இயற்கை சூழ்ந்த அழகிய ஊர் ! 18 கோவில்களும் ! 18 குளங்களும் ! 18 தெருங்களும் இருக்கும் அழகிய கிராமம் ! பழமையான பெயர் திருப்பெருவேளூர் ! தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 92வது தலம். ! அழகா அமைத்துள்ள தெருங்கள் ! எங்கள் ஊா்.
விமான பயணம் என்பது உடலை கடுமையாக வருத்த கூடியது, புவிஈர்ப்பு விசையினை மீறி நடக்கும் அந்த இயக்கம் கடும் உளைச்சலில் அசதியில் உடலை தள்ளும்
அதனால்தான் ஒரு விமானபயணம் முடிந்தபின் பைலட்டுகளுக்கே ஓய்வு வழங்கபடும் இன்னும் பல கட்டுபாடுகள் உண்டு
ஆனால் 74 வயதில் அம்மனிதனால் இப்படி ஓயாமல் பறக்கமுடிகின்றது, ஓய்வு என்பதே அறியாமல் ஓடி ஓடி உழைக்கமுடிகின்றது என்றால் அதில்தான் இந்த மண்ணின் மேலும் மக்கள்மேலும் அவன் கொண்ட பெரும் அன்பு புரிகின்றது, நாடும் நாட்டு மக்களும் தவிர எதையுமே அம்மானிதன் சிந்திப்பதுமில்லை என்பது தெரிகின்றது
இங்கிருந்து லண்டனுக்கு பலமணிநேர பயணம் பின் மாலதீவு அங்கிருந்து தூத்துகுடி என தொடர்ந்து களைப்பே இன்றி பயணிப்பது மானுடர்க்கு சாத்தியமில்லை , அம்மனிதனிடம் ஏதோ விஷேஷித்த சக்தி குடிகொண்டிருக்கின்றது
அந்த அற்புத திருமகன், கற்பக தருவாய் தமிழகத்துக்கு பல நலதிட்டங்களை தூத்துகுடியில் அறிவித்திருக்கின்றார், தூத்துகுடியின் பாரம்பரிய பெருமைகளை சொல்லி பில்கேட்ஸ்க்கு தான் கொடுத்த தூத்துகுடி முத்துபற்றி சொல்லி,இந்நாட்டின் மிக முக்கியமான பாரம்பரியமான இடம் இந்த தூத்துகுடி கடல் என்பதை உலகறிய சொல்கின்றார்
அப்படியே அந்த மண்ணின் மாவீரர்களை சுதந்திரபோராட்ட தியாகிகளையும் நினைவு கூர்ந்து 4,100 கோடி மதிப்புள்ள திட்டங்களை அறிவித்திருக்கின்றார்
அதன்பின் இப்போது மாபெரும் இந்து மன்னன், சிவபக்தன் ராஜேந்திர சோழனின் பெருவிழாவில் கலந்து கொள்ள வந்திருக்கின்றார்
இது முக்கியமான நேரம், ராஜேந்திர சோழனின் மெய்கீர்தியினை பாடியபடி ஒவ்வொருவரும் திருநீறும் ருத்திராட்சமும் வெண்ணாடையுமாக அவனை மோடியுடன் நன்றியுடன் நினைக்க வேண்டிய நேரம்
ராஜேந்திர சோழனுக்கு மாபெரும் அங்கீகாரத்தை உலகவாழ் இந்துக்களிடமிருந்து தேசத்தின் மொத்த மக்களுக்கும் பெற்று தருகின்றார் மோடி
அவனின் மாபெரும் சிவபக்திக்கு பெரும் சான்றாக அவன் கொண்டிருந்த பெரும் சிவபக்திக்கு அங்கீகாரமாக ஒவ்வொரு இந்துவிடமும் அவனை கொண்டு செல்கின்றார்
இந்து மன்னர்கள் என்றால் விகரமாதித்தன், சந்திரகுப்தன், சிவாஜி என சொல்லிகொடுத்து பிரிக்கபட்ட வடநாட்டு இந்துக்களிடம் இவன் நம் இந்து மன்னன், நம்மில் ஒருவன் நம் சிவனை வணங்கியவன் என எடுத்து செல்கின்றார்
அப்படியே தமிழன், தமிழ் பெருவீரன், தமிழரின் அடையாளம் என பிரித்து திணிக்கபட்ட அவன் அடையாளத்தை, தேசிய அடையாளமாக ,பாரத மன்னர்களில் ஒருவன், பாரத சிவபக்த மன்னர்களில் ஒருவன் என அவனை தேசியத்துக்குள் சரியாக பொருத்துகின்றார்
இன்னொரு விஷயம் முக்கியமானது, அது உலக அரசியல்
மேற்கே அரபிகடல் பக்கம் அந்நிய சதியெல்லாம் இந்தியா முடக்கியிருக்கின்றது ஈரான் முதல் இந்தியாவின் பம்பாய் கோவா லட்சதீவு மாலதீவு அது தொடங்கி ஆப்ரிக்கா என எல்லா பக்கமும் இந்திய கப்பல் தளமும் பாதுகாப்புகளும் சரியாக பின்னபட்டிருக்கின்றன
இந்த மேற்கத்திய கடல் காவலுக்கு வீரசிவாஜி பெயரில் கப்பல்படை நகர்வுகள் செய்யபடுகின்றன, பாகிஸ்தான் இன்று இந்திய கடல் முற்றுகைக்குள்தான் இருக்கின்றது
அதுபோக மிகபெரிய எதிரியான சீனாவின் முத்துமாலை திட்டம் என இந்தியாவினை சுற்றி அது கட்டிய கடல் சதி வலையின் மேற்கு பக்கம் வெட்டியாயிற்று
ஆனால் கிழக்கே நிலமை இன்னும் சரியாகவில்லை, வங்கதேசம் பர்மா தாய்லாந்தின் சில பக்கம் என சீனாவின் மிரட்டல் அதிகம்
இதனால் கிழக்கு கடற்கரையில் கவனம் செலுத்துகின்றது மோடி அரசு, மிக பிரமாண்டமான காரியங்களை அது செய்கின்றது
சுமார் 50 கப்பல்கள், கணக்கற்ற நீர்மூழ்கிகள், பிரத்யோக கடல் கலன்கள் என கிழக்கு கடலை கட்டுபடுத்தும் இந்தியாவின் திட்டம் மிக பெரிது
ஏற்கனவே கோவாவில் ஒரு கடற்படை தளத்துக்கு ராஜேந்திரசோழன் பெயர் உண்டு என்றாலும் இந்த கிழக்காசிய கடல்சார் பாதுகாப்புக்கு அவன் காட்டிய வழியில்தான் கடற்படை நகர்கின்றது, அவன் காட்டிய வழியில்தான் ஆயிரம் வருடம் கடந்து இந்தியா நகர முடிகின்றது என்பதால் அவனை முன்மாதிரியாக கொண்டே சீனாவுக்கு எதிராக வியூகம் வகுக்கின்றார்கள்
அக்கால சீனா எந்த நாட்டையும் கடற்படையால் ஆக்கிரமிக்கவில்லை என்றாலும் பவுத்தம் சம்பந்தமான மிரட்டல்கள் அவர்களிடமிருந்தும் பல வகையில் வந்தன, அவற்றை தன் பலமான கப்பல்படையால் முறியடித்து வணிகமும் மதமும் நாடும் காத்தான் சோழன்
இன்று அவன் செய்த அதே காரிய தேவைபடுவதால் அவன் வகுத்த வழியிலே தேசம் பயணிக்கின்றது, மோடி இங்கு வந்து அந்த சோழன் வணங்கிய சிவனுக்கு அபிஷேகம் செய்வது பெரும் கடல்பாய்ச்சலுக்கு முந்தைய வழிபாடு
அந்தமான் வழியாக வரும் சீன மிரட்டல் , தாய்லாந்தை ஊடறுத்து அது கட்ட நினைக்கும் கால்வாய், பர்மா வங்கதேசம் வழியாக அது இடும் மிரட்டலை எல்லாம் வெட்டிபோட மாபெரும் கடல் பாதுகாப்பை கட்டுகின்றது மோடி அரசு
இந்த பிரமாண்ட கடல்திட்டத்துக்கு ராஜேந்திர்சோழன் பெயரை இடும் திட்டம் மத்திய அரசுக்கு உண்டு
ராஜேந்திர சோழனை இத்தேசம் தமிழனாக மட்டும் பார்க்கவில்லை, அவன் தமிழ்பேசிய இந்து இந்நாட்டின் பெரும் அடையாளம் இத்தேசத்தின் கவுரவம் இத்தேசத்தின் மிக முக்கிய பாரம்பரியம் என்றே கருதுகின்றது
அதனால் எந்த கங்கைகொண்ட சோழீஸ்வரம் கோவிலில் வழிபட்டு கிழக்காசியா முழுக்க ராஜேந்திர சோழன் கட்டுபடுத்தினானோ அதே வழியில் அதே சிவனை வணங்கி அவன் பெயரில் பெரும் திட்டத்தை முன்னெடுக்கின்றார் மோடி
அவர் கங்கை கொண்ட சோழபுரத்தில் சிவனிடம் தேசத்துக்காக கேட்கும் வரத்தை நாமும் கேட்போம்
சோழி எனும் சொல்லுக்கு காவல் என பொருள், அந்த சோழர்கள் மதமும் மண்ணும் காப்பவர்களாக இருந்தார்கள், அந்த வரத்தைத்தான் கங்கை கொண்ட சோழீஸ்வரர் அவர்களுக்கு கொடுத்தார்
சோழம் சோழம் என அவர்கள் முழங்கியதில் சிவனை நோக்கி வரம்கேட்ட பக்திதான் இருந்தது
சோழம் சோழம் என முழங்கிய அந்த கோவில் முன் நாமும் தேசம் தேசம் என முழங்கி இந்நாட்டுக்க்கான வரத்தை கேட்போம், தென்னாட்டை தன்நாடாக கொண்ட அந்த சிவன் இத்தேசத்துக்கு எல்லா காவலையும் பெரும் வரத்தையும் அருளட்டும்
எக்காலமும் இங்கு மதமும் மண்ணும் காக்கும் பெரும் வரத்தை ராஜேந்திர சோழனுக்கு கொடுத்தது போல மோடிக்கும் அந்த பெரும் வரத்தை சிவன் வழங்கட்டும்