவி = அஞ்சிலே ஒன்று நீர்; கடல்! அந்தக் கடலைத் தாண்டிச் சென்று அன்னையைச் சேவித்தவன் அனுமன்.

அஞ்சிலே ஒன்று ஆறாக = அஞ்சிலே ஒன்று ஆகாயம்; அந்த ஆகாயத்தின் வழியாகப் பறந்தான்! யாருக்காக? ஆரியர்க்காக ஏகி = அருமையான இயல்பு கொண்டவன் இராமன்; அவனுக்காக ஏகினான்.

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு = அஞ்சி்லே ஒன்று பூமி்; மண்! அந்த மண்ணிலே தோன்றிய அணங்கு (பெண்) சீதை!

கண்டு அயலார் ஊரில் = அவளைக் கண்டு, அயலார் ஊரான இலங்கை நகரத்தில்

அஞ்சிலே ஒன்றை வைத்தான் = அஞ்சி்லே ஒன்று நெருப்பு; தீ! அந்தத் தீயை அவனுக்கு வைக்கப் பார்த்தனர்; அதை அவர்களுக்கே வைத்தான் அனுமன்.

அவன் எம்மை அளித்துக் காப்பான் = அந்த அனுமன், பஞ்ச பூதங்களால் ஆன என்னையே, எனக்கு அளித்துக் காப்பான்!

அது எப்படி என்னையே எனக்கு அளிப்பான்?


 
அந்தராத்மா என்கிற நான்; அங்கு இதய கமல வாசம் செய்பவன் இறைவன்; அனுமனின் இதய கமலத்தில் இராமன்.


 
இப்படி ஆழ் மனதில் புதைந்துள்ள இறைவனையே நமக்குக் கொண்டு வந்து அளிப்பவன் தான் அனுமன். என்னை எனக்கு அளிப்பான்!🌹

 

!🌹நன்றி இணையம்