குபேர கிரிவலம் மகிமை

மணக்கால் அய்யம்பேட்டை | 2:52 PM | Best Blogger Tips
Image result for குபேர கிரிவலம் மகிமை


ஒவ்வொரு மாதமும் முழுநிலவு (பௌர்ணமி) தினத்தன்று மலை(கிரி)யுடன் கூடிய திருக்கோயிலை வலம் வந்து அங்குள்ள இயற்கையையும் இறைவனையும் வழிபாடு செய்வது மிகவும் நல்லது!
கிரி என்றால் மலை!

கிரிவலம் என்றால் மலையை வலப்புறமாகச் சுற்றுவது!

மனிதர்கள் மட்டுமல்ல; உலக ஜீவராசிகள் இறைவனின் அவதாரங்கள் உட்பட இறைவனும் கூட தமது படைப்புக்களை வருடத்திற்கு ஒரு முறை வலம் வந்து காட்சி கொடுப்பதுண்டு!
Image result for குபேர கிரிவலம் மகிமை
அவ்வாறு இறைவனின் அவதாரங்கள் கிரிவலம் வரும் நேரத்தில் நாமும் அவர்களுடன் இணைந்து வலம் வருவது மிகப்பெரிய நன்மைகள் நமக்கும் நமது குடும்பத்தினர் அனைவருக்கும் கிடைக்க மிகவும் சுலபமாக இருக்கும்!

கார்த்திகை மாதம் அமாவாசைக்கு முன்னர் மாதசிவராத்திரி அன்று மாலை 

தினப்(நித்யப்)பிரதோசம் எனப்படும் மாலை 4.30 முதல் மறுநாள் காலை பிரம்ம முகூர்த்தம் எனப்படும் சூரியன் உதயம் வரை குபேரன் பகவான் கிரிவலம் வந்து அருள் வழங்கும் நாள் தான் குபேர கிரிவலம் ஆகும்!

அந்த நேரத்தில் குபேரன் பகவானுடன் இணைந்து கிரிவலம் செல்லும் இலட்சோப இலட்சம் பக்தர்கள் அனைவருக்கும் கோடானுகோடி நன்மைகள் உடனடியாகக் கிடைக்கும் என்பது அனுபவப் பூர்வமான உண்மை!
Image result for குபேர கிரிவலம் மகிமை
எந்த ஒரு வழிபாட்டிலும் எல்லா நன்மைகளும் நமக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதளவும் கூடாது!

எல்லா நன்மைகளும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என எண்ணுவதே மிகச் சிறந்த வழிபாட்டு முறையாகும்!

திருக்கோயில் வழிபாட்டு வழிமுறைகள் கட்டுப்பாடுகள் விரதங்கள் அனைத்தையும் மிகவும் சரியாகக் கடைபிடிக்க வேண்டும்!

திருக்கோயில் செல்வதற்கு முன்னர் முறையான விரதங்கள் மேற்கொண்டு திருக்கோயில் வழிபாடு செய்த பின்னர் வேறு எங்கேனும் செல்லாமல் நேரடியாக அவரவர் இருப்பிடம் இல்லம் வந்து இல்லத்தின் இறைவனை வணங்கி விரதம் நிவர்த்தி செய்ய வேண்டும்!

திருக்கோயில் செல்வதற்கு முன்னர் தான தர்மங்கள் செய்ய வேண்டும்!

வழிபாடு செய்த பின்னர் பிரசாதங்கள் அனைத்தையும் இல்லத்திற்குள்கொண்டு வந்து சேர்க்க வேண்டும்!
உங்கள் ஊரில் உள்ள மலையுடன்கூடிய 

திருக்கோயில்கள் கிரிப்பிரகாரங்கள் அனைத்திலும் வருகிற ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் மறுநாள் திங்கட்கிழமை அதிகாலை வரை குபேர கிரிவலம் மேற்கொள்ளலாம்!

இருப்பினும் இதனை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் கிரிவலம் பாதையில் மேற்கொள்வது மிகவும் சிறப்பானது!

முறையான விரதம் மேற்கொண்டு இந்த குபேரன் கிரிவலம் சென்று வருவோருக்கு தற்போது உள்ள மிகவும் கடினமான சிக்கல்கள் யாவும் 

உடனடியாகத் தீர்வது மட்டும் அல்ல செல்வம் செல்வாக்கு பதவி புகழ் அனைத்தும் அதிவிரைவில் அதிகரிக்கும்!

*இந்த வருடம் கார்த்திகை மாதம் 8-ஆம் தேதி (24-11-2019) ஞாயிற்றுக்கிழமை மாலை 04.30 முதல் 07.30 வரை...*

திருவண்ணாமலை குபேர லிங்கம் சன்னதியில் குபேரன் தாமே நேரில் வந்து மிகவும் சிறப்பான பூஜைகள் வழிபாடுகள் செய்து...

இரவு முழுவதும் 14 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள திரு அண்ணாமலையை கிரிவலம் வந்து...

வழிநெடுகிலும் பக்தர்கள் சூழ அனைத்து இறை சன்னதிகளிலும் பூஜைகள் வழிபாடுகள் தவங்கள் மேற்கொண்டு...

திங்கட்கிழமை அதிகாலை சூரியன் உதயம் பிரம்ம முகூர்த்தம் நேரத்தில் மீண்டும் குபேரன் லிங்கத்தில் பூஜை செய்து...

அண்ணாமலை உண்ணாமுலை இறைவன் இறைவியைவணங்கி தம் பக்தர்கள் அனைவருக்கும் அவர்கள் கேட்ட அத்தனை வரங்களையும் வாரி வழங்கிச் செல்வார்!

14 கிலோமீட்டர் சுற்றளவில் இரவு முழுவதும் பெண்கள் மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்வார்கள்!
பக்தர்கள் யாத்ரீகர்கள் யோகிகள் சன்யாசிகள் சித்தர்கள் அனைவருக்கும் அனைவராலும் தான தர்மங்கள் தாராளமாக நடைபெறும்!

14 கிலோமீட்டர் சுற்றளவில் இரவு முழுவதும் வழிபாடு செய்ய வேண்டிய நூற்றுக்கணக்கான சிறிய மற்றும் பெரிய சன்னதிகள் பல உள்ளன!

01. இந்திர லிங்கம்
02.
அக்னி லிங்கம்
03.
எமலிங்கம்
04.
நிருதி லிங்கம்
05.
வருணலிங்கம்
06.
வாயு லிங்கம்
07.
குபேர லிங்கம்
08.
ஈசான்ய லிங்கம்

இவை அஷ்ட லிங்கங்கள் எனும்
அதிர்ஷ்ட லிங்கங்கள் ஆகும்

*சூர்ய லிங்கம்
*
சந்திர லிங்கம்
*
ஞான லிங்கம்
*
நேர் அண்ணாமலை
*
அடி அண்ணாமலை
*
இடுக்குப்பிள்ளையார்
*
பஞ்சமுக தரிசனம்
*
இரமணர் ஆஸ்ரமம்
*
யோகி ராம் சுரத்குமார் ஆஸ்ரமம்
*
கந்தாஸ்ரமம்
*
நித்யானந்தா ஆஸ்ரமம்
*
தியானக் குகைகள்

என இன்னும் நிறைய வழிபாட்டு சன்னதிகள் உள்ளன!
*24-11-2019* ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் 25-11-2019 திங்கட்கிழமை காலை வரை 14 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள திரு அண்ணா மலையை மிகவும் நிதானமாக மெதுவாகவே சுற்றி வர வேண்டும்!

அவசரம் கூடாது.
செல்ஃபோன் கூடாது.
காலணிகள் கூடாது.
தேவையற்ற வீண் பேச்சு கூடாது.
மற்றவர்கள் வழிபாடு செய்ய...
எவ்வித இடையூறுகளும்
செய்யக் கூடாது!

வழிபாடுகள் நிறைவடைந்த பின்னர் வேறு எங்கேனும் செல்லாமல் நேரடியாக அவரவர் இருப்பிடம் இல்லம் வந்து இல்லத்தின் இறைவனை வணங்கி விரதம் நிவர்த்தி செய்ய வேண்டும்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு தரப்பினரும் வருவர் என்பதால் போதுமான உணவு-உடை-குடை டார்ச் லைட் செல்ஃபோன் சார்ஜர் ஆகியன கொண்டு வருவது நல்லது!

விடிய விடிய போதுமான வெளிச்சம் காவலர்கள் பாதுகாப்பு ஆங்காங்கே தங்குமிடங்கள் உணவகங்கள் கடைகள் ஆகியவை உள்ளன!

திருவண்ணாமலை வர இயலாதவர்கள் அவரவர் இருப்பிடம் அருகில் உள்ள மலையுடன்கூடிய திருக்கோயிலை குபேர கிரிவலம் வந்து வழிபாடு செய்யலாம்!


நன்றி இணையம்