சோ ராமசாமி அழுத இடம்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:27 AM | Best Blogger Tips

 


சோவின் நாடகம் தடைசெய்யபடுகின்றது, கோர்ட்டுக்கு செல்கின்றார் சோ

ஆட்சேபகரமான காட்சிகள் என சில காட்சிகளை சொல்லி தடை செய்ய சொல்கின்றார் நீதிபதி

சட்டம் இதுவானால் அதை நீக்கி நாடகம் நடத்துவேன் ஆனால் நீதிமன்றம் தடை செய்த காட்சிகள் எது என எழுதிகொண்டே இருப்பேன் அப்பொழுது நீங்கள் தடை செய்ய நினைத்த விஷயம் உலகெல்லாம் தெரியும்

அதற்கு மேல் நீதிபதி ஒன்றும் செல்லவில்லை, நாடகம் நடந்தது

காமராஜர் வந்திருந்தார்

நீதிமன்றம் செல்லும் நிலைவரை வந்தாயிற்று என்றார் சோ

நீ சட்டத்தை மீறி ஏதும் எழுதியிருப்ப, அதான் சிக்கலாயிருக்கும் என்றார் காமராஜர்

இப்போ லைசன்ஸ் கிடைச்சிட்டே என்றார் சோ

லைசென்ஸ் கிடைச்சிட்டா உன் இஷ்டத்துக்கு கார் ஓட்டுவியா? அக்கம் பக்கம் பாக்க மாட்டியா என்கின்றார் காமராஜர்

லைசென்ஸ் கொடுக்கிறதே கார் ஓட்டத்தானே, நான் யாருக்கும் ஆபத்தில்லாமல் ஓட்டும்வரை என்ன சிக்கல்

என்னமும் பண்ணு, நாடகத்தை தொடங்கு என்றார் காமராஜர்

இப்படியாக காமராஜருக்கும் அவருக்கும் நட்பு இருந்திருக்கின்றது

எல்லா இடங்களிலும் சிரித்து கொண்டிருக்கும் சோ அழுத காட்சி வரலாற்றில் ஒன்றே ஒன்றுதான்

அது காமராஜர் பணக்காரர் கை கூலி, டெல்லியில் இருந்து வரும் அரசியல்வாதி எல்லாம் காங்கிரஸ் பணக்காரர் வீடுகளில்தான் காமராஜரால் தங்க வைக்கபடுகின்றனர் என எதிர்கட்சிகள் சர்ச்சை கிளப்பிய நேரம்

அதை அழிச்சாட்டியமாக செய்தவர் கருணாநிதி, டெல்லி கணவான்களை காங்கிரஸ் பண்ணையார் வீடுகளில் தங்க வைத்து மேட்டுகுடி பாவனை செய்கின்றார் ஏழைபங்காளர் என வேஷமிடும் காமராஜர் என பொங்கி தீர்த்தார் கருணாநிதி

இது அன்று பெரும் சர்ச்சையாயிற்று அல்லது ஆக்கபட்டது

காமராஜரை காண சென்ற சோவிடம் இதனை குறித்து சொல்லிகொண்டே சட்டென்று கேட்டார் காமராஜர்

நீ இவ்வளவு நாளும் இங்க வந்து போற, என்னைக்காவது உன்னை என்கூட சாப்பிட சொல்லியிருக்கேனா?

இல்லை என தலையாட்டுகின்றார் சோ

ஒரு காபியாது கொடுத்திருக்கேனா?

நெற்றியினை சுருக்கி இல்லை என்கின்றார் சோ

இங்கு அவ்வளவுதான் வசதிண்ணே, நானும் என் சமையல்காரனும் சாப்பிடுற அளவுதான் வசதிண்ணேன், இது வாடகை வீடுண்ணே

டெல்லியில் இருந்து திடீர்னு வாரவங்களுக்கு இங்க கொடுக்க ஒண்ணுமில்லை அதான் வசதி உள்ளவங்க வீட்டுக்கு அனுப்புறேன், இது குத்தமா

ஒரு ஒண்டிகட்டை வீட்டுல என்ன இருக்கும்ணு தெரியாம அவனுக இஷ்டத்துக்கு எழுதுறானுக" சொல்லிவிட்டு கலங்குகின்றார் காமராஜர்.

சோ ராமசாமி அழுத இடம் இதுதான், இது ஒன்றுதான்.

 

 நன்றி இணையம்