இந்தியாவின் உளவு நிறுவனங்கள் பற்றிய தகவல் !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 5:45 PM | Best Blogger Tips
இந்தியாவின் உளவு நிறுவனங்கள் பற்றிய தகவல் !!!

இந்தியாவின் மிக முக்கிய உளவு நிறுவனங்களாக 2 நிறுவனங்கள் இருக்கின்றன. ஒன்று, இன்டெலிஜென்ஸ் பீரோ. சுருக்கமாகஐ.பி. என்று அழைக்கிறார்கள். மற்றொன்று 'ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங்'. இதனை சுருக்கமாக 'ரா' என்று அழைக்கிறார்கள். இந்தியாவில் மத கலவரங்கள் நடைபெறாமல் இருப்பதில் கண்ணும் கருத்துமாய் இருக்கும் . சமிபத்தில் தாண்டவம் என்ற திரை படத்தில் கூட நடிகர் விக்ரம் ரா வில் பனி புரிவது போன்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் .

உல் நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள், தீவிரவாத அமைப்புகள், மக்களின் மனநிலை போன்றவற்றை உளவு மூலம் கண்டுபிடித்து அரசுக்கு தகவல் தரும் வேலையை செய்து வருவது ஐ.பி.யின் கடமை. இது 1885 -ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகிலேயே மிகப்பழமையான உளவு நிறுவனம் இதுதான். உள்நாட்டில் தீவிரவாதம் தலைதூக்காமல் இருக்க உளவு பார்த்து தகவல்களை சேகரிப்பதும், அதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதும் இதன் முக்கிய வேலை. இந்தியாவின் மற்ற பாதுகாப்பு படை பிரிவுகளுக்கு தகவல்களை தந்து எச்சரிக்கை செய்யும்.

அடுத்த உளவு அமைப்பான ரா, 1968 -ல் உருவாக்கப்பட்டது. இந்தியாவுக்கு எதிரான மற்ற நாடுகளின் செயல்பாடுகளை கவனித்துக் கொள்வதுதான் இதன் பிரதான வேலை. உலக நாடுகளுக்கு தெரியாமல் பொக்ரானில் அணு ஆயுத சோதனைகளை நடத்தி முடிக்க இந்த இரு அமைப்புகளுமே உதவின.

நேபாளத்தில் இருந்து இந்தியா வந்த விமானம் 1999 -ம் ஆண்டு கடத்தப்பட்டதை தொடர்ந்து இந்தியாவுக்கு அருகில் உள்ள நாடுகளில் தனது பாதுகாப்பு குறைவாக இருப்பதை உணர்ந்த 'ரா' அதன்பிறகு இந்த நாடுகளில் வலுவாக காலூன்றி விட்டது. தற்போது இந்த இரு நாடுகளில் பாகிஸ்தானில் ஆதிக்கம் பெரும் அளவு குறைந்ததற்கு 'ரா' வின் உளவு வேலைகளே காரணம். தேவைப்படும் சமயங்களில் ஐ.பி. உளவாளிகளையும் இவர்களோடு சேர்த்துக் கொள்வார்கள்.

இவர்களுக்காக செலவு செய்யப்படும் பணத்துக்கு அரசு பெரும்பாலும் கணக்கு கேட்பதில்லை. நமக்காக உயிரை பணயம் வைத்து உளவு செய்பவர்கள் அவர்கள். பண விஷயத்திலேயே அவர்களை நம்பவில்லை என்றால் அவர்கள் தரும் தகவல்களை எப்படி நம்ப முடியும், என்கிறது அரசாங்கம். உண்மைதானே.

வெப்கேமிரா வசதியுடன் இணையத் தொடர்பு உள்ள கணிப்பொறி உங்களிடம் இருக்கின்றதா?எச்சரிக்கையாக இருங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தோ நீங்கள் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.

மணக்கால் அய்யம்பேட்டை | 4:07 PM | Best Blogger Tips
வெப்கேமிரா வசதியுடன் இணையத் தொடர்பு உள்ள கணிப்பொறி உங்களிடம் இருக்கின்றதா?எச்சரிக்கையாக இருங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தோ நீங்கள் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.

தன்னுடைய அறையில் தான் உடைமாற்றிய காட்சி எந்த ஆபாச இணையதளத்திலோ விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதைக் கேட்ட அவள் அதிர்ந்துதான் போனாள்.
யாரும் அத்து மீறி அந்த அறைக்குள் நுழையவில்லை?

எவருக்கும் மின்னஞ்சல் வழியாகவும், எந்த புகைப்படமோ வீடியோக் காட்சிகளோ அனுப்பவில்லை?

பின் தன்னுடைய படுக்கை அறைக்காட்சியை படம்பிடித்தது யார்?

அது எப்படி சாத்தியமாயிற்று?

புனேயில் உள்ள Asian School Of Cyber Law வில் புகார் அளித்தாள். அவர்கள் சொன்ன காரணம் அவளை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது

ஆம் அவளது அறையில் உள்ள வெப்கேமிராதான் அவளை படம்பிடித்திருக்கின்றது.

செய்வதையெல்லாம் செய்துவிட்டு ஒரு ஓரத்தில் அப்பாவியாய் அமர்ந்திருந்திருக்கிறது அந்த வெப்கேமிரா.

மீடியாத்துறையில் பணிபுரிகின்ற அந்தப் பெண்ணின் பெயர் அனி ஜோலகர் தனது ப்ராஜக்ட்டுக்காக சில படங்களை இணையத்திலிருந்து டவுன்லோடு செய்திருக்கின்றாள்.

ஆனால் அவளுக்குத் தெரியாமலையே
கணிப்பொறியில் ட்ரோஜன் என்கிற வைரஸ் /புரோகிராம் வந்து அமர்ந்து கொண்டது

அந்த ட்ரோஜன் என்கிற புரொகிராமின் மூலம் அவளது கணிப்பொறியில் இணைக்கப்பட்டுள்ள வெப்கேமிராவை ரிமொட் முறையில் இயக்கி அவளது அந்தரங்களை படம்பிடித்து அவற்றை ஆபாச இணையதளத்திற்கு விற்றுக் கொண்டிருந்திருக்கின்றான் எவனோ ஒருவன்.

உலகத்தின் இன்னொரு மூலையில் தனது நிர்வாணப்படங்களும் அந்தரங்கங்களும் திரைப்படமாக்கப்படுகின்றதை அறிந்து அதிர்ச்சியானாள் அனி ஜோலகர்.

இணையத் தொடர்புடன் உள்ள அந்த கணிப்பொறியின் வெப்கேமிராவை பெரும்பாலும் அவள் ஆன் செய்தே வைத்திருக்கின்றாள்.

இணையத்தில் உலவிவிட்டு அணைக்காமல் அப்படியே இருந்துவிட்டதுதான்; அவள் செய்த தவறு. கணிப்பொறி இடப்பெயர்ச்சி இல்லாமல்தானே அமர்ந்திருக்கின்றது அதுவென்ன செய்திட முடியும் என்று நீங்கள் சாதாரணமாய் இருந்துவிடமுடியாது. புரிந்து கொள்ளுங்கள் அது நம்மை நோட்டமிட்டுக்கொண்டிருக்கின்றது வெப்கேமிரா மூலம்.

கொஞ்ச நேரம் கழித்து உபயோகிக்கத்தானே போகின்றோம் அதற்குள் எதற்கு இணையத்தொடர்பை துண்டிக்கவேண்டும் என்று அலட்சியப்படுத்தினால் நம் அந்தரங்கங்கள் உலகத்தின் பார்வைக்கு வந்துவிடும்.

‘தங்களது அறையினில் வெப்கேமிராவை வைத்திருப்பவர்கள் மிகவும் கவனமாய் இருக்கவேண்டும். இணையத் தொடர்பு அவசியம் இல்லையெனில் அதன் இணைப்பையும் வெப்கேமிராவின் இணைப்பையும் துண்டித்துவிடுங்கள். இந்த விழிப்புணர்வினை தங்களுக்கு தெரிந்தவரையிலும் மக்களுக்கு தெரியப்படுத்தினால்தான் அவர்கள் விழிப்புணர்வு அடைவார்கள்’

‘தேவையில்லாமல் வெப்கேமிராவை ஆன் செய்து வைத்திருப்பது அல்லது அதன் தேவைகள் இல்லாவிட்டாலும் அதனை கணிப்பொறியுடன் இணைத்து வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது. நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் நிறையபேர் சமூக சூழலுக்குப் பயந்து அதனை புகார் தெரிவிக்காமல் இருப்பது மிகவும் பரிதாபத்திற்குரியது.’

இணையத்தில் இருந்து படங்களோ அல்லது வேறு சில பைல்களோ டவுண்லோடு செய்யும்பொழுது ட்ரேஜன் ஹார்ஸ் (Trojan Horse ) என்கிற வைரஸ் அல்லது வேறு ஏதேனும் வைரஸ் நுழையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதற்குத் தேவையான ஆன்டி வைரஸ் புரொகிராம்களை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.

அது மட்டுமல்ல தேவையில்லாத அல்லது கவர்ச்சியான விளம்பரங்களுடன் வருகின்ற மின்னஞ்சல்களையும் தவிர்த்து விடுங்கள்.

ஆகவே நண்பர்களே கணிப்பொறி உபயோகிக்காத நேரங்களில் அதனை அணைத்துவிடுங்கள். இணையத்தொடர்பும் வெப்கேமிரா தொடர்பும் துண்டிக்கப்பட்டிருகின்றதா என்று தயவுசெய்து ஒன்றுக்கு இரண்டுமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

இணையத்தில் உலவும்பொழுது மட்டும் இணையத்தொடர்பினை இணைத்துவிட்டு மற்றநேரங்களில் அந்த தொடர்பினை கணிப்பொறியிலிருந்து எடுத்துவிடுங்கள். அதுபோலவே வெப்கேமிராவும். யாருடனும் அவசியம் என்றால் மட்டும் அதனை இணைத்துக் கொள்ளுங்கள். மற்ற நேரங்களில் அவற்றை கணிப்பொறியுடன் இணைக்காமலேயே வைத்திருங்கள்.

இல்லையென்றால் உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். அந்த நபர் உங்களுக்கு பக்கத்து அறையில் அல்லது பக்கத்து கண்டத்தில் கூட இருக்கலாம்.

உன் வளர்ச்சிக்கு நீயே பொறுப்பு !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 3:31 PM | Best Blogger Tips
உன் வளர்ச்சிக்கு நீயே பொறுப்பு !!!

சாதனையாளர்களுக்கும், சாமானியர்களுக்கும் இடையேயான மிக முக்கியமான வித்தியாசம் என்ன தெரியுமா?

சாதனையாளர்கள் தங்கள் செயல்களுக்கான முழுப் பொறுப்பையும் தாங்களே எடுத்துக் கொள்கிறார்கள். அது வெற்றியில் முடிந்தாலும் சரி, தோல்வியில் முடிந்தாலும் சரி, இரண்டையுமே தங்களுடைய தோளில் ஏந்திக் கொள்கிறார்கள்.

சாமானியர்கள் வெற்றிகள் வந்தால் ஏந்திக் கொள்ள தங்கள் தோள்களைத் தயாராக்குகிறார்கள். தோல்வி நெருங்கும் போதோ சுண்டுவிரலைத் தயாராக்குகிறார்கள், அடுத்தவர் மீது பழியைப் போட!

நமது செயல்களுக்கான முழுப் பொறுப்பையும் நாமே எடுத்துக் கொள்வது என்பது கடினமான வேலை. அதற்கு தளராத மன உறுதியும், தைரியமும், தன் மீது வைக்கும் அழுத்தமான நம்பிக்கையும் வேண்டும்.

நமது செயல்களுக்கான விளைவுகளின் பொறுப்பை நாமே எடுத்துக் கொள்ளும்போது தான் வாழ்க்கை சுவாரசியமாகிறது. ஒரு செயலை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் எனும் வேட்கையும், தவறி விழுந்தால் உடனே எழவேண்டும் எனும் உந்துதலும் அப்போதுதான் உருவாகும்.

இதுதான் வெற்றியாளர்களை உருவாக்குகிறது!
இதுதான் சாதனையாளர்களைச் சம்பாதிக்கிறது!

கொஞ்ச நேரம் உங்கள் அலுவல் சிந்தனைகளை ஒதுக்கி வைத்து விட்டு உறவுகளைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்கும் உங்கள் சகோதரர்களுக்குமிடையே இணக்கம் இல்லாததற்கு யார் காரணம்? உங்கள் பெற்றோருடன் பிணைப்பு இல்லாததற்கு யார் காரணம்? நண்பர்களுடன் நட்பு இல்லாததற்கு யார் காரணம்?

அடுத்தவர்களை குறை கூறும் முன், 'நானும் இதற்கு ஒரு காரணமா?' என ஒரு நிமிடம் நிதானித்துப் பாருங்கள்.

இதுவரை உங்கள் மனதிற்குத் தெரியாத ஏகப்பட்ட விஷயங்கள் தெரியவரும்! உங்கள் மனதின் கண் சட்டென இமை விரிக்கும்.

பொதுவாக நாம் நமது தோல்விகளுக்கான காரணங்களை வெளியேதான் தேடுவோம். நமது சோகத்துக்குக் காரணம் நண்பன் என்போம், கோபத்துக்குக் காரணம் தோழி என்போம், ஏமாற்றத்துக்குக் காரணம் மேலாளர் என்போம்.

நமக்கு வெளியே இருப்பவைதான் நம்மை இயக்குகின்றன, நமது வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்றன என்று நாம் கருதிக் கொள்வதே இதன் காரணம்.

நமக்குள்ளே நாம் மூழ்கி நமது தோல்விகளுக்கான காரணங்களை ஆராயத் துவங்கினால் விடைகள் வித்தியாசமாக வரும். நமது ஈகோவோ, பொறுமையின்மையோ, திறமையின்மையோ ஏதோ ஒன்று இதன் காரணமாக இருக்கும்.

காரணங்கள் நமக்குள்ளேயே இருப்பது நல்லது. நமக்குள் இருக்கும் பிழைகளைத் தானே நாம் சரி செய்ய முடியும்! பிறரிடமோ, சூழ்நிலையிடமோ நமது வெற்றி தோல்விக்கான சுக்கான் இருக்கிறது என நாம் கருதிக் கொள்ளும் காலம் வரை நமது வெற்றியை நாம் உருவாக்க முடியாது.

'டைமே இல்லை... இருந்திருந்தா நல்லா எக்ஸர்சைஸ் பண்ணி உடம்பைக் கட்டுக் கோப்பாக வைத்திருப்பேன்' என பலரும் சொல்வதுண்டு. உடற்பயிற்சி செய்யாத சோம்பேறித் தனத்தையும், ஆரோக்கியமான உணவைச் சாப்பிடாத கட்டுப்பாடற்ற மனதையும் தப்ப வைப்பதற்காகச் சொல்லப்படும் பொய்- `டைம் இல்லை'.

அந்த சிந்தனையை மாற்றி, 'நாம்தான் அதன் காரணம்' என யோசித்துப் பாருங்களேன்! அதிகாலையில் உடற்பயிற்சி செய்வது, வேலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது, நடப்பது, ஆரோக்கிய உணவைச் சாப்பிடுவது... என செயல்பாடுகளுக்கான வாய்ப்புகள் தோன்றும்.

'நானே பிரச்சினை' என புரிந்து கொள்பவர்கள் 'என்னால்தான் தீர்வு' என்பதையும் அறிந்து கொள்வார்கள்.

தோல்விகளில் மட்டுமல்ல, வெற்றிகளிலும் இப்படியே நடந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு ஒரு வெற்றி வந்தால் அதற்குக் காரணமும் நீங்களே என உங்கள் மனதைப் பாராட்டுங்கள். உங்களுக்கு மேலும் மேலும் வெற்றிகள் வரும். வெற்றிகளில் கர்வம் கொள்ளாமல் இருக்க வேண்டியது முக்கியம். அதே நேரம் வெற்றிக்குக் காரணமான உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ள வேண்டியதும் ரொம்ப ரொம்ப முக்கியம்.

உங்கள் செயல்களுக்கும், முடிவுகளுக்கும் நீங்களே பொறுப்பெடுத்துக் கொள்வதென்பது நீங்கள் உங்களுக்கு எஜமானன் என்பதைப் போல. 'என்னால் முடியும்' எனும் தன்னம்பிக்கையின் வேர் அது. அது உங்களுக்கு நீங்களே தரும் சுதந்திரம். உங்களுக்கு நீங்களே சூட்டிக் கொள்ளும் கிரீடம்.

'என் செயல்களுக்கு நான் காரணம் அல்ல' என்பவர்கள் அடிமை மனநிலையினர். எப்போதுமே ஏதோ ஒன்றின் அடிமையாய் இருப்பதிலேயே பழகிப் போகின்ற மனநிலைமை. இவர்கள் எக்காலத்திலும் உயரிய இருக்கைகளுக்கு வந்தமர முடியாது.

சிலர் என்ன சொல்வார்கள் தெரியுமா? 'நானும் காரணம்தான், ஆனா நானே முழுக் காரணமல்ல'. இது நம்முடைய வெற்றி தோல்விக்கு இன்னொருவனையும் கூட இழுத்துக் கொள்வது.

'இருட்டில் நடக்கப் பயமாய் இருந்தால் கூடவே ஒரு நண்பனையும் இழுத்துக் கொண்டு போவது போல'. இது தன்னம்பிக்கைக் குறைவின் வெளிப்பாடு, அச்சத்தின் வெளிப்பாடு, தோற்றுப் போய்விடுவோமோ எனும் தடுமாற்றத்தின் விளைவு.

நீங்களே உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் என்பது எவ்வளவு அற்புதமான விஷயம். இதுவரை நீங்கள் அப்படிப்பட்ட ஒரு எண்ணத்தைக் கொண்டிருக்காவிட்டால், இதுவே தருணம். இப்போது அந்த சிந்தனைக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் நுழையுங்கள்.

'உங்கள் தோல்விகளுக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளுங்கள். அவற்றை அரவணையுங்கள். உங்கள் தோல்விகளுக்கான பொறுப்பையும் நீங்களே எடுத்துக் கொள்ளும் போது உங்களுக்கு வெற்றி சர்வ நிச்சயம்' என்கிறார் ரால்ப் மார்ஸ்டன்.

தோல்விகளை நீங்கள் ஏற்றுக் கொள்ளும்போதுதான் உங்களுடைய மன அழுத்தமும் குறையும். வெற்றியை நோக்கிப் பயணிக்க உங்களுக்கு ஊக்கமும் கிடைக்கும். இல்லையேல் `யாரைக் குறை சொல்லலாம்' என தேடுவதிலேயே ஒட்டு மொத்த சக்தியும் வீணாகிவிடும்.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், வெற்றிகளில் நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள், தோல்விகளில்தான் கற்றுக் கொள்வீர்கள்.

கூடைப்பந்து விளையாட்டுப் பிரியர்களுக்கெல்லாம் பிரமிப்பைத் தரும் பெயர் மைக்கேல் ஜோர்டன். அவர் தனது வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிடுகையில், 'இருபத்து ஆறு விளையாட்டுகளில் என்னிடம் தரப்பட்ட கடைசி வாய்ப்பில் தோல்வியடைந்திருக்கிறேன். மீண்டும் மீண்டும் தோற்றுக் கொண்டிருந்ததால் தான் என்னால் வெற்றியாளனாய் மாற முடிந்தது. காரணம் எனது தோல்விக்கான காரணம் நான் என்பதை அறிந்திருக்கிறேன்' என்கிறார்.

தங்கள் செயலுக்குத் தாங்களே பொறுப்பேற்பவர்கள் பாசிடிவ் மனநிலையினர். வாழ்க்கையை எதிர்மறையாய் அணுகுபவர்களே அடுத்தவர்களை நோக்கிக் குறை சொல்கிறார்கள் என்கிறது தெற்கு கலிபோர்னியாவில் நடந்த ஆராய்ச்சி ஒன்று.

அடுத்தவர்கள் மேல் பழி போட்டு ஹாயாக பொய்களின் மேல் படுத்துறங்குபவர்களின் பட்டியலில் மேலதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் நிச்சயம் இடம் உண்டு. தங்களுடைய 'இமேஜ்' போய் விடக் கூடாது என்பதற்காக பழியைத் தூக்கி அடுத்தவர் தோளில் போட்டு விடுகிறார்கள்.

ஆனால் தைரியமான தலைவர்களோ தங்களுடைய தவறுக்கு தாங்களே பொறுப்பேற்று அதை நிவர்த்தி செய்யும் வழியை யோசிப்பார்கள். பிறர் மேல் பழி போடாத தலைவர்களைக் கொண்ட நிறுவனம் உயரங்களைச் சந்திக்கும் என்கிறது இந்த ஆய்வு முடிவு.

ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள், 'இப்படித் தான் நீ சிந்திக்க வேண்டும்', 'உன்னுடைய உணர்வுகள் இப்படித்தான் இருக்க வேண்டும்' என்றெல்லாம் யாராச்சும் உங்களைக் கட்டாயப்படுத்த முடியுமா?

உங்களுடைய சிந்தனைகளும், உணர்வுகளும் உங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் போது, செயல்கள் மட்டும் உங்களிடம் இல்லை என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது?

எந்த ஒரு செயலையும் நமது மனம்தான் தீர்மானிக்கிறது. சிரிக்க வேண்டுமா, அழ வேண்டுமா என்பதைக் கூட நாமேதான் தீர்மானிக்கிறோம். ஒருவரை திட்ட வேண்டுமா, பாராட்ட வேண்டுமா என்பதையும் நாமேதான் தீர்மானிக்கிறோம்.

காலையில் அவசரமாக காரோட்டிக் கொண்டிருக்கும் போது எதிரே ஒருவன் வந்தால் திட்டுகிறோம். `டிராபிக்கில் சட்டென குறுக்கே வந்ததால் திட்டிட்டேன்' என பழியைத் தூக்கி வெளியே போடுகிறோம்.

எப்போதாவது 'என்னோட கோபத்தால் திட்டிட்டேன்' என்று சொன்னதுண்டா?

சின்னச் சின்ன செயல்களுக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதுதானே பெரிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதன் முதல் படி?

உங்களுடைய திறமைகளின் மீது நீங்கள் நம்பிக்கை வைக்காதபோது தான் அடுத்தவர் களையோ, விதியையோ, சூழலையோ குற்றம் சுமத்த முயல்கிறீர்கள். 'தனது செயல்களுக்கான பொறுப்பை ஏற்காதவர்கள் மரியாதை குறைவானவர்களாகவும், அதிகம் கற்க முடியாதவர்களாகவும், பிறரை போல திறமையாக செயல்படாதவர்களாகவும் மாறிவிடுவார்கள்' என்கிறது ஆராய்ச்சி ஒன்று.

பயத்தைப் புறந்தள்ளி, தன்னம்பிக்கையைக் கையில் எடுத்து, தன்னையே நேசித்து, தாழ்மையைக் கைக்கொண்டு, தனது செயல்களுக்கான பொறுப்பை தானே ஏற்றுக் கொள்வதில் இருக்கிறது வெற்றிக்கான ரகசியம்.

உனது செயல்களுக்கு நீயே பொறுப்பு
உணரும் பொழுதில் வெற்றிகள் உனக்கு!

தகவலுக்கு நன்றி
ரமேஷ்
 

டெங்கு காய்ச்சல்:

மணக்கால் அய்யம்பேட்டை | 3:24 PM | Best Blogger Tips
டெங்கு காய்ச்சல்:

நோயின் அறி உணர்குறிகள்:

* தலைவலி
* கண் பின்புற வலி
* பொதுவான உடல் வலி (தசை வலி, மூட்டு வலி)
* குமட்டலும் வாந்தியும்
* வயிற்றுக்கடுப்பு
* தோல் சினைப்பு: அடி முட்டிகளில் பொதுவாகவும், சிலருக்கு உடல் முழுதுமே அரிப்பு ஏற்படலாம்
* பசியின்மை
* தொண்டைப்புண்
* மிதமான குருதிப்போக்கு (பல் ஈறுகளில் இருந்து குருதி வடிதல், மூக்கில் இருந்து குருதி வடிதல், மாதவிடாய் மிகைப்பு, சிறுநீரில் குருதி போதல், குருதிப்புள்ளிகள் -- petechiae)[21]
* நிணநீர்க்கணு வீக்கம்
* வெள்ளை அணுக்கள், குருதிச் சிறுதட்டுக்கள் குறைதல்



தடுப்பு முறைகள்:

டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் தீ நுண்மத்தில் நான்கு குருதிப்பாய வகைகள் உண்டு எனவே ஒருத்தருக்கு நான்கு முறைகள் இக்காய்ச்சல் வரக்கூடும். இதனால் டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி முறை இன்னமும் ஆய்வில் உள்ளது. தடுப்பூசி இல்லாத காரணத்தால் டெங்கு நோயைப் பரப்பும் கொசுவில் இருந்து பாதுகாத்துக் கொள்வதே இன்றியமையாத தடுப்பு முறையாகும்.
கொசு (ஏடிசு) உருவாகாமல் தடுப்பதற்கு சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்தல், அவற்றின் வதிவிடத்தை முற்றுமுழுதாக அழித்தல், வதிவிடத்தில் இனம்பெருகாது கட்டுப்படுத்தல் என்பன முக்கியமானது. சுற்றுப்புறத்தில் தேங்கு நீர்நிலைகளைக் கண்டறிந்து அவற்றை வெறுமைப் படுத்துதல் அல்லது நீர் தேங்கி உள்ள அத்தகைய இடங்களில் பூச்சிகொல்லி மருந்துகளைத் தெளித்தல், உயிரியற் கட்டுப்பாட்டுக் காரணிகளை இடல் போன்றன கொசுக்களின் பெருக்கத்தைத் தடுக்கின்றது. பூச்சிகொல்லி மருந்துகளால் மாந்தருக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கருதுமிடத்து தேங்கிய நீர்நிலைகளை வெறுமைப் படுத்தும் முறையே சாலச்சிறந்தது. தோலை மூடக்கூடிய உரிய ஆடைகள் அணிவது, தூங்கும்போது கொசுவலை உபயோகிப்பது, கொசுக்கடிக்கு எதிரான களிம்பு, கொசுவர்த்திச் சுருள் போன்ற கொசுவிரட்டிகள் பயன்படுத்தல் என்பன கொசு கடிக்காமல் பாதுகாத்துக்கொள்ள உதவும்.

எளிதில் பாதிப்படைபவர்:

குழந்தைகளிலும் சிறுவர்களிலும் கடுமையான நோய் உண்டாகின்றது. ஆண்களைக் காட்டிலும் கூடுதலாக பெண்கள் பாதிப்படைகின்றனர். நீரிழிவு, ஈழை நோய் போன்ற நீண்டகால நோய்கள் உள்ளவருக்கு இந்நோய் மிகவும் உயிருக்கு தீங்குவிளைவிக்கக் கூடிய பாதிப்பை உண்டாக்கும்
 

.ஆலிவ் எண்ணெயின் பயன்பாடுகள்..

மணக்கால் அய்யம்பேட்டை | 3:23 PM | Best Blogger Tips
ஆலிவ் எண்ணெயின் பயன்பாடுகள்..


ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் உடலில் உள்ள எலும்புகள் பலமடையும், புற்றுநோய் வராமல் தடுக்கிறது. ஆலிவ் எண்ணெய் கெட்ட கொழுப்புகளையும் குறைக்கிறது. மேலும் இது உயர் இரத்தம் அழுத்தத்தையும், இதய நோய்களையும் வராமல் பாதுகாக்கிறது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


ஆலிவ் ஆயிலில் மிக உயர்ந்த போலிக் அமிலம் உள்ளது. இது மார்பகப்புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு குணப்படுத்துவதற்கும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வரவிடாமல் தடுக்கவும், கற்கள் உருவாவதையும் கட்டுப்படுத்துகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


சமையலில் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தும் பழக்கம் இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அதிகரித்து வருகிறது.


ஆலிவ் எண்ணெய் திரவ நிலையில் இருப்பதால் இதற்கு “திரவத் தங்கம்” என்று பெயர். ஆலிவ் எண்ணெய் கண்களுக்குக் குளிர்ச்சியும், சருமத்திற்கு வெண்மையும், தலைமுடிக்கு போஷாக்கும் அளிக்கிறது என்பது பல நாட்களாக நாம் அறிந்த செய்தி. ஆனால் மார்பகப் புற்று நோய்க்கு மாமருந்து என்பது தற்போதைய ஆய்வு முடிவு.


தூய்மையான ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு அதனைக் குணப்படுத்துவதற்கும் உதவுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.


உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம் என்கிறது மற்றொரு ஆய்வு.


ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தும் போது அதன் சத்து குறையாமல் பயன்படுத்த நினைத்தால் அதனை அதிகமாகச் சூடாக்கக்கூடாது. அதிக வெளிச்சமும் அதிக சூடும் ஆலிவ் எண்ணெயின் ஆயுளைக் குறைத்துவிடும். (கெட்டுப் போவதற்கு வாய்ப்புண்டு) அதனால் ஆலிவ் எண்ணெயை மிதமான சூடும், மிதமான வெளிச்சமும் உள்ள இடத்தில் வைத்துப் பாதுகாப்பது நல்லது.



ஆலிவ் எண்ணெயில் ஏராளமான சத்துகள் அடங்கி இருப்பதை இன்றைய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன 1400 வருடங்களுக்கு முன்பே அவைகளில் அதிக சத்துகள் இருப்பதாகவும் அவைகளை உங்களுக்காகவே (மனிதர்களின் நலன் கருதியே உருவாக்கியதாகவும் அல்லாஹ் திருமறையில் கூறுகிறான். இனிவரும் காலங்களில் இதன் ஆராய்ச்சியில் இன்னும் பல நன்மைகள் அடங்கி இருப்பதை கண்டு பிடித்து அறிவிக்கலாம்.



6:141. படர விடப்பட்ட, மற்றும் படர விடப்படாத தோட்டங்களையும், பேரீச்சை மரங்களையும், மாறுபட்ட உணவான தானியங்களையும், (தோற்றத்தில்) ஒன்று பட்டும் (தன்மையில்) வேறு பட்டும் உள்ள மாதுளை மற்றும் ஒலிவ மரங்களையும் அவனே படைத்தான். அவை பலன் தரும் போது அதன் பலனை உண்ணுங்கள்..! அதை அறுவடை செய்யும் நாளில் அதற்குரிய (ஸகாத் எனும்) கடமையை வழங்கி விடுங்கள்..! வீண் விரையம் செய்யாதீர்கள்..! வீண் விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான்.



16:11. அதன் மூலம் பயிர்களையும், ஒலிவ மரம், பேரீச்சை, திராட்சை மற்றும் அனைத்துக் கனிகளையும் உங்களுக்காக அவன் முளைக்கச் செய்கிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் சான்று இருக்கிறது.

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-ash3/580283_10151104228153450_524034331_n.jpg

உடலில் காணப்படும் நகங்களை அழகுப்படுத்துவதில் மட்டுமே பலர் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் உண்மையில் இது மிகவும் முக்கியமான உறுப்பு.

மணக்கால் அய்யம்பேட்டை | 2:46 PM | Best Blogger Tips
உடலில் காணப்படும் நகங்களை அழகுப்படுத்துவதில் மட்டுமே பலர் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் உண்மையில் இது மிகவும் முக்கியமான உறுப்பு.

சிலர் நகங்களில் அதிகமாக அடிக்கடி அழுக்குகள் நுழைந்து நகங்களின் அழகைக் கெடுக்கிறது என்று வண்ணம் தீட்டுகின்றனர்.

மேலும் சிலரின் நகங்கள் நன்றாக பொலிவோடு இருக்கும், திடீரென்று நகங்களின் பழைய அழகு மாறி, நிறம் மாறி காணப்படும். இவ்வாறு ஏற்பட்டால் உடலில் ஏதோ பிரச்சனை என்று அர்த்தம். ஏனெனில் நாம் இந்த நகங்களை வைத்து உடலில் ஏற்படும் நோய்களை தெரிந்து கொள்ள முடியும்.

நகத்தின் அமைப்பு, நிறம் வைத்து மருத்துவர்கள் உடலில் உள்ள பிரச்சனைகளை எளிதில் கண்டறிவார்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின் நலம் நகத்தில் தெரிந்துவிடும்.

நகங்களில் எப்போதும் செய்யக்கூடியவை., செய்யக்கூடாதவை

1. நகங்களை எப்போதும் நுனிப்பகுதிகளை சுத்தமாக வெட்டக்கூடாது. அவ்வாறு வெட்டினால், நகத்தை சுற்றி சதை வளர்ந்து அதிக வலியினை ஏற்படுத்தும்.

2. நகங்களை பற்களால் கடிக்கக்கூடாது. நகம் வெட்டும் கருவியினால் மட்டுமே நகங்களை வெட்ட வேண்டும்.

3. சாப்பிட்டப்பிறகு கைகளை கழுவும் போது நகங்களை சுத்தமாக கழுவ வேண்டும். இல்லையென்றால் நகங்களில் கிருமிகள் படிந்து வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை உண்டாகும்.

4. இரவில் தூங்கும் முன் கை மற்றும் கால்களில் உள்ள நகங்களை சுத்தமாக கழுவி பின் தூங்க வேண்டும்.

5. நகங்கள் அழகாக இருக்க தினமும் காய் மற்றும் கனிகளை அதிகம் உண்ண வேண்டும். ஏனெனில் காய்கனிகளில் உள்ள சத்துக்கள் உடலில் எந்த நோயும் அண்டாமல் பாதுகாக்கும்.

ஆகவே நகங்களானது எவ்வளவு சுத்தமாக இருக்கிறதோ அந்த அளவு நமது உடலும் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

by
meena

"தமிழ் இலக்கிய கதை மாந்தர்கள்" பரதன்:

மணக்கால் அய்யம்பேட்டை | 2:43 PM | Best Blogger Tips
"தமிழ் இலக்கிய கதை மாந்தர்கள்"

பரதன்:

பரதன் அயோத்தியை ஆண்ட தசரத மன்னனின் மைந்தர்களுள் ஒருவர். இவருடைய தாயார் கைகேயி. இவர் இராமனுக்கு இளையவர் ஆவார். இவர் தனது தாயார் தனக்காகப் பெற்றுத் தந்த ஆட்சிப் பொறுப்பை ஏற்று அரியணை ஏற மறுத்து, இராமனின் பாதணிகளை அரியனையில் வைத்து பதினான்கு ஆண்டுகள் அயோத்தியின் ஆட்சியை வழி நடத்தினார்.

கோயில்:

கேரள மாநிலத்தில் உள்ள கூடல்மாணிக்கம் கோயிலே இந்தியாவில் பரதனுக்கு உள்ள ஒரே கோயிலாகும்.

பரதனின் பண்பு :

ஒருவனை ஊர் உலகம் புரிந்துகொள்ள முடியாமல் போனால் அதனால்அப்படியொன்றும் பெரிய பாதிப்பு வந்து விடாது. ஆனால் அவனுடைய குடும்பத்தினர், உற்றார் கூட புரிந்து கொள்ள முடியாமல் போனால் அவனை விட துரதிர்ஷ்டசாலி வேறு யாரும் இருக்க முடியாது. அந்த வகையில் மிகவும் பரிதாபத்துக்குரிய கதாபாத்திரம்தான் பரதன். இராமாயண கதாபாத்திரங்களிலேயே மிக உயர்ந்த, ஆனால் இராமாயண கதாபாத்திரங்களினால் புரிந்து கொள்ளப் படாத கதாபாத்திரம் பரதனுடையது. பரதன் மிக உயர்ந்தவன் என்பதை நான் சொல்லவில்லை. கம்பரே சொல்கிறார்.

" ஆயிரம் ராமர்கள் உனக்கு இணையாவார்களோ?" என்று. அப்படியானால் அந்த காப்பியம் பரதாயாணம் என்றுதானே குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். எதனால் இராமாயாணம் ஆனது? தாயை, மூத்தவர்களை மதிக்கும் விசயத்தில் இராமன், மற்ற கதாபாத்திரங்களை விட உயர்ந்து நிற்கிறான். மின் விளக்குகளுக்கு ஒவ்வொரு அளவு கோல் உண்டு. 10 வாட் பல்பிலிருந்து 1000 வாட் வரைகூட உண்டு. இவை எல்லாவற்றுக்கும் மதிப்பு இரவிலும், இருண்ட இடங்களிலும்தான். காலையில் உதய சூரியன் உதித்து வந்து விட்டால் எந்தவொரு "வாட்" க்கும் மதிப்பு கிடையாது. சூரிய ஒளியில் எல்லா "வாட்"டும் மங்கித் தெரியும். இராமனுடைய மூத்தோர் சொல் மதிக்கும் பண்பின் முன்னால், பரதனுடைய, உயர்ந்த பண்புகள் அடிபட்டுப் போய் விடுகிறது.

பரதனுக்குத்தான் அரசுரிமை, ராமன் காடு செல்ல வேண்டும் என்று கைகேயி சொன்னபோது, "நான் ஏன் போக வேண்டும் என்றோ, அதை அப்பா சொல்லட்டும்" என்றோ இராமன் சொல்லவில்லை. மாற்றாந்தாயின் கட்டளையைக் கூட தந்தை சொன்னதாக ஏற்று மரவுரி தரித்து காடு சென்றான். இப்போது பரதன் விசயத்துக்கு வருவோம். பரதனை, பெற்ற தாய் புரிந்து கொள்ளவில்லை. தகப்பன் புரிந்து கொள்ளவில்லை. தமையன் புரிந்து கொள்ளவில்லை. மந்திரி புரிந்து கொள்ளவில்லை.

கைகேயி, தசரதனிடம் இரண்டு வரம் கேட்ட போது, அதாவது, இராமன் காடு செல்லவேண்டும், பரதன் அரசாள வேண்டும் என்று கேட்ட போது, இந்த விசயத்தில் பரதனுக்கு உடன்பாடு உண்டா இல்லையா என்பது கூட தெரியாத தசரதன், கைகேயியைப் பார்த்து, " நீ எனக்கு மனைவியும் அல்ல; உன் மகன் பரதன் எனக்கு மகனும் அல்ல என்கிறார் (நல்லா கவனிக்கணும் - நம்ம மகன் என்றோ அல்லது என் மகன் என்றோ கூட சொல்லாமல் "உன் மகன்" என்கிறார். இதிலிருந்தே தசரதனுக்கு பரதன் மீது எந்த அளவுக்கு வெறுப்பு உண்டானது என்பது புரிகிறது.)

இராமன் வனம் சென்ற சில நாளிலேயே தசரதன் இறந்து போக, அவரின் மறைவு பரதனுக்கு தெரிவிக்கப் படவில்லை. இவ்வளவுக்கும் பரதன், தனது மாமன் வீட்டுக்குத்தான் போயிருக்கிறான். (ஒரு பெண்ணின் கணவன் இறந்து போனால், அவளது தாய், தந்தை வழி உறவுகளுக்கு முதலில் சொல்லி அனுப்புவதுதான் நடைமுறை வழக்கம். அந்த வழக்கம் கூட பின்பற்றப் படவில்லை.)

தற்செயலாக அயோத்தி திரும்பும் பரதன், கொடிகள் தாழக் கிடப்பது, மக்கள் முகத்தில் சோகம் அப்பிக் கிடப்பது, மக்கள் அவன் மீது உமிழ்ந்த வெறுப்பான பார்வை , இவை எதற்கும் காரணம் விளங்காமல்தான் அரண்மனை வந்து சேருகிறான். வந்த பிறகுதான் தந்தை இறந்து போன விஷயம், இராமன் வனவாசம் சென்ற விஷயம் எல்லாம் தெரிய வருகிறது.

பரதனைக் கண்டதும், தலைமை பொறுப்பில் உள்ள மந்திரி கேட்கிறார் " முடி சூட்டு விழாவுக்கான ஏற்பாடுகளை செய்யலாமா?" என்று. ( மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல் என்றொரு பழமொழி உண்டு. எல்லா விசயங்களையும் எடை போட்டுப் பார்த்து அலசி ஆராய்ந்து, தப்பு எந்த பக்கம், அதில் பரதனுக்கு பங்கு இருக்கிறதா, உடன்பாடு இருக்கிறதா என்றெல்லாம் தெள்ளத் தெளிவாக தெரிந்து வைத்திருந்தாரென்றால் , பரதனைப் பார்த்ததும் அப்படியொரு கேள்வியைத் தூக்கிப் போட்டிருக்க மாட்டார்.)

எல்லாக் குழப்பத்துக்கும் தாய்தான் காரணம் என்பதை தெரிந்து கொள்ளும் பரதன், தகாத வார்த்தைகளால் தாயை கடிந்து கொள்கிறான். நீ எனக்கு வேண்டாம், அண்ணனைத் தேடி நான் போகிறேன் என்று சொல்லிவிட்டு, இராமனை போலவே மரவுரி தரித்து காடு செல்கிறான். ( தாயறியா சூல் உண்டா என்ற பழமொழி இங்கே பொய்த்துப் போய் விடுகிறது. ஒருவனுக்கு சேர வேண்டிய ஒன்றை தந்திரமாகப் பெற்று மகனுக்கு வாங்கித் தருகிறோமே. இதை மகன் விரும்புவானா என்பதுகூடத் தெரியாத தாயாகத்தான் கைகேயி இருந்திருக்கிறாள். ஆக, பரதனைப் பெற்ற தந்தை புரிந்து கொள்ளவில்லை. தாய் புரிந்து கொள்ளவில்லை. மந்திரி புரிந்து கொள்ளவில்லை.)

மரவுரி தரித்து வனம் செல்கிறான் பரதன். அவன் வருகிறான் என்ற செய்தி கேட்டதுமே, கொதித்தெழுகிறான் குகன். அவனது வீரர்களை அழைத்து "போருக்கு தயாராகுங்கள். இந்த பரதனை அடித்து விரட்டுவோம் என்றெல்லாம் சொல்ல, வேட்டுவ குல வீரர்களோ எதுவுமே பேசாமல் தலை குனிந்து நிற்கிறார்கள். அவர்களை உற்சாக படுத்த பலவாறு வீர உரை ஆற்றுகிறான் குகன்.ஆனால் அவர்களோ போருக்கு தயாராக வில்லை (காரணம் கடைசியில் வருகிறது)

பரதன் வரும் சேதி ராம லட்சுமணர் தங்கி இருக்கும் இடத்துக்கு வந்து சேருகிறது. கொதித்தெழுகிறான் லட்சுமணன் . அவனை உண்டு இல்லைன்னு பார்த்து விடுகிறேன் என்று லட்சுமணன் பொங்கி எழ ( பரதனைப் பெற்றவள், ராமனை காட்டுக்கு ஓட்டிவிட்டாலென்றால், மகன் இங்கு வந்து தொல்லை கொடுக்க வருகிறானோ என்கிற ஆத்திரம் லட்சுமணனுக்கு) அவனுடைய ஆத்திரத்துக்கு அணை போட்டு அடக்கி வைக்கிறான் ராமன்.

பரதனை பார்த்ததும், எதுவுமே பேசாமல் முகம் திருப்பி நிற்கிறாள் சீதை.

எந்த அண்ணனுக்காக தாயிடம் சண்டை போட்டுவிட்டு வந்தானோ, அந்த அண்ணன் கேட்கிறான் " தம்பி,அரியணை சுகமளிக்கிறதா?" என்று. அந்தவகையில் இராமன், பரதனைப் புரிந்து கொள்ளவில்லை.

அப்படிஎன்றால் பரதனை சரியாக புரிந்து கொண்டவர் யார்தான் என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழத்தானே செய்கிறது. அதற்கான விடை.

பரதனை மிக சரியாக, பார்த்த மாத்திரத்திலேயே புரிந்து கொண்டவர்கள், குகனுடைய படை வீரர்கள்தான். ( பரதன் கூடவே இருந்து பழகியவர்களுக்கு தெரியாமல் போன ஒரு விசயத்தை, படிப்பறிவில்லாத காட்டுவாசிகள், ஒரே ஒரு பார்வையிலேயே புரிந்து கொண்டார்கள்.) அதாவது, பரதன் வருவது கண்டு கோபம் கொண்ட குகன் (படகோட்டி) பரதனை விரட்டி அனுப்ப, போருக்கு தயாராகும்படி சொல்லி வீரவுரை ஆற்ற, எந்தவொரு reaction ணும் இல்லாமல் படை வீர்கள் நிற்பதுகண்டு அதற்கான காரணம் கேட்கிறான் குகன். ஏனென்றால் தலைவன் எட்டடி பாய்ந்தால், இவர்கள் பதினாறு அடி பாயத் தயாராக நிற்பவர்கள். அப்படிப் பட்டவர்கள் இன்று அமைதியாக நிற்கக் கண்டு காரணம் கேட்கிறான் குகன். அவர்கள் சொல்கிறார்கள் : " வருகிறவனைப் பார்த்தால் சண்டைக்கு வருகிறவன் மாதிரி தெரியலையே. போருக்கான எந்த ஆயுதமும் இல்லை. இவனும் நமது தலைவன் இராமன் மாதிரி மரவுரி கட்டியல்லவா வந்திருக்கிறான். போருக்கு வருபவன் மரவுரி கட்டி சந்நியாசி மாதிரியா வருவான்?" என்று கேட்கிறார்கள். அப்போதுதான், ஆத்திரத்தைத் தணித்துக்கொண்டு அமைதி நிலைக்கு வரும் குகன், ஓடி சென்று, பரதனை, ராமன் இருக்கும் இடத்துக்கு அழைத்து வருகிறான். ஆக மொத்தத்தில், பரதனை மிகச் சரியாக புரிந்து கொண்டது, படிப்பறிவில்லாத பாமர, வனவாசிகள்தான்.