வீண் புகழ்ச்சி !

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:18 | Best Blogger Tips
முள்ளம்பன்றி ஒன்று காட்டில் சென்று கொண்டிருந்தது.
அதன் எதிரே ஓநாய் ஒன்று வந்து நின்றது.
தன் முன்னால் வந்து நின்ற ஓநாயைப் பார்த்து தன்
முட்களைச் சிலிர்த்துக் கொண்டு நின்றது முள்ளம் பன்றி.
இதைப் பார்த்த ஓநாய், “முள்ளம் பன்றியே பயப்படாதே.
நான் உன் அழகை ரசிக்கத்தான் வந்திருக்கிறேன் என்றது.
என்னது? நான் அழகாக இருக்கிறேனா?”
ஆமாம். உண்மையில் நீ அழகுதான். ஆனால், அந்த அழகை
உன் உடம்புல இருக்கிற முற்கள்தான் கெடுக்கின்றன
-
எங்கள் பாதுகாப்புக்காக இறைவன் கொடுத்தது அந்த முற்கள்.
அது என் அழகைக் கெடுத்தாலும் எனக்குத் தேவைதானே
அழகைக் கண்டு மயங்குபவர்கள் ஆயிரம் பேர். ஆனால்
அவர்கள் இந்த முற்களைப் போன்ற ஆபத்தைக் கண்டு ஒதுங்கிப்
போய் விடுவார்கள். எனவே உன் முற்களை மட்டும் எடுத்து
விட்டால் உன் பின்னால் உன் அழகைக் கண்டு பொறாமைப்படுவார்கள்
ஓநாயின் இனிப்பு வார்த்தையில் மயங்கிப் போனது முள்ளம்பன்றி.
மறுநாள் தன் முட்களை எல்லாம் மழித்துவிட்டு ஓநாய் முன்
வந்து நின்ற அந்த முள்ளம் பன்றி, “இப்போ நான் இன்னும்
ஆழகாயிருக்கேனா?” என்று கேட்டது.
அழகாய் மட்டும் இல்லை, அடித்துச் சாப்பிட வசதியாகவும்
இருக்கிறாய்என்றபடி முள்ளம்பன்றி மேலே பாய்ந்தது ஓநாய்.
முள்ளம் பன்றி ஓநாய்க்கு இரையானது.
இப்படித்தான் பலரும் தங்களைப் பிறர் புகழ்கிறார்களே என்று
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்பட்டுத் தங்களை இழந்து நிற்கிறார்கள்.