கிராஜூவிட்டி என்றால் என்ன !

மணக்கால் அய்யம்பேட்டை | 12:44 PM | Best Blogger Tips


 
நிறுவனங்களில் வேலை செய்து மாத சம்பளம் வாங்கும் ஒரு சிலருக்கு, நிறுவனங்கள் வழங்கும் கிராஜூவிட்டியைப் பற்றியத் தெளிவு தேவைப்படுகிறது.
நிறுவனங்களில் சேர்ந்து, நெடுங்காலமாக சிறப்பான முறையில் பணி புரிந்ததற்காக தனது ஊழியர்களுக்கு, நிறுவனங்கள் வழங்கும் ஒரு நன்றித் தொகையே கிராஜூவிட்டி என்று அழைக்கப்படுகிறது.
இந்த கிராஜூவிட்டி, பணியாளர்கள் நிறுவனங்களை விட்டு விலகும் போது வழங்கப்படுகிறது. பல காரணங்களுக்காக பணியாளர்கள் நிறுவனங்களை விட்டு விலகலாம். ஆனால் ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு இந்த கிராஜூவிட்டித் தொகை ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
கிராஜூவிட்டி பெற தகுதி

வருமானவரி சட்டத்தின்படி, ஒரு ஊழியர் ஒருவர், ஒரு நிறுவனத்தில் சேர்ந்து 5 ஆண்டுகள் முழுமையாக பணிபுரிந்தாலோ அல்லது தான் ஓய்வு பெறும் வரை அங்கு பணிபுரிந்தாலோ அவர் கிராஜூவிட்டி பெற தகுதி பெறுகிறார்.
கிராஜூவிட்டி எப்போது வழங்கப்படுகிறது?
ஒரு நிறுவனம் குறைந்தது 10 ஊழியர்களையாவது தனது பே-ரோலில்(pay roll) வைத்திருக்க வேண்டும். அந்த ஊழியர்கள் தற்காலிக ஊழியர்களாக இருக்கக் கூடாது. மாறாக அவர்கள் நிறுவனத்தின் நிரந்தர ஊழியர்களாக இருக்க வேண்டும்.
ஊழியர் ஒருவர் குறைந்தபட்சமாக 5 ஆண்டுகளாவது அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து இருக்க வேண்டும். ஒருவேளை ஒரு வேளை அந்த நிறுவனத்தில் பணி புரியும் காலத்தில் 5 ஆண்டுகளுக்குள்ளாகவே இறந்துவிட்டால், அவருக்கு விதிவிலக்கு உண்டு. ஆனால் அந்த ஊழியர் 1 ஆண்டாவது அந்த நிறுவனத்தில் முழுமையாகப் பணிபுரிந்து இருக்க வேண்டும்.
கிராஜூவிட்டிக்கு வரி செலுத்த வேண்டுமா

ஆம். கிராஜூவிட்டி தொகைக்கு வரி செலுத்த வேண்டும். வருமானவரி தாக்கல் செய்யும் போது "இன்கம் ஃப்ரம் சேலரி" என்ற பகுதியின் கீழ் கிராஜூவிட்டித் தொகையைக் காண்பிக்க வேண்டும்.
ஒருவேளை ஒருவர் அரசு ஊழியராக இருந்தால், அவர் வாங்கும் கிராஜூவிட்டித் தொகைக்கு வருமானவரி சட்டம் 10வது பிரிவின் கீழ் விதிவிலக்கு உண்டு. எனவே கிராஜூவிட்டி விஷயத்தில், அரசு ஊழியர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று சொல்லலாம்

ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஊழியரின் 15 நாள்களுக்கான சம்பளம் வீதம்  

கிராஜூவிட்டியாக் கணக்கிடப்பட்டு அவருக்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகோ அல்லது  

அவர் 5 ஆண்டுகளுக்குப் பிறகு பணியில் இருந்து விலகும் போதோ அல்லது அவர்  

ஓய்வு பெறும் போதோ, அல்லது 1 ஆண்டு முழுமையாக பணி செய்து முடித்து  

இறந்துவிட்டோலோ வழங்கப்படுகிறது



Via Thatstamil.com