மதம் தெரிவித்தது என்ன? நாம் தெரிந்து கொண்டது என்ன?

மணக்கால் அய்யம்பேட்டை | 5:56 PM | Best Blogger Tips

அனைவருக்கும் வணக்கம்! என்னுடைய இந்த பதிவில் பலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்த கருத்து ஓரளவிற்கு உங்கள் மனதில் ஒரு புரிதலை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். இந்த பதிவில் உள்ள கருத்துக்கள் ஏதேனும் உங்களது மனதினை புண்படச் செய்திருந்தால் மன்னிக்கவும்.
என்னுடைய தாய் திரு நாட்டின் பாதங்களை வணங்கி, இப்பதிவை முழு மன நிறைவுடன் சமர்ப்பிக்கிறேன்!
இந்தியாவின் வரலாற்று ஆய்வுகளையும், கலாச்சார ஆய்வுகளையும் இதுவரை கட்டுரைகளாக இந்த இணையத்தில் சமர்ப்பித்திருக்கிறேன். இந்தியாவின் மிகப் பெரிய பாரம்பரியத்தை சிறுமை படுத்தும் நோக்கில் நம் பாரத தேசத்திற்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத சில குற்றச்சாட்டுகளை உலக அரங்கில் பலர் முன்வைக்கிறார்கள், இதை நாமும் அவ்வப்போது நிருபித்துக் கொண்டிருக்கிறோம். சரி விடயத்திற்கு வருவோம்!
இந்தியாவின் மிகப்பெரிய பிற்போக்காக உலக அரங்கிலும், உள் நாட்டு மக்களிடையேவும் கருதப்படும் ஒரு சில அம்சங்களையும் அதன் உண்மை வடிவங்களையும் இங்கு எடுத்து வைக்கிறேன். ஒன்றன் பின் ஒன்றாக அவற்றைப் பற்றிய பார்வையை கொடுக்கும் முன் அதை இங்கே பட்டியலிடுகிறேன்.
1) மதம், 2) ஜாதி, 3) பெண் உரிமை
மதம் குறித்த ஒரு மிகப்பெரிய புரிதலை மக்கள் மத்தியில் ஏற்படுத்த இந்திய அரசாங்கம் மட்டுமல்ல, உலக அரசியலே தவறி விட்டது என்பது தான் நிதர்சனமான உண்மை. இதற்கு பல அரசியல் காரணங்கள் இருந்தாலும் அதை நான் இங்கே குறிப்பிடப்போவதில்லை. ஆனால் மதங்களின் நோக்கமும், காரண, காரணிகளும் அனைவருக்கும் விளங்கிவிட்டால் உலக அரசியலே நடுங்கிப் போகும் என்ற விடயத்தைக் கூறிக்கொண்டு மேற்கொண்டு தொடர்கிறேன்.
உலக அளவில் நூற்றுக்கணக்கான மதங்கள் இருந்தாலும், அதில் மிகப் பிரதானமான அதிக மக்கள் பின்பற்றும் மதங்களாக கருதப்படுவது கிறித்துவம், பௌத்தம், இஸ்லாம் (முஸ்லீம்), இந்து, சைனம், சீக்கியம் ஆகியவை. இதை எல்லாம் தவிர இன்னொரு மதமும் இங்கே உள்ளது அது மதமே இல்லை என்னும் மதம் ஆகும். இவர்களுக்கு இவர்களே இட்ட பெயர் “பகுத்தறிவு”. சரி, இவர்களுக்கு நாம் பின்னர் வருவோம்.
முதலில், பாரத தேசத்தின் பாரம்பரிய, மிகப் பழமையான மதமாக கருதப்படும் இந்து மதத்தில் இருந்து தொடர்கிறேன். உலகம் முழுவதும் ஏறக்குறைய 1 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இந்து மதத் தத்துவங்களைப் பின்பற்றுகிறார்கள் என்றாலும் அவர்களில் ஒரு கையளவு மக்களுக்கே இந்து மதம் என்றொரு மதமே இல்லை என்பது தெரியும். இதைப் பற்றிய ஒரு தெளிவான பார்வை வேண்டுமெனில் சில வரலாற்று விடயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இதை எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் என்னால் முடிந்த அறிவைப் பயன்படுத்தி கூற விளைகிறேன்.
உலகின் முதல் மனிதன் தோற்றம் பெற்ற நாளில் இருந்து அவனுடைய ஒவ்வொரு அனுபவமும், அறிவியலாக தொகுக்கப்பட்டு பின் வந்த சந்ததிகளுக்கு பல வழிகளில் பரிமாற்றம் செய்யப்பட்டது. அப்படி உலகின் முதல் மனிதன் தோற்றம் பெற்ற இடம், தென்னிந்தியா. மனிதனின் படைப்புகளில் மிகப் பெரிய ஒன்று மொழி. அப்படி முதலில் தோற்றம் பெற்ற மொழி தமிழாகவே இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. இங்கே மனிதன் என்று நாம் குறிப்பிடுவது அறிவியலில் ஹோமோ சேப்பியன்ச் (Homo Sapiens) என்று கூறப்படும் உங்களையும், என்னையும் போன்ற சாதாரண மனிதர்கள். இதற்கு முன்னர் ஹொமினாய்டுகள் போன்ற அறைவேக்காட்டு மனிதர்கள் வாழ்ந்திருந்தாலும் அவர்களை மனிதர்களாக கருதமுடியாது. ஆக இந்த ஹோமொ சேப்பியன்ஸ் எனப்படும் நிகழ்கால மனிதர்கள் உலகின் ஒரு மூளையில் வசித்து வந்த போது அவர்கள் கற்றறிந்த உண்மைகள், பெற்றுக்கொண்ட அனுபவங்களைத் தங்களது சந்ததிகளுக்கு தங்களது மொழி வாயிலாக தொடர்ந்து வழங்கி வந்துள்ளனர். எப்படி நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு அறிவுரைகள் வளங்குகிறோர்களோ அது போலத் தான். மிகவும் எளிமையாக சொல்ல வேண்டுமானால், உங்கள் குழந்தை எரிகின்ற நெருப்பில் கையை வைக்கப் போகும் போது நீங்கள் அதை தடுக்கிறீர்கள். ஏன் தடுக்கிறீர்கள்? ஏனென்றால் நெருப்பு சுடும் என்று உங்களுக்குத் தெரியும், அதை ஏற்கனவே நீங்கள் அனுபவித்திருப்பீர்கள். ஆக உங்களுக்குத் தெரிந்த அறிவியலை உங்கள் குழந்தைக்கு சொல்லித் தருகிறீர்கள். நீங்கள் அனுபவப்பட்டது இல்லை என்றாலும் அது உங்களது பெற்றோர் மூலமாக உங்களுக்குத் தெரிந்திருக்கக்கூடும். இந்த மிகப் பெரிய அறிவியல் பரிமாற்றம் தான் உலகத்தை இன்று வரை பல வகை மாற்றங்களுக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால் மதம் பற்றிய உண்மையை நாம் உணர்ந்து விட்டோம் என்றே அர்த்தம்.
என்னப்பா சின்னதா ஒரு கதைய சொல்லி அவ்வளவுதான் நு சொல்லுற? அப்படினு கேட்குறீங்களா? உண்மையிலேயே அவ்வளவு தான்ங்க…
ஆக உலகில் முதன் முதலில் தோற்றம் பெற்ற மனிதக்கூட்டம் தன்னுடைய அனுபவங்களை அறிவியலாக முதலில் செய்கையால் பரிமாறியது. பின்னர் இது கடினமாக இருந்த போது மொழி என்னும் ஒரு மாபெரும் கண்டுபிடிப்பை நிகழ்த்தியது. உலகில் முதல் மொழி தோற்றம் பெற்ற போதே இலக்கணமும், எழுத்துக்களும் தோற்றம் பெறவில்லை. இவை அனைத்தும் காலம் கடந்து நிற்க வேண்டும் என்று மனிதன் எண்ணிய போதே எழுத்துக்கள் உருவாகின. எழுத்துக்களை முறையாக வரையருக்க வேண்டும் என்று மனிதன் எண்ணும் போது இலக்கணம் உருவானது. ஆக தமிழ் மொழியும் கூட ஓரிரு நாளில் உருவானதல்ல. தமிழுக்கும் முன்னர் சில மொழிகளும் தோன்றி மறைந்திருக்கக்கூடும் என்பது தான் உண்மை. ஒரு மிக நேர்த்தியான, செம்மையான இலக்கணமும் வடிவமும் தான் தமிழ் மொழியை இன்று வரை மட்டும்மல்ல இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் அழியாமல் பாதுகாக்கும். தமிழில் இருந்து கிளை மொழியாக சமஸ்கிருதமும் இன்ன பிற மொழிகளும் பின்னர் தோன்றியது.
பழங்கால தமிழர்களும், தமிழ் வரலாறுகளும் கடலோடு போன பிறகு, எஞ்சியிருந்த தமிழன் வடக்கே குடியேறிஅங்கே சிந்து சமவெளி நாகரீகம் என்று அதுவரை அவன் தெற்கில் கையாண்டு வந்த பழக்க வழக்கங்களையும், அறிவியலையும் அங்கே நிறுவினான். எனது, சிந்து சமவெளி நாகரீகம் தமிழருடையதா? இது என்னப்பா புதுக் கதை விடற, அப்படினு கேட்குறவங்களுக்கு அன்பான வேண்டுகோள், கதை மட்டும் கேட்கனும்! (இது பற்றிய வரலாற்று ஆய்வுகளை, ஏற்கனவே வெளியிட்டுள்ளேன்! இதிலும் இந்திய அரசியல் விளையாண்டுள்ளது என்பதைப் பின்னர் தெளிவுபடுத்துகிறேன்)
ஆக அங்கு சிந்து சமவெளி நாகரீகம் நிருவப்பட்ட பிறகு. அங்கே ஒரு மொழிச் சிதைவு ஏற்பட்டது. நம்மூரில் மதுரையில் ஒரு மொழி, கோவையில் ஒரு மொழி, நெல்லையில் ஒரு மொழி, சென்னையில் ஒரு தனி மொழி எனப் பேசப்படுவது போல அங்கே அப்போது ஒரு மொழி தோன்றியிருக்கக் கூடும். அது சமஸ்கிருதமாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனால் அதையும் தாண்டி சமஸ்கிருதம் என்பது தமிழனின் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பே ஆகும். அது என்னப்பா கண்டுபிடிப்பு?
வேதங்களை உச்சரிக்கும் போதும், மந்திரங்களை உச்சரிக்கும் போதும் நீங்கள் கேட்டிருப்பீர்கள். அவற்றை குறிப்பிட்ட ஒரு ஒலி அளவையில் உச்சரிக்க வேண்டும். அது ஏன் அப்படி உச்சரிக்க வேண்டும் என்றால், ஒவ்வொரு உச்சரிப்பும் ஒரு வகையான அதிர்வலைகளை உருவாக்கும். அந்த அதிர்வலைகள் நமது உடம்பில் உள்ள ஹார்மோன்களையும், மூளையையும் தூண்டிவிட்டு சிறப்பாக செயல்பட வைக்கும் என்பது தற்போதிய அறிவியல் கண்டுபிடித்த கண்டுபிடிப்பே ஆகும். இந்த சமஸ்கிருத வேத ஞானங்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக வாய்வழியே தன் சந்ததிகளுக்கு கற்றுத் தரப்பட்டது. ஆக சமஸ்கிருதம் என்பது ஒரு அறிவியலாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மொழி. இதனால் தான் வேதங்கள் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டன.
இதை ஏன் கூறுகிறேன் என்றால், சமஸ்கிருதம் தோன்றி பல காலங்களுக்கு அதற்கென தனி ஒரு இலக்கணமும், எழுத்துருவும் வகுக்கப்படவில்லை என்பது தான் உண்மை. சம்ஸ்கிருத இலக்கணம் என்பது பனினி என்னும் ரிஷியினுடைய காலத்தில் தான் வகுக்கப்பட்டது, ஆனால் அதற்கு முன்னர் பல காலங்களாக சமஸ்கிருதம் இருக்கத்தான் செய்தது. சுமார் 10,000 வருடங்களுக்கு முன் இயற்றப்பட்டது ரிக் வேதம், அதன் பின் யஜுர், சாம, அதர்வன என்று ஒவ்வொரு காலகட்டத்தில் வேதங்கள் தோற்றம் பெற்றன. ரிக் வேதம் பல முறை மாற்றி அமைக்கப்படது. ஆக இவை அனைத்தும், நமக்கு முன்னால் வாழ்ந்த முன்னோர்களின் அனுபவங்களைத் தொகுத்து எழுதப்பட்ட புத்தகமே ஆகும். நான்கு வேதங்களிலுமே இவை ஒரு மத நூல்களாகவோ, அல்லது இவற்றை பின்பற்றுபவர்களை இந்துக்கலாகவோ குறிப்பிடப்படவே இல்லை. இன்னும் சொல்லப் போனால் பெரும்பாலான இந்துக்களுக்கு தெரியாத ஒரு விடயம் அவர்கள் பின்பற்றுவது சனதான தர்மம். சனதான தர்மம் என்றால் ஒன்றும் இல்லை, மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நீதி நூல். ஆனால் அது ஒரு போதும் எந்த ஒரு தனி மனிதனையும் கட்டாயப்படுத்தவில்லை. இப்படி வாழ்ந்தால் வாழ்வு நன்றாக இருக்கும் என்பது மட்டுமே அது தெளிவு படுத்துகிறது.
அப்படியா அப்படினா நாம எல்லாரும் இந்து மதம் நு சொல்றோமே அது என்னப்பா? பகவத் கீதை, இராமாயணம் தான இந்து மதத்தோட நூல்கள்?
பகவத்கீதையிலும், இராமாயணத்திலும் அவை இந்து மத நூல்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை பார்க்கவும்! இல்லவே இல்லை என்பது தான் உண்மை. நம்மிடையே உள்ள மிகப்பெரிய பிரச்சனை, யார் எது சொன்னாலும் நாம் ஏற்றுக்கொள்வோம். அது நம் கலாச்சாரம் கற்றுகொடுத்த ஒரு பழக்கம்!
சிந்து நாகரீகத்தில் வாழ்ந்த மக்கள் சிந்து மக்கள் என்றழைக்கப்பட்டனர், பின்னர் மன்னர் அலெக்ஸாண்டர் பாரதத்தின் மீது போர் தொடுக்க வரும் போது அங்கு வாழ்ந்த மக்களை இந்து என்று அழைத்தார் (காரணம் சி என்ற உச்சரிப்பு அப்போது அவரது மொழியில் இல்லை). பின்னர் இங்கு வந்த அரபு நாட்டார் ஹிந்து என்றழைக்க அங்கு வாழ்ந்தவர்களது பெயர் இந்துவாகவும், ஹிந்துவாகவும் மாறியது என்பது தான் வரலாற்று உண்மை. இதுவே பாரதம், பின்னாளில் இருந்து இன்று வரை இந்தியா என்றழைக்கப்பட காரணமானதும்.
இப்போ சொல்லுங்க இந்து மதம் நு ஒன்னு இருக்கா? சொல்லப் போனால் முகலாய படையெடுப்புக்கு முன்னர் மதம் என்ற ஒன்று உலகிலேயே இல்லை என்பது தான் உண்மை.
நான் ஏற்கனவே கூறியது போல உலகின் ஒரு பகுதியில் வாழ்ந்த தமிழன், தன் அடுக்கடுக்கான அனுபவங்களையும், அறிவியலையும் கொண்டு ஒரு மாபெரும் கலாச்சாரத்தை நிறுவினான். அவனது வாழ்வில் நிகழ்ந்த ஒவ்வொரு குறிப்புகளையும் தனது வருங்கால சந்ததிகளுக்கு கொண்டு செல்ல அதைப் பாதுகாத்தான். கலாச்சாரத்தை நிறுவியது மட்டும் அல்லாமல் பரந்த பூவுலகில் பரவவும் ஆரம்பித்தான். அப்படி பரவிய போது அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா, எகிப்து போன்ற தொலை தேசங்களுக்குச் சென்றான். அப்படிச் சென்றவனுக்கு அவன் இங்கு முன்னர் வாழ்ந்தது போன்ற சூழல் அமையவில்லை. உதாரணத்திற்கு இங்கு இருக்கும் தட்ப வெட்பம், இயற்கை சூழல் வேறு, அமெரிக்காவில் இருக்கும் இயற்கை சூழல் வேறு. அங்கு போய் இங்கு போல் தான் அங்கும் வாழ்வேன் என்று மூடத்தனமாக பேசிக்கொண்டு அவன் துன்பப்படவில்லை. அங்கு சென்றதும், அங்கு இருந்த தட்ப வெட்ப நிலை, இயற்கை சூழல், மண்வளம் ஆகியவற்றிற்க்கு ஏற்றாவாறு கலாச்சாரம், தொழில், உணவு பழக்கம், விவசாயம் ஆகியவற்றை உருவாக்கினான். இப்படி உருவானது தான் உலக கலாச்சாரம். ஆம் நண்பர்களே, உலக கலாச்சாரங்களில் ஒன்றோடு ஒன்றிர்க்கு பெரும் தொடர்பு இருக்கிறது.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இங்கிருந்து மெக்ஸிகோ, ஜாவா, கம்போடியா, நியூசிலாந்து, தென் அமெரிக்கா, எகிப்து, சீனா, கொரியா என உலகின் அனைத்து மூளை முடுக்குகளிலும் சென்று தமிழன் வாழ்ந்தான். அங்கு தன் கலாச்சாரம் நிறுவப்பட்டு, பின்னர் அதில் உள்ள சில சிக்கல்கள் படிப்படியாக களையப்பட்டு, மாற்றியமைக்கப்பட்டு உருவானது தான் மற்ற நாகரீகங்களும், கலாச்சாரங்களும்.
உதாரணமாக உலக மொழிகள் பெரும்பாலானவற்றில் தமிழ் மொழி கலப்பு உள்ளது. இங்கிருந்து பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த தென் அமெரிக்க மக்கள் படகுகளை “கட்டுமரம்” என்று தான் அழைத்தார்கள். கொரிய மொழியின் நேரடித் தாய் மொழி தமிழ்! சமஸ்கிருதம், மலையாளம், கண்ணடம், தெலுங்கு போன்ற இந்திய மொழிகளின் தாய் மொழி, தமிழ்! இது தவிர லத்தின், பிரஞ்சு, அரேபிய மற்றும் கிரேக்க மொழிகளில் தமிழ் மொழியின் ஆதிக்கம் உள்ளது. உதாரணமாக தமிழ் மொழியில் பசுவை “கோ” என்றழைப்பதுண்டு. இன்றுவரை அத்துனை மொழிகளிலும் பசுவை “கோ”, என்றும் “கௌ” என்றும் தான் அழைக்கிறார்கள். மேலும் தமிழ் மொழிச் சொற்கள் பலவற்றின் முன் “அத்”, “ஸ்” என்ற சொற்கள் சேர்க்கப்பட்டு திரிந்து தான் அரேபிய மொழியாகவும், மேற்கத்திய மொழிகளாகவும் உருப்பெற்றது. இதற்கு காரணம் அங்கிருந்த குளிர்ந்த மற்றும் மிக மிஞ்சிய சூடான தட்ப் வெட்ப மாற்றங்களே. ஒரே நாட்டிற்குள்ளே பல வகையான தமிழ் உலாவும் போது, உலகளவில் செல்லும் போது அது எவ்வகை மாற்றத்தைக் கண்டிருக்கும் என்று நீங்களே சிந்த்தித்துப் பாருங்கள்!
இப்படி ஆங்காங்கே குடியேறிய மக்கள் தங்களுக்கென ஒரு கலாச்சசாரத்தை நிறுவினார்கள். பின்னர் உலகம் முழுவதும் மக்கள் தொகை மட மடவென உயர்ந்தது. நதிப்படுகைகளில் அமைந்த நகரங்களில் மக்கள் அடர்த்தி உயர்ந்தது. மக்கள் அடர்த்தி ஓரிடத்தில் உயரும் போது அங்கு வாழ்வாதாரத்திற்கான போராட்டம் தொடங்கும். இதை ஆங்கிலத்தில் “Struggle for Existence” என்று சொல்லுவார்கள். உலகம் தோன்றியது முதலே உலகின் பல்வேறு இடங்கள் பலவகை இயற்கை மாற்றங்கள், தட்ப வெட்ப மாறுதல்களைச் சந்தித்து இருக்கிறது. இப்படி இன்னல்கள் அதிகரிக்கும் போது வாழ்வாதாரத்திர்க்கான போராட்டம் அதிகரிக்கும். இப்படி அதிகரிக்கும் போது மக்கள் சுலபமாக ஒழுங்கீனச் செயல்களிலும், இறக்கமற்ற செயல்களிலும் ஈடுபடுவது நிதர்சனம். ஆக இந்த சூழ்னிலையில் அவர்களுக்கு விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். அப்படி வகுக்கப்படும் விதிமுறைகளை நீங்களோ, நானோ சென்று சொன்னால் அதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆக அப்போது தோன்றியவர்கள் (தோன்றியவர்களா அல்லது தோற்றுவிக்கப்பட்டவர்களா என எடுத்துக்கொள்வது உங்கள் மன நிலையைப் பொருத்தது) கடவுள்கள். நம்மை எல்லாம் பெற்றவன் சொன்னால் நாம் நிச்சயமாக கேட்க கடமைப்பட்டிருக்கிறோம்.
ஆக மனிதன் இப்படித் தான் ஒழுக்கத்துடனும், நீதியுடனும் வாழ வேண்டும் என்று வரையருத்து அதை மக்களிடம் கொண்டு சென்று கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தவர்கள் கடவுள்கள். இவர்கள் சொன்னதை மக்கள் பின்பற்றிய வரை எந்த ஒரு பிரச்சனையும் எழவில்லை. இதற்குள் ஆய்வுகளைத் தொடங்கும் போது தான் பிரச்சனை எழும்புகிறது. இப்படி ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கடவுள்கள் தோற்றம் பெற்றன. நான் இங்கே தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு மிக முக்கிய விடயம் இருக்கிறது. மதம் என்பது வழிபாடு சார்ந்த ஒன்றே கிடையாது.
முருகனை வழிபடுவதால் இந்து என்றோ, கிறித்துவை வழிபடுவதால் கிறித்துவர் என்றோ அல்லது அல்லாவை வழிபடுவதால் இஸ்லாமியர் என்றோ கூறுவது தவறு. நமக்கு புரியும் விதத்தில் சொல்ல வேண்டுமானால், சில நூற்றாண்டுகளுக்கு முன் இந்தியாவில் சைவம், வைஷ்ணவம் என்று இரு பிரிவுகள் இருந்தது. இவ்விரண்டும் பல நூற்றாண்டுகளாக எலியும், பூனையுமாக இருந்த போதும் அவர்கள் அனைவருமே இந்து மதத்தவர்களாகவே குறிப்பிடப்பட்டார்கள். இதே போல கிறித்துவத்திலும் வழிபாட்டுக் கடவுள்கள் வெவ்வேறாக இருந்தாலும் (இயேசு கிறிஸ்து, மரியா அன்னை) அவர்கள் அனைவரும் கிறித்துவர்களாகவே பார்க்கப்படுகிறார்கள். ஆக மதம் என்பது வழிபாடு சம்பந்தப்பட்டது அல்ல. உலகின் தென் கிழக்கு நாகரீகம், பாரம்பரியத்தைப் பின்பற்றி வாழ்ந்த மக்கள் இந்துக்கள். அதே போல மேற்கில் முளைத்த நாகரீகம், மற்றும் பாரம்பரியத்தைப் பின்பற்றுபவர்கள் கிறித்துவர்கள் ஆக்கப்பட்டனர். அப்படியானால் மதம் என்பது வாழ்விடம் சார்ந்ததே தவிர, வழிபடு சார்ந்தது கிடையாது.
கலாச்சாரம் என்பதே வாழ்விடம் சார்ந்தது, மதம் எப்படி வாழ்விடம் சார்ந்ததாகும் என்ற கேள்வி எழுந்தால். கலாச்சாரம் தான் பின் நாளில் மதமாக மாற்றியமைக்கப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் மதம் என்ற பாகுபாடு வந்தது மொகலாய படையெடுப்பின் போது தான் என்று நான் சொன்னேன். ஆமாம், மொகலாய படையெடுப்பின் போது இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள் இங்கு ஆட்சியமைக்க ஆரம்பித்தனர். அப்போது அவர்களால் அவர்கள் பழகிய கலாச்சாரத்தை மாற்ற முடியவில்லை. எனவே அவர்கள் முன்னர் கொண்ட ஆடைகள், மொழி, அறிவியல், பண்பாடு, பழக்கவழக்கங்களைத் தொடர்ந்தனர். அவர்கள் தொடர்ந்தது மட்டுமல்லாமல் அதை இங்கிருந்தோரிடமும் பழக்கினர். எப்படி வெள்ளையர்கள் இங்கு வந்து தமிழ் கற்க மறுத்து ஆங்கிலம் கற்பித்தார்களோ, அதே போல நமது கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் அவர்களது கலாச்சாரத்தை ஊன்றினார்கள். இது தொடர்ந்து கொண்டிருந்த போது மக்களிடயே இரு பிரிவினர்கள் உருவானார்கள். ஒன்று தமிழ் பாரம்பரியம் கொண்டவர்கள், மற்றவர்கள் வெளியில் இருந்து கொண்டுவரப்பட்ட பாரம்பரியத்தைப் பின்பற்றுபவர்கள். அப்போது தான் இந்த பிரிவினை, கலாச்சாரம் என்ற பெயரில் இருந்து மதம் என்ற பெயர் கொள்ள ஆரம்பித்தது. இது பின்னர் மூன்று, நான்கு என வளர்ந்துகொண்டே போனது. மிக எளிதாக புரிந்து கொள்ள வேண்டுமானால், நாம் நமது தாய், தந்தை, பிள்ளைகள், மனையாள் என ஒரு குடும்பமாக வாழ்ந்து வரும் போது அங்கே ஒரு விருந்தாளி வந்து தங்குகிறார் என்றால் எத்தனை நாளுக்கு நீங்கள் அவரை உபசரிப்பீர்கள். நான்கு நாட்களுக்கு அப்பால் அங்கே அவருக்கு கிடைக்கும் மரியாதையே வேறு. காரணம் அவர் அந்நியர். ஏன்? ஏனென்றால் அவர் என் குடும்பத்தில் ஒருவராக இல்லை. ஆக அந்நியம் என்பது நமக்கு எப்போது தோன்றுகிறது வெளியில் இருந்து ஏதொ ஒன்று வரும் போது. அது இங்கு இல்லாத வரை அதைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை. ஆக வேறு ஒரு கலாச்சாரம் வந்து இன்னொரு கலாச்சாரத்தில் நுழையும் வரையில் மதம் என்ற ஒன்றும், பிரிவினை என்ற ஒன்றும் இல்லை.
மிகக் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் போது தான் இதன் வெளிப்பாடு அதிகமாக பிரதிபளித்தது. இந்தியர்கள் இந்துக்களாக சித்தரிக்கப்படும் போது அவர்களுக்கு மத நூலாக எதை நிர்ணயிப்பது என்ற கேள்வி எழும்புகையிலேதான் பகவத்கீதையும், இராமாயணமும் முன் நிருத்தப்பட்டது. அதற்கு முன்னர் அவை வெறும் நீதி நூல்களே தவிர மத நூல்களாக சித்தரிக்கப்படவில்லை. இன்றும் கூட இந்து மத நூல்களாக சித்தரிக்கப்படும் அனைத்து வேத, இதிகாச நூல்களிலும் ஆய்வு செய்து பாருங்கள். அவற்றுள் அவை மத நூல்கள், அவற்றை கடைபிடிப்பவர்கள் ஹிந்துக்கள் என்று எங்கேயாவது குறிப்பு உள்ளதா என தேடிப் பாருங்கள். இப்படித் தான் மதம் என்பது கலாச்சாரம் என்ற பார்வையில் இருந்து உணர்வாக, கௌரவமாக, பாரம்பரியமாக, பிரிவினையாக, கடவுள் சம்மந்தமானதாக படிப்படியாக முன் நிருத்தப்பட்டது.
இந்து மதம் மட்டும் அல்ல, ஏனைய அனைத்து மதங்களுமே இப்படித் தான் அதன் உண்மை நிலையை இழந்தது. விவிலியம் சொல்லுவதெல்லாம் மனிதன் எப்படி மனித நேயத்தோடு வாழ வேண்டும் என்பதே. அது ஒரு நீதி நூலே தவிர மத நூல் அல்ல. இதே போலத் தான் இஸ்லாமியம், பௌத்தம், சீக்கியம் மற்றும் பிற மதங்களும் அவற்றின் நூல்களும்.
இந்த நூல்கள் மட்டும் அல்லாமல், பழக்க வழக்கங்கள் வாயிலாக அறிவியலையும் கற்பித்திருக்கின்றன இந்த கலாச்சாரங்கள். மருத்துவம், அறிவியல், நடைமுறை பழக்க வழக்கங்கள் ஆகியவற்றையும் இவற்றோடு சேர்த்து நீதியையும் இணைத்து கடவுள் என்னும் ஊடகம் வாயிலாக கற்றுக்கொடுத்தனர். இன்றைக்கு கேலிக்கூத்தாகத் தெரியும் பழக்கவழக்கங்கள், வழிபாடுகள், திருவிழாக்கள் அனைத்திலும் அறிவியல் உண்டு. உலகெங்கும் நமக்கு முன்னர் வாழ்ந்த அத்துனை பெரியோரும் நம்மை விடப் புத்திசாலிகள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு எதை அறிவியலாக போதிக்க வேண்டும், ஆன்மிகமாக போதிக்க வேண்டும், அடக்குமுறையாக போதிக்க வேண்டும் என்று நன்றாகத் தெரிந்திருந்த்தது. வளர்ச்சி என்பது எல்லாத்தரப்பு மக்களையும் சென்றடைவதில் தான் அதன் செயலாக்கத் திறமை உள்ளது. அதை எந்த வாயிலாகவும் தெரிவிக்கலாம். ஆக எந்த விடயத்திற்கு எந்த ஆயுதத்தைக் கையால வேண்டும் என்று தெளிவாக தெரிந்து வைத்திருந்த நம் முன்னோர்களின் அறிவை நம்மால் புரிய முடியவில்லை என்றாலும் சிறுமை படுத்தாமல் இருக்க முயற்சிக்க வேண்டும். நம் முன்னோர்கள் என்று குறிப்பிடப்படுவது எல்லாமே அனைவரையுமே குறிக்கும். அது இந்து மதப் பெரியோர்களாகட்டும், கிறித்துவ மதப் பெரியோர்களாகட்டும், இஸ்லாமிய மதப் பெரியோர்களாகட்டும், அல்லது பிற மதப் பெரியோர்களாகட்டும். ஆக நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டியது எல்லாம் உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் தோன்றிய கலாச்சாரங்கள் நாளடைவில் மதங்களாக கற்ப்பிக்கப்பட்டுள்ளன. மனிதர்கள் வாழ்ந்த இயற்கை சூழலுக்கும், தட்ப வெட்ப நிலைக்கும் ஏற்றவாறு அது மாறுபட்டு இருந்தது. இவை அனைத்தும் பெரும்பாலும் பல நூற்றாண்டுகளாக பார்த்துப் பார்த்து வடிவமைக்கப்பட்டதால் இவைகளுக்கிடையே மிகப் பெரிய வித்தியாசம் தோன்றியது. உலகின் ஒரு காலகட்டத்தில் ஒரு கலாச்சாரத்தைப் பின்பற்றியவர் மற்ற கலாச்சார இடங்களுக்குள் நுழையும் போது அவர்கள் அதற்கு ஒத்துப்போக முடியாமல் தங்களது கலாச்சாரத்தை நிறுவினார்கள். இதை அங்கே இருப்பவர்கள் எதிர்க்கும் போது தான் மதம் என்ற பிரிவினை உண்டானது.
ஆக நாம் வசிக்கும் இடத்திற்கும், வாழ்விடத்திற்கும், இயற்கைக்கும் ஏற்றவாரு நமது பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ளவதில் தவறு ஒன்றும் இல்லை. அது தான் அறிவுடைமை ஆகும். -5 டிகிரி குளிர் பிரதேசத்திற்கு சென்று வேட்டி கட்டுவது என்னுடைய கலாச்சாரம் என்று சொல்ல முடியாது. மத நம்பிக்கையை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. உலகின் எந்த மூளையில் நீங்கள் இருந்தாலும் உங்கள் விருப்பக் கடவுளை நீங்கள் வணங்கலாம். ஆனால் மதத்தை நீங்கள் மற்றவர் மீது திணிப்பது அர்த்தம் இல்லாதது.
மத போதனைகளை அறிவியலாக பார்க்கத் தெரியாததே மனித சமுதாயத்தைப் பின்னோக்கித் தள்ளிக்கொண்டு போக காரணம். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கட்டிக்காக்கப்பட்ட மதங்களின் அடையாளம் இன்று ஆடைகளிலும், சங்கிலிகளிலும், பெயர்களிலுமே தென்படுகின்றன. அவற்றைப் பற்றி புரிந்து கொள்ளாத மக்கள் அவற்றைப் பற்றி அவதூறு பேசுவதும், ஆயுதம் ஆக்குவதும் எப்படி நியாயம் ஆகும்! ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு!

Copy from :
https://www.facebook.com/photo.php?fbid=169975776519635&set=a.107422726108274.9066.100005216409305&type=1

அர்த்தமுள்ள உருவ வழிபாடு

மணக்கால் அய்யம்பேட்டை | 5:53 PM | Best Blogger Tips

பழைய பதிவு என்றாலும் உண்மையை மறப்பது மனித இனம் ஆனால் அதை மீண்டும் மீண்டும் நினைவூட்டுவது எங்கள் ஹிந்து இனம்

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்???
(ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)

இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.

எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.:
பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.

கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.

இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.

நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.
இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.

அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.

இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.

அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.

இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.

இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.

இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.

கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.
கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.

நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.
அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.

கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.

அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.

அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.

இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.

சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி.
கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி.

வயிற்றில் புண் இருந்தால் வாய் புண் வருமா?

மணக்கால் அய்யம்பேட்டை | 5:36 PM | Best Blogger Tips
வயிற்றில் புண் இருந்தால் வாய் புண் வருமா?

எண்டோஸ்கோபி சிகிச்சையைப்பற்றிய கேள்விகளுக்கு கோவை என்.ஜி. மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் லேபராஸ்கோபி மற்றும் எண்டோஸ்கோபி சிகிச்சை நிபுணர் டாக்டர். மனோகரன் பதில் அளிக்கிறார்.

எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக எண்டோஸ்கோபி பரிசோதனை செய்யலாமா? அல்லது பிரச்னை எதுவும் வந்த பின்னர் பரிசோதனை செய்யவேண்டுமா?

வயிற்று சம்பந்தமாக ஏதாவது தொந்தரவு இருந்தால் மட்டும் எண்டோஸ்கோபி பரிசோதனை செய்து பார்த்தால் போதுமானது.

எனக்கு வெளி மூலம் உள்ளது. இதுவரை எந்த சிகிச்சைக்கும் செல்லவில்லை. மலம் கழிப்பதிலும் சிக்கல் இல்லை. நான் கொலொனோஸ்கோபி பரிசோதனை செய்யவேண்டுமா?

வெளி மூலம் என்பது உள்ளிருந்து வெளியே தள்ளப்படுவதாகும். ஆகவே, உள்ளே பெருங்குடல் பகுதியில் ஏதேனும் பிரச்னை இருக்கக்கூடும். எனவே, கொலொனோஸ்கோபி பரிசோதனை செய்து பார்ப்பது நல்லது.

நான் வீட்டில் சிக்கன் சாப்பிட்ட நாட்களில் வயிறு எரிச்சல் ஏற்படுகிறது. காரணம் என்ன?

கோழி இறைச்சி பழையதாக இருக்கலாம். அல்லது எண்ணெய் அதிகமாக உபயோகித்து பொரித்திருக்கலாம். அல்லது காரம் அளவிற்கதிகமாக சேர்த்திருக்கலாம்.

நான் ஒரு ஓட்டலில் சாப்பிட்ட மறுநாள் வயிறு வலிக்கிறது. என்னிடம் கோளாறா? அல்லது ஓட்டல் உணவில் கோளாறா?

ஓட்டல் உணவில்தான் பிரச்னை. வீட்டில் சமைக்கும்போது சுத்தமாக சாதாரண உணவுப்பொருட்கள் மற்றும் அதனுடன் சேர்க்கும் பொருட்களும் எண்ணெய் வகைகளும் சாதாரணமானதாகவும் சுத்தமானதாகவும் இருக்கும். மற்றும் பக்குவமாகவும் சமைப்பார்கள். ஆனால் ஓட்டல்களில் சுவையை அதிகரிப்பதற்காக நாம் உபயோகிக்கும் பொருட்களுக்கு வழக்கத்திற்கு மாறாக உணவுப்பொருட்களை உபயோகிக்கிறார்கள். எண்ணெய், வேதிப்பொருட்கள் கலந்த உணவுப்பொருட்கள், பழைய இறைச்சி, அளவிற்கதிகமான காரம் போன்றவற்றை உபயோகிப்பதால் நாவிற்கு நல்ல சுவையாக உள்ளது. அந்த பதார்த்தத்திற்கு சிறப்பான பெயர்களையும் சூட்டிவிடுகிறார்கள். ஆனால் வயிற்றிற்கோ ஆபத்தை விளைவிக்கிறது.

நான் காலை உணவுக்கு முன் குடிநீர் அரை லிட்டர் குடிக்கிறேன், பின்பு ஒரு லிட்டர், மதிய உணவுக்கு பின்னர் குடிப்பதில்லை. மீண்டும் காலையில்தான் குடிக்கிறேன். நான் குடிநீர் குடிக்கும்முறை சரிதானா?

எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்களோ அவ்வளவு நல்லது. ஒவ்வொரு உணவிற்குப் பின்னும் தண்ணீர் அருந்துவது நல்லது. இரவில் உறங்குவதற்கு முன் தண்ணீரை அளவிற்கதிகமாக குடிப்பதால் சிறுநீர் கழிப்பதற்காக தூக்கம் கெட்டு எழுந்திருக்க நேரிடும்.

இரைப்பை கேன்சர் என்றால் என்ன? ஏன் ஏற்படுகிறது? அதை தவிர்க்கும் வழிமுறைகள் உண்டா?

அதிகமான ஆல்கஹால், புகைப்பிடிக்கும் பழக்கம், அளவிற்கதிகமாக காரம், துரித உணவை உட்கொள்வதாலும் மற்றும் மரபணு மூலமாகவும் இரைப்பையில் கேன்சர் வர வாய்ப்பிருக்கிறது.

நான் தினசரி காலையில் ஒரு கப் தயிர் கலந்து ஓட்ஸ் கஞ்சி குடிக்கிறேன். இது வயிறு, குடலுக்கு நல்லதா? இந்த உணவு முறையால் பாதிப்பு ஏதும் உண்டா?

தினசரி உணவில் தயிர் சேர்த்துக்கொள்வது நல்லது. காரம் கலந்த உணவை எடுத்துக்கொள்ளும்போது தயிர் சேர்த்துக்கொள்வதால் காரத்தை சரிகட்டிவிடும். எனவே, தயிர் சேர்த்துக்கொள்வது நல்லது.

எனக்கு வயது 16. கடந்த 2 ஆண்டுகளாக 2 மாதத்திற்கொருமுறை வாயில், நாக்கில் புண் ஏற்படுகிறது. சில நாட்களுக்கு பின்னர் தானாக சரியாகிறது. வயிற்றில் புண் இருந்தால் வாயில் புண் வரும் என்கிறார்கள் உண்மையா? இதற்கு சிகிச்சை என்ன?

வயிற்றில் புண் இருந்தால் வாயில் புண் வர வாய்ப்புண்டு. மேலும், வைட்டமின் குறைபாடிருந்தாலும் வாயில் புண் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே, எண்டோஸ்கோபி மூலமாக வயிற்றை பரிசோதித்துக்கொள்வது நல்லது.

ஒரு மருத்துவமனையில் 3 முறை எண்டோஸ்கோபி செய்தேன், அதன்பிறகு உள்ளே எரிச்சல் தெரிகிறது. இதற்கு காரணம் அடிக்கடி எண்டோஸ்கோபி செய்ததன் காரணமாகவா?

எண்டோஸ்கோபி கருவியானது மிகவும் மெல்லிய வளைந்துகொடுக்கக்கூடிய அமைப்பை கொண்டிருக்கும். இதனால் வயிற்றின் பக்கவாட்டில் கீறல் ஏற்படாது. மேலும் நன்கு பயிற்சிபெற்ற மருத்துவ நிபுனர்கள்தான் இந்த சிகிச்சையை செய்கிறார்கள். எனவே, எத்தனை தடவை எண்டோஸ்கோபி செய்தாலும் பிரச்னை இல்லை. உங்களுக்கு உள்ள வயிற்று எரிச்சல் பிரச்னைக்கு வேறு ஏதேனும் காரணமாக இருக்கலாம். உடனே, மருத்துவரை அனுகுவது நல்லது.

Via FB ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.

வயிற்றை சுத்தமாக்கும் உணவுகள்..!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:15 PM | | Best Blogger Tips
வயிற்றை சுத்தமாக்கும் உணவுகள்..! 

அஜீரணப் பிரச்சினை என்பது இன்று அதிகமான பேரை அவதிக்குள்ளாக்குகிறது. உண்ணும் உணவு ஒழுங்காக செரிக்காவிட்டால் உடல்நலத்துக்குப் பாதிப்பு ஏற்படும். வயிற்று வலி, புளித்த ஏப்பம் போன்றவை ஏற்பட்டு சிரமத்தைத் தரும். 

எனவே வயிறு சுத்தம் என்பது அவசியம். அப்போது தான் செரிமான மண்டலத்தின் இயக்கம் சிறப்பாக இருக்கும். பச்சைக் காய்கறிகள் வயிற்றைச் சுத்தமாக்கும். கீரைகள், செலரி, புராக்கோலி, பீன்ஸ் போன்ற உணவுகள் எளிதில் ஜீரணமாகும். 

அதேபோல கேரட், வெங் காயம், பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு போன்ற உயர்தர கார்போஹைட்ரேட் உணவுகள் வயிற்றுக்கு ஏற்றவை. புளிப்புச் சுவையுள்ள சிட்ரஸ் பழங்கள், செரிமான மண்டலத்தை நல்ல நிலையில் வைக்கும். பழங்களில் உள்ள நார்ச்சத்து வயிற்றுக்கு ஏற்றது. 

எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்றவை செரிமான மண்டலத்துக்கு ஏற்ற உணவுகள். அதே போல் தினசரி இரண்டு வாழைப்பழம் சாப்பிடுவது மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். தானிய உணவுகள், கோதுமை ரொட்டி போன்றவை எளிதில் ஜீரணமாகும். 

தேவையற்ற கழிவுகள் வெளியேற உதவும். அதே போல, தினசரி உண்ணும் உணவுகள் எளிதில் செரிப்பதற்கு நிறைய தண்ணீர் பருக வேண்டும். பால், பழரசங்களையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மூலம் செரிமான மண்டல கோளாறுகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். 

சத்தான உணவு சாப்பிடுவதன் மூலம் உடம்பில் தேவையற்ற கொழுப்பு சேர்வது தடுக்கப்படும். தொப்பை ஏற்படாது. வயிறு தட்டையாக இருக்கும். வாயில் வைக்கும் உணவில் நாம் கவனமாக இருந்தால், வயிற்றில் பிரச்சினை ஏற்படாது!

மகாலட்சுமி வாசம் செய்யும் இடம்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:00 PM | Best Blogger Tips
மகாலட்சுமி வாசம் செய்யும் இடம்:
-----------------------------------------------
புதுமனை கட்டி, காம்பவுண்டு சுவர் எடுத்து, வாசல் பக்கத்து சுவற்றில் சலவைக் கல்லில், "லட்சுமி நிவாஸ்' என்று எழுதிய பெயர் பலகை பதிக்கப்பட்டு விட்டது. அதாவது, அந்த வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்று அதற்கு அர்த்தம். ஆனால், மகாலட்சுமி தான் வசிக்கும் இடங்களையும், வசிக்காத இடங்களையும் பற்றி ருக்மணியிடம் சொன்னதாக ஒரு கதை உள்ளது. அந்த கதையை நாமும் தெரிந்து கொள்வோமே!
லட்சுமிதேவி கூறுகிறாள்: அழகும், தைரியமும், வேலைத் திறமையுள்ளோர், வேலை செய்து கொண்டிருப்போர், கோபமில்லாதவர், தெய்வ பக்தி உள்ளோர், நன்றி மறவாதோர், புலன்களை அடக்கியோர், சத்வ குணமுள்ளோரிடமும் நான் வசிக்கிறேன்.
பயனை கருதாமல், தர்மத்தை அனுஷ்டிப்போர், தர்மம் தெரிந்து, அதன்படி நடப்போர், காலத்தை வீணாக்காதோர், தியானம், தத்துவ ஞானத்தை விரும்புவோர் மற்றும் பசுக்கள், வேத பிராமணர்களிடம், அன்பும், ஆதரவுமாக உள்ளவர்களிடமும் நான் வசிக்கிறேன். 
பக்தியுள்ளவர்கள் வீடுகளிலும், வீட்டையும், வீட்டிலுள்ள பாத்திரங்களையும் சுத்தமாக வைத்து, பசுக்களைப் போஷித்து, தான்யங்களை சிதறாமல் வைத்துக் கொள்ளும் வீடுகளிலும் நான் வசிக்கிறேன்.
பெரியோர் களுக்குப் பணிவிடை செய் தும் அடக்கமும், பொறுமையும், கடமை உணர்வும், தர்மத்தின் சிரத்தையும் உள்ள பெண்களிடம் நான் வசிக்கிறேன். 

பண்டங்களை வீணடிப்போர், கோபமுள்ளோர், தேவதைகள், பெரியோர்கள், வேத பிராமணர் களை பூஜிக்காத, மரியாதை செய்யாத பெண்களிட மும், கணவனுக்கு எதிராகவோ, விரோத மாகவோ இருக்கும் பெண்களிடமும் நான் வசிப்பதில்லை.
எப்போதும் படுத்திருப்பவளும், சதா அழுகையும், துக்கமும், தூக்கமும் உள்ள பெண்களிடமும், நான் வசிப்பதில்லை. வாசற்படியில் தலை வைத்து தூங்குகிற வீடுகளிலும், நடக்கும் போது "தொம், தொம்'மென்று பூமி அதிர நடக்கும் பெண்களின் இல்லங் களிலும் நான் வசிப்பதில்லை.

வாகனங்களிடத்தும், ஆபரணங்களிடத்தும், மேகங்களிடத்தும், தாமரை, அதன் கொடிகளிடத்தும், அரசர்களின் சிம்மாசனத்திலும், அன்னங்களும், அன்றில் கூவுதலினுள்ள தடாகங்களிலும், சித்தர்கள், சாதுக்களால் அடையப்பட்ட ஜலம் நிரம்பியும், சிம்மங்கள், யானைகளால் கலக்கப் பட்ட நதிகளிலும் நான் வசிக்கிறேன். யானை, ரிஷபம், அரசன், சிம்மாசனம், சாதுக்கள் இவர்களிடம் வசிக்கிறேன்.
எந்த வீடுகளில் தினமும் அக்னிஹோத்ரம் செய்யப் பட்டு தேவதா பூஜை, அதிதி பூஜை வேதாத்யானம் செய்யப்படுகிறதோ அவ் வீடுகளிலும், நீதி தவறாத சத்ரியர், விவசாயத்தில் கருத்துள்ளோரிடமும் வசிக்கிறேன். என்னிடத்தில் எவர் பக்தியுடன் இருக்கிறாரோ, அவர் புண்ணியம், பொருள், இன்பம் எல்லாவற்றையும் பெறுகிறார், என்கிறார்.
இதையெல்லாம் கவனமாக படித்துப் பார்த்து, லட்சுமிதேவியின் அருள் பெறவும், நம் வீடுகளில் அவள் வாசம் செய்யவும் முயற்சி செய்யலாம் வெறும் போர்டு போட்டு விட்டால் அவள் வந்து விடுவாளா? 

நன்றி: தினமலர்

உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:59 PM | Best Blogger Tips
உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில்;
-------------------------------------------------
திருச்செந்தூர்-கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுயம்புலிங்க நாதர் திருக்கோயில் மிக அருமை வாய்ந்த தலமாகும்.முதன்மைக் கடவுளான சிவன் இங்கு சுயம்புமூர்த்தியாக லிங்கவடிவில் உள்ளதால் இப்பெயர் வழங்கப்படுகிறது.

இயற்கை எழில்மிக்க கடற்கரையோரமாக இக்கோவில் உள்ளது. இங்கு மாதியான் ரம்மியமிக்க கடற்கரையை நான் எங்கும் கண்டதில்லை.இங்கு சிவன் சுயம்பு லிங்கோத்பவராக எழுந்தருளியுள்ளார். கடலோரத்தில் நான்கு நன்னீர் ஊற்றுக்கள் அமைந்துள்ளன. இவற்றிலிருந்து சுயம்புநாதருக்கு அபிஷேகத்திற்குத் தண்ணீர் கொண்டு செல்லப்படுவது மிகசிறப்பு வாய்ந்ததாகும்.

மேலும் மனதை கொள்ளை கொள்ளும் கடற்கரை பார்த்தபடி சுயம்புலிங்கநாதர் பக்தர்களுக்கு அருள்பாவிக்கிறார்.இந்த கடவுளை வழிபடுவோருக்கு உள்ளமும்,எண்ணமும் தெளிவும்,புத்துணர்வும் கிடைக்கி்றது.

சிவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளதும், மார்கழி மாதம் முழுக்க காலை 7 மணிக்கு சூரிய ஒளி சுவாமி மீது விழுவதும், சுவாமியின் அபிஷேகத்துத் தண்ணீர் எடுக்கப்படும் 4 நன்னீர் ஊற்றுகளும் கடல் ஓரத்தில் அமைந்துள்ளதுள்ளதும் மிகுந்த சிறப்பாக கருதப்படுகிறது.

பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்ரமணியன்
 
பெண்கள் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:55 PM | Best Blogger Tips
பெண்கள் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்:-

முதுமைச்சுருக்கமின்றி இளமையழகுடன் திகழ உண்ணவேண்டிய அழகான உணவுகள்..!

* வைட்டமின் ஈ சத்து நிறைந்த பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்பு போன்ற கொட்டை வகைகள், விதைவகைகளான வேர்க்கடலை மொச்சைப் பயறு வகைகளை அழகிய உணவு வகைகளாக உங்கள் அன்றாட உணவில் அளவோடு சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் உங்கள் மேனி முதுமைச் சுருக்கமின்றி இளமையுடன் திகழும்!

* உங்கள் உடம்பின் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும் ஹை டென்ஸிட்டி லைபோபுரோட்டீன் (ஹெச்.டி.எல்) சத்து நிறைந்த ஆலிவ் எண்ணெய் உங்கள் மேனியை உலர விடாமல் ஈரப்பசையுடன் மின்னிப்பிரகாசிக்கச் செய்யும்!

* ஒமேகா 3 கொழுப்பு அமிலச்சத்து, வைட்டமின் பி 12, புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த மீன் மற்றும் மீன் எண்ணெய் அழகிய உணவு வகைகளில் முதன்மை உணவாகத் திகழ்கிறது! ஒமேகா 3 கொழுப்பு அமிலச்சத்து உங்கள் தலையின் மேற்பகுதியை என்றென்றும் ஈரப்பசையுடன் வளமாகத்திகழச்செய்து தலைமுடி செழிப்பாக வளர உதவுகிறது.

* நாள் முழுக்க வேலை செய்தால் கண்கள் சோர்ந்து போகும்.அப்போது வைட்டமின் ஏ சத்து நிறைந்த கேரட்டினை உட்கொள்ளுங்கள். சோர்வு நீங்கி கண்கள் புத்தொளி பெறும். சுறுசுறுப்படைவீர்கள்!

* கந்தகம் மற்றும் சிலிகான் சத்து நிறைந்த பிராக்கோலி இலைகள் நக வளர்ச்சிக்கு மட்டுமன்றி மன அமைதிக்கும் உகந்தது. பிராக்கோலி மர இலைகள் கிடைக்காவிடில் அதற்கு இணையான காலிபிளவர் மற்றும் பீட்ரூட் இலைகள் நக வளர்ச்சிக்கு பேருதவி புரிகின்றன.

* வைட்டமின் டி சத்து நிறைந்த பால், கால்சியம் சத்து நிறைந்த பச்சை கீரை வகைகள், பாஸ்பரஸ் சத்து நிறைந்த பூசணி விதை போன்றவைகளும் அழகிய உணவுப் பட்டியலில் இடம் பெறுகிறது. அவை எலும்பு வளர்ச்சிக்குத் துணைபுரிந்து, ஆஸ்ட்டியோபீனியா என்ற எலும்புத்தளர்ச்சி மற்றும் வலுவின்மை என்கிற நோயிலிருந்து காப்பாற்றுகிறது. இந்த உணவு வகைகளை நம் அன்றாட உணவில் அளவோடு உட்கொண்டால் அழகாக வாழலாம்!

Thanks to  Karthikeyan Mathan

வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில் எச்‌ஆர்‌டி ,எம்‌இ‌ஏ,தூதரக அனுமதி பெறுவது எப்படி?

மணக்கால் அய்யம்பேட்டை | 1:48 PM | Best Blogger Tips

செல்ல வேண்டிய இடம்:பழைய தலைமச் செயலகம்,பொது வழி(தாம்பரத்திலிருந்து சென்ற
ால் நேராக் பீச் ஸ்டேசன் சென்றாலும் அங்கிருந்து பேருந்தில் செல்லலாம்)

தேவையான டாகுமெண்டுகள்:
1. அட்டெஸ்டேசன் பெற வேஎண்டிய சான்றிதழ் மற்றும் அதன் இரு நகல்கள்
2.வெளிநாட்டில் வேலை பெற்றதற்கான உத்தரவு ஒரு நகல்
3.பாஸ்போர்ட் முதல் மற்றும் இறுதி பக்கங்களின் ஒரு நகல்
4 விண்ணப்பப் படிவத்தில் ஒட்ட வேண்டிய ஒரு ரூபாய்க்கான நீதி மன்ற அஞ்சல்(இது தலைமச் செயலகத்தின் உள்ளே உள்ள கடையிலும் கிடைக்கும்)
எம் ஈ ஏ அப்ரூவலுக்கு டெல்லி செல்லவும் தேவையில்லை.கீழ்க்கண்ட முகவரிகளீலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.

Ministry of External Affairs of the Government of India
Joint Secretary (Consular), MEA
CPV Division, Patiala House Annexe
Tilak Marg, New Delhi.
Tel.: +91 11 2338 8015
Fax.: +91 11 2338 8385
Email: jscons@mea.gov.in of dcpf@mea.gov.in
And with the following representatives of MEA in Kolkata, Chennai and Hyderabad:
Ministry of External Affairs
Branch Secretariat
2 Ballygunge Park Road
Kolkata – 700019
Tel: 033-22879701 / 22802686
Fax: 033-22879703
————–
Ministry of External Affairs
Branch Secretariat
7th Foor EVK Sampath Maligai
68 College Road
Chennai – 600006
Tel: 044-28272200 / 28251323
Fax:044-28251034
—————-
Ministry of External Affairs
Branch Secretariat
B Block Room #311-312
Hyderabad – 500022
Tel: 040-23456051
Fax:040-23451244

மேலும் தகவலுக்கு http://wp.me/p3zkEC-29
இங்கே சொடுக்கவும்.

நன்றி :
Om Muruga

கலக்கலான தகவலுக்கு கதம்பம்....