பாடாய் படுத்தும் வெயிலுக்கு சில டிப்ஸ்.....

மணக்கால் அய்யம்பேட்டை | 12:25 PM | Best Blogger Tips

வெயில் காலம் துவங்கி விட்டது. மக்கள் அனைவரும் வெயிலின் தாக்கத்தை தாக்கு பிடிக்க முடியாமல் வாடி வதங்குகின்றனர். பாடாய் படுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க சில வழி முறைகளை பின்பற்றி உடலை பாதுகாக்கலாமே......

* தர்பூசணியை குளிர்சாதன பெட்டியில் உள்ள பிரீசரில் வைத்தால், பழத்தில் இருக்கும் தண்ணீர் ஃப்ரீஸ் ஆகி ஐஸ்க்ரீம் சாப்பிடுவது போல் இருக்கும்.

* நீர் மோரில் கருவேப்பிலையுடன் பொடியாக அரிந்த வெள்ளரித்துண்டு, மாங்காய், ஒன்றிரண்டாகத் தட்டிய இஞ்சி ஆகியவற்றைப் போட்டுப் பருகலாம்.

* கருப்பஞ்சாறு கோடைக்கு ஏற்ற சிறந்த பானம். சர்க்கரை நோயாளிகள் இதைத் தவிர்க்க வேண்டும்.

* பெண்கள் வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் "பேக்' போட்டுக் கொண்டால் பிரெஷாகவும், பளிச்சென்றும் இருக்கும்.

* வியர்வையைப் போக்கி ப்ரஷ் ஆக இருக்க நான்கு சொட்டு எலுமிச்சம்பழச் சாறை குளிக்கும் தண்ணீரில் சேர்த்து குளிக்கலாம்.

* நுங்குகளை வாங்கி உரித்துக் கையால் பிசைந்து சர்க்கரை, பால், ஏலக்காய் சேர்த்து ப்ரிட்ஜில் வைத்துச் சாப்பிட இயற்கையான ஐஸ்க்ரீம் ரெடி.

* கோடை காலத்தில் குழந்தைகளுக்கு வேனல் கட்டிகள் வந்தால் கட்டிகள் மீது நுங்கை மசித்துத் தடவுங்கள்.

* நீராகாரம் அருமையான இயற்கையான பானம். காலையிலும் ஒரு டம்ளர், டிபன் சாப்பிட்டப் பிறகும் ஒரு டம்ளர் அருந்தலாம்.

* கோடையில் மண்பானை நீரைக் குடிக்கிறீர்களா? அதில் சிறிது துளசி இலைகளைப் போட்டுப் பருகுங்கள். உடலுக்கும் நல்லது. உடல் குளிர்ச்சியாகவும் இருக்கும்.

* மோர், இளநீர், எலுமிச்சைச் சாறு, பழச்சாறுகள் என்று ஏதாவது ஒன்றை தினமும் அவசியம் பருகுங்கள்.

* வீட்டில் வெயில்படும் இடத்தில் பெரிய கார்டு போர்டு அட்டைப் பெட்டியை படிமானமாகச் செய்து பால்கனி, ஜன்னல் கம்பி வலைக்குள் செருகிவிட்டால் வீட்டிலுள்ளவர்கள் டி.வி. பார்க்கும் போது கிளார் அடிக்காமல் இருக்கும். குளுமையாகவும் இருக்கும்.

* வெயில் காலத்தில் சூட்டினால் வயிற்று வலி வரும். இதற்கு கசகசாவை மிக்ஸியில் அரைத்து கொதிக்க வைத்து பாலோடு சேர்த்து துளி சர்க்கரை போட்டுச் சாப்பிட வயிற்று வலி பறந்து போகும். ஒரு டம்ளர் பாலுக்கு ஒரு தேக்கரண்டி சர்க்கரையும், இரண்டு தேக்கரண்டி கசகசாவும் போடலாம்.

* கோடை காலத்தில் வாரத்தில் ஒருநாள் இரவு "ப்ரூட் நைட்' என்று வைத்துக் கொள்ளவும். "ஃப்ரூட் சாலட்' சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் சாப்பிட்டால் தெம்பாக இருக்கும். சமையல் செய்யும் வேலையும் மிச்சமாகும்.
 
பாடாய் படுத்தும் வெயிலுக்கு சில டிப்ஸ்.....
==============================

Thanks to FB வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலை முறை