கல்லீரல்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:49 PM | Best Blogger Tips

 











  கல்லீரல்   

 கல்லீரல் நமது வலது பக்க மார்பின் கீழே அமைந்துள்ளது. உடல் உறுப்புகளிலில் இதுவே அதிக எடை உள்ளதாகும். நமது இராஜ உறுப்பான கல்லீரல் உடலில் மிகப்பெரிய சுரப்பியுமாகும். இதனுள் பித்தநீரை சுரக்கும் பித்தப்பையும், பித்தநீர் நாளங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

 கல்லீரல் நமது உடலின் சுத்திகரிப்பு நிலையமாக விளங்குகிறது. உணவில் உள்ள ஸ்டார்ச் பொருளை சர்க்கரையாக மாற்றி சேமித்து வைத்துக் கொள்கிறது.

 கல்லீரல் உணவு உற்பத்தி கேந்திரமாக செயல்படுகிறது. இது சேமித்து வைக்கும் குளுக்கோஸானது மூளையின் செயல்பாட்டுக்கு மிக உதவியாக உள்ளது.

ஒரு காலத்தில் கல்லீரல் நோயானது ஆண்களையே அதிகம் தாக்கியது..

இதற்கு காரணம் அடிக்கடி நிறைய

  #மதுபானங்களையும்,

 #சிகரெட்டுகளையும் குடிப்பதேயாகும்.

 ஆனால் இக்காலத்தில் பெண்களையும் குழந்தைகளையும் இந்த நோய் தாக்குகிறது. இதற்கு காரணம் குழந்தைகளின் பால், உணவுகளில் உள்ள வேறுபாடுகளே காரணமாகும்.

 மற்ற எந்த உடல் உறுப்புகளும் செய்ய முடியாத அளவிற்கு கல்லீரல் வேலை செய்கிறது. கல்லீரலானது மற்ற உறுப்புகளை காட்டிலும் மிக #மேன்மையாக வேலை செய்கிறது. மற்ற உறுப்புகளை காட்டிலும் இரு மடங்கு வேலைகளைச் செய்யும் திறன் படைத்தது கல்லீரல்.

 நாம் என்ன வகையான உணவுகள் சாப்பிட்டாலும் இரைப்பையின் மூலம் நமக்குத் தேவையான சக்தியாக மாற்றப்பட்டு முதலில் செல்லும் இடம் கல்லீரலே..

 இந்த கல்லீரல்தான் உடலில் இருக்கும் செல்கள் அனைத்திற்கும் தேவையான வகையில் மேலும் சத்துக்களை பிரித்து இரசாயன மாற்றம் செய்து இரத்தத்தின் மூலமாக அனுப்பி வைக்கின்றது.

 கல்லீரல் நமது உடலின் சேமிப்பு வங்கி ஆகும். இது உடலுக்கு தேவையான சத்துக்களை உடனே அனுப்பிவிட்டு, மீதமான சத்துக்களை தேக்கி வைத்துக் கொள்ளும் இயல்புடையது.

 ஒருவர் இரண்டு மூன்று நாட்கள் கூட உண்ணாமல் இருக்கும் போதும், உண்ணாவிரதம் போன்ற காரியங்களில் ஈடுபடும்போதும் இதுவே தன்னுள் சேர்த்து வைத்த சத்துக்களை அனுப்பி அவரை சக்தி பெறச் செய்கிறது. கல்லிரல் ஒன்று இல்லை என்றால் உண்ணாவிரத பந்தல்.... எல்லாம் பார்க்க முடியாது.

 ஒரு மனிதனுக்கு இறப்பு ஏற்பட பெரிய அளவு ஆபத்துக்கள் எல்லாம் தேவையில்லை. ஒரு சிறிய வெட்டுக்காயம் மட்டுமே போதும்...அவன் ஆயுள் முடிய..

ஆம் நமது உடலில் காயம் ஏதும் ஏற்பட்டால் இரத்தம் வெளியேறிக் கொண்டே தான் இருக்கும். அந்த இரத்தத்தை உடனே நிப்பாட்டுவது கல்லீரலின் செயல்பாடுதான். இது அனுப்பும் புரோத்ரோம்பின் என்னும் இரசாயனத்தை மூலமே அந்த இரத்தம் உடனே நிற்கும்.

 கல்லீரல் மட்டும் இல்லையென்றால் மற்ற எந்த நோய் குறைபாடுகளுக்கும் நாம் மருந்து எடுக்க முடியாது. ஏன் என்றால் நமது உடலுக்குத் தேவையான அல்லது தேவையில்லாத எந்த ஒரு மருந்தையும் நாமாகவே எடுக்கும் போது அது நமது உடலுக்குத் தேவையா, தேவையில்லையா என சரிபார்த்து தேவையானதை மட்டும் அனுப்புவது கல்லீரலே.

 இப்போது எல்லாம் மது குடிப்பது என்பது மனிதர்களிடையே மிக சாதாரணமாகிவிட்டது. மது குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிக அதிகரித்து வந்துகொண்டே இருக்கிறது. எந்த நேரம் என காலம் நேரம் பார்க்காமல் மது குடித்துக் கொண்டு தான் இருக்கிறோம். மது குடித்தால் மிகப் பாதிப்பு அடையக்கூடிய உறுப்பு கல்லீரல் தான்.

 ஏனெனில் கல்லீரல்தான் #மதுவுக்கு எதிராக எந்த நேரமும் போராடக்கூடிய ஒரு உறுப்பாக உள்ளது. இவர் மது அருந்தி இரவு நேரத்தில் தூங்கும் போதும் மற்ற உறுப்புகள் எல்லாம் நன்றாக ஓய்வு எடுத்தாலும் இந்த கல்லீரல் மட்டும் அவரை காப்பாற்ற இரவெல்லாம் ஓய்வெடுக்காமல் இரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரித்தெடுக்க போராடி அவரை மதுவிலிருந்து காப்பாற்றுகிறது.

 நாம் சாதாரணமாக உண்ணக்கூடிய உணவுப் பண்டங்களிலும் அதிகமான விஷம் கலந்து உள்ளது. உதாரணமாக உணவுகளில் கலந்துள்ள நிறமூட்டிகள், சுவையூட்டிகளாலும் அதிகப்படியான ஆபத்துகள் உள்ளது.

இந்த விஷ உணவுகளில் கலந்துள்ள விஷத்தை போக்க வில்லை என்றால் நாம் சாப்பிடும் உணவு ஒருபோதும் செரிக்காது. எனவே உணவுப் பண்டத்திலுள்ள விஷங்களை எல்லாம் சுத்திகரித்து அனுப்பினால் தான் உடலில் விஷம் ஏறாமல் இருக்கும் இந்த விஷங்களை எல்லாம் சுத்திகரிக்கும் திறன் படைத்தது கல்லீரல்.

 நமது உடலில் உள்ள #இராஜ உறுப்புகளாகிய...

இதயம்,

சிறுநீரகம்,

மூளை,

நுரையீரல்

போன்றவைகளில் பிரச்சினைகள் ஏற்படும்போது நமது கல்லீரல் மட்டும் போதுமான அளவு பலமாக இருந்தால்....

அந்த பிரச்சனையிலிருந்து எளிதாக நாம் மீள முடியும். கல்லீரல் பாதிக்கப்பட்டு இருந்தால் அந்தப் பிரச்னைகளிலிருந்து விடுபடுவது மிக கடினமாக இருக்கும்.

 கல்லீரலை மருத்துவர்கள் கழுதைக்கு ஒப்பாக சொல்வார்கள். ஏனெனில் கழுதை ஆனது பொதி சுமக்கும் போது எவ்வளவு சுமை ஆனாலும் சுமக்கும். ஆனால் கழுதை படுத்துக்கொண்டால் என்ன செய்தாலும் அது எந்திரிக்காது.

கல்லீரலும் அது போலத்தான் நாம் எவ்வளவு கெட்ட உணவுகள் உண்டாலும், அளவுக்கு அதிகமான இரசாயன மாத்திரைகள் உண்டாலும், மது, போதை வஸ்துக்கள் போன்றவைகள் எடுத்துக்கொண்டாலும், அதில் இருந்து நம்மை காக்க அதிக நேரம் எடுத்துக் கொண்டு நன்கு உழைத்து கெட்ட விஷயங்களில் இருந்து நம்மை காப்பாற்ற கல்லீரல்தான் இருக்கு.... இது நம்மை எப்படியும் காப்பாற்றும் என்று நாம் மேலும், மேலும் கல்லீரலுக்கு அடிமேல் அடி கொடுத்துக்கொண்டு இருந்தால் கழுதை போலவே செயல் பட்டு பின்பு அடி தாங்காமல், வேலை ஏதும் செய்யாமல் படுத்துவிடும்.

 கல்லீரலின் செயல்பாடு ஆனது இதயத்திற்கும் மூளைக்கும் தொடர்புடையனவாக நரம்புகளின் மூலம் தொடர்பு ஏற்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது.

 எனவே கல்லீரல் பழுதானால் இதயம், மூளை பழுதாகும். கடைசியில் கடைசியில் சிறுநீரகம் சரியாக வேலை செய்யாமல் படுத்துவிடும்.

 கல்லீரலைத் தாக்கும் முக்கிய நோய்கள்

 1)கல்லீரல் இணைப்பு திசுக்கள் மிக அதிகமாகி விடுவதால் கல்போல் இறுகி கடினமாகி விடுதல்.

 2)பல்வேறு குளறுபடிகளால் கல்லீரல் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு கொண்டே வந்து செயலிழந்து விடுதல்.

 3) கல்லீரல் நாளங்களில் அதிக ரத்தம் அழுத்தம் ஏற்படுதல்.

 4)கல்லீரல் சிறுத்து சுருக்கம் ஏற்படுதல்.

 5)கல்லீரல் மிருதுவாகி பெருத்துவிடுதல்.

 6)கல்லீரலில் கட்டிகள் உருவாகி சீழ் பிடித்துவிடுதல்.

 7)கல்லீரலில் அதிகப்படியான உபாதைகள் ஏற்பட்டு புற்றுநோய் வருதல்.

இவ்வளவு #சிறப்புமிக்க கல்லீரலை நல்ல பழக்க வழக்கங்களை கடைபிடித்து வாழ்ந்தால்... மற்ற உறுப்புகளுக்கு குறை ஏதும் ஏற்படாமல் #பாதுகாத்து நம்மளை நீண்டநாள் நன்கு ஆரோக்கியமாக வாழ செய்யும்.

கல்லீரலுக்கு சிறந்த மருத்துவம் எதுவெனில் இயற்கையை விரும்பும்  #சித்த_மருத்துவமே சிறந்ததாகும் .

ஆம்  சித்த மருத்துவமே பக்க விளைவுகள் அற்ற சிறந்த மருத்துவம் என்று அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றாகும்.

  நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.!

   வாழ்க வளமுடன்!

   வாழ்க நலமுடன்

 


நன்றி 

Vedha Mani

 இணையம்

வெற்றி பெற முழுக்காரணம் ஆழ்மனம் தான்......

மணக்கால் அய்யம்பேட்டை | 11:30 AM | Best Blogger Tips

 



வெற்றி பெற முழுக்காரணம் ஆழ்மனம் தான்......

ஆழ்மனதைப் பற்றி ஓர் ஆய்வு.

நமது ஆழ்மனம் நாம் விரும்பும் எதையும் நமக்கு கொடுக்கவல்லது! மனத்தில் இரண்டு நிலைகள் உண்டு.

(1) மேல் மனம் அல்லது வெளிமனம்.

(2) ஆழ்மனம்.

மனமென்பது ஆர்டிக் கடலில் மிதக்கும் பனிப் பாறைகளைப் போன்றது. கடலுக்கு மேல் கண்ணுக்குத் தெரிகின்ற 20% பனிப்பாறையைப் போன்றது மேல் மனம். கடலில் மூழ்கியிருக்கின்ற கண்ணுக்குத்த தெரியாத 80% பனிப்பாறையைப் போன்றது ஆழ்மனம்.

மேல்மனத்தை விடப் பல மடங்கு பெரியதும், ஆற்றல் மிக்கதும் ஆழ்மனம் ஆகும். மேல்மனம் என்பது விழிப்பு, உணர்வு நிலை எனப்படும். நினைவு நிலைக்கு இதுவே காரணமாகிறது. ஆனால் ஆழ்மனம் துயில் நிலைக்கும், துயிலுக்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட மெய்மறதி நிலைக்கும் காரணமானது!

நாம் படிப்பதும், பேசுதலும், செயல்படுவதும் மேல் மனத்தின் மூலமாகத்தான், ஆனால் என்ன படிக்கிறோம், ஏன் எப்படிச் செயல்படுகிறோம் என்பதற்கெல்லாம், ஏன் எப்படிச் செயல்படுகிறோம் என்பதற்கெல்லாம் காரணம் அடிமனம் தான் (ஆழ்மனம்)

எனவே நமது குறிக்கோள்களை நமது அடிமனம் ஏற்றுக்கொள்ளுமாறு எண்ணங்களைச் செலுத்த வேண்டும். நாம் செய்ய வேண்டியது இதுதான்.

(1) நமது ஆழ்மனத்தோடு தொடர்பு கொள்ள வேண்டும்.

(2) உங்கள் வாழ்க்கையின் குறிக்கோள்கள் என்ன என்பதை ஆழ்மனதிற்கு தெரிவிக்க வேண்டும்.

உங்கள் குறிக்கோள்களைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட ஆழ்மனம், அந்த குறிக்கோள்களை விரைவில் அடைய வழிமுறைகளைக் கண்டுபிடித்து, உடனே உங்களைச் செயல்படுத்த தூண்டும்.

நமது குறிக்கோள்களை ஆழ்மனத்திற்கு எப்படி கொண்டு செல்வது:

(1) நமது எண்ணங்கள் எல்லாம் நமது குறிக்கோள்களைப் பற்றியதாகவே இருக்க வேண்டும்.

(2) ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட வேளையில் (காலையில் 15 நிமிடங்கள்) குறிக்கோளை அடைவதற்கான மனப்பயிற்சியை செய்துவர வேண்டும்.

(3) நமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், கண்ட குப்பை எண்ணங்களை எண்ணாமல், நமது குறிக்கோளைப் பற்றிய எண்ணங்களாகவே நினைக்க வேண்டும்.

உதாரணமாக வீடு வேண்டும் என்றால் அந்த வீட்டில் (கற்பனை வீட்டில்) எத்தனை அறைகள் இருக்க வேண்டும். அதனுடைய அளவுகள் எப்படி இருக்க வேண்டும், எந்த அளவில் கதவுகள், வர்ணங்கள் என்ன என்பதை பற்றிய கற்பனைகளையே உங்களது எண்ணம் முழுவதும் நிரம்பியிருக்க வேண்டும்.

நமது முன்னால் குடியரசுத் தலைவர் திரு ஆ.பெ.ஜெ. அப்துல்கலாம் கூட இதன் அடிப்படையில் தான் "கனவு காணுங்கள்" என்று சொன்னார்.

(4) உங்கள் மனதில் குறிக்கோள் விதையை வலுவாக ஊன்றுங்கள். அதை உங்களது தீவிர எண்ணங்களால் உரமேற்றுங்கள். நிச்சயம் உங்களது குறிக்கோளை அடைந்துவிடுவீர்கள். விதைத்ததையே அறுவடை செய்து விடுவீர்கள் என்பது நிச்சயம்.

(5) உங்களது கற்பனையில் உங்களது குறிக்கோளை ஒரு படமாக மாற்றி அதை உங்கள் மனத்திரையில் ஓட்டிப் பார்க்க வேண்டும். என்ன நினைக்கிறீர்களோ அதை அப்படியே செய்து முடிப்பதாக நினைக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு புதிய வீடு கட்ட வேண்டும் எனில், கற்பனையில் வீடுகட்டி அதற்கு கிரகப்பிரவேசமும் செய்து முடித்ததாக எண்ண வேண்டும். உங்கள் கற்பனை எண்ணங்கள் மேலோங்கி, எண்ணங்கள் வலுப்பெற்று அது உண்மையாகவே நடக்க ஆரம்பித்துவிடும்.

(6) குறிக்கோள்களை அடைவதற்கு, தற்காலத்தில் அனுபவிக்கக் கூடிய சிறுசிறு சுகங்களை தியாகம் செய்யவும் தயங்கக் கூடாது.

(7) உங்கள் ஆழ்மனத்தை, பிடிவாதத்துடன் நம்ப வைத்துவிடுங்கள். ஆழ்மனம் வெகு சீக்கிரம் உங்கள் குறிக்கோளில் கொண்டு சேர்த்துவிடும்.

(😎 உங்களது குறிக்கோளை தெளிவாக ஒரு அட்டையில் எழுதி / உங்கள் கண்களில் அடிக்கடி படும்படியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதைப் பார்க்கும் போதெல்லாம், எண்ணங்கள் உங்கள் குறிக்கோளின் மீது குவியட்டும்.

எனவே நாம் நமது குறிக்கோளைத் தெளிவாக ஒரு காலவரையில் முடித்தே தீருவேன் என்று முதலில் தீர்மானித்துக் கொள்ளுங்கள். பின்பு ஆழ்மனத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.

ஆழ்மன எண்ணங்களே ஒருவரின் நிஜங்கள்!!!

பழக்கங்கள் உருவாகி பலப்படும் இடம் ஆழ்மனம் தான். அது மட்டுமல்ல ஒரு மனிதனின் வெற்றி தோல்வியையும், அவன் பலங்கள் பலவீனங்களையும் தீர்மானிப்பது அவன் ஆழ்மன நிலையே தான். ஏன் ஒருவர் இன்று எப்படி இந்த உலகில் வாழ்கிறார் என்பதைத் தீர்மானிப்பதும் ஆழ்மனமே.

ஆழ்மனதில் எதை மனிதன் நம்புகிறானோ அதுவே அவனுக்கு உண்மையாகிறது .


நாம் பல சமயங்களில் நம்மை அறியாமலேயே சுயமாக நம்மை நாமே ஹிப்னாடிசம் செய்து கொண்டு கருத்துகளைப் பதிவு செய்து கொண்டு விடுகிறோம். அது போல சில சமயங்களில் நாம் மிகவும் நம்பும் அல்லது மதிக்கும் மனிதர்களை நம்மை ஹிப்னாடிசம் செய்து கருத்துகளை நம் மனதில் பதிக்க அனுமதித்து விடுகிறோம். அந்தக் கருத்துகள் உயர்ந்ததாகவும், பலம் வாய்ந்ததாகவும் இருக்கும் போது நாம் சாதனையாளர்கள் ஆகிறோம். மாறாக அவை தாழ்ந்ததாகவும், பலமிழந்தும் இருக்கிற போது தோல்வியாளர்களாகவும் மாறி விடுகிறோம்..

ஆழ்மனம் எதையும் மேல்மனம் தந்தபடியே எடுத்துக் கொள்கிறது. தினந்தோறும் நூற்றுக் கணக்கான தகவல்களை மேல் மனம் தந்தபடி இருக்க அவற்றை ஆழ்மனம் மனதில் பதித்துக் கொண்டும், ஒழுங்கு படுத்திக் கொண்டும், புதுப்பித்துக் கொண்டும் இருக்கிறது.

ஓரிரு எண்ணங்கள் தவறாகவும், பலவீனமாகவும் உள்ளே செல்வதில் பெரிய பாதிப்பு இருக்காது. தொடர்ந்து அதே போல் எண்ணங்கள் ஆழ்மனதில் பதிய ஆரம்பித்தால் தான் பிரச்னை.

எனவே மேல்மனம் எடுத்து உள்ளே அனுப்பும் தகவல்களில் மிக கவனமாக இருங்கள். மேல்மனம் அனுப்பும் தகவல்கள் தொடர்ந்து பயம், பலவீனம், கவலை, தாழ்வு மனப்பான்மை கொண்ட எண்ணங்களாக இருந்தால் அவை பலப்பட்டு அப்படியே பதிவாகி அதை மெய்ப்பிக்கும் நிகழ்வுகளாக உங்கள் வாழ்வில் கண்டிப்பாக வரும். அதற்கு எதிர்மாறாக தைரியம், வலிமை, தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, உற்சாகம் போன்ற தகவல்களாக மேல்மனம் உள்ளே தொடர்ந்து அனுப்பினால் அதுவும் அப்படியே உங்கள் நிஜ வாழ்வில் பிரதிபலிக்கும் என்பது உறுதி

மனோசக்தியே மந்திரசக்தி.

-------------------------------------------------

எப்படி நமது நாட்டில் பலர் ஏழைகளாக இருப்பதற்கும், சிலர் சுகமாக எல்லா வசதிகளுடன் வாழ்வதற்கும் காரணம், அவர்கள் படிப்பில்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான். அந்தப் படிப்பைப் பெற்றவர்கள்கூட படிப்பிலே எது முக்கியம் என்று தெரிந்து கொள்வதில்லை. அந்த முக்கியமான விஷயம்தான் தியானம். இன்று அமெரிக்காவில் பல பல்கலைக் கழகங்களில் இது சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஊருக்கு ஊர் தியானம் சொல்லிக் கொடுக்கும் சங்கங்கள் இருக்கின்றன.

ஒரு மனிதன் செல்வந்தனாக இருப்பதற்கும் மற்றொருவன் ஏழையாகவும் வாழ்வதற்கும்

காரணம், அவர்கள் மனதில் கொண்டிருக்கும் எண்ணங்கள், ஆசைகள்தான் என்று மனவியல்

அறிஞர்கள் கூறுகிறார்கள். அதேபோல அந்த ஆசைகளை எப்படி சீர்படுத்தி, வாய்க்கால் வெட்டி, பாத்தி கட்டி

செலுத்துகிறோம் என்பது அதைவிட முக்கியம். இதைத்தான் மனதை ஒருமுகப்படுத்துதல் என்பார்கள்.

பூதக் கண்ணாடியைப் பார்த்திருப்பீர்கள். கீழே ஒரு தாளை வைத்து பூதக் கண்ணாடியை சூரியனுக்கு எதிராகப் பிடித்தால், சூரியக் கதிர்கள் ஒருமுகப்பட்டு தாள் எரியத் தொடங்குகிறது. பூதக் கண்ணாடி சூரிய சக்தியை ஒருமுகப்படுத்துகிறது ஒருமுகப்படுத்தும்போது சக்தி

அதிகமாகிறது. வலிமை, எரிக்கும் சக்தி அதிகமாகிறது.

இப்படி நம் மனசக்தியை ஒருமுகப்படுத்தும் மார்க்கங்களைத்தான் "ஜெபம்" என்றும் "தியானம்" என்றும் சொல்கிறோம். உதடுகள் அசைந்து ஒலியுடன் சொல்வதை "ஜெபம்" என்றும், மனதிற்குள் எண்ணங்களை அடக்குவதை "தியானம்" என்றும் சொல்கிறோம். யோகிகள் மனதை ஒருமுகப்படுத்த சில மந்திரங்களை

இரகசியமாகச் சொல்லிக் கொடுப்பார்கள்.

எந்த எண்ணமும் மனதிற்குள் இரகசியமாக வைக்க வைக்க, அதற்கு வலிமை அதிகமாகிறது. இதுதான்

இரகசியமாகச் சொல்வதன் காரணம்.

மந்திரம் என்று எதைச் சொல்கிறார்கள்?ஆழ்மனம் திரும்பத் திரும்பச் சொல்வதுதான் மந்திர சக்தியை ஏற்படுத்துகிறது. எதைத் திரும்பச் சொல்கிறோமோ அதன் பொருள் நம் ஆழ்மனதில் பதிந்து நமக்கு எப்போதும் மந்திர சக்தி உதவத் தயாராயிருக்கிறது.

"வழிகாட்டு" என்று முறையிட்டோமானால் நமக்கு வழிகாட்டும்.

திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் விஷயங்கள் ஆழ்மனதிற்குப் போகின்றன. ஆழ்மனதில் போடப்பட்ட விஷயங்களை ஆழ்மனம் நிறைவேற்றி வைக்கிறது. இதுதான் உண்மை.

முன்னூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பிரான்சு நாட்டு மருத்துவர், "நான் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வகையிலும்? முன்னைவிட ஆரோக்கியமானவனாக இருக்கிறேன்" என்று நோயாளிகள் திரும்பத் திரும்பச் சொல்லச் செய்ததன் மூலம்

அவர்களது நோயைக் குணப்படுத்தினார். இது இன்னும் "நமக்கு நாம் சொல்லிக் கொள்ளுதல்" என்ற தத்துவத்தின் கீழ் மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது.

இப்படியாக மனதை ஒருமுகப்படுத்தும்

பழக்கந்தான், நாளைக்கு நாம் ஒரு வேலையைச் செய்யும்போது மனதை அந்த விஷயத்தில் ஒருமுகப்படுத்துவது எளிதாகிறது. இதனால் முயற்சிகள் வெற்றியடைகின்றன.

ஜெபம், தியானம் (திக்ரு)மூலம் மனதை ஒருமுகப்படுத்தும் திறனையும், நம் ஆசைகளை, இலட்சியங்களை, ஆழ்மனதிற்கு அனுப்பி வைக்கும் முறையையும் கற்றுக் கொள்கிறோம்.

சுயகட்டுப்பாட்டின் முக்கியமான பாடம் இதுதான். இதை விடாது நீங்கள் பயிற்சி செய்து பார்த்தீர்களானால், அதி ஆச்சரியமான நிகழ்ச்சிகள் உங்கள் வாழ்வில் நேர்வதைப் பார்ப்பீர்கள்;

வெற்றி உங்கள் கைக்குள் வந்து சேரும்.

இதுவே இத்தனை நாள் அதிகம் பேருக்கு சொல்லிக் கொடுக்கப்படாத இரகசியமாக இருந்தது.

ஆழ்மனம் என்பது நம்மில் உள்ள மிகப்பெரிய சக்தி (காஸ்மிக் எனர்ஜி). ஆழ்மனம் எப்பொழுது திறக்கும் துக்கமும் இல்லாமல் விழிப்பும் இல்லாத நேரத்தில் திறக்கும். இதன் முலம் நமக்கு பிரபஞ்சசக்தி கிடைக்கும். இந்த பிரபஞ்சத்தில் ஏராளமான சக்திகள்

உள்ளன. அவற்றில், ஒன்று காஸ்மிக் energy. இதைப் பயன்படுத்தி நமது ஆசைகளை நாம் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.இந்த காஸ்மிக் சக்தியைப் பயன்படுத்திக் கொள்வதற்கு நாம் நமது ஆழ்மனத்தை நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும்.

ஆழ்மனதை நமது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர நாம் தினமும் தியானம் செய்துவர வேண்டும். இதன் மூலம் மிக எளிய முறையில் லட்சியங்களை நிறைவேற்ற முடியும்.

லட்சியகள் மட்டும் அல்ல நாம் நோய்களையும் குணப்டுத்தமுடியும், மற்றவர்களின் ஆழ்மனதுடனும் உரையாடமுடியும்.

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம்

-------------------------------------------------------------------

பூமியில் வசிப்பதற்கு பெரிய முயற்சியோ, நம்பிக்கையோ துணிச்சலோ தேவையில்லை.

ஏனெனில் நம் பூமி எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் இடம் கொடுக்கும். ஆனால் இந்த பூமியில் வாழத்தான் நாம் பெரும் முயற்சி மேற் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம்தான் முடிவு செய்ய வேண்டும், நாம் வசிக்கப் பிறந்தோமா? அல்லது வாழப்பிறந்தோமா? என்று....

நல்வாழ்வு வாழ வேண்டும் என்று முடிவெடுத்தபின் நாம் செய்யவேண்டியது ஒரு சிறு விஷயம்தான் மாற்றம். அத்தகைய மாற்றம் நம்மில் இருந்தும்,

நம் அன்றாட செயல்களிலிருந்தும் ஆரம்பமாக வேண்டும்.

மாற்றங்களை விரும்பாத எவரும்

மகத்தான வாழ்வு வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. மாறாத, மாறவிரும்பாத எந்த உயிரினமும் அதன் சந்ததியை பூமியில் விட்டுச் செல்லவில்லை. இதை நம்பினால் பூமியில் இனிய வாழ்வு வாழலாம்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிடமும் ஏன் ஒவ்வொரு நொடியும் எஞ்சியுள்ள வாழ்வை ஆனந்தமாய் வாழ முடிவெடுக்கும் சக்தி நம்ஒவ்வொருவரிடமும் உண்டு என்பதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும்.

சூரியக் குடும்பத்தில் உள்ள எட்டு

கோள்களில் (புளூட்டோ குள்ளக்கோள்) பூமி மட்டுமே ஜீவராசிகள் வாழத்

தகுதி வாய்ந்தது. பூமியானது எந்தப் பிடிமானமுமின்றி தன்னைத்

தானே சுற்றிக்கொண்டும், சூரியனையும் சுற்றி வருகிறது.

ஆனால், "பூமி சுற்றுவதை உணர

முடிவதில்லை. நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் அது உண்மை. அதேபோல் நம் ஒவ்வொருவரிடமும் சக்தி உள்ளது. இதை உணர முடிவதில்லை. ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் இதுவும் உண்மை." சூரியன் தன் ஈர்ப்புச்சக்தியினால் எட்டு கோள்களையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இந்த சக்தி சூரியனுக்கு எங்கிருந்து வந்தது?

சூரியனுக்கு அச்சக்தி கொடுத்த

பிரபஞ்சம்தான். நம் அனைவருக்கும்

சக்தியை அனுதினமும் கொடுத்துக்

கொண்டிருக்கிறது.

பிரபஞ்சத்தைப் பற்றி முழுவதுமாக

அறிந்தவர்களில்லை. எனினும் சிறு துளிகள். நாம் உயிர் வாழும் பூமி போன்ற பல கோடிக்கணக்கான கோள்கள் அடங்கிய பால்வெளி மண்டலமும் கோடிக்கணக்கான விண்மீன்கள் தொகுப்பும் சேர்ந்தது அண்டம் ஆகும். பல கோடிக்கணக்காக அண்டங்களின் தொகுப்பே, பேரண்டம் பிரபஞ்சம் எனப்படுகிறது. மனிதனின் கற்பனைக்கும் எட்டாத ஒன்றுதான் பிரபஞ்சம்.

கற்பனையே செய்ய முடியாத பிரபஞ்சத்தின் ஒரு சிறுபகுதிதான். நாம் உயிர் வாழும் பூமி.

இந்த பூமியை இயக்கிக்கொண்டிருப்பது பிரபஞ்ச சக்தி ஆகும். இதே பிரபஞ்ச சக்திதான் பூமியில் வாழ நினைப்பவர்களுக்கு வாழ்க்கையை கொடுக்கிறது. இருக்க நினைப்பவர்களுக்க வசிக்க இடம்

கொடுக்கிறது.

இந்த பிரபஞ்ச சக்தியானது நம் ஆழ்மனம் மூலமாக நம் ஒவ்வொருவருள்ளும், ஒவ்வொரு நொடியும் அளப்பரிய சக்தியை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

ஆழ்மனம் என்ற ஒன்று தனியாக இல்லை. மனித மனம்தான் அறிவுமனம் ஆழ்மனம் என்று இருவிதமாக வேலை செய்து கொண்டு இருக்கிறது.

"உருவமே இல்லாத ஆழ்மனம்தான் இந்த உலகத்தை உருவாக்குகிறது. அடையாளம் காண முடியாத ஆழ்மனம்தான் நம்மை இந்த

உலகிற்கு அடையாளம் காட்டுகிறது. அறிய.முடியாத ஆழ் மனம்தான் நம் வாழ்க்கையில் அற்புதத்தை நிகழ்த்துகிறது." இதுவரை நாம்

வாழ்ந்த நாட்களுக்கும், இனி வாழும் வாழ்க்கைக்கும் மூலதனம் நம் ஆழ்மனம் ஆகும்.

இன்று நாம் வாழும் வாழ்க்கை நமக்கு பிடித்திருந்தாலும்.பிடிக்காதிருந்தாலும் அது நாம் தெரிந்தோ, தெரியாமலோ நம் மனம் விரும்பியது தான்!

ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் துலங்குகிறது? ஏன் சிலருக்கு தொட்டதெல்லாம் சுடுகிறது? ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் தொலைந்தே போகிறது?

இப்போது இதற்கு காரணம் உங்களால் சொல்லமுடியும். நீங்கள் யூகிப்பது முற்றிலும் சரியே. ஆம். எல்லாவற்றிற்கும் காரணம் நம் எண்ணங்களே. எதை நாம் விரும்பி நினைக்கிறோமோ அதுதான் நடக்கும்.

நாம் நினைக்கும் அனைத்தையும் நடத்திக் கொடுக்கும் சக்தி நம் ஆழ்மனத்திற்கு உண்டு.

நாம் நாள் முழுவதும் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ அதுவாகவே

ஆகிறோம். காரணம் நம் ஆழ்மனம். நாம் விரும்பிய அனைத்தையும் நம் கண்முன்னே கொண்டு வந்து வைக்கும் ஒரு விசுவாசமுள்ள வேலையாள்தான் நம் ஆழ்மனம்.

நாம் விரும்பியதை அடைய ஒரே வழி, நம் எண்ணங்களை சீர் செய்வதுதான். அந்த எண்ணங்களுக்கு உருவம் கொடுப்பதுதான்.

ஏனெனில் நம் ஆழ்மனத்திற்கு வார்த்தைகள் தெரியாது. நல்லது எது? கெட்டது எது? என்று பிரித்துப்பார்க்கத் தெரியாது. எண்ணத்தை வலிமைப்படுத்துவதுதான் ஆழ்மனதை வசியப் படுத்த ஒரே வழி.

ஓர் எண்ணத்தை மனதில் விதைத்து, அதை அனுதினமும் நினைத்து, அந்த எண்ணத்தை நம் ஐம்புலன்களாலும் உணர்ந்து வாழ்ந்தால் அந்த எண்ணம்

வண்ணமாவது திண்ணம்.....

வெற்றி நிச்சயம்!.

- சித்தர்களின் குரல் shiva shangar

 

 நன்றி இணையம்