தியானப் பயிற்சிகளை அறிந்து கொள்வோம்.

மணக்கால் அய்யம்பேட்டை | 5:00 PM | Best Blogger Tips
 
முதலில் எளிமையான சில தியானப் பயிற்சிகளை அறிந்து கொள்வோம். மனதைத் தியானத்தில் லயிக்க வைப்பதில் ஓரளவு வெற்றி பெற்ற பின் மற்ற மேலான தியானப் பயிற்சிகளுக்குச் செல்லலாம். முதல் தியானம் மூச்சின் மீது கவனம் வைக்கும் தியானம். இது கிட்டத்தட்ட ஆல்ஃபா அலைவரிசைக்குச் செல்லச் செய்த பயிற்சியைப் போன்றது தான்.
1) அமைதியாக ஓரு அமைதியான இடத்தில் அமருங்கள். தரையில் சம்மணமிட்டு அமர முடிந்தவர்கள் அப்படி அமரலாம். முடியாதவர்கள் ஒரு நாற்காலியிலும் அமர்ந்து கொள்ளலாம். முடிந்த வரை நேராக நிமிர்ந்து இருங்கள். கண்களை மூடிக் கொள்ளுங்கள். உங்கள் மூச்சின் மீது கவனம் வையுங்கள். உங்கள் மூச்சு இயல்பானதாக இருக்கட்டும்.

2) மூச்சு உங்கள் மூக்கின் வழியாக உள்ளே சென்று வெளி வரும் பயணம் வரை அதன் மீதே உங்கள் கவனத்தை வைத்திருங்கள். மூச்சு முழுமையாகவும் சீராகவும் மாற ஆரம்பிக்கும்.

3) இனி மூச்சை எண்ண ஆரம்பியுங்கள்.

4) மூச்சை உள்ளிழுங்கள். ஒன்று. வெளியே விடுங்கள். இரண்டு. மீண்டும் உள்ளே இழுங்கள். மூன்று. வெளியே விடுங்கள். நான்கு……..

5) உங்கள் கவனம் ஆரம்பங்களில் கண்டிப்பாக மூச்சை விட்டு மற்ற விஷயங்களுக்குச் செல்லலாம். அதை உணர்ந்த உடனேயே மீண்டும் மூச்சிற்கே கொண்டு வாருங்கள். எண்ணிக்கையைத் தொடருங்கள்.

6) உங்கள் மூச்சு தானாக ஆழமாகும், அமைதியாகும், வேகம் குறையும். எண்ணிக்கையைத் தொடருங்கள். நூறு ஆகும் வரை எண்ணி விட்டு நிறுத்துங்கள். பின் கண்களைத் திறந்து, நிதானமாக எழுந்து தியானத்தை முடியுங்கள்.

7) இந்த தியானத்தின் போது உடலில் பல்வேறு உணர்வுகளை நீங்கள் உணர்வீர்கள். மூச்சு மூக்கு தொண்டை பகுதிகளில் சென்று வரும் போதும், நுரையீரல், வயிற்றுப் பகுதிகளை நிறைத்து திரும்பும் போதும் இது வரை உணர்ந்திராத சில நுண்ணிய உணர்வுகளை நீங்கள் உணர ஆரம்பிக்கலாம். அதை உணரும் போதும் உங்கள் எண்ணிக்கையை நிறுத்தி விடாதீர்கள்.

8) ஆரம்ப காலங்களில் சிலருக்கு தசைப்பிடிப்பு போன்ற அசௌகரியங்கள் ஏற்படலாம். நீங்கள் உட்காரும் நிலையை சற்று மாற்றிக் கொள்வதில் தவறில்லை. ஆனால் மூச்சின் எண்ணிக்கை செய்வது தடைப்படாமல் இருக்கட்டும். இன்னொரு எளிய தியானத்தையும் அறிந்து கொள்ளலாம்.

இது தீப ஒளிச்சுடர் தியானம்.

இந்த தியானத்தை அரையிருட்டு அறையில் செய்வது நல்லது. உங்கள் கண்பார்வைக்கு நேரான ஓரிடத்தில் இரண்டு அல்லது மூன்று அடிகள் தூரத்தில் மெழுகு வர்த்தி அல்லது விளக்கு பற்ற வைத்துக் கொள்ளுங்கள். மேலே சொன்ன தியானத்தின் முதலிரண்டு படிகள் இந்தத் தியானத்திற்கும் பொருந்தும். முறையாக அமர்ந்து, கண்களை மூடி மூச்சை சீராக்கிக் கொள்ளுங்கள்.

மூன்றாவதாக மூச்சில் முழுக்கவனம் வைப்பதற்குப் பதிலாக, கண்களைத் திறந்து அந்த எரியும் தீபத்தின் ஒளிச்சுடரில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். எண்ணங்கள் அந்த தீப ஒளியை விட்டு ஓட ஆரம்பிக்கும் போதெல்லாம் மனதை மென்மையாக திரும்பவும் அந்த தீப ஒளிக்கே கொண்டு வந்து விடுங்கள்.

மனம் மெழுகுவர்த்தி பற்றியோ, விளக்கு பற்றியோ எண்ணக் கூட விடாதீர்கள். அந்த சுடர் மிகப்பிரகாசமாக எரிகின்றது, மிக மங்கலாக எரிகின்றது என்பது போன்ற எண்ணங்களைக் கூட வளர்த்தாதீர்கள். உடனே அதனுடன் சம்பந்தப்பட்ட மற்ற எண்ணங்கள் நம் மனதை ஆக்கிரமிக்க ஆரம்பித்து விடக்கூடும். தீப ஒளியில் மனம் லயிக்கப் பாருங்கள்.

மனம் அதை விட்டுச் செல்லும் போதெல்லாம் சலிக்காமல் அந்த தீபச்சுடருக்கே திரும்பக் கொண்டு வாருங்கள். நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள் என்று அறிந்த பின் உங்கள் மனம் சிறிது சிறிதாக அலைவதை நிறுத்தி வசப்படும். தியான நிலை கைகூடும். சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் இந்த தியானத்தைச் செய்து முடியுங்கள்.

இந்த இரண்டு தியானங்களையும் முடித்த பின்னரும் தடாலென்று எழுவது, உடனே பரபரப்பான சூழ்நிலைக்கு மாறுவது கூடாது. சற்று நிதானமாக தியான நிலையில் இருந்து இயல்பான நிலைக்குத் திரும்புங்கள்.
அப்போது தான் அந்த தியானத்தால் பெற்ற அமைதியின் ஒரு பகுதியை மனதின் ஆழத்தில் நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ள முடியும். தினமும் இரு முறை தியானம் செய்ய முடிந்தவர்கள் காலை ஒரு தியானமும், மாலை ஒரு தியானமும் செய்யலாம். அப்படி இரண்டு முறை செய்ய முடியாதவர்கள் இந்த இரண்டு தியானங்களில் ஒன்றையாவது தினமும் செய்யுங்கள்.
Via Sinthupuram

வாய்ப் புண் Oral Ulcer வீட்டு வைத்தியம் !

மணக்கால் அய்யம்பேட்டை | 4:50 PM | Best Blogger Tips


Stomatitis வாய்ப் புண் Oral Ulcer

வாய்ப்புண் (Mouth Ulcer) என்றால் என்ன?

வாய்ப் பகுதியிலுள்ள தோல் அதிக மென்மையாவதன் மூலம் வெளிப்படும் நரம்புப் பகுதியே வாய்ப்புண் (மவுத் அல்சர்) என்படுகிறது. இப்பகுதியில் நீரோ, உணவோ வேறு எந்த ஒரு பொருளோ பட்டால் சுர்ர்என்று நொடிப்பொழுதில் அது பாதிப்படைந்தவருக்கு எரிச்சலை அதிகப்படுத்தும்.

யாருக்கு வாய்ப்புண் ஏற்படும்?

வாய்ப்புண் ஒரு தொற்று நோயல்ல. இது பாக்டீரியாக்களினால் ஏற்படும் தொந்தரவாகும். நோய் எதிர்ப்பு சக்திக் குறைவாயுள்ளவர்களை இது அதிகமாகத் தாக்குவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. குறிப்பாக விட்டமின் B12, இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் அமிலக் குறைபாடு உள்ளவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்புண்கள் ஏற்படுகின்றன.

வாய்ப்புண் ஏற்பட என்ன காரணம்?

மருந்துகள்: ஆச்சரியப்பட வைக்கும் வகையில் வேறொரு நோய்க்காக உட்கொண்டு வரும் மருந்துகள், ஒருவருக்கு வாய்ப்புண் ஏற்படக் காரணமாக அமைகின்றன. நீங்கள் உட்கொண்டு வரும் ஏதேனும் ஒரு மருந்து இத்தகைய பின் விளைவுகளை ஏற்படுத்துகிறதா? எனப் பரிசோதியுங்கள்.

பரம்பரை / மரபு நோய்: பெற்றோரில் எவரேனும் ஒருவருக்கு வாய்ப்புண் வாடிக்கையான நிகழ்வாக இருந்திருந்தால், பிள்ளைகளுக்கும் அவை தொடரும் என்பது புள்ளிவிபரங்கள் தரும் செய்தி.

ஹார்மோன் மாற்றங்கள்: ஆண்களைவிட, பெண்களுக்கு அதிகம் வாய்ப்புண் ஏற்படுவதாக அறிக்கைகள் சொல்கின்றன. பிரசவ காலங்களிலும் இறுதி மாதவிடாயின் போதும் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் வாய்ப்புண்களை தோற்றுவித்து விடுகின்றனவாம். உணவு ஒவ்வாமை (அலர்ஜி): உணவு ஒவ்வாமையினால்கூட வாய்ப்புண்கள் ஏற்படுவதாக மருத்துவ அறிக்கைகள் சொல்கின்றன.
காயம்: உணவை மெல்லும்போது தவறுதலாகக் கன்னத்தின் உட்புறத்தில் சில நேரங்களில் கடித்துக் கொள்வதுண்டு. முரட்டுத்தனமாகப் பல் விளக்குபவர்கள், பிரஷ்ஷைக் கொண்டு வாயின் உட்புறத்தில் ஏற்படுத்திக் கொள்ளும் மெல்லியக் காயங்கள் மூலமும் வாய்ப்புண் ஏற்படுகிறதாம்.

பாக்டீரியா: வாயில் ஏற்கனவே தங்கியுள்ள பாக்டீரியாக்கள். வினை வாயிலேயே உள்ளது என்ற நினைப்பைக் கொண்டு சுத்தப்படுத்துதலைப் பழக்கமாக்கிக் கொள்ளுதல் அவசியம்.

இயந்திர வாழ்க்கை முறை: அதிக அளவில் உணர்ச்சி வசப்படுவதாலோ, மன அழுத்தம் அதிகரிப்பதாலோ வருகிறதாம். பரபரப்பாக மாறிவிட்ட நம் இயந்திர வாழ்க்கை முறையில் நிதானித்து, மனத்தை இலேசாக்கும் விஷயங்களில் ஈடுபடுவது குறைந்து விட்டதும் ஒரு காரணம்.

உணவுப் பழக்கம் (டயட்): முறையற்ற உணவு முறை முக்கியக் காரணமாம். அத்துடன் முட்டை, காஃபி, உறைபாலேடு (சீஸ்), ஸ்ட்ராபெர்ரி, பைனாப்பிள் போன்ற அமிலத்தன்மை உள்ள உணவுகளை அதிகம் உண்ணுவதால் வாய்ப்புண் ஏற்படுகிறது.

பற்பசை (டூத் பேஸ்ட்): Sodium lauryl sulphate அதிக அளவில் கலந்துள்ள சில பேஸ்ட்களை உபயோகிப்பதாலும் வாய்ப்புண் ஏற்படுகிறது.
மாற்றங்கள்: திடீரென கைவிடப்படும் புகைப்பிடித்தல் பழக்கத்தினால் வாய்ப்புண் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. என்றாலும், இத்தகைய வாய்ப்புண்கள் தற்காலிகமானவையே.
                                                                                        தடுக்க வழியுண்டா?




அறவே ஒழிக்க முடியாவிட்டாலும் கீழ்க்கண்டவற்றைக் கடைபிடித்து வருவதன் மூலம் வாய்ப்புண்கள் உண்டாவதைத் தவிர்க்கலாம்:
- நல்ல உணவுப் பழக்க வழக்கம்
- தினசரி மிதமான உடற்பயிற்சி
- மன அழுத்தத்தைக் குறைப்பது
- தேவையான அளவு தூங்கி ஓய்வெடுப்பது
இத்துடன், உப்பு நீர் அல்லது நுண் கிருமிகளை அழிக்கவல்ல ஆண்ட்டி பாக்டீரியா (மவுத்வாஷ்) கொண்டு வாயைக் கொப்பளித்தல், வாயை இயன்றவரையில் சுத்தமாக வைத்திருத்தல், தினமும் காலையிலும் இரவில் உறங்குவதற்கு முன்னும் மருத்துவர் பரிந்துரைக்கும் முறையில் பல் துலக்குதல் போன்றவை வாய்ப்புண் அண்டாமல் தடுக்கும்.

வாய்ப்புண்ணுக்காக வீட்டு வைத்தியம் ஏதாவது?

வாய்ப்புண் வலியால் அவதிப்படுபவர்கள் கீழ்க்கண்டவற்றில் எளிமையானதொரு வீட்டு வைத்தியத்தைத் தேர்ந்தெடுத்து செய்து பார்க்கலாம்.

தேன், சுத்தமான நெய் அல்லது கிளிசரின் (Glycerin) ஆகியவற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவுவது பலன் தரும்.

வாழைப்பழத்தைத் தயிருடன் கலந்து, காலை உணவாக உட்கொண்டால், வாய்ப்புண் மூலம் ஏற்படும் எரிச்சல் அன்று முழுவதும் மறையும்.

தக்காளிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி வாயில் போட்டு மென்று தின்பது வாய்ப்புண்ணை ஆற்றிவிடும். மிதமான சூடுள்ள நீரில் உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றைக் கலந்து (மவுத் வாஷ்) கொப்பளிப்பது பலன் அளிக்கும்.
மஞ்சள் தூளை நீரிட்டுக் கொதிக்க வைத்து, சிறிது ஆறிய பின் மிதமான சூட்டில் வாய்க் கொப்பளித்தால் பலன் கிடைக்கும்.

மாதுளம்பழத் தோலை நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டிய நீரைக் கொண்டு வாய்க் கொப்பளித்தால் வாய்ப்புண் எரிச்சல் மறையும்.

கவனத்தில் கொள்ள வேண்டியது:

வாய்ப்புண் என்பது தற்காலிகமான நோயாகும். வேறொரு செயல் மூலம் ஏற்படுவதாகும். குறைந்த பட்சம் ஒரு வாரம், அதிக பட்சம் பத்து நாட்களில் வாய்ப்புண் குணமாகி விட வேண்டும். அதுவல்லாமல் வாய்ப்புண் தொடர்ந்து கொண்டிருக்கும் பட்சத்தில் தாமதிக்காமல் உடனடியாகப் பல் மருத்துவரை அணுகி முழுமையான பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

Via  Azeez Ahmed

வாய்புண் குறைய !

மணக்கால் அய்யம்பேட்டை | 4:43 PM | Best Blogger Tips

 

- கொள்ளுக்காய்

கொள்ளுக்காய்
அறிகுறிகள்:
  • வாய்புண்.
தேவையான பொருட்கள்:
  1. கொள்ளுக்காய் வேர்.
செய்முறை:

கொள்ளுக்காய் வேரை கொதிக்கவைத்து ஆறிய பின் வாய்கொப்பளித்து வந்தால் வாய்புண் குறையும்.
-----------------------------------------------------------------------------------------------------------------

நெல்லி இலைகளை அவித்த நீரீனால் அடிக்கடி வாய் கொப்பளித்துவர வாய்ப்புண்கள் ஆறிவிடும். நெல்லிச் சாறையும், தேனையும் சமமாகக் கலந்து, மூச்சுத் திணறல், நீண்ட கால விக்கல் நோய் முதலியவற்றிற்குக் கொடுத்து வரலாம். சில மருத்துவர்ள் இதோடு திப்பிலி சூரணத்தையும் சேர்த்துக் கொடுப்பார்கள்.

வாய்ப்புண் போக, மணத்தக்காளி இலைகளை நிறைவாய் போட்டு மென்று, சற்று நேரம் வாயில் வைத்திருந்து விழுங்கவும். இவ்வாறு முற்றின தேங்காயையும் உபயோகிக்கலாம்.

வாயில் வயிற்றில் புண் இருந்தால் பாலில் சிறிது தேனைக் கலந்து சாப்பிட்டுவர சில நாட்களில் புண் குணமாகும். வாய்ப்புண் அதிகமாகி விட்டால் காரத்தை அடியோடு நிறுத்த வேண்டும். மாசிக் காயை உடைத்து அதன் தோலை மாத்திரம் வாயில் போட்டு அப்படியே அடக்கிக் கொள்ளுங்கள். ஊறிவரும் நீரை விழுங்குங்கள். வாய்ப்புண் சரியாகிவிடும்.

வாயில் புண் இருந்தால், அகத்திக்கீரையைச் சமைத்துப் சாப்பிடவும். வாய்ப்புண்ணும் நாக்குப் புண்ணும் குணமாகும். புண் அதிகமாக இருந்தால், புண் மீது பசு வெண்ணையைத் தடவுங்கள். குழந்தைகளுக்கு வாய்ப்புண் வந்தால், மாசிக்காயை பாலில் கரைத்து தேனில் குழைத்து நாக்கில் தடவ குணமாகும்.

தீராத வாய்ப்புண்ணிற்கு கடுக்காயை உடைத்து ஒரு துண்டை வாயில் அடக்கி வைத்திருக்கவும். சாறு தொண்டையில் போகப்போக உடனடியாக குணம் கிடைக்கும். பச்சரிசி, பயத்தம்பருபபு 1 ஸ்பூன் வெந்தயம், முழு  பூண்டு 1 உரித்துப்போட்டு குக்காரில் வைத்து வெந்தவுடன், அத்துடன் கெட்டியான தேங்காய்ப்பால் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்புண் ஆறி வாய்ப்புண்ணும் நீங்கும். மணத்தக்காளிக் கீரையையும், அகத்திக் கீரையையும் பொரியலாகச் செய்து, தேங்காய்ப் பருப்பு சேர்த்து சாப்பிட்டால், வாய்புண் இரண்டே நாட்களில் குணமாகும்.
----------------------------------------------------------------------------------------------------------

வாய் புண் குறைய‌ - அரசமரபாட்டை மற்றும் இலை

அரசமரபாட்டை மற்றும் இலை
அறிகுறிகள்:
  1. உணவை உண்ணும் போது எரிச்சல்
  2. வாய் மற்றும் உதட்டில் புண்
தேவையான பொருள்கள்:
  1. குடிநீர்
  2. அரசமர பட்டை
செய்முறை :
 
அரசம் பட்டையை வெந்நீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி வடிகட்டி தினமும் காலை மாலை இரண்டு நேரமும் வாய் கொப்பளிக்கவும்
------------------------------------------------------------------------------------------------------

உதடு சம்பந்தமான நோய் - அத்திக்காய்

அத்திக்காய்
அறிகுறிகள்:
  1. தீராத வாய்ப்புண்
  2. வாயை மெல்லும்போது வலிக்கும்.
  3. உதட்டின் வீக்கம்.
  4. உலர்ந்த உதடு.
தேவையான பொருட்கள்:
  1. அத்திக்காய்
செய்முறை:

அத்திக்காயை தினமும் 3 வேளை சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் மற்றும் உதடு புண் குணமாகும்.
-----------------------------------------------------------------------------------------------------------

நாக்கில் புண் - அகத்தி இலை

அகத்தி இலை
அறிகுறிகள்:
  1. தீராத வாய்ப்புண்
  2. வாயை மெல்லும்போது வலிக்கும்.
  3. சாப்பிடும் போது வாய் வலிக்கும்.
தேவையான பொருட்கள்:
  1. அகத்தி இலை
  2. தண்ணீர்
செய்முறை:
  1. அகத்தி இலையை முதலில் அலச வேண்டும்.
  2. 2 கப் தண்ணீருடன் அகத்தி இலையை கொதிக்க வைக்க வேண்டும்.
  3. கொதிக்க வைத்த சாரை வடிகட்ட வேண்டும்.
  4. அந்த சாரை 3 வேளை சாப்பிட்டு வந்தால் நாக்கில் புண் குணமாகும்.
----------------------------------------------------------------------------------------------------------

வாய்ப்புண் - தேன் , தேங்காய்ப்பால்

தேன்
அறிகுறிகள்:
  1. வாய் எரிச்சல்.
  2. வாய் வறண்டு போதல்.
தேவையானப் பொருள்கள்:
  1. தேன்
  2. தேங்காய்ப்பால்

செய்முறை:


தேனுடன்  தேங்காய்ப்பால் கலந்து  குடித்தால் வாய்ப்புண் குணமாகும்.
--------------------------------------------------------------------------------------------------------

வாய்ப்புண் போக - கசகசா , பசும்பால்

கசகசா 

அறிகுறிகள்:
  1. வாய் காந்துதல்
தேவையானப் பொருள்கள்:
  1. கசகசா
  2. பசும்பால்
செய்முறை:

கசகசாவை தூளாக்கி பசும்பாலில் கலந்து இரவு குடிக்கவும்.
------------------------------------------------------------------------------------------------------------

வாய்ப்புண்ணிலிருந்து விடுபட - பப்பாளி

பப்பாளி
அறிகுறிகள்:
  1. வாய் புண்.
  2. வாய் எரிச்சல்.
தேவையானப் பொருள்கள்:
  1. பப்பாளி
செய்முறை:

பப்பாளிப் பழம் சாப்பிட வாய்ப்புண் ஆறிவிடும்.
------------------------------------------------------------------------------------------------------------

வாய்ப் புண் குறைய - ரோஜா இதழ்கள்

ரோஜா இதழ்கள்
அறிகுறிகள் :
  1. வாய்ப்புண்.
தேவையான பொருட்கள் :
  1. ரோஜா இதழ்கள்.
செய்முறை :

ரோஜா இதழ்களை அப்படியே சாப்பிட்டால் வாய்ப்புண் குறையும்.
-----------------

நாக்கு புண் குறைய- நெல்லி , தேன்

தேன்
அறிகுறிகள் :
  1. நாக்கு புண்.
தேவையான பொருட்கள் :
  1. நெல்லி வேர்பட்டை
  2. தேன்
செய்முறை :

நெல்லி வேர்பட்டை பொடி செய்து தேனில் கலந்து தடவ நாக்கு புண் குறையும்.
-----------------------

வாய்ப்புண் குறைய- பெருஞ்சீரகம்

பெருஞ்சீரகம் 

அறிகுறிகள்:
  1. வாய்ப்புண்.
தேவையான பொருட்கள்:
  1. பெருஞ்சீரகம்
செய்முறை:

பெருஞ்சீரகம் தினமும் சாப்பிட வாய்ப்புண் குறையும்.
------------------------------------------------------------------------------

வாய் நாற்றம் குணமாக- ரோஜா இதழ்கள் , கரும்புச் சாறு

கரும்புச் சாறு
அறிகுறிகள்:
  1. வாய் நாற்றம்.
தேவையான பொருட்கள்:
  1. கரும்புச் சாறு
  2. ரோஜா இதழ்கள்
செய்முறை:

கரும்புச் சாற்றில் ரோஜா இதழ்களை அரைத்து சாப்பிட்டு வர வாய் நாற்றம் குணமாகும்.
--------------------

வாய்ப்புண் குணமாக - அகத்திக் கீரை , மணத்தக்காளிக் கீரை

மணத்தக்காளிக் கீரை
அறிகுறிகள்:
  1. வாய்ப்புண்
தேவையான பொருட்கள்:
  1. அகத்திக் கீரை
  2. மணத்தக்காளிக் கீரை
செய்முறை:

அகத்திக் கீரை மற்றும் மணத்தக்காளிக் கீரையை சமைத்து  சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும்.
------------------------------------

வாய்ப்புண் குணமாக - மணத்தக்காளி

மணத்தக்காளி
அறிகுறிகள்:
  1. வாய்ப்புண்.
  2. வாய் எரிச்சல்.
தேவையான பொருள்கள்:
  1. மணத்தக்காளி
செய்முறை:

மணத்தக்காளியை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் விரைவில் குணமாகும்.
--------------------------

வாய்ப்புண் மறைய - கொப்பரை தேங்காய் , கசகசா,பால்

கசகசா
அறிகுறிகள்:
  1. வாய் வறண்டு போதல்.
  2. வாய்ப்புண்.
  3. வாய் எரிச்சல்.
தேவையான பொருள்கள்:
  1. கொப்பரை தேங்காய்
  2. கசகசா
  3. பால்
செய்முறை:

ஒரு துண்டு கொப்பரை தேங்காய், ஒரு ஸ்பூன் கசகசா, இரண்டையும் ஒன்றாக சேர்த்தரைத்து, ஒரு தம்ளர் பசும்பாலில் அதை போட்டுக் கொதிக்க வைத்து ஆறின பிறகு தடவி வந்தால் வாய்ப்புண் மறைந்து போகும்.
Via  மூலிகை மருத்துவம்.

தேன்.. தேன்.. தித்திக்கும் தேன்..

மணக்கால் அய்யம்பேட்டை | 4:35 PM | Best Blogger Tips
              தேன் என்ற வார்த்தையைக் கேட்டாலே அனைவரின் நாவிலும் எச்சில் ஊறும். இயற்கையின் கொடைகளில் தேனும் ஒன்று. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நம் சித்தர்கள் தங்களின் தவப்பயனால் கண்டறிந்த சித்த மருத்துவத்தில் தேனை துணை மருந்தாக பயன்படுத்துகின்றனர். தேன் எத்தனை வருடங்கள் ஆனாலும் கெடாது. தன்னுடன் சேர்ந்த பொருட்களையும் கெடாமல் பாதுகாக்கும்.

சர்க்கரைக்கு பதிலாக தேனை பயன்படுத்தலாம். தேனில் குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் போன்ற சர்க்கரை பொருட்கள் உள்ளன.

தேனில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு தேனுக்கும் தனித்தனி மருத்துவ குணங்கள உண்டு.

மலைத்தேன்

இது மலைப் பகுதிகளில் பாறைகளின் இடுக்குகளிலும் பெரிய மரக் கிளைகளிலும் பெரும் கூடாக கட்டியிருக்கும். இந்த வகைத் தேன் அரிய மருத்துவ குணங்களைக் கொண்டது. சித்த மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

நாள்பட்ட சளி, இருமல் போன்றவற்றிற்கும் உடலை வலுப்படுத்தவும், நோயுற்றவர்களுக்கு உடல் நலம் பேணவும் மலைத்தேன் சிறந்த மருந்தாகும். நல்ல குரல் வளத்தைக் கொடுக்கக்கூடியது.

கொம்புத்தேன்

மரங்களின் பொந்துகளில் கூடு கட்டும். இந்த தேனீக்கள் சிறிய கொசுவைப் போல் காணப்படும். இந்த வகையான தேன் கிடைப்பது மிகவும் அரிது.

புற்றுத்தேன்

கண் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.

மனைத்தேன்

இது வீடுகளில் கட்டுகின்ற தேன். பசியினைத் தூண்டும். உடலை வலுவாக்கும். கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

பொதுவாக தேன் சிறந்த கிருமி நாசினி. புண்களை ஆற்றும். நெருப்பினால் உண்டான காயங்களை குணப்படுத்தவும், கொப்புளங்கள் ஏற்படாமல் இருக்கவும் இது பயன்படுகிறது.

நல்ல தூக்கத்திற்கு

இரவு படுக்கைக்கு செல்லும்முன் தேன் 2 ஸ்பூன் பாலிலோ, அல்லது நீரிலோ கலந்து அருந்திவந்தால் நல்ல சுகமானஉறக்கம் வரும்.

தேன் பற்களில் உண்டாகும் மஞ்சள் கறைகளை போக்கும். பற்களுக்கு பலம் தரும்.

தேனை தினமும் பல், ஈறுகளில் தடவி வந்தால் பற்கள் சுத்தமாகவும், பளிச்சென்று காணப்படும். பல் ஈறுகளில் நுண் கிருமிகள் வளருவதைத் தடுக்கும்.

தேனை வாய்புண் மீது தடவினால் புண்கள் விரைவில் குணமாகும். வயதானவர்களுக்கு தேன் உடல் வலிமையையும் சக்திøயயும் கொடுக்கும்.

நீண்ட நாள் சளி நீங்க

பூண்டு எண்ணெய் 1 ஸ்பூன்

தேன்                                   3 ஸ்பூன்

கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை அருந்தி வந்தால் சளித்தொல்லை நீங்கும் .

தேனை அதிக அளவு எடுத்து குடிக்கக் கூடாது. சிறிது சிறிதாக எடுத்து உள்ளங்கையில் வைத்து நாவினால் நக்கி சாப்பிட்டால் உமிழ் நீருடன் தேன் சேர்ந்து உடலுக்குள் செல்கிறது.

முகப் பொலிவிற்கு

2 ஸ்பூன் தேன் எடுத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால் முகத்தில் உள்ள கழிவுகள் வெளியேறும். முகம் பொலிவு பெறும். (தேனை தடவும்போது ரோமத்தில் படாதவாறு தடவவேண்டும். ரோமத்தில் பட்டால் ரோமம் வெளுத்துப் போகும்)

வறண்ட சருமம் மென்மையாக

தேன் 1ஸ்பூன்

பால் 1 டம்ளர்

இரண்டையும் குளிக்கும் நீரில் கலந்து குளித்து வந்தால் மேனி மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறும்.

தேன் 2 ஸ்பூன் எடுத்து அதனுடன் பன்னீர் 100மிலி கலந்து தோலின் மீது தடவினால் தோல் பளபளக்கும்

புதுத்தேன்

நிறைந்த ஆயுளையும் அழகையும் கொடுக்கும் இதை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் நெஞ்சில் கபம் உண்டாகும்.

பழைய தேன்

· இது புளிப்பும் இனிப்புமாயிருக்கும் இதனால் வாதப் பெருக்கம், வயிற்றெரிச்சல் உருவாகும்.

· தேன் மருந்துகளுக்கு சிறந்த அனுபானமாக துணை மருந்தாக பயன்படும்.

· தேன் இதயத்திற்கு ஒரு சிறந்த மருந்து. இது மார்புவலி படபடப்பு ஆகியவற்றிற்கு நல்லது.

· தேன் எளிதில் சீரணமாகும். எனவே செரியாமையைத் தீர்க்க கிடைத்த வரப்பிரசாதம்.

· தேன் இரைப்பையில் அதிக அமிலம் சுரப்பதை குறைக்கும். பசியின்மையை, வாய் குமட்டல், நெஞ்செரிச்சல் குணமாகும்.

· இது சிறந்த மலமிளக்கியாக செயல்பட்டு குடலில் உள்ள கழிவு பொருட்களை வெளியேற்றும்.

வெதுவெதுப்பான நீர் 1/2 டம்ளர் எடுத்து அதில் தேன் 1 ஸ்பூன், எலுமிச்சை பழச்சாற்றை சிறிது கலந்து காலையில் அருந்த வயிறு எரிச்சல் குணமாகும். மலச்சிக்கல் தீரும்.

· இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகப்படுத்த தேனே சிறந்த மருந்தாகும்.

· தேனில் அதிகளவு இரும்புச் சத்து, செம்பு, மாங்கனீசு உள்ளது. வெளுப்பு நோயைக் குணமாக்கும்.

· நுரையீரல் சம்பந்தமான நோய்களைக் குணமாக்கும்.

· இது சிறந்த கோழையகற்றி. ஆஸ்துமா உள்ளவர்களுக்கு சிறந்தது.

· ஆஸ்துமா நோயாளிகள் 1 டம்ளர் வெதுவெதுப்பானவெந்நீரில் 1 ஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் வறட்டு இருமல் ஆஸ்துமா குணமாகும்.

Via Nakkeeran

கீரைகளின் மருத்துவ பண்புகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:53 PM | Best Blogger Tips
 


அழகுக்கு அழகு சேர்த்து பசியையும் தூண்டுவது கீரைகள். நமது உடல் நலத்தை பேணிக்காப்பதில் தானியவகைகள், பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றில்கீரைகள் மிகச்சிறந்த இடத்தைப் பெறுகின்றன. கீரைகளில் புரதமும், கொழுப்புச்சத்தும் மிகக்குறைந்தஇடத்தைப் பெறுகின்றன. கீரைகளில் புரதமும், கொழுப்பும் மிகக்குறைந்த அளவிலும், உடலுக்குத்தேவையான நோய் எதிர்ப்புச் சத்தியை அளிக்கவல்ல வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிகஅளவில் இருக்கின்றன. சீரண மண்டலம் சீராகச் செயல்படுவதற்குத் தேவையான நார்ச்சத்து கீரைவகைகளில் அதிகமாகக் காணப்படுகின்றது.
தண்டுக்கீரை:-
தண்டுக்கீரையில் செந்தண்டுக்கீரை, வெண்தண்டுக்கீரை என இரண்டு வகைகள் உள்ளன. செந்தண்டுக்கீரையானது உடல் வெப்பத்தைத் தணித்து ரத்தத்தைச் சுத்தி செய்வதுடன் சிறுநீர் பிரச்சனைகளைத்தீர்ப்பதிலும் பங்கு வகிக்கின்றது. வெண்தண்டுக் கீரையானது கொழுப்பைக் குறைக்கவும் தேவையற்றசதையைக் குறைக்கவும் பெரிதும் உதவுகின்றது.

முளைக்கீரை:-
முளைக்கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிர சத்துக்கள் ரத்தத்தை சுத்தி செய்து உடலுக்குஅழகையும் மெருகையும் ஊட்டுகின்றது. மேலும் பசியைத் தூண்டுவதிலும், மலச்சிக்கலைத் தீர்ப்பதிலும்பெரும்பங்கு வகிக்கின்றது.

அரைக்கீரை:-
பிரசவித்த பெண்களுக்கு இக்கீரையானது ஒரு சிறந்த மருந்தாகும். பிரசவ மெலிவைப் போக்கி உடலுக்குதேவையான சக்தியை அளிக்கின்றது. மேலும் தாய்ப்பாலுடன் கலந்து குழந்தையையும் வலுவூட்டுகிறது.

முருங்கைக்கீரை:-
இதில் வைட்டமின் '' 'சி' மற்றும் இரும்பு முதலிய சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. தொடர்ந்துசாப்பிட்டு வர கண்கள் குளிர்ச்சியடைவதுடன், வைட்டமின் '' பற்றாக்குறை தொடர்பான கண் நோய்கள்நீங்கி பார்வை தெளிவடையும்.

அகத்திக்கீரை:-
வாய், தொண்டை மற்றும் வயிற்றில் உண்டாகும் புண்களை குணப்படுத்துகின்றது. வயிற்றில் உள்ளபூச்சிகளை அழிப்பதிலும், உடல் சூட்டைத் தணிப்பதிலும் பெரிதும் பயன்படுகின்றது.

மணத்தக்காளி:-
வயிற்றுப்புண், வாய்ப்புண் மற்றும் குடல்புண் கியவற்றை சிறந்தமுறையில் கட்டுப்படுகின்றது. மேலும்கர்ப்பபை சம்பந்தாமான நோய்களுக்கும், கருச்சிதைவு, மலட்டுத்தன்மை கியவற்றை நீக்குவதிலும் பெரும்பங்கு வகிக்கின்றது.

வெந்தயக்கீரை:-
சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதில் மிகச்சிறந்து நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதனைத் தொடர்ந்துசாப்பிட்டு வர நீரிழிவு குணமாகும். மேலும் இக்கீரையானது சீரண சக்தியை அதிகரித்து பசியைத்தூண்டுகிறது.

தவசிக்கீரை:-
இக்கீரையில் ஏறக்குறைய அனைத்து வகையான வைட்டமின்களும் இருப்பதால் 'ம்ல்டி' வைட்டமின் கீரை'என அழைக்கப்படுகின்றது. இக்கீரையில் உள்ள மணிச்சத்து எலும்பு வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும்உதவுகின்றது. இரும்புச்சத்து ரத்தத்தை சுத்திகரித்து உடல் நலத்தைப் பேணிக் காக்கின்றது.

பசலைக்கீரை:-
ரத்த விருத்தியை உண்டாக்கி உடலுக்குப் பலத்தைக் கொடுக்கின்றது. கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம்ஆவதற்கும், கால்களில் ஏற்படும் நீர் வீக்கம் மாறுவதற்கும் இதனை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

கரிசலாங்கண்ணி:-
நல்லெண்ணைய் அல்லது தேங்காய் எண்ணைய்யுடன் கரிசலாங்கண்ணி சாற்றைச் சேர்த்து காய்ச்சப்பட்டதைலத்தை தேய்த்து வர தலைமுடி கருமையாகும். தலைவலி நீங்கும்.

தூதுவளை:-
கசப்புத்தன்மையுடைய இக்கீரை கபத்தை நீக்கி சுவாச மண்டலத்தை தூய்மைப்படுத்துகின்றது.மார்புச்சளியை நீக்குவதில் மிகச்சிறந்து விளங்குகின்றது.

கொத்தமல்லி மற்றும் புதினா:-
ஜீரண சக்தியை அதிகரித்து பசியைத் தூண்டுகின்றன. கொத்தமல்லியானது தலை இறக்கம், வாந்தி,வயிற்றுமந்தம் போன்றவற்றை அகற்றும், புதினா வாய் நாற்றத்தை நீக்கும் தன்மையுடையது. எனவேகுறைந்த செலவில் நிறைந்த மருத்துவ குணம் கொண்ட கீரை வகைகளை உணவில் சேர்த்து நோய்நொடியற்ற ஆரோக்கியமான வாழ்வைப் பெறுவோம்.

வல்லாரை(Centella asiatica):
நினைவாற்றலை அதிகமாக்கும். யானைக்கால் நோய் குணமாகும்.

அகத்திக்கீரை:
மலச்சிக்கலைப் போக்கும்.

முளைக்கீரை:
பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.

பொன்னாங்கண்ணி:
இரத்தம் விருத்தியாகும்.

தர்ப்பைப் புல்:
இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.

தூதுவளை:
மூச்சு வாங்குதல் குணமாகும்.

முருங்கை கீரை:
பொறியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாப்பிட தாது விருத்தியாகும்.

சிறுகீரை:
நீர்கோவை குணமாகும்.

வெந்தியக்கீரை(Fenugreek):
இருமல் குணமாகும்.

புதினா கீரை(Mint):
மசக்கை மயக்கம்,வாந்தி குணமாகும்.

அறுகீரை :
சளிக்காய்ச்சல்,டைபாய்டு குணமாகும்.

Via சாந்தன்