நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:09 PM | Best Blogger Tips



 

‘’நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார் என்பதை எப்படி அறிவது ?

சிஷ்யன் ஒருவன் தன் குருவிடம் ஒரு கேள்வி கேட்டான்.

‘’குருவே, நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


இறைவன் சாப்பிட்டால் நாம் பிறருக்கு எப்படி பிரசாதமாக வழங்க முடியும்?

குரவிடம் சிஷ்யன்..

கடவுள் படையலை சாப்பிடுவாரா’’? என்று கேட்டான்.

குரு எதுவும் சொல்லாமல்,

அவனை ஊடுருவி பார்த்துவிட்டு ‘’நமது வேதாந்த வகுப்புக்கு நேரமாகி விட்டது. வகுப்பறையை தயார் செய்.

சிறிது நேரத்தில் நானும் வருகிறேன்என்றார்.

பாடம் ஆரம்பித்த குரு,

அனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருத்தே தோன்றியது என பொருள் கொண்ட பூர்ணமிதம்எனும் ஈஷாவாசிய உபநிஷத்தில் வரும் மந்திரத்தை விளக்கினார் குரு.

அனைத்து மாணவர்களும் மந்திரத்தை மனதில் உரு போட துவங்கினர்.

சிறிது நேரத்திற்கு பிறகு கேள்வி கேட்ட சிஷ்யனை சைகையால் அழைத்தார் குரு.

குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான்.

சிஷ்யன் .,

எனதருமை சிஷ்யனே, மந்திரத்தை மனதில் ஏற்றி கொண்டாயா? ,” என்றார்.

முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே”.

எங்கே ஒரு முறை சொல் பார்ப்போம்

கண்கள் மூடி மனதை ஒருநிலைப்படுத்தி கணீர் குரலில் கூற துவங்கினான்..........

மெல்ல புன்சிரிப்புடன் குரு தொடர்ந்தார்..

நீ சரியாக மனதில் உள் நிறுத்தியதாக தெரியவில்லையே.. எங்கே உனது புத்தகத்தை காட்டு

பதட்டம் அடைந்த சிஷ்யன், புத்தகத்தை காண்பித்து கூறினான்

குருவே தவறு இருந்தால் மன்னியுங்கள். ஆனால் நான் கூறியது அனைத்தும் இதில் இருப்பதை போலவே கூறினேன்…”

இந்த புத்தகத்திலிருந்து படித்துதான் மனதில் உள்வாங்கினாயா?

இதிலிருந்து உள்வாங்கினாய் என்றால் மந்திரம் இதில் இருக்கிறதே?

நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் புத்தகத்தில் இருக்க கூடாதல்லவா?”

சிஷ்யன் குழப்பமாக பார்த்தான்.

குரு தொடர்ந்தார்,

‘’உனது நினைவில் நின்ற மந்திரம் சூட்சம நிலையில் இருக்கிறது.

புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம்.

இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன்.

இறைவனுக்கு படைக்கப்படுவது ஸ்தூல வடிவில் இருந்தாலும் அவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான்.

நீ உள்வாங்கிய பின் புத்தகத்தில் மந்திரம் அளவில் குறைந்துவிட்டதா?

அது போலதான் இறைவன் உட்கொண்ட பிரசாதம் அளவில் குறையாமல் நாம் எல்லோரும் உண்கிறோம்.

ஸ்தூலமாக இருக்கும் நாம் ஸ்தூலமாகவும்,

சூட்சுமமாக இருக்கும் இறைவன் சூட்சுமமாகவும் நைவேத்யத்தை உட்கொள்கிற

தனது பக்தியற்ற தர்க்கம் செய்த அறியாமையை குருவிற்கு நைவேத்யம் செய்து முழுமையடைந்தான்.

 

நன்றி இணையம்

பெயரை கேட்டால் காஷ்மீரின்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:06 PM | Best Blogger Tips

 


ஒரு ராணுவ அதிகாரியின் பெயரை கேட்டால் காஷ்மீரின் ட்ரால் பகுதியிலிருக்கும் தீவிரவாதிகள் பயந்து பாகிஸ்தானுக்கு சென்று விட யோசிப்பார்கள்.

அவர் பெயர் மேஜர் ரிஷி ராஜலக்ஷ்மி (ராஜலக்ஷ்மி என்பது அவரின் தாயின் பெயர்).

இவரை கொலைசெய்ய முயன்ற தீவிரவாதிகள் எல்லாம் மண்ணோடு மண்ணாக போய்விட்டார்கள்.

காலத்தை வென்ற போர்வீரன்.

இந்த தென் இந்தியாவின் ராணுவ அதிகாரியை காஷ்மீர் மக்கள் பாசமாக கான் சாஹிப் என்று அழைக்குமளவிற்கு பொதுமக்களிடம் நெருங்கி பழகினார்.

காஷ்மீர் இளைஞர்களுக்கு இவர் தான் சூப்பர் ஹீரோ.

இவரை பார்த்து ராணுவத்தில் சேர்ந்த அப்பகுதி இளைஞர்கள் அதிகம்

காஷ்மீரில் தீவிரவாதத்தை கட்டுக்குள் கொண்டுவர இவர் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் ஏராளம்,இவரின் சகாக்கள் இவரை பயத்திற்கு பயம் கொடுக்கும் ராணுவ அதிகாரி எதற்கும் அஞ்சாமல் துணிவுடனும் தன்னந்தனியாக எதிரிகளின் சந்திக்கும் தைரியமுடையவர் என்கிறார்கள்.


மார்ச் 2017ல் ட்ரால் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்து,மேஜர் ரிஷி தலைமையிலான 42 ராஷ்டிரிய ரைபிள்ஸ் படை அதிரடிக்கு தயாரானது. மிகவும் ஜன நெருக்கம் மிக்க பகுதியென்பதால் பொதுமக்களுக்கு இடையூறுகள் இருக்க கூடாது என்பதற்காக மேஜருடன் சேர்ந்து தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் வீட்டிற்குள் நுழைந்தனர்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக தீவிரவாதி ஒருவன் சுட்ட குண்டுகல் மேஜர் ரிஷியின் மூக்கையும் தாடையையும் பதம் பார்த்தது...

பாதி முகம் சிதைந்த நிலையிலும் தனி ஒருவனாக இரு தீவிரவாதிகளை சுட்டு கொன்றார்.

மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 14 முறை வெவேறு கட்டங்களில் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. வாழ்வு முழுவதும் பாதி முகத்தை துணியால் மறைத்தே உயிர்வாழவேண்டிய நிலை.

மூன்று வருட மருத்துவ சிகிச்சைக்கு பின் இப்பொழுது முழுத்தகுதி பெற்ற மேஜர் #மீண்டும் காஷ்மீரில் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்து தன்னை காஷ்மீருக்கு அனுப்புமாறு ராணுவ தலைமையகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இவரை போன்ற மாவீரர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமைகொள்கிறோம்...

இவரது வீர தீர செயலை பாராட்டி இந்திய அரசாங்கம் இவருக்கு சேனா மெடல் அறிவித்துள்ளது.

வாழ்த்துக்கள்

தேச காவல் தெய்வமே..!

ஜெய் ஹிந்த்..!

பாரத் மாதா கி ஜெய்..!

நன்றி இணையம்

 


நல்லது நினைக்கும் போது எல்லாம் உனக்கும் நல்லதே

மணக்கால் அய்யம்பேட்டை | 2:03 PM | Best Blogger Tips

 





ஒரு சீன நாட்டு தத்துவக் கதை...

ஒரு நாள் அப்பா, இரண்டு கிண்ணங்களில் கஞ்சி சமைத்து சாப்பாட்டு மேசை மேல் வைத்தார். ஒரு கிண்ணத்தில் கஞ்சியின் மேலே ஒரு முட்டை. அடுத்த கிண்ணத்தின் கஞ்சியின் மேலே முட்டை இல்லை.

அப்பா என்னிடம் கேட்டார். உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ எடுத்துக் கொள். நான் முட்டை இருந்த கஞ்சிக் கிண்ணத்தை எடுத்துக் கொண்டேன்.

என்னுடைய புத்திசாலித் தனமான முடிவுக்காக என்னை நானே பாராட்டிக் கொண்டேன்.

அப்பா சாப்பிட ஆரம்பித்த போது எனக்கு ஆச்சரியம். அவருடைய கிண்ணத்தில் கஞ்சிக்கு அடியில் இரண்டு முட்டைகள். அவசரப்பட்டு நான் எடுத்த முடிவுக்காக வருத்தப் பட்டேன்.


அப்பா மென்மையாகச் சிரித்தபடி சொன்னார். ஒன்றை நினைவில் வைத்துக் கொள். உன் கண்கள் பார்ப்பது உண்மை இல்லாமல் போகலாம்.

அடுத்த நாளும் இரண்டு பெரிய கிண்ணங்களில் கஞ்சி சமைத்துச் சாப்பாட்டு மேசையில் வைத்தார். முதல் நாளைப் போலவே ஒரு கிண்ணத்தில் ஒரு முட்டை இருந்தது. இன்னும் ஒன்றில் இல்லை. அப்பா என்னிடம் கேட்டார். உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ... நீயே எடுத்துக் கொள்!

இந்த முறை நான் கொஞ்சம் புத்திசாலித் தனமாக யோசித்தேன். முட்டை வைக்கப் படாத கிண்ணத்தை எடுத்துக் கொண்டேன்.

அன்றைக்கும் எனக்கு ஆச்சரியம். கிண்ணத்துக்குள் அடி வரை துழாவிப் பார்த்தும் ஒரு முட்டை கூடக் கிடைக்கவில்லை. அன்றைக்கும் அப்பா சிரித்தபடி சொன்னார்.

`எப்போதும் அனுபவங்களின் அடிப்படையில் எதையும் நம்பக் கூடாது. ஏன் என்றால் சில நேரங்களில் வாழ்க்கை உன்னை ஏமாற்றக் கூடும். இதை ஒரு பாடமாக எடுத்துக் கொள்.

மூன்றாவது நாள். மறுபடியும் இரு கிண்ணங்களில் கஞ்சி சமைத்து மேஜையின் மேல் வைத்தார். வழக்கம் போல ஒரு கிண்ணத்தில் முட்டை. மற்றொன்றில் இல்லை.

அப்பா கேட்டார் `நீயே தேர்ந்து எடுத்துக் கொள்’. இந்த முறை அவசரப்பட்டு கிண்ணத்தை எடுக்காமல் பொறுமையாக அவரிடம் சொன்னேன்.

அப்பா நீங்கள் தான் இந்தக் குடும்பத்தின் தலைவர். நீங்கள் தான் நம் குடும்பத்துக்காக உழைக்கிறீர்கள். எனவே முதலில் நீங்கள் கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மற்றதை நான் எடுத்துக் கொள்கிறேன்என்றேன்.

அவர் முட்டை இருந்த கஞ்சிக் கிண்ணத்தை எடுத்துக் கொண்டார். நான் முட்டை இல்லாத கஞ்சியைச் சாப்பிட ஆரம்பித்தேன்.

அன்றைக்கும் எனக்கு ஆச்சரியம். என் கிண்ணத்தின் அடியில் இரண்டு முட்டைகள் இருந்தன. அப்பா என்னைப் பார்த்துச் சொன்னார்.

நினைவில் வைத்துக் கொள். மற்றவர்களுக்கு நீ நல்லது நினைக்கும் போது எல்லாம் உனக்கும் நல்லதே நடக்கும்!

எப்பேர்ப்பட்ட தத்துவம் பார்த்தீர்களா... அடுத்தவர்களுக்கு நல்லது நினையுங்கள். உங்களுக்கும் நல்லதே நடக்கும்.

படித்ததில் பிடித்தது.

 


நன்றி இணையம்



ரத்தன் டாடா சொன்ன

மணக்கால் அய்யம்பேட்டை | 2:02 PM | Best Blogger Tips

 










ரத்தன் டாடா சொன்ன

தன்னம்பிக்கை சிந்தனைகள்.

(1) இரும்பை வேறு எந்த பொருளாலும் அழித்துவிட முடியாது. இரும்பு அழிய வேண்டுமென்றால் துருப்பிடித்து அதுவாகவே அழிந்தால் தான் உண்டு. இதேதான் நமக்கும்....

(2) நம் சிந்தனை சிதைந்து நாமாகவே அழிந்தால்தான் உண்டு. நாம் உறுதியாக நின்றுவிட்டால் எப்பேர்ப்பட்டவனாலும் நம்மை அழித்துவிட முடியாது. எவ்வளவு பெரிய சோதனையாலும் நம்மை வீழ்த்திவிட முடியாது...

(3) நாம் முடங்குவதாகவும், தோற்பதாகவும் உருவாகிற தோற்றங்கள் எல்லாம் தற்காலிகமானவை. எந்த வெற்றியும் நிலையானது இல்லை .எந்தத் தோல்வியும் நிரந்தரமானது இல்லை. இன்றைக்கு வேண்டுமானால் எதிரியின் கை ஓங்கி இருக்கலாம்.

(4) நம் துக்கத்தின் அளவு உயர்ந்து இருக்கலாம். அது நிரந்தரமான ஓங்குதல் இல்லை. அது வலிமையான துக்கமில்லை. துக்கத்தின் சுவடு நிச்சயமாகக் கரையும்.

(5)உடலில் சர்க்கரை அதிகரித்து விட்டது; ப்ரஷர் ஏறிவிட்டது என்று முடங்கிக் கொள்வதற்கும் சிறகுகளைச் சுருக்கிக் கொள்வதற்கும்காரணம் தேடுபவர்களை பார்த்தால்சலிப்பாக இருக்கும்.

(6) என்னதான் ஆகிவிடும்..? ஒரு கை பார்த்துவிடலாம். இங்கு யாருக்குத்தான் பிரச்சினையில்லை? எறும்பிலிருந்து யானை வரைக்கும் அத்தனை உயிரினங்களுக்கும் பிரச்சினைகள் தான்.

(7) மனிதர்கள்தான் எல்லாவற்றையும் தலையில் ஏற்றி நாளை எப்படிச் சமாளிப்பது..? நாளைக் கழித்து எப்படிச் சமாளிப்பது..? அடுத்த ஆண்டு என்ன செய்வது என்று ஆயிரத்தெட்டுக் குழப்பங்களில் சிக்கிச சின்னா பின்னமாகிறோம். எல்லாவற்றையும் சற்றே ஒதுக்கி வைத்துப் பார்ப்போம். இன்றைய கணத்தை வாழ்ந்து பார்க்கலாம்.....

(😎 இன்றைய தினத்தில் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யலாம். நாளை

நடப்பதை நாளை பார்த்துக் கொள்ளலாம்....

(9) செத்துப்போவது பெரிய காரியமே இல்லை. ஒன்றரை நிமிட வேலைதான். அதோடு எல்லாம் முடிந்தது. ஆனால் இனி எந்தக் காலத்திலும் இந்த பூமியில் வாழ்வதற்கான வாய்ப்பே கிடைக்கப் போவதில்லை. அவ்வளவு சீக்கிரமாக முடித்துக் கொள்வதற்காக இவ்வளவு சிரமப்பட்டோம்?

(10) நம் அத்தனை சுமைகளையும் துன்பங்களையும் தூக்கி நம்மைச் சார்ந்தவர்களிடம் கொடுத்துவிட்டுப் போவதுதான் நம் பிறப்பின் அர்த்தமா?

(11) ஓர் எறும்பைப் பிடித்துத் தண்ணீரில் போட்டால் அது கடைசி மூச்சு வரைக்கும் போராடிப் பார்த்துவிட்டுத்தான் சாகிறது. ஒரு மீனைத் தூக்கி தரையில் வீசினால் அதுவும் கடைசி மூச்சு வரைக்கும் தம் கட்டி பார்த்து விடுகிறது......

(12) மனிதர்கள் நமக்கு என்ன? நாம் மட்டும் ஏன் இடையிலேயே மூச்சை நிறுத்திக் கொள்ள வேண்டும்?

(13) நம்மிடம் உயிர் இருக்கிறதா..? தெளிவான சிந்தனை இருக்கிறதா? அது போதும். எல்லாவற்றையும் சமாளித்துவிடலாம். யார் எதிர்த்தாலும் மோதிப் பார்த்துவிடலாம்....

(14) நம்பிக்கைதான் வாழ்க்கை. கடைசி வரைக்கும் முயற்சித்துப் பார்த்துவிட்டேன் இனி வாய்ப்பில்லை என்று சொல்வதே கூட அவநம்பிக்கை தான்.அதை உடைத்து நொறுக்கினால் போதும். அந்தச் சுவருக்கு அப்பால் காத்திருக்கும் வெற்றி நமக்குத்தான்....

 

நன்றி இணையம்

உனக்கு தகுதி இல்லாத இடத்தில் நீ இருக்காதே... "

மணக்கால் அய்யம்பேட்டை | 1:56 PM | Best Blogger Tips





ஒரு தந்தை தனது இறுதி காலத்தில் மகனை அழைத்து சொன்னார்... மகனே, இது உனது பூட்டனின் கைக்கடிகாரம், 200 வருடங்கள் பழைமை வாய்ந்தது, நான் இதனை உனக்கு தருவதற்கு முன்னால் நீ கடைவீதிக்கு சென்று கைக்கடிகார கடையில் நான் இதனை விற்கப் போகிறேன் எவ்வளவு விலை மதிப்பீர்கள் என்று கேட்டுப் பார் என்றார்.

 

அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம், இது பழையது என்பதால் 5 டாலர்கள் மட்டுமே தர முடியும் என்கின்றனர் என்றான். தந்தை பழைய பொருட்கள் விற்கும் Antique   கடைக்குப் போய் கேட்டுப் பார் என்றார்.

அவன் போய் கேட்டு விட்டு, தந்தையிடம் இதற்கு 5000 டாலர்கள் டாலர்கள் தர முடியும் என்கின்றனர் என்றான்.

 





தந்தை, இதனை Museum கொண்டு சென்று விலையை கேட்டுப்பார் என்றார்... அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம், நான் அங்கு போன போது, அவர்கள் அதனை பரிசோதனைக்குட்படுத்த ஒருவரை வரவழைத்து, பரிசோதித்துவிட்டு, என்னிடம் இதற்கான பெறுமதி ஒரு மில்லியன் டாலர்கள் என்கின்றனர் என்றான்.

 

தந்தை மகனை பார்த்து, மகனே! சரியான இடம் தான், உனது அந்தஸ்தை சரியாக மதிப்பிடும். எனவே,  பிழையான இடத்தில் நீ உன்னை நிறுத்திவிட்டு, உன்னை  மதிக்கவில்லை என்று நீ கோபப்படுவதில் அர்த்தம் இல்லை என்றார்.

 


"உன்னுடைய மரியாதையை அறிந்தவனே உன்னை கண்ணியப்படுத்துவான்... உனக்கு தகுதி இல்லாத இடத்தில் நீ இருக்காதே... "

இதனை வாழ்க்கையின் பாடமாக எடுத்துக்கொள்...

 

நமக்கு மரியாதை இல்லாத இடத்தில் ஒரு நிமிடம் கூட செலவழிக்காதீர்கள்...!!!



நன்றி இணையம்


வாரன் பபேட் நமக்கு கூறும் அறிவுரை.!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:51 AM | Best Blogger Tips

 






உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில்ஒருவரான

வாரன் பபேட் நமக்கு கூறும் அறிவுரை.!

1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்.ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும்.

2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே

தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும்.

ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நமது

சந்ததியை தெருவில் நிறுத்திவிடும்.

3.சேமித்த பிறகு இருக்கும் மீதத்தை தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது.


சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானது.

4. ஆற்றின் ஆழத்தை இரண்டு கால்களாலும் அளவிடக்கூடாது.எதிலும்

முன்னெச்சரிக்கை அவசியம்.

5. அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே.நஷ்டம் ஏற்பட்டாலும், வாழ்க்கையை இழக்கும் அளவிற்கு இருக்ககூடாது என்பதற்கான சிந்தனை.

6. நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். மேலும் மிக அவசியமான ஒன்று. எல்லோரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது........

இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்...

நேரத்தின் மதிப்பை சொல்வார்கள்...!

ஒரு மில்லி செகண்டின் மதிப்பை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வாங்கியவரைக் கேட்டால் தெரியும்...!

ஒரு செகண்டின் மதிப்பை விபத்தில் உயிர் தப்பியவரைக் கேட்டால் தெரியும்...!

ஒரு நிமிடத்தின் மதிப்பை தூக்கிலடப்படும் கைதியைக் கேட்டால் தெரியும்...!

ஒரு மணி நேரத்தின் மதிப்பை

உயிர் காக்க போராடும் மருத்துவரைக் கேட்டால் தெரியும்...!

ஒரு நாளின் மதிப்பை அன்று வேலை இல்லாத தினக் கூலி தொழிளாலரைக் கேட்டால் தெரியும்...!

ஒரு வாரத்தின் மதிப்பை வாரப் பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியரைக்

கேட்டால் தெரியும்...!

ஒரு மாதத்தின் மதிப்பை குறைப் பிரசவம் ஆகும் ஒரு தாயைக் கேட்டால் தெரியும்...!

ஒரு வருடத்தின் மதிப்பை தேர்வில் தோல்வியுற்ற ஒரு மாணவனைக் கேட்டால் தெரியும்...!

நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார்.ஓடுவது முள் அல்ல..! உன் வாழ்க்கை.

வாரன் பபேட்

Hats Off Sir.

 நன்றி இணையம்