'காக்க.. காக்க.. கல்லீரல் காக்க!'

மணக்கால் அய்யம்பேட்டை | 3:49 PM | Best Blogger Tips
Photo: 'காக்க.. காக்க.. கல்லீரல் காக்க!'

நாம் அன்றாடம் பருகும் தண்ணீர், உட்கொள்ளும் பல்வேறு உணவுப் பொருட்கள், 100 சதவீதம் சுத்தமானது என, சொல்ல முடியாது. இவற்றில் கலந்துள்ள வேதிப்பொருட்கள், நாட்கணக்கில் உடம்பில் சேர்ந்தால், அவை நஞ்சாக மாறி, உடலுக்கு ஊறு விளைக்கும் அபாயம் உள்ளது. இந்த அபாயத்தை தவிர்க்கும் பணியை, கல்லீரல் மேற்கொண்டு வருகிறது.

தினமும், குடலில் செரிமானம் செய்யப்படும் உணவை உறிஞ்சும் கல்லீரல், முதலில் அதில் உள்ள, நச்சுத்தன்மைக் கொண்ட வேதிப் பொருட்களை நீக்குகிறது.
அதன்பின், அந்த உணவில் உள்ள, புரதம், கார்ப்போஹைட்ரேட், கொழுப்புச் சத்து ஆகியவற்றை, தனித்தனியாக பிரித்து, அவற்றை ஆற்றலாக மாற்றி, சிறுநீரகம், மூளை, கை, கால் உள்ளிட்ட அனைத்து உடல் உறுப்புகளுக்கும், தொடர்ந்து அளிக்கிறது. 

மேலும், உடலின் நீர்ச்சத்தை பராமரிக்க தேவையான, புரதத்தை உற்பத்தி செய்வதுடன், ரத்தத்தை, நீர்த்துப் போக செய்யாமல், அதை குறிப்பிட்ட உறைநிலையில் வைத்திருக்கும், முக்கியமான பணியையும், கல்லீரல் செய்கிறது.
உடலின், "வேதி தொழிற்சாலை’ எனும் அளவிற்கு, நாள் ஒன்றுக்கு, கிட்டத்தட்ட, 3,000 வேதிவினைகளை, கல்லீரல் மேற்கொள்கிறது.

மது பழக்கம், வெறும் வயிற்றில் மது அருந்துவது, உடம்பில் அளவிற்கு அதிகமாக சேரும் கொழுப்புச் சத்து, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், "ஹெப்படைட்டிஸ் பி’ வைரஸ் தாக்கம் போன்ற காரணங்களால், கல்லீரல் பாதிக்கப்படுகிறது. 

கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாக, மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. "ஹெப்படைட்டிஸ் பி’ வைரஸ் தாக்கம் அதிகமாகும் போதும், கல்லீரலில், கொழுப்பு சத்து அதிகமாக சேரும்போதும், கல்லீரல் புற்றுநோய் உண்டாகிறது.

பிரத்யேக ரத்த பரிசோதனை மூலம், கல்லீரலின் ஆரோக்கியத்தை அறியலாம்.
தினமும் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்வது, சத்தான உணவுகளை தேவையான அளவு உட்கொள்வது, மதுப் பழக்கத்தை தவிர்ப்பது, "ஹெப்படைட்டிஸ் பி’ தடுப்பூசி போட்டுக் கொள்வது
போன்றவற்றின் மூலம், கல்லீரல் பாதிப்பை தவிர்க்கலாம்.

மொத்தம், 1.5 கி.கி., எடையுள்ள மனிதக் கல்லீரல், பல காரணங்களால், குறிப்பிட்ட அளவு வரை சேதமடைந்தால், அது, ஒரு மாதத்திற்குள் மீண்டும் வளர்ந்துவிடும் தன்மைக் கொண்டது. 

தன்னைத் தானே புதுப்பித்து, உடல் உறுப்புகள் அனைத்திற்கும் ஆற்றல் அளிக்கும் அற்புத உறுப்பான கல்லீரல், ஒருவருக்கு பாதிக்கப்பட்டால், அதற்கு, அவரே முழுமுதற் காரணமாக இருக்க முடியும்.

கல்லீரல் செயலிழந்தால், உடல் உறுப்புகளின் இயக்கமும் தடைப்படும் என்பதை கருத்தில் கொண்டு, கல்லீரலை நாம் காக்க வேண்டும்.

பேராசிரியர் நாராயணசாமி,
கல்லீரல் மருத்துவ துறை தலைவர்,
சென்னை மருத்துவக் கல்லூரி,
98411 70145

100% புரோட்டின் டயட்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:22 PM | Best Blogger Tips
100% புரோட்டின் டயட்

உடம்பு பெருத்து,எடை கூடி இருப்பது இன்றைய பெரும்பாலான நண்பர்களின் பிரச்சினை.பல நோய்களுக்கு அதுவே மூல காரணம் என்று மருத்துவர்களால் அறிவுறுத்தப் படுகிறது.

உடலின் எடை குறைய, ஊளைச் சதை குறைய பலவிதப் உணவுப் பழக்கங்கள் சொல்லப் படுகின்றன.
அதில் '100% புரோட்டின் டயட்' என்பது அறிவியல் சார்ந்த மிகச் சிறந்த வழியாகச் சொல்லப் படுகிறது.

கொழுப்புச் சத்தை அறவே நீக்க வேண்டும் என்பது எந்த டயட்டாக இருந்தாலும் பொதுவான நிபந்தனை.

அதனால் எந்த வடிவத்திலும் எண்ணைக்கு அனுமதி இல்லை.
அதனுடன்,கார்போ ஹைட்ரேட்டுகளைக் குறைத்துப் புரோட்டின்களை நூறு சதவீதம் சாப்பிட்டால் உடம்பு மளமளவென்று குறையும்,ஆரோக்கியமும் கூடும் என்பது நவீனக் கண்டுபிடிப்பு.

அரிசி,கோதுமை போன்ற தானிய வகைகளில் எல்லாம் கார்போஹைட்ரேட்டுகளே அதிகம் இருப்பதால் அவற்றை அறவே தவிர்த்து விடவேண்டும்.எனவே பிஸ்கட்,ரொட்டி,சப்பாத்தி,சாதம் இவை அனைத்தும் தவிர்க்கப் பட வேண்டியவை.

அதற்குப் பதிலாக புரோட்டின்கள் நிறைந்த பருப்பு வகைகளைச் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
முக்கியமாகப் பச்சைப் பயறு.
அதனை அரைத்துத் தோசையாக,அவித்துச் சுண்டலாக, எந்த வடிவத்திலாவது சேர்த்துக் கொள்ளவேண்டும்.
இரண்டு மணி நேரம் பச்சைப் பயறை ஊற வைத்துப் பிறகு இஞ்சி,பச்சை மிளகாயுடன் அரைத்துத் தோசை வார்த்தால் ஆம்லெட்டைப் போல அவ்வளவு சுவையாக இருக்கிறது.

கொண்டைக் கடலை,கொள்ளுப் பருப்பு.ஓட்ஸ்,கடலைப் பருப்பு இப்படி எந்தப் பருப்பாக இருந்தாலும் அது ஓ.கே.
எண்ணை அறவே கிடையாது.

பச்சைக் காய்கறிகள்,அவித்த காய்கள் எல்லையில்லாமல்.
வாழைப் பழங்கள் தவிர ஆப்பிள்,திராட்சை என்ற எந்தப் பழமும் ஓ.கே.

புலால் உண்ணும் நண்பர்கள் கோழியும்,மீனும் தாராளமாக உண்ணலாம்,பொரிக்காமல்,வறுக்காமல்.எண்ணை சேர்க்காமல் எப்படி வேண்டுமானாலும்.

காலையில் வெறும் வயிற்றில் அரை அல்லது முக்கால் லிட்டர் தண்ணீர்.அதற்குப் பிறகு அரை மணி நேரம் எதுவும் அருந்தக்கூடாதுடீ காலை, மாலை இரண்டு வேளை ஓ.கே.

கண்டிப்பாக ஒரு மணி நேரம் வேக நடை.வெறும் வயிற்றில் நடப்பதே கலோரிகளைச் சீக்கிரம் எரிக்கிறது என்கிறார்கள்.
கார்போ ஹைட்ரேட்டுகளே சதையின் பெருக்கத்துக்குக் காரணம் என்பதாலும் புரோட்டின்கள் தசை நார்களையே வளர்க்கின்றன என்பதாலும் இந்த '100% புரோட்டின் டயட்' மிக விரைவான பலன்களைத் தருகிறது என்கிறார்கள் வெற்றி கண்டவர்கள்.

Via FB ஆரோக்கியமான வாழ்வு
 
ஆணிவேர் அசைக்கும்.....ஆலம் விழுதுகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:10 PM | Best Blogger Tips
ஆணிவேர் அசைக்கும்.....ஆலம் விழுதுகள்

காதல் என்பது சொல்லா....?  உணர்வா...இல்லை ஆசையா?
முதலில் எது காதல் இங்கு,,..??..........தெளிவில்லாமல் குழம்புவது இளமையா?..இல்லை முதுமையா..?

என்ன நடக்கிறது இங்கு..???...காதல் எனும் பெயரில் நடந்த ஜோடிச் சாவுகள் பழைய கதையாகி....நாகரீகம் வளர்ந்து

குடும்பம் ...தெரு .....ஏரியாக்கள் தாண்டி ..ஊர் எரித்து காவு கேட்கிறது..இப்போதெல்லாம்......

பலி ஆடு ஆகிறது பச்சிளங்குருத்துகள்.......

இதில் பிரபலமானவர்கள் பக்கம் அம்பலம் ஏறுகிறது அவமானம்......

நடுத்தரவர்க்கம்..தலை முழுகுவாதாய் சொல்லி.....வளைகாப்பு நடத்தி இணந்து விடுகிறது

பால் மணம் மாறாத சின்ன சின்ன குழந்தைகள்...அடம் பிடித்து பொம்மை வாங்குவது போல் இன்று ..பெற்றோரிடம் போய் கேட்கிறது

வாழ்க்கையை

வாங்கித் தருகிறாயா.?//..இல்லை நான் ஓடிப் போகவா என்று....???

18 வயதானால் எல்லாமும் தெரிந்து விடுகிறதா...????

நேற்று வரை ஊசி கோர்க்க தெரியாதவள்...ஓடிப் போகிறாள் காதலனுடன்...ஊர் விட்டு ஊர் போய் தாம்பத்யம் தைக்க......

ஓட்டு போட வயது நிர்ணயித்த சட்டம் ..அவள் ஓடிப் போகவும்
வழி வகுக்கிறதா..??

கிளிப்பிளையாய் வசியம் மேலிட கூண்டில் ஏறி 
சொல்கிறது..சிறு பெண்........தாய் தந்தை வேண்டாம் என

இது வயதின் கோளாறா....இல்லை வாலிப கோளாறா

பொத்தி பொத்தி பாதுகாக்கும் பெற்றவர்கள்

எந்த புள்ளியில் தவறுகிறார்கள்..அந்த குருத்துகளை பாதுகாக்க

தன்மகள் என்ன செய்கிறாள்..என்ன நினைக்கிறாள்....யாருடன் சிநேகம் கொள்கிறாள்..என்றெல்லாம் பார்ப்பதை தனிமனித சுதந்திரத் தலையீடாய் நினைக்கிறதா.........வளர்ந்து வரும் கலாச்சாரம்

தனித் தனி அறைகள்.....வளரும் நாகரீக வசதிகள்.....கைநிறைய பணங்கள்...கஷ்டப்படாத சூழல்கள்...இம் மென முன் ...தேடல் இல்லாமல் நிறைவேற்றப்படும் தேவைகள்...இவை எல்லாமே இளைய தலைமுறைகளிடம் ...அறிவில் ஆர்வம் கொண்டு வருதே தவிர...மனதில் முதிர்ச்சியை கொண்டு வரவில்லை

பெற்றோரும் இதை கவனிக்கும் நிலையில் இல்லை......பணம் ..பொருள் ..பதவி ..புகழ் தேடி...ஓடி ஒடி...அலையும்.....தாய் தகப்பன்கள்...குழந்தைகளின் மனம் தேடி பேச நேரம் அமைவதில்லை

அறிமுகம் இல்லாத யாரோ ஒருவன..அன்பு ...என் உயிர் நீ ..என..காதல்...எனும் பெயரில் செய்யும்  வாலிப வசியம் வெகு வேகமாக
வேலை செய்கிறது ..எதையும் தூக்கி எறியும் பிடிவாத குழந்தைச் துணிச்சல் தருகிறது

பாளை விரிக்காத  தென்னைகள் ஓலையாகும் முன்னரே சருகாகி உதிர்கின்றனர்.......

இதில் அநாகரீகமான அரசியல் தலையீடுகள் வேறு சாதீய வெறியாய் 
..கூத்தாடிக் கோமாளிகள்

ரயிலை தன் மீது ஏற்றி தற்கொலை செய்து கொண்டான் அவன்...தினம் தினம் செத்து பிழைக்கிறாள்  இவர்களின் கையில் சிக்கிய பெண்அன்றெல்லாம்...பெண் பருவம் எய்தினால்...தாயின் மடியில் நெருப்பு கட்டி கண்காணிக்கப் படுவாள்...பருவம் எய்திய பின் கற்றுக் கொடுக்கப் படும்...நிறப்பது எப்படி?..நடப்பது எப்படி...அமர்வது எப்படி...?..முக்கியமாக சிரிப்பது எப்படி என்று கூட

இன்றோ அவள் பருவம் வருவதே வெளி உலகுக்கு மறைக்கப் படுகிறது..தாயவளால் மறக்கப் படுகிறது

ஆண் பிள்ளைத் துணிச்சல் வேண்டுமாம்..ஆதலால்..அவள் சரிசமமாய்
நடத்தவேண்டும் என அவளுள் இருக்கும் பெண்மை அடக்கி வளர்க ,,,எவனோ வந்து தூண்டி விடுகிறான் ஹார்மோன் செயல்பாடுகளை

ஏன் அன்று வளர்ந்த பெண்களில் துணிச்சல்கள் இல்லையா...???

குழந்தையாவே வளரும் அவள்......காதலன் என வரும் போது முரட்டுக் குழந்தையாகிறாள்...கவனம் வேண்டும் பெற்றோர்களே

யாரை வாசல் வரை நிறுத்த வேண்டும் ..யாரை வீட்டுக்குள் சேர்க்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரிய வேண்டும் முதலில்

நீங்கள் தப்பானவன் என்று தெரிந்த பின்னும் எதோ ஒரு தேவைக்கு ஒரடி எடுத்து வைத்தால்..உங்கள் செல்ல மகள் 2 அடி எடுத்து வைப்பாள் ..வெளி உலகு தெரியாமல் ஏமாந்து போய்

உங்கள் குழந்தைக்கு 

எவரையும் மிஞ்சும் கல்வி கொடுக்க வேண்டாம்

எவரையும் மிஞ்சும் செல்வம் குவிக்க வேண்டாம்

எவரையும் மிஞ்சும் ..அழகும்..புகழும் கொடுக்க வேண்டாம்

எல்லோரையும் மிஞ்சும் மனப் பக்குவத்தை கொடுங்கள்

கஷ்டங்கள் விதைத்து வெற்றி அறுவடை செய்ய கற்றுத் தாருங்கள்

தன் சுயநலம் . ..தன் தேவைகள்...எனத் தன்னை தானே குறுக்கிக்கொண்டு விதை விட்டு பழுக்கும் போன்சாய் மரங்களாய் அல்லாது

வயதுவேர் தாங்கி ஓய்ந்தாலும்.............பாசவிழுது பரப்பி நமைத் தாங்கும்.....ஆலம் விதைகளாய் அவர்களை வளருங்கள்...............

பழமை திரும்பினும்
மானங்கள் காக்கட்டும் மானுடங்கள்

நன்றி  Sundari Kathir

இயற்கைமுறையில் தயாரித்த முள்ளங்கிக் குழம்பு சாதம்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:04 PM | Best Blogger Tips
இயற்கைமுறையில் தயாரித்த முள்ளங்கிக் குழம்பு சாதம்.

தேவையானவை:தேங்காய், தனியா,  சீரகம், பட்டை, சோம்பு, கசகசா, மிளகாய், தக்காளி, கறிவேப்பிலை,கொத்துமல்லி, பூண்டு , சின்ன வெங்காயம், உப்பு.

அத்துடன் நறுக்கி வேகவைக்கப்பட்ட முள்ளங்கி, தேவையான அளவு சாதம்.

சமைக்காமல் செய்வதால் பூண்டும் சின்ன வெங்காயமும் மிகவும் குறைவாகத்தான் சேர்க்கவேண்டும்.

முதலில் சொல்லப்பட்டவற்றில் தக்காளியில் பாதியையும்  கொத்துமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றையும் தவிர மற்றதை நன்றாக ஆட்டி எடுத்துக்கொள்ளவேண்டும்.

அதனுடன் வெந்த முள்ளங்கியையும் சாதத்தையும் சேர்த்துக் கலக்க வேண்டும். 

அத்துடன் மீதித் தக்காளியையும் கறிவேப்பிலையையும் கொத்துமல்லியையும் நறுக்கி மேலே தூவி விடவும். (உண்ணும்போது கலக்கிக் கொள்ளலாம்! 

சாப்பிட்டுப் பார்த்துவிட்டுச் சுவையைச் சொல்லவும்! 

(சிறுநீரகக் கல், சர்க்கரை நோயாளிகள் கவனிக்க) 

http://www.drumsoftruth.com/2013/08/63.html

தேவையானவை:தேங்காய், தனியா, சீரகம், பட்டை, சோம்பு, கசகசா, மிளகாய், தக்காளி, கறிவேப்பிலை,கொத்துமல்லி, பூண்டு , சின்ன வெங்காயம், உப்பு.

அத்துடன் நறுக்கி வேகவைக்கப்பட்ட முள்ளங்கி, தேவையான அளவு சாதம்.

சமைக்காமல் செய்வதால் பூண்டும் சின்ன வெங்காயமும் மிகவும் குறைவாகத்தான் சேர்க்கவேண்டும்.

முதலில் சொல்லப்பட்டவற்றில் தக்காளியில் பாதியையும் கொத்துமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றையும் தவிர மற்றதை நன்றாக ஆட்டி எடுத்துக்கொள்ளவேண்டும்.

அதனுடன் வெந்த முள்ளங்கியையும் சாதத்தையும் சேர்த்துக் கலக்க வேண்டும்.

அத்துடன் மீதித் தக்காளியையும் கறிவேப்பிலையையும் கொத்துமல்லியையும் நறுக்கி மேலே தூவி விடவும். (உண்ணும்போது கலக்கிக் கொள்ளலாம்!

சாப்பிட்டுப் பார்த்துவிட்டுச் சுவையைச் சொல்லவும்!

Thanks to drumsoftruth

மூலநோய் பற்றிய தகவல்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:24 PM | Best Blogger Tips

மூலநோய் என்றால் என்ன?

உணவுக் கால்வாயின் முடிவில் இருக்கும் மலவாயிலில் சிறிய வீக்கங்கள் இருப்பதையே மூலநோய் என்கிறார்கள். உண்மையில் இவை வெறும் வீக்கங்கள் அல்ல. சவ்வுகளும் சிறுஇரத்தக் குழாய்களும் இணைந்தவையாகும். இவை இயற்கையாகவே எல்லோரது மலவாயிலில் இருந்தபோதும் வீக்கமடையும்போதே நோயாகிறது.

இது ஏற்படக் காரணங்கள் எவை?

முக்கிய காரணம் மலம்போகும்போது முக்கி வெளியேற்றுவதேயாகும்.

மலச்சிக்கல் மற்றொரு முக்கிய காரணமாகும்

நீண்ட நேரம் மலங் கழிப்பதற்காகக் குந்தியிருப்பது.

நார்ப்பொருள் உள்ள உணவுகளை போதியவு உண்ணாமை.

மலக்குடலில் ஏற்படும் சில கிருமித்தொற்றுகளும் காரணமாகலாம்.

ஈரல் சிதைவு நோயின்போதும் தோன்றுவதற்கான சாத்தியம் அதிகம்.

பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது தோன்றுவதற்கான சாத்தியம் அதிகம்.

அதேபோல வயிற்றில் கட்டிகள் இருந்தாலும் தோன்றலாம்.

இரண்டு முக்கிய பிரிவுகள்

மூலநோயில் இரண்டு முக்கிய பிரிவுகள் உள்ளன.

உள்மூலம். இங்கு மூலவீக்கம் வெளிப்படையாகத் தெரியாது. உள்ளேயே இருக்கும். மலத்துடன் இரத்தம்போவதை வைத்து ஊகிக்கலாம். ஆயினும் மருத்துவர் மலவாயில் பரிசோதனை செய்தே இதை நிச்சய்படுத்த முடியும்.
வெளிமூலம். இது மலவாயிலுக்கு வெளியே தள்ளிக்கொண்டிருக்கும். சில தருணங்களில் தானாக உள்ளே சென்று பின்னர் மலங் கழிக்கும்போது அல்லது முக்கும்போது வெளியே தள்ளும்
மருத்துவர்கள் ஒன்று முதல் நாலு நிலைகளாக மூலநோயைப் பிரித்துவைத்து அதற்கேற்ப மருத்துவம் செய்வார்கள்.

அறிகுறிகள்

ஆரம்ப நிலையில் வீக்கம், வலி போன்ற வெளிப்படையான அறிகுறிகள் பொதுவாக இருப்பதில்லை.

மலத்தோடு இரத்தம் போகலாம். இறுகிய மலம் வீங்கமடைந்துள்ள இரத்தநாளங்களை உராசுவதால் இவ்வாறு இரத்தம் கசியலாம்.

அத்தோடு மலத்தோடு சளி போலவும் கழியக் கூடும். மூலவீக்கம் காரணமாக மலக்குடல் உற்பக்கமாக உறுத்தலுற்று இழுபடுவதால் அதிலிருந்து நீர்போலக் கசிவு ஏற்படும். இதுவே மலத்துடன் சளிபோல வெளியேறும்.

மலவாயிலில் அரிப்பு ஏற்படுவது கட்டாயம் இருக்க வேண்டும் என்றில்லை. மேலே கூறியதுபோல சளிபோலக் கசிவதானது மலவாயிலை ஈரலிப்பாக வைத்திருக்கும். இதுவே அரிப்பிற்கு வித்திடும்.

மூலவீக்கம் மலவாயிலுக்கு வெளியே இறங்கினால் மட்டுமே கட்டி தெரியும். பலருக்கு மலங் கழிக்கும்போது வெளியே வந்து, பின்னர் தானாகவே உள்ளே சென்றுவிடும். சிலர் தமது விரல்களால் தாமாகவே தள்ளி உள்ளே செலுத்துவதும் உண்டு. ஒரு சிலரில் அவ்வாறு செல்லாமல் வலியெடுத்து மருத்துவரை நாடவேண்டியும் ஏற்படலாம்.

மலம் கழிக்கும்போது வலி ஏற்படுவது ஒரு சிலரில் இருக்கலாம்.

சிகிச்சை

சிகிச்சையைப் பொறுத்தவரையில் மிக முக்கிய விஷயம் மலத்தை முக்கிக் கழிக்காதிருத்தலாகும்.

நார்ப்பொருள் அதிகமுள்ள உணவுகளான பழவகைகள், அதிகளவு காய்கறிகள், இலை வகைகளை அதிகம் சேர்க்க வேண்டும். தவிடு நீக்காத அரிசி, குரக்கன் போன்றவற்றிலும் இது அதிகமுண்டு.

மலம் மிகவும் இறுக்கமாக இருந்தால் Lactulose போன்றதும், நார்ப்பொருள் அதிகமுள்ள மலம் இளக்கிகளும் உதவும்.

மலம் கழிக்கும்போது வலி இருந்தால் அதைத் தணிப்பதற்கான கிறீம் வகைகள் உள்ளன. அவற்றை மருத்துவ ஆலோசனையுடன் பூசிக்கொள்ளலாம்.

ஊசி மூலம் போன்ற Phenol மருந்துகளை அவ்விடத்தில் ஏற்றி கரையச் செய்யும் Sclerotherapyமற்றும் Rubber band ligation முறை போன்றவை சத்திரசிகிச்சையல்லாத முறைகளாகும்.

Hemorrhoidectomy, Stapled hemorrhoidectomy போன்ற பல வகை சத்திர சிகிச்சை முறைகளும் உண்டு. இவற்றை மருத்துவர் நோயின் தன்மைக்கு ஏற்ப செய்வார்.

நன்றி= ஹாய் நலமா