*உணவுமுறை பற்றி*

மணக்கால் அய்யம்பேட்டை | 4:22 PM | Best Blogger Tips

 



நீங்கள் எருமை மாட்டைப் பிடித்துத் தோட்டத்தில் விட்டால், அது ஒரு குறிப்பிட்ட புல்லைத்தான் தின்னும்.

அவை எதையும் எல்லாவற்றையும் தின்று கொண்டே இருக்காது. அவை தேர்ந்தெடுக்கும்.

அவைகளுக்கு உணவைப் பற்றி சில குறிப்பிட்ட உணர்வுகள் இருக்கும்.

மனிதன் முழுமையாகத் தொலைத்துவிட்டான். அவனுக்கு உணவைப் பற்றி உணர்வே கிடையாது.

அவன் எதையும், எப்போதும் தின்று கொண்டே இருப்பான்.

உண்மையில் நீங்கள் எங்காவது, எதையாவது மனிதன் சாப்பிடாததைக் கண்டு பிடிக்கவே முடியாது.

சில இடங்களில் அவர்கள் எறும்பை சாப்பிடுகிறார்கள். சில இடங்களில், பாம்புகளை சாப்பிடுகிறார்கள். சில இடங்களில் நாய்களை சாப்பிடுகிறார்கள்.

மனிதன் எல்லாவற்றையும் சாப்பிடுகிறான்.

மனிதனுக்குப் பைத்தியம். அவன் முற்றிலுமாகக் குழம்பிப் போயிருக்கிறான்.

மனிதன் அசைவமில்லை. ஆனாலும் அவன் மாமிசத்தைத் தின்று கொண்டேயிருக்கிறான்.

கிழக்கில், பெரிய தியானிகள் -- புத்தர், மகாவீரர் -- அவர்கள் இந்த உண்மையை வலியுறுத்தியிருக்கிறார்கள்.

அகிம்சை என்ற கொள்கையினால் அல்ல. அது இரண்டாம் பட்சம்..

நீங்கள் மாமிசம் சாப்பிடும்போது என்னவாகிறது என்பதைக் கவனித்துப் பாருங்கள். நீங்கள் ஒரு மிருகத்தைக் கொல்கிறீர்கள். அந்த மிருகத்திற்கு என்னவாகிறது. அது கொல்லப்படும்போது? யாருமே கொல்லப்படுவதை விரும்பமாட்டார்கள்.

வாழ்க்கை அதுவாகவே நீளத்தான் ஆசைப்படுகிறது. விரும்பி தானாகவே எந்த மிருகமும் சாவதில்லை. உங்களை யாராவது கொன்றால், நீங்கள் விரும்பி சாகமாட்டீர்கள்.

ஒரு சிங்கம் உங்கள் மீது பாய்ந்து உங்களைக் கொள்கிறது. உங்கள் மனதிற்கு என்ன ஆகும்? நீங்கள் ஒரு சிங்கத்தைக் கொன்றாலும் அதேதான் ஆகும்.

வேதனை, பயம், மரணம், வருத்தம், கவலை, கோபம், வன்முறை, சோகம், எல்லாமே அந்த மிருகத்திற்கு ஏற்படும்.

#அதன்_உடல்முழுவதும்_வன்முறை, #வேதனை_மரணஓலம்_பரவும்.

#அந்த_உடல்_முழுவதுமே_கழிவுகள்_விஷம்.

உடலின் சுரப்பிகள் விஷத்தை வெளியேற்றுகிறது. காரணம், அந்த மிருகம் விருப்பமில்லாமல் சாகிறது.

பிறகு நீங்கள் அதன் மாமிசத்தை சாப்பிடுகிறீர்கள். அந்த மாமிசத்தில் அந்த மிருகம் வெளியேற்றிய அத்தனை விஷமும் இருக்கிறது. அந்த முழு சக்தியுமே விஷம்தான். பிறகு அந்த விஷம் உங்கள் உடலுக்கு ஏற்றப்படுகிறது.

நீங்கள் சாப்பிடும் அந்த மாமிசம் ஒரு மிருக உடலுக்குச் சொந்தமானது. அதற்கு அதில் ஒரு குறிப்பிட்ட காரணம் உண்டு.

ஒரு குறிப்பிட்ட விதமான உணர்வு அந்த மிருக உடலில் இருந்தது. நீங்கள் அந்த மிருக உணர்விலிருந்து சற்று உயர்ந்த தளத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் அந்த மிருகத்தின் மாமிசத்தை சாப்பிடும்போது நீங்கள் தாழ்ந்த தளத்திற்கு வருகிறீர்கள்.

பிறகு உங்கள் உடலுக்கும், உங்கள் உணர்விற்கும் ஓர் இடைவெளி இருக்கிறது. ஒரு பதற்றம் எழுகிறது.

ஒரு மன வேதனை எழுகிறது.

எது இயற்கையானதோ அதைத்தான் ஒருவர் உண்ணவேண்டும். உங்களுக்கு எது இயற்கையோ அதை.

பழங்கள், பருப்புகள், காய்கறிகள், எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிடுங்கள்.

அதில் அழகு என்னவென்றால் இவற்றைத் தேவைக்கு மேல் நீங்கள் சாப்பிடவே முடியாது.

எது இயற்கையானதோ அது உங்களுக்கு ஒரு திருப்தியைக் கொடுக்கும். அது உடலுக்கு ஒரு நிறைவை கொடுக்கும். அது உங்களுக்கு ஒரு செறிவைக் கொடுக்கும்.

நீங்கள் நிறைந்ததாக உணர்வீர்கள்.

ஓஷோ💙

(மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை பக்கம் 229 & 230)

 

நன்றி இணையம்

அவரவர்களின் வார்த்தை

மணக்கால் அய்யம்பேட்டை | 4:21 PM | Best Blogger Tips

 


🌀யாரெல்லாம் நம்மோடு இருப்பார்கள், விலகுவார்கள் என்று காலம் முடிவு செய்வதில்லை.

*அவரவர்களின் வார்த்தையும், நடத்தையும் தான் முடிவு செய்கிறது.*

🌀வாய் தவறி விழும் பேச்சுக்கள். கை தவறி விழும் கண்ணாடியை விட கூர்மையானது.

*யாரிடம் பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து கொண்டு பேசுங்கள்.*

🌀நிம்மதியுடன் வாழ்கிறேன் என யாராலும் எளிதில் சொல்லப்படுவதில்லை.

*வாழ்க்கை அவ்வளவு எளிதில் நிம்மதியை யாருக்கும் தந்து விடுவதில்லை.*

🌀மற்றவர் தவறைக் கவனித்துக்கொண்டே இருப்பவர்கள்.

*தன் தவறுகளை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.*

🌀பணம் இருந்தால் நீ உயர்ந்தவன்

குணம் இருந்தால் நீ *குப்பை.*

நடித்தால் நீ *நல்லவன்.*

உண்மை பேசினால் *பைத்தியக்காரன்.*

அன்பு காட்டினால் *ஏமாளி.*

எடுத்துச் சொன்னால் *கோமாளி.*

🌀இறைவன் தனக்குப் பிடித்தவர்களுக்கே அதிகப் பொறுப்புகளை கொடுத்து.

அதன் பொருட்டு சோதனைகளை ஏற்படுத்தி.

பக்குவத்தையும், நிதானத்தையும் பரிசளிக்க விரும்புகிறான்

🌀நிலவை... தூரத்தில் இருந்து ரசிப்பதை போல.

🌀சில உறவுகளையும்..... தூரத்திலிருந்து ரசிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

*சில வலிகள் இல்லாமல் இருக்க.*

🌀தன்னுடைய செயலும் தன்னுடைய வார்த்தைகளும் மட்டும்தான் சரியன்று வாதாடுபவர்கள் மத்தியில் .

அமைதி மட்டும் உன் ஆயுதமாக வைத்துக்கொள்.

*அவர்களுக்கு புரியவைக்க.*

*வரும் காலம் ஒன்று உள்ளது.*


*சிந்தித்து செயல்படு இதுவும் கடந்து போகும்.*

🌀நிலையென்று ஒன்றுமில்லை இவ்வுலகில்.

*ஒவ்வொரு சோகமும், துன்பமும் வாழ்க்கையில் நல்ல பாடத்தை கற்று தரவே வருகின்றது.*

🌀யாரும் உன் கண்ணீரை பார்ப்பதில்லை.

யாரும் உன் கவலைகளை பார்ப்பதில்லை.

யாரும் உன் வலிகளை பார்ப்பதில்லை.

*ஆனால் எல்லோரும் உன் தவறை மட்டும் பார்ப்பார்கள்.*

🌀மனிதனும் வாழை மரமும் ஒன்று தான்.

தேவைப்படும் வரை வைத்திருப்பார்கள்.

*தேவை முடிந்தவுடன் வெட்டி வீசி விடுவார்கள். *

🌀இந்த பதிவு எல்லோருக்கும் பொருந்தும் என்பதால் பதிவிட தோன்றியது.🙏🙏🙏

 

நன்றி இணையம்

*கடவுள் நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?*🙏🏼👇🏽💐

மணக்கால் அய்யம்பேட்டை | 4:17 PM | Best Blogger Tips

 



ஒரு குருவும் சீடனும் அடர்ந்த காட்டின் வழியே நடந்து வந்து கொண்டிருந்தனர்.

இரவு நெருங்கவே ஒரு மரத்தின் அடியில் உறங்கி காலை நடை பயணத்தை தொடரலாம் என்று முடிவு செய்து ஒரு மரத்தை தேர்ந்தெடுத்து அதனடியில் உறங்கினர்..

மறுநாள் பொழுது விடிந்தது குருவும் சீடனும் ஆற்றில் நீராடினர் இருவரும் சூரியனை வணங்கினார்கள்..

அப்பொழுது சூரிய பகவான் அசீரிரியாக தோன்றி,

"வேத குருவே! உமக்கு வணக்கம் உங்கள் வணக்கத்தை நான் ஏற்றுக்கொண்டேன்

இன்று சூரியனான நான் மறைவதற்குள் உங்கள் சீடனின் உயிர் ஒரு ராஜநாகத்தால் தீண்ட பட்டு இறக்க நேரிடும். முடிந்தால் உங்கள் குரு வலிமையால் அவனை காப்பாற்றுங்கள்" எனக் கூறி மறைந்தான்..

குருவும் சூரியனை வாங்கிவிட்டு சீடனை கவலையோடு பார்த்தார்..

இருவரும் சிறிது பழங்களை பறித்து பசியாறிய பின் அருகே உள்ள கோவிலின் இறைவனை வணங்கினர்..

பின் ஊரை தாண்டி காடு வழியே நடந்து சென்றனர்..

சற்று களைப்பு ஏற்படவே இருவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்து கண் அயர சீடன் தூங்கினானே தவிர குரு தூங்கவில்லை..

சீடனின் உயிரை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்று நினைத்து விழித்து இருந்தார்.

அப்பொழுது ஒரு ராஜநாகம் படம் எடுத்த படி சீடனின் அருகே அவனை கொல்ல வந்தது..

இதை பார்த்து பதை பதைத்த குரு ராஜநாகமே நில் என்று ஆணையிட்டார். ராஜநாகமும் குருவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நின்றது..

குரு ராஜநாகத்தைப் பார்த்து, "நீ என் சீடனின் உயிரை எடுக்கவே வந்துள்ளதை நான் அறிவேன். குரு பக்தி மிகுந்த சீடனை காப்பாற்றுவது ஒரு குருவின் கடமை. அதனால் என் சீடனின் உயிரை எடுக்க நான் அனுமதிக்கமாட்டேன்", என்று தடுத்தார்.

இப்பொழுது ராஜநாகம் பேசியது.

"வேத குருவே உங்கள் சீடனின் கழுத்தில் என் நாவை வைத்து ரத்தத்தை உறிஞ்சு எடுக்க வேண்டும் என்பது எனக்கு காலன் இட்ட கட்டளை. அனைத்தும் உணர்ந்த தாங்களே என் கடமையை செய்ய விடாமல் இப்படி தடுத்து என்னை நிறுத்தலாமா?" என்று முறை இட்டது..

உடனே குரு "அப்படி என்றால் என் சீடனின் ரத்தத்தை உறிஞ்ச வேண்டும் என்பது தானே உனக்கு காலன் இட்ட கட்டளை?

சரி, சற்று பொறு! நானே அவனது ரத்தத்தை உனக்கு ஊட்டுகிறேன். அதை உறிஞ்சியதும் நீ உன் கடமையை செய்து விட்ட பலனை பெறுவாய்." என்று கூறி

ஒரு சிறு கத்தியை எடுத்த குரு அதை சீடனின் கழுத்தில் வைத்து ரத்தம் வரும் அளவு ஆழம் வைத்து கத்தியை கீறினர்..

தன் கழுத்தில் கூர்மையாய் எதோ கீறுவதை உணர்ந்த சீடன் கண் விழித்து பார்த்தான். குரு தன் கழுத்தில் கத்தியை வைத்து கீறுவதை உணர்ந்து பின் கண்மூடி சிறிதும் அசையாமல் படுத்த படியே இருந்தான்..

சீடனின் பல துளி ரத்தத்தை எடுத்த குரு அதை ராஜநாகத்துக்கு ஊட்டிவிட்டார்..

ராஜநாகமும் குருவின் சாபத்துக்கு நாம் ஆளாகாமல் நம் கடமை நிறைவேறியதே என்ற மகிழ்வோடு ரத்தத்தை உறிஞ்சி விட்டு வந்த வழியே சென்றது..

குருவும் சீடனின் உயிரை காப்பாற்றிய நிம்மதியோடு அவனது கழுத்தில் முன்னமே தான் எடுத்து வைத்திருந்த பச்சிலை சாற்றை பிழிந்து சீடனின் கழுத்து பகுதியில் பற்று போட்டு விட்டு நிம்மதியோடு உறங்க சென்றார்..

சிறிது நேரம் இருவரும் நன்றாக களைப்பு தீர உறங்கிய பின் எழுந்து அமர்ந்தனர்..

அப்பொழுது சீடன் தன் கழுத்தில் பற்று இருப்பதை தொட்டு பார்த்து விட்டு எதுவும் குருவிடம் கேட்காமல்,

"குருவே நாம் நடை பயணத்தை தொடரலாமா?" என்று கேட்டான்..

குரு புன்னகையுடன், "சீடனே! நீ சற்று முன் உறங்கும்போது நான் உன் கழுத்தில் கத்தி வைத்த போது நீ என்ன நினைத்தாய்? உனக்கு பயம் எதுவும் உண்டாகவில்லையா?" என்று புன்னகையுடன் கேட்டார்..

சீடன், *"குருவே என் கழுத்தில் எதோ ஊறுவதை உணர்ந்தேன். விழித்தும் பார்த்தேன். கையில் கத்தியுடன் நீங்கள் என் கழுத்தை அறுப்பதை உணர்ந்தேன். ஆனால் என் குருநாதராகிய தாங்கள் எனக்கு எந்த கெடுதலும் செய்ய மாட்டீர்கள் என்பதை நான் அறிவேன். அதனால் நான் நிம்மதியாக உறங்கினேன்..*

*இப்பொழுது எழுந்ததும் என் கழுத்தில் உள்ள மூலிகை பற்றை பார்த்தேன் என் குருநாதராகிய உங்களுக்கு என் ஊன், உயிர், உள்ளம் அனைத்தும் அர்ப்பணம். அதனால், எனக்கு அதிலும் எந்த வித கவலையும் இல்லை."* என்று கூறி பணிந்து நின்றான்..

குருவும் சீடனை ஆரத் தழுவி எழுந்து அவனோடு நடக்கலானார்..

*இதில் சீடன் தான் நாம்..*🙏🏼

*குரு தான் நம் கடவுள்..*👏🏾

ராஜநாகம் தான் விதி..🙏🏼

*ஸ்ரீ குருப்யோ நமஹா!!*👏🏾

 



நன்றி இணையம்