வெற்றியின் ரகசியம்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:44 AM | Best Blogger Tips

 


***********

 

வெற்றியின் ரகசியம்

 

***********

 

வாழ்க்கையில் ஆசைக்கு முதலிடம் கொடுக்க வேண்டாம்...

அப்படிச் செய்தால்

அதுவே உங்களை வாழ்வின் கடைசி இடத்திற்குத் தள்ளிவிடும்.....!!!!

 

அன்பு, பண்பு, பாசம்,

மகிழ்ச்சி, பொறுமை....

இவை எப்பொழுதும் உங்கள் மனதில் நிறைந்திருக்கட்டும்....;!!!!!

 


பலம் கொண்ட உடலை விட.....

தன்னம்பிக்கை கொண்ட மனமே சிறந்தது....!!!!

 

உருகி நேசி....

கரைந்து விடாதே,

பணிந்து செல்....

அடங்கி விடாதே,

பழகிக் கொள்....

நம்பி விடாதே,

இருப்பதைக் கொடு...

இழந்து விடாதே,

கவலை கொள்...

உடைந்து விடாதே....!!!!!

 

வாய்ப்பு வரும் போது

அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்......

அதுதான் வெற்றியின் இரகசியம்....!!!!!

 

சிறகுகள் நனைந்தால்

பறக்க முடியாது தான்.....

 

ஆனால்....

எந்த ஒரு பறவையும்

வானத்திடம் மழையே பெய்யாதே என்று

கெஞ்சுவது இல்லை...

 

வாழ்க்கையே ஒரு போராட்டம் தான்....

போராடுவோம், வெற்றி பெறுவோம்...!!!

 

ஒவ்வொரு நாளையும்

மகிழ்வுடன் ஆரம்பித்து..,.

அதே மகிழ்வுடன் கடந்து விட்டால்....

அதுவே ஆகப்பெறும் சாதனை தான்....!!!!

 

கிடைக்கும் போது பயன்படுத்தி விடு....

இருக்கும் போது அனுபவித்து விடு...்

நினைத்தவுடன் செய்து முடித்து விடு....

வாழ்க்கை ஒருமுறை தான்.....!!!!

 

ஏதோ ஒன்றை ரசிக்கத் தொடங்கு....

காயங்கள் காய்ந்து போகும்...

ரணங்கள் காணாமல்

போகும்....!!!!!

 

வாழ்க்கைப் பாதையில் பூக்களால்

தூவ முடியவில்லை என்றாலும்.....

குறைந்த பட்சம்

சிரிப்புக்களால் தூவுங்கள்.....!!!!

 

ஆம் நண்பர்களே பிழைகள் இன்றி வாழ்க்கை இல்லை....

அந்தப் பிழைகளை திருத்தி வாழ்வதே

வாழ்க்கை....!!!!!

 

ஜனனம், மரணமும்,

இறைவன் வகுத்தது....!!!

 

இரும்புக் கோட்டைக்குள்

இருந்தாலும்.....

 

இரண்டும் நம்மை

வந்தடைந்தே தீரும்....!!!

 

நன்றி இணையம்

இல்லங்கள் உள்ளங்களால் அழகுறும்.!!

மணக்கால் அய்யம்பேட்டை | 10:42 AM | Best Blogger Tips

 இல்லங்கள் உள்ளங்களால் அழகுறும்.!!

 

இன்றைய கால ஓட்டத்தில்

பிரிவுகள் சாதாரணமாகிறது..

 

வாக்குவாதங்களைத் தவிர்க்கப் பாருங்கள்..


சொன்ன சொல்லையே பிடித்துத் தொங்காதீர்கள்..

 

கோபம் அதிகமானால் பேசுவதைத் தள்ளி வையுங்கள்..

 

பேச்சுக்கள் அதிகமானால் நீங்கள் மௌனத்தைக் கையில் எடுங்கள்..

 

செய்த தவறை காலம் முழுதும் சுட்டிக் காட்டி நோகடிக்காதீர்கள்..

 

நானும் தவறுகளிலிருந்து பாடம் கற்றேன் என்று ஒத்துக் கொள்ளுங்கள்..

 

மன்னிப்புக்களை வழங்க

எப்போதும் மறுக்காதீர்கள்..

 

விமர்சனங்களை மனம்

நோகாமல் சொல்லிப் பாருங்கள்..

 

விருந்தினர்களை மனம் மகிழ வரவேற்கப் பழகுங்கள்..

 

நன்றிகளைக் கூற நொடி நேரமும் காலதாமதம் செய்யாதீர்கள்..

 

ஒரு நாளில் ஒரு முறையேனும்

ஒன்றாக அமர்ந்து உணவு அருந்துங்கள்..

 

வெளியில் சென்றால் புன்னகையுடன் சொல்லி விட்டுக் கிளம்புங்கள்..

 

உறவுகளைத் தக்க வைப்பதும் தூக்கி எறிவதும் நம் வார்த்தைகளில் உள்ளது.!!

 

நன்றி....


 நன்றி இணையம்

3 D's Of Life

மணக்கால் அய்யம்பேட்டை | 10:38 AM | Best Blogger Tips

 

                3 D's Of Life

 

கணவன் மனைவி இருவரும் ஷாப்பிங் முடித்து, பெரிய ஓட்டலில் போய் சாப்பிட்ட பிறகு காருக்கு வந்தனர்.

 

அப்போது ஒரு வயதான அம்மாள் அவர்களிடம் கையேந்தியபடி வர, கணவன் அவளுக்கு பர்சிலிருந்து நூறு ரூபாய் எடுத்துக் கொடுத்தான். அவள் நிறைய நன்றி சொல்லிவிட்டு போனாள்.

 


மனைவி, எதற்கு நூறு ரூபாய்? கர்ணப் பரம்பரையோ? அஞ்சோ பத்தோ கிழவிக்குப் போட்டிருக்க கூடாதா? என்றாள்.

 

கணவன் சிரித்துக்கொண்டு சொன்னான், உனக்கு புடவை நகைகள் எனக்கு துணிகள் செருப்பு பசங்களுக்கு துணிகள் என்று கிட்டத்தட்ட சர்வ சாதாரணமாக லட்சத்தில் செலவு பண்ணினோம்.

 

ஆனால் அந்த வயசான அம்மா, வயித்துப் பசிக்கு சாப்பிட நம்மைத் தேடி வந்திருக்கா. நம்மாலே ரெண்டு நேரம் அந்தம்மா சாப்பிடும்போது நம்மை மனசார நினைக்குமே. அதனாலே நமக்கு புண்ணியம் கிடைக்க வேண்டாம். அந்தம்மாவோட பசி போகுது.

 


மனுஷனுக்கு மூன்று விஷயங்கள் எப்ப வரும்ன்னு தெரியாது. அது  எப்ப வேணும்ன்னாலும் வரலாம்.

அது என்ன தெரியுமா?

 

Disability - இயலாமை

Disease.  - நோய்

Death.      - இறப்பு

 

நமக்கும் இந்த மூன்றும் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.  நம்மால் முடியும்போது, முடியாதவர்களுக்கு சிறு உதவி பண்றதாலே, கடவுள் நமக்கு அந்த மூன்றையும் தள்ளிப்போடலாம்" என்றான். மனைவி கண் கலங்கி வெட்கப்பட்டு நின்றாள்.

 

எனவே, மேலே சொன்ன 3 Ds நமக்கும் எப்போதும் வரலாம். அதுவரை நம்மால் முடிந்த நல்லதைச்

செய்வோம்.

 

நல்லதை பகிர்வோம்!


 நன்றி இணையம்

அஞ்சாதே.....

மணக்கால் அய்யம்பேட்டை | 10:36 AM | Best Blogger Tips

 


*வாழ்வில் நீங்கள் பிறப்பைக் கண்டு அஞ்சத் தேவையில்லை.*

அது நடந்து முடிந்து விட்டது.

அதைப்போல் வாழ்வைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை

அது நடந்து கொண்டே இருக்கிறது

அதேபோல் இறப்பைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை

ஏனெனில் அது தவிர்க்க முடியாதது

அது எப்போது

வேண்டுமானாலும் நடக்கலாம்

பின்பு எதைக் கண்டு அஞ்ச

வேண்டும்...???

''நான் பிறக்கும்போது எந்தக் கவலையையும்

சுமந்திருக்கவில்லை

எந்த மாதிரியான தொந்தரவுகளை

சந்திக்கப் போகிறோம் என்று எண்ணவில்லை

அப்போது நான் என்ற உணர்வு கூட என்னிடம் இருந்ததில்லை

அதைப்போல இறக்கும் போதும், அதே உணர்வுடன் தான் இறப்பேன்,''

என்று எண்ணுங்கள்

மென்சியஸ் என்னும் சீடன் தன குருவான கன்பூசியசிடம்,

'இறந்த பிறகு என்ன நடக்கும்..???' என்று கேட்டான்

அதற்கு அவர்,

''இதற்குப் போய் உன் நேரத்தை வீணடிக்காதே

நீ கல்லறையில்

படுத்திருக்கும் போது அதைப்பற்றி சிந்தித்துக் கொள்ளலாம்

இப்போது ஏன் நீ அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்...???''

என்றார்

*ஓஷோ*

நன்றி இணையம்

அடியார்களின் அறியாமையைப் போக்கவே

மணக்கால் அய்யம்பேட்டை | 10:34 AM | Best Blogger Tips

 


புகழ்பெற்ற கவிஞரான திரு கண்ணதாசன் ஒருமுறை காஞ்சிபுரம் பரமாச்சார்யாரை சந்தித்தார். வழக்கம்போல ஆன்மீக விசாரங்கள் நடைபெற்றது. கண்ணதாசன் ஆன்மீகப் பாதையில் திரும்பும் முன் நாஸ்திகக் கொள்கையாளராகவும், மதங்களை விமர்சித்துக் கட்டுரை எழுதுபவராகவும் இருந்தார். ஆனால் பரமாச்சார்யார் அவரை தேவையற்ற பகுத்தறிவுவாதத்தில் இருந்து வெளிக்கொணர்ந்து, மெது மெதுவே ஆன்மீக ஞானம் பெற செய்தார்.


ஆனால் அடிப்படையில் விமர்சனம் செய்யும் போக்கானது தொடரவே செய்த்து அவரிடம்.

*கண்ணதாசன் கேட்டார், “பால் வெண்மை நிறமானது. ஆனால் பாற்கடல் ஏன் மேகவர்ணமாய் காட்டப்படுகிறது? இறைவனான ஸ்ரீவிஷ்ணுவின் நிறம், பாற்கடலில் கலந்து விட்டதா?”*.

ஆச்சார்யார் சிரித்துக் கொண்டே உனக்கான பதில் மதியம் கிடைக்கும் என்று கூறி கண்ணதாசனை குழப்பத்தில் ஆழ்த்தினார்.


அன்றைய தினம் மதியத்தில் உம்மிடியார் மடத்திற்கு வந்தார். கண்ணதாசனும் உம்மிடியாரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களுக்குள் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். பின்னர், உம்மிடியார் ஒரு பச்சை மரகதக்கல்லை ஆச்சார்யாரின் பாதத்தில் ஏற்றுகொள்ள வேண்டிச் சமர்ப்பித்தார்.

கல்லுக்கும் மணிக்கும் பாகுபாடு பார்க்காத ஆச்சார்யார், காரியதரிசியை அழைத்து பாத்திரத்தில் பால் கொண்டு வரப் பணித்தார். பாலில் மரகதத்தை முக்கினார் ஆச்சார்யார். நகைத் தொழிலில், கல்லின் தரத்தைச் சோதிக்கப் படும் முறை அது. உம்மிடியாரோ திகைத்துப் போனார்.

தன் குணத்தின் பேரில் சந்தேகமா இல்லை மரகதத்தின் பெயரில் சந்தேகமா என்று உம்மிடியார் குழம்பிப் போனார். ஆச்சார்யார் பொறுமையாக கண்ணதாசனை அழைத்துப் பாலைக் காட்டினார். வெளிர்பச்சை வர்ணத்தில் பால் மாறிப்போய் இருந்தது.

வாயடைத்துப் போன கண்ணதாசனிடம் ஆச்சார்யர் விளக்கலானார். *மரகதத்தால் பால் எப்படி பச்சை வர்ணம் பெற்றதோ அதைப் போலவே ஸ்ரீமந் நாராயணனை ஏந்திக் கொண்டிருக்கும் பாற்கடலும், அவனது வர்ணத்தைப் பெறுகிறது*. அதனாலேயே மேகவர்ணமாய் இருக்கிறது என்று விளக்கினார்.

*கண்ணில் நீர்பெருக்கெடுத்த கண்ணதாசன், “திருப்பாற்கடலில் பள்ளிகொண்டாயே ஸ்ரீமந் நாராயணாஎன்ற அற்புதப் பாடலை இயற்றினார்.*

உம்மிடியாரிடம் இந்த மரகதத்தை காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கு மகுடம் செய்து அதில் பதிக்கும்படி கேட்டுக் கொண்டார். தன் மீது சந்தேகம் கொண்டு அவமானப்படுத்தப்பட்டு விட்டதாய் தவறாக நினைத்தமைக்கு மன்னிக்குமாறு வேண்டிக் கொண்டார் உம்மிடியார்.

கல்லின் தன்மையைச் சோதிக்க அல்ல, அடியார்களின் அறியாமையைப் போக்கவே என்று புரிந்து கொண்டார்.

 

 நன்றி இணையம்