இவற்றில் நீங்கள் எந்த ரகம்???

மணக்கால் அய்யம்பேட்டை | 5:23 PM | Best Blogger Tips
இவற்றில் நீங்கள் எந்த ரகம்???
****************************

குப்புறப்படுத்து தூங்குவோர், சோம்பேறித்தனம் மிகுதியாக உள்ளவர்கள்;
உழைப்பில் ஆர்வமில்லாதவர்களாக இருப்பர்; தங்கள் வேலையின் மீது பற்று இன்றி இருப்பர்.

சுருண்டு படுத்து உறங்குவோர், கோழைகள்; எப்போதும், எதற்கும், எதிலும் பிறர் ஆதரவை நாடி நிற்பவர்கள்.

மல்லாந்து படுத்து உறங்குவோர், தன்னம்பிக்கை மிக்கவர்கள்; பொதுநலனில்
அக்கறை கொண்டவர்கள்; பிறரை எளிதில் கவரும் ஆற்றலும் கொண்டவர்கள்.

நின்று கொண்டு பேசும்போது, தலையை விரல்களால் சொரிந்தபடி நிற்பவர்கள் ஞாபகமறதிக்காரர்கள்!

விரல் நகத்தைக் கடித்துக் கொண்டே பேசுபவர்கள், எந்தக் காரியத்தையும் அதிக நேரம் எடுத்துக் கொண்டு செய்யும் சுறுசுறுப்பில்லாதவர்கள்!

சட்டைப் பொத்தானைத் திருகிக் கொண்டே பேசுபவர்கள் தன்னம்பிக்கை இல்லாதவர்கள்.

அருகில் உள்ள மேஜை மீதோ, நாற்காலி மீதோ விரலால் தட்டிக் கொண்டே பேசுபவர்கள் அலட்சிய மனோபாவம் கொண்டவர்கள்!

விரலை மடக்கி, உள்ளங்கையில் தேய்த்துக் கொண்டே பேசுபவர்கள் பயந்த சுபாவம் உடையவர்கள்.

@[100001296241764:2048:Jayant Prabhakar]குப்புறப்படுத்து தூங்குவோர், சோம்பேறித்தனம் மிகுதியாக உள்ளவர்கள்;
உழைப்பில் ஆர்வமில்லாதவர்களாக இருப்பர்; தங்கள் வேலையின் மீது பற்று இன்றி இருப்பர்.

சுருண்டு படுத்து உறங்குவோர், கோழைகள்; எப்போதும், எதற்கும், எதிலும் பிறர் ஆதரவை நாடி நிற்பவர்கள்.

மல்லாந்து படுத்து உறங்குவோர், தன்னம்பிக்கை மிக்கவர்கள்; பொதுநலனில்
அக்கறை கொண்டவர்கள்; பிறரை எளிதில் கவரும் ஆற்றலும் கொண்டவர்கள்.

நின்று கொண்டு பேசும்போது, தலையை விரல்களால் சொரிந்தபடி நிற்பவர்கள் ஞாபகமறதிக்காரர்கள்!

விரல் நகத்தைக் கடித்துக் கொண்டே பேசுபவர்கள், எந்தக் காரியத்தையும் அதிக நேரம் எடுத்துக் கொண்டு செய்யும் சுறுசுறுப்பில்லாதவர்கள்!

சட்டைப் பொத்தானைத் திருகிக் கொண்டே பேசுபவர்கள் தன்னம்பிக்கை இல்லாதவர்கள்.

அருகில் உள்ள மேஜை மீதோ, நாற்காலி மீதோ விரலால் தட்டிக் கொண்டே பேசுபவர்கள் அலட்சிய மனோபாவம் கொண்டவர்கள்!

விரலை மடக்கி, உள்ளங்கையில் தேய்த்துக் கொண்டே பேசுபவர்கள் பயந்த சுபாவம் உடையவர்கள்.

Via  Jayant Prabhakar

மனித உடல் பற்றி

மணக்கால் அய்யம்பேட்டை | 4:28 PM | Best Blogger Tips
மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்று பொய் விடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானைக் காது அளவிற்கு இருக்கும்

இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. வருடத்திற்கு நான்கு கோடி தடவை. இதயத்தின் இடதுபக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்.

ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம். உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே. பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறை கண்ணை சிமிட்டுகிறோம். இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.

உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள். விதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை. தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும்போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.

நமது பாதங்களை பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும் காரணம் ஒரு சதுர அடியில் வெறும் 3ல் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன

நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, இரண்டு நீச்சல் குளங்களை அப்புறபடுத்த தேவையான க்ளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க கூடிய அளவிற்கு பாஸ்பரஸ், 10 பார் சொப்புகளுக்கு தேவையான கொழுப்பு ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு என பல பொருட்கள் உள்ளன.

Via Fb Doctor Vikatan
 
காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க - தேவை/பசி

மணக்கால் அய்யம்பேட்டை | 4:27 PM | Best Blogger Tips
ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். அவன் சிறந்த போர் வீரன். அவனுடைய வாள் வீச்சிற்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவிற்குச் சிறந்த வீரன். 
 
அவன் ஒருமுறை அரண்மனையில் வாள் வீசி பயிற்சி செய்துக் கொண்டிருக்கையில், ஒரு எலி குறுக்கே ஓடியது. உடனே அதன் மீது வாளை வீசினான். அந்த எலி லாவகமாக தப்பித்துச் சென்றது. பிறகு மீண்டும் அதனைத் துரத்தி வாளை வீசினான், மீண்டும் தப்பித்து வளைக்குள் புகுந்துகொண்டது. உடனே மனம் உடைந்து போனான்.
 
அப்போது வந்த அரசர் "ஏன் சோகமாக இருக்கிறாய்?" என கேட்க "இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாது போது, இந்த சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லையே!" என விவரித்தான் இளவரசன்.

மன்னர் சிரித்துவிட்டு "எலியைக் கொள்ள வாள் பயிற்சி எதற்கு? அரண்மனைப் பூனையைக் கொண்டு வந்தாலே போதுமே!" என்றார்.உடனே அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது.

அந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது. ஆனாலும் அந்த எலி எளிதாக அதனிடம் இருந்து தப்பித்து, தப்பித்துச் சென்றது. மீண்டும் இளவரசருடன் அரசரும் சோகமானார். அப்போது மந்திரி வந்தார். "என்ன அரசே..நீங்களும் இளவரசரும் சோகமாக இருக்கிறீர்கள்?" என்றார்.
 
அதற்கு அரசர் நடந்ததை கூறினார். "நம் நாட்டு பூனைகள் எதற்கு லாயக்கு...? ஜப்பான், பாரசீகம் போன்ற நாடுகளில் உள்ள பூனைகள் புலி உயரம் உள்ளன. எனவே அங்கிருந்து வரவழைப்போம்" என்றார் மந்திரி. அதேபோல் அவ் நாடுகளில் இருந்து பூனைகள் வரவழைக்கப்பட்டன.
 
ஆனால் அவற்றிடமிருந்தும் அந்த எலி சாமர்த்தியமாகத் தப்பித்துச் சென்று வளைக்குள் புகுந்தது. எலிக்கு இவ்வளவு திறமையா! என அனைவரும் வியந்து கொண்டிருக்கையில், அங்கே இருந்த அரண்மனைக் காவலன் "இளவரசே! இந்த எலிக்குப் போய் ஜப்பான், பாரசீகப் பூனையெல்லாம் எதுக்கு? எங்க வீட்டுப் பூனையே போதும்" என்றான். மன்னருக்கு நப்பிக்கை ஏற்படவில்லை. "என்ன.. அரண்மனையில் வளர்ந்து வரும் பூனையால் முடியாதது சாதாரண பூனையால் முடியுமா?" என்றார்.

உடனே இளவரசர் மறித்து "சரி...எடுத்து வா உனது பூனையை" என்றார். வீட்டிற்குச் சென்று தனது பூனையைக் கொண்டு வந்தான் காவலன். அந்தப் பூனை அந்த எலியை ஒரே தாவலில் "லபக்" என்று கவ்விச்சென்றது. இதனைப் பார்த்த இளவரசருக்குப் பெருத்த ஆச்சரியம். "என்ன இது அதியசம்!
 
ஜப்பான்,பாரசீக, அரண்மனையில் வளர்ந்த பூனைகளிடம் இல்லாத திறமை எப்படி இந்தச் சாதாரண பூனைக்கு ஏற்பட்டது? எப்படி சாத்தியம்? என்ன பயிற்சி கொடுத்துப் பூனையை வளர்க்கிறீர்கள்?" என்று வியந்தவாறே கேள்விகளை கேட்க தொடங்கினார்.
 
அதற்குக் காவலாளி "பெரிதாக என் பூனைக்குத் திறமையோ, பயிற்சிகளோ எதுவும் இல்லை இளவரசே... என் பூனைக்கு ரொம்பப் பசி அவ்வளவுதான்" என்றான். 

உடனே இளவரசருக்கு "சுரீர்" என்றது. அரண்மனைக்குள் பூனைகள் நன்கு தின்று கொழுத்திருப்பதால் அவற்றுக்கு பசி என்பதே என்னவெற்று தெரிய வாய்பில்லை, எனவே அவற்றால் எலியை எப்படி பிடிக்கமுடியும்?.
 
ஆக எந்த ஒரு வேலையையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்றாள், முதலில் அதனைப் பற்றிய பசி அல்லது தேவை இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க முடியும்ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். அவன் சிறந்த போர் வீரன். அவனுடைய வாள் வீச்சிற்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவிற்குச் சிறந்த வீரன்.

அவன் ஒருமுறை அரண்மனையில் வாள் வீசி பயிற்சி செய்துக் கொண்டிருக்கையில், ஒரு எலி குறுக்கே ஓடியது. உடனே அதன் மீது வாளை வீசினான். அந்த எலி லாவகமாக தப்பித்துச் சென்றது. பிறகு மீண்டும் அதனைத் துரத்தி வாளை வீசினான், மீண்டும் தப்பித்து வளைக்குள் புகுந்துகொண்டது. உடனே மனம் உடைந்து போனான்.

அப்போது வந்த அரசர் "ஏன் சோகமாக இருக்கிறாய்?" என கேட்க "இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாது போது, இந்த சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லையே!" என விவரித்தான் இளவரசன்.

மன்னர் சிரித்துவிட்டு "எலியைக் கொள்ள வாள் பயிற்சி எதற்கு? அரண்மனைப் பூனையைக் கொண்டு வந்தாலே போதுமே!" என்றார்.உடனே அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது.

அந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது. ஆனாலும் அந்த எலி எளிதாக அதனிடம் இருந்து தப்பித்து, தப்பித்துச் சென்றது. மீண்டும் இளவரசருடன் அரசரும் சோகமானார். அப்போது மந்திரி வந்தார். "என்ன அரசே..நீங்களும் இளவரசரும் சோகமாக இருக்கிறீர்கள்?" என்றார்.

அதற்கு அரசர் நடந்ததை கூறினார். "நம் நாட்டு பூனைகள் எதற்கு லாயக்கு...? ஜப்பான், பாரசீகம் போன்ற நாடுகளில் உள்ள பூனைகள் புலி உயரம் உள்ளன. எனவே அங்கிருந்து வரவழைப்போம்" என்றார் மந்திரி. அதேபோல் அவ் நாடுகளில் இருந்து பூனைகள் வரவழைக்கப்பட்டன.

ஆனால் அவற்றிடமிருந்தும் அந்த எலி சாமர்த்தியமாகத் தப்பித்துச் சென்று வளைக்குள் புகுந்தது. எலிக்கு இவ்வளவு திறமையா! என அனைவரும் வியந்து கொண்டிருக்கையில், அங்கே இருந்த அரண்மனைக் காவலன் "இளவரசே! இந்த எலிக்குப் போய் ஜப்பான், பாரசீகப் பூனையெல்லாம் எதுக்கு? எங்க வீட்டுப் பூனையே போதும்" என்றான். மன்னருக்கு நப்பிக்கை ஏற்படவில்லை. "என்ன.. அரண்மனையில் வளர்ந்து வரும் பூனையால் முடியாதது சாதாரண பூனையால் முடியுமா?" என்றார்.

உடனே இளவரசர் மறித்து "சரி...எடுத்து வா உனது பூனையை" என்றார். வீட்டிற்குச் சென்று தனது பூனையைக் கொண்டு வந்தான் காவலன். அந்தப் பூனை அந்த எலியை ஒரே தாவலில் "லபக்" என்று கவ்விச்சென்றது. இதனைப் பார்த்த இளவரசருக்குப் பெருத்த ஆச்சரியம். "என்ன இது அதியசம்!

ஜப்பான்,பாரசீக, அரண்மனையில் வளர்ந்த பூனைகளிடம் இல்லாத திறமை எப்படி இந்தச் சாதாரண பூனைக்கு ஏற்பட்டது? எப்படி சாத்தியம்? என்ன பயிற்சி கொடுத்துப் பூனையை வளர்க்கிறீர்கள்?" என்று வியந்தவாறே கேள்விகளை கேட்க தொடங்கினார்.

அதற்குக் காவலாளி "பெரிதாக என் பூனைக்குத் திறமையோ, பயிற்சிகளோ எதுவும் இல்லை இளவரசே... என் பூனைக்கு ரொம்பப் பசி அவ்வளவுதான்" என்றான்.

உடனே இளவரசருக்கு "சுரீர்" என்றது. அரண்மனைக்குள் பூனைகள் நன்கு தின்று கொழுத்திருப்பதால் அவற்றுக்கு பசி என்பதே என்னவெற்று தெரிய வாய்பில்லை, எனவே அவற்றால் எலியை எப்படி பிடிக்கமுடியும்?.

ஆக எந்த ஒரு வேலையையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்றாள், முதலில் அதனைப் பற்றிய பசி அல்லது தேவை இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க முடியும்
 
Via Fb Thannambikkai

சிதம்பரம் – நடராஜர் தாண்டவமாடும் தில்லை திருச்சிற்றம்பலம்!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:50 PM | Best Blogger Tips
சிதம்பரம் புகைப்படங்கள் - தில்லை நடராஜர் கோயில் - கோயில் குளம் 

தென்னாற்காடு மாவட்டம் என்ற பெயரில் முன்னர் அறியப்பட்ட - தற்போதைய கடலூர் மாவட்டத்தில் இந்த சிதம்பரம் எனும் பிரசித்தமான சோழர் கால கோயில் நகரம் வீற்றிருக்கிறது. நாற்திசையிலும் நான்கு பிரம்மாண்ட கோபுர வாசல்களுடனும் வெகு விரிவான கட்டிடக்கலை அம்சங்களுடனும் காட்சியளிக்கும் ஒரு அற்புதமான கோயில் வளாகம் நடுநாயகமாக வீற்றிருக்க - அதைச்சுற்றி இந்த சிறுநகரம் உருவாகியிருக்கிறது. இக்கோயிலில் நடராஜர் என்ற பெயருடன் சிவபெருமான் குடிகொண்டுள்ளார்
தமிழ்நாட்டில் திராவிடபாணி கோயிற்கலை அம்சங்கள் நிரம்பிய கோயிலும் அதைச்சுற்றியுள்ள நகரமும் இப்படித்தான் இருக்கும் என்பதற்கான உதாரணமாக இந்த சிதம்பரம் நகரத்தை குறிப்பிடலாம்.
பரபரப்பு மற்றும் சந்தடி ஏதுமின்றி  அமைதியான சூழலைக்கொண்டிருக்கும் இந்த கோயில் நகரம் ஆன்மீக யாத்ரீகர்களுக்கும், கோயிற்கலை ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்தமான யாத்ரீக சுற்றுலாஸ்தலமாக திகழ்கிறது.  

பெயர்க்காரணம்

செல்வ நெடுமாடஞ் சென்று சேண்ஓங்கிச்செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்றசெல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேயசெல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே…”
என்று திருஞானசம்பந்தர் தில்லை என்றழைக்கப்பட்ட சிதம்பரம் நகரின் புகழ் பாடியுள்ளார்.

தில்லை மரங்கள் அடர்ந்த நந்தவனப்பகுதியாக இருந்த காரணத்தால் ஆதியில்தில்லைஎன்ற பெயரால் இந்த ஊர் அழைக்கப்பட்டிருக்கிறது. இந்த தில்லையில்திருச்சிற்றம்பலம்என்ற பெயரில் அழைக்கப்பட்ட பிரம்மாண்டமானநடராஜப்பெருமான் கோயில்வீற்றிருந்த காரணத்தால், நாளடைவில்திருசிற்றம்பலம்என்ற கோயிலின் பெயரே ஊரின் பெயராகவும் மாறியது.

காலப்போக்கில் இதுசிற்றம்பலம்என்று மருவியும்சிதம்பரம்என்று திரிந்தும் வழக்கு மாறியதாக சொல்லப்படுகிறது. இப்பெயருக்கு வேறு சில விளக்கங்களும் தரப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. தில்லையம்பலம் என்ற பெயரிலும் புலவர்கள் இந்நகரத்தை தங்கள் பாடல்களில் குறிப்பிட்ட்டுள்ளனர்.

ஞானகாசம், பூலோக கயிலாயம், புண்டரீகபுரம், திருச்சித்திரகூடம் போன்ற பெயர்களாலும் இது ஆன்மீகரீதியாக அறியப்படுகிறது. பெறும்பொற்றப்புலியூர் எனும் ஆதிப்பெயரும் இந்த ஊருக்கு வழங்கிவந்திருக்கிறது.

வரலாற்றுப்பின்னணி

சோழபூமியின் மிக முக்கியமான குலக்கோயில் நகரமாகவும் சோழ ராஜ வம்சத்தினரின் அடையாளத்தலமாகவும் இந்த நகரம்  திகழ்ந்திருக்கிறதுஇந்த தில்லை எனப்படும் திருச்சிற்றம்பலம் சோழ சாம்ராஜ்ஜியம் ஆண்ட பூமியில், கடற்கரையை ஒட்டி கொள்ளிடம் என்ற பெயரில் அழைக்கப்படும் அகண்ட காவிரியானது வங்காள விரிகுடாவில் கலக்கும் கழிமுகத்திற்கு அருகில் வீற்றுள்ளது.

சிதம்பரம் நகரத்திலிருந்து தஞ்சை ஊடாக உறையூர் வரை காவிரியையும், கொள்ளிடம் ஆற்றையும் ஒட்டி அவற்றின் படுகைப்பகுதிகளில் சோழ ராஜ்ஜியத்தின் பாரம்பரிய தடயங்கள்  ஒரு பாதை போன்று படிந்து கிடப்பதை இப்பிரதேசங்களிலுள்ள ஊர்ப்பெயர்கள், அவற்றின் அமைப்பு மற்றும் புராதன ஆலயங்கள் போன்றவற்றிலிருந்து எளிதாக புரிந்து கொள்ளலாம்

சிதம்பரத்திலிருந்து கல்லணை வரையில் கொள்ளிட ஆற்றின் வடகரையானது அக்காலத்தில் ஒரு ராஜபாட்டையாக பயன்பட்டிருக்கக்கூடும் என்பதையும் ஊகிக்க முடிகிறது.

2ம் நூற்றாண்டு தொடங்கி 13ம் நூற்றாண்டு வரை இந்த தில்லை மாநகர் சோழர்களின் முக்கிய நகரமாகவும் பிற்காலச்சோழர் காலத்தில் மண்டலத்தலைநகராகவும் திகழ்ந்திருக்கிறது.
சிதம்பரத்தில் அமைந்திருக்கும் நடராஜர் கோயில் 5 முக்கிய சிவத்தலங்களில் ஒன்றாக புராணிக ரீதியாக அறியப்படுகிறது. அதாவது பஞ்சபூத ஸ்தலங்களில் இதுவும்  ஒன்று என்பது ஐதீகம்.

நீர், நிலம், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் என்பவையே அந்த பஞ்சபூதங்கள் என்பது நாம் அறிந்த ஒன்றுதான். இவற்றில் நீருக்கான ஸ்தலமாக திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலும், நிலத்துக்கான ஸ்தலமாக காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலும், காற்றுக்கான ஸ்தலமாககாளஹஸ்தி சிவன் கோயிலும், நெருப்புக்கான கோயிலாகதிருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலும், ஆகாயத்துக்கான கோயிலாக இந்த சிதம்பரம் நடராஜர் கோயிலும் ஐதீக மரபில் இடம் பெற்றுள்ளன.

சிவபெருமான் நடன திருக்கோலத்தில் நடராஜ ரூபமாக சிதம்பரம் கோயிலில் குடி கொண்டுள்ளார். ஏனைய சிவத்தலங்களில் சிவலிங்கமாக மட்டுமே சிவன் வணங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த கோயிலில் சிவனும் மஹாவிஷ்ணுவும் சேர்ந்தே வீற்றிருப்பது மற்றொரு சிறப்பாக சொல்லப்படுகிறது. எனவே சைவம் மற்றும் வைணவம் ஆகிய இரண்டு ஆன்மீகப்பிரிவுகளை சார்ந்தோரும் இந்த கோயிலுக்கு விரும்பி விஜயம் செய்கின்றனர். மஹாவிஷ்ணு இக்கோயிலில் கோவிந்தராஜப்பெருமாளாக வீற்றுள்ளார்.
நடராஜர் கோயில் மட்டுமல்லாமல் இளமையாக்கினார் கோயில்,தில்லைக்காளியம்மன் கோயில் போன்றவையும் சிதம்பரத்தில் அவசியம் தரிசிக்கவேண்டிய ஆன்மீக அம்சங்களாக அமைந்துள்ளன.
சிதம்பரம் நகரின் மற்றொரு சிறப்பம்சம் அண்ணாமலை பல்கலைக்கழகம்ஆகும். பிரசித்தமான இந்த தனியார் கல்வி நிறுவனம் சிதம்பரம் நகரின் மற்றொரு அடையாளமாகவே மாறியுள்ளது

சிதம்பரம் நகருக்கு அருகில் ராமலிங்க அடிகள் என்று அறியப்படும் வள்ளலார் அவதரித்த மருதூர் கிராமம் மற்றும் அவர் நிறுவிய சமர சன்மார்க்க சத்திய ஞானசபை அமைந்துள்ள வடலூர் நகரம் போன்றவை அமைந்துள்ளன. வடலூருக்கு அருகிலேயே இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரிச்சுரங்கம் அமைந்துள்ள நெய்வேலி நகரமும் அமைந்திருக்கிறது.
சிதம்பரத்திற்கு வருகை தரும் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் இந்நகரத்திற்கு அருகிலுள்ள சிவபுரி, திருநாரையூர், காட்டுமன்னார்கோயில், ஜயங்கொண்டசோழபுரம், சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில், திருவேட்களம் திருப்புன்கூர் போன்ற ஊர்களுக்கும் சிதம்பரத்தில் இருந்தபடி விஜயம் செய்யலாம். இந்த ஊர்களில் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு அம்சத்தை விரும்புகின்றவர்கள் சிதம்பரத்திற்கு அருகிலுள்ள பிச்சாவரம் எனும் உப்பங்கழி வனப்பகுதிக்கு விஜயம் செய்து அங்குள்ள கால்வாய்களில் படகுச்சவாரியில் ஈடுபடலாம்.

இந்தியாவிலுள்ள உப்பங்கழி வனப்பகுதிகளில் இந்த பிச்சாவரம் சதுப்புநிலக்காடு முக்கியமான இயற்கை அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், வீராணம் ஏரி எனும் மிகப்பெரிய ஏரி ஒன்றும் சிதம்பரத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் மேற்கே உள்ளது.

காட்டுமன்னார்கோயிலுக்கு சென்று திரும்பும் வழியில் பயணிகள் இந்த ஏரியை பார்த்து ரசிக்கலாம். இவை தவிரசிதம்பரம் நகரில் ஷாப்பிங் அம்சங்களும் நிறைந்து காணப்படுகின்றன. தங்கப்பூச்சு நகைத்தயாரிப்பில் இந்நகரம் பாரம்பரியமாக புகழ் பெற்று அறியப்படுகிறது.

சந்தடியற்ற நகரம் என்பதால் கோடைக்காலத்திலும் கூட சிதம்பரத்திற்கு சுற்றுலா மேற்கொள்ளலாம். இருப்பினும் குளிர்காலப்பருவம் கோயிற்பகுதியை நன்றாக பார்த்து ரசிக்க உகந்ததாக இருக்கும்.

சென்னையிலிருந்து 250 கி.மீ தூரத்திலேயே உள்ளதால் போக்குவரத்து வசதிகளுக்கு குறைவில்லை. ரயில் போக்குவரத்து வசதிகளும் சிதம்பரத்திற்கு நல்ல முறையில் கிடைக்கின்றன. தமிழ்நாட்டின் எந்த பகுதியிலிருந்தும் சிதம்பரத்திற்கு சுலபமாக பேருந்துகள் மூலம் வரலாம்.
தமிழ் நாட்டிலுள்ள ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு வகையில் விசேஷ அம்சங்களை கொண்டவை என்றாலும் நடனக்கோலத்தில் நடராஜராக சிவபெருமான் வீற்றிருக்கும் இந்த சிதம்பரம் நகரம் தமிழ்நாட்டில் உள்ளோர் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய ஆலய நகரமாகும்.
ஆன்மீக அம்சங்களை கடந்து சிதம்பரம் கோயிலில் திராவிட வரலாற்று உன்னதங்களும், கலைப்பாரம்பரியமும் ஒளிர்வதை இங்கு ஒரு முறை விஜயம் செய்தால் உணர்ந்து ரசிக்க முடியும்.

சிரமத்தை பார்க்காமல் போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து கொண்டு சிதம்பரத்திற்கு அருகிலுள்ள எல்லா கோயில் ஸ்தலங்களுக்கும் விஜயம் செய்வது மன அமைதியை தருவதோடு மட்டுமல்லாது மண்ணின் வரலாற்றுத்தடங்களை தரிசித்த ஒப்பற்ற நிறைவையும் அளிக்கும்.

Thanks & Copy from Thatstamil.com