கேங் ஸ்டார் ப.சிதம்பரம் வாய்மூடி மவுனி ஆனது ஏன்?

மணக்கால் அய்யம்பேட்டை | 11:06 AM | Best Blogger Tips

Image result for chidambaram finance minister


சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறையினர் பாஸ்கர்ராமன் என்பவரை கைது செய்தனர்.இதில் வியக்கத்தக்க வைக்கும் விசயம் என்னவென்றால் இந்த பாஸ்கர்ராமன் ஒரு சார்டட் அக்கவுண்டெண்ட் என்பதுதான்.கடந்த டிச2015ந் போது அமலாக்கத்துறையினர் நடத்திய ரைடு ஒன்றில் நான்கு உயில்கள் ஒரு லாக்கரில் வைக்கப்பட்டதை கண்டு பிடித்தனர்.இந்த நான்கு உயில்கள் நான்கு பேரால் எழுதப்பட்டிருந்தது.அந்த நான்கு பேர் பாஸ்கர்ராமன் ,சி பி என் ரெட்டி,ரவி விஸ்வநாதன்,பத்மா விஸ்வநாதன்.இந்த நான்கு உயில்களுமே ஒரே நாளில் அதாவது ஜூன் 19,2013 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த நான்கு சம்பந்தமில்லாத நபர்கள் எழுதிய உயில்கள் அனைத்திலும் சாட்சியாக ஒருவர் கையொப்பமிட்டிருக்கிறார்.அவர் தான் முரளி.மீதமுள்ள மூன்று உயிலில் உள்ள சாட்சிகள்
சி பி என் ரெட்டி,ரவி விஸ்வநாதன், மற்றும் பத்மா விஸ்வநாதன்.
இதுதவிர இந்த உயில்களில் உள்ள சில விசயங்கள் அனைவருக்கும் பிரமிப்பை ஏற்படுத்தும்.நான்கு உயில்களுமே ஒரே மாதிரி இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.ஒரு பகுதி என்னவென்றால் சொந்த சொத்துக்கள்,நகை,கையிருப்பு,வங்கி கணக்கு போன்றவைகள் தனக்குப்பின் தனது மனைவிகள் குழந்தைகளுக்கு சேர வேண்டும் என்று வழக்கம்போல எழுதப்பட்டுள்ளது.இந்த நான்கு உயில்களின் இரண்டாம் பகுதிதான் ஆச்சர்யத்தை துண்டும் வகையில் எழுதப்பட்டுள்ளது.அதாவது தங்கள் பெயரில் உள்ள இரு கம்பெனிகளின் (அட்வான்டேஜ் கன்சல்டண்ட் பி லிட் மறும். கிரியா எப் எம் சி ஜி)பங்குகள் டாக்டர் ஶ்ரீநிதியின் மகளும் டாக்டர் பி ரங்கராஜன் அவர்களின் பேத்தியுமான அதிதி என்ற பெண்ணுக்கு சேருமாறு எழுதப்பட்டுள்ளது. இந்த ரங்கராஜன் அவர்களின் பேத்திக்கு கொடுக்கப்படுவதற்க்கான காரணம் என்ன வென்றால்,ஒரு நல்ல நண்பராகவும்,குருவாகவும், வழிகாட்டியாகவும் இருந்தமைக்காகவும் சமூக வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பங்களிப்பிற்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் அவரது பேத்திக்கு பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக எழுதப்பட்டுள்ளது.
இது ஒன்றும் பெரிய உடன்பாடு அல்ல. இந்த இரு கம்பெனிகளில் உள்ள மேற்கண்ட நான்கு நபர்களின் ஒன்று பட்ட பங்குகளின் எண்ணிக்கை 300000 பங்குகள் அதாவது அந்த அந்தக் கம்பெனியின் 60% பங்கு.மேற்கண்ட நான்கு பேர் இறப்புக்குப் பின்னர் அதிதி என்ற பெண் அட்வாண்டேஜ் என்ற கம்பெனியின் 60% பங்குகளை வைத்திருப்பதால் அவர் அந்தக் கம்பெனியின் உரிமையாளராக மாறிவிடுவார்.மீதமுள்ள அட்வாண்டேஜ் கம்பெனியின் 40% பங்கு ஆஸ்பிரிட்ஜ் கம்பெனிக்கு சொந்தக்காரரா மோகனன் ராஜேஷ்க்கும் சேரும்.
அப்படியென்ன இந்த அட்வாண்டேஜ் கம்பெனியின் அதிசியம்?
வேறு ஒன்றும் அதிசியமில்லை.இந்த அட்வாண்டேஜ் கம்பெனி வாசன் கேர் என்ற கம்பெனியின் பங்குகள் 60% பங்குகளை வைத்திருக்கிறது.இந்த வாசன்கேர் கம்பெனியை வெறும் 50 லட்சத்திற்கு (?) அட்வாண்டேஜ் வாங்கியிருந்தது. மீதமுள்ள 40% பங்குகளை வாசன்கேர் மொரிசியஸ் சீக்கினோ காப்பிட்டல் என்ற கம்பெனிக்கு அதாவது 45கோடிக்கு வாங்கிக்கொண்டது.சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் அட்வாண்டேஜ் கம்பெனி வாசன்கேரில் வைத்திருக்கும் பங்குகளின் மதிப்பு 67.50 கோடியாகும்.
அட்வாண்டேஜ் கம்பெனியின் துணை நிறுவனம் நிறுவனம் Advantage Strategic Consulting Pte Ltd (Advantage Singapore) சிங்கப்பூரில் இயங்கி வருகிறது.இந்த கம்பெனிக்கு உலகம் முழுதும் அதாவது பனிப்பிரதேசமான அண்டார்டிகா தவிர உலகின் முக்கியமான பிரதான ஊர்களிலுள்ள பிரதான இடங்களில் ஆயிரக்கணக்கான கோடிகளின் மதிப்பில் சொத்துக்கள் இருக்கினறன
இவைகளை நீங்கள் கூட்டி கழித்து இணைத்துப்பார்த்தால் பல ஆயிரம் கோடி சொத்துக்களுக்கான உயிலை ஒரு சின்ன பெண் ஆதிதி க்கு அவளுடைய தாத்தா டாக்டர் பி ரங்கராஜனுக்கு செய்யும் நன்றி கடனாக ஒரே நாளில் நான்கு பேர் எழுதிய நான்கு உயில்களின் ஒரு உயிலின் சொந்தக்காரர் தான் பாஸ்கர் ராமன் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்.அவர்தான் தற்பொது கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த உயிலில் மறைவாக உள்ள ஒன்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.அதுதான் அதிதி நளினி சிதம்பரம். அந்த இளம்பெண் வேறு யாருமல்ல,டாக்டர் ஶ்ரீநிதி சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரத்தின் மகள் மற்றும் "அவருடைய" பேத்தி ஆவார்.யார் அந்த "அவர் "?
இந்த கதை இதோடு முடியவில்லை.அந்த அட்வாண்டேஜ் கம்பெனியின் ஆஸ்ப்ரிட்ஜ் கம்பெனியின் மீதமுள்ள 40% பங்குகளுக்கு சொந்தக்காரர் திரு மோகனன் ராஜேஷ் என்பவர்.இவர் வேறு யாருமல்ல கார்த்திக் சிதம்பரத்தின் பக்கத்து வீட்டுக்காரர்.இந்த ஆஸ்பிரிட்ஜ்கம்பெனியை கடந்த 2006ல் இந்த மோகனனிடமிருந்துதான் கார்த்திக் சிதம்பரம் வாங்கி மீண்டும் 2011ல் அவருக்கே(?) மாற்றப்பட்டது.அப்போதுதான் 2011ல்
வாசன் கேர் கதை தொடங்குகிறது.
இந்த வளையத்தின் தலைவன் பாமர மக்களின் பாணியில் சொல்ல வேண்டுமென்றால்
"
கேங் லீடர்" சாதாரண ஆளாக இருக்க முடியாது.கிரிமினல் புத்திசாலியாக இருக்க வேண்டும்.இல்லையா? நீங்கள் ஊகிப்பது சரிதான்.அவர் இந்தியாவின் நிதி அமைச்சராக தொடர வேண்டும் என்று சில பேர் விரும்பியதின் ரகசியமும் இதுதான்.
இனி என்ன நடக்கப்போகிறது என்பதை கூர்ந்து கவனியுங்கள்.மோடியின் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க தவறினால்,நமக்கு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தைரியமில்லை என்று ஆகிவிடும்.வருகிற 2019 தேர்தலில் படித்த நடுத்தர சம்பளப் பிரிவு மக்கள்தான் பாஜகவின் வாக்கு வங்கி.இவர்களை எதிர்கொள்வது கடினமாக இருக்கும் என்பதை பாஜக புரிந்து கொள்ள வேண்டும்.நிச்ச்யம் நமது அரசாங்கம் இந்த வாய்ப்பை
நழுவ விடாது என்று நம்புவோமாக.இல்லையென்றால் தேர்தலை எதிர் கொள்வது சிரமம்
இந்த கேங் லீடர் எவ்வளவு சொத்துக்களை இப்படி தனது கிரிமினல் அறிவின் துணை கொண்டு கொள்ளையடித்திருக்கிறாரோ தெரியாது.வெளியே வந்திருப்பது ஒரு சிறு துளிதான்.தான் சிக்கி கொள்ளாதபடி வலையை பின்னியிருப்பார் என்பது உண்மைதான். இல்லையென்றால் ஒரு எதிர்கட்சி அரசாங்க நிதி அமைச்சகம் மற்றும் சி பி ஐயிலியே தனது ஸ்லீப்பர் செல்களை வைத்திருக்கும் துணிவு யாருக்கும் இருக்க முடியாது.சில நீதிபதிகளைக் கொண்டு தன் மீது வந்த குற்றச்சாட்டை தானே துடைத்துக் கொண்டதை யாரும் மறந்திருக்க முடியாது.
பலபேர் நினைக்கின்ற மாதிரி இந்தியாவிலியே மிக அதிகமாக கொள்ளையடித்த கேங் ஸ்டார் இவராகத்தான் இருக்க முடியும்.இவர் போட்ட பிச்சைதான் சோனியா ராகுல் குடும்பத்திற்கு கிடைத்திருக்கும்.
எத்தனையோ ஒன்றுக்குமில்லாத விசயங்களுக்கெல்லாம் விவாதங்கள் தொலைக்காட்சிகளில் நடக்கின்றன.இன்னமும் சொல்லப்போனால் நாட்டில் சர்வ அதிகாரம் படைத்த பிரதமர் மோடி மீது உண்மையற்ற அடிப்படை முகாந்திரமற்ற செய்திகளை வைத்து விவாதங்கள் செய்யப்படுகின்றன.ஆனால் இந்த கேங் லீடரைப்ப்பற்றி எந்த விவாதங்களையும் எந்த டிவிக்களும் நடத்துவதில்லை.ஏன் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
ஊழல்புரிந்தவனை மோடி அரசு தண்டிக்கவில்லையென்றால் இனி எந்த அரசும் தண்டிக்க முடியாது.தண்டிக்காது.
பொறுத்திருந்து பார்ப்போம்.
குறிப்பு:இந்த செய்தியின் ஆங்கில கட்டுரை சமூக வலைத்தளங்களில் பல நாட்களாக இருக்கிறது.கேங் ஸ்டார் தரப்பு இதற்கு மறுப்பு தெரிவிக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தேன்.ஆனால் இதுவரை எந்த மறுப்பும் வரவில்லை.ஆகவே இதை தமிழ் படுத்தி பதிவு செய்திருக்கிறேன்.
ஒவ்வொரு பிரச்சனையிலும் முக்கை நுழைத்து பேட்டி கொடுக்கும் இந்த கேங் ஸ்டார் இந்த பாஸ்கர்ராமன் கைதுக்குப்
பிறகு வாய்மூடி மவுனியாக இருக்கிறார்.

நன்றி பரணிவேல் சங்கர்
& Murali Ram