''அடுத்து
விடும் மூச்சு நின்னா போச்சு.'' ஆம் சுவாசமே நம் உயிர் வாழ்விற்கு ஆதாரம்.
ஆனால் அதைக் குறித்த எந்த விழிப்புணர்வும் இல்லாமல் நாம் வாழ்ந்து
வருகிறோம். சுவாசம் பற்றிய அறிவு அனைத்து தரப்பு மக்களுக்கும் அவசியமான
ஒன்றாகும். பலப்பல தேவையில்லாத விஷயங்களைப் பற்றித் தெரிந்து வைத்துக்
கொள்கிற நாம், நம் உயிர் வாழவிற்கு ஆதாரமான சுவாசம் பற்றி யோசிக்கக் கூடச்
செய்வதில்லை. சுவாசத்தை வாசி என்பார்கள். வாசியை மாற்றிச் சொன்னால் சிவா. ஆக சுவாசம் கடவுளுக்கு நிகரான அல்லது கடவுளை அறிய உதவும் விஷயமாகும்.
சுவாசிப்பதை இரண்டு நிலைகளாகச் சொல்லலாம். ஒன்று நுரையீரலுக்குச் சென்ற பிராணவாயு நிறைந்த காற்று இரத்தக் குழாய்களுக்குக் கொடுக்கப்பட்டு இரத்தக் குழாய்களிலுள்ள கரிமிலவாயு காற்றால் வெளியேற்றப்படுகிறது. இரண்டு இரத்தக் குழாய்களில் உள்ள பிராணவாயு செல்களுக்குக் கொடுக்கப்பட்டு செல்களில் உள்ள கரிமிலவாயு இரத்தக் குழாய்களால் பெறப்படுகிறது. இப்படி இரண்டு நிலைகளில் வாயுக்களின் பரிமாற்றம் நடைபெறுகிறது.
நாம் சுவாசிக்கும் போது மூக்கில் நுழையும் காற்றிலுள்ள தூசுகள் மூக்கின் உள் உள்ள முடிகளாலும் ஈரப்பதமுள்ள மியூகஸ் பரப்பாலும் தடுக்கப்பட்டு தொண்டைப் பகுதிக்குக் காற்று செல்கிறது . அங்கிருந்து குரல்வளைப் பகுதியைத் திறந்து கொண்டு மூச்சுக் குழலுக்குச் சென்று, அங்கிருந்து சிறிய மூச்சுக் குழலையும், நுண்ணிய மூச்சுக் குழலையும் தாண்டி காற்றறைகளுக்கு வந்து சேர்கிறது. இங்கு வைத்துதான் பிராணவாயு நிறைந்த மூச்சுக் காற்றும் இரத்தத்தில் உள்ள கரிமில வாயு நிறைந்த காற்றும் பரிவர்த்தனை செய்யப்படுகின்றன.
நுண்ணிய காற்றறைகளும், நுண்ணிய மூச்சுக்காற்றுக் குழாய்களும், நுண்ணிய இரத்தக் குழாய்களும் நிறைந்த தொகுதியே நுரையீரல் ஆகும். இதன் கொள்ளளவு கிட்டத்தட்ட 5 லிட்டர் காற்று. இது மார்பின் இடப்பக்கமும், வலப்பக்கமும் இரு பாகங்களாக அமைந்துள்ளன. உயிர் மூச்சுக் காற்றுப் பரிவர்த்தனை நுரையீரலில் உள்ள நுண்ணிய காற்றறைகளில் நடைபெறுவதால் இது ஒரு முக்கியமான உறுப்பாகக் கருதப்படுகிறது. செல்களில் உள்ள கரிமிலவாயு நிறைந்த காற்று அசுத்த இரத்தக் குழாய்களால்(சிரை) கவரப்பட்டு இதயம் செல்கிறது. அங்கிருந்து இரத்தக் குழாய்கள் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது. அங்குள்ள காற்றறைகளில் கரிமிலவாயு நிறைந்த காற்று இரத்தக் குழாய்களால் தள்ளப்பட்டு, காற்றறைகளில் உள்ள சுவாசத்தின் மூலம் வந்த காற்று இரத்தக்குழாய்களால் பரிவர்த்தனை செய்யப்பட்டு இதயம் வழியாக செல்களுக்கு அனுப்பப்படுகிறது.
உள்ளிழுக்கும் காற்றிலுள்ள வாயுக்களின் அளவு, நைட்ரஜன் 79%, பிராணவாயு 20 %, கரிமிலவாயு 0.04%, ஆகும். வெளிவிடும் காற்றிலுள்ள வாயுக்களின் அளவு நைட்ரஜன் 79%, பிராணவாயு 16%, கரிமிலவாயு 4.04% ஆகும்.
காற்று நுரையீரலில் அதிக நேரம் நிறுத்தப்படுவதால் காற்றிலுள்ள ஆக்சிஜன் அதிக அளவு பரிவர்த்தனை செய்யப்படுகிறது. இதனால் செல்களுக்கு அதிக ஆக்சிஜன் என்கிற பிராணவாயு கொடுக்கப்பட்டு சக்தி வீணாவது தடுக்கப்படுகிறது. தேவைக்கு அதிகமாகக் கிடைக்கும் ஆக்சிஜனால் கிடைக்கும் பிராண சக்தி தசைகளில் உள்ள மயோகுளோபினால் சேர்த்து வைக்கப்படுகிறது. சாதாரணமாக சுவாசிக்கும் போது நுரையீரலில் உள்ள 3000 காற்றறைகள் மட்டுமே செயல்படுகின்றன. ஆனால் பிராணாயாமத்தின் போது 6000 காற்றறைகள் செயல்படுகின்றன. எனவே இரு மடங்கு சக்தி கிடைப்பதோடு, அதிகமான பிராணசக்தி சேமிக்கப்பட்டு ஒரு நிலையில் ஓஜஸாக மாறி மூலாதாரத்தில் சேர்கிறது. இதனால் ஆயுளும் அதிகரிக்கிறது.
பிராணாயாமமும், தியானமும் செய்து வந்தால் உணர்வுகள் கட்டுக்குள் வரும். இதனால் நரம்புகளும் சுரப்பிகளுக்கு எந்தவிதமானத் தாக்கத்தையும் கொடுப்பதில்லை. செல்களுக்குத் தேவையான பிராணவாயுவை பிராணாயாமம் மூலம் பெறும் தன்மையையும் உடல் அடைவதால் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கும் தன்மையைப் பெற்றுவிடுகின்றன. நிமிடத்துக்கு 15 முறை சுவாசிக்கும் மனிதன் 10 நிமிடம் பிராணாயாமம் செய்யும் போது ஒரு பங்கு நேரம் உள் இழுத்தல், நாலு பங்கு நேரம் உள்ளே வைத்தல், இரண்டு பங்கு நேரம் வெளியே விடுதல் என்று சுவாசம் செய்யும் போது 140 சுவாசங்களை மிச்சப்படுத்துகிறான். காலை, மாலை இரு வேளையும் செய்தால் 280 சுவாசம் ஒருநாளில் மிச்சமாகிறது. மேலும் சுவாசத்தை ஆழமாக இழுத்து மெதுவாக விடும் பழக்கத்தைப் பெற்றுவிடுவதால் நிமிடத்திற்கு மூன்று சுவாசம் மிச்சமானால் கூட, தூங்கும் நேரம் போக மற்ற நேரங்களில் எவ்வளவு சுவாசம் மிச்சமாகும் என்று கணக்கிட்டுப் பாருங்கள். அந்த அளவு ஆயுள் அதிகரிக்கும் என்பதோடு மட்டுமல்ல ஆரோக்யமும் மேம்படுகிறது. தியானமோ மூளையின் இருபாகங்களையும் சமநிலைப்படுத்தி, மனதையும் ஒருநிலைப்படுத்தி, உடலில் மின்காந்த அதிர்வுகளை இன்ப அதிர்வுகளாக உண்டு பண்ணி, நாடி நரம்புகளை சீரடையச் செய்து, மன அழுத்தத்தையும் போக்கி நோயற்ற வாழ்வைத் தருவதோடு மெய்யறிவு பெறவும் வழிவகை செய்கிறது