குழந்தைக்கு உதவும் இயற்கை மருந்து...

மணக்கால் அய்யம்பேட்டை | 9:09 PM | Best Blogger Tips

காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் ஒரு சொட்டு தேனை நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த ஓர் அற்புதமான வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால் குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். ஆனால், தேன் தடவுவதால் நாக்கு புரண்டு விரைவில் பேச்சு வரும்.

சில குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுக்கும். அதற்கு வேப்பார்க்குத்துளி, அரை மிளகு, ஒரு சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு பல் பூண்டு இவற்றை அம்மியில் தட்டி துளி வெந்நீர் விட்டுப் பிழிந்து வடிக்கட்டி ஊற்றினால் வாந்தி சட்டென்று நின்றுவிடும். நாட்டு மருந்துக் கடையில் மாசிக்காய் என்று கிடைக்கும். அதை வாங்கி சாதம் வேகும்போது, அதோடு போட்டு எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். குழந்தையைக் குளிப்பாட்டும் போது, நாக்கில் தடவி வழித்தால் நாக்கில் உள்ள மாவு அகன்று குழந்தை ருசித்துப் பால் சாப்பிடும்.

தினமும் இரவில் விளகேற்றியவுடன் சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, சிறிது தொப்புளைச் சுற்றி தடவுங்கள். பின் ஒரு வெற்றிலையில் எண்ணெய் தடவி அதை விளக்கில் காட்டி வாட்டி, பொறுக்கும் சூட்டில் அந்த இலையை குழந்தையின் தொப்புள் மேல் போட்டால் அசுத்த காற்றெல்லாம் வெளியேறி, வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும்!

குழந்தை தினமும் இரண்டு, மூன்று முறை மலங்கழிக்க வேண்டும். இல்லாமல் கஷ்டப்பட்டால், முதலில் ஒரு பாலாடை வெந்நீர் புகட்டிப் பார்க்கவும். அப்படியும் போகவில்லை என்றால் ஐந்தாறு விதையில்லாத உலர்ந்த திராட்சைகளை வெந்நீரில் ஊறப்போட்டு கசக்கிப் புகட்டினால் ஒரு மணி நேரத்தில் போய்விடும். மலங்கட்டி அவஸ்தைப்பட்டால் விளக்கெண்ணையோ, வேறு மருந்துகளோ தர வேண்டாம். ஆசனவாயில் வெற்றிலைக் காம்போ சீவிய மெல்லிய சோப் துண்டோ வைத்தாலே போய்விடும்.

பிறந்த குழந்தைக்கு தலைக்கு ஊற்றியதும், கால் கஸ்தூரி மாத்திரையை தாய்ப்பாலில் கரைத்து ஊற்றினால் சளிப்பிடிக்காது. ஒவ்வொரு மாதமும் கால், கால் மாத்திரையாக அளவைக் கூட்டிக் கொள்ளலாம். ஒரு வயதுக்கு மேல் துளசி, கற்பூரவல்லி இலைகளை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொடுத்தால் சளிப் பிடிக்காது, இருந்தாலும் அகன்று விடும். குழந்தைகளுக்கு பேதிக்குக் கொடுப்பது எண்ணெய் தேய்த்து ஊற்றுவது, காதில் மூக்கில் எண்ணெய் விடுவது இதை அறவே தவிர்த்து விடவும்.

குழந்தைக்கு சளி பிடித்து இருந்தால் தேங்காய் எண்ணெயை சுடவைத்து, பூங்கற்பூரம் போட்டு உருக்கி, ஆற வைத்துத் தடவினால் போதும், சளி இளகிக் கரைந்து விடும்.தினமும் குடிக்க காலையும், மாலையும் இரண்டிரண்டு சங்கு வெந்நீர் கொடுங்கள். குழந்தையின் உடம்பு கலகலவென்று இருக்கும்

Via FB இயற்கை உணவும் இனிய வாழ்வும்

'மசாஜ்' உடலுக்கு எவ்வாறு நலம் பயக்கிறது?

மணக்கால் அய்யம்பேட்டை | 6:46 PM | Best Blogger Tips

இயற்கை மருத்துவ முறையில் தற்போது ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது "மசாஜ்!" பழங்காலத்தில் இருந்தே 'மசாஜ்'க்கு மிக நீண்ட வரலாறு உள்ளது. இந்தியா, சீனா, கிரிஸ், ரோம், எகிப்து உட்பட பல நாடுகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, "மசாஜ்", நோய் தீர்க்கும் மருத்துவமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. "மசாஜ்" செய்வது உடல் உறுப்புகள் மற்றும் உடல் அமைப்புக்கு எவ்வாறு நலம் பயக்கிறது என்பதை விரிவாக காண்போம்.

தோல்:

"மசாஜ்" செய்வதால் தோலில் ஏற்படும் நன்மைகள் இணையற்றது. "மசாஜ்" செய்வதன் மூலம் தோலில் காணப்படும் துளைகள் விரிவடைகிறது. இதனால் உடலில் காணப்படும் தீயகழிவுகள் வியர்வை மூலம் வெளியேறி விடும்.

தசைகள்:
"மசாஜ்" தசைகளில் காணப்படும் இறுக்கத்தை குறைத்து, தசை வலியை நீக்குகிறது. கடினமான வேலைகளால் உடல் தசைகளில் லாக்டிக் ஆசிட் சேரும். "மசாஜ்" தசைகளில் சேரும் லாக்டிக் ஆசிட்களை நீக்கி, உடலை புத்துணர்ச்சி மற்றும் உற்சாகத்துடன் இருக்க உதவும்.
ரத்த ஓட்டம்:

"மசாஜ்" செய்யப்படும் பகுதிகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் அந்த உடல் உறுப்புகளுக்கு அதிக அளவில் ஊட்டச்சத்து கிடைப்பதுடன், அந்த உறுப்புகளில் நோய் குணமாகும் தன்மையும் அதிகரிக்கும். ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், வீக்கம் போன்றவை ஏற்படுவது குறையும். "மசாஜ்" செய்வதால் ரத்தத்தில் அதிகளவில் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் திறன் மற்றும் அவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் திறன் அதிகரிக்கும்.

நரம்பு:

நரம்புகளில் குறைந்த அழுத்தத்துடன், மெதுவாக மற்றும் மிதமாக செய்யப்படும் "மசாஜ்," நரம்புகளில் காணப்படும் இறுக்கத்தை குறைப்பதுடன், அவற்றை மென்மையாக்கும். சுறுசுறுப்புடன் செய்யப்படும் "மசாஜ்" நரம்புகளை இளக்கமடைய வைத்து அதன் ஆற்றலை அதிகரிக்கும்.

செரிமான மண்டலம்:

வயிற்றில் "மசாஜ்" செய்வதால் செரிமான மண்டலம் தூண்டப்படுவதுடன், வயிற்றில் காணப்படும் கழிவுகளும் நன்கு வெளியேறும். மேலும் கல்லீரலின் ஆற்றல் அதிகரிப்பதால், உடலின் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
சிறுநீர் மண்டலம்:

"மசாஜ்" செய்வது சிறுநீர் மண்டலத்தை நன்கு செயலாற்ற தூண்டுகிறது. இதனால் அதிகளவில் சிறுநீர் உற்பத்தியாகி, அதன் மூலம் உடல் கழிவுகள் விரைவில் வெளியேறுகிறது.

இதயம்:

முறையாக செய்யப்படும், "மசாஜ்," இதயத்தில் ஏற்படும் பளுவை குறைத்து, அதன் செயல்திறனை அதிகரிக்கிறது. பொதுவாக, "மசாஜ்" செய்வதற்கு உலர்ந்த கைகளையே பயன்படுத்த வேண்டும்; ஆனால், உடல் அதிக வறட்சி தன்மை உடையதாக இருந்தால் அல்லது உடல் மிகவும் பலவீனமாக இருந்தால், ஈரத்துணிகள் அல்லது மருந்து எண்ணெய்கள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

மசாஜ் செய்வதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்துவது மிகவும் நல்லது. சிலர் மசாஜ் செய்யும் போது ஏற்படும் உராய்வை தவிர்ப்பதற்காக, டால்கம் பவுடரை பயன்படுத்துகின்றனர். இது உகந்தது அல்ல. இவ்வாறு செய்வதால் தோலில் காணப்படும் துளைகள் அடைபடும்.

"மசாஜ்" செய்வதை தவிர்க்க வேண்டிய சூழ்நிலைகள்:

* காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் காலங்களில் எவ்வித மசாஜும் செய்யக்கூடாது.

* கர்ப்பிணி பெண்கள் வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்வதை தவிர்ப்பது நல்லது.

* வயிற்றுப்போக்கு வாயுப் பிரச்சினை, அப்பென்டிசைட்டிஸ், சிறுகுடலில் புண்கள் அல்லது வயிற்றில் கட்டி ஆகிய பிரச்சினை உடையவர்கள் வயிற்றில் மசாஜ் செய்வதை தவிர்க்க வேண்டும்.

* தோல் வியாதிகள் உடையவர்களுக்கு மசாஜ் செய்வது பொருத்தமற்றது.

Via உடல்நலம்

பேல்பூரி !

மணக்கால் அய்யம்பேட்டை | 6:32 PM | Best Blogger Tips
How Prepare Pani Puri

வட இந்திய உணவுகளின் சுவை என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் பானி பூனி என்றால் பிடிக்காத குழந்தைகளே இல்லை. பானி பூனி சாப்பிட வேண்டுமென்றால் கடைக்கு தான் இதுவரை சென்றிருந்தோம். ஆனால் இப்போது பானி பூரியை வீட்டிலேயே செய்யலாம். அது எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:

பூரிக்கு:
மைதா - 1 கப்
ரவை - 50 கிராம்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
பானிக்கு:
புதினா - 1/2 கட்டு
கொத்தமல்லி தழை - 1/2 கட்டு
பச்சை மிளகாய் - 4
வெல்லம்- 50 கிராம்
புளி - 50 கிராம்
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
பூரிக்குள் வைக்க:
உருளைக்கிழங்கு - 2
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் உருளைக் கிழங்கை வேக வைத்து, நன்கு உதிர்த்துக் கொள்ளவும். பின் அத்துடன் சீரகத்தூள், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றைப் போட்டு கலந்து,
மசாலா செய்து வைத்துக் கொள்ளவும். பின் பூரி செய்வதற்கு மைதா, ரவை, தண்ணீர், உப்பு போன்றவற்றைப் போட்டு மாவை பிசைந்து கொண்டு அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சிறிது நேரம் ஊற வைக்கவும்.
சற்று நேரம் கழித்து அந்த உருண்டைகளை தேய்த்து வாணலியில் எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும் தேய்த்த உருண்டைகளை சிறு பூரிகளாக பொரிக்க வேண்டும். பூரியானது சிறிதாக இருக்க வேண்டும்.
பிறகு புளியை நீரில் ஊற வைத்து, நன்கு பிசைந்து நீரை வடிகட்டிக் கொள்ளவும். வெல்லத்தையும் நீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
பின் புதினா, கொத்தமல்லித் தழை ஆகியவற்றை நன்கு கழுவி அதை மிக்ஸியில் போட்டு, அதோடு
பச்சை மிளகாய், சீரகத்தூள், உப்பு போட்டு அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த அந்த கலவையோடு புளி நீரையும், வெல்ல நீரையும் விட்டு கலந்து கொள்ளவும்.
இப்போது பூரியின் நடுவில் ஒரு ஓட்டை போட்டு, அதில் அந்த உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து பின் அந்த புளி நீரை உள்ளே ஊற்றி சாப்பிட வேண்டும். இப்போது சுவையான பானி பூரி ரெடி!!!

Thanks  & Copy from Thatstamil.com

பிம்பிள்ஸ், கரும் புள்ளிகள், தழும்புகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:13 PM | Best Blogger Tips

இன்றைய காலக்கட்டத்தில் பிம்பிள்ஸ், கரும் புள்ளிகள், தழும்புகள் என அனைத்தும் அவர்களது அழகான கன்னங்களுக்கு அச்சுறுத்தலாகத் உள்ளது.

பருக்கள் வராமல் தடுக்க சில வழிகள்;

பருக்கள் வராமல் இருக்க வேண்டும் என்றால் மலச்சிக்கல் வராத அளவுக்கு வயிற்றைப் பராமரிக்க வேண்டும். பொடுகுத் தொல்லை, ஹார்மோன் பிரச்சினை, நகத்தினை வளர்த்தல், முறையற்ற உணவுப் பழக்கம், உணவில் அதிக அளவு எண்ணெய் பயன்படுத்துதல் போன்றவை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வெளிப்படையான பயன்பாடுகளைப் பொருத்த வரையில் தலையணை உறை, சோப், டவல் போன்றவைகளை தனித்தனியாக ஒவ்வொருவரும் வைத்து தங்களுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகப்பரு இருக்கும் ஒருவர் பயன்படுத்தும் இத்தகையப் பொருட்களை இன்னொருவர் பயன்படுத்தும் போது அவருக்கும் இது பரவக்கூடும்.

முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய மென்மையான உணவுகளை உண்ண வேண்டும். பழங்கள், காய்கறிகள், கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். தண்ணீர் நிறைய பருக வேண்டும். முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொடுகுத் தொல்லை இருந்தால் முறையான சிகிச்சை எடுத்து அதனைக் கட்டுப்படுத்த வேண்டும். அவ்வப்போது வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி சுத்தப்படுத்த வேண்டும்.

இப்படியெல்லாம் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு வருகிற பிம்பிள்ஸ் பிரச்சனை இருக்காது.

கரும்புள்ளிகளை மறைய;

வேப்பிலை கிருமி நாசினியாக செயல்படுகிறது. கொழுந்து வேப்பிலையை தண்ணீரில் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவிவிட வேண்டும். முகத்திற்கு மஞ்சள் பூசுவதை முடிந்த வரை தவிர்த்து விடுங்கள். இப்போதைய மஞ்சளில் அதிக அளவு ரசாயணத் தன்மை இருக்கிறது. அது பலரது முகத்திற்கும் ஒத்துக் கொள்ளாததாக இருக்கிறது. அதுபோல எலுமிச்சைச் சாறையும் தனியாக முகத்தில் தேய்த்துவிட வேண்டாம்.

முகத்தில் உள்ள வடுக்கள் நீங்க;

முகத்தில் பல்வேறு விதமான வடுக்கள் ஏற்படுகின்றன. முகப்பரு வடு, அம்மைத் தழும்பு வடு, விபத்துக்களால் ஏற்படும் வடு போன்றவை இதில் குறிப்பிடத்தக்கவை. தொடக்கத்திலேயே இதற்கு அழகு சிகிச்சைக் கொடுத்தால் நிரந்தரமாக மாற்றிவிடலாம். இல்லாவிட்டால் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம்தான் இதனைக் குணப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் வடுக்கள் எவ்வாறாக இருந்தாலும் அதனை மேக்கப் மூலம் தற்காலிகமாக மறைத்துவிடலாம்.

இயற்கை அழகு சிகிச்கை;

ஐம்பது சதவீத அளவிலான பெண்களுக்கு அதிகமான அளவு தொந்தரவு தந்து கொண்டிருப்பது முகத்தில் வளரும் ரோமங்கள்தான். இதற்கும் பாரம்பரியம் ஒரு முக்கியக்காரணம் ஹார்மோனில் ஏற்படும் மாற்றங்களும் தேவையற்ற ரோமங்களை வளரச் செய்கிறது.

வீட்டிலேயே இதற்கான இயற்கையான அழகு சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். பூலான் கிழங்கு, மஞ்சள், பாசிப்பயிறு, போன்றவைகளை அரைத்து தண்ணீர் கலந்து உடல் முழுக்கத் தேய்க்க வேண்டும். பத்து வயதில் இருந்து சிறுமிகளுக்கு இதனைத் தேய்துக் குளிப்பாட்டினால் தேவையற்ற ரோமங்கள் வளருவதை முதலில் இருந்தே தவிர்த்துவிடலாம்.
 
Via FB பெண்கள் Women 

செல்போன் காது கேட்கும் திறனைப் பாதிக்குமா?

மணக்கால் அய்யம்பேட்டை | 4:12 PM | Best Blogger Tips

செல்போன் காது கேட்கும் திறனைப் பாதிக்குமா? 

'செல்போன் பயன்படுத்துவதால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்று அறுதியிட்டு கூற முடியாது. காரணம் அது குறித்த ஆய்வுகள் எதுவும் இன்னும் முழுமையடையவில்லை. ஆனால், நடந்து கொண்டிருக்கும் ஆய்வுகளை வைத்து, செல்போனால் சில பிரச்னைகள் வர வாய்ப்பு இருப்பதாக கணித்திருக்கிறார்கள்.

காது ஒரு நுட்பமான உறுப்பு. சாதாரணமாக 70 முதல் 75 டெசிபல் வரையுள்ள சத்தங்களைத்தான் நம் காதுகள் கேட்க வேண்டும். அதிகபட்சமாக 90 டெசிபல் வரை உள்ள சத்தங்களை கேட்கலாம்.. ஒரு நாளுக்கு அதிக பட்சம் நான்கு மணி நேரம் அப்படிக் கேட்டால் பரவாயில்லை. அதுவும் விட்டு விட்டுத்தான் கேட்க வேண்டும். தொடர்ச்சியாக கேட்கக் கூடாது. அப்படி கேட்பதால் காதின் கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

ஆனால், செல்போன் உபயோகிக்கும் போது என்ன நிகழ்கிறது தெரியுமா? சாதாரணமாகவே செல்போன் வழியாக 90 முதல் 100 டெசிபல் வரையுள்ள சத்தத் தைக் கேட்க வேண்டியுள்ளது. நம் காதுகளால் கேட்கக் கூடிய அதிகபட்ச ஒலி அளவை விட இது அதிகம். அதனால் காதுகளின் கேட்கும் திறன் நாளடைவில் குறையவும் வாய்ப்பு இருக்கிறது. செல்போனில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பேசினால் அவ்வளவாக பாதிப்பு இருக்காது. ஆனால், தொடர்ச்சியாக அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்று பேசுவதால் கண்டிப்பாக பாதிப்பு ஏற்படும்.

தவிர, செல்போனில் இருந்து வெப்பமும் வெப்ப கதிர்வீச்சும் வெளிப்படுகிறது. நாம் செல்போனை காதுக்கு மிக அருகில் வைத்துப் பேசுவதால், இந்த வெப்பமும் கதிர்வீச்சும் நம் காதுக்கு உள்ளே இருக்கும் மிக நுண்ணிய நரம்புகளை பாதிக்க வாய்ப்புள்ளது. அதேபோல செல்போனில் விட்டு விட்டு சிக்னல் கிடைப்பதால், கதிர்வீச்சின் அளவில் ஏற்ற இறக்கம் ஏற்படும். இந்த மாற்றத்தாலும் காது நரம்புகள் பாதிப்பு அடையலாம். நாளடைவில் தூரத்தில் ஹாரன் ஒலிப்பது, காற்றில் காலண்டர் அசைவது, பேனா கீழே விழுவது போன்ற சிறிய சத்தங்களைக் கூட கேட்க முடியாமல் போய்விடலாம்.

செல்போனை நேரடியாக காதுக்கு அருகில் வைத்துப் பேசாமல் ஹேண்ட்ஸ் ஃப்ரீ உபயோகித்துப் பேசுவதன் மூலம் பாதிப்பை ஓரளவு தவிர்க்கலாம்.''

Via Fb பொது அறிவு

குழந்தை பேற்றை தள்ளி போடவேண்டாம்!!

மணக்கால் அய்யம்பேட்டை | 3:55 PM | | Best Blogger Tips
குழந்தை பேற்றை
தள்ளி போடவேண்டாம்!!

முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தத் தலைமுறைப் பெண்களிடம் குழந்தையின்மைப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து வருகிறது. வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம் எல்லாம் மாறிப் போனது ஒரு பக்கம் இருந்தாலும், குழந்தை பெற்றுக் கொள்ளும் வயதைத் தள்ளிப் போடுவதும் பிரச்னைக்கான முக்கிய காரணம் என்கிறார் பிரபல மகப்பேறு மருத்துவர் ஜெயராணி. சினைப்பையில் உள்ள முட்டைகளின் இருப்பு குறைவதே காரணம் என்பவர், அதைப் பற்றி விளக்கமாகப் பேசுவதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் வலியுறுத்துகிறார். ‘‘ஒரு பெண் குழந்தை, அம்மாவோட வயித்துல உருவாகிறப்பவே, அதோட சினைப்பைல இத்தனை மில்லியன் முட்டைகள் இருக்கணுங்கிறது தீர்மானிக்கப்படும். அந்தக் குழந்தை வயசுக்கு வர்றப்ப, லட்சக்கணக்குல உள்ள அந்த முட்டைகள், மாதவிலக்கு மூலமா மாசா மாசம் வெளியேறி, குறைஞ்சுக்கிட்டே வரும். பிரசவத்தின் போது இன்னும் குறையும். இப்படி குறைஞ்சுக்கிட்டே வந்து, ஒரு கட்டத்துல முழுக்க முட்டைகளே இல்லாமப் போகிறப்ப, மாதவிலக்கு வராது. அதைத்தான் மெனோபாஸ்னு சொல்றோம். சினைப்பையில முட்டைகள் உருவாகும்போதே கம்மியா இருந்தா, 30, 35 வயசுலயே பெண்களுக்கு மாதவிலக்கு நிற்கலாம். அதை ‘ப்ரீமெச்சூர் ஓவரியன் சின்ட்ரோம்’னு சொல்றோம். இந்தத் தலைமுறைப் பெண்கள், வேலை, சொந்த வீடு, வசதிகள்னு வாழ்க்கையில செட்டிலான பிறகுதான் கல்யாணம், குழந்தை பத்தி யோசிக்கிறாங்க. 30 வயசுல கல்யாணம் பண்ணிட்டு, 35 வயசுல மாதவிலக்கு சுழற்சி சரியில்லை, குழந்தை இல்லைன்னு சொல்லிட்டு, சிகிச்சைக்கு வருவாங்க. டெஸ்ட் பண்ணிப் பார்த்தா, அது மெனோபாஸுக்கான அறிகுறியா இருக்கும். இன்னும் சில பெண்களுக்கு சின்ன வயசுல சினைப்பை கட்டிகள் வந்து, அதுக்காக ஆபரேஷன் செய்திருப்பாங்க. அதனாலயும் சினைப்பையில உள்ள முட்டைகளோட இருப்பு குறைஞ்சு, ‘ப்ரீமெச்சூர் ஓவரியன் சின்ட்ரோம்’ பிரச்னை வரலாம். இப்பவும் சின்னச் சின்ன கட்டிகளுக்கு ஆபரேஷன் பண்ணிக்கிட்டு, பாதி முட்டைகள் குறைஞ்ச நிலையில கிராமத்துலேருந்து வர்ற பெண்கள் ஏராளம். கட்டிகள் இருக்கிறது தெரிஞ்சா, கூடியவரைக்கும், அதை அறுவை சிகிச்சையில அகற்றாம, சினைப்பையைத் தொந்தரவு பண்ணாம குணப்படுத்த முயற்சி பண்றதுதான் பாதுகாப்பானது. அடுத்து, எக்ஸ் ரே போன்ற ரேடியேஷன் தொடர்பான துறைகள்ல வேலை செய்யற பெண்களுக்கும், சினைப்பை முட்டைகள் அழிய வாய்ப்புகள் அதிகம். அந்த அபாயம் தெரிஞ்சு, இந்தப் பெண்களும், திருமணத்தையும், குழந்தைப் பேற்றையும் தள்ளிப் போடாம இருக்கிறது நல்லது.அம்மாவுக்கு இள வயதுலேயே மாதவிலக்கு நின்றிருந்தால், அவங்க பெண்கள் எச்சரிக்கையா இருக்கணும். உடனடியா மருத்துவரைப் பார்த்து, தேவைப்பட்டா, ஏ.எம்.ஹெச் என்ற ஹார்மோன் சோதனையை செய்து பார்த்து, கருத்தரிக்கும் திறனைத் தெரிஞ்சுக்கிட்டு, தகுந்த சிகிச்சைகளை எடுத்துக்கலாம். அலட்சியமா விட்டுட்டு, பிறகு குழந்தையின்மைக்காக, ஐ.வி.எஃப் மாதிரியான நவீன சிகிச்சைகளைத் தேடி ஓட வேண்டிய அவதிகளையும் இதன் மூலம் தவிர்க்கலாம்...’’

Via FB Aatika Ashreen
 
சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும் சைவ உணவுகள்..

மணக்கால் அய்யம்பேட்டை | 3:34 PM | Best Blogger Tips

உடலில் சிறுநீரகம் ஒரு முக்கிய உறுப்பாகும். எனவே அத்தகைய சிறுநீரகத்தை சுத்தமாக வைப்பது என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். அதிலும் தற்போது நிறைய பேருக்கு சிறுநீரகக் கற்கள் அதிகம் ஏற்படுகிறது. ஆகவே சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொண்டால், அத்தகைய சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். மேலும் சிறுநீரகம் தான் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வடிகட்டி, இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. அவ்வாறு நச்சுக்களை வடிகட்டும் போது, அந்த நச்சுக்களானது சிறுநீரகத்திலேயே தங்கிவிடுவதால், அவற்றை உடலில் இருந்து வெளியேற்ற சரியான உணவுகளை சாப்பிட வேண்டும்.

மேலும் சிறுநீரகத்தை சுத்தப்படுத்துவதற்கு பல உணவுப் பொருட்கள் உள்ளன. இத்தகைய உணவுப் பொருட்கள் சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை மட்டுமின்றி, ஆபத்தான பல கெமிக்கல்களை முற்றிலும் வெளியேற்றிவிடும். அதிலும் பூண்டு, வெங்காயம் மற்றும் மீன் போன்றவை சிறுநீரகங்களுக்கு மிகவும் நல்லது. ஆனால் பலர் இத்தகைய உணவுப் பொருட்களை சாப்பிடமாட்டார்கள். குறிப்பாக சைவ உணவாளர்கள், இந்த உணவுப் பொருட்களை தவிர்ப்பார்கள். ஆகவே தான், அத்தகையவர்களுக்காக மிகவும் சிறந்த சைவ உணவுப் பொருட்களை பட்டியலிட்டுள்ளோம்.

அந்த உணவுப் பொருட்கள் என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, அதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால், சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், அவ்வப்போது தண்ணீரையும் அதிகம் பருக வேண்டும்.

சிவப்பு திராட்சை

சிவப்பு நிற திராட்சையில் ஒருசில ஃப்ளேவோனாய்டுகள் நிறைந்துள்ளன. அதிலும் ரெஸ்வெராட்ரால் என்னும் இதயம் மற்றும் சிறுநீரகத்திற்கு ஆரோக்கியத்தைத் தரும் ஃப்ளேவோனாய்டு அதிகம் நிறைந்துள்ளது.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், மக்னீசியம், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து போன்ற சிறுநீரகம் மற்றும் இதயத்திற்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.

பார்ஸ்லி

சைவ உணவாளர்கள், இந்த கீரையை அதிகம் உணவில் சேர்த்தால், சிறுநீரகம் மற்றும் உடல் முழுவதுக்கும் நல்லது. அதிலும் இதனை சிறுநீரக கல் உள்ளவர்கள் சாப்பிட்டால், சிறுநீரக கற்களானது கரைந்துவிடும்.

காலிஃப்ளவர்

இது சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் மற்றொரு உணவுப் பொருளாகும். ஏனெனில் காலிஃப்ளவரில் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் சேர்த்துக் கொண்டால், சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, சிறுநீரகங்கள் சுத்தமாக இருக்கும்.

ஆப்பிள்

ஆப்பிள் செரிமான மண்டலத்தின் இயக்கத்தை சீராக வைக்கும். ஏனெனில் இதில் நார்ச்சத்து மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி அதிகம் நிறைந்திருப்பதால், அது உடல் முழுவதுக்கும் மிகவும் நல்லது.

ஆப்பிள்

ஆப்பிள் செரிமான மண்டலத்தின் இயக்கத்தை சீராக வைக்கும். ஏனெனில் இதில் நார்ச்சத்து மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி அதிகம் நிறைந்திருப்பதால், அது உடல் முழுவதுக்கும் மிகவும் நல்லது.

இஞ்சி

சைவ உணவாளர்கள் உணவில் இஞ்சியை சேர்த்து வந்தால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பொருளானது, சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, இரத்தத்தையும் சுத்திகரிக்கும்.

ராஸ்ப்பெர்ரி

ராஸ்ப்பெர்ரியில் எலாஜிக் ஆசிட் என்னும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இதனை உணவில் சேர்த்தால், சிறுநீரகத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.

குருதிநெல்லி (Cranberry)

சிறுநீரகப் பாதையில் ஏற்படும் தொற்றுக்களை குணப்படுத்துவதில் குருதிநெல்லி பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் இதனை சாப்பிட்டால், சிறுநீரில் உள்ள அமிலத்தன்மையை அதிகரித்து, சிறுநீரகப் பாதையில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து சிறுநீருடன் வெளியேற்றிவிடும்.

சிவப்பு குடைமிளகாய்

சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில் சிவப்பு குடைமிளகாய் பெரிதும் உதவியாக உள்ளன. ஏனென்றால் அதில் வைட்டமின் சி, ஏ, பி6, போலிக் ஆசிட் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. குறிப்பாக இதில் பொட்டாசியம் குறைவாக உள்ளது. எனவே தான் இது சிறுநீரகத்திற்கு மிகவும் நல்ல உணவாக உள்ளது.

தயிர்

தயிரும் செரிமானத்தை அதிரிக்கும் மற்றும் சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுப் பொருட்களுள் ஒன்று. தயிரில் உள்ள ப்ரோபயோடிக் பாக்டீரியா இருப்பதால், அது சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. முக்கியமாக இந்த உணவை சைவ உணவாளர்கள் அதிகம் சாப்பிட வேண்டும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் நிறைந்துள்ள நன்மைக்கு அளவே இல்லை. ஏனெனில் அத்தகைய எண்ணெயை உணவில் சேர்த்தாலும், சிறுநீரகத்திற்கு மிகவும் நல்லது.

Via FB ஆரோக்கியமான வாழ்வு