கீரைகளின் மருத்துவ பண்புகள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:53 | Best Blogger Tips
 


அழகுக்கு அழகு சேர்த்து பசியையும் தூண்டுவது கீரைகள். நமது உடல் நலத்தை பேணிக்காப்பதில் தானியவகைகள், பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றில்கீரைகள் மிகச்சிறந்த இடத்தைப் பெறுகின்றன. கீரைகளில் புரதமும், கொழுப்புச்சத்தும் மிகக்குறைந்தஇடத்தைப் பெறுகின்றன. கீரைகளில் புரதமும், கொழுப்பும் மிகக்குறைந்த அளவிலும், உடலுக்குத்தேவையான நோய் எதிர்ப்புச் சத்தியை அளிக்கவல்ல வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிகஅளவில் இருக்கின்றன. சீரண மண்டலம் சீராகச் செயல்படுவதற்குத் தேவையான நார்ச்சத்து கீரைவகைகளில் அதிகமாகக் காணப்படுகின்றது.
தண்டுக்கீரை:-
தண்டுக்கீரையில் செந்தண்டுக்கீரை, வெண்தண்டுக்கீரை என இரண்டு வகைகள் உள்ளன. செந்தண்டுக்கீரையானது உடல் வெப்பத்தைத் தணித்து ரத்தத்தைச் சுத்தி செய்வதுடன் சிறுநீர் பிரச்சனைகளைத்தீர்ப்பதிலும் பங்கு வகிக்கின்றது. வெண்தண்டுக் கீரையானது கொழுப்பைக் குறைக்கவும் தேவையற்றசதையைக் குறைக்கவும் பெரிதும் உதவுகின்றது.

முளைக்கீரை:-
முளைக்கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிர சத்துக்கள் ரத்தத்தை சுத்தி செய்து உடலுக்குஅழகையும் மெருகையும் ஊட்டுகின்றது. மேலும் பசியைத் தூண்டுவதிலும், மலச்சிக்கலைத் தீர்ப்பதிலும்பெரும்பங்கு வகிக்கின்றது.

அரைக்கீரை:-
பிரசவித்த பெண்களுக்கு இக்கீரையானது ஒரு சிறந்த மருந்தாகும். பிரசவ மெலிவைப் போக்கி உடலுக்குதேவையான சக்தியை அளிக்கின்றது. மேலும் தாய்ப்பாலுடன் கலந்து குழந்தையையும் வலுவூட்டுகிறது.

முருங்கைக்கீரை:-
இதில் வைட்டமின் '' 'சி' மற்றும் இரும்பு முதலிய சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. தொடர்ந்துசாப்பிட்டு வர கண்கள் குளிர்ச்சியடைவதுடன், வைட்டமின் '' பற்றாக்குறை தொடர்பான கண் நோய்கள்நீங்கி பார்வை தெளிவடையும்.

அகத்திக்கீரை:-
வாய், தொண்டை மற்றும் வயிற்றில் உண்டாகும் புண்களை குணப்படுத்துகின்றது. வயிற்றில் உள்ளபூச்சிகளை அழிப்பதிலும், உடல் சூட்டைத் தணிப்பதிலும் பெரிதும் பயன்படுகின்றது.

மணத்தக்காளி:-
வயிற்றுப்புண், வாய்ப்புண் மற்றும் குடல்புண் கியவற்றை சிறந்தமுறையில் கட்டுப்படுகின்றது. மேலும்கர்ப்பபை சம்பந்தாமான நோய்களுக்கும், கருச்சிதைவு, மலட்டுத்தன்மை கியவற்றை நீக்குவதிலும் பெரும்பங்கு வகிக்கின்றது.

வெந்தயக்கீரை:-
சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதில் மிகச்சிறந்து நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதனைத் தொடர்ந்துசாப்பிட்டு வர நீரிழிவு குணமாகும். மேலும் இக்கீரையானது சீரண சக்தியை அதிகரித்து பசியைத்தூண்டுகிறது.

தவசிக்கீரை:-
இக்கீரையில் ஏறக்குறைய அனைத்து வகையான வைட்டமின்களும் இருப்பதால் 'ம்ல்டி' வைட்டமின் கீரை'என அழைக்கப்படுகின்றது. இக்கீரையில் உள்ள மணிச்சத்து எலும்பு வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும்உதவுகின்றது. இரும்புச்சத்து ரத்தத்தை சுத்திகரித்து உடல் நலத்தைப் பேணிக் காக்கின்றது.

பசலைக்கீரை:-
ரத்த விருத்தியை உண்டாக்கி உடலுக்குப் பலத்தைக் கொடுக்கின்றது. கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம்ஆவதற்கும், கால்களில் ஏற்படும் நீர் வீக்கம் மாறுவதற்கும் இதனை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

கரிசலாங்கண்ணி:-
நல்லெண்ணைய் அல்லது தேங்காய் எண்ணைய்யுடன் கரிசலாங்கண்ணி சாற்றைச் சேர்த்து காய்ச்சப்பட்டதைலத்தை தேய்த்து வர தலைமுடி கருமையாகும். தலைவலி நீங்கும்.

தூதுவளை:-
கசப்புத்தன்மையுடைய இக்கீரை கபத்தை நீக்கி சுவாச மண்டலத்தை தூய்மைப்படுத்துகின்றது.மார்புச்சளியை நீக்குவதில் மிகச்சிறந்து விளங்குகின்றது.

கொத்தமல்லி மற்றும் புதினா:-
ஜீரண சக்தியை அதிகரித்து பசியைத் தூண்டுகின்றன. கொத்தமல்லியானது தலை இறக்கம், வாந்தி,வயிற்றுமந்தம் போன்றவற்றை அகற்றும், புதினா வாய் நாற்றத்தை நீக்கும் தன்மையுடையது. எனவேகுறைந்த செலவில் நிறைந்த மருத்துவ குணம் கொண்ட கீரை வகைகளை உணவில் சேர்த்து நோய்நொடியற்ற ஆரோக்கியமான வாழ்வைப் பெறுவோம்.

வல்லாரை(Centella asiatica):
நினைவாற்றலை அதிகமாக்கும். யானைக்கால் நோய் குணமாகும்.

அகத்திக்கீரை:
மலச்சிக்கலைப் போக்கும்.

முளைக்கீரை:
பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.

பொன்னாங்கண்ணி:
இரத்தம் விருத்தியாகும்.

தர்ப்பைப் புல்:
இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.

தூதுவளை:
மூச்சு வாங்குதல் குணமாகும்.

முருங்கை கீரை:
பொறியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாப்பிட தாது விருத்தியாகும்.

சிறுகீரை:
நீர்கோவை குணமாகும்.

வெந்தியக்கீரை(Fenugreek):
இருமல் குணமாகும்.

புதினா கீரை(Mint):
மசக்கை மயக்கம்,வாந்தி குணமாகும்.

அறுகீரை :
சளிக்காய்ச்சல்,டைபாய்டு குணமாகும்.

Via சாந்தன்